Advertisement

அத்தியாயம்…4

வீர ராகவன் அப்போது தான் ஒரு கேஸை படித்து முடித்தவன், அதில் இருந்த விவரங்களை வைத்து நாளை யாரை பார்க்க வேண்டும் என்று அதிலேயே குறிப்பு எழுதி வைக்கும் போது தான் அவன் அன்னை யசோதா அவன் அறை  கதவை தட்டியது.

இந்த நேரத்திற்க்கு அம்மா தான் கதவை தட்டுவாங்க என்று  தெரியும். “ வாம்மா.” என்று அழைத்தவன்,  தன்  முன் நீட்ட பட்ட பாலை வாங்கி அங்கு இருந்த டேபுல் மீது வைத்து விட்டு,

“ நீங்க என் பேச்சை கேட்கவே மாட்டிங்களாம்மா.?  உங்க கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்.  என் அறைக்கு வர கதவு எல்லாம் தட்ட  வேண்டாம் என்று. அதே தான்  பால். நான் என்ன சின்ன குழந்தையாம்மா இன்னும் நையிட் பால் குடித்து விட்டு  தான் படுக்கனும் என்று. 

அப்படி எனக்கு ஏதாவது வேண்டும் என்றால் நானே வந்து செய்துப்பேன் என்று சொல்லி இருக்கேனா. டைம் என்ன பாருங்க பதினொன்னு, இந்த நேரம் வரை தூங்கமா இருந்தா உடம்புக்கு என்ன  ஆகும். உங்களுக்கு  வயசு ஏறுதா..?  குறையுதா..? ” என்று வீர ராகவன்  அவன் அன்னை யசோதாவிடம் சத்தம் போட்டு கொண்டு இருந்தான்.

யசோதாவோ . “ நீ என் பேச்சை  கேட்கிறியா..? நீ சொல்வது உண்மை தான்.  வருடம் ஏற ஏற வயசு ஏறிட்டு தான் போகும். எனக்கு மட்டும் இல்ல எல்லோருக்கும் தான். அந்த எல்லோரிலும் நீயும் அடக்கம் உனக்கு தெரியுதா இது..? 

அப்புறம் என்ன சொன்ன உன் ரூமுக்கு வர கதவை தட்ட தேவையில்லை என்று தானே. இப்போ நீ சொன்னது போல செய்திட்டு நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆன பின் பழக்கத்துல அதே மாதிரி அறைக்கு வந்துட்டா. “ என்று மகனுக்கும் மேல சத்தம் போட்ட யசோதா..

“ பாலை குடிச்சிட்டு கொடு. க்ளாஸை ஷிங்கில் போட்டு படுக்க போகனும். என்ன செய்யிறது, நீ  இந்நேரம் கல்யாணம் செய்து இருந்து இருந்தா இந்த வேலை எல்லாம் அவள் பார்த்து இருப்பா.

நான் நிம்மதியா இந்நேரத்துக்கு  பாதி தூக்கத்தில் இருந்து இருப்பேன்.  எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.  உன் கூட சுத்திட்டு இருந்த அந்த சாரு பைய்யனுக்கு கூட கல்யாணம் ஆகி குடும்பஸ்த்தனா ஆயிட்டான்.  நான் வாங்கி வந்த வரம் அப்படி. ” என்று சொல்லி எந்த க்ளாசுக்காக இவ்வளவு நேரம் சத்தம் போட்டாரோ, அதை கூட வாங்காது   போய் விட்டார்.

வீர ராகவனுக்கு தெரியும். பாலை எடுத்து வந்ததே இதோ இந்த  வார்த்தை சொல்ல தான்.  நானும் சாருகேசனும்  ஏதோ வேலை இல்லாது பொறுக்கி பசங்க கணக்கா  ரோடில் சுத்திட்டு இருப்பது போல் பேசும் அன்னையை நினைத்து வீர ராகவனுக்கு  சிரிப்பு தான் வந்தது.

வீர ராகவன் அன்னை என்ன சொன்னாலும், கோபம் பட மாட்டான் சில சமயம் கோப்ப்படுவது போல் நடிப்பானே தவி,ர உண்மையான  கோபத்தை  தன் அன்னையிடம் எப்போதும் அவனால் காட்ட முடியாது.

அந்த நடிப்பை கூட அவர்கள் சட்டை செய்யாது உன்னை பற்றி எனக்கு தெரியும் என்பது போல் தான் யசோதா அதை  பெரிது படுத்த மாட்டார். தந்தை இல்லாது ஒற்றை பெண்மணியாக தன்னை வளர்த்து, இதோ எந்த வேலை காரணமாக தன் கணவனை இழக்க நேர்ந்ததோ, அதே வேலைக்கு நான் செல்ல ஆசைப்பட்டதும்  என்னை தடுக்காது.

“ உன் விருப்பம்.” என்று சொன்னவரிடம்  சில சமயம் நடிப்புக்கு என்றாலும் கூட கோபத்தை காட்ட முடியாது தான் அவன் மாட்டி கொள்வது.

தன் அன்னை தன்னிடம் எதிர் பார்ப்பது திருமணம். அடுத்து பேரன் பேத்தி. அவனுக்கும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பது எல்லாம் கிடையாது.  தனக்கான பெண் இன்னும் தான் பார்க்கவில்லை என்று  எண்ணும் போதே,  அவன் கண் முன் இந்துமதியின் பிம்பம் வந்து போனது. கூடவே அவள் பேசிய பேச்சும் தான்.

காலையில் நடந்த நண்பனின் திருமண.ம் அடுத்து நடந்த நிகழ்வுகள் என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே, சாத்தனை நினை  அது எதிரில் வந்து நிற்கும் என்பது போல் சாருகேசனிடம் இருந்து வந்த அலை பேசி அழைப்பில்,

‘இந்த நேரத்தில் என்னை ஏன் கூப்பிடுறான்.” என்று கொஞ்சம் பதட்டத்துடன் தான் அவன் அழைப்பை வீர ராகவன் ஏற்றது.

ஆனால் அழைப்பில் இருந்த சாருகேசன் சொன்ன செய்தியில் பதட்டம் போய் சிரிப்பு வந்து விட்டது.

“ இல்ல மச்சான்  கல்யாணம் ஆகி கொஞ்ச மாதம் கழித்து தான் புருஷன வெளியில் துறத்துவாங்க.. ஆனா உன் விசயத்தில் நிஜமா சிரிப்பு தான்டா வருது.” என்று வீர ரகவன் சருகேசனிடம் கிண்டல் செய்தான்.

“ எதுவும் நடக்கலடா.. வந்ததும் இதுக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று சொல்றாடா மச்சான்.” என்று தன் ஆதாங்கத்தை தன் நண்பனிடம் பகிர்ந்தான் சாருகேசன்.

“ இப்போ பெண்கள் எல்லாம் முதல்ல புரிஞ்சிட்டு அப்புறம் என்று தான் நினைக்கிறாங்கடா. அதனால இதை நினைத்து எல்லாம் பெருசு பண்ணிகாதே, சிகரட்டை அணச்சிட்டு போய் படு.” என்று வீர ராகவன் சொல்லவும்.

“ நான் சிகரெட்டு பிடிச்சிட்டு இருப்பது உனக்கு எப்படிடா தெரியும்.” என்று சாருகேசன் கேள்விக்கு,

“ஆ நம்ம ட்ரையினிங்கில் சொல்லி கொடுத்தாங்க..  நீ டென்ஷன் வந்தா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாதா.? அந்த பெண் எதிரில் சிகரெட்டு பிடிச்சி பிரச்சனை ஆக்கிக்காதே.. போ போய் படு.” என்று வீர ராகவன் சொன்னான்.

“அது  எல்லாம் பார்த்தாச்சி.  பார்த்தாச்சி” என்று சாருகேசன் சொன்னதும், “ ஓ நீ தூங்காம பால்கனிக்கு வந்ததும்  சிஸ்டரும் பின்னாடியே வந்துட்டாங்கலா.. பரவாயில்லை மச்சான் சிஸ்டருக்கு உன் மேல அக்கறை தான்.”

“ வேண்டாம்டா வாயில் நல்லா வந்துடும்” என்று சொல்லி கதவை லேசாக திறந்து அறையில் உள்ளே எட்டி பார்த்தான். அங்கு யமுனா குப்புற படுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு.

“ இழுத்து போர்த்திட்டு நல்லா தூங்குறா மச்சான். எதுவும் நடக்காதது கூட பரவாயில்ல மச்சான். கையில பால் கொண்டு வந்தவ அதை குடிக்க கூட என் கிட்ட தராம  படுத்துட்டா மச்சான்.” என்ற சாருகேசன் சொல்லவும்.

“ பால் தான் பிரச்சனை என்றால் இப்போ என் கையில் கூட தான் பால் இருக்கு வீட்டுக்கு வா குடிச்சிட்டு இங்கேயே படுத்துட்டு தூங்கி பொறுமையா நாளைக்கே வீட்டுக்கு போகலாம்.” என்று வீர ராகவன் ஏற்றிய வெறுப்பில்.

 “ உன் கூட படுக்க தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.” என்று சொல்லி கோபமாக சாருகேசன் போனை அணைத்து விட்டான்.

இப்படி சாருகேசன் முதல்  இரவு மட்டும் அல்லாது, அடுத்த அடுத்த இரவிலும் இதே தான் தொடர்ந்தது. நடப்பது நடக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை.

ஆனால் சாதரணமாக பக்கத்தில்  அமர்ந்தால் கூட பக்கத்து வீட்டுக்காரன் வந்து  அவள் பக்கத்தில்  அமர்ந்தது போல் சட்டென்று எழுந்து விடுவதும்,  வெளியில் அழைத்தால் கூட..

“ உடல் நிலைசரியில்லை.” என்று சொல்பவள் அவர்கள் தோழிகள் அழைத்தால் மட்டும்  வெளியில் செல்வது என்று இருப்பவளை சாருகேசனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

நண்பன் சொன்னது போல் மனைவி ஆனவளை  சந்தேகப்பட கூடாது என்று அவன் நினைத்தாலுமே, யமுனாவின் செய்ல்கள் அனைத்துமே சாருகேசனை   அப்படி நினைக்க தூண்டியது.

திருமணம்  நடந்து ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. இன்னும் அவளுக்கு ஒரு முத்தம் கூட கொடுக்கவில்லை. அவன் வேலையே எப்போதும் டென்ஷன் டென்ஷன் தான். இது வரை அவனுக்கு வீட்டில் அமைதி இருந்தது.

திருமனம் முடிந்ததும் இவர்களை தனி குடுத்தனம் வைத்து விட்டனர்.  தனிமை கொடுக்க என்று  பெரியவர்கள் செய்த செயலே, அவர்களுக்கு பிரிவினை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

வீட்டுக்கு வந்தால் சந்தோஷம் கொடுக்க வேண்டிய  மனைவியின் முகத்தை பார்த்தாலே சாருகேசனுக்கு இப்போது எல்லாம் சந்தேகம் தான் வருகிறது.

கிட்ட நெருங்க விடாது. இவள் எதை  தன்னிடம் இருந்து காப்பாற்றி கொள்ள நினைக்கிறாள்.  ஒரு சின்ன நெருக்கம்  கூட இல்லாது என்ன இது வாழ்க்கை. இப்போது எல்லாம் சாருகேசனுக்கு வீட்டுக்கு போகவே பிடிப்பது இல்லை.

வீர ராகவன்  ஒரு கேசில் மிக தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு இருந்ததால்,  ஒரு மாதம் அவனை  தனிப்பட்டு விசயமாக பாராது அந்த விசாரணை ஒரு முடிவுக்கு வந்ததும் தான்  அப்பாடா என்று அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

சரி நண்பனை பார்க்கலாம் என்று நீண்ட நாட்களுக்கு பின் வீர ராகவன் சாருகேசனை பேசியில் அழைத்தான். சாருகேசன் அழைப்பை ஏற்றதும், அங்கு இருந்து வந்த சத்தத்தில் வீர ராகவன்..

“ மச்சான் பப்பிலேயே இருக்க..?” என்ற கேள்விக்கு, சாருகேசன் ம்” என்று சொல்லும் நிலையில் கூட இல்லாது பேசியை  அணைத்து விடவும்,  அவன் பேசியின் மூலமே அவன்  எந்த பப்பில் இருக்கிறான் என்று கண்டு கொண்டு , வீர ராகவன் நேராக அங்கு  சென்றான்.

அங்கு அவன் இருந்த கோலத்தை பார்த்து தூக்கி போட்டுக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தவன் அவன் போதையை  தெளிய வைக்க வேண்டி  சில பல வேலைகள் செய்த பின் தான் சாருகேசவனால் ஒழுங்காகவே உட்கார முடிந்தது. 

சாருகேசனுக்கு உதவி செய்ய வேண்டி அவர்கள் அருகில் இருந்த யசோதா சாருகேசன் எழுந்து அமர்ந்ததுமே நண்பர்கள் தன்  எதிரில் பேச  தயக்க்கப்படுவார்கள் என்று நினைத்து.

சாருகேசனிடம். “ நீங்க பேசிட்டு இருங்க. எனக்கு ரொம்ப டையாடா இருக்கு   நான் தூங்க போறேன்.” என்று  சொன்னதுமே, அவர் கையை பற்றி கொண்ட சாருகேசன்.

“ சாரிம்மா உங்க முன்ன இப்படி எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு.” என்று சாருகேசன் யசோதாவிடம் மன்னிப்பை வேண்டி   பேசிய பேச்சில், அவன் தலையை கோதி விட்ட யசோதா..

“ உனக்கே இது தப்புன்னு தெரியுதா.? அப்போ அது போதும். பிரச்சனைக்கு டாஸ்மார்க்கில் தான் தீர்வு கிடைக்கும் என்று நினைக்க கூடாது . சரி பேசுங்க நான் போறேன்.”  என்று சொன்ன யசோதா   போகும் போது  மகனிடம் கன் ஜாடை காட்டி விட்டு தான் சென்றார்.

வீர ராகவன் அவனே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று அமைதி காத்தாலுமே, அவன் சொல்லாமலேயே தெரிந்து விட்டது. பிரச்சனை திருமண வாழ்க்கை பற்றியது என்று.

ஆனால் சாருகேசன் எடுத்த உடன்.” நான் விவாகரத்துக்கு  அப்ளே செய்யலாம் என்று இருக்கேன்  மச்சான்.”என்ற அவன் ஆரம்ப பேச்சே வீர ராகவனுக்கு ஆட்டம் காட்டி விட்டது.

அவன் இதை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை.  கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருக்கும் என்று நினைத்தானே ஒழிய, இது போல்  விவாகரத்து செய்யும் நிலைக்கு சாருகேசன் யோசித்து இருப்பான் என்று அவன்  எதிர் பார்க்கவே இல்லை.

“ என்னடா சொல்ற.? போன மாதம் கல்யாணம்.  இந்த மாதம் விவாகரத்துன்னு சொல்ற. கல்யாணம்  என்பது உங்களுக்கு விளையாட்டு விசயமா போயிடுச்சா.?” என்று வீர ராகவன் கொஞ்சம் கோபமாக தான்  நண்பனிடம் பேசினான்.

வீர ராகவனுக்கு கல்யாணம் அடுத்து உண்டான அந்த திருமண வாழ்வு இதில் எல்லாம் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.  ஒரு முறை தான் திருமணம். அது நல்லதோ கெட்டதோ அதை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவன் என்று கூட சொல்லலாம்.

அதனால் தான்  அவன் அம்மா அவனுக்கு பார்த்த பெண்ணிடம் முழு திருப்தி இல்லாது  அவனின் திருமணம் தட்டி கழித்து கொண்டு வருகிறது. நண்பன் எடுத்த உடன் விவாகரத்து பற்றி பேசவும். அவனுக்கு அப்படி ஒரு கோபம். 

சாருகேசன். “ என்னை பற்றி உனக்கு தெரியும் தானேடா.?” என்ற அவன் பேச்சிலும், குரலிலும்,  வீர ராகவன் அவன்  கண்களை ஆழ்ந்து  பார்க்க, அதில் அவ்வளவு ஆதாங்கம், வெறுமை, சோகம் படிந்து இருப்பதை பார்த்து.

“ உங்களுக்குள் என்ன தான்டா நடந்தது.” என்ற வீர ராகவன் கேள்விக்கு, சாருகேசன் சொன்ன.

“ ஒன்றும் நடக்கல. அது தான் பிரச்சனையே.” என்ற அந்த பேச்சில், முதலில் குழம்பி பின் புரிவது போல் ஆனவன்  சாருகேசனை பார்த்தானே தவிர.. என்ன என்று கேட்கவில்லை.

இது மிகவும் நாசுக்கான விசயம்.  அவனின் முதல் இரவு அன்று பேசியதோடு சரி. அதன் பின்  அவன் அதை பற்றி பேசவில்லை. பேசியதும் சில முறை வேலை சம்மந்தமாக மட்டுமே. சொல்ல வேண்டிய விசயமாக இருந்தால் கண்டிப்பாக அவன் தன்னிடம் சொல்லி இருப்பான் என்று வீர ராகவன் மீண்டும் எதுவும் பேசாது அமைதி காத்தான்.

சாருகேசனே .. “ என் பெண்டாட்டிக்கு என்னை பிடிக்கலேன்னு என் உயிர் நண்பன் கிட்ட சொல்ல கூட எனக்கு அசிங்கமா இருக்கு மச்சான்.” என்ற அவன் பேச்சில்.

“ சிஸ்டர் உன் கிட்ட சொன்னாங்களா..? உன்னை பிடிக்கலேன்னு.” என்று சாருகேசனே தன் அந்தரங்கத்தை தன்னை நம்பி சொல்லும் போது, அதற்க்கு சரியான தீர்வு கொடுப்பது தன் கடமை. அதோடு அவன் நல்ல மாதிரி வாழனும்.  இது போல் விவாகரத்து  என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வர கூடாது என்று வீர ராகவன் தன் நண்பனிடன் பேச  ஆரம்பித்த அதே வேளை,

யமுனா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக யமுனாவின் வீட்டில் இருந்து சாருகேசனுக்கு அழைப்பு வந்தது.

Advertisement