Advertisement
அத்தியாயம் 23
கமலியை பார்த்த பாட்டி ஏதும் பேசாமல் செல்ல, ஆதேஷ் அம்மா கையை கட்டிக் கொண்டு கமலியை பார்த்து முறைத்தார்.
அம்மா..அவர் அழைக்க, போதும் என்னை அப்படி அழைக்காதே, பிள்ளையை விட பணம் உனக்கு முக்கியமாகி விட்டதோ? என் மூஞ்சிலே முழிக்காதே. இங்கிருந்து போய்டு என்று திட்டினார்.
கமலி தயங்கியவாறு அங்கே நிற்க, பாட்டி கவினை பார்த்து ஒழுங்கா போய் உன்னோட வேலைய பாரு. திரும்ப என்னோட பெயர்த்திக்கிட்ட வம்பு பண்ணுன.. உன்னை தலைகீழா தொங்க விட்டுருவேன் மிரட்டி சென்றார்.
லல்லி..என்று கமலி ஆதேஷ் அம்மாவிடம் வந்தார். பிரதீப் அவர் மீதுள்ள கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
ஏன்டி..பாரு நீ அர்ஜூனை எப்படி பேச வைச்சிருக்க? ஆதேஷ் அம்மா லலிதா திட்ட, நீயுமா லல்லி என்று கலங்கினார். மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்ப்பதை கவனித்து தனியே சென்று இருவரும் பேச கமலிக்கு அறிவுரை கூறினார் லலிதா. அர்ஜூன் அம்மாவிற்கு தான் அறிவுரை எட்டியதோ? இல்லையோ?
கவின் அம்மா அவனருகே வந்து, எழுந்திருடா என்று கத்தினார். அவன் எழ, அவனது சட்டையை பிடித்து இழுத்து அவன் அப்பா முன் நிறுத்தி மன்னிப்பு கேட்க சொன்னார்.
இல்லைம்மா.பையன் சொன்னது சரி தான். நான் உனக்கு சரியான புருஷனும் இல்லை. சரியான தகப்பனும் இல்லை என்று அவர் அழுது கொண்டே சென்றார்.
கவினை பிடித்து இழுத்து அவர் வீட்டிற்குள் சென்றவுடன் அடிக்க ஆரம்பித்தார். ஏன்டா இப்படியெல்லாம் பண்ற?
அம்மா..அவனே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனை அடிக்காதே என்று அகல்யா தடுக்க, நித்தி அப்பா உள்ளே வந்து அவரை சமாதானப்படுத்தி விட்டு கவினிடம், அந்த பொண்ண நீ விடாதே.. உனக்கு பிடிச்சிருக்குல மாப்பிள..விடாம முயற்சி செய் என்று அவர் சென்றார்.
கவின் அவ உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா? என்று அவனே அவனிடம் பேசிக் கொண்டு அவன் அறையிலே வேதனையில் சலசலத்துக் கொண்டிருந்தான்.
கமலி லலிதாவிடம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினார். பிரதீப் முகம் கடுகடுவென இருந்ததும் கமலியை பார்த்து முறைத்ததையும் கவனித்தான் ஆதேஷ். இரு தோழியரும் பேச சென்றவுடன் தான் அமைதியானான் பிரதீப். அப்பொழுது தான் துகிரா தாவணியில் இருப்பதை பார்த்து அவளை மெய் மறந்து பார்த்தான். அவள் பிரதீப் மீது கோபத்தில் தான் இருக்கிறாள். அவனோ காதலோடு பார்க்க, அவள் பார்வையில் காதல் தெளிந்தது. இவர்களை பார்த்த ஜானு துகிராவிடம், தாவணி உங்களுக்கு அழகா இருக்கு என்றாள். அவள் பார்வை மாறாது இருக்க,
உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு அண்ணாவை முறைக்கிறீங்க? அண்ணா..நீங்க எதுவும் செய்துட்டீங்களா?
நான் என்ன செய்தேன்? என்று துகிராவிடம், செல்லக்குட்டிம்மா என்ன ஆச்சு? என் மீது கோபமா? அவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே அவளை நெருங்கினான்.
என் அருகே வராதீங்க? என்று அவள் பின்னே விலகி கொண்டே திரும்பி ஓட ஆரம்பித்தாள்.
நில்லு துகி..என்று அனைவரும் கத்தினர். ஆதேஷ் பிரதீப்பிடம், நீங்க தான் சமாதானப்படுத்தணும். அவள் உங்க மீது தான் கோபமா இருக்கா.
என் மீது என்ன கோபம்?
ஆதேஷ் ஜானுவை மேலிருந்து கீழாக பார்த்தான். அவன் பார்வை ஜானுவிற்கு கூச்சத்தை கொடுக்க, அவள் கார் பின்னே சென்று நின்றாள்.
ஏன் ஜானுவை அப்படி பார்க்கிறாய்? பிரதீப் சினத்துடன் ஆதேஷை கேட்டான்.
அந்த தோட்டக்காரர் கூறியதை ஆதேஷ் கூற, இதுக்கா கோபம்?
மாமா..நீங்க அவளை பிடிச்சு கூட்டிட்டி வந்தீங்கன்னு அவள் நினைக்க, நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று புருவத்தை உயர்த்தினான்.
பிரதீப் துகிராவை தேட, ஆதேஷ் அவனிடம் அவள் நம்மை விட்டு தூரமாக செல்லவில்லை. மரத்தின் பின் தான் நிற்கிறாள். ஜானு மாதிரி இருக்கிறால் என்று அவள் எண்ணம் உள்ளது. அதனால் தான் அவளை காதலிக்கிறேன்னு சொல்லிறாதீங்க. அவ கஷ்டப்படுவா? அவளை பிடித்து.. அழைத்து வந்திருந்தால் மட்டும் நான் அவளை இங்கு விட்டு செல்வேன். உங்களுக்கு தெரியும் நான் நாளை கிளம்பி விடுவேன். போகும் போது அழைத்து சென்று விடுவேன். பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம். உங்க பதிலை சரியாக யோசித்து சொல்லுங்க என்று காரில் ஏறினான். காவேரியும் அப்பத்தாவும் உடன் ஏறினார்கள்.
ஜானு இதை கேட்டு, என்னால அண்ணாவோட சந்தோசம் கெட்டு விடுமோ? என்று பயந்து பிரதீப்பிடம் வந்து அண்ணா,போ..கூட்டிட்டு வா.
ஆதேஷ் கூறியது போல் தான் முதலில் பிரதீப், துகிரா ஜானுவை போல் இருக்கிறாள் என்று நினைத்திருப்பான். ஆனால் இருவருக்கும் வித்தியாசம் இருக்கு என்று இப்பொழுது தான் ஒவ்வொன்றாக யோசித்தான்.
அண்ணா, போ..போ.. பிரதீப்பை பிடித்து உலுக்கினாள். பின் ஏதோ எண்ணியவாறு பிரதீப் துகிரா இருக்குமிடம் நோக்கி ஓட, அண்ணா நில்லு..சரியா பேசீடுவியா? என்று ஜானு அவன் பின்னே ஓடினாள்.
காரிலிருந்து இறங்கிய ஆதேஷ் ஜானுவை தடுத்து, நீ என்ன செய்யப் போற? போகாதே..மாமாவே பேசிடுவார் என்றான்.
இல்ல மாமா. அண்ணா அவங்ககிட்ட தப்பா ஏதாவது பேசிட்டா என்று அவனை விலக்கி ஓடினாள். என்னை சேர்த்து ஓட வைக்கிறாளே? என்று ஆதேஷும் ஜானு பின் ஓடி அவர்கள் அருகே வந்தனர். பிரதீப் கொஞ்சமும் யோசிக்காது கோபமான தன்னவளை இழுத்து அணைத்துக் கொண்டு ஜானுவும் நீயும் வேறு தான் என்று அவர்களது வேறுபாட்டை கூறி துகிராவை சமாதானப்படுத்தி அவளது இதழ்களை சிறை பிடித்தான்.
ஓடி வந்த ஜானு வாய் பிளந்து தன் அண்ணனை பார்க்க, ஆதேஷ் அவர்களை பார்த்து விட்ட ஜானு கண்களை தன் கைகளால் மூடி தள்ளி இழுத்து வந்தான்.
கண்ணை திறந்த ஜானு விழிகளை அகல வைத்திருந்தாள். அவளை பார்த்து நான் தான் போகாதன்னு சொன்னேன்ல என்று ஆதேஷ் அவளை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
அவள் இதழ்களில் புன்னகையுடன்..போங்க மாமா என்று வெட்கத்துடன் ஓடிச் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். நான் என்ன சொன்னேன்? ஜானு வெட்கப்படுகிறாளா? என்று அவளையே பார்த்தான்.
சண்டைக்கார ஜானு நேற்றிலிருந்து வித்தியாசமாக தெரிகிறாலே என்று சிந்தித்து அவளை பார்க்க, அவள் அவன் அண்ணனை எண்ணி மகிழ்வுடன் சிரித்துக் கொண்டிருந்தாள். காரிலிருந்த அவன் அப்பா..என்னம்மா மருமகளே ரொம்ப சந்தோசமா இருக்க,
ஆமாம் அங்கிள் என்று என்னோட அண்ணா சந்தோசமா இருக்கான். இதுவரை அவன் எந்த பொண்ணையும் பார்த்தது கூட இல்லை. அண்ணி அவனுக்கு சரியா தான் இருப்பாங்க என்று அவள் மனநிலை வேறு பக்கமும் சாய ஆரம்பித்தது.
எனக்கு உடம்பு சரியில்லைன்னா..அவன் என்னை விட்டு நகர கூட மாட்டான் என்று அவள் கண்ணீர் வடித்தாள். வெளியிலிருந்து அவள் கண்ணீரை பார்த்த ஆதேஷ், அவளுக்கு ஏதும் செய்கிறதோ? என்று கார் அருகே ஓடி வந்தான். அவன் அம்மா கமலியிடம் பேசி விட்டு வந்த போது ரொம்ப ஆர்வமாக ஆதேஷ் ஜானுவை பார்த்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பான்.அவள் ஆர்வமாக அவன் அப்பாவிடம் பேசுவதை பார்த்து, தன் மகன் அருகே நின்று அவனை தான் பார்த்துக் கொண்டிருப்பார். அவன் முகம் மாற ஜானுவிடம் செல்வதை பார்த்து அவரும் காரிடம் வந்தார்.
ஜானு, அண்ணா உன்னை தனியே விட மாட்டான் காவேரி கூறினார். அப்பத்தாவும் அவ்வாறே முன் மொழிந்தார். அவள் அமைதியானாள்.
ஆதேஷ் அப்பா டிரைவர் சீட்டில் இருக்க, அவர் அருகே தான் ஜானு அமர்ந்தாள். அவளுக்கு காரில் பின் அமர்ந்து அதிகம் பழக்கமில்லை. பிரதீப் அருகே இருந்து பழக்கம். ஆதேஷ் காரில் அவள் அருகே ஏறி அமைந்தான்.
என்ன ஜானு, ஏதும் பிரச்சனையா? என்று கேட்டான்.
மாமா என்று கண்ணை துடைத்தவள் ஒன்றுமில்லை மாமா என்று அவன் அப்பாவை பாவமுடன் பார்த்தாள்.
எல்லாமே சரியாகிடும் மருமகளே என்று அவர் கூற, அவர் தோளில் சாய்ந்து அழுது விட்டாள்.
காரில் ஏறிய லலிதா, எதுக்கு அழுற ஜானு? பதறினார்.
ஆன்ட்டி..என்று தயங்கினாள்.
வீட்ல போய் பேசிக்கோங்க என்றார் அவர்.
சரிம்மா நீ அமைதியா இரு. எப்ப சொல்லணும்னு நினைக்கிறாயோ அப்பொழுது கூறு லலிதா கூற, அவள் அமைதியாக அமர்ந்தாள்.
ஆதேஷ் மூவரையும் மாறி மாறி பார்த்தான். துகிரா சிரிப்புடன் பிரதீப் கையை கோர்த்துக் கொண்டு கிளம்பலாமா? கேட்டாள். பின் சீட்டில் இருவரும் ஏறினார்கள். பிரதீப் துகிராவின் கையை விடவே இல்லை. பார்த்துக் கொண்டே வந்த ஜானு கண்களை மூடி திறந்தாள். பின் ஆதேஷ் தோளில் சாய்ந்தாள். அவன் திகைத்து அவளை பார்க்க, அவள் முகம் சோகத்தை தத்தெடுத்திருந்தது. அதனால் அவனும் அமைதியாக அவளுக்கு தோள் கொடுத்தான்.
இப்பொழுது தான் வெட்கப்பட்டாள். அதற்குள் என்ன சோகம்? மனதினுள் எண்ணியவாறு ஆதேஷ் இருந்தான்.
ஆனால் லலிதாவிற்கு தன் ஆசை நடந்து விடுமோ? என்று மகிழ்வுடன் அதை பார்த்து தன் கணவனை ஏறிட்டாள். தன் மனைவியை புரிந்த அவரும் சிறு புன்னகையுடன் காரை செலுத்தினார். பிரதீப்பும் துகிராவும் வேறொரு உலகில் இருந்தனர். காவேரியும் அப்பத்தாவும் ஜானுவை பார்த்தவாறே இருந்தனர்.
அர்ஜூன் காரை செலுத்த, காரின் பின் சீட்டின் ஓரத்தில் அஞ்சனம்மாவும், மறு ஓரத்தில் மோகனும் இருக்க தாரிகா நடுவே அமர்ந்திருந்தாள்.
மோகன் அஞ்சனம்மாவையே பார்த்துக் கொண்டே வந்தார். அர்ஜூனும் அவர்களை பார்க்க, தாரிகாவிற்கு ஒருவாறு இருக்க,
அண்ணா, காரை நிறுத்து..என்று மோகனை பார்த்து வழிவிடுங்க என்றாள்.
எதுக்கும்மா?
அவரை இறங்க சொல்கிறாள் என்று அவர் கேட்க, அவளது காலை பிடித்து தள்ளி விட்டு வெளியே வந்து, டேய்..முன் சீட்டில் அமர்ந்து கொள்கிறேன். ஓபன் பண்ணுடா அண்ணா?
அர்ஜூன் கதவை திறக்க, அவன் அருகே அமர்ந்தாள். அவன் இருவரையும் பார்க்க, மோகன் தாரிகாவை பார்த்து சிரித்து விட்டு, அஞ்சனாம்மா கையை பிடித்தார். அவர் பசங்க இருக்காங்க..என்று முணுமுணுப்பாக கூற புன்னகையுடன் அர்ஜூன் தாரிகா பக்கம் திரும்பினான். அவள் அவர்கள் காதலை ரசிக்கும் நிலையிலா இருக்கிறாள். அவள் கண்ணீருடன் இருக்க, தாரி நீ கொஞ்ச நேரம் தூங்கு என்று சீட்டை தாழ்த்தினான். அவளும் கண் மூடினாள். அவள் காதல் முடிவுற்றதை நினைத்து வேதனையுடன் இருந்தாள். கவின் கெஞ்சல்கள் அவளை மேலும் வாட்டியது. அருகே இருந்த அர்ஜூனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனுக்கு கவின்-தாரிகா பற்றி சிந்திப்பதா? இல்லை தன் அம்மா தன்னை பற்றி கூறியதை நினைத்து அழுவதா? என்று அவனும் கண்ணீருடன் வண்டியை செலுத்தினான்.
தாரிகா வீட்டிற்கு சென்று அஞ்சனாம்மாவையும் மோகனையும் விட்டு, தாரி..நீ இங்கேயே ஓய்வெடு என்றான் அர்ஜூன்.
நோ..அர்ஜூன். நான் உன்னுடன் வாரேன் என்றாள்.
என் மீது கோபமாடா? அஞ்சனாம்மா தாரிகாவிடம் கேட்டார்.
இல்லைம்மா. ஆனால் அம்மா திருமணம்?
எனக்கு அண்ணன் யாருமில்லை என்றார்.
அம்மா..நீங்க சொன்னது? என்று அர்ஜூன் கேட்டான்.
தாரி அவனை விட்டு வேறொவனுடன் இருக்க மாட்டா. நான் எப்படி என் பொண்ணை கஷ்டப்படுத்துவேன்? அந்த பையனுக்கு ஏதோ பிரச்சனை அதை இவள் மீது காட்டிவிட்டான். மத்தபடி அவன் நல்லவன் தான். இனி அவன் என் பொண்ணை அப்படி பேசக் கூடாது என்று தான் சொன்னேன்.
அவனுக்கு புரிய வைத்தால் சரியாகிவிடும் என்று அவர் தன் திட்டத்தை கூறினார். அம்மா..என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் தாரிகா.
எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு அம்மா. நான் கிளம்புகிறேன் அர்ஜூன் கூற, உன்னோட அம்மா பேசியதை தப்பா எடுத்துக்காதப்பா அர்ஜூன் என்று மோகன் கூற, அவரை முறைத்து விட்டு செல்ல அவனை நிறுத்தினார் அஞ்சனா.
அர்ஜூன் எல்லாமே சரியாகிடும் என்று அவரை அணைத்து விடுவிக்க, அம்மா..நாங்க கிளம்புறோம் என்று தாரிகாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினான்.
ஹாஸ்பிட்டல் சென்று ஸ்ரீ அறைக்குள் நுழைந்த அர்ஜூன் அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாது நேராக குளியலறைக்குள் நுழைந்தான். சவரை திறந்து அதனடியில் நின்றான்.
ஸ்ரீ சந்தேகமுடன், வெளியிருந்து அர்ஜூன்..அர்ஜூன்..என்று அழைத்தாள். அவன் அழுகை சத்தம் கேட்டு ஸ்ரீ பதறினான்.
அர்ஜூன், என்ன ஆச்சு? ஏதும் பிரச்சனையா? ஸ்ரீ கேட்க, தாரிகா சோர்வுடன் உள்ளே வந்தாள். ஸ்ரீ அவள் பக்கம் திரும்ப தாரிகா அவளை அணைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே, கவின் பேசியது இவள் பேசியது. பிரேக் அப் செய்தது. அனைத்தையும் சொன்னாள்.
என்ன பிரேக் அப் பண்ணீட்டீங்களா? ஸ்ரீ அதிர, இருவரது அழுகையும் தாங்க முடியாமல் ஸ்ரீயும் கஷ்டப்பட்டாள். அர்ஜூனை பற்றி தாரியிடம் கேட்டால்..நோ..அவளே கஷ்டத்தில் இருக்கிறாள் என்று கால்களை ஊன்றி நேராக வலியை பொறுத்துக் கொண்டு தாரிகாவை உள்ளிருக்கும் அறைக்கு அழைத்து சென்று அவளை ஓய்வெடுக்க வைத்து விட்டு வெளியே வந்தாள்.
அர்ஜூன் வெளிவராமல் இருக்க ஸ்ரீ கைகளை பிசைந்து கொண்டு அர்ஜூன்.. அர்ஜூன்.. என்று தயங்கி அழைத்தாள். அவனிடம் பதிலேதும் இல்லை. அவன் கதவை மூடாமலிருக்க, ஸ்ரீ தயங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். ஆடையுடனே தொப்பென்று நனைந்து கண்கள் சிவந்து அழுதவாறு அர்ஜூன் அமர்ந்திருக்க,
அர்ஜூன்..என்று பதறி அவனருகே வந்தாள். அவளும் நனைந்து கொண்டு, அர்ஜூன் என்னாச்சு? ஏன் இப்படி நனைந்திருக்கிறாய்? என்று சவரை அணைத்து விட்டு, அவள் காலை பார்த்து, நல்ல வேலை நனையவில்லை என்று காயத்தை பார்த்து கூறிக் கொண்டே அர்ஜூனை பார்த்தாள்.
அவள் அர்ஜூனிடம் நெருக்கமாக இருக்க, அவளது இதழ்களை கவ்வினான். பின் ஸ்ரீயை அணைத்து அழுது கொண்டு அவங்க அம்மா பேசியதை கொட்டி தீர்த்தான்.
அர்ஜூன்.. அம்மா ஏதாவது கோபத்தில் பேசி இருப்பாங்க என்று தேற்றினாள். இதுக்கெல்லாம் அழுவாங்களா?அவனை தேற்றப் பார்த்தாள்.
ஆனால் அர்ஜூனுக்கு இம்முறை அவன் அம்மா பேசியது அதிக காயத்தை உண்டாக்கி இருந்தது. அவனால் அவங்க பேசியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளும் நனைந்திருப்பதை அர்ஜூன் கவனித்து ஸ்ரீயை தூக்கி வெளியே வந்து, அவளது காயத்தை ஊதி விட்டு அவளை பார்த்தான். அவள் பார்வையில் காதலை பார்த்த அர்ஜூன் மனம் கொஞ்சம் அமைதியானது.
அர்ஜூன்..நீ சென்று ஆடையை மாற்றி விட்டு வா..என்றாள் ஸ்ரீ. அவளை பார்த்த அர்ஜூன் தாரிகாவை எழுப்ப நினைத்தான். பின் ஸ்ரீ ஆடைகளை வைத்திருக்கும் பையை எடுத்தான்.
என்ன பண்ற? நான் எடுத்துக்கிறேன் என்று ஸ்ரீ பதறினாள். ஏன் ஸ்ரீ நான் ஆடையை எடுத்து தானே தரப் போகிறேன்? எடுத்து தரக் கூடாதா? வினவினான்.
அவள் மெதுவாக ஆனாலும் நன்றாகவே நடக்கிறாள். காலை நீட்டி மடக்கும் போது தான் வலி இருக்கும். அதனால் அர்ஜூனிடம் வந்தாள். நான் நடக்கிறேன். எடுத்துக் கொள்வேன். நீ போ..சென்று மாற்று என்றாள் கனிவுடன்.
அவன் ஏதும் கூறாமல் மாற்ற சென்று விட்டான். ஸ்ரீயும் ஆடையை மாற்றினாள். அவள் டாப்பை மட்டும் தான் மாற்றியிருப்பாள். அதற்குள் அர்ஜூன் மாற்றி விட்டு வெளியே வந்தான்.
அவள் பதட்டத்தை பார்த்த அர்ஜூன் தாரிகா இருக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டான். அம்மாவின் திட்டம் நினைவுக்கு வந்தது. இன்னும் இரு நாட்களில் இவளுக்கு எல்லாவற்றையும் தயார் படுத்தணும் மனதினுள் நினைத்தான்.