Advertisement

அத்தியாயம் 20
கிருஷ்ணாவை அறையில் வைத்து தலையணையால் மொத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் கோதை.
“ஏன்டா எவளையோ கல்யாணம் பண்ணுறவரைக்கும் போய் இருக்க இதுல என்ன காதலிக்கிறதா சொல்லி என் கழுத்துல தாலி கட்டி இருக்க. இதுல எதுடா உண்ம?”
“ரெண்டும்தான்” என்று மீண்டும் சில அடிகளை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டான் கிருஷ்ணா.
“கோதை இல்லனா ஒரு ராதை. ராதை இல்லனா ஒரு மாலினி என்று நீ சொல்லும் பொழுதே நான் உஷாராகி இருக்கணும். அவங்க எல்லாம் உன் எக்ஸ் என்று” சொல்லி சொல்லியே அடிக்க
“அடிப்பாவி… அது ஏதோ டைமிங்க்ல ரைமிங்கா சொன்னது டி… அதையெல்லாம் போய்…” என்றவன் அவள் கையிலிருந்த தலையணையை பறித்து எறிந்து அவளை இறுக அணைத்திருந்தான்.
கோப மூச்சுக்கலை வெளியிட்டவாறே “பொய் சொல்லுறியா? என் கிட்ட பொய் சொல்லுறியா? அவனை அடிக்க முடியாததால் பலங் கொண்ட மட்டும் அவள் நெற்றியால் அவன் நெற்றியை மோத வலியில் முகம் சுருங்கினான் கிருஷ்ணா.
அவளை இழுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்த கிருஷ்ணா அவள் திமிரத்  திமிர அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பிக்க பெண் சிங்கமாய் சிலுப்பிக் கொண்டிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் அடங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் இதழ்களை விட்டவனை ஏக்கமாக பார்த்தவளை ஏறிட்ட கிருஷ்ணா “காலைல இருந்து எனக்கு கண்ணாமூச்சி காட்டிகிட்டு இருந்தியே, இப்போ வசமா சிக்கிட்ட இல்ல” என்று கூற கோதைக்கு அந்த ஏசி போட்ட அறையிலும் குப்பென்று வியர்த்தது.
அவள் தன்னை அடித்து விடக் கூடாது என்று கவனமா அவளை இறுக்கி அணைத்து இருந்தவன் “சும்மா சொல்லக் கூடாது நேத்து நைட் நீ…” என்று அவள் காதில் கிசுகிசுக்க
“பொருக்கி பொருக்கி” என்று அவனை திட்டியவள் அவனை அடிக்க எண்ணினாலும் நேற்றிரவு நடந்தவைகள் கண்முன் வந்துபோக அவன் நெஞ்சிலையே சாய்ந்திருந்தாள்.
மெதுவாக அவள் நெற்றி கண்கள் மூக்கு, கன்னம் என்று சின்ன சின்ன முத்தம் வைக்க விறைத்துக் கொண்டிருந்தவள் கோபத்தை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் வசமாகிக் கொண்டிருந்தாள்.  
கோபத்தின் உச்சியில் இருந்த மனைவியுட பேச்சு வார்த்தை நடாத்தி புரிய வைக்க முடியாததால் கிருஷ்ணாவுக்கு வேறு வழியும் தெரியவில்லை. அவள் அமைதியான பின்தான் புரிய வைக்க முடியும் என்று ஆரம்பித்தவனும் அவளுக்கு தொலைந்துக் கொண்டிருந்தான்.
அவள் கோபத்துக்கு காரணம் கனகவேல் கூறிய “கோதாண்டத்தோட பொண்ண காதலிச்சது போல கல்யாணம் பண்ணி இருந்தா எந்த பிரச்சினையும் இல்லை” என்பதுதான்.
ஒருத்தியை காதலித்து கல்யாணம் வரைக்கும் போய் அது நின்று விட்டிருக்க, இவளை காதலிப்பதாக இவள் கழுத்தில் தாலி கட்டி ஒதுக்கி வைத்திருந்தானோ! என்ற கோபம்தான். அன்று பேசிய பேச்சு வேறு சரியாக நியாபகத்தில் வந்து கிருஷ்ணாவை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தவளைத்தான்  முத்தங்களால் ஆண்டுக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
கோதை கூறியது போல் அனனைவரும் தூங்கிய பின் இரவில் ஸ்டோர் ரூம் சென்று அலச திகதி வாரியாக பெட்டிகளில் நேர்த்தியாக ஒவ்வொரு நாளும் வருபவைகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.
“இன்று காலைதான் அப்பா அலைபேசியை கொடுத்ததாக அண்ணா கூறினான். இன்னக்கி நேத்து ரெண்டு பெட்டியையும் பார்க்கலாம்” என்றான் கிருஷ்ணா.
“ஒருவேளை உங்க அப்பா கொடுக்க மறந்திருக்கலாம். இல்ல கொடுக்குற நாள தள்ளி போட்டிருக்கலாம். ஏன் நாம ஊருக்கு போனப்போ கூட வந்திருக்கலாம் இல்லையா? நாம ஊருல இருக்குறப்போதானே உங்க அப்பாக்கு உடம்பு முடியாம போச்சு. அதனால கூட மறந்து இருப்பாரு” கோதை நியாபக்கடுத்த
“ஆமா அப்போ எல்லா பெட்டியையும் செக் பண்ணலாம்” என்ற முடிவுக்கு வந்தான் கிருஷ்ணா.
அங்கே கிருஷ்ணாவின் பெயரில் எந்த பார்சலும் வந்ததற்கான கவரும் இருக்கவில்லை.
“அப்போ எங்க அப்பா தான் இந்த வேலைய பார்த்திருப்பாரா?” கோபமாக கிருஷ்ணா எழுந்துகொள்ள
“க்ரிஷ் இங்க பாரு…” என்ற கோதை அதிர்ச்சியானாள். பூங்கோதை க்ரிஷ்ணாவேல் ராஜா என்ற பெயரில் ஒரு பார்சல் வந்த கவர் இருந்தது.
“போன் வந்த கவர்ந்தான். உன் பேர்ல வந்திருக்கு” என்ற கிருஷ்ணா அதில் போனுக்குண்டான பாக்ஸும் இருப்பதைக் கவனித்தான்.
அதை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தவர்கள் அதை யார் அனுப்பி இருப்பார்கள் என்று பார்க்க அனுப்பியவனின் விலாசம் இல்லை. பூங்கோதையின் பெயரும் கிருஷ்ணாவின் விலாசமும் கூட பிரிண்ட் செய்யப்பட்டுதான் அனுப்பப் பட்டிருந்தது.
“எவ்வளவு உஷாரா இருக்கான்” என்று கோதை சொல்ல
“அப்போ அவன் நம்மளுக்கு நல்லா தெரிஞ்சவனாதான் இருப்பான்” என்றான் கிருஷ்ணா.
“என்ன சொல்லுற?” கோதை புரியாது கேட்க
“எட்ரஸ்ஸ கூட கையாள எழுதாம பிரிண்ட் பண்ணி இருக்கானா அவனோடு கையெழுத்த நாம கண்டு பிடிச்சிடுவோம்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு”
“ஆமா. உங்க அப்பா பண்ணி இருப்பாருனு நினைக்கிறியா?” கணவனை ஏறிட்டாள் கோதை.
“இல்ல. அவருக்காக வேலை பார்க்க இத்தனை பேர் இருக்க அவர் இப்படி ஒரு வேல பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது வேற எவனோ பார்த்த வேல”
“உங்க அண்ணா பண்ணி இருப்பாரா?”
“இல்ல. இத பத்தி அவன் கிட்ட ஏற்கனவே பேசிட்டேன். அவனில்ல” என்றவாறே அமர்ந்துகொண்டான் கிருஷ்ணா
“சரி அந்த மொபைல்ல கொடு நான் பாக்குறேன்”
“அந்த டாயர்ல இருக்கு” என்றவனுக்கு “யாராக இருக்கும்” என்ற சிந்தனையோடு ஏன்? எதற்காக? என்ற கேள்விகள் எழுந்து குழம்பி தீவீரமாக சிந்திக்கலானான்.
டயரை திறந்து அலைபேசியை எடுத்த கோதை அதை அலச அதில் இருந்ததை பார்த்து அதிர்ந்தாள்.
கிருஷ்ணா தன்னை கவனிக்கின்றானா என்று பார்த்தவள் அவன் யோசனையாக அமர்ந்திருக்கவும் சத்தமில்லாமல் அலைபேசியிலிருந்தவற்றை அழித்து விட்டாள்.
அதன் பின்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அலைபேசியை இருந்த இடத்தில் வைத்தவள் கணவனின் அருகில் வந்தமர்ந்து ஆறுதலாக அவன் கையை பற்றி “ரொம்ப யோசிக்காத கிருஷ்ணா வா தூங்கலாம் லேட்டாச்சு” என்று அழைக்க
“நீ தூங்கு. எனக்கு தூக்கம் வரல” என்றவன் அசையாது நிற்க
அவன் கன்னத்தில் முத்தமிட்டு முத்தமிட்டு அவன் சிந்தனையை அவள் புறம் திரும்பியவள் கண்களாலே கட்டிலை காட்ட கிருஷ்ணா முற்றாக அவள் வசம் சாய்ந்திருந்தான்.
 இன்று காலையிலும் அவளை முத்தமிட்டு மொத்தமாய் கொள்ளையடிக்க சந்தர்ப்பம் அமைந்த பொழுது பூஜை வேலை கரடியை கதவை தட்டி இருந்தாள் யசோதா.
தாத்தாக்கள் இருவரும் ஊருக்கு சொல்கிறார்களாம் வந்து வழியனுப்பி வைக்கவாம் என்று கூற, கைக்கெட்டினது வாய்கெட்ட வில்லை என்ற பார்வையோடு கோதையை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தான் கிருஷ்ணா. 
“இன்னக்கி உன்ன விடுறதா இல்ல. நானும் எத்தனை நாளைக்கு பொறுமையா இருக்கிறதாம்” என்றவாறே அவள் இடுப்பில் கைபோட்டு இழுக்க, ஆசையும் எதிர்பார்ப்பும் தலை தூக்க அவனை கட்டிக்கொண்டாள் கோதை.  
   
கோதையை அடைய அன்று இருந்த தடையும், தயக்கமும் கிருஷ்ணாவுக்கு இன்று இல்லை. என்னதான் காதலித்த பெண்ணாக இருந்தாலும், அவள் எதிர்பார்ப்பு என்னவென்று அறிந்திருந்தாலும், அவளோடு முழுமனதாக கூட எதுவோ ஒன்று தடுத்தது. அது தனது அண்ணனின் வாழ்க்கை சீராக இல்லை என்று இதுநாள்வரை நினைத்திருக்க, அண்ணன் வாழ்கை சீரான பின்னும் அவளை நெருங்க முடியாமல் தடுப்பது எனது என்று சிந்தித்தான்.
அது அவன் அவளிடமிருந்து எதிர்பார்த்த காதல்தான் என்று புரிந்தது. காதல் இல்லாமல் கூடலா? ஏன் காதல் இல்லாமல் கூடவே மாட்டார்களா? அவளுக்கும் விருப்பம் இருக்கும் என்ற பொழுது இதில் என்ன தவறு என்று அவன் ஆசை மது அவனை அவள் புறம் தள்ளினாலும் சுயத்தை இழக்கவில்லை அவன்.
அவன் படித்த கல்லூரியில் அவன் கண்கூடாக பார்த்ததுதான் கூடலுக்காகவே ஜோடி சேர்பவர்களை. அப்பொழுது அதில் என்ன தவறு என்று கூட எண்ணி இருக்கின்றான். ஆனால் திருமணமான நண்பர்கள் கூட குடும்ப கௌரவம் என்ற பெயரில் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டு சுகத்தை இன்னொரு பெண்ணிடம் தேடித் செல்வதை காணும் பொழுது என்ன வாழ்க்கை இது எண்ணத் தோன்றும்.
கேட்டால் “பணம் இருக்கு, ஹைசொசைடில இதெல்லாம் சாதாரணம். ஏன் நீ மட்டும் விதி விலக்கா? எத்தனை நாளைக்கு உன் கொள்கையும் சாமியார் வேஷமும் என்று நாங்களும் பார்க்காத தானே போகிறோம்” என்று அவனையே கூட்டு சேர்க்க பார்ப்பார்கள்.
தனது தாய் விட்ட கண்ணீரை பார்த்த பின் இரட்டை வாழ்க்கை வாழ என்றுமே விரும்பாத கிருஷ்ணா தான் விரும்பும் பெண்ணை மட்டுமல்ல, தன்னை விரும்புவளைத்தான் திருமணம் செய்ய விடும் என்று எண்ணினான்.
அதனால்தான் கோதையோடையோடு அலைபேசியில் பேசிப்பழக வேண்டும் என்று அலைபேசி எண்ணைக் கொடுத்தான். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக அவன் வாழ்க்கை அமைந்து விட்டது. 
கோதை அவனை யார் என்று தெரியாதென்றாள். ஆனாலும் அவனை ஏற்றுக்கொண்டாள். அது அவன் கட்டிய தாலிக்கு கொடுத்த மதிப்பா? மண்டபத்தில் நடந்த சம்பவத்தை பார்த்தால் அதுவும் சந்தேகம்தான்.
தான் காதலித்த பெண்ணே ஆனாலும் அவளோடு தன் வாழ்க்கை எத்திசையில் பயனுக்கும் என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு அவள் பேச்சு எரிச்சலை மட்டும்தான் கொடுத்தது.
ஆனால் அவளின் வெளிப்படையான பேச்சுதான் அவளை சீக்கிரம் புரிந்துகொள்ளவும் உதவியது. அவள் வெட்கங்களில் காதலை தேடித் கலைத்தவன் அவள் செய்கைகளில் கண்டு பிடித்திருக்க அவன் தயக்கங்களும் நீங்கி இருந்தது. காதல் மனைவியை ஆசையாக கைகளில் ஏந்தி இருந்தான் கிருஷ்ணா.
  
முத்தச்சத்தம் அறையை நிரப்ப இருவருக்குள்ளும் தாபத்தீ பற்றிக்கொண்டது.
கிருஷ்ணாவுக்கு இளமையின் வேகம் இருந்தாலும் மனைவியை நிதானமாகத்தான் கையாண்டான்.
கோதையின் ஆடைகள் ஒவ்வொன்றாக களைய பெண்மை விழித்துக்கொண்டு வெட்கம் பிடிங்கித்தின்ன மின் விளக்கை அனைத்து விடும்படி கணவனிடம் கெஞ்சினாள்.
கிருஷ்ணாவை மிரட்டும் கோதை இல்லை இவள். தலைவனிடம் பள்ளிப்பாடம் காற்றும் சமத்து மாணவியாய் மாறி இருந்தாள்.
கொஞ்சம் கூந்தலை ஆடையாக்கி, கொஞ்சம் அவனையே! ஆடையாக்கி கைக்கொண்டு போர்வையை தேடியவாறு கன்னங்கள் சிவந்து ஓவியமாய் மாறி இருந்தவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் கிருஷ்ணா. 
“மாட்டேன். அது மட்டும் நடக்காது. இப்போதான் உன் முகத்துல நணப் பூ மொட்டு விரிக்க ஆரம்பிச்சிருக்கு விடியிறதுக்குள்ள மலர்ந்திடும்” என்றவனுக்கு அவன் காண ஏங்கிய அவள் வெட்கமுகம் கண்டு விட்ட உவகையில் அவள் மறுப்புக்களை எல்லாம் நிராகரித்தான்
மஞ்சத்தில் பூக்களின் அலங்காரமில்லை. பால் பழமில்லை. அவள் மேனியின் வாசனையை தவிர எந்தவிதமான வாசனையும் அங்கு வீசவுமில்லை. காதலோடு கூடிய அழகான கூடல் அரங்கேறிக்கொண்டிருந்தது.
விடிந்த பின்னும் கிருஷ்ணாவின் முகம் பார்க்க மறுத்து அவனுக்கு கண்ணாமூச்சு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள் அவன் மனையாள்.
வீடு முழுக்க அவளை தேடி அலைந்தவன் “எங்க போய்ட போறா இரவு பார்த்துக்கொள்ளலாம்” என்று விட்டு விட கனகவேல் அனைவரையும் அவரது அறைக்கு அழைத்ததில் மனைவியை ஒட்டி அவள் கைகை இறுக பற்றியவாறு நின்றான் கிருஷ்ணா.
கண்ணாமுச்சி ஆடிக்கொண்டிருந்தவளுக்கு அவன் நெருக்கம் இரவு நடந்தவைகளை நியாபகமூட்ட கன்னங்கள் சிவப்பேறி முகம் அத்திவானத்தை பூசிக்கொள்ள கிருஷ்ணாவின் கவனமெல்லாம் மனைவின் மீதுதான் இருந்ததே ஒழிய தந்தையின் பேச்சில் இல்லை.
கனகவேல் பலமுறை இறுமிய பின்தான் கிருஷ்ணா அவரின் பக்கம் திரும்பினான்.
“டேய்… உன் பொண்டாட்டிய கொஞ்சினது போதும். இங்க கவனி” அருள்வேல் தம்பியை அதட்ட
“அத நீ அண்ணி தோள் மேல இருக்குற கைய எடுத்துட்டு சொல்லு” என்றவன் அண்ணனையும் கண்டுகொள்ளவில்லை தந்தையையும் கண்டுகொள்ளவில்லை.
“சீக்கிரம் சொல்லுங்க எதுக்கு என்ன வர சொன்னீங்க? எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு” என்ற கிருஷ்ணாவை முறைத்தார் கனகவேல்.
“ஏன் டா நாமினேஷன் கொடுத்திருக்கேன் கேம்பைன் ஆரம்பிக்க வேணாமா? அத பத்தி பேசத்தான் வர சொன்னேன்” என்றவரை முறைத்தான் கிருஷ்ணா.
“ஜாதி அரசியல் பாத்திருக்கேன். ஜாதகம் ஜோசியம் என்று அரசியல் பண்ணுற ஒரே ஆளு நீங்கதான். எந்த காலத்துல இருக்கீங்க?” என்றவன் தந்தையை நேருக்கு நேராக பார்த்து “நான் அன்னைல இருந்து சொல்லுறேன் எனக்கும் அரசியலுக்கும் செட் ஆகாது என்று. என் கிட்ட கேட்டா நாமினேஷன் பைல் பண்ணினீங்க?”
“டேய் கிருஷ்ணா என்ன டா பேசுற?” யசோதா பதற
“சின்னவனே! நீ பதவில உக்காந்தா தான் உங்க அப்பா பரிபூர்ணமா குணமடைவார்னு ஜோசியர் தெளிவா சொல்லிட்டாரே டா… அதனாலதான்  நாங்க உன்ன தேர்தல்ல நிக்க சொல்லுறோம்” வத்சலா கண்ணைக் கசக்க
கோபமாக பேசி இவர்களுக்கு புரிய வைக்க முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணா. இவர்களை இவர்களின் வழியில் சென்றுதான் மடக்க வேண்டும் என்று “பொதுவா புருஷனுக்கு ஒன்னுனா பொண்டாட்டியோட ஜாதகந்தான் காப்பாத்தும், தாலி பாக்கியம்தான் காப்பாத்தும். ஒண்ணுக்கு ரெண்டு தாலிய கட்டி வச்சிருக்காரு. உங்க ரெண்டு பேரலையும் முடியாததை நான் பண்ணிடுவேனா? சரி தேர்தல்ல தோல்வியடைஞ்சா என்ன செய்வீங்க?”
“சபாஷ்” மனதுக்குள் கையை தட்டினாள் கோதை.
யசோதாவும் வத்சலாவும் புரிந்தும் புரியாமலும் கணவனை ஏறிட, மனைவிகள் இருவரும் விழித்துக் கொண்டால் காரியம் கெட்டு விடும் என்று கனகவேல் கோதையை குற்றம் சொல்ல ஆரம்பித்தார்.
“எல்லாம் இவன் கட்டிக்கிட்டு வந்த மகராசிய சொல்லணும். அவ சொல்லிக் கொடுத்துதான் இப்படி எல்லாம் பேசுறான். அவ அப்பாக்கு பணம் இருக்கிற திமிறுல, புருஷன பிரிச்சி தனிக்குடித்தனம் போக திட்டம் போடுறா. இவனுக்கு ராஜயோகம் இருக்கு. அரசன் போல ஆச்சி செய்ய யோகம் இருந்து என்ன பயன்? கேப்பார் பேச்சு கேட்டு சம்பளத்துக்கு வேல பார்க்க போறான். அறிவில்லாதவன்” என்று திட்ட கோதை கண்களை அகல விரித்தாள்.
“ஆமா…ஆமா… ஒண்ணுமில்லாம வந்தா ஒண்ணுமில்லாதவ, சொத்து சுகத்தோடு வந்தா இப்படி ஒரு பட்டமா?” என்றவாறே மனைவியை தன் புறம் இழுத்து நிறுத்திக் கொண்டான் அருள்வேல்.
“டேய் நான் உன் பொண்டாட்டிய பத்தி ஒண்ணுமே சொல்லல. நான் இவனுக்கு பார்த்த பொண்ணுடா மாலினி. கோதாண்டத்துக்கு என்ன சொத்தா இருக்கு? இவனும் மாலினிய விரும்பினானே அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி இருந்தா எந்த பிரச்சினையும் வந்திருக்காது” என்றவர் கோதையை வெளிப்படையாகவே முறைக்கலானார்.
எல்லாம் இவளை காதலித்ததால் வந்த வினை என்ற கோபத்தை முறைத்து தீர்த்துக்கொள்கின்றாராம் மாமனார்.
கனகவேல் பேசப் பேச “என்ன டா இது என்று பார்த்திருந்தவள். கிருஷ்ணா மாலினியை காதலித்ததாகவும், திருமணம் செய்ய இருந்ததாகவும் கூறியதை கேட்டபின் கொதித்தாள். 
    
கோபத்தை வெளிக்காட்ட முடியாமலும் கட்டுப்படுத்த முடியாமலும் திணறிய கோதை வேகமாக கிளம்பி அறைக்கு சென்று விட்டாள்.
தன் குடும்பத்தை பற்றி பேசியதால்தான் கோதை சென்றதாக நினைத்த கிருஷ்ணா அவளை பிறகு சமாதானப்படுத்தலாம். இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
“நான் மாலினியை காதலிச்சேன்னு உங்க கிட்ட சொன்னேனா? அர்ஜுன் என் பிரெண்டு அதே மாதிரி மாலினியும் என் பிரெண்டு அவங்க ரெண்டு பேரும் மட்டும்தான் காதலிச்சாங்க, கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அத விடுங்க என் பொண்டாட்டி சொல்லி கொடுத்துதான் நான் பேசுறேன்னு சொல்லுறீங்க? ஏன் இதற்கு முன்னால நான் உங்க கிட்ட இந்த மாதிரி பேசுனதே இல்லையா?” அடக்கப்பட்ட கோபத்தோடு சீறினான் கிருஷ்ணா.
கோபத்தில் கத்தி விட்டு அங்கிருந்து சென்று விடலாம். அதையே காரணம் காட்டி கனகவேல் வேறொரு பிரச்சினையை இழுப்பார் என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
“இங்க பாருங்க இந்த ஜாதி அரசியல், ஜாதக அரசியல் எல்லாத்தையும் விட்டுட்டு அண்ணன வேற்பாளரா நிக்க வைங்க, இல்லையா நாட்டுக்கு நல்லது பண்ணுற ஒருத்தர நிக்க வைங்க. நான் கண்டிப்பா தேர்தல்ல நிக்க மாட்டேன். யார் என்ன சொன்னாலும். என்ன கம்பல் பண்ண நினச்சா… நாட்டை விட்டே போய்டுவேன். அப்பொறம் என்ன எங்க தேடியும் உங்க கைல சிக்க மாட்டேன். இது ஒன்னும் மிரட்டல் இல்ல. என் முடிவு. என்ன என் போக்குல விட்டுடுங்க” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.
அருள்வேல் அமைதியாக பார்த்திருக்க, கனகவேலை அம்போ என விட்டு விட்டு அன்னைகள் இருவரும் சின்ன மகனின் பின்னால் ஓடி இருந்தனர்.
அவர்களுக்கு தெரியும் அவன் முடிவு செய்தால், எந்த காரணத்தைக் கொண்டும், எதற்கும் மாற்ற மாட்டான் பணிந்து வரவும் மாட்டான். பதவிக்காக மகனை இழப்பதா? ஒருகாலமும் முடியாது. கணவனை விட மகன்தான் முக்கியம் என்று அவர்கள் அவனை சமாதானப்படுத்த சென்று விட்டனர்.
“அன்பு உன் மாமனார் ரொம்ப டென்ஷனா இருக்காரு. போய் நல்ல இளநீரா பார்த்து சீவி வழுக்கையை வழிச்சிப் போட்டு ஐஸ் கட்டி இல்ல ஐஸ் கட்டி நிறைய அள்ளி போட்டு கொஞ்சூண்டு சக்கர போட்டு எடுத்துட்டு வா…” அருள்வேல் மனைவியிடம் கொஞ்சியவாறே கூற, மாமனாரை பயப்பார்வை பார்த்தவாறே சென்றாள். அன்பழகி.
“இப்போ என்ன பண்ண போறீங்க அப்பா?” அக்கறையாக விசாரிப்பது போல் இருந்தாலும் கேலியும் கிண்டலும்தான் அருள்வேலின் பேச்சில் தெறித்தது.
“அவனை எப்படியாவது நான் சம்மதிக்க வைப்பேன்” என்றார் கனகவேல்.
சத்தமாக சிரித்த அருள் “நீங்க நினைக்கிறது நடக்காது. அவனை டிஸ்டப் பண்ணாதீங்க. அவனுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன். என்ன மீறி அவனை எதுவும் பண்ண முடியாது. முதலமைச்சர் ஆகணும் எங்குற ஆச எனக்கு இருக்கு. என்ன நிக்க வைங்க நான் வெற்றியோடு வருவேன்.  சீக்கிரம் யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க. இல்லனா நான் சுயேட்ச்சையா நின்னு ஜெயிக்கிறேன். அப்படி நின்னா உங்களுக்குத்தான் அசிங்கம்”
“என்ன விளையாடுறியா? சுயேட்ச்சையா நின்னா உனக்கு யாரு ஓட்டு போடுவாங்க?” கனகவேல் எகிற
“இத்தனை வருஷம் உங்க கூட இருந்திருக்கேன். நீங்க பண்ண அத்தனைக்கும் சாட்ச்சியோட ஆதாரம் வச்சிருக்கேன். அதெல்லாம் மீடியால கொடுத்து இதனாலதான் கட்ச்சிய விட்டு வந்து சுயேட்ச்சியா நிக்குறேன்னு ஒரு வார்த்த சொன்னா போதும். மக்கள் ஓட்டும் போடுவாங்க. உங்கள உள்ளேயும் தள்ளிடலாம் பாருங்க”
சின்ன மகனை எவ்வாறு வழிக்கு கொண்டு வருவதென்று முழிபிதுங்கி நின்ற கனகவேல் பெரிய மகனின் விஷ்வரூபம் கண்டு திக்கு முக்காடித்தான் போனார். அது மட்டுமா? சுவிஸ் பேங்கில் அவர் போட்டு இருக்கும் பணத்தின் மதிப்பு எவ்வளவு? அதன் கடவுச்சொல், இன்னும் என்னென்னவோ! எல்லாமே அருள்வேளுக்கு மட்டும்தான் தெரியும்.
“நீங்க ஆட்ச்சில இருக்குற கடைசி வருஷம் இதுதான். நீங்க என்ன தேர்தல்ல நிக்க வச்சி என்ன ஜெயிக்க வைக்க வேண்டிய எல்லா வேலையையும் பார்க்கணும். நான் வெற்றி பெற்ற பிறகு மூட்ட முடிச்ச கட்டி கிட்ட ஊருக்கு போய் பஞ்சு ஆலைய பாத்துக்கணும். இதுதான் நான் உங்களுக்கு கொடுக்குற தண்டனை”
“தண்டனையா… எதுக்கு?” கனகவேல் புரியாது கேட்டார்.
“எங்கம்மா வாழ்க்கையை நாசம் பண்ணதுக்கு” என்றான் அருள்.
“அதுக்குதான் நான் அப்போவே மன்னிப்பு கேட்டேன்” கனகவேல் உறும
“அதனாலதான் இந்த தண்டனை. இல்லனா உங்க பதவியை இல்ல பறிச்சு உசுரையும் எடுத்து இருப்பேன்” என்று சிரித்தவன். “இத்தனை வருஷமா நீங்க சொல்லுற எல்லாத்தையும் தலையாட்டி பொம்மை மாதிரி செஞ்சது எதுக்குன்னு நெனச்சீங்க? சரி..சரி.. நல்ல முடிவா எடுங்க” என்றவன் வெளியேற அன்பழகி இளநீரோடு எதிரே வந்தாள்.  
“அவருக்கு வேணாமாம். நான் குடிக்கிறேன் கொடு” என்று அதை வாங்கிக் கொண்டு மனைவியோடு சென்றான் அருள்வேல்.
பண விஷயத்தில் யாரையும் நம்பாத கனகவேல் சொந்த மகனை நம்பி ஏமாந்து அவனிடம் மாட்டிக் கொண்டு, என்ன செய்வது என்று புரியாது அமர்ந்து விட்டார்.
கிருஷ்ணாவின் பின்னால் வந்த யசோதாவும், வத்சலாவும் அவனை சமாதானப்படுத்த முனைய “இங்க பாருங்க என் முடிவ நான் தெளிவா சொல்லிட்டேன். நீங்க ரெண்டு பேரும் அப்பா கிட்ட பேசுங்க. அரசியல்ல விருப்பமில்லாத என்ன இழுக்காம, அதுக்காக முழு மூச்சா ஈடுபடுற அண்ணன வேற்பாளரா நிற்க வைக்க பாருங்க. நான் நின்னா என்ன? அவன் நின்னா என்ன? அவருக்கு நாங்க ரெண்டு பேருமே பசங்க தானே! தேர்தல்ல நின்னு வெற்றி பெறுவது மட்டும் முக்கிய மில்லாத, மக்களுக்கு சேவையும் செய்யணும். எனக்குதான் அரசியலை பத்தி ஒண்ணுமே தெரியாதே நான் வந்து என்ன செய்ய போறேன். அவனாலதான் இதெல்லாம் சமாளிக்க முடியும். என்ன விட்டுடுங்க” என்றவன் அன்னைகள் இருவரும் அடுத்து பேசும்முன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
தன்னை, தன் குடும்பத்தை மாமனார் மாமனார் பேசும் பொழுது அதிர்ச்சி மட்டும்தான் அடைந்தாள் கோதை. தன் கணவன் வேறொரு பெண்ணை காதலித்து மணக்க இருந்தான் என்றதும் கோபம் பொங்கியது.  அடக்க வழி தெரியாமல் அறைக்குள் பெண் சிங்கமாய் சீறிக் கொண்டிருந்தவள் அறைக்குள் நுழைந்த க்ரிஷ்னாவை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தாள்.
காலையிலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி விட்டு சற்று நேரம்வரை வெக்கிச் சிவந்தவள் இவளா? என்று சந்தேகம்கொள்ளும் விதமாக இருந்தவளை சமாதானப் படுத்தும் வழி தெரியாமல் முத்த தாக்குதல் செய்ய ஆரம்பித்தவன் அவள் வெட்கங்களை உயிர்பெற வைக்கும் முயற்சியிலும், மீட்டெடுக்கும் வேலையிலும் ஈடுபடலானான்.           

Advertisement