Advertisement

அத்தியாயம்…3

யமுனாவின் வீட்டு வழக்கப்படி,  திருமணம்  முடிந்து தான் வரவேற்ப்பு என்று சொல்லி விட்டதால்,  சாருகேசன் வீடு திருமணம் நீங்க  செய்ங்க. வரவேற்ப்பை   நாங்க பார்த்து கொள்கிறோம் என்ற அவர்கள் பேச்சில்,  யமுனா வீட்டில் அப்படி மாப்பிள்ளை வீட்டின் புகழ் பாடினர்.

“பரவாயில்லை சம்மந்தி வீடு நல்ல மாதிரி தான். அங்கு அங்கு எல்லாம் பெண் வீடு தான் பார்க்கனும் என்று செலவு மொத்தத்தையும் அவங்க  தலையிலேயே கட்டி விடுவாங்க. ஆனா இவங்க அப்படி இல்ல.”  என்று தன் வீட்டில் பாடிய  புகழை யமுனா தன் தோழிகளிடம் ஒலிப்பரப்பு செய்தாள்.

இப்போது எல்லாம் அவள் தோழிகள் அவள் எது சொன்னாலும், “அப்படியா” என்று மட்டும் சொல்லி விட்டு விடுகின்றனர்.

அதுவும் இந்துமதி தான் சொன்ன விசயத்தை வேறு மாதிரி புரிந்துக் கொண்டு பேசியதில் இருந்து, அவளுக்கு இவள் ஏதாவது வில்லங்கத்தை கூட்டி விடுவாளோ என்ற பயம்  இருந்ததால்,  யமுனா எது சொன்னாலும் மூச் தான்.

ஆனால் இந்துமதி குணமோ மனதில் நினைப்பதை வெளிப்படையாக சொல்லும்  சுபாவம் மாறாது  யமுனாவின் திருமணத்திற்க்கு வந்து தோழிகள் யமுனா பக்கத்தில் சிறிது நேரம் மட்டும் நின்று விட்டு, வெளியில்  வந்து  கலாய்க்கும்  தங்கள்  வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர். 

அப்போது யமுனா சொன்ன இந்த செலவு விசயம் நியாபகத்தில் வர.. தன் தோழிகளிடம் “ இந்த யம்மீ தான் பச்ச புள்ளன்னு பார்த்தா, அவள் அப்பா அம்மா கூட அப்படி தான் போல.” என்ற அவளின் பேச்சில்,

“ ஏன் அப்படி சொல்ற..?” என்று கவிதா கேட்டாள்.

“பின் என்னடீ. மாப்பிள்ளை வீடு இவங்க கிட்ட எதுவும் கேட்க வில்லை. வரவேற்ப்பு செலவு கூட அவங்கல ஏத்துட்டு இருக்காங்க. அவங்க ரொம்ப நல்ல மாதிரின்னு  அவள் அப்பா சொன்னதா சொன்னாளே.” என்று  அவர்கள் பேசிய பழைய பேச்சை இந்துமதி நியாபகம் படுத்தினாள்.’

“ஆமாம். அவள் இருப்பதை தானே சொன்னா.?” என்று காவ்யா சொல்லவும், கவிதா “ இருடி அந்த பேச்சில் இருந்து உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றா அவளை பேச விடுங்க.” என்று கவிதா சொன்னதற்க்கு,

இந்துமதி. “ உலகுக்கு இல்லடீ.  உங்களுக்கு தான் சொல்றேன். படுத்துக்கிட்டு  போர்த்தினா என்ன.? போர்த்திட்டு படுத்துக்கிட்டா என்ன.?” என்ற அவள்  கேட்டதும்

மற்ற தோழிகள் அனைவரும். “ ஏய் பக்கி. புரிவது போலவே நீ பேச மாட்டியா.?” என்று அதட்டவும், “அவங்க மொத்த சொத்துமே யம்மீக்கு தான். ஒரே பெண்ணா இருக்கும் இடத்தை தேடி பிடித்து. இப்போ நாங்க எதுக்கும் ஆசைப்படாதது  போல  என்ன ஒரு பில்டப்பு.” என்று இந்துமதி சொல்லவும், 

ரேவதி அதை ஒத்துக் கொண்டாள்.” ஆமாம் பா இவள் சொல்வது சரி தான். போன  வாரம் தான் என்னை பெண் பார்த்துட்டு போனவங்க பேச்சு எல்லாம் இது தான்.

 உங்க பெரிய பெண்ணுக்கு என்ன செய்திங்க, அதையே செய்ங்க.. என்று பேச்சு முழுவதும் இதுவா தான் இருந்தது.

அதுக்கு அப்பா என் கிட்ட இருக்கிறது எல்லாம் என் மூன்று பசங்களுக்கு தான் என்று சொன்னதுக்கு, அந்த அம்மாகாரி சொல்றாங்க, அது  சொத்து  சரியா மூன்றா தானே பிரிப்பிங்க.

இப்போ யார் யாருக்கு என்ன என்ன செய்தது என்று பார்த்தா பிரிப்பிங்க. பெரியவளுக்கு அதிகமா போட்டு இருக்கிங்க. நான் கேட்குறதில் என்ன தப்பு.?” என்று கேட்டதும், அப்பாவே இந்த இடம் வேண்டாம் என்று மறுத்துட்டார். என்று ரேவதி சொல்லி முடிக்கவும்..

இப்போது காய்வாவும்  கவிதாவும். “ இதில் இருந்து தாங்கள் சொல்ல வருவது என்ன என்று நாங்க தெரிந்து கொள்ளலாமா.?” என்று இடக்காக கேட்டார்கள்.

“நானும்  நம்ம யம்மீ போல் ஒரே பெண்ணாக இருந்து இருந்தால், நிச்சயம் அவங்க இது போல் டிமாண்ட் செய்து இருக்க மாட்டாங்க. அது தான் மொத்தமா ஆட்டைய போட  போறாங்களே.” என்றவளின் பேச்சில்.

“ ஓ அப்படியா சொல்ற.?” என்று  பேசிக் கொண்டு இருந்தவர்கள் பின் பேச்சின் திசை மாறி அங்கு வந்து போனவர்களை நோட்டம் இட ஆரம்பித்தனர்.

எப்போதும் போல் இப்போதும் இந்துமதி தான். “ என்னடீ இது எல்லாம் விரப்பான பீஸா  சுத்திட்டு இருக்கு.” என்று அங்கு இருந்த ஆண்களின் தோற்றமான கட்டை மீசை, ஒட்டிய ஹார்  கட்டிங், அவர்களின் உயரம். இதை எல்லாம் பார்த்து சொன்னாள்.

இந்துமதி ஒரு பேச்சை ஆரம்பித்தால், அதற்க்கு எசப்பாட்டு காவ்யா தான் பாடுவாள். அதனாலேயே அவளுக்கு பின் பாட்டு என்று ஒரு பட்ட பெயரும் தோழிகள் சூட்டி உள்ளனர்.

அந்த பழக்கத்தில் காவ்யா. “ ம்  அவங்க  தொப்பைய பார்த்தா கூடவா உனக்கு  தெரியல . பூரா பேரும் நம்ம போலீஸ் மாமனுங்க.” என்று  சொல்லவும், அந்த வயதுக்கே உரிய பேச்சில்  இந்திமதி .

“அப்போ நாம போலீஸ் மாப்பிள்ளை வந்தா வேண்டாம் என்று சொல்லிடனும் போல.” என்று பேச்சில், கவிதா தான்.

“ ஏன் நம்ம யம்மீ போலீஸ் மாமாவை தான் கல்யாணம் செய்துக்குறா.. அவருக்கு தொப்ப இருக்கா.?”

இந்துமதி அதற்க்கும் விடாது. “இப்போ இல்ல தான். ஆனால்  ப்யூச்சர்ல வராதுன்னு என்ன நிச்சயம். அப்புறம் நமக்கு தான் கஷ்டம்.” என்று சொல்லவும்,

ரேவதி. “எதுக்கு டீ கஷ்டம்.?” என்ற வம்பு பேச்சு கொஞ்சம் எல்லை மீறி  அவர்கள் நேரம் கலகலப்பாக  தான் சென்றது.

பாவம் இந்துமதியின் அவள் வாயே அவளின் வாழ்க்கையை பிரச்சனைக்குள் கொண்டு செல்ல போகிறது என்று தெரியாது, இன்னும் இன்னும் பேசிக் கொண்டு இருந்தவளின் பேச்சை அவள் பின் நின்றுக் கொண்டு வீர ராகவ் கேட்டு கொண்டு இருப்பது தெரியாது போனது.

முதலி வீர ராகவ்   திருமண மண்டபத்துக்கு வந்ததும், மாப்பிள்ளைக்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த அறையில் சாருகேசனிடம் தான்  பேசிக் கொண்டு இருந்தான்.

அப்போதும் சாருகேசனிடன் இருந்து ஒரே புலம்பல். “ அவள் இப்போ கூட என் கிட்ட பேசல மச்சான். நான் எதோ பேச வந்தாலும் முகத்தை திருப்பி கொள்கிறாள். என்ன என்று தெரியல.?  எனக்கு என்னவோ  ஏதாவது இருக்குமோ.?” என்ற அவன்  பேச்சில் வீர ராகவ் இவன் என்ன சொல்ல வர்றான்  என்று யோசனையுடன் அவனை பார்க்கும் போதே.

“அவளுக்கு வேறு யார் மீதாவது.” என்ற அவன் பேச்சை முடிக்க விடாது வீர ராகவ். “ நாம போலீஸ் தான் டா.  எல்லோரையும் நாம சந்தேகத்தோடு தான் பார்க்கனும்.

ஆனால் வீட்டில்,  நம்ம அம்மா அப்பாவுக்கு  நல்ல மகனா இருப்பது   போல் தான்,  மனைவிக்கு  நல்ல கணவனா, நாளை நமக்கு பிறக்கும் குழந்தைக்கு அப்பாவா இருக்கனும்.  நாம போலீஸ்  தானே யாரையும் நம்ப கூடாது என்று நம்ம  குழந்தை கிட்ட நம்ம முக ஜாடை தெரியுதான்னு தேட கூடாது.

புரியுதா.? சந்தேகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மொத்தமா அழித்து  விடும் மச்சான். இப்போ கூட உன் மனதில் அது போல் ஒரு நினைப்பு இருந்தா, இன்னும் நேரம் கடந்து போய்  விடல..

போ பெண் கிட்ட பேசிடு. பிரச்சனை முடிந்து விடும். இது போல் ஒரு தாட்டோடு அந்த பெண் கழுத்தில் தாலி  கட்ட கூடாது மச்சான்.” என்ற  நண்பனின் பேச்சில், சாருகேசன்  வீர ராகவை இழுத்து  அணைத்து கொண்டான்.

“சாரிடா.. சாரி. அவள் போன்  பேசாத போது கூட நான் இது போல் நினைக்கலடா. ஆனா நேரில் நான் ஆசையா பார்த்தேன். ஆனால் அவள் என்னை சாதரணமா கூட பார்க்கல. அது தான் அப்படி இருக்குமோ என்று நினைத்து விட்டேன். நீ சொல்வதும் சரி  தான்.” என்று சொன்னவனிடம்.

“தெளிந்து விட்ட தானே.. இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே, இருந்தா சொல் பெண் கிட்ட பேசிடலாம்.” என்று வீர ராகவ் மீண்டும் கேட்டான்.

“ வேண்டாம்  வீர். வேண்டாம்.” என்று அழுத்தமாக மறுத்து பேசிய  போது தான் சாருகேசனின் அம்மா சாந்தா அங்கு வந்தார். வந்தவர் ஏதோ மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய  சாங்கியம்  செய்யனும் என்று அவனை அழைத்து செல்லவும், இவனும் அங்கு இருந்து நழுவி பார்வை இடும் போது தான் இந்துமதியின் கேங் அவன் கண்ணில் மாட்டியது.

அதுவும் இந்துமதி அடர்பச்சை நிறத்திக்கு தோதான அடர்சிவப்பு நிற பார்டர்டர் பட்டு படவையிலும், அதோடு அதற்க்கு  தோதாக நகைகள் மாட்டிக் கொண்டு கண்கள் ஒரு நிலையில் இல்லாது அங்கும் இங்கும் வட்ட மிட்டு கொண்டு வருவோர் போவோரை பார்வை இட்ட வாறு தன் தோழிகளிடம் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு, தன்னால் அவன் கால்கள்  அவர்கள் பக்கம் சென்றது.

அவன் சென்ற நேரம் தான் இந்துமதி சரியாக  யம்மீ வீட்டுக்கு  ஒரே பெண்  என்ற பேச்சில், நாம நினைத்தது போல் இவங்க சிஸ்டரோட பிரண்ஸ்ங்க தான் என்று வீர ராகவ் நினைக்கும் போதே இந்துமதி அடுத்து பேசிய  பேச்சான  அது தான் பார்த்து முடித்து விட்டாங்க என்று ஆரம்பித்தவளின் பேச்சில்  வீர ராகவ்  என்ன இது தான் என்று நினைத்தான்.

பின் அவர்கள் பேசிய அனைத்து பேச்சையும் கேட்டவன் அங்கு இருந்து சென்று விட்டான்.

பின் அவர்கள் பேச்சு இரண்டு நாள் கழித்து நடக்கும் வரவேற்ப்பில் என்ன உடை உடுத்துவது என்று ஒரே மாதிரியான உடை, தலை அலங்காரம் என்று  முடித்து இறுதியாக அங்கு சாப்பிடும் இடத்தில் பரி மாறியவர்களை ஒரு வழி செய்து விட்டு, மணப்பெண்ணிடம். “வருகிறோம்.” என்று விடை பெற மணமக்கள் இருந்த இடம் தேடி வந்தனர்.

யமுனா தான். “ எங்கேடி போனிங்க.? ஆளைய காணும்.” என்று வந்து தன்னை பார்த்து விட்டு போனதோடு சரி. பின் பார்க்க முடியவில்லையே என்று கோபத்தில் கேட்டாள்.

“ என்ன யம்மீ உன் வேலை முடிந்து விட்டது. அடுத்து எங்க வேலைய நாங்க பார்க்க வேண்டாமா.?” மேடையில் நின்றுக் கொண்டு கீழே இளைஞர்கள் பக்கம் கை காட்டி இந்துமதி சொன்னாள்.

“ஓ வேலை முடிந்து விட்டதா.?” என்று தோழிகளுக்கு ஏத்தப்படி யமுனா  கேட்டாள்.

“எங்கே எல்லோரும் இப்படி இருக்காங்க.” என்று தன் வயிற்று பகுதியை தொப்பை போல் ஜாடை காட்டி இந்து மதி சொன்னதும்.

அதற்க்கு யமுனா. “ என்னடீ பார்த்ததுக்கே வா.” என்று அதிர்ச்சியுடன் கேட்பது போல் கேட்க.

“ நான் அவங்கள சொன்னேன்.” என்று கிண்டல் செய்து  மணமேடையைய் கூட ஒரு வழிப்படுத்தி விட்டு  அடுத்து வரவேற்ப்பில் பார்க்கலாம்   என்று விட்டு  தான் தோழிகள் அந்த இடத்தை விட்டே  சென்றது.

இந்த வயதில் பேச்சுக்களும். சிரிப்புக்களும், கலாட்டாக்களும், இருக்க வேண்டியது தான். ஆனால் அது ஒரு வரை முறையிலும், இடத்துக்கு ஏற்றார் போல் இருந்தால் நல்லது.

இதோ மேடையில் தோழிகளிடம் பேசும் போது யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று கூட பாராது பேசி விட்டு போகும் இந்த பேச்சு, யார் கேட்பார்கள் என்று பாராது, அதனால்  தன்னை பற்றி  என்ன நினைப்பார்கள் என்று உணராது    பேசி விட்டு சென்று விட்டனர்.

 அது அந்த சமயம் கலாட்டக்கள் தான். அதை வைத்து அவர்கள் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போவது கிடையாது தான். ஆனால் அதை கேட்டவர்கள் உணர வேண்டுமே.

இந்திமதியின் இந்த பேச்சை சாருகேசன் கவனிக்கவில்லை. அவனுக்கு தான் தன் மனைவியின் முக பாவனையை கவனிக்கவே  நேரம் சரியாக இருந்ததே.

அவளின் தோழிகள் மேடை ஏறியதுமே தன் மனைவியின் முகத்தில் தோன்றிய மின்னலும், பின் அவள்  சிரித்த சிரிப்பையுமே பார்த்து கொண்டு இருந்த சாருசேசன். 

‘அப்போ பெண் அமைதி கிடையாது. நம்மிடம் தான் அமைதியை கடைப்பிடிக்கிறாள்.’என்று அவன் தன் மனைவி யமுனாவின் ஒவ்வொரு செயல்களை அனுமானித்துக் கொண்டு இருந்ததால், அவன் தன் மனைவியின் தோழிகள் என்ன பேசினார்கள் என்று  கவனிக்கவில்லை.

கடைசியாக விடைப்பெறும் போது  சாருகேசனிடம். “ அப்புறம் நாங்க உத்திரவு வாங்கி கொள்கிறோம் மாப்பிள்ளை சார்.” என்று தன்னிடம் கிண்டலோடு  விடைப்பெறுவதை கூட அறியாது.

“சரி.” என்று தலை ஆட்டினான்.

அதற்க்கும்  இந்துமதியும் அவள் தோழிகளும் ஏதோ கிண்டல்  செய்தார்கள் தான். பாவம் சாருகேசன் அதையும் கவனிக்காது அவர்கள் தோழிகள் ஏதோ  சொன்னதற்க்கு சிரித்த தன் மனைவியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

ஆனால் சாருகேசனுக்கும் சேர்த்து அனைத்தையும் வீர ராகவன் கேட்டுக் கொண்டும் கவனித்துக் கொண்டும் தான் இருந்தான்.

இதில் என்ன ஒரு கொடுமை என்றால், மேடையில் அவளவு ஹன்சமாக இருந்த வீர ராகவை யாரும் கவனிக்காது  விட்டு, அவர்கள் கண்ணில் பட்ட தொப்பைகளை வைத்தே பேசி கலாய்த்து விட்டு போனது தான் கொடுமை.

 அவனை அப்போதே பார்த்து இருந்தால் அனைத்திற்க்கும் நல்லதாக போய் இருக்கும். ஆனால் வேறு என்று இருக்கும் போது அவர்களின் பார்வை வட்டத்தில் வீர ராகவன் எப்படி  மாட்டுவான்.

யமுனாவின் வீட்டில் மணமக்களுக்கு   அன்று  சடங்குக்கு வேண்டி யமுனாவின் அறையை அலங்கரித்து கொண்டு இருந்தனர்.

யமுனாவை அவள் சொந்தக்கார பெண்கள் அலங்கரித்துக் கொண்டு இருக்க, சாருகேசன் பேசியில்   வீர ராகவை அழைத்தான்.

அழைப்பை ஏற்ற வீர ராகவன். “ என்னடா எதிலாவது சந்தேகமா.?  ஆனா எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையேடா. பார்த்த அந்த மாதிரி படத்த வெச்சு சொல்லலாம் என்றாலும், நீயும் தானே என் கூட அந்த படத்தை பார்த்த.” என்ற வீர ராகவனின் பேச்சில் பேசியை அணைத்து விட்ட சாருகேசன் டென்ஷனுக்கு ஒரு தம்மு கூட அடிக்க முடியவில்லையே என்று இருந்தவனை ஒரு வழியாக யமுனாவோடு  அவள் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

சாருகேசனுக்கு தனிமை கிடைத்ததும்  பேசி விடலாம் என்று நினைத்து வாய் திறக்கும் வேளயில் யமுனா அவள் திட்டப்படி.

“இதுக்கு எனக்கு டைம் வேண்டும்.” என்று கட்டிலை காட்டி சொன்னாள்.

அவனுக்குமே இன்றே நடத்தி முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. ஆனால் அவளிடம் பேச நினைத்தான்.

அவள் சொன்ன விசயத்தை ஏற்றவன். அவள்  சொன்ன விதத்தை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை. அறைக்கு வந்த உடனே நான் அவள் மீது பாய்ந்து விடுவது போல் அவள் அவசர அவசரமாக பேசிய பேச்சிலும், அவள் காட்டிய முகபாவத்திலும்,

“சரி.” என்றவன். இவ்வளவு நேரமும் இங்கு  எப்படி  சிகரெட் பிடிப்பது என்று சங்கடப்பட்டு கொண்டு இருந்தவன்.

யமுனாவை பார்த்து “ தூங்கு.” என்று  சொன்னவன் சிகரெட்டை பற்ற  வைத்து கொண்டே பால்கனிக்கு சென்று அந்த கதவை தாழ் இட்டவன் தன் நண்பன் வீர ராகவனுக்கு பேசியில் அழைத்தான்.

 

Advertisement