Advertisement

அத்தியாயம் 13
கணவன் மனைவி உறவு என்பது நிலைக்க அடிப்படையே! நல்ல புரிதல்தான். அந்தவகையில் பாலமுருகன் முத்தழகியை நன்றாக புரிந்துதான் வைத்திருந்தான்.
தனக்கு அடிக்கடி உடம்பு முடியால் போவதால் கணவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி கூறும் மனைவியை கடிய முடியாமல் தான் பாலமுருகன் வீட்டுக்கு வராமல் சவாரியில் அதிக நேரம் செலவழிப்பான்.
தன் பேச்சை கணவன் கேட்பதில்லை என்ற  கோபத்தில் முத்தழகி கணவன் கொடுக்கும் காசை செலவுக்கு எடுக்காமல் இருக்க பாலமுருகனுக்கு மனைவி மீது அதிதிருப்தி ஏற்பட ஆரம்பித்து அவர்களுக்கிடையில் பேச்சு என்பது முற்றாக நின்றுதான் போய் இருந்தது.  
கணவன் வீட்டை விட்டு சென்றால் வேறு பெண்களோடு பேசி சிரிப்பானோ! என்று பல மனைவிமார்கள் அச்சம் கொண்டு காத்திரும்கும் நேரம் முத்தழகி கணவனை வேறு திருமணம் செய்ய சொல்வது பாலமுருகனுக்கு தலைவலியாக இருந்தது.
மாணிக்கம் கூட “அதான் அண்ணியே! சொல்லுதே! அண்ணே பண்ணிக்கேயேன்” என்று சொல்ல
“அதான் டா பிரச்சினை. என் புருஷன் நல்லவரு, வல்லவரு, தங்கமானவருனு சொல்லுற பொம்பளைங்க இருக்காங்க, சந்தேகப்பட்டு சண்டை போடுற பொம்பளைங்களும் இருக்காங்க. இவ அந்த மாதிரி இருந்தா எனக்கு அப்படி எண்ணம் தோன்றி இருக்குமோ! என்னவோ! இப்படி இருக்குறதால, வேற பொம்பளைங்கள பத்தின நினைப்பு கூட வர மாட்டேங்குது”
“யாருக்கும் கிடைக்காத வரம் அண்ணியே! கொடுக்குது. வாழத் தெரியாதவண்ணே நீ”  மாணிக்கம் பொரும
“அடேய் இதுவே! நான் நோய் வந்து படுத்தா அவ என்ன விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணி போய்டுவாளா? மாட்டா இல்ல. அப்போ நான் மட்டும் எப்படி டா?” பாலமுருகன் ஆதங்கமாக பேச
“ஆமா.. இல்ல. அண்ணி கண்டிப்பா பண்ண மாட்டாங்க”
விலகி இருந்தாலும் பாலமுருகனுக்கு தன் குடும்பம்தான் எல்லாமே! முத்தழகி சொல்வது போல் உடல் தேவைக்காக இன்னொரு திருமணம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமோ! அந்த குடும்பத்தை பார்த்துக்கொள்வது! பெரிய விஷயமில்லை. அந்த குடும்பத்தால் முத்தழகியின் நிம்மதி பறிபோய்விடும் என்றுதான் பாலமுருகன் முத்தழகிக்கு புரியவைக்க முயன்று தோற்றான்.
அன்பழகி பிறந்ததிலிருந்தே! இந்த பிரச்சினை ஓடிக்கொண்டிருப்பதால் அவள் பார்வையில் தாய் தந்தையின் அன்னியோன்யம் விழவில்லை. அன்னைக்கு உடம்பு முடியவில்லை. தந்தைக்கு தங்களை பற்றின கவலை இல்லை என்ற கண்ணோட்டம்தான் அன்பழகிக்கு இருந்துகொண்டிருந்தது. ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடாமல் காசை பத்திரப்படுத்தி அன்னைக்கு மருந்து வாங்க வைத்துக்கொள்வாள் அன்பழகி.
தந்தை வீடு வந்தால் அன்னை முகம் கொடுத்து பேசுவதில்லை. அன்பழகிக்கு வாங்கிக்கொண்டு வரும் பொருட்களோடு சரி முத்தழகிக்கு வாங்கிக்கொண்டு வருபவைகளை அவள் தொட மாட்டாள். அவர்களுக்குள் மௌன யுத்தம் என்று தெரியும் எதை பற்றி என்று அன்பழகிக்கு தெரியவில்லை. அதை தந்தையிடம் கேட்க தைரியமும் இல்லை. அன்னையிடம் கேட்டு திட்டு வாங்குவதுதான் மிச்சம். ஆகா மொத்தத்தில் விருப்பமில்லாமல் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து, பிள்ளை பெற்று எனோ! தானோ! என்று குடும்பம் நடாத்துவதாகத்தான் அன்பழகி நினைத்துக்கொண்டிருந்தாள். பெற்றவர்களின் இந்த போக்கு அன்பழகியின் மனதில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்பாடு இருக்கும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.
பாலமுருகனும் அன்பழகியின் திருமணத்துக்காக பணத்தை வங்கியில் போட்டு வந்தானே! தவிர முத்தழகியிடம் கொடுக்கவில்லை கொடுத்தாலும் அவள் வாங்க மாட்டாள் என்று தெரியும்.
வீட்டு செலவுக்கு காசு வாங்க மாட்டாள், மருந்துக்கு கூடவா? என்ற கோபம் இருக்க, பணத்தை முத்தழகி துணி வைக்கும் பெட்டியில் வைத்து விட்டு செல்வான் பாலமுருகன். அதை முத்தழகி மகளுக்காக சீட்டில் கட்டுவாள். இது எதுவும் அன்பழகிக்கு தெரியாது.
இப்படி அன்பும், பாசமும், அக்கறை இருந்தும் ஒட்டாத வாழ்க்கையை வாழ்ந்தனர் அன்பழகியின் பெற்றோர். அதை புரிந்துகொள்ளும் மனப்பாங்கும், தொலைநோக்கு பார்வையும் அன்பழகிக்கு இருக்கவில்லை.
இப்படி இருக்கும் பொழுதான் மாணிக்கம் கணபதியிடம் உளறி முனீஸ்வரியை திருமணம் செய்ய வேண்டியநிலை.
கணபதியின் கடையில் சாப்பிட லாரியை நிறுத்தி இருந்தாலும் இரவில் தங்கியதில்லை. அதனால் கணபதி மற்றும் முனீஸ்வரியை பற்றி தெரியாது. பெண் தேவை என்று பாலமுருகன் கணபதியிடம் பேசி இருந்தால்தானே! முனீஸ்வரியை பற்றி அறிய வர, மாணிக்கமும் போதையில் இருப்பவன் அவனுக்கு அதை தவிர வேறு உலகமில்லை.
அன்று சாப்பிட்ட பின் வாய் நமநம என்று இருப்பதாக வெற்றிலை போட மாணிக்கம் மடித்து வைத்திருந்த வெற்றிலையைத்தான் பாலமுருகன் போட்டான். அதன் பின் என்ன நடந்தது என்று நியாபகம் இல்லை.
மாணிக்கம் வெற்றிலையில் சிலநேரம் போதை மருந்தை மடித்து வைப்பதுண்டு அதை அறியாமல் சாப்பிட்டு விட்டதாகத்தான் பாலமுருகன் எண்ணி இருந்தான். தான் சாப்பிட்ட சாப்பாட்டில் கணபதிதான் எதையோ கலந்து விட்டான் என்ற சந்தேகம் இதனால்தான் பாலமுருகனுக்கு வரவில்லை. 
கணபதி சொல்லியது போல் மயக்கத்தில் முனீஸ்வரியின் கதவை தட்டி தண்ணீர் கேட்டிருக்கக் கூடும், தப்பா நடந்து கொண்டேனா நியாபகம் இல்லை. முனீஸ்வரி கதறிய கதறல் இன்னும் கண்ணுக்குள் நிற்க, கூட்டமும் கூடி ஆளாளுக்கு பேச பாலமுருகனை சிந்திக்க விடாமல் பண்ணியதோடு, ஒரு பெண்ணின் கண்ணீருக்கு ஆளாக்கிட்டோம் என்ற குற்ற உணர்ச்சிதான் பாலமுருகனை முனீஸ்வரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்திருந்தது.
முனீஸ்வரியை திருமணம் செய்வதற்கு காரணமே! முத்தழகி தான் என்று  பஞ்சாயத்து முடிந்த பின் குடித்து விட்டு வந்த பாலமுருகன் முத்தழகியை சத்தம் போடலானான்.
“எங்க அம்மா சொன்ன பேச்ச கேட்டு இருக்கணும் டி.. அன்னைக்கே! சொன்னாங்க. அப்பன், ஆத்தா இல்லாத இந்த சிறுக்கிய கட்டாத உன்ன நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுவானு. மகராசி அவங்க சொன்னபடிதான் நடந்திருச்சு. இப்போ உனக்கு சந்தோசமா…” போதையில் கண்டபடி பாலமுருகன் திட்டி விட்டு செல்ல அதை முத்தழகி கிஞ்சத்துக்கும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அன்பழகியின் மனதில் ஆழப்பதிந்து போனது.
முனீஸ்வரியின் கழுத்தில் தாலி கட்டியதோடு சரி சவாரிக்கு செல்பவன் வந்தாலும் வாடகைக்கு இருக்கும் அறையில்தான் மாணிக்கத்தோடு தங்கிக்கொள்வான். பார்த்த மட்டில் கணபதியும், முனீஸ்வரியும் நல்லவர்களே!
முனீஸ்வரியும் முத்தழகியும் அன்பழகியும் தங்களோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் கணபதியை அன்பழகிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று பாலமுருகனிடம் கேட்டு பார்த்தாள். பாலமுருகனுக்கு அதில் சம்மதம் இருந்த போதிலும் முத்தழகியிடம் இதை பற்றி பேச மனம் வரவில்லை.
அன்பழகியை கட்டிக்கொடுத்த பின் சவாரிக்கு செல்லாது வீட்டோடு இருந்து விட வேண்டும் என்றுதான் பாலமுருகன் காசு சேர்க்க ஆரம்பித்தான்.
இரண்டு குடும்பம் என்று ஆனா நிலையில் அன்பழகியை இங்கு அனுப்பி விட்டு தான் முத்தழகியோடு தங்கி விட்டு முனீஸ்வரியை கைவிட்டு விட்டதாக ஊர் தூற்றும். கணபதியின் கோபத்துக்கு ஆளாகி அது பெண்ணின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
ஊருக்குள் மாப்பிள்ளை பார்த்து பெண்ணை கட்டிக்கொடுத்தால் உடம்பு முடியாமல் இருக்கும் அன்னையை பெண் பார்த்துக்கொள்வாள். அதுதான் சரி என்று தோன்ற முனீஸ்வரி கல்யாண பேச்சு எடுக்கும் பொழுதெல்லாம் அமைதியாக கிளம்பி விடுவான் பாலமுருகன்.
திடிரென்று முத்தழகி இறந்து விட்ட செய்தி கேட்டதும் பாலமுருகனின் உலகமே! இருண்டு விட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்று சுய நினைவே! இல்லாமல் குடிக்க ஆரம்பித்தவனை இப்படியே! இருந்தால் ஏதாவது பண்ணிக்கொள்வான் என்று மாணிக்கம் சவாரிக்கு இழுத்து சென்றிருந்த நேரம்தான் அன்பழகிக்கும், கணபதிக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
தேர்தல் பிரச்சாரம் வேறு ஆரம்பித்திருக்க, குலதெய்வத்துக்கு பூஜை செய்யுமாறு ஜோசியர் கூறியதால் அவசர அவசரமாக பாதுகாவலர்களோடு மாலையில்லையே! வீட்டுக்கு வந்த அருள்வேல் தாத்தாக்களிடம் நாளை காலையிலையே! பூஜைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறியவாறுதான் வந்திருந்தான்.
ஊர் கோவிலிலும் அவனது பெயரில் சிறப்பு பூஜை அதிகாலையில் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதிகாலையில் கோவில் குளத்தில் குளித்து விட்டு பூஜையில் கலந்து கொண்டால் நினைத்து எல்லாம் நடக்கும் என்று செல்வராஜ் கூற, அருள்வேல் மறுக்கவில்லை.
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்தவன் கோவில் குளத்தை நோக்கி நடக்க அவன் பாதுகாவலர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர்.
“டேய் அருளு இருப்பா நாங்களும் வரோம்…” என்று செல்வராஜும், ஞானவேலும் கூடவே வர
“இந்த நேரத்து எதுக்கு நீங்க ரெண்டு பேரும் வரீங்க? வீட்டுல சுடுநீர்ல குளிங்க, குளிச்சிட்டு கோவிலுக்கு வந்து சேருங்க” என்று முறைக்க,
“டேய் பேராண்டி… என்ன எங்களுக்கு வயசாகிருச்சுனு சொல்ல வரியா? வீட்டுலையும் நாங்க குளிர் நீர்லதான் குளிப்போம் நீ வா” என்று  இழுத்து செல்ல கோபமாக அருள் நடக்கலானான்.
“என்ன தாத்தா கும்மிருட்டா இருக்கும்னு பார்த்தா வெளிச்சமா இருக்கு? டார்ச்சு லைட்டுக்கு வேலை இல்லாம போச்சு”  என்றவாறு அதை அனைத்தான் அருள்வேல்
“பாலமுருகன் மவளுக்கு நாளைக்கு காலைல கல்யாணம் தாயில்லா புள்ள ஊரே வேல பாக்குது” என்றார் ஞானவேல்.
அதை காதில் வாங்கிக் கொண்டவனுக்கு பாலமுருகனையும் தெரியவில்லை. அவன் மகள் யார் என்றும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் எண்ணமும் இல்லை.
கோவிலுக்கு ஆலையை தாண்டி செல்ல வேண்டும், குறுக்கு பாதையில் செல்லலாம் என்று தாத்தாக்கள் முன்னாடி நடக்க, அருள்வேல் தொடர்ந்தான்.
அன்பழகியின் வீட்டை தாண்டும் பொழுதுதான் கவனித்தான் அந்த வீட்டு வேலியெல்லாம் சின்ன சின்ன மின்குமிழ்கள் எரிவதை. சந்தேகமாக “இந்த வீட்டு பொண்ணுக்கா கல்யாணம் தாத்தா?” என்று அருள்வேல் கேட்கும் நேரம் “வீல்” என்று யாரோ! கத்தும் சத்தம் கேட்டது.
அது அன்பழகியின் வீட்டுக்குள் இருந்துதான் கேட்டது என்று புரிந்ததும் நொடி நேரமும் தாமதிக்காமல் அருள்வேலும் தாத்தாக்கள் இருவரும், பாதுகாவலர்களும் கம்பி வேலியை தாண்டி உள்ளே!! நுழைய, அக்கம் பக்கத்து வீடுகளிலும் மின்குமிழ்கள் எரிய ஆரம்பித்திருந்தன.
இவர்கள் கதவின் அருகில் செல்வதற்கும் அன்பழகி கதவை திறந்துகொண்டு வெளியே ஓடிவரவும் சரியாக இருக்க வந்தவள் தஞ்சமடைந்தது அருள்வேலின் நெஞ்சில்தான்.
கதவை திறந்து ஓடிவந்தவளுக்கு அங்கிருந்தவர்களை கண்ணுக்கு தெரியவில்லை. யார் நெஞ்சில் சாய்ந்தாள் என்றும் தெரியவில்லை. தந்தைதான் வந்து விட்டார் என்றெண்ணி “அப்பா அப்பா.. காப்பாத்து… அவங்க நல்லவங்க இல்ல…” என்று கதற வெடவெட என்று கோழிக்குஞ்சாய் நடுங்கும் அவளை அருள்வேல் ஆறுதலாய் அணைத்துக்கொண்டான்.
அனைத்து கொண்டது மட்டுமில்லாது சற்றும் யோசிக்காமல் அவன் அணிந்திருந்த வேட்டியை  உருவி அவளுக்கு போர்த்தியும் விட்டிருந்தான். அவள் நின்றிருந்த கோலம் அவ்வாறு இருந்தது.
பாவாடையும், ரவிக்கையுமாக நின்றிருந்தவளின் சேலையை உருவியவனோ! அதை கையில் வைத்துக்கொண்டு “என்ன புள்ள எதுக்கு பயப்படுற? நாளைக்கு கண்ணாலம். கண்ணாலத்துக்கு அப்பொறம் நடக்கிறத நான் இப்போவே! சொல்லித்தாரேன் வா” என்று குளறியவாறே வர அருள்வேல் அவனை எட்டி உதைத்திருக்க, கணபதி தடுமாறி விழுந்திருந்தான்.
என்னதான் நரி வரி வரைந்து புலி வேஷம் போட்டுக்கொண்டாலும் நரி நரிதானே! எவ்வளவுதான் மறைக்க நினைத்தாலும் அதன் சுயரூபம் நீரில் மூழ்கிய பந்தாய் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும் பொழுது பட்டென்று வெளியே வந்துவிடத்தானே! செய்கிறது.
கணபதியும் அவ்வாறுதான் திருமண நாள் நெருங்க நெருங்க அன்பழகியை அடையும் ஆசை அவனை ஆட்கொள்ள கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கலானான்.
அவளிடம் பேச்சுக்கொடுக்க, அதையும் இதையும் என்று வாங்கி வந்து கொடுத்துப் பார்த்தான் அன்பழகி அன்னையின் அறையில் அடைந்தே கிடந்தாள்.
பூ வாங்கிச் சென்று அதை வைச்சி விடும் சாக்கில் அவளை தொட்டு விடலாம், கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறாளே! என்று கணக்கு போட்டவனுக்குக்கு “சாமிக்கு சாத்துங்க” என்ற அவள் பேச்சு கோபத்தைத்தான் தூண்டி இருந்தது.
தூக்கம் வராமல் வெகு நேரமாக தவித்தவன் மனதில் இருந்த ரணத்தை போக்க, மறைத்து வைத்திருந்த சரக்கு பாடில்லை வாயில் சரித்துக் கொண்டது தூங்கத்தான்.
ஆனால் அவனது நாடி நரம்பெல்லாம் பேயாட்டம் ஆட முனீஸ்வரியை நாடிச்சென்றான். அந்தோ பரிதாபம் அன்றைக்கு என்று பார்த்து முனீஸ்வரி அன்பழகியை அதட்டி மிரட்டி முத்தழகியின் அறையில் தூங்குவதால்தான் சதா அன்னையின் நினைவாக அழுது கொண்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு நாளில் திருமணமாகப்போகும் பெண் இப்படி இருக்கலாமா என்று அவள் அறையில் தூங்க வைத்திருக்க, முனீஸ்வரி என்று கணபதி அன்பழகியை நெருங்கி இருந்தான்.
 “ஈஸ்வரி..” என்று குளறியவாறு கணபதி அன்பழகியின் அருகில் வந்து படுத்தவன் அவள் மேல் கையை போட அன்பழகி திடுக்கிட்டு விழிக்கவும் கணபதி உளறவும் சரியாக இருந்தது. அப்பொழுதுதான் அன்பழகிக்கு அவர்களுக்குள் இருக்கும் உறவு எந்த மாதிரியானது என்பதே! புரிந்து போனது.
அருவருப்பாக அவனை தள்ளி விட்டவள் அவனை வெளியே போகும்படி கத்த அன்பழகியை அங்கு எதிர்பார்க்காத கணபதிக்கு சொர்க்கமே! கையில் கிடைத்து போன்ற சந்தோசம்.
போதையில் இருப்பவனுக்கு தான் என்ன காரியம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற சுயநினைவே இல்லாமல் அவள் புடவையை பிடித்து இழுக்கலானான். அன்பழகி அவனோடு போராடி தோற்க சொந்த வீட்டிலையே! தனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று உடுத்தி இருந்த சேலையை துறந்த பின்தான் புரிந்தது. இன்னும் தாமதித்தால் தான் எந்த நிலைமைக்கு ஆளாவோம் என்று புரிய கதவை திறந்துகொண்டு வெளியே ஓடி இருந்தாள்.   
 அக்கம் பக்கத்திலுள்ளோரிடமிருந்து விஷயம் பரவி ஊர் மக்களும் கூடி இருக்க, முனீஸ்வரி மட்டும் வெளிய வரவில்லை.
“இழுத்துட்டு வாங்க டா அந்த பொம்பளைய, இப்படி ஏதாவது பண்ணிதான் பாலமுருகனையும் சிக்க வச்சி இருக்கும்” என்று ஞானவேல் சொல்ல
“அதுக்கு அவசியமில்லைங்க எங்க அம்மாவும் அண்ணனும் தூங்குது” என்றவாறு வந்தான் முனீஸ்வரியின் சின்ன மகன் அசோக்.
“டேய்… பொடிப்பயலே! வீட்டுக்குள்ள இவ்வளவு நடக்குது உங்கம்மாக்கு தூக்கம் என்னடா வேண்டி கிடக்கு? அவளும் இதுக்கு உடந்தையா?” செல்வராஜ் கத்த
கணபதி அன்பழகியின் சேலையை போர்த்தியவாறு கீழே சுருண்டு கிடப்பதை பார்த்தவன் “இங்க பாருங்க ஐயா இந்த கல்யாணத்த நிறுத்த என்னால ஆனா முயற்சியைத்தான் பண்ணேன்” என்றான் அவன்.
“என்ன டா.. சொல்லுற?” என்று விசாரிக்க
தனது அன்னைக்கும், கணபதிக்கும் இருக்கும் உறவை கூறியவன், அதை தான் வெறுப்பதாகவும், பாலமுருகனை எவ்வாறு இவர்கள் தங்களது வலையில் சிக்க வைத்தார்கள் என்றும் கூறி அன்பழகியை திருமணம் செய்வது பாலமுருகனின் பணத்துக்காகவும் அதன் பின் அவளை பலான தொழில் இறக்கி விடுவான் என்றும் கூற ஊரே அதிர்ந்து நின்றனர்.
“அம்மாக்கும் அண்ணனுக்கும் தூக்க மருந்து கொடுத்திருக்கேன். இன்னக்கி இவன் குடிப்பானு தோணிருச்சு அதான் சரக்குல போதை மருந்தை கலந்து கொடுத்தேன். இந்த அக்காக்கு உண்மை தெரிஞ்சா போதும் அப்பொறம் இவன் மண்டைய உடைக்கலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள அதுவா வெளிய ஓடி வந்திருச்சு. நீங்களும் வந்துட்டீங்க”
“முதல்ல இவன பிடிச்சி அந்த மரத்துல கட்டுங்க, விடிஞ்சதும் போலீஸ்ல பிடிச்சி கொடுத்துடலாம்” என்று அருள்வேல் சினம் கொண்டு சீற, அப்பொழுதுதான் தான் யார் வசம் இருக்கின்றோம் என்று உணர்ந்தாள் அன்பழகி.
அவனிடமிருந்து விலகி நின்றவள் அவன் முகம் பார்க்க “இவ்வளவு நேரம் என் கைவளைவுல தானே! நின்ன இப்போ என்ன?” என்று அருள் முறைக்க
அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. தன் செயலை நினைத்து கூசியவளை அங்கிருந்த பெண்கள் அழைத்து சென்றனர்.
அருள்வேல் கோவிலுக்கு சென்று பூஜையை முடித்துக்கொண்டு வரும் நேரம் விடிய ஆரம்பித்திருக்க, போலீஸ் வண்டியும் ஊருக்குள் வந்திருந்தது.
கணபதி இன்னும் போதை தெரியாமல் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் நின்னிருக்க, முனீஸ்வரியும், அவளது மூத்த மகன் அரவிந்தனும் தம்பியை முறைத்துக்கொண்டு பஞ்சாயத்தில் நின்றிருந்தனர்.
முனீஸ்வரியும், கணபதியும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதனால் ஊர் வழக்கப்படி எந்த தண்டனையும் கொடுக்க முடியாது. ஆனால் பாலமுருகனுடனான திருமணத்தை ரத்து செய்ய அதிகாரம் இருக்க, பாலமுருகன் இல்லாத நிலையிலும் முனீஸ்வரியின் கழுத்திலிருந்த தாலி பறிக்கப்பட்டது. அந்த சடங்கை ஊர் பெண்களே! நிறை வெற்றி வைத்திருந்தனர்.
கணபதியை போலீசாரிடம் ஒப்படைத்த அருள் “எந்த காரணத்தை கொண்டும் இவன் வெளியே வரக் கூடாது. இருக்குற எல்லா கேஸையும் இவன் மேல போடுங்க. இவன மாதிரி அயோக்கியனுங்க உள்ளே கெடந்து சாகட்டும்” என்று சொல்ல ஊராரும் அதை ஆமோதித்தனர்.
“ஐயா அப்படியே எங்கம்மாவையும் புடிச்சி உள்ள போடுங்க. அது திருந்தாது” என்றான் அசோக்.
“பாத்தியா சின்ன பையன் எவ்வளவு மனம் வெறுத்து இருந்தா இப்படி பேசுவான்?” செல்வராஜ் கூற
“தம்பி அம்மா இல்லாம எப்படி டா?” ஞானவேல் அவனை பாவமாக பார்க்க
“என்னையும் அண்ணனையும் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல சேர்த்து விடுங்க, அம்மா கூட இருந்தா நாங்க கெட்டு போயிடுவோம். இப்போவே அண்ணா திருட ஆரம்பிச்சுட்டான். குடிக்கிறான். இன்னும் பெரியவனான இன்னும் என்னவெல்லாம் பண்ணுவானோ!” பதினாலே வயதான அந்த சிறுவனின் பேச்சு அங்கிருந்தவர்களை அசைக்கத்தான் செய்தது.
“டேய் என்ன டா உன் தம்பி சொல்லுறது எல்லாம் உண்மையா?” அருள்வேல் அரவிந்தனை அதட்ட சிலை போல் நின்றிருந்தான் அவன்.
“தம்பி நீ படிக்கிறியா டா?” என்று அசோக்கை பார்த்து கேட்க, அவன் தலையசைக்கவும் அவன் தலையை வருடியவன் புன்னகைக்க, அவனையே பாத்திருந்தாள் அன்பழகி.
யார் யாருக்கோ அழைப்பு விடுத்தவன் என்னென்னவோ ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசி விட்டு வைக்க, கணபதியை போலீசார் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
முனீஸ்வரியிடம் வந்தவன் “நாளைக்கு உன் பசங்க திருடனாகவோ! கொலைகாரனாகவோ! வளர்ந்து நிக்குறத நீ விரும்பியா?” உருமாளுடன் கேட்க கண்ணீரோடு இல்லையென்று தலையசைத்தாள் அவள்.
“சரி அப்போ.. பெண்கள் காப்பகத்துல உனக்கு வேலை போட்டு கொடுத்திருக்கேன். அங்க போய் ஒழுங்கா வேல பாரு. மாச சம்பளம் உன் பேருல வங்கிக் கணக்குல சேரும். உனக்குன்னு செலவு ஒன்னும் இருக்காது. மூத்தவன் கைத்தொழில் மையத்துல சேர்த்து விடுறேன் அங்க படிச்சி சுயமா ஏதாவது தொழில் கத்துக்குவான். சின்னவன் ஸ்கூல் போகட்டும். கொஞ்சம் நாள் பசங்கள பிரிஞ்சி இரு. அதுதான் உனக்கும் அவங்களுக்கும் நல்லது. போ.. போய் துணிமணிகளை எடுத்து வை”
அரவிந்தனிடம் வந்து அவனுக்கும் புத்திமதிகளை கூற அவனும் அமைதிக்காக கேட்டுக்கொண்டிருந்தான்.
எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. யாரோ அங்கிருந்தவர்களுக்கு குடிக்க, கேப்பங்கஞ்சி கூட வழங்கினார்கள். திடிரென்று ஒரு கிழவி அன்பழகியை கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.
தாயில்லா பெண், ஏமாந்த தந்தை இனி யார் இவளுக்கு இருக்கா? இனி யார் இவள கல்யாணம் பண்ணிக்குவா? இன்னக்கி நடந்தது நேத்து நடந்திருக்காது என்று என்ன நிச்சயம். தூக்க மருந்து கொடுத்து இவள நாசம் பண்ணிட்டானோ! அந்த கயவன். வீட்டுலையும் யாருமில்ல. கண்டவனெல்லாம் கைவைக்க பார்ப்பங்களே! இவ வாழ்க்கைக்கு ஒரு தீர்ப்பு சொல்லு ராசா. என்று பாட்டாக பாடி விட, அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த ஊரும் வாய்க்கு வந்தபடி பேச அன்பழகிக்கு தான் அழுகை, அழுகையாக வந்தது.
அன்னையும் இல்லை. தந்தை இருந்தும் இல்லை தான் எதற்கு உயிரோட இருக்கின்றோம் என்ற எண்ணம் தோன்ற கோவில் குளத்தை நோக்கி ஓட்டம் பிடிக்கலானாள்.
அவள் என்ன செய்ய விளைகிறாள் என்று அருள்வேளுக்கு புரிய அவனும் அவள் பின்னால் ஓட மற்றவர்களும் அவர்கள் பின்னால் ஓடி இருந்தனர்.
குளத்தை அண்மிக்கும் நேரம் அவள் கையை பிடித்து தடுத்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க, அதிர்ச்சியில் கன்னத்தில் கைவைத்து சிலையாக நின்று விட்டாள் அன்பழகி.
“அறிவிருக்கா உனக்கு? ஊரு ஒரு வார்த்த சொன்னதுக்காக இப்படி உசுர விடப்போற?”
“என்ன விடுங்க, நான் என் அம்மா கிட்டயே போறேன்” என்றவள் மீண்டும் குளத்தில் குதிக்க முனைய மீண்டும் கன்னத்தில் அறைந்தவனோ! அவளை தரதரவென இழுத்து வந்து அம்மன் சன்னிதானத்தில் நிறுத்தி அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து கட்டி இருந்தான்.
அதிர்ச்சியாக அவனை பார்த்தவள் வாயடைத்து நிற்க,
“என்ன பாக்குற அம்மன வணங்கிக்க” என்று முறைக்க அவள் தலை தானாக ஆடியது.
ஞானவேல், செல்வராஜுக்கு கூட அருள்வேல் இவ்வாறு செய்தது பெருத்த அதிர்ச்சிதான்.
ஊர் மொத்தமும் அவன் செய்த செயலில் ஸ்தம்பித்து நிற்க “இங்க பாருங்க கண்டபடி பேசுறத முதல்ல நிறுத்துங்க, கண்டபடி பேசி ஒரு பொண்ண தற்கொலைக்கு தூண்டினதா ஊரையே! கைது பண்ண வச்சிடுவேன் பாத்துக்கோங்க. இப்போ இவ என் பொண்டாட்டி… யாரு என்ன பேசினாலும் அமைதியா மட்டும் போவேன்னு நினைச்சிடாதீங்க சொல்லிட்டேன்” என்றவன் அன்பழகியின் கையை பிடித்து நடக்க, அவன் முகத்தை பார்த்தவாறே நடக்கலானாள் அன்பழகி.
வத்சலா இருவருக்கும் ஆலம் சுற்றி உள்ளே அமர்த்த, அருள்வேலின் பாதுகாப்பு படையிலிருந்து ஒருவன் மூலம் கனகவேலுக்கு விஷயம் பகிரப்பட்ட கனகவேல் மகனை அலைபேசியில் அழைத்து வாங்கு வாங்கு என்று வாங்க ஆரம்பித்தார். 
“இப்போ என்ன? உங்களுக்கு சொல்லாம கல்யாணம் பண்ணது தப்புனு சொல்லுறீங்களா? தற்கொலை பண்ண போன பொண்ண காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல தாலி கட்டிட்டேன். நான் வந்து பேசுறேன்” என்றவன் அலைபேசியை அனைத்திருக்க, அவன் பேசியதை கேட்டு மனதளவில் பெரும் அடி வாங்கினாள் அன்பழகி. 
உண்மைதான் நடந்த திருமணம் ஒன்றும் பெற்றவர்கள் ஆசிர்வாதத்தோடு நடந்த திருமணம் இல்லையே!. கட்டிய கணவனே! வேறு வழியில்லாது தாலி கட்டி விட்டேன் என்று கூறும் பொழுது அவனுடனான வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? தான் அவனுக்கு ஒரு பொழுதும் பாரமாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள் முட்டாள் பெண்.
ஓஹ்… அப்படித்தான் கல்யாணம் நடந்ததா? உங்க அப்பாதான் பிரச்சினை பண்ணாரா?” என்று முறைத்தாள் கோதை.
“ஏன் டி அதுக்கு என்ன முறைக்குற” புன்னகைத்தான்  கிருஷ்ணா.

Advertisement