Advertisement

அத்தியாயம் 10

அந்த கல்யாண மணடபம் வி.ஐ.பிகளால் நிறைந்து வழிய, சங்கரனனும், செந்திலும் வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

அர்ஜுன் மட்டும் மேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்க, அதீசனைக் காணவில்லை.

“ஒரு வாரத்துல நிறைஞ்ச முகூர்த்தம். இப்படி திடிரென்று அழைப்பு விடுத்த பிற்பாடும் எல்லாரும் போல வந்திருக்காங்க இல்லையா சங்கரா?” செந்தில் பெருமையாக சொல்ல 

“நாம கூப்பிட்டு வராம இருக்க, முடியுமா?” சங்கரன் நண்பரிடம் பெருமையாக சொல்லலானார்.

“முகூர்த்தம் வேறு நெருங்கிக்கொண்டுருக்கு, அதீசன் வந்துகிட்டு இருக்கானில்ல” செந்தில் விசாரிக்கும் பொழுதே!

கணவனை அழைத்த வாகை “ஏங்க அதீ போன் சுவிட்ச் ஆப்னு வருது. அவன் கிட்ட பேசினீங்களே! என்ன சொன்னான்?”

“நீங்க ஆகா வேண்டிய வேலைய பாருங்கப்பா நான் வந்துடுறேன்னுதான் சொன்னான். வந்துடுவான்” என்ற சங்கரன் மனைவிக்கும் நண்பருக்கும் சேர்த்தே பதில் சொன்னார்.

சங்கரனின் பதிலை செந்திலின் மனதில் அலையடிக்க ஆரம்பித்திருந்தது. முகூர்த்தம் வேறு நெருங்கிக்கொண்டுருக்க, அதீசனை காணவில்லை. இந்நேரத்துக்கெல்லாம் மண்டபத்தில் அமர்ந்து மந்திரம் சொல்லி கொண்டிருக்க வேண்டியவன் கல்யாண மணடபத்துக்கே! வந்து சேர்ந்திருக்கவில்லை.

“சங்கரா ஒருவேளை சி.எம்மால  ஏதாவது பிரச்சினை வந்திருக்குமோ!” செந்தில் பதட்டமடைய,

மாலினியின் ஜாதகம் அருமையான ஜாதகம் கிருஷ்ணாவுக்கு அப்படி பொருந்தும் ஜாதகம். கனகாவேலை பற்றி அறிந்திருந்தமையால் எக்காலமும் என்னால் ஒரு உயிர் போக நான் காரணமாக மாட்டேன் அதனால் மாலினியின் கழுத்தில் தாலி ஏறியதால் மீண்டும் கிருஷ்ணாவை திருமணம் செய்வதால் தோஷம் தீராது என்று பொய் கூறியதாக  சங்கரனிடம்  அலைபேசி வழியாக தெரிவிருத்திருந்த ஜோசியர் வேறெந்த ஜோசியரிடமும் மாலினியின் ஜாதகத்தை எக்காரணம் கொண்டும் கொடுக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். கனகவேல் தன்னை நம்பாமல் வேறு ஜோசியரை அணுகினால் அவர் மூலம் மாலினியின் ஜாதகத்தின் உண்மை தெரியவர வாய்ப்பிருக்கின்றது என்பதற்காக. ஜோசியருக்கு நன்றி கூறிய சங்கரன் வீட்டில் கூட இந்த விஷயத்தை கூறவில்லை. கோதாண்டத்திடம் மட்டும்தான் கூறி இருந்தார்.

“வாய்ப்பில்ல. ஆனாலும் சம்மந்தி மனசு கெடந்து தவிக்குதுனு சொன்னதாலயும், எந்த பிரச்சினையும் வராம இருக்கணும்னு பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சிதான் இருந்தேன். இப்போவாரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. அதீ வந்துடுவான்” சங்கரன் செந்திலுக்கு தெளிவாக விளக்க, 

“எனக்கென்னமோ! சரியா படல, அங்க மங்கை புலம்பி கிட்டே  இருக்கா… என்னால அவளை சமாதானப் படுத்த முடியல. கொஞ்சம் வாங்க”

செந்திலும் பதட்டமடைந்தவாறு அகல்விழியின் அறைக்குள் நுழைய மங்கை நெஞ்சில் அடித்தவாறு கதறிக்கொண்டிருந்தாள்.

அறையில் அகல்விழியும், மங்கையும், மங்கையின் அண்ணன் மனைவி வாணியும் மாத்திரம் இருக்க, செந்திலைக் கண்டதும் மங்கையின் குரல் ஓங்கி ஒலித்தது. 

“என் புருஷன் கிட்ட சொன்னேன் அண்ணி.. கேக்கவே இல்லையே! அர்ஜுன கல்யாணம் பண்ண போறோம்னு இருந்த பொண்ணு திடிரென்று மனச மாத்திக்கிட்டு எப்படி அவன் அண்ணனை கல்யாணம் பண்ணிப்பா. இப்போ பாருங்க அதீசனையும் காணோம். அந்த பையன் என் பொண்ண குட்டி தங்கையா தானே! பார்த்தான். கல்யாணம் பண்ணிக்குவானா? அவன் வரமாட்டான். அவன் வரமாட்டான். என் பொண்ணு கல்யாணம் நிக்க போகுது. இனி என் பொண்ண யாரு கல்யாணம் பண்ணிக்குவான்” என்று அண்ணன் மனைவி வாணியின் கையை பிடித்துக்கொண்டு மங்கை கதற

“ஏய் அறிவு கெட்டவளே! வீட்டுலையும் இதைத்தான் சொன்ன, இங்கயும் இதையே! சொல்லுற” மங்கையை அடிக்கவே! கையோங்கி இருந்தார் செந்தில்.

“அப்பா…” என்று அகல்விழி அதிர்ச்சியாக கத்தியவாறு அன்னையை அணைத்துக்கொண்டாள்.

“செந்தில்” என்று சங்கரன் கத்த

“மாப்புள” என்று கத்தியவாறு உள்ளே வந்தார் மங்கையின் அண்ணன் மாணிக்கவேல்.

“என்ன மாப்புள இது? பொம்பள கிட்ட வீரத்தை காட்டுறீங்க? மங்கா கேட்ட அதே! கேள்வியை இப்போ நான் கேக்குறேன் மாப்ள எங்க? இந்நேரம் மணமேடைல உக்காந்து மந்திரம் சொல்ல வேணாமா? இன்னும் கொஞ்சம் நேரத்துல ஐயர் பொண்ண கூட்டிட்டு வர சொல்லுவாரே!” மாணிக்கவேல் கேக்க செந்தில் என்ன பதில் செய்வதென்று நண்பனைதான் பார்த்தார்.

“அதீசன் வந்துடுவான்” என்று பழைய பல்லவியையே! பாடினார் சங்கரன்.

“நீங்க எப்போ அதீசன் கிட்ட பேசீனீங்க?” கேட்டது வாகை.

மனைவியை முறைத்தவாறே “ஒரு வாரத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிவான உடனே! பேசினேன். நீங்க கல்யாண ஏற்பட பண்ணுங்கப்பா… நான் வந்துடுறேன்னு சொன்னான். என் பையன் சொன்ன சொல்ல காப்பாத்துவான். வந்துடுவான்” சங்கரன் திமிராகவே! பதில் சொல்ல

“அது சரி… ஒரு வாரத்துக்கு முன்னாடி பேசினீங்க, அதுக்கு பிறகு ஒரு தடவ கூட பேசல, அப்படி தானே!” வாகை காட்டமாக கேக்க,

“ஏன் நீ அவன் அம்மா தானே! நீ அவன் கூட பேசலையா?”

ஜோசியரைப் பார்க்க வேண்டும், சி.எம் பிரச்சினைப் பண்ணக் கூடாது, கல்யாண வேலை என்று ஒத்த ஆளாக சங்கரன் வேலைப் பார்த்துக்கொண்டிருக்க, வாகை  அதீசனின் கல்யாணத்தில் விருப்பமில்லை என்று கூறியதோடு வீட்டில் ஒரு கல்யாணம்தான் நடப்பது போல் நடந்துகொண்டது மட்டுமல்லாது அதீசனுடன் அலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லையா என்றதும் சங்கரனின் கோபத்தை தூண்டி இருக்க ஒரு பொழுதும் மனைவியிடம் கோபமாக பேசாதவர் கோபமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

வாகையும் சூடாகவே! அனைவரின் முன்னிலையிலும் “நீங்கதானே! அவனை அனுப்பி வச்சீங்க? இப்போ மட்டும் என்ன கேள்வி கேக்குறீங்க? எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. அத நான் அன்னைக்கே! தெளிவா சொல்லிட்டேன். அந்த கோபத்துல நான் அதீ கூட பேசல. ஆனாலும் நேத்திலிருந்து அவன் போனுக்கு ட்ரை பண்ணிக்கிட்டுதான் இருந்தேன்” என்றாள்.

“பாத்தீங்களா? பாத்தீங்களா? வாகைக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லன்னு சொல்லுறா. அதீசனுக்கும் இஷ்டமில்லாமத்தான் வராம இருக்கான் போல” மங்கை மீண்டும் நெஞ்சில் அடித்துக்கொள்ள.

அன்னையை அணைத்துக்கொண்டு அகல்விழி “கொஞ்சம் அமைதியா இருமா…”  என்று அன்னையை சமாதான படுத்த முயன்றாள். அகல்விழிக்கு அதீசனை திருமணம் செய்வதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. ஏதோ அர்ஜுனை அடைவதர்காக அதீசனை திருமணம் செய்வதாக எண்ணிக்கொண்டாலும், அவசரத்தில் எடுத்த முடிவு அது தப்பு என்று அவள் மனம் சொல்லிக்கொண்டே இருக்க தந்தையிடம் சென்று அவரின் சந்தோசமான முகம் கண்டு திருமணத்தை நிறுத்துமாறு கூற மட்டும் வாய் வரவில்லை. இப்பொழுது இந்த திருமணம் நின்று விட்டால் நல்லது என்று எண்ணினாள்.

“இவ ஒருத்தி…” செந்தில் மனைவியை முறைத்தவாறு “சங்கரா அதீசன் எங்க போய் இருக்கான். அவனுக்கு போன போடு” செந்தில் அவசரப்படுத்த சங்கரன் அதீசனை அழைக்க மற்றவர்கள் பதட்டமாக பார்த்திருந்தனர்.

அதீசனை அழைத்து அழைத்து பார்த்த சங்கரன் நொந்து போனவராக மனைவியையும், நண்பனையும் பார்க்க, வாகை முறைத்துக்கொண்டிருக்க, செந்தில் பதட்டமடைந்தார்.

“மகளின் திருமணத்துக்காக ஊரை கூட்டியாச்சு. மேடைக்கு அழைத்து வரும் நேரத்தில் மணமகனை காணவில்லை அதனால் கல்யாணத்தை நிறுத்துகிறேன் என்று சொல்லவா முடியும்?” என்ன செய்வது என்று புரியாமல் செந்தில் அமர்ந்து விட

மாணிக்கவேலின் இரண்டாவது மகன் சந்தோஷ் “அத்த மாப்பிளையை மணமேடைக்கு கூப்பிடுறாங்க” என்றவாறு வர

“ஐயோ ஐயோ இப்போ நான் என்ன பண்ணுவேன். என் பொண்ணு வாழ்க நாசமா போச்சே! அவள இப்போ யாரு கல்யாணம் பண்ணிக்குவா” என்று மங்கை தலையில் அடித்துக்கொண்டு அழ, மாப்பிளையை அழைக்க வந்த சந்தோஷ் அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தான்.

 “என்னாச்சு பா… என்ன பிரச்சினை?” என்று கேட்ட சந்தோஷ் ஆறடியில் வாட்ட சாட்டமாக போலீஸ்காரன் போல் கிராப் முடி வெட்டி கம்பீரமாக இருந்தான்.

மாணிக்கவேல் சுருக்கமாக விஷயத்தை சொல்ல அவன் பார்வை மணமகளாக இருந்த அகல்விழியின் பக்கம்தான் சென்றது. அழுது அழுது  முகம் சிவந்து போய் இருந்தாள். உறவு முறையில் அத்தை மகள் ஆனாலும் இன்றுதான் நேரில் சந்திக்கின்றான். அதுவும் அவள் கல்யாண நாளில். இப்படியொரு சூழ்நிலையில். புன்னகைத்து நலம் விசாரிக்கக் கூட முடியாத சூழ்நிலை.

“வாப்பா… சந்தோஷ். பாத்தியாப்பா என் பொண்ணு நிலைமையை இப்போ யாருப்பா… என் பொண்ண கட்டிப்பாங்க, இப்படியா ஆகனும்… ஐயோ…” சந்தோஷைக் கட்டிக்கொண்டு மங்கை ஒப்பாரி வைக்க

“அழாதீங்க அத்த இப்போ என்ன ஆகிருச்சு. உங்க பொண்ண பாருங்க… தேவதை மாதிரி இருக்கா… அவள கட்டிக்க, நீ, நான்னு போட்டி போடாத குறையா மாப்பிளைங்க வரிசை கட்டி நிப்பாங்க. எல்லாம் மனிசனுக்குத்தான் நடக்குது அத்த.. நாமதான் கடந்து வரணும்” கடைசி வாக்கியத்தை அகல்விழியை பார்த்து கூற, சந்தோஷை விழிவிரித்துப் பார்த்திருந்தாள் விழி.

“எவனும் வர வேணாம். நீ என் பொண்ண கட்டிக்கிறியா?” மங்கை பட்டென்று கேட்டுவிட..

“நானா?” சந்தோஷ் அதிர்ச்சியடைய,

“அம்மா…” என்றாள் அகல்விழி.

செந்திலும் மனைவியை யோசனையாக பார்க்க, மாணிக்கவேல் அதிர்ச்சியாக செந்திலை பார்த்த போது வாணி மகனைத்தான் பார்த்தாள்.

சந்தோஷுக்கு சிறு வயதிலிருந்தே! மங்கை எனறால் உயிர். மங்கை திருமணமாகி செல்லும்வரை அவள் புடவை முந்தியை பிடித்துக்கொண்டு திரிந்தவன்தான். தந்தை அலைபேசியில் பேசும் பொழுது மங்கையோடு பேசி விடுவான். அத்தை மகள் ரத்தினத்தை பத்தி தெரியும் பேசி பழகத்தான் கால அவகாசமும் சூழ் நிலையம் பொருந்தவில்லை.   

வசதியை பார்த்து பழக யோசிக்கும் செந்தில் பொண்ணை கொடுக்க ஒருகாலமும் சம்மதிக்க மாட்டார். இதில் மங்கை வேறு இப்படி பேசி மகனின் மனதில் ஆசையை தூண்டி விடுகிறாளே! என்ற எரிச்சல்தான் வாணிக்கு வந்தது.

“ஏன் நீ என் அண்ணன் மகன். உனக்கு இல்லாத உரிமையா? என்ன இருந்தாலும் சொந்தம் போல் ஆகிடுமா? வாகையை முறைத்தவாறு கூறிய மங்கை சந்தோஷின் திகைத்த முகத்தைக் கண்டு “நீயே என் பொண்ண கட்டிக்க யோசிக்கிற? இதுல மாப்பிளைங்க வரிசைக் கட்டுவாங்கனு கத சொல்லுற அட போடா..” அவனை தள்ளி விட்டு கணவனின் அருகில் அமர்ந்து “இவனுக்கு என்ன குறைச்சல் நல்லா பாருங்க” என்று வேற கூற

“அன்னையின் பார்வையை வைத்தே! அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று புரிந்துக்கொண்ட சந்தோஷ் “இல்ல அத்த அண்ணா இருக்கும் பொழுது நான் எப்படி… அதான்..” என்று இழுத்து மறுக்க,

“இங்கயும் அண்ணன் இல்லாம தம்பிக்குதாண்டா கல்யாணம் நடக்குது. இது ஒன்னும் புதுசு இல்ல. அது மட்டுமில்ல. ஆனந்துக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அதனாலதான் நான் உன் கிட்ட கேக்குறேன்” என்ற மங்கை

அண்ணனிடம் திரும்பி “அண்ணா இப்போ கேக்குறேன் என் பொண்ண இதோ உன் ரெண்டாவது பையனுக்கு கல்யாணம் பண்ணி தர சம்மதமா?”

“மங்கா என்னமா இது?” மாணிக்கவேல் சங்கடமாக செந்திலை பார்க்க,

“டேய் செந்தில் சொல்லுடா… அதீ வந்துடுவாண்டா… கொஞ்சம் பொறுமையா இருடா…” சங்கரன் சொல்ல,

“என்ன நீங்க சொன்னதையே! சொல்லுறீங்க? உங்க மகன் வரமாட்டான். வராதா இருந்தா எப்பயோ! வந்திருப்பான்” என்ற மங்கை கணவனை பார்த்து “ஏங்க இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் பேசுங்க? கல்யாணத்த நிறுத்திடலாமா? நிறுத்தி ஆளாளுக்கு கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமா?” காட்டமாகவே கேக்க

நண்பனை வெற்றுப் பார்வை பார்த்த செந்தில் “இல்ல மங்கா உன் இஷ்டப்படியே! நடக்கட்டும்” என்றார். தொழில் சாம்ராஜ்யத்தில் இப்படியொரு தலைகுனிவு வந்தால் முதுகுக்கு பின்னால் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்று செந்தில் அறியாமலில்லை. அதையெல்லாம் தாங்கக்கூடிய சக்தி செந்திலுக்கு சத்தியமாக இருப்பதாக தோன்றவில்லை. அதனாலயே! மனைவியின் முடிவுக்கு சரியென்றார்.

“அம்மா உனக்கு நான் வேண்டாதவளா போய்ட்டேனா.. என்ன வெட்டி ஆத்துலையோ! கடல்லையோ! வீசு. இப்படி அவமானப்படுத்தாத, இன்னக்கி கல்யாணம் நின்னு போனா? எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காதா என்ன?” அகல்விழி கோபமாக பேச

“இங்க பாரு அகல் இன்னக்கி உன் கல்யாணம் நடந்தே! ஆகணும். இல்லனா நான் செத்துடுவேன். இது உங்க அப்பா மேல சத்தியம்” மங்கை மிரட்டலானாள்.

மங்கைக்கு தெரியாதா? அகல்விழி திருமணத்தை நிறுத்தத்தான் பார்ப்பாள் என்று. எப்படி பேசினால் வழிக்கு வருவாள் என்றும் மங்கைக்கு தெரியும். விழியை பொறுத்தவரையில் அர்ஜுன் அவளுக்கு பிடித்தமான பொம்மை. அதை மாலினி அவளிடமிருந்து பறித்து விட்டாள். அதை அவளிடமிருந்து பறிக்கும்வரை அகல்விழிக்கு தூக்கம் வராது. அது விழியன் குணம். அதை நன்கு அறிந்த மங்கை உடனே! இந்த திருமணம் நடந்தாகா வேண்டும் என்று எண்ணினாள். சந்தோஷை பற்றி அவளுக்கு நன்றாகவே! தெரியும் அவன் கண்டிப்பாக அவளை மாற்றி விடுவான் என்ற நம்பிக்கை மங்கைக்கு இருந்தது.  

“மங்கா”

“மங்கா” மாணிக்கவேல், செந்திலும் ஒரே நேரத்தில் குரல் கொடுக்க, சங்கரனும், வாகையும் பார்வையாளர்களாக மட்டும் நின்றிருந்தனர்.

எல்லா விஷயமும் அகல்விழியின் கைமீறி போய் விட்டிருந்தது. அடுத்து கொஞ்சம் நேரத்தில் சந்தோஷ் மணமகனாக மேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தான்.

“ஏங்க… அதீசனுக்கு என்ன ஆகிருச்சுனு விசாரிங்க?” வாகை பதறியவாறு சொல்ல

“பதட்டப்படாத வாகை வந்துடுவான்” என்ற சங்கரன் எந்த பதட்டமும் இல்லாமல் மணமேடைக்கு செல்ல வாகையும் மாலினியின் அறைக்கு சென்றாள்.   

 அகல்விழியின் அறையில் நடக்கும் களோபரம் அறியாத அனி மாலினியின் அறையில் தானும் தயாராகிக்கொண்டிருந்தாள். யாரோ கதவை தட்டவும் தலைக்கு குண்டு மல்லியை பின் வைத்து குத்தியவாறே சென்று கதவை திறந்தவள் வெளியே நின்ற கண்ணாடிக்காரனை அடையாளம் கண்டுக்கொண்டவள் வேண்டுமென்றே

“ஹு ஆர் யு மேன்” என்று கேட்க

வாயில் பின்னை வைத்துக்கொண்டு பட்டுப்புடவையில் மல்லிகை பூவை சூடியவாறு நின்றவளின் வெற்றிடை தெரிய கொஞ்சம் தடுமாறிய ஆனந்த் அனியின் ஆங்கிலத்தில்

சுதாரித்து கல்யாண பொண்ணுக்கு கூல்ட்ரிங்க்ஸ் கொண்டு வந்தேன் என்று சொல்ல, அவனை மேலும் கீழும் பார்த்தவள்

“உன்ன இதுக்கு முதல்ல நான் பார்த்ததே! இல்லையே! யார் நீ..”

“சுத்தம் அதுக்குள்ளே மறந்துட்டாளா? நியாபக மறதி வேறயா?” என்று முணுமுணுத்தவன் “ஐம் ஆனந்த் மேம்”

கண்ணாடியை சரி செய்து அவனை பார்த்தவள் “ஹேய் ஆனந்த். ஹவ் ஆர் யு மேன்? இன்னக்கி உன் பெர்பியூம் போடலையா?” என்று கேட்க நொந்து விட்டான் ஆனந்த்.

அணியை பொறுத்தவரையில் ஆனந்த் இப்பொழுது அவளுக்கு நன்கு பழக்கமானவன். ஏனோ! அவனோடு பேச பிடித்திருக்க, வேண்டுமென்றே! வம்பு வளர்க்கலானாள்.

அவள் தன்னை கேலி செய்யத்தான் அவ்வாறு கேட்டாள் என்று நினைத்த ஆனந்த். இப்படி தன் குடும்பத்தார் முன்னிலையில் கேட்டு மானத்தை வாங்கி விடக்கூடாது என்று தான் அதை போடவில்லை என்று நொந்தவன் அவள் அதையே சொல்லவும் கடுப்பாகி “ஜூஸ் கொண்டு வந்திருக்கேன் மேம்” என்று இரண்டு குவளையை அவள் கையில் திணித்து விட்டு சென்றான். அவளை சந்தித்தால் அவளின் மூக்கு கண்ணாடியை கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தவன் அவள் பேசிய பேச்சில் அதை மறந்துதான் போனான். 

“என்னம்மா மாலினியை ஐயர் மேடைக்கு கூப்பிட்டாரா?” ஆனந்த் சென்றதோடு அறைக்குள் நுழைந்த அன்னையிடம் கேட்டாள் அனி.

அவள் கையிலிருந்த ஜூஸ் கிளாஸை கண்டு “இங்க கொண்டாடி… பேசிப்பேசியே! தொண்ட தண்ணி எல்லாம் வத்திப் போச்சு… அப்பப்பா…. எத்தனை பேர சமாளிக்கணும்” என்ற வாகை கட்டிலில் அமர மாலினியை அலங்காரம் செய்து முடித்து விட்டு பெண்கள் இருவரும் வெளியேறினர்.

மாலினிக்கு குடிக்க மற்ற ஜூஸ் கிளாஸை கொடுத்த அனி “எந்த பிரச்சினையும் இல்லல. அண்ணன் மண்டபத்துக்கு வர மாட்டான்னு சொல்லிடீங்களா?”

“அடியேய் வாய மூடு டி நீயே என்ன காட்டி கொடுத்துடுவ போல இருக்கே!” என்ற வாகை புரியாது முழித்தவாறு இருவரையும் பார்த்திருந்த இளைய மருமகளைப் பார்த்து புன்னகைத்தவள்

“அது ஒண்ணுமில்லமா… விழிய அதீசன் சின்ன வயசுல இருந்தே! தங்கச்சியா பார்த்துட்டான். அதனால கல்யாணம் பண்ண முடியாதுனு சொன்னான். இத உன் மாமனாருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அதான்…” மருமகளின் யோசனையாக முகம் கண்டு “பேசி புரிய வச்சி விழிய அவ அம்மாவோட அண்ணன் பையனுக்கு கட்டி வைக்க சொன்னேன். இப்போ எந்த பிரச்சினையும் இல்ல” என்ற வாகை வேறு பேச அனியும் விழியை மறந்து போனாள்.

கோதாண்டம் வந்து அலங்காரத்தில் மிளிர்ந்த மக்களை ஆசிர்வதித்து விட்டு மேடைக்கு சென்றார்.

 யாரோ கதவை தட்டி ஐயர் மணப்பெண்ணை மேடைக்கு அழைப்பதாக சொல்ல அனி மாலினியை அழைத்துக்கொண்டு சென்று அர்ஜுனின் அருகில் அமர்த்த வேண்டுமென்றே அர்ஜுன் மாலினியை நெருங்கி அமர்ந்துக்கொள்ள மாலினி விலகி அமர்ந்தாள்.

“ஹாய் மாலினி வெல்கம் டு அர்ஜூன்ஸ் லைப்” என்று புன்னகைத்தவாறே சொல்ல 

விழியை திருமணம் செய்ய முடியவில்லையே!! என்ற கவலை சிறிதும் இல்லாத அவன் முகத்தைக் கண்டு “நேத்துவரைக்கும் விழிய லவ் பண்ணிட்டு இன்னக்கி மாலினியா?” அவனை முறைத்தவள் தலை குனிந்து அமர்ந்துகொண்டாள்.

இந்த ஒருவாரமாக அர்ஜுன் மாலினியை வம்பிழுத்துகொன்டுதான் இருந்தான். அவளும் விடாது அவனை எல்லா மிருகங்களின் பெயரையும் சூடி அழகு காட்டலானாள். மொத்தத்தில் தங்களுக்கு கல்யாணம் நடக்க போவதை மறந்துதான் இருவரும் வாகைக்காக உரிமை சண்டையும் போட்டுக்கொண்டனர். 

விழியும் கடனே! என்று சந்தோஷின் பக்கத்தில் அமர்ந்திருக்க, அவள் வரும் பொழுது சினேகமாக புன்னகைத்தவன் அதன் பின் ஐயருடன் ஐக்கியமாகி விட்டிருந்தான்.

கெட்டிமேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, மணமகன்கள் தங்களது மணப்பெண்கள் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தங்களது சரிபாதியாக்கி இருந்தனர்.

மாலினி கோதாண்டத்தை கட்டிக்கொண்டு அழ அதற்கும் அர்ஜுன் அவளை சீண்ட அழுத்தவாறே அவனை முறைக்கலானாள்.  

கல்யாணம் நடந்து முடியும்வரை அதீசன் மண்டபத்துக்கு வந்து சேரவே! இல்லை.

ஒவ்வொரு சடங்காக நடந்து முடிந்த பின் அனைவரும் ஒன்றாகத்தான் உணவும் உண்டனர். ஒரு பக்கம் செந்திலின் குடும்பமும், மறுபக்கம் சங்கரின் குடும்பமும் அமர்ந்திருந்தனர்.

செந்திலின் சொந்தபந்தங்கள் என்று ஒரு சிலர் இருந்தது போல், மங்கையின் நெருங்கிய உறவுகள் மாத்திரம் இருக்க, மாப்பிள்ளை சந்தோஷை கிண்டல் செய்ய யாருமில்லாமல் விழியோடு சாதாரணமாக பேசியவாறு உணவருந்திக்கொண்டிருந்தான். விழியின் பார்வையோ! எதிர்புறமிருந்த அர்ஜுனின் மீது இருக்க, அவனோ! மாலனிக்கு பரிமாறுவதில் மும்முரமாக இருந்தான்.

ஆனந்த் தான் பந்தியை கவனித்துக் கொண்டிருந்தான் “அண்ணா இங்கயும் கொஞ்சம் கவனினா.. உன் தம்பிக்கு கல்யாணமாக்கிருச்சு” என்று சந்தோஷ் சத்தமாக சொல்ல ஆனந்த் தம்பியை முறைத்தவாறே “என்ன வேண்டும் என்று கேக்கலானான்.

“இவன் ஒருத்தன் கடமை கண்ணாயிரமா இருப்பான். மாப்புள வரல தம்பிக்கு அகல கட்டி வைக்கிறோம்னு சொன்னா… ஓஹ்.. அப்படியானு போறான்” வாணி மங்கையிடம் சொல்ல

“சங்கரனின் பி.ஏ. ஆனந்த் உன் அண்ணன் மகனா? இது எனக்கு தெரியல?” செந்தில் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் சொன்னார்.

அர்ஜுனை சுற்றி அவன் நண்பர்கள் அவன் செய்கைகளுக்கு “ஓ..” போட்டுக்கொண்டு இருக்க, விகாஷ் அர்ஜுனின் காதருகில் குனிந்து “கடைசியா ஒரு தடவ கேக்குறேன் டா… உண்மைய சொல்லு, டான பழிவாங்க தானே! மாலினி கழுத்துல தாலிய போட்ட”

நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த விகாஷ் அர்ஜுனுக்கு பலதடவைகள் போன் பண்ணி இருக்க, அர்ஜுன் அவன் அழைப்புகளை ஏற்கவே! இல்லை. கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தவன் மணமேடைக்கு வந்த உடனே! இந்த கேள்வியை கேக்க, “லூசா நீ” என்று அவனை பார்த்து வைத்தான் அர்ஜுன்.

அதே! கேள்வியை மீண்டும் கேக்க “நீ எத்தனை தடவ கேட்டாலும் பழிவாங்க யாராச்சும் இப்படி பண்ணுவாங்களா? லூசு மாதிரி கண்டதை உளறாத? வேட்டி அவிழ்த்திடுச்சு டா.. அதான் டக்குனு போட்டுட்டேன். சாப்பிட விடுடா” என்று சொல்ல நொந்து விட்டான் விகாஷ்.

     

“சங்கரா நாம பேசின மாதிரி ரிஷப்ஷனை ஒண்ணா வைக்க வேணாம். சம்மதி வீட்டு ஆளுங்க, மாப்புள ப்ரெண்ட்ஸ்னு அந்த பக்கம் கூப்பிட வேண்டி இருக்கும், அதனால நாம வேற நாள் பாத்துகிறோம்” என்ற செந்தில் குடும்பத்தோடு மண்டபத்தை விட்டு முதலில் கிளம்பி இருந்தார்.

செல்லும் நண்பனை கவலையாக பார்த்த சங்கரன் செந்திலுக்கும் தனக்கும் நடுவில் பிளவு வந்து விட்டதாக தோன்ற பெருமூச்சு விட்டுக்கொண்டார். மீண்டும் ஒருமுறை அதீசனின் அலைபேசிக்கு அழைக்க, அது அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வரவும் ஒரு தந்தையாக எந்த மாதிரியான சூழ்நிலையும் அதீசன் சமாளித்து விடுவான் என்று தைரியமாக இருந்த மனதில் சிறு கலக்கம் உருவானது.

Advertisement