Advertisement

அடுத்த நாள் விடியலிலே பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டனர்.

காலை ஆறு மணி போல் திலகர் வயலில் நின்றார். அவர் வரப்பை சீர்ப்படுத்திக்கொண்டிருந்தவர் லட்சுமணனின் பக்கமும் வெட்டிவிட்டார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த லட்சுமணன், வயல்வழியே வீட்டுக்கு செல்ல திரும்பும்போது திலகர் மண்வெட்டியோடு நிற்பதைப் பார்த்தார்.

யோசனையோடு நடந்து வந்தவர், அவர் பக்கம் வரப்பில் கொஞ்சம் வெட்டுப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு கத்த ஆரம்பித்தார்.

“எப்படிடா என் வரப்ப வெட்டின?” என்று வேட்டியை மடித்துக் கொண்டு சண்டைக்கு நின்றார்.

லட்சுமணன் பார்த்துவிட திலகருக்கும் வம்பு கிடைத்துவிட,

“வம்படிட்டியாலதான் டா வெட்டினேன்” என்றார் எகத்தாளமாக.


 

 

Advertisement