Advertisement

அத்தியாயம் 18

 

அருள்வேல் தன்னிடம் அலைபேசியில் கத்தியதும் யோசனையில் ஆழ்ந்திருந்தார் கனகவேல்.

 

அருள்வேலுக்கு அரசாளும் யோகம் இருந்தாலும் அரியணை ஏறும் ஜாதகமில்லை என்று தான் கனகவேல் ராஜா கிருஷ்ணாவை முதலமைச்சர் அரியணையில் அமர்வித்து பார்க்க ஆசை கொண்டார்.

 

கிருஷ்ணாவின் ஜாதகத்துக்கு பொருத்தமான ஜாதகம் என்பதனால் கோதாண்டத்தின் ஒரே மகளான மாலினியை திருமணம் செய்து வைக்க முயன்று தோற்றவர் அமைதியாக இருக்கவில்லை. கிருஷ்ணாவுக்கு பொருத்தமான ஜாதகக்காரியை தேடிக்கொண்டிருந்த அதே சமயம் கிருஷ்ணாவை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேறு வழிகள் இருக்கின்றனவா? என்றும் யோசிக்கலானார்.

 

ஜாதகத்தையும், ஜோஷியத்தையும் நம்பி இருக்கும் கனகவேல் ராஜா ஒன்றை மறந்தார். அது கிருஷ்ணாவுக்கு அரசியலில் இஷ்டமில்லை என்பதை.

 

அமெரிக்கா செல்லும் முன்பாகவே! மகனை அழைத்து கட்ச்சி உறுப்பினராக சேர்ந்து விடு, இளைஞ்சர் அணி தலைவராகலாம் என்று ஆசை வார்த்தைக் காட்டிப் பார்த்தார் கனகவேல். கிருஷ்ணா எதற்கும் அசையவில்லை. அவன் இஷ்டப்படி அமெரிக்க சென்றான்.

 

அமெரிக்காவிலிருந்து வந்தவன் உடனடியாக கோதையை திருமணம் செய்து கொண்டது வேறு கனகவேல் ராஜாவுக்கு பெருத்த ஏமாற்றம் தான்.

 

மகன் காதல் திருமணம் செய்து கொண்டிருப்பான் என்று உடனடியாக கோதையின் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொன்னவருக்கு கண்ணபிரான் இரண்டு திருமணங்கள் செய்திருந்தாலும், கண்ணபிரானை குடும்பத் சொத்து, அபரஞ்சிதாவின் குடும்பத் சொத்து என்று தனியாக இருப்பதை அவர் வீடு வரும் முன் அறிந்து கொண்டார்.

 

மூத்த மகனை போல் ஒன்றும் இல்லாத இடத்தில் இளைய மகன் திருமணம் செய்ய வில்லை என்பது மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்க, கண்ணபிரானிடம் பேசும் விதத்தில் பேசி சொத்துக்களை எழுதி வாங்க எண்ணினார் கனகவேல். அது கோதையால் தடை பட்டது வேறு கதை.

 

பணம் முக்கியம்தான் அதே போல் கட்ச்சியும் ஆட்ச்சியில் இருப்பதும் முக்கியம் என்று ஜோசியரை வரவழைத்து அருள்வேல் மற்றும் கிருஷ்ணாவின் ஜாதகங்களை பார்கலானார்.

 

அருள்வேலின் ஜாதகத்தில் அவனுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை என்றார் ஜோசியர்.

 

ஏற்கனவே! கிருஷ்ணாவுக்கு ராஜ யோகம் இருப்பதை அறிந்திருந்த முதலமைச்சர் கனகவேல் ராஜா ஜோஷியரிடம் கேட்டது நடந்த திருமணத்தால் கிருஷ்ணா முதலமைச்சராக வாய்ப்பு இருக்கா? இல்லையா என்பதே!

 

அவரும் ஆராய்ந்து விட்டு ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு, முதல்ல ஒரு பரிகார பூஜை பண்ணனும். அப்படியே குலதெய்வத்துக்கும் பூஜை பண்ணிடனும்”

 

“குலதெய்வத்துக்கு பூஜை பண்ணத்தான் இப்போ அவன் பொண்டாட்டியோட ஊருக்கு போய் இருக்கான்” என்றார் கனகவேல்

 

“ரொம்ப நல்லதா போச்சு. பரிகார பூஜையையும் பண்ணிட்டா எல்லாம் சரியா நடந்திடுங்க ஐயா” என்றார் ஜோசியர்.

 

“அப்போ இருபத்தி அஞ்சு வயசுல கல்யாணம் நடக்கணும். அதுவும் பொருத்தமான ஜாதகம் கிடைக்கணும் என்று சொன்னாரே உங்க குருநாதர்” விலாவரியாக விசாரித்தார் கனகவேல்.

 

“உண்மைதான். ஆனா உங்க மகனோட ஜாதகம் அருமையான ஜாதகம். காம ஜாதகம் இந்த ஜாதகக்காரர்கள் நினைச்சதை நடத்திக்காம ஓயா மாட்டாங்க. போதாததற்கு சந்திரமங்கள யோகம் கூடி வருது திருமணம் நடந்திருக்கும் இந்த நேரத்துல பதவியும் அந்தஸ்தும் அவரை தானா தேடி வரும். ஆனா…”

 

“என்ன ஜோஷியரே!” கனகவேல் கவலையாக கேட்க

 

“யோகம் போலவே அதை தடங்கல் செய்யவும் தோஷமும் இருக்கு. இதெல்லாம் வேண்டாம் என்று அவர் ஒதுங்கிக் கொள்ளவும் கூடும்”

 

“அதுக்கு தானே பூஜை பரிகாரம் செய்யிறோம்” கனகவேல் தனது சந்தேகத்தை மீண்டும் முன்வைத்தார்.

 

“நாம என்னதான் பரிகாரம் செஞ்சாலும் கிரகங்களோட தாக்கம் இருக்கத்தான் செய்யுது ஐயா” என்று ஜோசியர் விடைபெற்று சென்றிருந்தார்.

 

ஜோசியர் சென்றதிலிருந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் கனகவேல். சின்ன மகனை பற்றி அவருக்கு நன்றாகவே! தெரியும். அவர் எதை சொல்கிறாரோ அதை அவன் நிச்சயமாக செய்ய மாட்டான். அரசியல் பக்கம் வர மாட்டேன் என்பவனை வலுக்கட்டாயமாக வரவழைக்க முடியாது. தந்திரமாகத்தான் அவனை உள்ளே கொண்டு வர வேண்டும்.

 

முதலில் கட்ச்சி உறுப்பினர்கள் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஏதுவான காரணத்தை கூறவும் வேண்டும். அதை செய்வது அவ்வளவு கடினமில்லை. பாதி பேர் ஜோசியம் ஜாதகம் என்று நம்புபவர்கள் தான். கூடவே! தேர்தலுக்காக வேலை பார்க்கும் பத்து பேர் கொண்ட குழு என்ன சொல்வார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

 

அடுத்து மக்கள் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டால் தானே! ஓட்டு போடுவார்கள். அருள்வேல் எனது பலம் என்றால் எனது மூளையே கிருஷ்ணா தான். அந்த மூளையே முதலமைச்சரானால் என் நாட்டு மக்களுக்கு இன்னும் சிறப்பாக சேவை செய்வான் என்று பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடும் என்று நம்பினார் கனகவேல்.

 

உறுப்பினர்களையும், மக்களையும் சமாளித்து விடலாம் கிருஷ்ணாவை எவ்வாறு சமாளிப்பது? என்று யோசனையில் இருந்தவருக்கு தானாக அமைந்தது அருள்வேல் மனைவியை காண ஊருக்கு சென்றதுதான்.

 

என்னதான் வெவ்வேறு தாய்க்கு பிறந்தாலும் அண்ணன் தம்பி பாசப்பிணைப்பை பற்றி நன்கு அறிந்திருந்த கனகவேல் மூத்த மகனிடம் கூறினால் தம்பியிடம் கூறிவிடக் கூடும் என்று அவன் ஊருக்கு போன நேரம் தலைமை மருத்துவரை அழைத்து பேசி இருந்தார்.

 

கோதாண்டம் பி.ஏவாக இருந்தாலும் உண்மையை உளறிவிடக் கூடும் என்று நெஞ்சு வலி வந்தது போல் தத்ரூபமாக நடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதலமைச்சர்.

 

“உங்க பசங்க வந்தா கேள்வி மேல கேள்வி கேப்பாங்க சார்” என்று தலைமை மருத்துவர் அஞ்ச, தீவிர சிகிச்சை பிரிவினுள் அமர்ந்தவாறுதான் தலைமை மருத்துவர் சொன்ன இடத்தில் கையொப்பம் போட்டுக்கொடுத்தார் முதலமைச்சர்.

 

கிருஷ்ணாவை வழிக்கு கொண்டு வரக் கூடிய ஒரே ஆயுதம் தன் மனைவி யசோதா தான். பெற்ற அன்னை கூறினால் மறுத்து விடுவானா அவன்.    

 

ஆனால் அவர் எதிர்பாராதது வத்சலாவும் அப்பாவும், மாமனாரும் ஊரிலிருந்து வருவார்கள் என்று. நடிப்புக்காக கட்டிலில் இருந்தவருக்கு வத்சலாவின் கண்ணீரும் குடும்பத்தார் அவர் மீது வைத்திருக்கும் பாசமும் கொஞ்சம் அசைக்கத்தான் செய்தது.

 

அவர் அறியாமளையே! வத்சலாவிடம் மன்னிப்பு கேட்டிருக்க, தனது திட்டத்தில் வத்சலாவையும் கூட்டு சேர்க்க எண்ணினார்.

 

மூத்த மகன் அரசியல் விவகாரங்களில் தலையாட்டி பொம்மை. அவர் சொல்லை மீற மாட்டான். எல்லாம் அவர் திட்டப்படிதான் நடக்கும் என்று இறுமாப்பில் இருந்தார் கனகவேல். ஆனால் அருள்வேலின் மனதில் என்ன ஓடுகிறது என்று அறியத் தவறினார் கனகவேல் ராஜா.  

 

கிருஷ்ணாவை வேற்பாளராக நிறுத்துவதாக கூறவும் அருள்வேலுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. அது பதவியின் மீதான ஆசையை விட, இந்த பதவியினால் தான் தந்தை தன்னை பெற்ற அன்னைக்கு துரோகம் இழைத்தார் என்று அவன் மனதில் ஆழமாக பதிந்திருக்க, அந்த பதவியில் தான் உட்காந்து தந்தையை ஆட்டிப் படைக்க வேண்டும் என்று அருள்வேல் தனக்கு தானே உறுதி மொழி எடுத்திருந்தான். ஆரம்பத்தில் தந்தையை கண்டால் அஞ்சியவன் போகப்போக தலையாட்டி பொம்மை போல் தன்னை மாற்றிக்கொண்டு அவருக்கு வலது கையாக இருந்து அரசியல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு சாணக்கியனாக உருமாறி இருந்தான்.   

 

நிச்சயமாக கிருஷ்ணா அரசியலுக்குள் வர மாட்டான் என்று உறுதியாக அறிந்துகொண்ட பின் தனது ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து அரசியல் பயணத்தில் எடுத்து வைத்திருந்தவனை செல்லா காசாக்கி தனது இளைய மகனை தேர்தலில் நிறுத்துவாரா தந்தை. அதையும் ஒரு கை பார்த்துடலாம் வெறி கொண்டு சீறினான் அருள்வேல்.

 

தம்பியாக இருந்தாலும் மோதி பார்ப்பது என்று முடிவு செய்தவன் கட்ச்சி உறுப்பினர்களிடம் சென்று “எப்படி அப்பா சொன்னதுக்காக ஒத்துக் கொண்டீங்க? அனுபவம் இருக்கும் என்ன விட்டுட்டு பொடிப்பய அவன தேர்ந்தெடுத்து இருக்கீங்க?” என்று சத்தம் போட

 

“தம்பி உங்க அப்பா பேச்சுக்கு நாங்க மறு பேச்சு பேச மாட்டோம் தம்பி” என்றனர் அவர்கள்.

 

அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களின் தொகுதியில் அவர்கள் நின்றால் வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்தால் மட்டும் அவர்களை கனகவேல் விலைக்கு வாங்கி  கட்ச்சியில் சேர்த்துக் கொள்வார். அப்படிப்பட்டவர்கள் கனகவேலுக்கு அடங்கித்தான் போவார்கள்.

 

அடுத்து என்ன செய்வது என்று கோபமாக அருள்வேல் கட்ச்சி ஆபீசில் அமர்ந்திருக்கும் பொழுது தடாலடியாக உள்ளே நுழைந்த கிருஷ்ணா அண்ணனின் சட்டையை பிடித்திருந்தான்.

 

“ஏன் டா இப்படி பண்ண? அண்ணன் அண்ணனு உன் மேல அளவுக்கடந்த பாசம் வச்சிருந்தேன். ஆனா நீ நான் அரசியல்ல உள்ள வரக் கூடாதுன்னு கேவலம் இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்க. உன் மேல பாசம் வச்சதுக்கு நல்லா செஞ்சிட்டல்ல நீ” ஆத்தரமும் கவலையும் கலந்த குரலில் பேச

 

அவனை தள்ளி விட்ட அருள்வேல் “அப்படிதாண்டா செய்வேன்.  அரசியல் பத்தி உனக்கு என்ன டா தெரியும்? எதுவுமே! தெரியாம தேர்தல்ல நின்னுடுவியா நீ? அதுவும் முதலமைச்சர் வேற்பாளராக?” கோபமாக கத்தினான் அருள்வேல்.

 

“அந்த ஆள் எதோ லூசுத்தனமாக பேசுறாரு. எனக்கு எப்பயும் அரசியல் ஆச இருக்கலைனு உனக்கு தெரியாதா? ஆனாலும் நீ என் வாழ்க்கையோட விளையாடி இருக்கக் கூடாது”

 

“ஆ… இப்போ சொல்லு அரசியல் ஆச இல்ல என்று. அந்த ஆளு நாமினேஷன் கொடுக்கும் போது எங்க இருந்த? அவர் கிட்ட போய் வாபஸ் வாங்க சொல்ல வேண்டியது தானே, என்னமோ நான் உன் வாழ்க்கையை கெடுத்தேன்னு சொல்லுற? அந்தாளும் உங்கம்மாவும், நீயும் தாண்டா எங்கம்மா வாழ்க்கையை கெடுத்தீங்க” ஆத்திரமும், கோபமும் கண்ணை மறைக்க வார்த்தையை விட்டிருந்தான் அருள்.

 

“வேண்டாம் அருள்வேல். நடந்த உண்மையெல்லாம் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் வீணா அம்மாங்கள பத்தி பேசி அவங்க மனச கஷ்டப்படுத்தாத, நீ இப்படியெல்லாம் பேசுறது தெரிஞ்சாவே! அவங்களால தாங்க முடியாது. ராமனும், லக்ஷ்மணனும் மாதிரி ஒத்துமையா இருக்கீங்க டா எங்க கண்ணே பட்டுடுமோனு பயமா இருக்கு டா… தெரிஞ்சிருந்தா ஸ்ரீராம், லக்ஷ்மணன் என்று அந்த பெயரையே உங்களுக்கு வச்சிருப்போம்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க மறந்துட்டியா?”

 

அருள்வேல் பேசியதில் கோபம் கொண்ட கிருஷ்ணா அண்ணா அண்ணா என்று அழைப்பதை மறந்து கோபத்தில் அண்ணனின் பெயரை கூறி இருந்தாலும் பொறுமையாக அண்ணனுக்கு புரிய வைக்க முயற்சி செய்யலானான்.

 

தம்பி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் வத்சலா கூறுவது போல ஒலிக்க அருள்வேலின் கண்கள் கலங்கியது. யசோதா இதுவரை அவனை பிரித்து பார்த்ததில்லையே ஏன் அக்கா மகன் என்ற எண்ணம் கூட வர விட்டதில்லை. சொல்லப் போனால் கிருஷ்ணாவை விட அவன் மீதுதான் அன்பாக இருப்பாள்.

 

கோபத்தில் என்ன பேசுகிறோம், யாரை பேசுகிறோம் என்பதை மறந்து பேசியவன் தன்னையே நொந்துகொண்டான். அவன் போராட்டம் தந்தையோடு அன்னைக்காக தான். இதில் கிருஷ்ணா அவனுக்கு உறுதுணையாக கண்டிப்பாக இருப்பான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணா முதலமைச்சர் ஆனால் என்ன? கண்டிப்பாக தான் நினைத்தது நடந்து விடும் அல்லவா? கண்கள் மின்ன தம்பியை ஏறிட்ட அருள்வேல் தம்பியை கட்டிக்கொண்டான்.

 

“டேய் கிருஷ்ணா நீ வேற்பாளரா நிக்கிற ஜெயிக்கிற, எங்க அப்பன செல்லா காசா ஆக்குற. அதுதான் எனக்கு வேணும். அத நான் பண்ண என்ன நீ பண்ணா என்ன? எங்க அம்மாங்களுக்கு பண்ணதுக்கு அவர் அனுபவிக்கனும் டா.. அந்த கோபத்துலதான் கட்ச்சி ஆளுங்கள பார்த்து உன்ன எப்படி தேர்ந்தெடுத்தாங்கனு சத்தம் போட்டேன். சாரி டா” கோபத்தின் உச்சியில் இருந்த அருள்வேல் கோபம் தனிய சிரித்த முகமாக பேசலானான்.

 

“நீ என்ன சொல்லுற? நான் வந்தது நீ என் வாழ்க்கைல விளையாடினது எதுக்காகன்னு கேட்க?” கிருஷ்ணா முறைக்க

 

“என்ன டா உளறுற?”

 

“நான் ஒன்னும் உளறல? நான் அமெரிக்கா போகும் போது உன்ன வர வேணாம்னு சொன்னேன். நீ வரலைனுதான் நானும் நினைச்சி கிட்டு இருந்தேன். நீ வந்தியோ! என்ன வேவு பாக்க ஆள் அனுப்பினியோ! நான் கோதைக்கு நம்பர் கொடுக்கிறத பார்த்துட்டு எனக்கு கோதை அனுப்புறது போல மெஸேஜ் பண்ணி காதலிக்கிறதா சொல்லி, அவளுக்கு கல்யாணம்னு என்ன வர வளச்சு உன் தலைமைல கல்யாணம் வேற பண்ணி வச்சிருக்க”

 

“டேய் என்ன டா என்னென்னமோ சொல்லுற?” அருள்வேல் திகைக்க

 

“இதெல்லாம் பண்ணது நான் அரசில்ல காலடி எடுத்து வைக்கக் கூடாதுனு தானே. உன் குட்டு உடைஞ்சதும் நல்லவன் மாதிரி பேசுறியா?”

 

“நான் தான் அரசில் உள்ள வர மாட்டேன் என்று தெரியும் இல்ல. அப்படி இருந்தும் எதுக்கு இப்படி பண்ண?”  பார்வையாலையே அண்ணனை எரிக்கலானான் கிருஷ்ணா.     

 

“டேய் எத வச்சிடா சொல்லுற? நான் தான் இதெல்லாம் பண்ணேன்னு” தான் கனவிலும் நினைத்து பார்க்காத ஒன்றை செய்ததாக சொல்லவும் முகம் சிவந்தான் அருள்வேல்.

 

“கோதையோட அப்பா உனக்கு கல்யாண பத்திரிக்கை அனுப்பி இருக்காரு அது போதுமே  அத போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருக்க”

 

“ஏன் டா கல்யாண பத்திரிக்கையை யார் வேணாலும் அனுப்பி இருக்கலாம் இல்ல டா..”

 

தொழில்துறை அமைச்சராக இருக்கும் அருள்வேலை கண்ணபிரான் திருமணத்துக்கு அழைத்திருந்தது பேனர் வைத்த செய்தி. அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொண்டிருக்கக் கூடும். அது இவ்வாறு தனக்கு திரும்பும் என்று அருள்வேல் கிஞ்சத்துக்கும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

“இருக்கலாம். ஆனா போன் நம்பர மாத்தி இருக்கலாம். போன மாத்தாம அந்த போனையே பாவிக்கிறியே! அதுக்கு வேற சிம் போட்டு ஆக்டிவ் பண்ணதும் மாட்டிக்கிட்ட” என்று கிருஷ்ணா சொன்னதும் அருள்வேல் தனது அலைபேசியை வெறிக்கலானான்.

 

“என்ன பேச்சையே காணோம். மாட்டிகிட்டதும் என்ன சொல்லுறதுனு யோசிக்கிறியா?” கடுப்பானான் கிருஷ்ணா.

 

“டேய் நான் ஏன் டா யோசிக்க போறேன். இந்த போன கொடுத்ததே அப்பா தான் டா… அதுவும் இன்னக்கி காலைல. கொடுக்கும் போதே எதோ வில்லங்கம்னு புரிஞ்சிருச்சு. என்ன வேவு பார்க்க ஏதாச்சும் டிவைஸ் செட் பண்ணி இருக்காரோன்னு செக் பண்ணிட்டு தான் ஆன் பண்ணாதே. ஆனா வில்லங்கம் வேற விதமா வச்சிருக்காரு” அருள்வேல் நெற்றியை தடவ

 

“அப்போ கோதை போல என் கூட பேசினது அப்பான்னு சொல்லுறியா? என்ன டா லூசுத்தனமா உளறுற” கிருஷ்ணாவுக்கு கோபம் எகிறியது.

 

“இரு டா இரு டா.. அவர் அப்படி நல்ல காரியமெல்லாம் செய்ய மாட்டாரு. எங்கயோ! தப்பு நடந்திருக்கு” யோசிக்கலானான் அருள்வேல்.

 

கனகவேல் யாரையாவது வைத்து கோதையியையும் க்ரிஷ்ணாவையும் ஒன்னு சேர்க்க முனைந்தாரா? அப்படி செய்ய காரணம் இல்லையே பொண்ணு கேட்டு திருமணம் செய்த்து வைத்திருக்கலாமே! கிருஷ்ணா மறுக்கலாம் என்று இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பாரோ என்ற சந்தேகம் சட்டென்று அருள்வெளின் மனதில் முளைக்கத்தான் செய்தது.

 

அப்படி செய்ய ஒரு வலுவான காரணம் இருக்க வேணும் இல்லையா? அது என்ன? யோசைத்தவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

 

“பண்ணுறதையும் பண்ணிட்டு நடிக்காத ஒத்துக்க” அண்ணனை முறைக்கலானான் கிருஷ்ணா.

 

முறைப்பதோடும், ஒரு சில வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதோடும் அவர்களது சண்டை முடிந்து விடும். கட்டிப்பிடித்து சண்டை போடுவதெல்லாம் கிடையாது. சின்ன வயதிலிருந்தே அவ்வளவு ஒத்துமையாக இருந்தததனால் சட்டென்று அடிதடிக்கு அவர்களால் செல்லவும் முடியவில்லை.

 

“டேய் லூசு தொம்பி… உன் கல்யாணம் எப்படி நடந்தது? அத பத்திரிக்கையிலும், டிவியிலும் வர விடாம பண்ணவன் நான். கல்யாண நியூஸ் வந்திருந்தாவே! உனக்கு எவனும் ஓட்டு போட மாட்டான். நான் மனஉளைச்சலுக்கு ஆளான மாதிரி நீயும் ஆகக் கூடாதுனு. காதல் திருமணம் எங்குறத மறச்சி ஜாதக  தோஷம் அதனால திடீர் திருமணம் என்று பத்திரிக்கைல ஒரு துண்டு செய்தியாதான் போட சொன்னேன். நீ அரசியல்ல இல்லாததால யாரும் உன்ன பெருசா கண்டுக்கல. இதுவே காதல் திருமணம் என்றால்? நொண்டி நொங்கெடுத்து இருப்பானுங்க”

 

அண்ணன் பேசப் பேச யோசனையில் கிருஷ்ணா விழ அருள்வேல் தொடர்ந்தான். “அது மட்டுமா? கோதை மாதிரி நான்தான் உன் கிட்ட பேசியதாக இருந்தா இருக்குற ஒரே ஆதாரம் இந்த போன் தான். அத கூடவே வச்சிக்கிட்டு சுத்துவேனா? அம்புட்டு அறிவில்லாதவனா நான்” 

 

“நீ பண்ணி இருந்தா இந்நேரம் எங்க அப்பாவை இல்ல மாட்டி விட்டிருப்ப” என்று கிருஷ்ணா சிரிக்க,

 

“எனக்கு என்னமோ! அந்தாளுதான் பண்ணி இருப்பாரோன்னு இப்போ சந்தேகமா கூட இருக்கு. ஆனா காரணம்தான் தெரியல” குழப்பமாக கூறினான் அருள்வேல்.

 

“அவர் பண்ணி இருந்தா ஒரே காரணம் தான் என் ஜாதகத்துல இருக்குற யோகம். ஆனா அதுக்கு இருபத்தி அஞ்சு வயசுல கல்யாணம் பண்ணனும்னு உளறிக்கிட்டு இருந்தாரு. கோதைக்கு திடிரென்று கல்யாண ஏற்பாடு நடந்துள்ள அவர் திட்டம் தவிடு போடி ஆகிருச்சா?

 

இத அவர் பண்ணலைனா? இந்த போன் அவர் கைக்கு எப்படி வந்திருக்கும்” கிருஷ்ணாவுக்கு மண்டை வெடித்து விடும் போல் இருக்க,

 

“வீட்டுக்கு போலாம். இத அவர் கிட்டயே கேட்கலாம்” என்ற அருள்வேல் தம்பியை அழைத்துக்கொண்டு வீடு சென்றான்.

 

அருள்வேல் கிருஷ்ணாவும் ஒன்றாக வருவதைக் கண்டு “என்ன காரியம் பண்ணி வச்சிருக்க அருளு.. உன் தம்பி முதலமைச்சராக்குறது உனக்கு பிடிக்கலையா? கட்ச்சி ஆபீஸ்ல போய் சத்தம் போட்டிருக்க? ஏன்டா இப்படியெல்லாம் பண்ணுற? இப்போ தான் நம்ம குடும்பம் ஒத்துமையாக்கிருச்சு. உன்னால நிம்மதி இலக்கணுமா?” புடவை முந்தானையால் கண்களை துடைத்தவாறு மூக்கை சிந்தினாள் வத்சலா.

 

கனகவேல் தனக்கு உடம்பு முடியாமல் போனதுக்கு காரணம் தனது ஜாதகத்தில் இருக்கும் தோஷம் தான் என்றும். ராஜயோகமுள்ள கிருஷ்ணா அரியணை ஏறினால் தான் தான் குணமடைவதாக ஜோசியர் கூறியதாக கூற மனைவிகள் இருவரும் அதை முழுமனதாக நம்ப ஆரம்பித்து தாங்கள் எப்படியாவது கிருஷ்ணாவிடம் பேசி சம்மதிக்க வைப்பதாக கூறியும் இருந்தனர்.

 

அண்ணனை அர்த்தமுள்ள பார்வை பார்த்த கிருஷ்ணா “நான் சொல்லல. நீ பேசினது தப்பு” என்று முறைக்க,

 

“மன்னிச்சுக்கடா..” கண்களாளேயே கெஞ்சினான் அண்ணன்.

 

“அப்பா எங்கம்மா? அது விசயமாத்தான் பேசணும்” அருள்வேல் சொல்ல

 

“ஏன்டா இப்படி பண்ற?” முதலிருந்து வத்சலா ஆரம்பிக்க

 

“அம்மா… நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வரும் பொழுதே தெரியாதா எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லனு. என்ன நீங்க கொழந்த மாதிரி அழுது கிட்டு கண்ண தொடைங்க” கிருஷ்ணா வத்சலாவை அணைத்துக்கொள்ள

 

“ரொம்பதான்” பொறாமையில் வெந்தான் அருள்வேல்.

 

“இவன் எப்பவும் அப்படித்தான் சிடு மூஞ்சி. உன்ன போல தன்மையா சொல்லுறானா பாரு” வத்சலா மூத்த மகனை முறைக்க,

 

“யாரு இவனா? என் மேலதான் எரிஞ்சு விழுறான் உன் கிட்ட தான் பாசமா இருக்கான் போல. நான் இவன பெத்தேனா? நீ இவன பெத்தியானு எனக்கு சந்தேகமா இருக்கு” என்றவாறு வந்தாள் யசோதா.

 

“வெளில போய் வந்த பசங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொடுக்கணும் என்று அறிவு வேணாம் என்ன? வெட்டி கத பேசிகிட்டு போங்க குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வாங்க” கிருஷ்ணா பொய்யாய் அதட்ட

 

“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிருச்சுடா. உங்க பொண்டாட்டிகள வேல வாங்குங்க. வந்துட்டானுங்க. வா..க்கா போலாம்” யசோதா முறைத்தவாறு அக்காவை அழைத்துக்கொண்டு சென்றாள்.

 

“வா முதல்ல போய் அப்பாவ பார்த்து பேசி இந்த பிரச்சினையை முடிச்சிக்கலாம்” என்று கிருஷ்ணா சொல்ல

 

“நீ கூட வா ஆனா எதுவும் பேசாத அவரே ஆரம்பிச்சு வைப்பாறு” என்றான் அருள்வேல்.

 

சொன்னது போல் கட்ச்சி உறுப்பினர்களிடம் அருள்வேல் பேசியதை வீடியோ ஆதாரமாகவே கனகவேல் கையில் இருக்க மூத்த மகனின் மேல் பாய தயாராக நின்றவர் இளைய மகனை கண்டதும் தன்மையாக விசாரிக்கலானார்.

 

சாணக்கியனான அருள்வேளுக்கு தெரியாதா அவரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று “நான் அப்படி பேசினதாலதான் யார் யார் உங்களுக்கு உண்மையா? நம்பிக்கையானவங்களா இருக்காங்கனு தெரிஞ்சது. இல்லனா…. நம்ம முதுக்கு பின்னாடி இருந்து குத்திட்டு போய்டுவாங்க” அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்ல கனகவேல் அசந்து போனார்.

 

“டேய் நானே பழம் திண்ணு கொட்ட போட்டவண்டா. நீ என்னையே மிஞ்சுடுவ போல இருக்கே. இனி உன் தம்பி முதலமைச்சர் ஆகுறத யாராலயும் தடுக்க முடியாது” என்று மூத்த மகனை கட்டிக்கொள்ள பல்லைக் கடித்தான் கிருஷ்ணா.

 

“டேய் அண்ணா செல்போன் புதுசா இருக்கு எப்போடா வாங்கின?” ஒன்றும் அறியாதவன் போல் கிருஷ்ணா கேட்க

 

“இன்னக்கி காலைல அப்பா தான் டா கொடுத்தாரு” என்ற அருள்வேல் தந்தை அறியாமல் கண்சிமிட்டினான்.
“அவனுக்கு மட்டும் போனெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கீங்க, முதலமைச்சராகப்போகும் எனக்கு ஒன்னும் இல்லையா?” சரியாக தூண்டில் போட்டான் கிருஷ்ணா.
தனியாக விசாரித்தால் கனகவேல் சரியான பதிலை சொல்ல மாட்டார். அவர் ஒழுங்காக பதில் சொல்லாமல் மழுப்ப நினைத்து சிறிதாக தடுமாறி குரலில் பிசிறு தட்டினாலும் கழுகுக்கு கண்ணாக கண்காணிக்க தயாராகத்தான் வந்திருந்தனர் இருவரும்.

 

“டேய் உனக்குத்தான் டா நான் செல் போன் வாங்கினேன். யாரோ உன் பிரெண்டு கிப்ட்டா உனக்கு செல்போன் அனுப்பி இருப்பான் போல. உனக்கு எதுக்கு ரெண்டு செல் போன் என்று உன் பிரெண்டு அனுப்பினத இவனுக்கு கொடுத்துட்டேன்” என்ற கனகவேல் கிருஷ்ணாவுக்கு வாங்கிய அலைபேசியை அவன் கையில் கொடுத்திருக்க, அண்ணனும் தம்பியும் முற்றாக குழம்பித்தான் போனார்கள்.

 

“கோதை பேசியது போல் பேசியது மட்டுமில்லாமல் அலைபேசியை வீட்டுக்கே அனுப்பி இருக்கிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்” என்று எண்ணிய கிருஷ்ணாவுக்கு ஒருவேளை தந்தை பொய் சொல்லுகிறாரோ என்ற எண்ணம் வர

 

“அப்பா நான் தேர்தல்ல எல்லாம் நிக்க மாட்டேன். எனக்கு பிஸினஸ்தான் செட் ஆகும். என் பிரெண்டு கிட்ட பேசிட்டேன். அவன்தான் இந்த செல்போனையே எனக்கு அனுப்பி இருக்கான். நீங்க தேர்தல்ல அண்ணனையே நிக்க வைங்க” என்று அருள்வேலின் கையிலிருந்த அலைபேசியை வாங்கிக் கொண்டு அவன்கைலிருந்த அலைபேசியை திணித்து விட்டு செல்ல கனகவேலுக்கு உண்மையிலயே நெஞ்சு வலி வந்திடும் போல் இருந்தது.

 

“டேய் கிருஷ்ணா நில்லு டா.. ஒரு நிமிஷம் நான் சொல்லுறத கேளுடா…” என்றவாறு அருள்வேல் கிருஷ்ணாவின் பின்னால் ஓடி இருந்தான். 

Advertisement