Advertisement

அத்தியாயம் 5
இரண்டு வருடங்களுக்கு முன்
கிருஷ்ணா மேற்படிப்புக்காக அமேரிக்கா செல்ல  வீட்டாரிடம் விடைபெற்று விமான நிலையத்துக்கு தனியாகத்தான் வந்திருந்தான்.
அவனை வழியனுப்பி வைக்க, அவன் தந்தையால் கண்டிப்பாக வர முடியாது. அன்னை யசோதாவுக்கு சின்ன மகனை பிரியும் துக்கம் தாங்க முடியாமல் அழுது கரைவதால் க்ரிஷ்ணாவே! வர வேண்டாம் என்று விட்டான்.
அண்ணன் அருள்வேல் ராஜா வருவதென்றால் தந்தை பாதுகாப்பு படை இல்லாமல் அவனை அனுப்ப மாட்டார் என்பதால் விமான நிலையத்தில் வீணான பிரச்சினைகள் எழும் என்று தவிர்த கிருஷ்ணா.
“மினிஸ்டர் ஆக முதல்லயே! இந்த பில்டப்பு ஆகிட்டா மவனே! உன்னயெல்லாம் கைல பிடிக்க முடியாது போலயே!” என்று கட்டியணைத்தவாறே! நடக்க இருக்கும் தேர்தலுக்கு வாழ்த்து கூறியவாறு அண்ணனிடமிருந்து விடைபெற்றான்
காலேஜ் வாழ்க்கை முடிந்த கையேடு மேற்படிப்பு. நண்பர்களை பிரிந்து வீட்டாரை பிரிந்து இந்த இரண்டு வருடமும் வெளிநாட்டில் எவ்வாறு தனியாக இருக்கப் போகிறேன் என்ற சிந்தனையில் விமான நிலையத்தில் தனக்கான அழைப்பு வரும்வரை அமர்ந்திருந்தான் கிருஷ்ணா.
அவனை சிந்திக்க விடாது அவன் அலைபேசி தொல்லை செய்ய வத்சலாம்மா என்று காட்டவும் “அம்மா…” என்றவாறே அலைபேசியை இயக்கி காதில் வைத்தவன் வத்சலாவோடு உரையாட ஆரம்பித்திருந்தான்.
வத்சலா கனகவேல் ராஜாவின் முதல் தாரமாக இருந்தாலும், கிருஷ்ணா யசோதாவை “அம்மா” என்று அழைப்பது போல் எந்த பாரபட்சமும் பாராமல் வத்சலாவையும் “அம்மா” என்றுதான் அழைப்பான்.
வத்சலா கனகவேல் ராஜாவின் முதல் தாரம் மட்டுமல்ல யசோதாவின் கூடப் பிறந்த அக்காவும், அருள்வேல் ராஜாவை பெற்ற அன்னையும் கூட. {என்று நாம் அறிந்ததுதான். இதயத்தில் காதல் பூத்தது உன்னால் படிக்கவும்}
“ஏன் டா.. கிருஷ்ணா பேருதான் அந்த மாய கிருஷ்ணாவோட பேர வச்சிருக்க, ஆனா உனக்கும் உங்கண்ணன் போல பொண்ணுகள மயக்குற வித்த தெரியல. உங்க அண்ணனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பார்க்கலாம்னு பார்த்தா அவன் மசிய மாட்டேன்குறான். நீ எப்படி? சீக்கிரம் கல்யாணமாவது பண்ணிக்கிறியா? எனக்கென்னமோ! வெளிநாட்டுல இருந்து வரும் போது வெள்ளக்காரிய கையோட கூட்டிகிட்டு வருவான்னு தோணுது” வத்சலா கிண்ட செய்து கொண்டிருக்க,
“வெள்ளைகாரியா? நமக்கு எப்பவும் நம்மூர்க்காரிதான். பார்க்க அப்படியே! தேவதை மாதிரி…” சிரித்தவாறே கிருஷ்ணா திரும்ப கையில் ஒரு சிறு பையை சுமந்தவாறு பச்சை நிறத்தில் சுடிதாரில் தேவதையாய் நடந்துவந்துகொண்டிருந்தாள் அழகான ஒரு இளம் பெண்.
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்? 
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்?
பிரம்மா ஓ.. பிரம்மா இது தகுமா? தகுமா?
ஐயோ… இது வரமா சாபமா… 
பிரம்மா ஓ.. பிரம்மா இது தகுமா? தகுமா?
ஐயோ… இது வரமா சாபமா… 
எதோ ஒரு விமானத்தின் அழைப்பு ஒலிக்கவும் தன்னை மீட்டவன்
“என்ன சொல்லும் போதே! சாமி வரம் கொடுக்குது? கனவு ஏதும் காணுறேனா?. சே பாட்டு வேற மைண்ட்ல கண கொடூரமா ஒலிக்குது. தேவதை மாதிரி இருக்கா… சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே! என்று பாடமா என்ன பாட்டு இது?” தன்னையே! நொந்து கொண்டவன் அறியவில்லை பார்க்க தேவதை போல் இருந்தாலும் அவள் ஒரு ராட்ச்சசி என்று. அவன் மனது அவளை குறித்து சரியாகத்தான் பாடி வைத்திருக்கிறது என்றும். 
கிருஷ்ணா மௌனமாக வத்சலா மறுமுனையில் கத்திக்கொண்டிருக்க, “ம்மா… உங்க மருமகள் பார்த்துட்டேன். இருங்க அவ கிட்ட கடல போட்டுட்டு வரேன்”
“என்ன?”
“ச்சி… பேசிட்டு வரேன்..” அலைபேசியை அனைத்தவாறே “எத்தன பொண்ணுகள பேசியே! கவுத்து இருக்கோம். ஏன் ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன் சும்மா பட்டய கிளப்ப மாட்டேன்” தற்பெருமை பாடியவாறே கிருஷ்ணா அவளை நெருங்கி இருக்க அவளோ அவனை கண்டுகொண்டாளில்லை.
கிருஷ்ணா அவள் எதிரே வந்து நிற்க அவள் மறுபுறம் திரும்பி யாரையோ! தேடலானாள். அது கிருஷ்ணாவின் கவனத்தில் இல்ல. மீண்டும் கிருஷ்ணா அவள் முகம் பார்த்து நிற்க வந்து நின்றான். அவளோ! ஒரு சுற்றி சுற்றி மீண்டு இருந்த நிலைக்கு வர கிருஷ்ணாவும் “யப்பா… ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறாளே!” என்றவாறு அவள் முன்னாடி வந்து நிற்க அவள் அவனை ஏற இறங்க பார்த்து விட்டு கடந்து சென்று விட்டாள்.
ஆள் காட்டி விரலை தன் முகத்துக்கு நேராக நீட்டியவன் “இது உனக்கு தேவையா? அவமானம், அசிங்கம். உன்ன பார்த்து காலேஜ்ல எத்தனை பொண்ணுக ஜொள்ளு விட்டிருப்பாளுங்க இவ என்ன கண்டுக்காம போறா?…. விடக் கூடாது பின்னால போ…” தனக்கு தானே கூறியவன் பின்னால் செல்ல அவளின் அலைபேசி அடித்தது.
அலைபேசி அடிக்க பேசும் எண்ணம் இல்லாமல் அதை வெறித்துக்கொண்டிருப்பவளை பார்த்து “என்னங்க போன் அடிக்குது எடுத்து பேசாம என்ன யோசிக்கிறீங்க?” என்றவாறே கிருஷ்ணா அவள் கையிலிருந்த அலைபேசியை பிடுங்காத குறியாக வாங்கி இயக்கி நீட்ட அவளோ! சைகையால் தன்னால் பேச முடியாது என்று சொல்ல அதிர்ச்சியடைந்தான் கிருஷ்ணா.
“ஊமையா…” அவனை அடுத்து சிந்திக்க விடாது “அம்மா… ராதை… ஏர்போர்ட் போய்ட்டியா? பெங்களூர் பிளைட் கரெக்ட் டைமுக்கு கிளம்பிடும் இல்ல. அப்பா வராதததுக்கு மன்னிச்சிக்கமா…” என்று கண்ணபிரான் சொல்வது கேக்க கிருஷ்ணா பதில் சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் நேரம் பெங்களூருக்கான விமான அழைப்பு வரவே! கண்ணபிரானும் பத்திரமாக செல்லுமாறும், வீட்டுக்கு சென்ற பின் போன் பண்ணுமாறும் கூறி விட்டு அலைபேசியை துண்டித்திருந்தார்.
கிருஷ்ணா தன் மனம் கவர்ந்தவளுக்கு குரல்வளம் இல்லையே! என்ற கவலையியல் இருக்க, அவளோ! அவன் கையில் இருந்த தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு “லூசா நீ?” என்று பார்த்து விட்டு அவனை கடந்து சென்றாள்.
அவளின் பார்வையின் அர்த்தமெல்லாம் கிருஷ்ணாவை அடயவில்லை. இவ்வளவு அழகான பெண்ணுக்கு கடவுள் குரலை மட்டும் ஏன் கொடுக்காம விட்டான். கடவுள் ஒரு சுயநலம் பிடித்தவர். படைப்புகளிடம் பாரபட்சம் பார்ப்பவர் என்று திட்டித்தீர்க்கலானான். அவளுக்கு மட்டும் பேச முடியும் என்று அவன் அறிந்திருந்தால் “ஐயோ… நீ அவளை ஊமையாவே! படைச்சி இருக்கலாம்” என்று வேண்டி கொண்டிருப்பானோ! என்னவோ! விதி யாரை விட்டது அவளிடம் மாட்டிக்கொண்டு கடைசிவரை அவன் வாழ்க்கை அவள் கையில் என்று முடிவாகி இருந்தது.
வாரணமாயிரம் படம் பார்த்து விட்டு எங்கே! என் மாலினி என்று அலைந்து திரிந்தவனுக்கு மாலினியை சந்தித்த பின்னும் காதல் வரவில்லை. இவள் பெயர் ராதை என்று அறிந்து கொண்டவனுக்கு குஷியோ! குஷி.
பெயர் பொருத்தம் அப்படி இருக்க, “கிருஷ்ணாக்கு என்னைக்கும் ராதைத்தான்” என்று முணுமுத்தவன் தன்னை கிருஷ்ணா பரமாத்மாவாகவே! நினைத்து விரல்களை புல்லாங்குழல் போல் வைத்து ஊதுவது போல் பாவனை செய்தவாறு அவளை பார்க்க, அவளோ “சரியான லூசு” என்று சிரித்தவாறு இவனை திட்ட, அவள் கேலிப்புன்னகை அவனுக்கு நாணப் புன்னகையாய் தோன்றி தன்னை காதலிக்க அவள் சம்மதம் சொல்லி விட்டது போல் உணர்ந்தான்.
பேச முடியாதவளுக்கு எதற்கு அலைபேசி என்றும் அவன் சிந்திக்கவில்லை. அவளால் பேச முடியாது என்றால் வீட்டார் தொடர்பு ஏற்படுத்தாது குறுந்செய்தி தானே! அனுப்புவார்கள் என்றும் சிந்திக்கவில்லை. சிந்தித்திருந்தாலும், அவனே! அதற்கு காரணங்களை கண்டு பிடித்திருப்பான். சந்தேகம் கொள்ளும் மனநிலையில் கிருஷ்ணா இல்லை. அந்த தேவதை பெண்ணின் அழகில் தன்னிலை மறந்து நின்றிருந்தான்.
பெங்களூரு செல்லும் விமானத்துக்கான வரிசையில் அவள் நின்றுகொண்டிருக்க, தூரத்திலிருந்து அவளையே! பாத்திருந்தவன் இன்னும் சற்று நேரத்தில் அவள் பெங்களூர் விமானத்தில் ஏறி சென்று விடுவாள் அப்படி சென்று விட்டால் அவளை சந்திக்கவும் முடியாது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு அவனும் இந்தியாவுக்கு வர முடியாது. இது காதலா என்றும் தெரியாது. ஆனாலும் ஆள் மனம் அவளை விடாதே! என்று கூச்சலிட்டுக்கொண்டிருக்க, அவன் வாட்ஸ் ஆப் என்னை ஒரு தாளில் அவசரமாக எழுதியவன் ஓடிச்சென்று அவள் கையில் திணித்து விட்டு கண்களாளேயே! பதில் அனுப்புமாறு கண்சிமிட்டியவன் அவளிடமிருந்து விடைபெற்றான்.
அன்று விமானத்தில் அமேரிக்கா பறந்தது அவனது உடல் மட்டும்தான். உள்ளம் மட்டும் அவளை சுற்றிக்கொண்டிருந்தது. அமேரிக்கா சென்று தன்னை நிலைப்படுத்திக்கொள்ள ஒரு வாரத்துக்கும் மேல் தேவை பட்டிருக்க, அவளிடமிருந்து வரும் குறுந்செய்திக்காகவும் காத்திருக்கலானான் கிருஷ்ணா.
அவளிடமிருந்து வரும் குறுந்செய்தி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த கிருஷ்ணரும், ராதையும் என்னதான் காதலித்தாலும் கடைசியில் ஒன்று சேராதது போல் தானும் அவளோடு சேராமல் போய் விடுவேனோ! என்று அச்சப்படவும் ஆரம்பித்தான். 
அவன் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு கரைந்துகொண்டிருக்கும் பொழுதுதான் அவன் எதிர்பார்த்த அந்த குறுந்செய்தியும் வந்தது. ரொம்பவும் உரிமையோடு “ஹாய் நல்லா இருக்கியா? என்ன பண்ணுற? அமெரிக்க போய் செட்டில் ஆகிட்டியா? படிப்பெல்லாம் எப்படி போகுது? நல்ல சாப்பாடு கிடைக்குதா? கிளைமேட் எப்படி இருக்கு? எங்க தங்கி இருக்க? உன் காலேஜுக்கு எவ்வளவு தூரம்? எப்படி ட்ராவல் பண்ணுற?” கேள்விக்கணைகளை கண்டு கிருஷ்ணாவுக்கு அவள் மீது மேலும் காதல் பெருகியது.
புன்னகைத்தவன் அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அனுப்ப அப்படியே! அவர்களது காதலும் வளர்ந்தது. கிருஷ்ணாவை பொறுத்தவரையில் அவள் ஊமை. அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி பேசுவது சாத்தியமில்லை குறுந்செய்தி மட்டும்தான். என்ன நேர வித்தியாசம் காரணமாகவும், இருவரும் படிப்பதனால் ஒழுங்காக பேச முடியவில்லை.
கடிதம் எழுதுவது போல் ஒருவர் அனுப்பும் குறுந்செய்தியை பார்த்து மற்றவர் பதில் அனுப்பிக் கொண்டிருக்க, கொஞ்சம் மெதுவாகத்தான் அவர்களது காதல் நகர்ந்தது.
அதுவும் சில நாட்கள் எக்ஸாம்ஸ் இருக்கு, எஸைமன்ட் இருக்கு என்று அவள் ஆன்லைன் வர மாட்டாள். க்ரிஷ்ணாவையும் படிப்பில் கவனம் செலுத்துமாறு வற்புறுத்த எந்தவிதமான காதல் கொஞ்சல்களும் அவர்களின் சம்பாஷணையில் இருக்கவில்லை. சாதாரண நண்பர்கள் பேசிக்கொள்வது போன்றுதான் இருந்தது.
இரண்டு வருடங்கள் மனதில் அவளை சுமந்துகொண்டு பார்க்காமல், அவளை பார்த்தால் போதும் என்று இருந்தவனுக்கு அவளது திருமண செய்தி அதிர்ச்சி இல்லாமல் இருக்குமா?
“எனக்கு கல்யாணம் நீ வா” என்று அவள் அனுப்பி இருந்த குறுந்செய்தியை படித்தவன் வேறு எதையும் யோசிக்காமல் அவளுக்காக வந்து தாலியையும் கட்டி விட்டான். இவள் என்னவென்றால் அவனையே! யாரென்று அறியாதது போல் என்னவெல்லாம் பேசுகிறாள்.
“உண்மையிலயே! இவளுக்கு நான் யாரென்று தெரியாதா? இல்ல என்னிடம் விளையாடுகிறாளா?” கிருஷ்ணாவின் எண்ணங்கள் இவ்வாறு ஓடிக்கொண்டிருக்க, 
கிருஷ்ணாவை தான் எங்கு சந்தித்தோம் என்று உணர்ந்த நொடி கண்களை திறந்த கோதை அவனை தள்ளி விட்டு விலகி நின்றாள்.
“என்ன மேடம் இப்போவாச்சும் என்ன லவ் பண்ணுறது ஒத்துக்கிறீங்களா?” என்று கிருஷ்ணா புன்னகைக்க,
“ஏர்போர்ட்ல லூசு மாதிரி வந்து உளறிட்டு எதோ காகிதத்த திணிச்சிட்டு போயிட்ட இல்ல நீ. அதுக்கு அப்பொறம் நான் உன்ன சந்திக்கவே! இல்லையே!”
கோதை தன்னை சந்திக்கவே! இல்லை என்றதும் கிருஷ்ணா குழம்ப எல்லாம் இல்ல. அவனும்தான் அவளை சந்திக்கவில்லை. ஆனால் அவள் சொல்வதை பார்த்தால் அவனோடு அவள் பேசவே! இல்லை என்பது போல் இருந்தது. அவள் சொன்ன விதமும் “எனக்கு உன்னை பற்றி ஒன்றும் தெரியாது. எதுக்கு என் வாழ்க்கைக்குள் வந்தாய்?” என்பது போலவே! இருந்தது.
“அந்த தாள்ல என்ன இருந்ததுன்னு பார்த்தியா?” கிருஷ்ணா சந்தேகமாக கேக்க
“இல்ல. அத அப்போவே! தூக்கி போட்டுட்டேன்” உதடு சுளித்தாள் கோதை.
கோதைக்கு நன்றாக நியாபகம் இருந்தது. அப்பாவுடைய பிறந்தநாளுக்காக சென்னை வந்தவள் அந்த நாளை அவரோடு கழித்து விட்டு அடுத்தநாள் பெங்களூர் செல்ல வேண்டி இருக்க, பிறந்தநாள் அன்று அதுவுமா அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போனதால், என்ன வேண்டுதல் வைப்பது பரீட்ச்சை வேறு நெருங்குவதால் உடனே! தோன்றியதை அமுல் படுத்தி இருக்க, அன்று அவள் மௌன விரதம்.
அலைபேசி அடிக்கும் பொழுது அவள் அனுமதி இன்றி யாரோ! ஒருவன் அதை எடுத்து இயக்கியது மட்டுமல்லாது, கண்டபடி உளறிக்கொண்டிருக்க, கடுப்பானவள் நகர்ந்திருந்தாள்.
அன்று மட்டும் அவள் பேசி இருந்தால் அவன் காது ஜவ்வு கிழிந்திருக்கும். “அம்மா.. பேய்” என்று தலை தெறிக்க ஓடி இருப்பானோ! அவன் விதி இவளிடம் சிக்கி இருந்தது.  
தனது விமானத்துக்கு வரிசையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவளருகில் வந்தவன் ஒரு காகிதத்தை திணித்து கண்களாளேயே! எதோ! கூறிச்செல்ல, அத்தனை பேர் பார்க்க அவன் செய்த செயல் எரிச்சலூட்ட மனதுக்குள் அவனை வசைபாட ஆரம்பித்தாள் கோதை. 
“தூக்கிப் போட்டியா?” அதிர்ந்தான் கிருஷ்ணா.
“அப்போ அவனிடம் அலைபேசியில் உரையாடியது யார்? அவனுக்கு குறுந்செய்தி அனுப்பியவளோ! அவளது பெயர் ஊர் என்று எதையும் கூறவில்லை. தெரியாத எண்ணிலிருந்து வந்ததும், அதுவும் இந்தியாவிலிருந்து என்றதும் அது இவள்தான் என்று எண்ணி விட்டான்.
அப்போ என்னை காதலித்தது வேறு பெண்ணா? இல்ல. இல்ல நான் இவள காதலிக்கிறேன் என்று அறிந்துதான் உரையாடி இருக்க வேண்டும். அதனால்தான் இவளுக்கு திருமணம் என்பதை அவனுக்கு அறிவித்திருக்கின்றாள். கல்யாண மண்டபம் முதல் பத்திரிக்கைவரை எல்லாம் சரியாகத்தானே! அனுப்பி இருந்தாள். இதுவே! என்னிடம் வேறொரு பெண் பேசி இருந்தால் இவளுக்கு திருமணமாகப்போவதை மறைத்து இருப்பாள். பேசியவள் தன்னோடு சேர வேண்டும் என்று தானே! எண்ணி இருப்பாள்?  மாறாக இந்த கல்யாணத்தை நிறுத்தி எங்களது வாழ்க்கையில் யார் விளையாடி இருப்பார்கள்? அல்லது நாங்க சேரனும் என்று யார் நினைத்தார்கள்? இந்த குடும்பத்தை பழிவாங்கவா? அல்லது எங்க குடும்பத்தை பழிவாங்கவா? யாரை சந்தேகப்படுவது? ஒன்றும் புரியவில்லை” கிருஷ்ணாவின் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது.
கிருஷ்ணாவின் குழப்பமான முகம் கண்டு “ஆமா அப்படி என்ன அந்த காகிதத்துல இருந்தது” என்று கோதை கேட்க
“ஒண்ணுமில்ல” என்று தலையசைத்தான் கிருஷ்ணா.
அவனை பொறுத்தவரையில் அவன் சந்தித்தது, பார்த்தது, காதலித்தது எல்லாம் கோதையை. ஏன் கல்யாணம் பண்ணதும் கோதையை. இதில் நடுவில் இன்னொருத்தி அவனிடம் அலைபேசியில் உரையாடி இருக்கிறாள் என்று கோதை அறிந்துகொண்டால் மனம் வருந்துவாள் என்று கிருஷ்ணா அதை பற்றி சொல்லாது மறைக்க கோதையும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
“சரி இப்போ சொல்லு எதுக்கு என் கழுத்துல தாலி கட்டின?” என்று கோதை மீண்டும் கேட்க,
“அதான் சொன்னேனே! காதலிக்கிறேன்னு” கிருஷ்ணா சாதாரணமாக சொன்னாலும் விளக்கமளிக்க முனையவில்லை.
அவன்தான் அவளை காதலிக்கின்றானே! ஒழிய அவள் அவனை காதலிக்கவில்லை என்று தெள்ளத் தெளிவாக புலப்பட்டு விட்டது.
காதலித்தவளை கைப்பிடித்த சந்தோசம் காணாமல் போய். அவன் பார்த்த, பேசிய உணர்ந்த அவன் காதலி முற்றிலும் வேறொருத்தியாக உருமாறி அவன் கண்ணெதிரே தோன்றி அவளை காதலிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருந்தது.
பெயர் பொருத்தம் கூட நல்லா சூப்பரா பொருந்துதுனு சிலாகித்தவனுக்கு சப்பென்றானது. எந்த பொருத்தமும் இருப்பது போல் தெரியவில்லை. அவன் மனதுக்கு பிடித்த உருவத்தை தவிர. 
சத்தமாக சிரித்தவள் “என்னது? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஏர்போர்ட்ல பார்த்ததை காதல்னு சொல்லுறியா?” ஒரு நம்பாத பார்வை பார்த்தவள் “எந்த நம்பிக்கைல என் கழுத்துல தாலி கட்டின? நான்தான் உன்ன காதலிக்கவே! இல்லையே! நான் மட்டும் உன்ன காதலிக்கல நீ பொய் சொல்லுறான்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தானு வை. உன்ன தூக்கி உள்ள வச்சி இருந்திருப்பாங்க” சிரித்தவாறே மிரட்ட
அவளுடைய மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவனா கிருஷ்ணா “சி.எம் பையனையே! தூக்கி உள்ள வைப்பாங்களா? அப்படியே வச்சாலும் எவ்வளவு நிமிஷம் உள்ள இருப்பேன்னு நினைக்கிற?” தாடையில் கைவைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவன் “குடும்பம் நடாத்த யாராவது ஒருத்தங்க லவ் பண்ணா பத்தாதா? எல்லாரும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிறாங்களா?” கோதை பேசியதில் கடுப்பானவன் கூடுதலாக பேசி வார்த்தைகளை விட
“ஒஹ்.. ஓஹ்.. என் இஷ்டமில்லாம என் கழுத்துல தாலி கட்டினது போல என் இஷ்டமில்லாம என்ன தொட வேற செய்வியா? எங்க தொடு பார்க்கலாம்?” கோதை சீற
“ஏம்மா.. நாம் கிஸ் பண்ணும் போது நல்லா கோப்ரேட் பண்ணிட்டு இப்படி பேசக் கூடாது” நின்ற இடத்திலிருந்து அசையாது பதில் சொன்னான் கிருஷ்ணா.
கோபத்தில் முகம் சிவந்திருந்தவள் சட்டென்று வெட்கத்தால் முகம் சிவந்தவாறே “ஆ.. அது வேற…” என்று இழுத்தாள் கோதை.
“அப்போ கிஸ் பண்ணா குழந்தை பிறக்காதா? வேற என்னவெல்லாம் பண்ணனும்?” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவளிடமே! கேட்க
“என்ன இவன் முரட்டு நைன்டீஸ் கிட்டா இருக்கான். இவனுக்கு நாம பாடம் எடுக்க வேண்டி இருக்குமோ!” என்று சந்தேகமாக பார்க்க கிருஷ்ணாவின் உதட்டில் மலர்ந்த கள்ள சிரிப்பைக் கண்டு கொண்டவள்
“அடப்பாவி… என் வாய புடுங்கப்பாக்குறியா? சிக்குவேனா?”
“ஐயோ.. ஐயோ.. நான் மோசம் போய்ட்டேன். இவன் என்ன கிஸ் பண்ணிட்டான். எனக்கு இப்போ கொழந்த பொறக்க போகுது” என்று கோதை கத்த
அவள் வாயை பொத்திய கிருஷ்ணா “அம்மா தாயே! என் மானத்த வாங்காத, மொதல்ல வெளிய போ…” என்று விரட்ட
“அந்த பயம் இருக்கட்டும்” என்று மிரட்டியவள் கதவை திறக்க அவள் தோழிகள் கதவில் சாய்ந்தவாறு இவர்கள் பேசியவைகளை ஒட்டுக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தனர்.
கோதை கதவை திறந்த நொடி கவிதாவும், இன்பாவும் அவள் மீது விழ கோதை பின்னால் சரிய கிருஷ்ணா அவளை தாங்கிப் பிடித்திருந்தான்.
“கூறு கெட்ட குப்பைகளா.. கதவை பூட்டிக்கிட்டு பேசுறதே! யாரும் கேட்டுடக் கூடாது. பார்த்துடக் கூடாதுனு என்னங்கடி.. இப்படி அசிங்கப்படுத்திட்டீங்க?” கிருஷ்ணாவின் மேல் சாய்ந்தவாறே தோழிகளை  வசைபாடலானாள் கோதை.
நண்பர்கள் என்றாலே! இப்படித்தான் செய்வார்கள் என்று கிருஷ்ணா அறியாததா? அவனது நண்பர்களும் அப்படித்தானே! ஆனாலும் கோதையோடு பேசியதை இவர்கள் கேட்டு விட்டார்களோ! என்ற சிறு அச்சம் எட்டிப்பார்க்க கோதையை தூக்கிவிட்டவாறே தோழிகளை முறைத்துப் பார்த்தான்.
அசடு வழிந்தவாறே! “நான் வேண்டாம்னு தான் சொன்னேன் அண்ணா.. இதுங்கதான் கேக்கல. குட்டி போட்ட பூன மாதிரி கதவு கிட்டயே சுத்திகிட்டு நின்னாளுங்க” சித்ரகலா பயந்தவாறு சொல்ல 
“ஐயோ.. நாங்க ஒன்னும் கேக்கல. கோதை அப்பா வேற போன் பேச வந்ததால நாங்க அந்த பக்கம் போயிட்டு அவர் கிளம்பின உடனே! கதவு கிட்ட வந்தோம் அப்போன்னு பார்த்து இவ கதவை திறந்துட்டா” என்று இன்பா பாய்ந்து சொல்ல
“ஆமா ஆமா ஏதோ கொழந்த பொறக்க போகுதுனு மட்டும் கேட்டிருச்சு” என்று கவிதா சிரித்தாள்.
“ஐயோ இந்த பக்கிங்க எத கேக்க கூடாதோ! அத கரெக்ட்டா கேட்டிருச்சுதுங்களே! இப்போ என்ன சும்மா விடாதே! ஓட்டு ஓட்டுனு ஓட்டி தள்ளுவாங்களே!” கோதை என்ன சொல்வதென்று முழிக்க
தன் மனையாளின் முகம் கண்டு சிரிப்பை அடக்கிய கிருஷ்ணா “ஆமா சிஸ்டர் இன்னிக்கிதான் கல்யாணமாக்கிருச்சு அதுக்குள்ள என்ன ரூமுக்குள்ள தள்ளிக்கிட்டு வந்து எத்தனை கொழந்த பெத்துக்கலாம்? எப்போ பெத்துக்கலாம் என்று டாச்சர் பண்ணுறா” என்று கோதையை மேலும் கோர்த்து விட பல்லைக் கடித்தாள் கோதை.
“ஆமா நாங்க என்ன படிக்கலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கோம். இவ சி.எம் பையனையே! கைக்குள்ள போட்டுக்கிட்டா இல்ல” பொறாமை பொங்க கவிதா சொல்ல
“ஆகா… ரூட்டு வேற மாதிரி போகுது நாம கழண்டுக்குவோம்”  முழித்த கிருஷ்ணா போகிற போக்கில் “ரொம்ப நேரம் எடுத்துக்காத பேபி சீக்கிரம் வந்துடு” என்றது மட்டுமல்லாது கோதையை மெலிதாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
   “அடப்பாவி இப்படி கோர்த்து விட்டு போறானே! இவளுங்க வச்சி செய்வாலுங்களே!” கோதை நினைத்து முடிக்க வில்லை தோழிகள் மூவரும் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவளை முறைத்தவாறு நின்றிருந்தனர்.
கிருஷ்ணா புன்னகை முகமாக வெளியே! வருவதை கண்டு வசந்த் ஓடி அவனருகில் வந்து பேச ஆரம்பிக்க, யுவனும் சேர்ந்துகொண்டு கிருஷ்ணாவின் காதல் கதையை கேட்க ஆரம்பித்தான்.
அவனை காப்பது போல் அங்கு வந்த கண்ணபிரான் அவனை மட்டுமல்லாது “அபி போய் ராதையையும் கூட்டிட்டு வா… கல்யாணமாக போகுதுனு காலைல இருந்து ஒன்னும் சாப்பிடமா இருக்கானு புலம்பி கிட்டே! இருந்தியே! அவளுக்கு இருந்த டென்ஷன் இப்போ இருக்காது. நல்லா சாப்பிடுவா” என்று கோதையையும் தோழிகளிடமிருந்து காப்பாத்தி விட
கோதையின் பெயரை யார் அலைபேசியில் ராதை என்று மாற்றி கூறினார் என்று கிருஷ்ணாவுக்கு புரிய “யோவ் மாமா ரெண்டு பொண்டாட்டிய கட்டின அதுல எந்த குழப்பமும் இல்லல? பொண்ணுக பேர மட்டும் ஏன்யா…  மாத்தி சொல்லி என் உசுர வாங்குற?”  ,மனதுக்குள் மாமனாரை முறைக்கலானான் கிருஷ்ணா.
“அப்பா இனிமேலாவது அக்காங்க பேர சரியா சொல்லுங்க பாருங்க மாமா முறைக்குறாரு” வசந்த் சிரிக்கலானான்.     

Advertisement