Advertisement

அத்தியாயம் 6
இருமனம் சேர்ந்து ஒருமனமாகும் திருமணமாகும் இன்று.
இரு உயிர் சேர்ந்து ஒரு உயிராகும் ஒத்திகை இன்று.
உனக்கென ஒரு சொந்தம் இன்றுதான் ஆரம்பம்
உனக்கதில் ஆனந்தம் அதுவே! என் இன்பம்.
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ.
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ.
இறைவன் போடும் கட்டளை இதுதான் வாழ்க்கை என்னும் புத்தகம் இதுதான்
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ.
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ.
வந்த சொந்தங்களில் பாதி பேருக்கு மேல் சாப்பிட்ட உடனே! கிளம்பி இருக்க, கயந்திகாவின் சொந்தங்கள் அனைவரும் அவளை பார்த்து இரண்டாம் தாரமாக வாழ்வது எவ்வளவு அவமானம் என்று அனுதாபப்பட்டவாறு ஆறுதல் படுத்தி விட்டு சென்றிருந்தனர். அதில் சிலர் வேலுநாயகின் செல்வச் செழுப்பின் மேல் பொறாமை கொண்டிருந்தமையால் அனுதாபம் என்ற பெயரில் குத்தல் பேச்சுக்களையும் வீசி விட்டு சென்றிருக்க, எதையும் கண்டுகொள்ளாமல் கயந்திகா அமர்ந்திருந்தாள்.
சி.எம். கனகவேல் ராஜ பிரச்சினை பண்ணுவார் என்று அருள்வேல் திருமணத்தை உடனே! பதிவு செய்ய வேண்டும் என்று கண்ணபிரானிடம் பேசி. திருமண பதிவாளரை மண்டபத்துக்கே! அனுப்பி இருந்தான்.
கையொப்பம் போடும் பொழுது கிருஷ்ணாவை தடுத்த கோதை “நல்லா யோசிச்சி தான் சைன் போட போறீயா? எதுக்கும் இன்னொரு தடவ யோசிச்சிக்க, இதுதான் உனக்கு இருக்கும் கடைசி சான்ஸ். இப்போவே! ஓடுறது என்றாலும் ஓடிடலாம்” ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினாள்.
அங்கிருந்தவர்கள் “என்ன இது? தாலிதான் கட்டியாச்சே! எதுக்கு இப்படி பேசுறா?” என்று பார்க்க
“இவளுக்கு எதுல விளையாடுறதுனு தெரியல. எப்போவும் விளையாட்டுதான்” வடிவுப்பாட்டி கோதையின் மண்டையில் ஒரு கொட்டு வைக்க, கோதை கேலி செய்கிறாள் என்று புரிய இறுக்கம் தளர்ந்து மெல்லிய சிரிப்பலை பரவியது.
கிருஷ்ணா தாலி கட்டியது முதல் கோதை பேசிய பேச்சுக்கள் அவ்வாறு இருக்க, இவள் கிண்டல் பேச்சுகளும் பேசுவாளா? என்று அங்கிருந்தவர்களை சந்தேகம் கொள்ள வைத்திருக்க, வடிவு கொட்டிய பின்தான் கோதை கேலி செய்கிறாள் என்பதையே! உணர்ந்து கொண்டிருந்தனர்.
எந்த நேரத்தில் ஏழரையை கூட்டுவாளோ! என்ன பிரச்சினையை உண்டு பண்ணுவாளோ! என்ற ஒரு வித பீதியிலையே! சொந்தபந்தங்கள் நின்றிருந்ததை பாவம் கோதைத்தான் அறியவில்லை. 
“ஏய் கிழவி வலிக்குது” என்றவாறு அம்மாச்சியை முறைத்தாள் கோதை.
கோதையின் தலையை தடவி விட்ட கிருஷ்ணா “உனக்கு ஓடணும்னு தோணுதா?” என்று கேக்க யோசிக்கும் முகபாவனையை கோதை கொடுக்க,
“நீ யோசிக்க வேற செய்றியா? மவளே! காலு ரெண்டையும் ஒடச்சிடுறேன்” மிரட்டினான் கிருஷ்ணா.
 “காதலிச்சவன கல்யாணம் கட்டிக்கிட்டு யோசிக்கிறதப்பாரு?” மீண்டும் வடிவுப்பாட்டி முதுகில் அடிக்க,
“அடிக்காத.. கிழவி.. யோவ் புருஷா ஆளாளுக்கு என் மேல கை வைக்கிறாங்க, என்ன எது என்று கேக்க மாட்டியா?” என்று கிருஷ்ணாவின் மேல் பாய்ந்தவாறு “ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்க முடியாதில்ல, அதான்… கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாம்னு பாக்குறேன்” என்று இளிக்க
“உன் அம்மாச்சி கிட்ட என்ன கோர்த்து விட பாக்குறியா? என் கிட்ட மாட்டுவல்ல அப்போ வச்சிக்கிறேன்” என்ற கிருஷ்ணா கையொப்பமிட்டு விட்டு பேனாவை கோதையிடம் நீட்ட
அவன் கூறியதை புறம் தள்ளியவள் “உன் பேர் க்ரிஷ்ணாவா? அதான் என் பேர் ராதைனு சொன்னியா?” கிசுகிசுப்பாக கேட்டவாறு கையொப்பமிட குனிய அவள் மூச்சுக்கு காற்று பட்டு மூச்சு விட மறந்தான் கிருஷ்ணா.
கண்களை உருட்டியவாறு நிற்கும் மாமனைக் கண்டு “என்னாச்சு மாமா அடிக்கடி ப்ரீஸ் ஆகுறீங்க? ஆர் யு ஓகே?” என்று வசந்த் முதுகில் தட்ட புன்னகைத்தான் கிருஷ்ணா.
இதோ மண்டபத்திலிருந்து மணமக்கள் மணமகனின் வீட்டுக்கு புறப்பட தயாராகி விட்டார்கள். கோதையின் துணிப்பெட்டி கூட கிருஷ்ணாவின் வண்டியில் ஏத்தியாச்சு. வந்தவர்கள் அனைவரிடமும் கோதை விடைபெற்றுக்கொண்டாள். ஆனால் பெற்ற அன்னை அபரஞ்சிதாவிடம் ஒரு வார்த்தைக்கு கூட இன்னும் பேச வில்லை.
அபரஞ்சிதா கோதையை சாப்பிட அழைத்த போதும் அன்னையை கண்டுகொள்ளாது “ஏய் வாங்க டி பசிக்குது” என்று தோழிகளை இழுத்து சென்றிருந்தாள். அதன் பின்னும் அபரஞ்சதா மகளிடம் பேசியவைகளை காற்றில் பறக்க விட்டு அருகிலிருந்தவர்களோடு உரையாடினாளே! தவிர அன்னையோடு பேசவில்லை.
அபரஞ்சிதா மனவேதனையை மறைத்துக் கொண்டு புன்னகைத்தவாறு கல்யாண வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், இதை கவனித்த வசந்த் “அக்கா உனக்கு என்னதான் அம்மா மேல கோபம் இருந்தாலும் அதற்கான காரணம் இப்போ ஒன்னும் இல்லனு ஆகிருச்சுல. இப்போவாச்சும் அம்மா கூட பேசேன். பாவம் அம்மா” என்று கெஞ்ச
“என்ன பாவம்? அப்பா ஒன்னும் அவங்கள ஏமாத்தளையே! எல்லா உண்மையையும் தெரிஞ்சி கிட்டு அவங்களும் அமைதியா தானே! இருந்திருக்காங்க. இதுல பாவப்பட்ட ஜென்மங்க நாங்கதான் அம்மா அப்பாவோட ரெண்டாவாவது சம்சாரம் என்று தெரிஞ்சப்போ எவ்வளவு மனக்கஷ்டத்துக்கு உள்ளானோம்.
இந்த விஷயம் நம்ம சொந்தபந்தங்களுக்கோ! நம்ம ப்ரெண்ட்ஸுக்கோ! தெரிஞ்சா அசிங்கமா பேசுவாங்கனு எவ்வளவு பயந்தோம். உன்ன விடு அம்மாக்கு மொத குழந்தையா பிறந்துட்டேன். அப்பா கூட தப்பான உறவுல பிறந்திட்டேன்னு…” கோதை முடிக்கவில்லை
“அக்கா…” வசந்த் அதிர்ச்சியடைய
“ரெண்டாம் தாரமா ஒரு பொண்ணு கல்யாணமான ஒருத்தர கட்டிக்கிறதுனா ஆயிரம் காரணம் இருக்கும். அந்த குழந்தையோடு சைட்டுல இருந்து யாரும் யோசிக்க மாட்டாங்க. எனக்கு அப்படிதான் தோணிருச்சு. கூனிக்குறுகி நின்னேன்”
கோதை சொன்ன எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டான் வசந்த். அவனும் அந்த வலி, வேதனைகளை அனுபவித்தவன் தானே!  ஆனால் அக்காவின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை அவன் அறிந்திருக்க வில்லை.  
“உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்ததுன்னு என் கிட்ட சொல்லவே! இல்லையேக்கா… அட்லீஸ்ட் அம்மா கிட்டயாவது கேட்டிருந்திருக்கணுமே!” கோதை எவ்வளவு மனவேதனைக்கு தள்ளப்பட்டிருப்பாள் என்று வசந்தின் கண்கள் கலங்க
“கேட்டேன். ஒருநாள் பொறுக்க முடியாம கேட்டுட்டேன். மனசுல வச்சிக்கிட்டு தவிக்க முடியாம கேட்டுட்டேன்” என்ற கோதை மெளனமாக
அன்னை என்ன பதில் சொல்லி இருப்பாள் என்று வசத்தால் சுத்தமாக கணிக்க முடியவில்லை. “என்ன சொன்னாங்க?” அச்சம் கொண்டவனாகத்தான் அக்காளை ஏறிட்டான்.
“அப்போவாச்சும் உண்மைய சொல்லி தொலைச்சி இருக்கலாம்ல. அப்பா ஒன்னும் இஷ்டப்பட்டு அவங்கள {கயந்திகாவை} கட்டிகளையே! எதோ ஒரு சூழ்நிலை கல்யாணம் பண்ண வேண்டியதாச்சுனு உண்மைய சொல்ல வேண்டியது தானே! சொல்லல. என்னமோ! அப்பாகும் அவங்களுக்கும் நான் தான் எதிரி போல, நீ எங்களுக்கு பிறக்கவே! இல்ல. உன்ன ரோட்டுல இருந்து கண்டெடுத்தோம்னு சொன்னாங்க”
“என்னக்கா சொல்லுற?” வசந்த் அதிர்ச்சியின் உச்சத்துக்கே! சென்றான்.
கசப்பான புன்னகையை சிந்திய கோதை “பதின் வயதுல இருந்திருந்தா அவங்க சொன்னாக நம்பி இருந்திருப்பேன். அழுது கரைஞ்சி. வீட்டை விட்டு ஓடி கூட இருப்பேன். ஆனா அவங்க சொன்னது அப்பட்டமான பொய் என்று எனக்கு நல்லாவே! தெரியும். அவங்கள உரிச்சு வச்சா மாதிரி பிறந்து இருக்கும் என்ன அவங்க எப்படி ரோட்டுல இருந்து கண்டெடுத்தாங்க?”
பெருமூச்சு விட்ட வசந்த் “எதுக்கு அம்மா அப்படி சொன்னாங்க?” இன்னும் அதிர்ச்சி மாறாமல் கேட்க,
“வேற எதற்கு என் வாய அடக்கத்தான். எப்போ என்ன அவங்க பொண்ணே! இல்லனு சொன்னாங்களோ! அந்த நாளுல இருந்துதான் அவங்க கிட்ட பேசுறத விட்டுட்டேன்” கோப மூச்சுக்களை விட்டவாறு கோதை பேச வாயடைத்து போனான் வசந்த்.  
அக்கா கேள்வி கேட்டதுக்காக அம்மா இப்படி கூறியதும் தப்பு. அப்படி கூறாவிடில் உண்மையை அறிந்துக்கொண்டபின் அக்கா விடாமல் துரத்துவாள் என்று அவள் வாயை அடைக்கத்தான் இப்படி கூறி இருக்கக் கூடும் என்று வசந்த்துக்கு புரிந்தது. அது கோதை புரிந்துக் கொண்டிருந்தமை மகிழ்ச்சியை கொடுத்தாலும் அன்னையோடு பேசாமல் இருப்பது வேதனையாக இருந்தது.
கோதை வாயோயாமல் பேசுபவள். எதற்கு எடுத்தாலும் சண்டை பிடித்து மல்லுக்கட்டி நிற்பவள். பிடிவாதக்காரி, முன்கோபி என்று வீட்டாரும் தோழிகளும் கிண்டல் செய்தாலும் அவள் மனதில் பாசம் கொட்டிக் கிடக்கும் அதை வெளிக்காட்ட மாட்டாள் என்பதையும் அறிந்துதான் வைத்திருந்தனர்.  
“அக்கா…. அப்பாக்கு இந்த குடும்பத்தால ஏதாவது ஆகிடும் என்று அம்மா உண்மைய சொல்லாம மறச்சி இருக்கக் கூடும். உன்ன காயப்படுத்த அம்மா நினைக்க மாட்டாங்க புரிஞ்சிக்க” யார் பக்கம் பேசுவது? அக்காவிடம் பேசி புரிய வைக்கலாம் என்று ஆரம்பித்தான் வசந்த்.
“பாத்தியா பாத்தியா நீயும் அம்மா பாசத்துல மதி கெட்டு பேசுற. அப்பாவ மிரட்டி கல்யாணம் பண்ணி வச்ச அந்த வேலுநாயக் தாத்தா எப்பயோ! செத்து போய்ட்டாரு. அவரு சாகும் போது. தான் பண்ண தப்ப உணர்ந்து நம்ம மேல சொத்து வேற எழுதி வச்சிட்டு போய் இருக்காரு. அவரு செத்த பிறகாவது எங்க கிட்ட அப்பாவோ! அம்மாவோ! உண்மைய சொல்லணும் என்று நினைக்கல இல்ல. அப்படினா என்ன அர்த்தம் பிள்ளைகள் நாம முக்கியம் இல்லனு தானே! நினைக்கிறாங்க” வேதனை நிறைந்த குரலில் கோதை கூற
“யேன்கா இப்படி எல்லாம் நினைக்கிற? உன் மனசுல அம்மா மேல பாசம் இருக்குனு எனக்கு தெரியும் இல்லனா நீ இப்படியெல்லாம் இன்னக்கி பேசி இருக்க மாட்ட” என்று வசந்த் எதையோ! சொல்ல முட்பட
“பாசம் இல்லனு நான் சொல்லவே! இல்லையே! இன்னக்கி அப்பா பார்த்த மாப்பிளையை நான் கல்யாணம் பண்ணி இருந்தா என்னைக்கும் அம்மா ரெண்டாம் தாரமாத்தான் இந்த சமூகத்துல வாழ்ந்திருப்பாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்ன ஏர்போர்ட்ல பார்த்து காதலிக்க ஆரம்பிச்ச ஒரே காரணுத்துக்காக எனக்கு கல்யாணம் என்று கேள்விப்பட்டதும் எனக்காக கிருஷ்ணா மட்டும் வரலைனா இந்த உண்மை யாருக்கும் தெரியாமளையே! போய் இருந்திருக்கும்” பெருமூச்சு விட்டவள் கிருஷ்ணாவை பார்க்க அவன் யுவனோடு சிரித்தவாறு பேசிக்கொண்டிருந்தான்.
அதே நேரம் கிருஷ்ணாவும் புன்னகை முகமாக கோதையை திரும்பிப் பார்க்க முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு கையை தூக்கி “ஹாய்” என்றாள் கோதை.
அரசியல்வாதி குடும்பத்து மருமக என்று சரியாதான் நிரூபிக்கிறா. பார்த்த உடனே! கைய தூக்கி ஸலாம் வைக்கிறா. நாம என்ன பலநாள் கழிச்சா சந்திச்சோம் இதோ அஞ்சு, பத்து இல்ல அரைமணித்தியாலம் பிரிஞ்சு இருந்தோம்” முணுமுணுத்த கிருஷ்ணா முகத்தை திருப்பிக் கொண்டான்.
“பாவம்கா.. மாமா இப்படி டாச்சர் பண்ணாத” வசந்த் சிரிக்க,
“எனக்கும் அவனுக்கும் முடிக்க கணக்கு வழக்கு ஆயிரம் இருக்கு. இதுல நீ வராத” கோதையும் புன்னகைத்தவாறே சொல்ல
“நான் உன் ஒரே தம்பிக்கா… நான் இல்லாம எப்படி? வச்சி செய்யலாம்” என்று சொல்ல கோதை வசந்துக்கு ஹைப்பை கொடுத்தாள்.  
வசந்த் அதன் பின் அன்னையை பற்றி அக்காவிடம் பேசவில்லை. அவள் மனக்காயங்களை ஆறியபின் அவளே! வந்து செல்லம் கொஞ்சுவாள் என்று விட்டு விட்டான்.
கோதையின் தோழிகளும் ஆள்மாற்றி ஒவ்வொருவராக அட்வைஸ் மழை பொழிய கடுப்பானாள் கோதை.
“என்னங்க டி.. எங்க வீட்டு கிழவி பத்தாதுன்னு நீங்க வேற உசுர எடுக்குறீங்க?”
“உன் வாய் இருக்கே! வாய். அது இருக்குற வரைக்கும் போற இடத்துல பொழச்சிக்குவான்னு நினைச்சோம். ஆனா இப்போ நீ போற இடம் சி.எம் வீடு அவர் கிட்ட போய் உன் வாய் ஜாலத்தை காட்டி வைக்காத, சோத்துல விஷம் வச்சிடுவாரு. அவர் ஒரு மாதிரியான ஆளுன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க” கவிதா ரகசியம் பேசுவது போல் சொல்ல
“ஆமா டி… பெரிய இடமெல்லாம் பார்க்கத்தான் பளிங்கு மாளிகை. உள்ள போனாதான் தெரியும் எவ்வளவு ரெத்த வாடை வீசும் என்று” இன்பா வேறு அச்சப்பட்டவளாக சொல்ல
“உன் புருஷன கைக்குள்ள போட்டு முந்தானைல முடிஞ்சி வச்சிக்க, யாரு கண்டா பெரிய இடத்து பசங்க, இந்த பழம் புளிச்சிருச்சுனு, வேற மலர் தேடி வண்டா பறந்துட போறான்” என்று சித்ரகலா சொல்ல
“ஓகே… நீங்க பேசினது எல்லாம் ரெகார்ட் பண்ணிட்டேன். எனக்கு ஏதாவது ஆச்சுன்னா. இத சாட்ச்சியா கொடுத்துடலாம்” என்றாள் கோதை.
“என்ன டி எங்களை கோர்த்து விட பாக்குற? கவிதா பாய
“பின்ன பொறாமை புடிச்ச சிங்கல்ஸ் டி நீங்க எல்லாம் இதுக்கு மேலையும் பேசுவீங்க. விட்டா என் புருஷனையே!” என்று கோதை சொல்ல வந்ததை சொல்ல விடாது இன்பா அவள் வாயை தன் கைக்கொண்டு அடைக்க
“சைட்டு மட்டும் தான் டி அடிச்சோம். தப்பா எல்லாம் பார்க்கல. அண்ணனை போய் யாராச்சும் தப்பா நினைப்பாங்களா” என்று அசடு வழிய கோதை தோழிகளை நன்றாக முறைத்தாள்.
“மக்கு மாடு அவ போட்டு வாங்குறா… அது தெரியாம இப்படி உளரிக் கொட்டிட்டியே!” கவிதா தலையில் அடித்துக்கொள்ள
“விடு பூ… நாம அடிக்காத சைட்டா.. காலேஜ்ல பசங்க இல்லனு மால் போய் சைட் அடிச்சோமே! மறந்து போச்சா” என்று கலா கோதையின் கன்னம் கிள்ளி சமாதான கொடியை பறக்க விட்டாள்.  
“நீ சி.எம் வீட்டுக்குள்ள நுழைஞ்சா உன்ன பார்க்கவும் முடியாது” இன்பா முகம் வாடினாள்.
“ஏன் பார்க்க முடியாது மேடம் ஹீரோ சாரோட  ஊர்வளம் போறத நாம டிவில பார்க்கலாம்” என்றாள் கவிதா.
தோழிகள் அவளை இனிமேல் பார்க்க முடியாமல் போய் விடும் என்ற ஆதங்கத்தில், கோபத்தில் அவளை பயமுறுத்துவது போலவும், வெறுப்பேற்றுவது போலவும் பேசி இருக்கிறார்கள் என்று புரிய அவர்களை கட்டிக்கொண்டு “உங்கள பார்க்க வரேன் டி..” அழுதவாறே விடைபெற, அங்கு வந்த கண்ணபிரானும் மகளை சமாதானப் படுத்த முனைய அவள் அழுகை கூடியதே! ஒழிய குறையவில்லை. 
தந்தையின் நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதவளை வசந்தும், யுவனும் சேர்ந்து ஓட்டி எடுக்க, அவர்களை அடிக்க துரத்தியவளை இழுத்து காரில் ஏற்றி இருந்தான் கிருஷ்ணா. அவனை முறைத்தவாறு கண்களை துடைத்துக்கொண்டு காரில் அவன் வீடு நோக்கி பயணமானாள் கோதை.
அவர்களின் வண்டிக்கு பின்னால் உள்ள வண்டியில் கண்ணபிரானும், அபரஞ்சிதாவும் வர, யுவனின் வண்டியில் வசந்தும் வடிவுப்பாட்டியும் வந்தனர்.
கோதை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். கிருஷ்ணா நல்லவனாக தெரிந்தாலும் சி.எம் பையன் அவர்களை வீட்டில் சேர்ப்பார்களா? மாட்டார்களா? சி.எம் வீட்டம்மா எப்படி பட்டவர்களாக இருக்கும் என்று வடிவுப்பாட்டி கோதையின் வாழ்க்கையை எண்ணி புலம்பியவாறே வர
“ஐயோ என் காதுல ரெத்தம் வருது பாட்டி அந்த பழைய ரேடியோவை கொஞ்சம்  ஆப் பண்ணுறீங்களா?” கடுப்பாகி யுவன் கத்த
“நான் அப்போவே! சொன்னேன். கிழவிய அப்பா வண்டில ஏத்த சொல்லி. நீதான் மாமா அப்பாவும், அம்மாவும் இப்படி தனிமைல போய் இருக்க மாட்டாங்க குறுக்க  நந்தி ஆட்டம் பாட்டிய அனுப்பாத, பாட்டி நம்ம வண்டில வரட்டும் என்று. இப்போ அனுபவி” இருக்கையில் தலையை சாய்த்து காதுக்கு ஹெட்போனை மாட்டி இருந்த வசந்த்  கண்களை மூடியவாறே பேச
“இன்னுமா உங்க பேத்தி மேல நம்பிக்கை இல்ல? மண்டபத்துல எத்தனை பேர சமாளிச்சா…” யுவன் நியாபகமூட்ட
“அவ சின்ன பொண்ணு. எதோ! அறியாம பேசிட்டா… அதையே! சொல்லிக்கிட்டு” கழுத்தை நொடித்த வடிவுப்பாட்டியை கண்ணாடி வழியாக முறைத்த யுவன்
“கேட்டுக்கடா உங்க அக்கா சின்ன பொண்ணாம். சி.எம் பையனையே!! காதலிச்சு கல்யாணம் பண்ணி, ஒரே நாள்ல அவங்கம்மா வாழ்க்கையை சீர் படுத்திட்டா அவ சின்ன பொண்ணா? விவரமான பொண்ணு. சி.எம் கூட இவ கிட்ட கிளாஸ் எடுக்க வேண்டி இருக்கும்” என்று வசந்த்தை உலுக்க, 
கண்ணை திறந்த வசந்த் “ஏன் அக்கா கழுத்துல தாலி கட்டின மாமா என்ன பண்ணுவாராம்? அக்காவை பேச விட்டு கைகைட்டி வாய் பொத்தி நிப்பாராமா? கல்யாணம் பண்ணா உறுதுணையா கூட நிக்க வேணாமா?”
“பாட்டிமா கேட்டிங்களா உங்க பேரன் சொல்லுறத? எனக்கென்னமோ! இவனும் பொண்ணு பார்த்து வச்சிருப்பான்னு தோணுது. எதுக்கும் பேரன் மேல கண்ண வைங்க” சத்தமாக சிரித்தவாறே யுவன் சொல்ல,
“ஆமாமா எந்த புத்துல எந்த பாம்பு இருக்குதுனே! தெரிய மாட்டேங்குது. டேய்.. வசந்த் பொண்ண தூக்குறதுன்னுனு முடிவு பண்ணிட்டினா வீட்டு பக்கம் வந்துடாதடா, எங்கயாச்சும் பாரின் போய்டு” வடிவுப்பாட்டி பதறியவாறு சொல்ல
“அட ச்சி நல்ல குடும்பம்” கடுப்பானான் யுவன்.
“உன் குடும்பத்தை விடவா?” வடிவுப்பாட்டி யுவனின் மேல பாய
“சண்டை போடாதீங்கப்பா…” பேச்சு செல்லும் திசை சரியில்லை என்று வசந்த் வேறு பேச்சுக்கு தாவ அதையே! மற்றவர்களும் பேச அந்த பேச்சுகளினூடாகவே! முதல்வரின் மனையை அடைந்தனர்.
மினி அரண்மனை போன்ற அந்த மனைக்கும் வாயிலுக்கும் அரைகிலோ மீட்டர் தூரம் இருக்க, வரிசையாக வந்து நின்ற மூன்று வண்டிகளையும் கண்டு காவலாளி முன்னால் வந்து நின்று கிருஷ்ணாவின் வண்டியை அடையாளம் கண்டுகொண்ட நொடி வணக்கம் வைத்தார். 
காவலாளி கேட்டை திறந்து விட பாதுகாப்பாளர்களையும், போலீஸ்படையையும் பார்த்தவாறு கார்கள் மெதுவாக உள்ளே நுழைய “என்னங்க நம்ம பொண்ணு எப்படீங்க இங்க வாழுவா? வீட்டுல சுதந்திரமா இருந்துட்டு இங்க இப்படி எதுக்கெடுத்தாலும் போலீஸ் கூட… நினைச்சாலே! பயமா இருக்கு” அபரஞ்சிதா மகளை நினைத்து கவலைகொள்ள
“காதலிக்கும் போது மாப்பிள்ளை இத பத்தி எல்லாம் அவ கிட்ட பேசாமளா இருந்திருப்பாரு? எல்லாம் பேசி புரிய வைச்சிருப்பாரு” மனைவியை சமாதானப் படுத்தினார் கண்ணபிரான்.
தொலைக்காட்ச்சி செய்திகளிலில் முதலமைச்சரின் வருகையின் பொழுது எத்தனை வண்டிகள் வரிசைக் கட்டி நிற்கும், மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள், பாதுகாப்புப்படை எப்படி இருக்கும் என்று கண்டிருந்த கோதை நுழைவாயில் ஆரம்பித்து வாசல்வரை இருந்த கூட்டத்தைக் கண்டு வியந்தவாறு பார்வையிட்டுக்கொண்டு வர, அவளின் விரிந்த விழிகளை கள்ளத்தனமாக ரசித்தவாறு மென்னகை புரிந்தான் கிருஷ்ணா.
வண்டியை விட்டு கிருஷ்ணா இறங்கிய நொடி பட்டாசு வெடிக்க அதிர்ச்சியில் அவன் கைகளை பற்றிக்கொண்டாள் கோதை.
“இது தேவையா?” என்று அண்ணனை கிருஷ்ணா முறைக்க இரண்டு பெண்கள் வந்து மணமக்களுக்கு ஆலம் சுற்ற ஆரம்பித்தனர்.
கிருஷ்ணாவின் கண்களோ! அன்னையை தேடி விட்டு காணாமல் அண்ணனிடம் கண்களையே! விசாரிக்க, அருகில் வந்த அருள்வேல் “அம்மா உன் மேல் செம்ம கோபத்துல இருக்காங்க. உள்ள போ… உனக்கு இருக்கு” என்று முதுகில் தட்டியவாறு உள்ளே அனுப்பி வைத்தவன் கண்ணபிரானையும் குடும்பத்தாரையும் வரவேற்கலானான்.
கிருஷ்ணாவிடம் “டேய் பேராண்டி எங்க உன் அம்மா? மருமக வந்திருக்கா.. உள்ள உக்காந்திருந்தா சரியா? ஆமா வீட்டுல பெரிய மனுசங்க யாரும் இல்லையா?”
“எங்க அப்பாவை கேக்குறீங்களா?” என்று அருள்வேல் வர
“பதவில இருந்தா பெரிய மனுசனா? நான் கேட்டது உன் அப்பத்தா, அம்மாச்சிய அப்பு..” என்று அருள்வேலின் கன்னம் கிள்ள
“அவங்க எல்லாம் எப்பயோ மேல போய் செட்டில் ஆகிட்டாங்க” இரு கைகளையும் வானத்தை நோக்கிக் காட்ட
“அப்போ நான் சார்ஜ் எடுத்துகிறேன்” என்று வடிவு கோதையை அழைத்து சென்று பூஜையறையில் விளக்கேற்றுமாறு பணித்து விட்டு அதை செய், இதை செய் என்று அங்கிருந்தவர்களுக்கு உத்தரவிட ஆரம்பித்திருந்தார்.
“எங்க டா.. அப்பா வீட்டுல இல்ல போல” என்று கிருஷ்ணா அண்ணனிடம் கேட்க
“முக்கியமான கட்ச்சி மீட்டிங்னு சொன்னேனே! வந்துடுவாரு”
“நீ போகல?”
“நான் போனா என்ன போகலானா என்ன? என் கருத்த அவரு கேட்க்க கூட மாட்டாரு. ஒரு ஆணியையும் நான் புடுங்க முடியாது. எனக்கான முடிவுகளையும் அவரே! எடுப்பார். அவர் பதவில இருக்குறவரைக்கும் இதுதான் நிலைமை” வருத்தமாக அருள் முடிக்க,
“அப்போ அவருக்கு என் கல்யாண விஷயம் தெரியாது அப்படித்தானே!” பேச்சை மாற்றினான் கிருஷ்ணா.
கைக்கடிகாரத்தை ஒருதடவை பார்வையிட்ட அருள்வேல் “இந்நேரம் விஷயம் அப்பா காதுக்கு போய் இருக்கும்” என்று கண்ணடித்து சிரிக்க கிருஷ்ணாவும் புன்னகைத்தான்.
விளக்கேற்றி விட்டு வந்த கோதையை அழைத்துக்கொண்டு கிருஷ்ணா யசோதாவின் அறைக்கு செல்ல கோபமாக கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களுக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள் யசோதா.
பெரிய மகனின் திருமணத்தை விமர்சையாக செய்ய வேண்டும் என்று நினைத்திருக்க, அவன் திருமணம் ஊரில் இக்கட்டான சூழ்நிலையில் நடந்தேறி இருந்தது.
சரி சின்ன மகனின் திருமணத்தையாவது தனது ஆசைபோல் விமர்சையாக செய்யலாம் என்று பார்த்தால் எவளையோ! காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு வருகிறானாம். ஏன் சொல்லி இருந்தால் பண்ணி வச்சி இருக்க மாட்டேனா?
“ஆமா உன் புருஷன் பண்ணி வச்சிருப்பான்” கணவன் வீடு வந்தால் என்ன ஆகுமோ! யசோதாவின் மனம் கேலி செய்ததோடு மகனை நினைத்து கவலையில் ஆழ்ந்த நேரம் கதவு திறக்கும் சத்தத்தில் வந்தது யார் என்று அறிந்துகொண்டவள் மெதுவாக திரும்ப
“அத்த…” என்று கோதை தாவிச்சென்று யசோதாவைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
“விடு விடு என்ன? யாருக்கு யார் அத்த?” யசோதா கத்த
“என்ன அத்த? உங்க பையன் அமெரிக்கால இருந்து போன் பண்ணா தினமும் அம்மா புராணம் தான். எங்க அம்மா இப்படி அழகு அப்படி அழகு. அம்மா சமையல் இப்படி இருக்கும். இங்க அமெரிக்கால சாப்பாடே பிடிக்கல. எப்போ வீட்டுக்கு போறோம் அம்மா கையால சாப்பிடுறோம்னு இருக்கு. அம்மா மடில தூங்கணும். எப்போ பார்த்தாலும் உங்க பாட்டுதான். எனக்கே உங்க பையன விட்டுட்டு உங்கள லவ் பண்ண தோணுது. நீங்க என்னனா என்ன மருமகளே! இல்லனு சொல்லுறீங்க போங்க அத்த உங்க கூட டூ” கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு கோதை பேச
“இது என்னடா புதுப் புரளியா இருக்கு” என்றது கிருஷ்ணாவின் மைண்ட் வாய்ஸ்.
“பேசுனது எல்லாம் நம்மள பத்தி. அம்மாவ பத்தி ஒரு வார்த்த பேசல. முதல்ல நீ இவ கிட்ட பேசவே இல்ல” அவன் மனசாட்ச்சி நியாபகப்படுத்த
“ஆமா எதுக்கு இந்த பிட்டு?” கிருஷ்ணா யோசிக்கும் போதே!
யசோதா மகனை முறைத்தவாறு “உன்ன பத்தி என் கிட்ட இவன் ஒண்ணுமே! சொல்லலமா?”
“அப்படியா? அப்போ என்ன லவ் பண்ணுறது விட உங்க மேலதான் லவ் அதிகமா இருக்கும் அதான் உங்கள பத்தி பேசிகிட்டு இருந்திருக்கான்” என்று கோதை கிருஷ்ணாவை முறைக்க,
“ஆகா.. நம்மள எல்லா பக்கமும் கோர்த்து விடுறாளே!” என்றவனோ! பதில் சொல்ல முடியாமல் இளித்துக்கொண்டிருந்தான்.
இங்கே தனது சின்ன மகனின் திருமண விஷயம் கேள்விப்பட்டு முதலமைச்சர் கனகவேல் ராஜா வீட்டுக்கு விரைந்து வந்துகொண்டிருந்தார். 

Advertisement