Advertisement

அத்தியாயம்…12

எட்டு மணிக்கு வருகிறேன் என்று சொன்ன வீர ராகவன் மணி எட்டரையை கடந்த பின்னும் இன்னும் வராது இருக்கவே, முதலில்  ஆசையோடும், ஆர்வத்தோடும் வாசலையே பார்த்து கொண்டு இருந்த இந்துமதியின் கண்கள். 

 இப்போது தவிப்போடும், பதட்டத்தோடும் தன் பேசியில் உள்ள நேரத்தையும் வாசலையுமே  பார்த்து கொண்டு இருந்த சகோதரியை பார்த்த ஆனந்த் “ நீயே  மாப்பிள்ளைக்கு ஒரு போனை போடேன்.” என்று சொல்லியவாறே அவள் எதிரில்  வந்து அமர்ந்தான்.

“ம்  பண்றேன் அண்ணா. கொஞ்ச நேரம் பார்க்கலாம்.” என்று அவள்  தன் அண்ணாவிடம் பேசினாலும்,  இந்துமதியின் கண்கள் மீண்டும் மீண்டும் வாசலையே தான்  தொட்டு தொட்டு மீண்டு வந்தது.

அப்படி ஒரு அரை மணிநேரம் கடந்த பின் தான் வீர ராகவ் இந்துமதியின்  வீட்டுக்கு வந்தான். வந்தவனின் முகத்தை பார்த்தே தெரிந்து கொண்டாள்.

இவன் வீட்டில் இருந்து இங்கு வரவில்லை.  ஏன் என்றால் அவள் முகத்தில் அவ்வளவு கலைப்பு.

சாந்திக்குமே அது தெரிந்தது போல. “ என்ன மாப்பிள்ளை வேலை அதிகமா டல்லா இருக்கிங்க.” என்று கேட்டவருக்கு, வரும் வழியில் ஒரு வேலை வந்துடுச்சி அத்தை. அதை பார்த்துட்டு வர்றேன்.” என்று அத்தையிடம் பேசிக் கொண்டே கை கழுவிக் கொண்டு வந்து  சாப்பிடும் மேஜையில் அமர்ந்தவனுக்கு, தான் செய்த நான்கு வகையான பலகாரங்களை பரி மாறுவதை பார்த்து.

“ எதுக்கு அத்தை  ஸ்டெயின் பண்ணி இவ்வளவு செய்யிறிங்க. இது போல் நாளை கல்யாணம் ஆன பின்னும், வரும் போதும் எல்லாம் இப்படி செய்தா எனக்கு தான் சங்கடமா ஆகும்.” என்று பேசிக் கொண்டே இந்துமதியை பார்த்தவன் அவள் சாப்பிடாது தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து.

“ இந்த சினிமாவில் எல்லாம் சொல்வாங்களே.  உன் முகத்தை பார்த்தால் போதும் பசி தாகம் கூட எடுக்காது என்று, அப்படி ஏதும் உனக்கு தோனுதா என்ன.?” என்று மாமியார் மச்சான் இருப்பதை கூட நினைக்காது, வீர ராகவ்  இப்படி கேட்கவும் இந்துமதி சட்டென்று தலையை குனிந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தவளை பார்த்து சிரித்துக் கொண்டே அவன் சாப்பிட்டான்.

அப்போது ஆனந்த் .. “ அவள் உங்களை பார்க்க தான் ஏழரை மணியில் இருந்து இங்கேயே தவமா தவமிருந்தா. இவ்வளவு நேரம் கழித்து காட்சி கொடுப்பவரை கொஞ்சம் கூடுதலா பார்ப்பது ஒன்றும் தப்பு இல்லையே மாப்பிள்ளை.” என்று மாப்பிள்ளைக்கு தோதாக  மச்சான் ஆனந்தும்  கிண்டலில் இறங்கினான்.

இந்த சிறியவர்களின் கேலி பேச்சில் கண்டும் காணாது உணவை பரி மாறுவதிலேயே சாந்தி கண்ணும் கருத்துமாக இருந்து வீட்டு மாப்பிள்ளையை உபசரித்து கொண்டு இருந்தார்.

“ உங்க தங்கை லேட்டா வந்தா இப்படி பார்ப்பா என்றால், நான் கல்யாணத்துக்கு பின்னும் தினம் லேட்டாவே வர்றேன் மச்சான்.” என்ற பேச்சில் ஆனந்த்.

“பெண்களின் மனநிலை கல்யாணத்துக்கு முன் வேறு. கல்யாணத்துக்கு பின் வேறு மாப்பிள்ளை.  பார்த்துங்க.” என்று ஆனந்தும் விடாது பேசினான்.

வீர ராகவ். “ உங்க பேச்சை வைத்து பார்த்தால்,  ரொம்ப அனுபவப்பட்டவர்  பேச்சு போல இருக்கே, அத்தை எதுக்கோ நீங்க ஆனந்துக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்கும் போது, ஒரு வார்த்தை உங்க மகன் கிட்ட கேட்டுட்டே பாருங்க.  அப்புறம் பிரச்சனை ஆகிட கூடாது பாருங்க.” என்று வீர ராகவ் பேச்சுக்கு இப்போது ஆனந்திடம் பதில்  இல்லை. 

அதற்க்கு பதிலாக பதட்டத்துடன் குனிந்து சாப்பிட்டு  கொண்டு இருந்தவன் தன்னை நிமிர்ந்து பார்த்தது மட்டும் அல்லாது தன் தங்கை அம்மாவை பார்க்க,  அவர் அவர்கள் சிரித்த முகத்துடன் தன் வேலையை பார்ப்பதை பார்த்த பின் தான் ஆனந்த் ஒரு நிம்மதி மூச்சை விட்டு மீண்டும் தன் உணவை சாப்பிட தொடங்கினான்.

ஆனந்தின் இந்த  செயல்களை  வீர ராகவ் கவனித்து விட்டான். முதலில் பதட்டம் பின் அந்த பார்வை. பின் நிம்மதி.

அந்த பார்வை தவறு செய்தவர்கள் கண்ணில் அவன் பார்த்து இருப்பது. காதலிப்பதோடா, இல்லை அதற்க்கும் மேல். இந்த காலத்தில் காதல்  ஒன்றும் தவறு கிடையாதே, இந்துமதியின் குடும்பமும் அந்த அளவுக்கு கட்டுப்பட்டி போலவும் அவனுக்கு தெரியவில்லை. அப்போ அதற்க்கும் தான்டி. அவனின் காவல் துறையின் மூளை அவனை இப்படியான  பதில் தான் அவனுக்கு கொடுத்தது.

வீர ராகவ் ஒரு விளையாட்டு தனத்தோடு தான் இந்த பேச்சை ஆரம்பித்தது. ஆனால் இப்போது என்று அதை பற்றிய யோசித்துக் கொண்டு இருந்தவனை இந்துமதி.

“ சாப்பிட்டா கை கழுவலாமே.?” என்ற பேச்சில் தான்.

“ ஓ.” என்று சொல்லி கை கழுவி வந்தவன், இந்துமதியை அழைத்து கொண்டு காஞ்சிபுரம் சென்றான்.

இன்று என் நாள். அந்த நாளை நான் விரையம் செய்ய கூடாது. இந்த கல்யாணம் நான் அவளோடு வாழ தான் செய்து கொள்கிறேன். என்ன ஒன்று அவள் அதிகப்படியான இது போலான பேச்சு. இனி பேச கூடாது. அதை அவள் உணர வேண்டும் என்று நினைத்தான். கூடவே தனக்கு பிடித்த முறையில் பழிவாங்க.

ஆனால் ஒரு சில நியாபகங்கள் திரும்பவும் கிட்டாது. தன் நிச்சயத்தை தான் இருவரும் மகிழ்ச்சி இல்லாது கழித்து விட்டனர். . இனி அப்படி இருக்க கூடாது என்று நினைத்தவனாக அவன் நினைவுகளில் இருந்து ஆனந்தை அகற்றி விட்டு, இந்துமதியோடு பேசிக் கொண்டே  காஞ்சிபுரம் நோக்கி செல்ல தன் பயணத்தை   தொடங்கினான்.

இந்துமதி தான். .” நேற்று ஏதோ  இங்கு வேலை என்று சொன்னிங்களே. முதல்ல அதை பார்த்துட்டு புடவை  எடுக்க போகலாமா.?” என்று இந்துமதி கேட்டாள்.

“ இல்லை புடவை கடைக்கே போகலாம். அம்மா காஞ்சிபுரத்தில் பிரகாஷ், பாபுஷாவில் நல்லா இருக்கும் என்று சொன்னாங்க. உனக்கு வேறு நல்ல கடை எது என்று தெரிந்தால் சொல். அங்கேயே போயிடலாம்.” என்று  சொன்னான். காஞ்சுபுரத்தில் வேலி என்று அவன் சொன்னது எல்லாம் பொய். அதனால் அதை விடுத்து பேசி கொண்டு இருந்தான்.

“ இல்ல அத்தை சொன்ன கடைக்கே போங்க. எனக்கு அந்த அளவுக்கு பட்டு புடவை பத்தி எல்லாம் தெரியாது.” என்று இந்துமதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

பெயர் இல்லாது எண் மட்டும் வந்த பேசியையே  பார்த்து கொண்டு, யாராக இருக்கும் என்று இந்துமதி யோசிக்கும் போதே  பேசியின் அழைப்பு நின்று விட்டது.

அதை தன் கை பைய்யில் வைக்கும் சமயத்தில் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வரவும். இந்துமதி எடுப்பதா.?  வேண்டாமா.?  என்ற யோசனையில் இருந்தாள்.

“ அதை பார்த்துட்டே  இருந்தா யார் என்று  தெரிந்திடுமா என்ன.?” என்று கேட்டவனுக்கு, “ இல்ல நான்  நேம் சேவ்  பண்ணாது  இருந்தவங்க கிட்ட இருந்து வந்தா நான் மோஸ்லி அட்டன் பண்ண மாட்டேன்.” என்று இந்துமதி சொல்லும் போதே அழைப்பு நின்று விட்டது.

இந்திமதியின் பதிலில் வீர  ராகவ். “ ஏன்.?” என்று கேட்டான்.

“ இல்ல  அது என் பழக்கம் அது தான்.” என்று சொல்லவும், வீர ராகவ் அந்த பேச்சை விடாது.

“ ஏன் ராங் காலில் ஏதாவது பிரச்சனை வந்ததா.?” என்று கேட்டவனுக்கு இந்துமதி.

“ என்ன பிரச்சனை ராகவ். எனக்கு புரியல.” என்று இந்துமதி புரியாது தான் கேட்டாள்.

“ இல்ல இது அன்நோ நம்பரில் இருந்து லேட் நையிட் வந்தா அதை எடுக்காம விடுவது தவறு இல்ல.  இப்போ எடுக்காம விடுறேன் என்றால்,  இதுக்கு முன் ஏதாவது தெரியாத  நம்பரில் இருந்து உனக்கு போன் செய்து யாராவது பிரச்சனை கொடுத்தாங்களா.?” என்று சொல்லிக் கொண்டு வந்தவனை மேல பேச விடாது தன் இரு கை கூப்பி கும்பிட்டவள்.

“ எப்போவும்  நீங்க  போலீசா தான் யோசிப்பிங்களா.? இப்போ வரட்டும் நான் அட்டண் செய்யிறேன்.” என்று இந்துமதி சொல்லி வாய் மூடவில்லை. திரும்ப அதே எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

“ கிண்டல் இல்ல. போனை எடு. விடாது ஒருவத்தங்க அழைக்கிறாங்கன்னா ஏதாவது எமர்ஜென்ஸியா கூட இருக்கலாம்.” என்று வீர ராகவ் சொன்னதும் தான், இந்துமதி அந்த அழைப்பை ஏற்றது.

ஆனால் வீர ராகவ் சொன்னது போல் அது எமர்ஜென்ஸி அழைப்பு எல்லாம் கிடையாது.  எமன் அழைத்த அழைப்பு  என்று வேண்டுமானால்  சொல்லலாம்.

இந்துமதி அழைப்பை ஏற்றதுமே அழைத்த வாசுதேவன். “ என்ன உன்னை பிடிக்க நான் இத்தனை முறை  கூப்பிட வேண்டுமா.?” என்று அவன் உபயோகித்த வார்த்தைகளின் தொகுப்பும் சரி, அதை சொன்ன விதமும் சரி இரட்டை அர்த்தமாக இருக்க.

அவன் தன்னை அறிமுகம் படுத்தி கொள்ளமலேயே இந்துமதி யார் என்று புரிந்துக் கொண்டாள்.

“ சொல்லுங்க நான் வெளியில் போயிட்டு இருக்கேன்.” என்று பக்கத்தில் வீர ராகவ்  இருக்க. பிரச்சனை ஏதாவது ஆகிவிடுமோ என்று நினைத்து, இந்துமதி அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தாலுமே, புரியாதது போல் சாதரணமாக தான்  பேசினாள்.

இந்துமதியின்  இந்த சாதரணமான பேச்சு வாசுதேவனுக்கு ஊக்கம் கொடுத்தது போல்.. “  ஆனா இத்தனை முறை அழைத்து பேசினாலும், அதுக்கு நீ வெர்த்து தான்.  உன் குரலே சும்மா போதையை ஏத்தி விடுது.” என்று அவன் வரம்பு மீறி பேசவும்.

இப்போது இதற்க்கு என்ன சொல்வது என்று தெரியாது இருந்தாலும், அவன் பேச்சில் இந்துமதியின் முகம் கோபம் கொண்டதால்   சிவந்து போய்  பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தாள்.

ஆனால் வாசுதேவனுக்கு அந்த கட்டுப்பாடு எல்லாம் தேவையே இல்லாதது போல், அவனின் பேச்சு இன்னும் இன்னும் வரம்பு  மீறி தான் போனது.

இந்துமதியின் நிலை.  திருடனுக்கு தேள் கொட்டியது போலான நிலையில் தான் அவள் அப்போது இருந்தாள்.

அவன் பேச்சுக்கு திட்டு என்ன.?  எதிரில் இருந்தால் கண்டிப்பாக காலில் இருப்பதை எடுத்து அடித்து இருப்பாள்.

ஆனால் இப்போது அடிப்பது என்ன அவன் பேச்சுக்கு திட்ட கூட முடியாது இருந்த  நிலையில், வாசுதேவனின் பேச்சு எல்லையை கடக்கும் போது தான்.

“ இப்போ எதுக்கு போன் பண்ணிங்க என்று சொன்னா நல்லது. என் செல்லில் சார்ஜ் இல்லை.  இப்போ அணைந்து போய் விடும்.” என்ற இந்துமதியின் பேச்சுக்கு கூட வாசுதேவன்.

“ பேசி அணைந்தால், நம்  தொடர்பு விட்டு போகும், ஆனால் வேறு ஒன்று அணைந்தால் அது  நம் தொடர்பை பலப்படுத்தும்.” என்று கவிதை சொல்கிறேன் என்ற பெயரில் அவன் பேச்சு கண்ணியத்தை கரை கடந்து சென்று விட்டது.

“ சரி நான் அப்போ வைத்து விடுகிறேன்.” என்று இந்துமதி சொல்லும்  போது தான் வாசுதேவன் தான் அழைத்ததுக்கான காரணத்தை சொன்னான்.

“ என்ன நீ பாட்டுக்கு மெயில் போட்டுட்டு இன்னைக்கு லீவுன்னு சொல்லிட்ட. நையிட் புல்லா தூங்க விடாது செய்துட்டு, சரி நேரில் பார்த்துக்கலாம்  என்று ஆபிசிக்கு வந்தா இப்படி லீவ் போட்டு விட்டுட்டா எப்படி.? ” என்று அவன் அழைத்ததிற்க்கான காரனத்தை சொல்லும் போது கூட அதில் எந்த வித கண்ணியமும் இல்லாது தான் பேசினான்.

“ லீவ் போட்டா எல்லோரும் மெயில் தான் போடுவாங்க. நானும் அதே தான் செய்தேன்.” என்று சொல்லி பேசியை அணைத்து விட்டாலும்,  இந்துமதிக்கு மனது ஆரவில்லை.

என்ன என்ன பேசி விட்டான். ராத்திரி முழுவதும். அது எல்லாம்  என்ன மாதிரி அர்த்தம் படும் வார்த்தைகள்.

தன்னிடம் இப்படி பேசுகிறான் என்றால், காரணம் சின்ன வயதில் நான் செய்த செயல். அதை வைத்து  தன்னை ப்ளாக் மெயில் பண்ண பார்க்கிறானா.?

அதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். மிஞ்சி மிஞ்சி போனால் அவன் என்ன செய்வான்.?  நான் முன் சொன்னதை எல்லோரிடமும் சொல்லி விடுவான்.

அதை பற்றி எனக்கு கவலை  கிடையாது. அறியாத வயதில் செய்த தவறை மன்னித்து விடலாம். ஆனால் இப்போது அறிந்தே தான் சேற்றில் விழுவது தான் தவறு.

என்ன ஒன்று  என்னை  பற்றி முழுவதும் தெரிந்தால், இவன் என்ன செய்வான். திருமணத்தை நிறுத்தி விடுவானா.? என்று நினைத்தவள் பக்க வாட்டில் அமர்ந்து வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த வீர ராகவை பார்த்தான்.

முகம் முழுவதும் சிந்தனை கோடுகள் இருக்க, அவன் தீவிரமாக ஏதோ யோசித்து கொண்டு இருப்பவனை பார்த்த வாறே, இதே நேற்றைய முன் நாள் இருந்தால், திருமணம்  நின்றாலும் பரவாயில்லை.

அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கு தான், என்று  தான் நினைத்து இருப்பாள். ஆனால் இன்று அவள் சிந்தனை ஓடும் போதே அவளை திரும்பி பார்த்த வீர ராகவ்.

“ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா.?” என்று கேட்டான்.

இது என்ன சமந்தம் இல்லாத பேச்சு என்று நினைத்தவள். “ இல்லை.” என்று இந்துமதி சொல்லவும், சிறிது நேரம் அமைதியாக காரை  ஓட்டிய வீர ராகவ்.

“போனில் யார்.?” என்று கேட்டான்.

எதற்க்கு  கேட்கிறான். நான் தான் அவன் எது பேசினாலும், நான் இங்கு சாதரணமாக தானே பேசினேன். அதுவும் இவனுக்காக என்று நினைத்தவள்.

“ என் டி.எல். லீவு போட்டதற்க்கு ரீசன்  கேட்டார்.” என்று அவன் கேட்காத கேள்விக்கும், இந்துமதி பதில் அளித்தாள்.

“ யார் நான் வரும் போது உன் கிட்ட பேசிட்டு இருந்தானே அவன் தான் போன் செய்ததா..?” என்ற கேள்வியில் இந்துமதி.

“ இப்போ எதுக்கு நீங்க இப்படி குறுக்கு விசாரணை போல என் கிட்ட இதை எல்லாம் கேட்டுட்டு இருக்கிங்க.? ” என்று உண்மையை சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை வந்தால், எதிர் தரப்பினரிடன் கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து எதிர் தரப்பில் இருப்பவரை  வாய் அடைக்க செய்வர். அந்த உத்தியை தான் இந்துமதி இப்போது கையாண்டாள். அதை வீர ராகவும் புரிந்து கொண்டான் . 

“ ஓகே. ஓகே.” என்று சொன்னவன்.

“ நான் சும்மா தெரிந்து கொள்ள தான் கேட்டேன். நீ ஏன் இவ்வளவு கோபப்படுற.?” என்று வேறு பேச்சுக்கு தாவியவனாக, அந்த நாள் தங்களுடையது என்று நினைத்து, இது போலானதை பின் பார்த்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தவன்.

அடுத்து அவன் பேச்சின் மூலம் முன் கோபத்தில் சிவந்த அவனின் மதியின் மதி முகம் இப்போது வெட்கத்தில் சிவக்க செய்தவன். அவளுக்கு பிடித்த புடவைகள். பிடித்த நகைகளை வாங்கி கொடுத்த பின் அவள் விரும்பிய உணவை வாங்கி கொடுத்து விட்டு அவளை வீட்டில் விட்டு சென்றவன் செய்த முதல் வேலை.

   இந்துமதியின் பேசிக்கு வந்த எண்ணை சொல்லி அவனின் விவரத்தை சேகரிக்க ஆரம்பித்தது தான்..

ஒரு முறை இல்லாது பல முறை அழைத்தான் வாசுதேவன். பக்கத்திலேயே அமர்ந்து இருந்த வீர ராகவ் இந்துமதியின் பேசிக்கு வந்த அழைப்பின் எண்ணை  கவனிக்காது இருந்து இருப்பானா.. அதுவும் ஒரு காவல் அதிகாரி.

Advertisement