மங்கை இதனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. வேலவன் தன்னை அடிப்பார் என்று கிஞ்சித்தும் எண்ணவில்லை. 

    

    இப்படி கத்தினால் மான அவமானத்திற்கு பயந்து அமைதியாக இருப்பார்கள் பணம் தானே பிரச்சினை என்று அதனைத் தந்து முடித்து விட எத்தனிப்பார்கள் என எண்ணி தான் திட்ட வந்தது ஆனால் அவரே எதிர்பாராமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சாபம் இட்டிருக்க வேலவனின் பொறுமை எல்லையை கடந்து விட்டிருந்தது. 

    

    

    “இனி உனக்கும் எனக்கும் எந்த ஒறவோ ஒட்டோ கிடையாது. நான் செத்தா நீ வராத நீ செத்தா நான் வரலை. போதும் ஆளை விடு”என்று கையெடுத்துக் கும்பிட்டதோடு தன் குடும்பத்தை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் வேலவன்.

    

    

    வெண்ணிலா அத்தனை நேரம் தன் இயல்பில் இருந்தவள் உடைந்து அழுதே விட்டாள்.

    

    

    பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாமோ என்றும் அவளுக்குத் தோன்றாமல் இல்லை. ஆனாலும் போனது கணவனின் உழைப்பு அல்லவா அதைக் கேளாமல் எப்படி இருக்க… மனம் தாங்காமல் தான் கேட்டது அதற்கு மங்கை இப்படி முடியைப் பிடித்து இழுத்து அடிக்க வருவார் என்றெல்லாம் கிஞ்சித்தும் நினைக்கவில்லை அவள்.

    

    அதுவும் பிள்ளை வந்திருக்கும் நேரத்தில் இப்படியா என்று குமைந்து போனாள். இன்னும் மேகனுக்குத் தெரிந்தால் எவ்வளவு வருந்துவானோ என்றும் மனம் அலைகழிப்பாய் இருந்தது அவளுக்கு. பிடித்து இழுத்ததில் பிள்ளைக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அதை எண்ணும் போதே மனம் பதறியது வெண்ணிலாவிற்கு. 

    

    ஏன் இப்படி ஆகி விட்டார் என்று பரிதாபமாகவும் இருந்தது.

    

    

    “நிலா நிலாம்மா”என்று வரலக்ஷ்மி அவளை உலுக்கவும் தான் நிதானத்திற்கு வந்தாள்.

    

    “இந்த தண்ணியை முதல்ல குடி”என்று நீட்ட மறுக்காமல் வாங்கியவளுக்கு கை நடுங்கியது.

    

    

    “என்னடாம்மா நீ”என்றவர் தானே கொடுக்க நடுங்கியபடி ஒரு வழியாக குடித்து முடித்தாள்.

    

    மேகனை அழைத்து உடனே வீட்டிற்கு வரும்படி கூற அவனுமே வெண்ணிலாவிற்கு எதுவுமோ என்று தான் ஓடி வந்திருந்தான்.

    

    அவளின் நலுங்கிய தோற்றம் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற தோற்றம்.

    

    

    “என்னாச்சு மா”வெண்ணிலாவை விட்டு பார்வையை அகற்றாமல் கேட்டவனிடம் நடந்ததை கூறி முடிக்க மேகனுக்கு மனதே விண்டு போனது.

    

    

    “போனது போகட்டும் னு விட வேண்டியது தானே வெண்ணிலா. எங்கப்பாவை வளர்த்ததுக்கான சம்பளமா நான் நினைச்சுட்டு போறேன். ஏன் அவங்க கிட்ட எல்லாம் பேசுற நீ”என்று கடிந்து கொண்டவன் “கோபத்தில் உன்னை தள்ளி விட்டு இருந்தா என்ன ஆகறது வெண்ணிலா.”என்றான் அயர்வாக

    

    

    “சரி விடுப்பா அவளே பயந்து போய் இருக்கா நீ இருந்தால் பார்த்துப்பனு தான் உன்னை வர வச்சேன் நீயும் பேசி கஷ்டப்படுத்தாத”என்ற வரலக்ஷ்மி இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பி விட்டார்.

    

    

    அறைக்குள் சென்ற வெண்ணிலாவோ சற்று ஆதங்கத்துடன் படுத்துக் கொள்ள ஆடை மாற்றி விட்டு இலகுவான உடையில் வந்தவன் அவளை பின்னிருந்து அணைத்தபடி படுக்க சற்று நிதானமாக தள்ளிப் படுத்து கொண்டாள்.

    

    

    “ஏய் என்னடி”என்றவன் மீண்டும் அவளருகே நெருங்கி அணைத்தபடி “அவன் அவன் உசுரைக் கையில் பிடிச்சுட்டு ஓடி வந்திருக்கான் உனக்கு கொழுப்பா… அந்தம்மா கிட்ட எதுக்கு போய் பேசின நீ”என்று அதட்ட 

    

    “இனிமே பேசல”என்றாள் விட்டேற்றியாக

    

    “ப்ப்ச் வெண்ணிலா…அதுவே கோபத்துல இருக்கு உன்னை ஏதாவது செஞ்சுட்டா”எனும் போதே 

    

    

    “உங்க பிள்ளைக்கு எதுவும் ஆகாம பாத்துக்கிறேன் போதுமா”என்றாள் வெடுக்கென்று.

    

    

    ‘ஓஓஓ இதான் கோபமா’என்று புன்னகைத்தவன் இன்னும் நெருக்கமாக படுத்து “ப்ராக்டீக்கலா ஒண்ணு சொல்வேன் கோச்சுக்காத. பிள்ளை கூட இன்னொன்று பெத்துக்கலாம். ஆனா பொண்டாட்டி நீ மட்டும் தான் இருக்க. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எப்படி இருக்க”என்று கேட்டு வைத்தான்.

    

    

    “இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை. பிள்ளை இன்னொன்னு பெத்துக்கலாம் தான் ஆனால் முதல் பிள்ளை”என்று அவள் நிறுத்த 

    

    

    “அந்த அறிவு உனக்கு இருந்துச்சாடி. பொருளா முக்கியம் இல்லை பணம் முக்கியமா இதை எல்லாம் நான் பல மடங்கு சம்பாதிப்பேன் அந்த அம்மா உன்னை தள்ளி விட்டு ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆனா உங்களை எங்க போய் தேடுவேன் கூடவே வரத் தான் செய்வேன் அப்படி போயிடலாமா மூணு பேரும்”என்று வெடுக்கென்று கேட்டு விட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.

    

    

    வெண்ணிலாவிற்கு தன் தவறு புரியாமல் இல்லை. அவளுமே எதிர்பார்க்கவில்லை மங்கை இப்படி ஆவேசமாக நடந்து கொள்வார் என்று.

    

    மேகன் கூறுவது போல தங்களுக்கு ஏதேனும் ஆகி இருந்தால் என்று நினைக்கும் போதே மனம் பதறியது .

    

    

    “இனிமே கவனமா இருக்கேன்”என்றவள் அவன் கையை சுரண்ட பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவளின் பக்கம் திரும்பி அணைத்தபடி படுக்க அவனது நெஞ்சம் படபடப்பதை இவள் உணர்ந்தாள்.

    

    “மேகன்”என்று அழைத்ததுமே “பேசாம இருடி. மனுசனை அலற விட்டுட்டு”என்று திட்டியபடி கண்களை மூடிக் கொண்டான்.

    

    

    **********

    

    மங்கைக்கு பித்துப் பிடித்த நிலை தான். பணத்தை கேட்டு கடன்காரன் வேறு நெருக்க கணவனும் மகனும் இல்லாததில் இன்னும் மன அழுத்தமாய் இருந்தார். என்ன ஒன்று அவரால் அதை உணரத்தான் முடியவில்லை. பார்க்கும் அனைவரின் மீதும் கோபம் பொங்கியது. ஏதேனும் திட்ட வேண்டும் போல மனம் உந்தியது. செல்வோர் வருவோரை எல்லாம் திட்ட மங்கை அங்கே குடியிருக்கக் கூடாது என்று அக்கம் பக்கம் வசிப்பவர்கள் வீட்டு ஓனரிடம் முறையிட அவரோ வேலவனிடம் தயக்கமாக பேச வேலவன் “அது உங்க விருப்பம் சார். பிடிக்கலைன்னா காலி பண்ண சொல்லிடுங்க .”என்று சொல்லி விட்டார். 

    

    “இல்லை நீங்க தான் குடி வைக்க சொன்னீங்க உங்களை கேட்கணுமே”என்ற வீட்டின் உரிமையாளர் அன்று மாலையே வீட்டை காலி செய்யும்படி மங்கையிடம் சொல்லி விட்டார்.

    

    மங்கை அதற்குமே வீட்டின் உரிமையாளரை பிடிபிடியென பிடிக்க அவரோ அதீத கோபத்தில் உடனேயே காலி செய் இல்லையேல் போலீஸில் புகார் அளிப்பேன் என்று எச்சரித்து விட்டு தர்மதுரைக்கும் தகவல் தர அவர் பதறியடித்து கொண்டு ஓடி வந்தார்.

    

    

    மங்கை ஆக்ரோஷமாக அவரின் சட்டையைப் பிடித்து உலுக்க பவேஷ் தான் சமாதானம் செய்து தாங்கள் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

    

    வேலவன் அமைதியாக வேடிக்கை மட்டும் தான் பார்த்தார். மனம் வலித்தது தான். ஆனால் அதை விட வலி வெண்ணிலாவை அவர் தாக்கியது. 

    

    இத்தனை வருடங்கள் வளர்த்தது எல்லாம் இப்படி தன்னை நிற்க வைக்கவா என்று தான் ஆதங்கம் பொங்கியது அவருக்கு.

    

    

    உண்மையில் தனக்கு இந்த இடம் வேண்டும் இல்லை எனக்கென்று வீடு கட்டிக் கொடு என்று கேட்டிருந்தால் கூட வேலவன் செய்து தந்திருப்பார். ஆனால் ஏன் தன்னை ஏமாற்றி இப்படி செய்ய வேண்டும்.

    

    

    “ஏன் வரு இவங்க இப்படி செஞ்சாங்க என் கிட்ட ஒரு வார்த்தை வீடு வேணும் வேலானு கேட்டு இருந்தா கூட கட்டி தந்திருப்பேனே… இப்படி உறவையே முறிக்கிற அளவுக்கு செஞ்சுட்டாங்களே”என்று வருத்தமாய் கூற 

    

    

    “அதையே நினைச்சுட்டு இருக்காதீங்க. வேதா வர்றதா சொல்லி இருக்கா நீங்க உங்க மனசை கஷ்டப்படுத்திக்காதீங்க. இங்க இருக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க மாப்பிள்ளை ஒரு மாசம் அவங்க கூட இருக்க சொல்றாரு போயிட்டு வருவோம்”என்றார் வரலக்ஷ்மி.

    

    

    வரலக்ஷ்மிக்கு மங்கையின் செயல் எதனால் என்று புரிந்து கொள்ள முடிந்தது. தான் வளர்த்த தம்பி தன்னை முன்னேற்றிக் கொண்டானே தவிர எனக்காக எதுவும் நிலையான சொத்து தேடி தரவில்லை என்ற எண்ணம் மங்கைக்கு. உண்மையில் மங்கைக்கு வேலவனின் வளர்ச்சியும் தர்மதுரையின் தம்பி தங்கைகளின் வளர்ச்சியும் பெருமையை தருவதற்கு பதிலாக பொறாமை எண்ணத்தை உண்டாக்கியதே மங்கையின் நிலைக்கு காரணம். அதனை வரலக்ஷ்மி சரியாக கணித்திருந்தாலும் கணவனிடம் எதுவும் கூறவில்லை. அதற்குமே வேலவனின் மனம் வருந்துமே தவிர வேறெதுவும் நடக்கப் போவதில்லை. தன்னை ஒருவர் அதிகாரம் செய்கிறார் எனும் போதே சுதாரித்து இருக்க வேண்டும் கை மீறி போன பிறகு எதிர்வினை ஆற்றினால் உறவுகள் முறிவது தான் மிச்சமாக இருக்கும்.

    

    *************

    

    நாட்கள் நகர வேலனின் இல்லமும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    

    

    வெண்ணிலாவை அவளின் வீட்டினர் வேதா விஷ்ணு இருவரும் வந்து பார்க்க வந்திருந்தனர். தன் பெற்றோரை ஊருக்கு அழைக்க வெண்ணிலா வளைகாப்பு முடிந்ததும் வருகிறோம் என்று சொல்லி விட்டனர். 

    

    

    “பார்த்தியா வேதாக்கா. மருமக பிறந்த வீட்டுக்கு கிளம்பினதும் இவங்களும் உன் கூட வந்திடுவாங்களாம். மகனை எல்லாம் யாரு நினைக்கிறா”என மேகன் வரலக்ஷ்மியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தான்.

    

    

    “அதுக்கு நீங்க இருக்கணும் சாரே… ஐயா இப்போ எல்லாம் நாடு நாடா சுத்துறதில் தான் பிஸி”என்று கிண்டல் செய்தாள் வெண்ணிலா. 

    

    “குத்தி காட்டறாளாம் வானரம்”என்று அக்காவிடம் முணுமுணுக்க 

    

    “ஓய் என் தங்கச்சிய கிண்டல் பண்றியா நீ “என்று விஷ்ணு மல்லுக்கு நிற்க

    

    

    வெண்ணிலா சிரித்தபடியே “சஞ்சுண்ணா நீயும் தான் இருக்கியே…என்னை வானரம் னு சொன்னா முதல்ல சந்தோஷப்படறது அவன் தான் ண்ணா”என்று விஷ்ணுவிடம் சொல்லியவள் மேகனை ஒரு பக்கம் முறைக்க அவனோ யாரும் அறியாமல் கண்களால் கெஞ்சி சும்மா என சமாளித்தான்.

    

    

    “ஆனா எங்க மாமாக்கு தைரியம் தான் இந்த ரெண்டு சண்டைக்கோழியையும் கல்யாணத்தில் கோர்த்து விட்டு இருக்கார் பாருங்க.”என்ற சஞ்சய் “வேதாக்கா இப்படி ஒரு டிவிஸ்டை நாம எதிர்பார்க்கலை”என்றான் கிண்டலாக.

    

    

    “அப்போ எதிரெதிர் வீட்டில் நின்னு சண்டை போடுவாங்க இப்ப பக்கத்தில் இருந்து சண்டை போடுறாங்க இல்லடா வர்மா”என்று வேதா கேலி பேச 

    

    வரலக்ஷ்மி வேகமாக “சண்டையா எதுக்கு சண்டை வர்மா நீ நிலாவை என்ன சொன்ன”என்று பதற்றமாக வர விஷ்ணு விழுந்து விழுந்து சிரித்தான்.

    

    

    “விஷ் சும்மா இருங்க”என்று அதட்டியவள் “ஆனாலும் இந்த வரா இவ்வளவு இன்னசென்டா இருக்க வேணாம்”என்று தாயின் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் “அப்போ சண்டை போட்டதை சொன்னேன் மா உடனே பயந்துடுவ”என்றாள் ஆதூரமாக.

    

    

    “ஆனாலும் மா நீங்க இப்போ கூட என் மேல தான் தப்பு அவ மேல மிஸ்டேக் இருக்காது ன்ற மாதிரியே தான் வர்றீங்க”என்று மேகன் புகார் படிக்க 

    

    

    “அதான உண்மை”என்றவரை கழுத்தோடு கட்டிக் கொண்ட வெண்ணிலா “அப்படி சொல்லுங்க அத்தை. இவர் எப்பவும் இப்படி தான் த்தை”என்றாள் வேண்டும் என்றே

    

    “ஆஹா போதுமே..”என்ற அகிலா.” உன் மாமியார் உனக்கு சப்போர்டா நின்னா நானும் வர்மனுக்கு தான் சப்போர்ட் செய்வேன்”என்றிட வர்மன் மிதப்பாக “பார்த்தியா”என்றான்.

    

    

    “போதும் போதும் போங்க அவங்களை கெடுத்து வச்சதே நீங்க தான்”என்ற சஞ்சய் “ம்மா நான் இப்படியே ஆபிஸ் கிளம்பறேன் ஈவ்னிங் ரெடியா இருங்க ஊருக்கு கிளம்புவோம்”என்று சொல்லி விட்டு செல்ல “டேய் இருடா நானும் வர்றேன்”என அவனோடு மேகனும் கிளம்பி விட்டான்.

    

    

    வெண்ணிலாவிற்கு ஏழாம் மாதமே வளைகாப்பு போட முடிவெடுத்தனர். வால்பாறைக்கு மொத்த குடும்பமும் செல்ல திட்டமிட்டனர். என்னவோ வேலன் சென்னையில் வேண்டாம் என்று மன அழுத்தத்தோடு கூற மேகனும் சரியென்று கூறி இருந்தான். அதனைப் பொருட்டே அனைவரும் வால்பாறைக்கு கிளம்ப முடிவு செய்து இருந்தனர்.

    

    

    …… தொடரும்.