Advertisement

அத்தியாயம் 15
அருள்வேல் அன்பழகியை வண்டியில் இருத்தி வண்டியை கிளப்பி இருக்க,
“நாம எதுல போறது?” என்று வந்து நின்றாள் கோதை.
“நடராஜா சர்விஸ் தான்” என்றான் கிருஷ்ணா சிரிக்காமல்.
“எனக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு சொல்லாம சொல்லுறியா?” என்று கோதை கிருஷ்ணாவை மொத்தி எடுக்கலானாள்.
“டேய் அர்ஜுன்…” என்று கத்திய கிருஷ்ணா “ஏன் டி உனக்கு யாரு கோதை என்று பேர் வச்சாங்க” என்று கேட்டவாறே அவளை தடுக்க
“எங்க அப்பா தான் பேரு வச்சாரு” என்றாள் இவளும் புரியாமல்
“அதானே! பார்த்தேன். மூத்த பொண்ணுக்கு ராதை என்று அழகான பேர வச்சிட்டு சின்ன பொண்ணுக்கு சம்பந்தமே! இல்லாம கோதைனு வச்சி இருக்காரு” என்றவன் பாதையில் இறங்கி நடக்க அவனுக்கு பத்தடியில் முன்னால் இரு பாதுகாவலர்களும் பத்தடியில் பின்னால் இரு பாதுகாவலர்களும் நடந்து வந்துகொண்டிருந்தனர்.
“அதான் அழகா ரைமிங்கில வச்சிருக்காரே!” கோதை பெருமையாக சொல்ல
“ரைமிங்கா பேரு வைக்க சொல்லி யாரு அழுதா? வச்சாரும் வச்சாரு ஒழுங்கா கூப்புட்டு தொலைக்க வேண்டியது தானே! பேர மாத்தி கூப்பிட்டு என் வாழ்க்கைல இல்ல கும்மி அடிச்சிட்டாரு” முணுமுணுத்தவன் “ஏன்டி உங்க அக்காக்கு ராதை என்று பேரு வச்சவரு உனக்கு மீரா என்று வச்சிருக்கலாம் இல்ல. அதுவும் இல்லனா க்ரிஷ்னாக்கு பொருத்தமா மாலினி என்று அழகா வச்சிருக்கலாம் இல்ல. அது என்னடி பேரு கோதை” என்று மனைவியை சீண்டலானான்.
கோதை செய்யும் சேட்டைகளால் பாதிக்கப்பட்ட  கிருஷ்ணா என்னவோ பேர் மாறியதால் ஆள் மாறாட்டம் நடந்து அவனது கல்யாணம் நடந்தது போல் பேசி மனதை தேற்றிக்கொள்ள முயன்றான்.
உண்மையில் பெயர்தான் மாறியதே! ஒழிய ஆள் மாறாட்டம் நடக்கவில்லையே! அவன் காதலித்தது கோதையை தானே! என்ன ஒன்று ஊமை என்று நம்பி இருந்தான். இவ்வளவு பேசுவாள் என்று அறிந்திருந்தால் அவள் பக்கம் தலை வைத்தும் படுத்திருக்க மாட்டானோ! என்னவோ!
கல்யாணம் என்ற ஒன்று ஆன பிறகு அதை பற்றி எண்ணி வருந்தி என்ன பிரயோஜனம். கழுத்தில் மாட்டிய மத்தாளத்தை அடித்துதானே! ஆக வேண்டும்.
“எங்க அப்பா கனவா கண்டார் நீ எனக்கு புருஷனா வருவான்னு?” முறைத்தவள் “இப்போ உனக்கு என்ன பிரச்சினை? என் பேருதான் பிரச்சினையா?” 
“ஆமா… ” என்ற கிருஷ்ணா அவள் தோள் உரச நடக்க
“எனக்கு என் பேர் நல்லாத்தான் இருக்கு வேணும்னா நீ உன் பேர மாத்திக்க” என்றவாளோ! கிருஷ்ணாவின் முதுகில் அடித்து விட்டு ஓட்டம் பிடிக்க,
“வாய் வாய். இந்த வாய் மட்டும் உனக்கு இல்லனா உன்ன நாய் தான் தூக்கிட்டு போய்டும்” அவன் அவளை துரத்தலானான்.
இவர்கள் ஓட்டமும் நடையுமாக வீடு வந்திருக்க,  வண்டியை விட்டு இறங்கிய பின்னும் மனைவியை கையில் ஏந்தி இருந்தான் அருள்வேல்.
“ஏன் இப்படி பண்ணுறாங்க?” என்று அன்பழகியின் மனம் கேள்வி எழுப்பினாலும் அவன் தொடுகையில் சிலிர்த்து நின்றது அவள் மனம்.
“பாதுபா… மெதுவா உக்கார வை” என்று வத்சலா கூறிக்கொண்டிருக்கும் பொழுதே! அருள்வேல் அவளை தூக்கிக்கொண்டு அவனது  அறைக்குள் சென்று கட்டிலில் கிடத்தி இருந்தான்.
புன்னகைத்தவாறே பின்னாடியே வந்த வத்சலா “உனக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வரவா அருளு” என்று கேட்க,
“மொதல்ல தண்ணி கொடுங்கம்மா..” என்றதோடு அன்பழகிக்கு மருத்துவர் என்ன உண்ண கொடுக்க வேண்டும் என்பதையும் கூறியவன் அன்பழகியின் அருகில் ஒரு கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்து கொண்டான்.
அவன் அருளில் அமர்ந்திருப்பது அன்பழகிக்கு அவஸ்தையை கொடுக்க, என்ன சொல்வதென்று புரியாமல் தவிக்கலானாள். அமர்ந்து கொண்டு கணவன் முகத்தை பார்த்திருப்பதை விட தலையணையில் தலையை வைத்து படுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால் இயற்கை உபாதை அழைத்தது. தனியாக இறங்கி செல்லவும் முடியாததால்
“அத்தைய கொஞ்சம் கூப்பிடுறீங்களா?” மிகவும் மெதுவாக அவன் முகம் பாராமல் கூற
“எதுக்கு?” அருள்வேல் அவள் முகத்தை கூர்மையாக பார்த்து கேட்டான்.
அவனிடம் சொல்ல கூசியவளாக “இல்ல. நான் அத்த கிட்டயே! சொல்லுறேன்” தலையை குனிந்து கொண்டு கூற
“அவங்க வர மாட்டாங்க. உனக்கு உடம்பு சரியாகும் வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன். என்ன கேக்குறதாக இருந்தாலும் என் கிட்ட கேளு. சரி சொல்லு இப்போ எதுக்கு அம்மாவ கூப்பிட்ட” என்றவனின் குரலின் ஆளுமை மட்டும்தான் இருந்தது.
“எதுக்குதான் இப்படி மிரட்டுற மாதிரி பேசுறாரோ!” என்றெண்ணியவள் வேறு வழியில்லாது “அது அது வந்து…” என்றவள் சுண்டு விரலை மட்டும் காட்ட,
புரிந்தவனுக்கு இதழோரம் புன்னகை மலர “ஏன் இத என் கிட்ட சொல்ல மாட்டியா?” என்றவாறே அவளை தூக்கி இருந்தான்.
“அம்மாடியோவ்… அதையும் இப்படி சிடுசிடுன்னுதான் சொல்லுவாரோ!” மனதுக்குள் சிணுங்கியவள் அவன் முகம் பார்க்க சாந்தமாகத்தான் இருந்தது. 
“மூஞ்ச குழந்தை மாதிரி வச்சி கிட்டு எப்படித்தான் கோபபட முடியுதோ! இவரால?” எண்ணியவள் அவனையே! பாத்திருக்க
“என்ன என் மடில ஒண்ணுக்கு போக உத்தேசமா? இறங்கு. சீக்கிரம் உன் வேலைய முடி. முடிச்சிட்டு என்ன கூப்பிடு. கால அசைக்காத. புரியுதா?” மிரட்டும் தொனியில் கூறியவன் கதவை சாத்தி விட்டு வெளியேற
“அத கொஞ்சம் சிரிச்சிகிட்டே சொன்னாதான் என்னவாம்” முணுமுணுத்தாள் அன்பழகி.
இயல்பில்லையே! பாசத்தை கூட கோபமாக காட்டக்கூடியவன் அருள். அருள்வேலின் குரலும், பேச்சும் அடுத்தவரை அதிகாரம் செய்யும் பாணியில்தான் இருக்கும். அன்பழகி மேல் இருக்கும் கோபமும் சேர்ந்துகொள்ள குரலில் அது சற்று தெளிவாகவே வெளிக்காட்டி விட, அவளுக்கு அவன் அவளை மிரட்டுவது போலவும், அதட்டுவது போலவும் மட்டும்தான் கேட்கும்.
அடைத்த கதவுக்குள் அவள் முணுமுணுத்தது எதிரொலியாக அவனுக்கு நன்றாக கேட்டிருக்க, “என்ன பிடிக்காதாம். என் கூட வாழ பிடிக்காதாம் ஆனா நான் சிரிச்சிட்டே இவ கூட பேசணுமாம். எந்த ஊரு நியாயம் டா இது?”  அருள்வேல் முணுமுணுக்கலானான்.
“மீண்டும் அவளை கட்டிலில் கிடத்தியவன் வத்சலா அனுப்பி இருந்த தண்ணீரை பருகி விட்டு காப்பியையும் சிற்றுண்டி வகைகளையும் பார்த்தவன் காபியை மட்டும் அருந்தலானான்.
“இனிப்பு எல்லாம் சாப்பிட மாட்டீங்களா?” தலையை குனிந்தவாறே அன்பழகி கையை பிசைந்துகொண்டு கேட்டாள்.
அங்கிருந்த எல்லா இனிப்பு வகையும் அவள் செய்ததுதான். அவனுக்காக ஆசையாசையாக செய்தவைகளல்ல. இருந்தாலும் அத்தை அவள் செய்தவைகளை மட்டும் தட்டில் வைத்து அனுப்பி இருப்பதன் அர்த்தம் அவளுக்கு புரியாமலுமில்லை. அவைகளை அவன் ருசி பார்க்க வேண்டும். அவளை புகழாவிட்டாலும் அவளோடு பேசவாவது ஏதாவது ஒன்று இருக்கும் என்று கொடுத்து விட்டிருப்பார்.
இங்கே என்னவென்றால் அவள்தான் செய்தாள் என்று அறிந்து கொண்டு அவைகளை தொட்டு பார்க்காமல் இருப்பது போல் காபியை மட்டும் அருந்துகின்றான். உண்மையிலையே! அவள் செய்தவைகளை என்று அறிந்து தொடாமல் இருக்கின்றானா? அல்லது இனிப்பு சாப்பிடுவதில்லையா? தெரியவில்லை.
அவனோடு பேச மனம் ஆசை கொண்டாலும் என்ன பேசுவதென்று புரியவில்லை. அவனக்கு தன் மீது என்ன கோபம் என்று கூட தெரியவில்லை. சுள்ளென்று எரிந்து விழுவானோ! என்று வேறு அச்சமாக இருக்க, அவன் முகம் பார்த்து பேசவும் தயக்கமாக இருந்தது.
இதில் அவள் செய்தவைகளை உண்ணாமல் இருந்ததை பார்த்து மனம் தாங்காமல் தான் அப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டு அதற்கு அவன் பதில் சொல்வானா? மாட்டானா? என்ற பதட்டத்தோடு கையை பிசைந்துகொண்டு அவனை பார்க்க தயங்கியவாறே அமர்ந்திருந்தாள்.
“எல்லாமே! என் பேவரிட் தான். தெரிஞ்சிதான் அம்மா அனுப்பி இருக்காங்க. உன்னால இப்போ சாப்பிட முடியாது. நீ சாப்பிடவும் கூடாது. உன்ன பார்க்க வச்சி சாப்பிட எனக்கு தோனல. அதனால நான் நாளைக்கு சாப்பிடுறேன்” படபடவென சொன்னவன் காபி கப்பை வைத்து அலைபேசியை கையில் ஏந்திக்கொள்ள பட்டென்று தலையை உயர்த்தி கணவனை ஏறிட்டாள் அன்பழகி.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் அலுத்தமாகவும், ஆளுமையான அவன் குரலில் கடினமாகத்தான் ஒலித்தது. அவள் ஒன்று நினைக்க அவன் சொன்னதைக் கேட்டு அவள் மனம் உவகை கொண்டது.
“அப்படியென்றால் நான் செய்தது என்று தெரியாதா?”
அவன் பேசுவதே! இப்படித்தான் போலும் என்று புரிய, அவனின் இணக்கமா பேச்சு அவளுக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்திருக்க “இல்ல நீங்க சாப்பிடுங்க, எனக்காக ஒன்னும் சாப்பிடாம இருக்காதீங்க” என்றாள் சிறு கன்னங்கள் நாணமுற.
“அது எப்படி முடியும்? பசில இருக்குறது என் பொண்டாட்டியாச்சே!” அருள்வேல் பொண்டாட்டி என்பதை அழுத்தி சொல்லியவன் அவளை உற்று பார்த்தவாறுதான் சொன்னான். அவன் பார்வை முழுவதும் “ஏன்டி என் கூட வாழ பிடிக்கலைனு சொன்ன? என்ற கேள்வி தேக்கி நிற்க அதை கேட்கத்தான் அவன் மனம் விரும்ப வில்லை. இப்படியே கூட இருந்து விடலாம் கேட்டு அவள் கூறும் காரணத்தால் அவளை பிரிய நேர்ந்தால் நிச்சயமாக அதை அவனால் தாங்க முடியாது.
“இல்ல எல்லாம் நான் என் கையாள பண்ணதுதான். சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க?” அவன் பார்க்கவும் தலையை குனிந்துக் கொண்டவள் ஓரக்கண்ணால் அவனை ஏறிட்டுக் கூற
“நிஜமாவா? கடலமிட்டாய் தான் பிடிக்கும் அத மட்டும்தான் செய்வியோன்னு நினச்சேன். இதெல்லாம் கூட செய்வியா?” என்றவாறே தட்டை கையில் எடுத்துக்கொண்டவன் உண்ண ஆரம்பித்தான்.
அவன் சொன்னதைக் கேட்டு மூச்சை இழுத்து விட்டாள் அன்பழகி. அவளுக்கு கடலைமிட்டாய் என்றாள் ரொம்பவும் பிடிக்கும் அதை தெரிந்து கொண்டுதான் அன்று அவன் அதை தூக்கிப் போட்டு விட்டு போனானா? “ஆமா இவருக்கு எப்படி தெரியும் எனக்கு கடமிட்டாய் பிடிக்கும் என்று” ஆயிரம் கேள்விகள் ஒரு நொடியில் முளைக்க அவனிடம் கேட்கத்தான் நா எழவில்லை.
“என்ன கடலைமிட்டாய் கடையில என்ன பார்த்த நியாபகம் இல்லையா?” பழைய நினைவுகளில் அவன் முகம் கனிந்திருந்தது.
அன்பழகி முழிக்கவும் “நான் கடலை மிட்டாய் கொடுத்ததையே! மறந்துட்டியா? அது சரி சின்ன வயசுல நான் கடலை மிட்டாய் கொடுத்தா எனக்கு கன்னத்துல முத்தம் கொடுப்பியே! அத கூடவா மறந்த”
“ஐயோ என்ன இன்னக்கி இவர் இப்படி எல்லாம் பேசுறாரு?” அடிவயிற்றில் இனம் புரியாத உணர்வு எழ உடல் சிலிர்த்து வியர்வையில் குளிக்க, பேச்சற்று அவனையே! பாத்திருந்தாள் அன்பழகி. 
“உனக்கும் என்ன பிடிக்கும்னு நினச்சேன். என்ன பண்ணுறது நாம ஆச படுற எல்லாம் நமக்கு கிடைக்காதே!” பெருமூச்சு விட்டுக்கொண்டவன் சாப்பிட்டது போதும் என்று எண்ணினானோ! தட்டை கீழே வைத்தான்.
“என்ன சொல்லுறாரு இவரு? இவருக்கு என்ன பிடிக்குமா? என்னென்னமோ! சொல்லுறாரு? அப்போ அன்னக்கி ஏன் அப்படி பேசினாரு?” அன்பழகி யோசிக்கும் நேரம் அருளின் அலைபேசி அடித்தது.
திரையை வெறிக்க பார்த்தவன் அவன் அந்த காலை எடுக்க வில்லையென்றால் கதவை தட்டியவாறு யாராவது ஒருவர் உள்ளே வந்துகொண்டுதான் இருப்பார்கள் என்று புரிய இயக்கி காதில் வைத்திருந்தான்.
“என்ன டா… ஊருக்கு போய் சேர்ந்துட்டியா? உன் பொண்டாட்டி செத்து கித்து போய்ட்டாளா? இல்ல உசுருக்கு போராடிகிட்டு இருக்காளா?” கிண்டல் வழியும் குரலில் கனகவேல் கேட்க, பல்லைக் கடித்தான் அருள்வேல்.
“இங்க நம்ம ஆட்ச்சிய கலைக்க எதிர்கட்ச்சிக்காரன் சதி மேல சதி செய்யிறானுக, குடைச்சல் கொடுக்குறானுக, அதையெல்லாம் நான் தனியாளா சமாளிக்க முடியாது நீ பாத்துக்கணு சொன்னா உனக்கு உன் பொண்டாட்டி முக்கியமுன்னு போயிட்ட, என்ன எப்படி இருக்கா அந்த ஒண்ணுமில்லாதவ? போய் சேர்ந்துட்டா அனுதாப ஓட்டும் உனக்கு சேரும்” என்று சத்தமாக சிரிக்க, அருள்வேலின் கோபம் தலைக்கேறியது.
“அப்பா…” என்று அருள்வேல் கத்த அன்பழகி நடுநடுங்கிப் போனாள்.
“இங்க பாருங்க நீங்க சொல்லுறத எல்லாத்தையும் இதுவரைக்கும் நான் தலையாட்டி பொம்மை மாதிரி செய்ஞ்சிகிட்டு இருந்தேன். ஆனா என் குடும்ப விசயத்துல தலையிட்டீங்க நான் பொல்லாதவனாகிடுவேன்”
“என்ன டா உன் குடும்பம், என் குடும்பம்னு பிரிச்சு பேசுற? அவ்வளவு பெரிய ஆள்கிட்டியா நீ?” கனகவேல் அவனுக்கு மேல் கத்த
“ஆமா… என் பொண்டாட்டிய உங்களால மருமகளா ஏத்துக்க முடியலைன்னா… என்ன மறந்துடுங்க, நாங்க வேற குடும்பமா இருந்துக்குறோம். அப்படியே! நான் கட்ச்சியிலிருந்தும் விலகிக்கிறேன்” என்றவன் அலைபேசியை அனைத்து தூக்கிப்போட்டு கோப மூச்சுக்கலை வெளியிட அன்பழகி அவனை ஆவென பாத்திருந்தாள்.
கணவனின் கோப முகம் கண்டு என்ன? ஏது? என்று கேட்கவும் பயமாக இருந்தது. நேரம்தான் சென்று கொண்டிருந்ததே! ஒழிய முகத்தை மூடி அமர்ந்திருந்தானோ! சிறிதும் அசையாது இருக்க அன்பழகியின் மனதில் பயம் கவ்விக்கொண்டது.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தண்ணீர் குவளையை அவன் புறம் மெதுவாக நகர்த்தியவள் “குடிங்க டென்ஷன் குறையும்” என்று மெதுவாக சொல்ல
“உன்ன கட்டி பிடிச்சிக்கவா?” பொறுமையான குரலில்தான் கேட்டிருந்தான்.
“என்ன?” அன்பழகிக்கு அதிர்ச்சியா? ஆச்சரியமா? சொல்ல முடியாத உணர்வில் சிக்குண்டிருந்தாள். 
“என் டென்ஷன் குறையணும்னா உன்ன கட்டி பிடிச்சிக்கணும். பிடிச்சிக்கவா?” அதிகாரக் குரலில்தான் கேட்டிருந்தான். அதுவே! அவளுக்கு மிரட்டும் தொனிதான். அதுதான் அவன் இயல்பு என்று புரிந்து போன பிறகு பெண்ணவள் அச்சப்படவில்லை. படபடப்பும் வெட்கமும் வர தலையை குனிந்தவாறு தலையசைத்து சம்மதம் சொல்ல, அவளை இறுக அணைத்திருந்தான் அருள்வேல்.
“தாலியையும் கட்டிட்டு உன்ன கட்டிப்பிடிக்க கூட உன் சம்மதம் கேட்டு நிக்குற நான் ஒரு முட்டாள் டி” என்றவனின் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் நச்சென்று முதல் முத்தத்தை பதித்தவாறு அவன் முகத்தையும் அங்கேயே புதைத்திருக்க,
அன்பழகியின் உடலில் புதுவித மின்சாரம் பாய உணர்சி வேகத்தை கட்டுப்படுத்த பிடிமானத்துக்காக அவனை இரு கைக்கொண்டு ஆரத்தழுவி இருந்தாள்.
அவள் அவனை அணைத்துக்கொள்வாள் என்று எதிர்பார்காதவனோ! “ஏன் டி என்ன பிடிகளனு சொன்ன? என் கூட வாழ மாட்டேன்னு சொன்ன? எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டி…” அவள் முகமெங்கும் முத்தமிட
முத்த தாக்குதலில் சிக்குண்டவளின் நிலைதான் மோசமாக இருந்தது. அவனை விட்டு விலகவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் ஒரு வித அவஸ்தைக்குள்ளானாள். 
அருள் மனதில் இருந்த ரணத்தை போக்க கேள்வி கேட்டானே! ஒழிய அவளை விட்டு நகர எண்ணவில்லை. மீண்டும் அவளை அணைத்துக்கொண்டு கண்களை மூடி அப்படியே இருந்து விட அன்பழகி செய்வதரியாது முழிக்கலானாள். அவன் அருகாமை பிடித்திருந்தாலும், அவஸ்தையாகவும் இருக்க, அவள் மனம் என்ன சொல்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.
அவனுக்கு அவளை பிடிக்கவில்லை என்று தானே! ஒதுங்கி இருக்க முடிவெடுத்தாள். ஆனால் அவனோ! அவளை பிடிக்கும் என்கிறானே! குழம்பித் தவிக்கும் மனதுக்கு பதில் சொல்ல முடியாமல், அவனிடமும் கேட்க முடியாமல் தவிக்கலானாள்.
அவளை காப்பது போல் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் கணவனை மெதுவாக உலுக்க “என்ன டி…” என்று சிடுசிடுக்க, மிட்டாய் பறிக்கப்பட்ட குழந்தையாக கணவன் தெரிய அன்பழகியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
கதவின் பக்கம் கை காட்டவும்தான் கதவு தட்டும் சத்தமே! அருளுக்கு கேட்டது. மனைவியை விட்டு விலகியவாறே! “கொஞ்சம் நேரம் பொண்டாட்டி கூட தனியா இருக்க விடுறானுகளா? இவனுக்கு வேற வால் மாதிரி கூட சுத்திகிட்டு” முணுமுணுப்போடு கதவை திறக்க செல்ல அன்பழகியின் புன்னகை மேலும் விரிந்தது.
   
வேகமாக கதவை திறந்தவன் “என்ன?” என்று கோபமாகவே! கேட்க
“என்ன டா…” என்றாள் வத்சலா.
அன்னையை அங்கு எதிர்பார்காதவனின் முகம் மாற, “தள்ளு” என்று மகனை தள்ளி விட்டு உள்ளே வந்தவள் “இந்தாம்மா சாப்பிடு…” என்று தட்டை கொடுக்க அருள் ஓடி வந்து தட்டை வாங்கிக் கொண்டவன்
“நான் ஊட்டி விடுறேன். நீ போ…” என்று அன்னையை துரத்த,
மகனை ஒரு பார்வை பார்த்தவள் “நைட்டு முழுக்க அவ தூங்காம இருக்கணும். உன்னால அவளை பாத்துக்க முடியுமா? இல்ல நீ குறட்டை விட்டு தூங்கிட்டு அவளையும் தூங்க வைக்க போறியா?”
“என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? அவ தூங்கக் கூடாது. தூங்கினா விஷம் ஏறிடும் என்று மருத்துவர் சொன்னாரா இல்லையா? புரிஞ்சிதான் பேசுறீங்களா?” கோபம் கணக்க பேசியவன் அன்னையின் பார்வையில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு “நானே அன்பு கூட இருக்கேன். என்னால அவளை பாத்துக்க முடியும்” என்றான் விட்டத்தை பார்த்தவாறு.
வத்சலாவுக்கு சிரிப்பாக இருந்தாலும் “சரி வா வந்து சாப்பிடு” என்று சொல்ல
“அவளுக்கு என்ன கொடுத்தீங்களோ! அதையே! எனக்கும் கொடுங்க” என்றான் தீர்க்கமாக.
“அச்சச்சோ! அவளுக்குத்தான்! மருத்துவர் கொடுக்க சொன்னாரு அதனால அவளுக்கு மட்டும் தான் பண்ணேன். உனக்கு பழைய சோறு தான் டா”
மாமியாரின் கிண்டல் பேச்சில் அன்பழகி சிரித்து விட, மனைவியை முறைத்தவன் அன்னையை பார்த்து “எனக்கு பச்ச தண்ணி போதும். நீ பழைய சோத்த கொட்டிக்க” என்றான் அருள்.
“ரெண்டு மருமக வந்தும் எனக்கு பழைய சோறுதானா” அங்கலாய்ப்போடு வத்சலா செல்ல கதவை சாத்தினான் அருள்.
“டேய் தாப்பாள் போடாதடா உனக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு திரும்ப வருவேன்” கதவுக்கு வெளியே வத்சலாவின் குரல் கேட்க புன்னகைத்தவன் மனைவியின் அருகில் வந்து ஊட்டி விட முற்பட
“நீங்க எதுக்கு இத சாப்பிடுறீங்க? அத்த கிட்ட சொன்னா உங்களுக்கு பிடிச்சா மாதிரி பேப்பர் தூவி முட்ட தோசை வார்த்து தருவாங்க” கணவனின் முகம் பார்த்துதான் கூறினாள் அன்பழகி.
அவளால் இனிப்பு சாப்பிட முடியாது, என்று தொடாமல் இருந்தவன் அவள் செய்ததாக கூறியதும் ருசி பார்க்கவென்று கொறித்தது போல், அவள் சாப்பிடும் சாப்பாட்டையே! உணவாக கேட்டதும் அவன் மனது அன்பழகிக்கி தெரிவாக புரிந்துதான் போனது.     
தனக்காக அவன் கஷ்டப்பட வேண்டாம் என்று அவ்வாறு கூறி இருந்தாள்.
“இதோடா… எனக்கு முட்ட தோசை பிடிக்கும்னு கூட தெரிஞ்சு வச்சிருக்கா… ஆனா என்ன மட்டும் பிடிக்காதாம்”
“யாரு உங்கள பிடிக்காதுன்னு சொன்னாங்களாம்” கழுத்தை நொடித்தாள் மனையாள்.
“வேற யாரு என் பொண்டாட்டிதான்” என்றான் அவன் அசராமல்.
“அது… அது வந்து… அன்னைக்கி உங்க அப்பா போன்ல…” என்றவள் வாக்கியத்தை முடிக்கவில்லை
“அவர் கெடக்குறாரு விடு. நீ முதல்ல சாப்பிடு” என்று சொல்ல
அவளுக்கு பேசியே ஆக வேண்டும் போல் இருக்க “அன்னக்கி நீஙகத்தான் சொன்னீங்க வேற வழியில்லாம தாலி கட்டிடீங்கனு. அதான் நானும் உங்க கூட வாழ பிடிக்கலைனு சொன்னேன்” என்றாள் பட்டென்று.
பாலமுருகன் பேசி விட்டு சென்றதன் தாக்கம் அன்னை தந்தையை சரியாக புரிந்துகொள்ளவில்லையோ! அவர்கள் பேசி இருந்தாலே! அவர்களின் பிரச்சினை தீர்ந்து இருக்கும் சந்தோசமாக வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு, அருளின் நடவைக்கைக்கில் தோன்றியது எதுவானாலும் இன்று பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதே!  
புருவம் சுருக்கியவன் “அப்போ எங்கப்பா கூட பேசினது நீ ஒட்டுக்கு கேட்டுகிட்டு இருந்தியா?” என்று கேட்க,
அன்பழகி முழிக்கவெல்லாம் இல்ல. கணவனின் குணம் புரிய அச்சமும் வரவில்லை. தயக்கம் நீங்கியவளாக “நான் எதுக்கு ஒட்டுக்கு கேக்க போறேன். ஊருக்கே மைக்செட்டு போட்டா மாதிரி நீங்க தானே! போன் பேசுனீங்க” என்றாலே பார்க்கலாம்.
உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான் அருள்வேல். அவன் இருப்பது அரசியலில். எல்லா இடத்திலும் கூட்டம், கட்ச்சி மீட்டிங் என்று பேசுபவன் அவன். சில நேரம் மைக்செட் இல்லாமல் கூட பேச நேரிடுவதால் கத்திப் பேசி பழக்கப்பட்டவன். சாதாரணமாக பேசும் பொழுதும் கத்திப் பேசிவிடுவான். அலைபேசியில் என்றாலும் அப்படித்தான். அன்று தந்தையின் மீது கோபத்தில் இருந்தவன் எப்படி பேசி இருப்பான் என்று அவனுக்கு தெரியாதா? அதை நினைத்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு தானாக மலர்ந்திருந்தது.
  
“சரி…சரி… நீ சாப்பிடு. மருந்து வேற குடிக்கணும்” என்றான் இவன்.
“அன்னக்கி எதுக்கு அப்படி சொன்னேங்க?” என்றாள் இவளும் விடாது.
“எங்கப்பாவை சமாதானப்படுத்தத்தான்”   
“எனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கு. அதான் தாலி கட்டிட்டேன்னு சொன்னா உங்கப்பா ஏத்துக்க மாட்டாரா?” கணவனை முறைக்கலானாள்.
யோசிப்பது போல் பாவனை செய்தவன் “சொல்லி இருக்கலாம். நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா சொல்லி இருக்கலாம். என் மனசுல என்ன இருக்குனு சொல்ல சந்தர்ப்பமும் அமையல. சரி உன் கல்யாணம் நின்னு போச்சு எல்லா பிரச்சினையும் முடிஞ்சு போச்சு. உன் கிட்ட பேசலாம். அப்பொறம் அம்மாகிட்ட பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீ தான் குளத்துல குதிக்க போய்ட்டியே! நானும் என்னதான் பண்ண?
அப்பா கிட்ட இங்க நடந்தத பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்.. அப்போ உசுர காப்பாத்த வேற வழியில்லாம தாலி கட்டினதாகத்தானே! சொல்ல முடியும்? ஏன்னா ஊருல நடந்த எல்லா விஷயமும் அவருக்கு தெரிஞ்சிருக்கு. நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொன்னா ஊருல ஒரு பொண்ண லவ் பண்ணி இருக்கான் அம்மா சொல்லலைனு அம்மா மேல பாய்வார். என்னால அம்மாக்கு கஷ்டம்”  அருள் தெளிவாக கூறிய பின்தான். அவன் குடும்பத்தை பற்றியும் யோசித்திருக்கின்றான் அதே சமயம் பொய்யும் கூறவில்லை என்று புரிந்தது.
வத்சலா அவனுக்கும் உணவெடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விட்டு இன்னும் சாப்பிடாம என்ன செய்றீங்க என்று திட்டி விட்டு செல்ல அருள்வேல் மனைவிக்கு ஊட்டியவாறு அவனும் உண்ண ஆரம்பித்தான்.

Advertisement