Advertisement

அத்தியாயம் 11
ஆரத்தியெடுத்து சந்தோஷையும், விழியையும் உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர்த்தியிருந்தனர். தனது கல்யாணத்தின் போது வந்த செந்தில் அதன் இன்றுதான் மாணிக்கவேலின் வீட்டுக்கு வருகிறார்.
மங்காவை திருமணம் செய்யும் பொழுது இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட சாதாரண வீடுதான். பெண் வீட்டில் வசதி இல்லாததால் அன்னை மட்டும் வீட்டில் இருப்பார் என்ற காரணத்தைக் கூறி ஒருநாள் கூட அங்கு தங்காமல் கிளம்பி இருந்தார். மாணிக்கவேலுக்கு மனவருத்தமாக இருந்தாலும், தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைந்த சந்தோஷத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டார்.
இன்று மாணிக்கவேலின் வீடோ! இரண்டு மாடிகளைக் கொண்ட வசதியான வீடு. செந்திலின் சொகுசு பங்களாவை ஒப்பிடும் பொழுது மூன்றில் ஒரு பங்குதான். இருந்தாலும் எந்த குறையும் கூறுமளவுக்கு இருக்கவில்லை.
திடிரென்று திருமணம் நடந்ததில் வாணிக்கு என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறியவாறே! வீட்டில் செய்யும் சடங்குகளை செய்து முடித்திருக்க, இரவு உணவும் அனைவருக்கும் தயார் செய்ய முற்பட சந்தோஷ்தான் வெளியே! ஆடர் கொடுத்துக்கலாம் நாளையிலிருந்து இருந்து பாத்துக்கலாம் என்று விட்டான். வாணியின் பதட்டமும், கல்யாணம் நடந்தேறி விட்டது என்ற நம்ப முடியாத தன்மையும் அப்பட்டமாக அவள் தடுமாற்றத்தில் தெரிய மங்கை சிரித்தவாறே! எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தாள்.
ஆனந்த் மட்டும் கல்யாண மண்டபத்திலிருந்து வந்திருக்கவில்லை. கல்யாணமண்டபத்தின் பொறுப்பு அவன் வசமானதால் எல்லாவற்றையும் பொறுப்பாக செய்து முடித்து வருவதாக கூறி விட்டான்.
செந்தில் கூட வண்டியில் வரும் பொழுது மங்கா விடம் “ஏன் ஆனந்த் உன் அண்ணன் மகன் என்று சொல்ல வில்லை” என்று கேட்டிருந்தார்.
அதற்கு மங்கா “அவன் நம்ம கம்பனில வேல பாக்குறதே! எனக்கு தெரியாது குடும்ப பங்க்சன்ல தான் அவனை பார்த்தேன். அன்பா போய் ஆனந்தனு பேசினா… மேடம் ஏதாவது வேணுமான்னு என்ன ஒதுக்கியே! பேசினான். சின்ன வயசுல ரொம்ப பாசமா இருந்தவன்தான். ஏன் இப்படி மாறினானு தெரியல” என்று வருத்தத்தோடு கூறி இருக்க செந்திலும் குடும்ப விழாக்களுக்கு கூட இவர்களை அழைக்காமல் ஒதுக்கி வைத்திருந்ததை நினைத்து வெக்கப்பட்டார்.
விழிக்கு கொஞ்சம் பதட்டமாகவே! இருந்தது. அர்ஜுனை திருமணம் செய்ய ஆசை பட்டாள். அதீசனை திருமணம் செய்தாலாவது தினமும் அர்ஜுனை பார்க்கலாம் என்றிருக்க, சம்பந்தமே! இல்லாமல் சந்தோஷை திருமணம் செய்து, வாழ்க்கை அர்த்தமே! இல்லாமல் போனது போல் தோன்றியது.
“வா அகல் குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிக்கிட்டு வா” மங்கை அவளை அழைக்க,
“என்னம்மா இது? கல்யாணம்தான் திடிரென்று ஆச்சு இப்போ இதெல்லாம் அவசியமா?” அன்னையை கடிய
“நடக்க வேண்டியதெல்லாம் அந்தந்த நேரத்துல நடந்தாதான் கண்ட கழிசடைய மனசுல போட்டு குழப்பிக்காம நாம நம்ம வாழ்க்கையை பார்க்க முடியும்” மகளுக்கு கொட்டு வைத்தவாறே பதில் சொல்ல அன்னையை முறைத்தவாறே குளிக்கச் சென்றாள்.
இங்கே சந்தோஷோசும் அன்னையிடம் அதையே! தான் சொல்லிக்கொண்டிருந்தான். “அண்ணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை நான் எப்படி மா…” என்றவனைத்தான்
“இல்ல டா கண்ணா.. அத்த என்ன சொல்லுறாங்கன்னா.. இப்போ இருந்தே! ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா.. ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்குவீங்க இல்லையா அதனாலால இன்னைக்கே! சாந்திமுகூர்த்தத்தை வைக்கலாம்னு சொல்லுறாங்க”
“சரி மா…” என்றவன் மறுத்து பேசவில்லை. மங்கை சந்தோஷை தனியாக அழைத்து பேசி இருந்தாள். அகல்விழி அர்ஜுனை விரும்பியது முதல் அவள் மனநிலைவரை எடுத்து சொன்னவள் கொஞ்சம் பொறுமையாக நடந்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
தனதறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவனுக்கு அகல்விழியை எப்படி சந்திப்பது, அவள் என்ன மாதிரியான பிரச்சனைகளை கிளப்புவாள் என்று சிந்தனைதான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த விழி கதவை பூட்டி விட்டு பால் கிளாஸை கட்டிலின் அருகே! இருந்த மேசையின் மீது வைத்தவள் சந்தோஷை பார்த்து “உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்று அவனை ஏறிட
“ஆகா ஆரம்பிச்சுட்டா” மனதோடு கூறியவன் “நானும் உன் கூட கொஞ்சம் பேசனும் அகல். இப்படி வந்து உக்காரு” என்றவன் “உனக்கு எங்க குடும்பத்தை பத்தி தெரியுமா? தெரியாதா?” என்று அகல்விழி பேச ஆரம்பிக்க முன்பாக பேச்சை ஆரம்பித்தான்.
திருதிருவென முழித்தவள் “அது அம்மா சொல்லி இருக்காங்க” என்று இழுக்க
“அவங்க சொல்லும் பொழுது ஆர்வமா கேக்கல இல்ல” என்ற சந்தோஷின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு இல்லை.
உண்மைதான் செந்தில் தன் குடும்பத்தை பற்றி கூறுவதைக் கேட்டுக் கேட்டு மங்கையின் குடும்பத்தையும் இவள் ஒதுக்கி வைத்திருந்தாள். ஒருநாளாவது அன்னை ஏன் அவர்களோடு தொடர்பில் இருக்கிறாள் என்று சிந்திக்கவுமில்லை. அவர்கள் ஏன் வீட்டுக்கு வருவதில்லை என்று சிந்திக்கவுமில்லை. குறைந்தபட்சம் அந்த குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் ன்று கூட தெரியவில்லை.
ஒரு பழைய ஆல்பத்தைக் அகல்விழியின் கையில் கொடுத்த சந்தோஷ் அதில் அகல்விழியின் பெயரிடும் விழாவின் பொழுது எடுத்த புகைப்படங்களைக் காட்ட, அதில் மாணிக்கவேலின் குடும்பத்தாரோடு அகல்விழி இருப்பது போல் நிறைய புகைப்படங்கள், சந்தோஷ் அவளை கையில் வைத்திருப்பது, ஆனந்த் அவளை தூக்கிக்கிக்கொண்டு இருப்பது, வாணி அவளை மடியில் வைத்திருப்பது போன்ற நிறைய புகைப்படங்கள்.
ஆச்சரியத்தில் கண்ணை விரித்தவள் “அப்போ நீங்க எங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்கீங்களா? “ஏன் வர்ரத நிறுத்துட்டீங்க?” புகைப்படங்களிலிருந்து கண்களை எடுக்காமல் கேக்க,
“முதன் முறையா அன்னைக்கிதான் உங்க வீட்டுக்கு வந்தோம். அதுதான் முதலும் கடைசியும் கூட” என்ற சந்தோஷ் புருவத்தை சுளித்து அன்று நடந்ததைக் கூறினான்.
“அப்பாவோட கூட பொறந்தது மங்கா அத்த மட்டும்தான். அத்தைனா எனக்கு மட்டும் இல்ல, அண்ணனுக்கும் உயிர். அவங்க கல்யாணமாகி போன பிறகு அவங்கள பார்க்க கூட முடியல. நீ பொறந்தப்போ உன்ன ஹாஸ்பிடல்ல வந்து பார்த்தோம். அப்பொறம் உனக்கு பேர் வைக்கிற பங்க்சனுக்கு அப்பா கூட்டிட்டு போறதா சொன்னாரு. நானும் அண்ணனும் அத்தையையும் உன்னையும் பார்க்க போறோம்னு ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா உங்க வீட்டுக்கு வந்த பிறகு அந்த சந்தோசம் காணாம போயிருச்சு” சந்தோஷின் குரலில் வெறுமை இருக்க, விழி அவனை புரியாது பார்த்தாள்.
சில நிமிடங்கள் அமைதிக்கு பின் “உங்க அப்பாவை விட நாங்க வசதில குறைஞ்சவங்கதான் அதுக்காக தெருவுல இருக்குறவங்க இல்லையே!”
“ஏன் அப்படி சொல்லுறீங்க? அப்பா ஏதாச்சும் பேசிட்டாங்களா?” சொந்த அக்காக்களின் நடத்தையால் செந்தில் இவர்களிடமும் மனம் நோகும்படி ஏதாவது பேசி விட்டாரோ! என்று கவலையடைந்தாள் விழி. இன்று சந்தித்தவனின் மேல் இவ்வளவு இணக்கம் ஏன் என்று கூட அவளுக்கு தோன்றவில்லை.
“இல்ல. மாமா ஒன்னும் சொல்லல. எங்களை கண்டுகொள்ளவும் இல்ல” பெருமூச்சு விட்டவன் அன்று சென்றவர்களை செந்தில் மற்றவர்களை வரவேற்றது போல் பெரிதாக வரவேற்காதது கண்ணில் வர தலையை உலுக்கியவன் “பணம் இருந்தாதான் மதிக்கிறாங்க, சொல்ல போனா ஆடம்பரமான செலவு செஞ்சாதான் மதிக்கிறாங்க” என்று சிரித்தவன் “நானும் அண்ணனும் உன்ன சுத்தி கிட்டே தான் இருந்தோம். அது… உன் அப்பாவோட பிஸ்னஸ் பண்ணுறவங்க கண்ண உறுத்தி இருக்கு, அப்பா, அம்மா காது பட கண்டபடி பேசினாங்க”
“என்ன பேசினாங்க” என் வீட்டு ஆளுங்கள அவங்க எப்படி பேசலாம் என்ற கோபம் விழிக்குள் எழ கோபமாக முகத்தை சுருக்கியவாறு கேக்க சந்தோசுக்கு சிரிப்பாகவும் இருந்தது.
“அது.. அது வந்து…”
“இப்போ நீங்க சொல்ல போறீங்களா? இல்லையா?” இன்றுதான் இவனை சந்தித்தோம் என்று இல்லாமல் மிரட்டலானாள்.
“ரெண்டு பையன பெத்து வச்சிருக்கா இல்லையா, ரெண்டுல ஏதாவது பையனோட பழக வச்சி பொண்ண மயக்கி, மொத்த சொத்தையும் வளைச்சி போடலாம்னு பிளான் பண்ணுறான்னு, அம்மாவை பார்த்து பேசி இருக்காங்க, அதே! மாதிரி அப்பாகிட்டயும்” என்றவன் நிறுத்த
“யாரவங்க… இப்போவே! போய் பல்ல உடைச்சிட்டு வரேன்” ஆவேசமாக விழி எழுந்துக்கொள்ள
அவள் கையை பிடித்து அமர்த்தியவன் “அட இருமா… இருவது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இவ்வளவு கோபப்படுற”
“எவனோ! பேசுனதுக்கா நீங்க எங்க வீட்டுக்கு வராம இருந்தீங்க?” சந்தோஷை உரிமையாக முறைக்கலானாள் விழி
அவளின் முறைப்பு சந்தோசுக்கு சந்தோசத்தை அள்ளி வழங்க “உங்க அப்பாவும் எங்க கூட பெரிதாக ஒட்டுதல் இல்ல, வெளியாட்கள் பேசுறது ஒண்ணுமில்ல, இதுவே! உங்க அப்பா பேசினா? அத்தை கூட இருக்குற உறவும் இல்லாம போய்டும்னுதான் ஒதுங்கி இருந்துட்டோம்”
“ஓ….” என்று உதடு குவித்தவள் யோசனையில் விழ, சந்தோஷ் அவள் உதட்டையே! பாத்திருந்தான்.
“ஆனாலும் நீங்க வந்திருக்கணும்” என்று விழி முறிக்கிக்கொள்ள
“உன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு உன்ன வந்து பார்த்துட்டு போவேன். தூரத்துல இருந்து… உனக்குத்தான் நான் யாருனு தெரியலையே!”
“ஓ…” மீண்டும் உதடு குவிக்க, மெதுவாக அவளை நெருங்கி அமர்ந்தான் சந்தோஷ்.
“ஆமா உங்க அண்ணன் ஏன் இப்படி இருக்காரு” ஆனந்தத்தை அவள் பலதடவை பார்த்திருக்கிறாளே! ஒருதடவைக் கூட அவளோடு பேச முயற்சித்ததில்லை. அத்தை மகள் என்று காட்டிக்கொண்டதுமில்லை. ஏன் அந்த அத்தையோடும் இன்முகமாக பேசி அவள் கண்டதில்லை.
“அதுவா.. அவனுக்கு அப்போ ஒன்பது வயசு. விவரமான வயசு இல்லையா. அவங்க பேசினது எல்லாம் அவனுக்கு நல்லாவே! புரிஞ்சிருச்சு. அதனாலதான் பணக்காரங்க கண்டா ஆகாது. உங்க அப்பா கம்பனில வேலைக்கு போறத நினச்சா எனக்கே! ஆச்சரியம்தான்”
“ஆமா நீங்க என்ன வேல பாக்குறீங்க?” ஏனோ! அவனை பற்றி இன்னும் தெரிஞ்சிக்க வேண்டி விழி கேக்க
“உத்தியோகம் புருஷ லட்சணம் மா.. எல்லாம் நல்ல வேலைதான். போக போக உனக்கே! தெரியும்” என்றவன் பதில் சொல்லாமல் மழுப்பினான்.
சந்தோஷ் தன்னை பற்றி சொல்ல விரும்பவில்லை என்றதும் விழிக்கு கோபம் வந்தது. தான் சொல்ல வேண்டியதையும் மறந்து “எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்” என்றவள் கட்டிலில் எறிப்படுத்துக்கொள்ள, சந்தோஷும் அவளின் மறு புறம் வந்து படுத்துக்கொண்டான்.
அவன் புறம் திரும்பியவள் “நீங்க என்ன இங்க தூங்குறீங்க? ஒழுங்கு மரியாதையா போய் சோபால தூங்குங்க”
“நான் உன் புருஷன் மா.. எத்தனை நாளைக்கு என்னால சோபால தூங்க சொல்லுவா?” சந்தோஷ் சாதாரணமாகவே! கேக்க
புருஷன் என்றதும் அகல்விழியின் இதயத்தில் சுளீரென்று ஒரு தாக்கம். சந்தோஷின் முகம் பார்த்தவள் “நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்”
“ஆகா திரும்ப ஆரம்பிச்சிட்டாளே! சொல்லாம நிறுத்த மாட்டா போல இருக்கே!” சந்தோஷ் யோசிக்கும் நேரம்
“அது வந்து அர்ஜுனும்…” என்று விழி ஆரம்பிக்கும் பொழுதே! அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் அவள் இதழ்களை முற்றுகையிட அதிர்ச்சியில் அகல்விழிக்கு விலக கூட தோன்றவில்லை.
மெதுவாக அவளிடமிருந்து விலக்கியவன் அவள் தலைக் கோதியவாறு “நீயும் அர்ஜுனும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ். அதுவும் திக் ப்ரெண்ட்ஸ். அதனால உங்க ரெண்டு பேருக்கும் வீட்டுல கல்யாணம் பேசினாங்க, ஆனா அஜுன் அவன் லவ் பண்ணுற பொண்ண வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டான். இதைத்தானே! சொல்ல வந்த?
அவ்வளவு நெருக்கத்தில் இருக்கின்றோம் என்பதை கூட உணராமல் அவன் கண்களுக்குள் கட்டுண்டு அவனையே! பார்த்திருந்தாள் விழி.
“இவனோடதான் கல்யாணம் முடிவான பின்னால மனசுல ஆயிரம் கனவு இருக்கும். உன் மனசுளையும் இருந்திருக்கும். அர்ஜுன் உன் பெஸ்ட் பிரெண்டு உன்ன இப்படி ஏமாத்துவான்னு நீ நெனச்சி பார்த்திருக்க மாட்ட, எல்லாம் மனிசனுக்குத்தான் நடக்குது அகல், நாமதான் கடந்து வரணும் புரியுதா? இப்போ தூங்கு” அவளை பேசவே! விடவில்லை.
“ஆமா இத யாரு உங்க கிட்ட சொன்னாங்க?” சந்தோஷ் தன்னை முத்தமிட்டதை கூட அவன் பேச்சில் மறந்திருந்தாள்.
“எத?”
“அர்ஜுனும், மாலனியும் லவ் பண்ணாங்கன்னு” கேட்க்கும் பொழுதே! விழியன் விழிக்குள் பல சம்பவங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
“அத்தைதான் சொன்னாங்க? அது மட்டுமா அர்ஜுன் பண்ண சேட்டையெல்லாம் பாத்துக்கிட்டுதானே! இருந்த? என்னமா லுக்கு விடுறான். என்ன உன் கிட்ட உண்மைய சொல்லி இருந்தா நீயும் ஹெல்ப் பண்ணி இருப்ப, இப்படி சொல்லாம எல்லாரையும் ஏமாத்திட்டான்”
சந்தோஷோடு தான் சந்தோசமாக வாழ வேண்டும் என்று அன்னை இப்படி மாற்றி கூறி இருப்பாள் என்று அகல்விழிக்கு புரிந்தது. அதே! போல் அர்ஜுன் நடந்துகொண்டதும் மாலனியை காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்ளவது போல் இருந்தது மறுக்க முடியாத உண்மை. இது எப்படி சாத்தியம்? குழப்பத்தில்லையே! உறங்கலானாள் விழி.
இங்கே மாலினி அவளுக்கு கொடுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாள். அவள் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவாரமாக இந்த வீட்டில்தான் இருந்தாள். என்னதான் அர்ஜுன் அவள் கழுத்தில் தாலியை போட்டிருந்தாலும் தந்தை அவளை இங்கயே! விட்டு சென்றதை நினைத்து கலங்கியவள் இரவில் தந்தைக்கு அழைத்து திட்ட ஆரம்பிக்க குழந்தை போல் கோதாண்டம் உண்மையை கூறி இருந்தார்.
“என்னப்பா சொல்லறீங்க அப்போ சி.எம் உங்க பிரென்ட் இல்லையா? இது தெரியாம அந்த லூசு கிருஷ்ணா பின்னாடி அலைஞ்சிகிட்டு இருந்தேன்” வாய் விட்டே சொன்னவள் எதிலிருந்தோ தப்பிய உணர்வில்தான் இருந்தாள். க்ரிஷ்ணாவுக்குத்தான் அவளை பிடிக்காதே!
“அப்போ அர்ஜுனுக்கு மட்டும் உன்னை பிடிக்குமா?” மாலினின் மனசாட்ச்சி அவளை பார்த்து சிரிக்க, க்ரிஷ்ணாவாவது அவளை காரணமில்லாமல் வெறுத்தான். அர்ஜுன் விழியை விரும்புகிறான். மாலினியை மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றது அவள் மனம்.
அந்த ஏழு நாட்களும், அம்மாவின் பாசத்தைக் கண்டிராத மாலினி வாகையின் பின்னாடியே! அலையலானாள். அர்ஜுனும் அவளை வம்பிழுத்துக்கொண்டு திரிய, அனியோடு சேர்ந்து அவனுக்கு கொட்டு வைத்துக்கொண்டிருந்தவள் அவன் அவள் கணவன் என்பதையே! மறந்துதான் போய் இருந்தாள்.
இன்று அவள் அவன் அறைக்கு போயாக வேண்டும். அவனோடு ஒரே அறையில்.. தன்னால் இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
சிந்தனையில் இருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது கதவு தட்டும் ஓசை. அனி கதவை திறந்துக்கொண்டு வரவும் சினேகமாக புன்னகைக்க,
“என்ன மாலு பஸ்ட் நைட் கனவா? சீக்கிரம் ரெடியாகு உன்ன அஜ்ஜு ரூம்ல விடணும். அவன் வேற ரூம் ஸ்பிரேய எல்லாம் அடிச்சி தூள் கிளப்பிகிட்டு இருக்கான்” என்று மாலனியின் இதயத்தின் ஓட்டத்தை இன்னும் அதிகப்படுத்தினாள்.
அவள் தலையில் கொட்டிய வாகை “சும்மா புள்ளய பயமுடுத்தாம இரு அனி… இப்போதைக்கு எந்த சடங்கும் வைக்க வேணாம்னு அஜ்ஜு சொல்லிட்டான் மாலினி” என்று வாகை மாலினியின் நாடியை தடவ
“அஜ்ஜு ஒன்னும் அவ்வளவு நல்லவனில்லையே!” என்ற அனி கண்ணாடியை சரி செய்தவாறு யோசிக்க,
அவள் முதுகில் ஒன்னு வைத்த வாகை “எப்போ பார்த்தாலும் என் பையன ஏதாவது சொல்லலைனா உனக்கு சோறு இறங்காதே!” மருமகளிடம் திரும்பியவள் “இல்ல டா கண்ணா… இதோ இவள வச்சி கிட்டு எப்படி… அதுவும் நீங்க ரெண்டு பேரும் இன்னும் படிக்கிறீங்க இல்லையா? அதுக்குள்ள இவள பேக் பண்ணி அனுப்பிடுறேன். அப்பொறம் எந்த பிரச்சினையும் இல்லாம உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் சரியா…”
“மம்மி… உண்மைய சொல்லு அஜ்ஜு சொன்னானா… டேடி சொன்னாரா?”
“ஏன் டி என் புள்ள குடும்பத்தை பத்தி நல்ல யோசிச்சு… சொல்லி இருக்கான். அது உனக்கு உன் டேடி சொன்னது போல இருக்கா?” வாகை பேசியவாறு அறையிலிருந்து வெளியேற அனியும் அன்னையின் பின்னால் சென்றிருந்தாள்.
அவர்கள் சென்றதும் கதவை சாத்தி விட்டு வந்த மாலினி நிம்மதி பெருமூச்சு விட்டாள். அர்ஜுனின் அறையில் தங்கினால் தன்னால் மூச்சு கூட விட முடியாமல் போகும் என்று எண்ணினாள்.
விழிக்கு திருமணமானதால் விழியோடு அர்ஜுனுக்கு இருந்த காதல் இல்லாமல் போகுமா? இந்த விஷயம் வேறு அவள் அடி மனதை அரிக்க அவளுடைய இன்ஸ்டாகிராம் தோழி கிருஷ்ணாவோடு பேசினால்தான் சற்று ஆறுதலாக இருக்கும் என்று எண்ணி அலைபேசியை உயிர் பித்தவள் அவளுக்கு மெஸேஜ் அனுப்பினாள்.
“ஹாய் இருக்கியா?”
“ஹாய் மாலினி.
இருக்கேனே!
சொல்லு என்ன பிரச்சினை?” ஏதோ மலானியின் அருகில் இருப்பது போல் கேட்க
“அர்ஜுனன் பத்தி சொல்லி இருந்தேன்ல அவனுக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சு”
“என்ன சொல்லுற மாலினி” ஆச்சரியமாக பார்க்கும் இரண்டு ஸ்மைலிகளும் சேர்த்து அனுப்பப்பட்டிருந்தது.
மாலின் இதுவரை நடந்த விஷயத்தை சுருக்கமாக வாய்ஸ் மெஸேஜ் பண்ணி விட்டு “எனக்கென்னமோ! டான பழிவாங்க தான் இதெல்லாம் பண்ணுறான்னு தோணுது” தன் சந்தேகத்தை தெளிவாக சொல்லி இருந்தாள்.
அப்படினா எதுக்கு பஸ்ட் நைட் வேணாம்னு சொன்னானாம்”
“இன்னும் விழிய நினைச்சி கிட்டு இருக்குறதால வேணாம்னு சொல்லி இருக்கலாம் இல்ல”
“எனக்கென்னமோ! அவன் விழிய லவ் பண்ணவே! இல்லனு தோணுது. பழிவாங்க உன்ன கல்யாணம் பண்ணி இருந்தாலும் விழியை இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ண விட்டிருக்க மாட்டனில்ல”
மாலினி typing…. என்று வெகு நேரமாக காட்டிய பின்
“ஆமா இல்ல. ஆனாலும் டான பழிவாங்கத்தான் என்ன கல்யாணம் பண்ணி இருப்பான்னு எனக்கு இருக்குற சந்தேகம் போக மாட்டேங்குது”
“உனக்கும் க்ரிஷ்ணாவுக்கும் ஆகாதுன்னு அவனுக்கு தெரியும் தெரிஞ்சும் உன்ன சீண்டுறான்னா பழிவாங்க இருக்காது மாலினி”
“அப்போ என்ன காரணமா இருக்கும் கிருஷ்ணா? அத தெரிஞ்சிக்காம எனக்கு மண்டையே! வெடிக்கும் போல இருக்கு” இங்கே மாலினி தலையில் கைவைத்திருந்தாள்.
“ரொம்ப யோசிக்காம தூங்கு. எதுவானாலும் அவன் வாயாலையே! சொல்வான்”
“சரி குட் நைட்” என்ற மாலினி அலைபேசியை அனைத்து விட்டு நிம்மதியாக உறங்க இங்கே அர்ஜுன்தான் தூக்கம் வராமல் மாலினி அனுப்பிய குறுந்செய்தியை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தான்.
அர்ஜுனுக்கு மாலினியின் மனதில் எவ்வாறு இடம்பிடித்து என்று தெரியவில்லை. விழியை அருகில் வைத்துக்கொண்டு மற்றவர்களின் கண்ணை மறைத்து மாலினியின் மனதை கவரும் வழியும் புரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு மாலினி ஏகப்பட்ட க்ரிஷ்னாக்களை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்வது தெரிந்தது. உடனே! தானும் மாலினிக்காக க்ரிஷ்ணாவானான்.
ஆனால் மாலினி அவனை பெண் என்று நினைத்து விட்டான். அவனும் அவளிடம் தான் யார் என்னவென்று சொல்ல முற்படவில்லை. சாதாரணமாகவே! பேசி நண்பர்களாகி இன்று மனக்குறைகளை பேசித்தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு நண்பர்களாக மாறி இருந்தனர்.
மாலினி கிருஷ்ணாவின் பின்னால் செல்லும் ஒவ்வொரு முறையும் அர்ஜுனுக்கு வலிக்கத்தான் செய்கிறது. அவள் மனதில் கிருஷ்ணாவை பற்றின எந்த எண்ணங்களும் இல்லை. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற செல்கிறாள் என்றதும் தன்னுடைய சூழ்நிலையும் கிட்டத்தட்ட அதே! தான்.
வீட்டில் விழியை திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்ட பொழுது விழி தோழி மட்டும்தான் கல்யாணம் எல்லாம் சரிவராது என்று மறுக்க, அன்னையும், தந்தையும் பிடிவாதம் பிடிக்கலாயினர். சரி விழியிடம் பேசிக்கலாம் என்று அவளை சந்தித்தால் என்னமோ காலம் காலமாக இருவரும் காதலர்கள் போல் விழி பேச நொந்து விட்டான் அர்ஜுன்.
கோதாண்டத்தின் பிறந்த நாளன்று மாலினி எந்த கோவிலுக்கு செல்கிறாள் என்று க்ரிஷ்ணாவாக அறிந்துகொண்ட அர்ஜுன் அந்த கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்து, இந்த நேரம் நல்ல முகூர்த்த நேரம் என்று க்ரிஷ்ணாவாக மாலினிக்கு தகவலும் கொடுத்து அவள் வருகைக்காக காத்திருந்தவன் அவள் கழுத்தில் தாலியை போட்டு விட்டான்.
சங்கரனும், வாகையும் கடவுள் பக்தி உடையவர்கள் கண்டிப்பாக இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகா வேண்டும்.
காதல் சரி எது, பிழை எது பார்க்காது. என் வழி தனி வழியென்று துணிந்து முடிவெடுத்து விட்டான் அர்ஜுன். இங்கே மாலினியின் விருப்பம்?

Advertisement