Advertisement

அத்தியாயம் 6

 
பத்து நாட்களாக வாசுகி வாசனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவனும் பேசிப் பார்த்தான். சமாதானப் படுத்த முயற்சிக்கவில்லை.
 
“பொம்பள இவளுக்கே! இவ்வளவு அழுத்தம்னா? ஆம்பள எனக்கு எவ்வளவு இருக்கும்” அவனும் முறுக்கிக் கொண்டு திரியலானான்.
 
இந்த பத்து நாளும் வாசன் கடையிலிருந்து வரும் பொழுது வாசுகி தூங்கிப் போய் இருப்பாள். மனைவியின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக்கொள்பவன் மறு கணம் அவளே! வந்து பேசட்டும் என்று கோபம் தலை தூக்க அவளுக்கு முதுகுகாட்டி திரும்பி படுத்துக்கொள்வான்.
 
காலையில் வழக்கம் போல் எழுந்து அவனுக்கு சமைப்பவள் பரிமாறுவது கூட இல்லை. போய் கட்டிலில் சுருண்டு படுத்து விடுவாள்.
 
கல்யாணமாகி இந்த ஆறு மாதத்தில் வாசுகி இப்படி நடந்து கொண்டதே இல்லை. எதையும் வாசன் எதிர்பார்க்கும் முன் அவன் மனதை படித்தவள் போல் செய்து முடிப்பாள்.
 
இத்தனை மணிக்கு எந்திரிப்பான். இத்தனை மணிக்கு குளிப்பான் என்று இந்த ஆறு மாதங்களில் அவனை படித்து வைத்திருந்தாள். குளிக்கச் சென்றால் துண்டையைம் கைலியையும் கொடியில் வைத்து விடுவாள். அவன் கடைக்கு செல்ல தேவையான துணியையும் எடுத்து வைப்பாள்.
 
அந்த காய்கறி, சாப்பிட மாட்டேன், இதை சாப்பிட மாட்டேன் என்றெல்லாம் வாசன் சொன்னதில்லை. சமையலிலும் குத்தம் சொல்ல மாட்டான். அதற்காக பாராட்டவும் மாட்டான். ஆரம்பத்தில் ஆசையாக கணவனின் முகம் பார்த்து நிற்பவள் நாளாக நாளாக சோர்ந்து போய் “நம்ம சமையல் சுமார்தான் போல” என்று தன்னனையே! தேற்றிக்கொண்டு எதிர்பார்ப்பை கைவிட்டாள்.
 
சில சமயம் “ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குறாரு” என்ற எண்ணம் தோன்றாமலில்லை. அப்பொழுது “வாழ்க்கையில் எதிர்பார்ப்புக்கள் அதிகமாக அதிகமாக ஆசைகள் அதிகரிக்கும். ஆசைகள் அதிகமாக அதிகமாக தேவைகள் அதிகரிக்கும். குத்தம் சொல்லாம சாப்பிடுறாரே! அதுவே! போதும்” என்று தன்னையே! சமாதானப் படுத்திக்கொள்வாள்.
 
ஆறு மாதமாக நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை நிறுத்தி விட்டால் என்ன மாதிரியான உணர்வை வாசனுக்கு கொடுக்கும்? என்று வாசுகி யோசித்து பார்த்திருப்பாளோ! என்னமோ! பழக்கமான வேலைகளை மாற்றங்கள் ஏற்பட்டால் ஒரு வித வெறுமையும், ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பாங்கையும் வாசனுக்கு கொடுத்திருந்தது.
 
“அப்பா இருந்திருந்தால் வந்து பரிமாறி இருப்பாளோ! அவர் இல்லாததால் முரண்டு பிடிக்கிறாள். பிடிவாதக்காரி” வாசுகியை வசை பாடியவாறே இட்லியை தட்டில் வைத்து சாம்பாரை ஊற்றிக்கொண்டவன் ஒருவாய் உன்ன அதை வாயில் வைக்க முடியவில்லை. உப்பை அள்ளி போட்டிருந்தாள் வாசுகி.
 
“வேண்டுமென்றே செய்கிறாள்” என்ற கோபம் வாசனுக்கு வந்தாலும் அவன் சட்டியிலிருந்து பரிமாறிக்கொண்டதால் வாசுகியும் இன்னும் சாப்பிடவில்லை. அப்படியாயின் அவளும் இதைத்தான் சாப்பிட வேண்டும். என்னதான் ஆகிற்று இவளுக்கு? இப்படி கவனக்குறைவாக சமைத்து வீணடிப்பவள் இல்லையே!
 
ரகு ஊரிலிருந்து வந்து இங்கு அவன் அத்தையின் வீட்டில் தங்கி அங்கிருந்து வருகிறான். அவன் அத்தையும் உடம்பு முடியாமல் இருப்பவர் அதனால் சில சமயம் காலையில் எழுந்து சமைக்க முடியாமல் போனால் இவன் வெளியே பார்த்துக்கொள்வதாக வந்து விடுவான்.
 
குமாருக்கு அன்னை இல்லை. அவன் அண்ணி வேலைக்கு செல்கிறாள். சில நேரம் இரவு மீதமானதை கட்டிக்க கொடுத்து விடுவாள். அது மதியம் ஊசிபோய் இருக்கும்.
 
 
“சம்பாதிக்கிறதே! ஒருசான் வயித்துக்கு சாப்பிட, அதுவும் ஒழுங்கா கிடைக்கிலைனா? என்னதான் பண்ணுறது?” என்று வாசன் வாசுகிடம் புலம்பித் தள்ளுவான். 
 
இதனாலயே! மதியத்துக்கு சாப்பாடு சமைக்கும் பொழுதே! குமாருக்கும், ரகுக்கும் எடுத்துக்கொண்டு வர வேண்டுமா? என்று தினமும் கேட்டு விட்டுத்தான் சமைப்பாள்.
 
வாசனுக்கு சுடச் சுடச் சாதம் இருந்தால்தான் கொஞ்சம் அதிகம் சாப்பிடுவான். அதனால் இரவைக்கு அப்பொழுது சமைப்பாள். அதனால் மதியத்துக்கு மீதமாகும் அளவுக்கு வைக்க மாட்டாள். ஒரு புடி அரிசியையேனும் வீணாகி விடக்கூடாதென்பதில் கவனமாக இருப்பவள் வாசுகி.
 
கடந்த நான்கு, ஐந்து நாட்களாக சோர்வாகத்தான் தெரிகிறாள். முகமே ஒரு மாதிரியாக, கண்ணிலும் கருவளையம். தான் கடைக்கு செல்லும் பொழுதும் தூங்குகிறாள். இரவிலும் தூங்குகிறாள். ஒழுங்காக சாப்பிடுகிறாளா? தெரியவில்லை.
 
“நீ மட்டும் நல்லா
மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு கடைக்கு போற, உன் பொண்டாட்டி சாப்பிட்டாளாணு கூட பக்க மாட்டேங்குற” அவன் மனசாட்சி அவனை வசை பாட கையை கழுவியவன் அறைக்குள் நுழைய வாசுகி சுருண்டு படுத்திருந்தாள்.
 
“என்ன இவ இப்படி படுத்திருக்குற ஆளே! இல்லையே! உடம்புக்கு ஏதாச்சும் முடியலையோ! பிடிவாதக்காரி கோபத்துல சொல்லாம இருக்காளோ!” தனக்குள் பேசியவனாக அவளருகில் அமர்ந்து நெற்றியை மெதுவாக தொட்டுப் பார்க்க, வாசுகியின் உடம்பு சுடவில்லை.
 
கணவனின் தொடுகையில் கண்களை திறந்து பார்த்தவள் கண்களாளேயே! “என்ன” என்று கேக்க
 
“அத நான் கேக்கணும். உடம்புக்கு முடியலைன்னா வா ஹாஸ்பிடல் போலாம்” என்று அவள் கையை பிடிக்க,
 
“எனக்கு ஒன்னும் இல்ல. தலைதான் பாரமா இருக்கு, எந்திரிச்சா தல சுத்துது. கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சி சாப்பிட்டா சரியாகும். நீங்க போங்க”
 
“என்னது தல சுத்துதா? இப்படி கோபத்தை அடக்கி கிட்டு இருந்தா ப்ரெஷர் எகிறி மூல கொதிச்சி போய் இருக்கும். முதல்ல வா ஹாஸ்பிடல் போலாம்” அதிர்ச்சியாகி கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டான் வாசன்.
 
கணவனை நன்றாக முறைத்தவள் “ஜோக்கு சிரிப்பு வரல. சாப்டீங்கன்னா கடைக்கு கிளம்பி போங்க. நான் தூங்கணும்” எரிந்து விழ
 
“தின்கிறது, தூங்குறது அத தவிர உனக்கென்ன வேல இருக்கு” வாசனும் அசையாது முணுமுணுக்க
 
கண்ணால் அனலை கக்கியவள் கரி எஞ்சின் போல் முக்கால கோபத்தை வேக மூச்சுக்களால இழுத்து விட்டவாறு எழுந்து சமயலறைக்குள் சென்று அவன் சாப்பிட்டவைகளை சுத்தம் செய்யலானாள். வாசன் சாப்பிட்டு முடிக்கவில்லை என்பது கூட அவள் கண்களுக்கு தென்படவில்லை.
 
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. “தல சுத்துதுன்னு தானே! போய் படுத்தேன் அது ஒரு குத்தமா? என்னமோ! எல்லா வேலையையும் இவர் பாத்து வச்சிட்டு கடைக்கு போற மாதிரியும், நா காலுக்கு மேல கால போட்டுக்கிட்டு ஆட்டிக்கிட்டே டீவி பாக்குற மாதிரியும் பேசுறாரு. அவருக்கென்ன கடைல கல்லால உக்காந்தே! வேல பாக்குறாரு. இதுவும் பேசுவாரு இன்னமும் பேசுவாரு” மனதுக்குள் அரற்றியவள் சட்டி, பானையை உருட்டலானாள்.
 
உண்மையில் வாசுகி சொல்வது போல் வாசன் கல்லாவில் மட்டும் உக்காந்து இருப்பவனில்லை. கடையில் உள்ள அத்தனை வேலையையும் பார்ப்பவன்தான். மாதா மாதம் வரம்  சரக்கு, வாரா வாரம் வரும் சரக்கு என்று தரம் பிரித்து அவற்றை கடையில் வேலை செய்பவர்களோடு சேர்ந்து இறக்கி வைப்பது மாத்திரமல்லாது அடுக்குவது, எந்த பொருள் மீதமிருக்கு, எந்த பொருள் பத்தாமல் போகும் என்று எல்லாம் அந்த நாளே கணக்கு போட்டு விடுவான். வாசுகி வருவது மதியம் அந்த நேரத்தில் அவன் கல்லாவில்தான் இருப்பான் இந்த வேலைகள் இரவில் அல்லது காலையில் தானே! இருக்கும்.
 
“ஒன்னும் சொல்லிடக் கூடாது, ரோஷம் மட்டும் பொத்துக்கொண்டு வருது” வாசுகியின் கோபமும் செய்கைகளும் வாசனுக்கு சிரிப்பை மூட்ட, அவளை இழுத்துக்கொண்டு வந்து வாசலில் உள்ள பிளாஸ்டிக் கதிரையில் அமர்த்தியவன் “பேசாம இங்கயே! இருக்கணும். அசைய கூடாது” அதட்டி விட்டு சமயலறைக்குள் நுழைந்து இரண்டு இட்டிலியையும், கொஞ்சம் சட்டினியையும் ஒரு தட்டில் போட்டு கொண்டு வந்தவன் அவளுக்கு ஊட்டலானான்.
 
“என்னதான் இவருக்கு வேணுமாம்” என்று கோபமாக அமர்ந்திருந்தவளுக்கு கணவன் ஊட்டி விடவும் கண்களிலிருந்து கண்ணீர் குபீரென்று பாய்ந்து கன்னத்தில் வழிந்தது. இருக்காதா பின்ன கல்யாணமாகி வந்த இந்த ஆறு மாதத்தில் கல்யாணமன்று ஊட்டி விட்ட பிறகு இன்றுதான் ஊட்டிவிடுகிறான். 
 
“அன்னைக்கி எல்லாரும் கட்டாயப்படுத்தியதால ஒரு வாய்தான் ஊட்டி விட்டார்” அதையும் நியாபகத்தில் கொண்டு வந்தவள் வாசன் ஊட்டையதை முறைத்தவாறே! உன்ன ஆரம்பித்திருந்தாள்.
 
“சாம்பாருக்கு உப்ப அள்ளி போட்டிருக்க, இப்போ கண்ணீர் அபிஷேகம் பண்ணி சட்டினியிலும் உப்ப கொட்டிடாத. சாப்பிடு” சிரித்தவாறே இட்லியை ஊட்ட கையை அவள் வாயின் அருகே கொண்டு செல்ல
 
அவன் சொன்னதன் அர்த்தம் புரிய “அப்போ நீங்க சாப்பிடலையா?”
 
வேகமாக எழப்போனவளை தடுத்தவன் “முதல்ல நீ சாப்பிடு அப்பொறம் நான் சாப்பிடுறேன். மதியத்துக்கு சமைக்கிறேன்னு பானைய உருட்டாம ரெஸ்ட் எடு. நான் ஏதாச்சும் வாங்கி குமார் கைல கொடுத்து அனுப்புறேன். ரொம்ப முடியலைன்னா போன் பண்ணு ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம். ஒன்னும் இல்லனு நீயா முடிவு பண்ணி இருந்துடாத சரியா” வாசன் பேசிக்கொண்டே போக,
 
கணவன் ஊட்டுவதினாலையே! ஆசையாகவும் வேகவேகமாகவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் ஓடிச் சென்று வாந்தியெடுக்கலானாள்.
 
வாசன் பின்னாலையே! ஓடி போய் வாசுகியின் முதுகை தடவ சாப்பிட்ட மொத்தத்தையும் குடல் வெளியே வரும் அளவுக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தாள்.
 
வாந்தியெடுத்தவள் தலை சுத்துகிறது என்று அவன் தோளிலையே சாய்ந்துகொள்ளவும் வாசன் பயந்தே! விட்டான். வாயை கழுவி தண்ணீர் புகட்டி அவளை அணைவாக பிடித்துக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் தெரிந்த ஆட்டோவை மருத்துவமனைக்கு செல்வதற்காக அழைக்க,
 
“தூங்கி எந்திரிச்சா சரியாகிடும். உங்களாலதான். தல பாரமா இருக்குதுனு சொன்னனப்போ என்ன கோப படுத்தி, சமாதானப்படுத்துறேன்னு ஊட்டி விட்டு இப்போ வாந்தி எடுக்க வச்சிட்டீங்க” சோர்விளையும் அவனிடத்தில் கடுகாடுத்தாள் வாசுகி.
 
இம்முறை வாசன் பதிலுக்கு பதில் பேசவில்லை. சிறு முறுவலோடு மனைவியை பார்த்தவன் அவள் தலையை கோதியவாறு “நாள் தள்ளி போய் இருக்கா” என்று கண்களில் சிறு எதிர் பார்ப்புடன் கேட்டான்.
 
ஒருநொடி வாசுகிக்கு கணவன் என்ன கேக்கின்றான் என்று புரியவில்லை உணர்ந்தவளின் மேனியில் அப்படி ஒரு சிலிர்ப்பு ஓடி மறைய, பரவசமாக உணர்ந்தவள் எழுந்தமர்ந்து கணவனைக் கட்டிக்கொண்டு ஓவென அழ ஆரம்பித்து விட்டாள். 
 
கல்யாணம் முடிந்து மூன்றாம் மதம் முடிவத்துக்குள்ளேயே! ஆளாளுக்கு இன்னும் கர்பமடையவில்லையா? என்ன இன்னும் நல்ல சேதி சொல்லல என்று வாசுகியை காணும் பொழுதெல்லாம் விசாரிக்க ஆரம்பித்திருந்தனர்.
 
“இப்போதான்! கல்யாணம் பண்ணோம் அதுக்குள்ள நல்ல சேதி சொல்ல சொன்னா என்னனு சொல்ல?” வாசுகியும் சிரித்து விட்டு கடந்துதான் போனாள். ஆனால் அது அவ்வாறில்லை என்று ஊர் சொல்லா விட்டாலும் உறவுகள் பேசியது அவள் மனதை ரணப்படுத்தி இருந்தது.
 
வாசுகியின் அத்தை மகள் ஒருத்திக்கு வளைகாப்பு வரவும் வாசன் “இது லேடீஸ் பங்ஷன் தானே! நீ மட்டும் போயிட்டு வா. வேணும்னா நா உன்ன கொண்டு போய் விட்டுட்டு வரேன்” என்று பொறுப்புள்ள கணவனாக பஸ்ஸில் அழைத்து சென்று அவள் வீட்டில் விட்டு விட்டு வந்தான். வரும் பொழுதே! சொன்னதுதான். “கடையை போட்டுட்டு அழைத்து வர மாலை வர முடியாது. டென்ஷனாகாம ஒரு நாள் அங்க தங்கு நாளை காலைல நானே! வந்து உன்ன கூட்டிட்டு வரேன்” என்றான்.
 
வாசுகியும் கல்யாணமான பின் தங்கைகளோடு ஒருநாள் தங்க முடிந்ததே! என்ற சந்தோசத்தில்தான் வீட்டுக்கு சென்று மாலை வளைகாப்புக்கும் சென்றாள்.
 
ஆனால் அங்கும் “என்ன வாசுகி கல்யாணம் ஆகி நாலு மாதம் இருக்கும் இல்ல இன்னும் குழந்தை தங்களனா ஒரு நல்ல டாக்டரை பாரு” என்று ஒரு அத்தை பெண் ஆரம்பிக்க
 
“இப்போவே! குழந்தை பெத்துக்க இஷ்டம் இல்லையோ என்னவோ! என்று இன்னொருத்தி கேலி செய்ய, வாசுகி பதில் சொல்லும் முன்
 
அங்கே வந்த பத்மா இவர்களின் பேச்சில் குறுக்கிட்டு “என்னது குழந்தை பெத்துகிறத தள்ளி போட்டு இருக்கீங்களா? வாசனுக்கு என்ன வயசாகுது தெரியுமா? இப்போவே! முப்பத்தி ஐந்து. இன்னும் வயசான எப்போ குழந்தை பெத்துக்க போறீங்க. சட்டு புட்டுன்னு குழந்தையை பெத்துக்கோங்க” என்று அட்வைஸ் மழையை பொழிய நொந்து விட்டாள் வாசுகி.
 
 
பத்மா சொல்லித்தான் அங்கிருந்தவர்களுக்கு வாசனின் வயதே! தெரிந்தது. பார்க்க இருபத்தி எட்டு போல் இருப்பவனுக்கு முப்பத்தி ஐந்து வயதா? என்று அவன் வயதை பற்றியும், தோற்றத்தை பற்றியும் இளசுகள் விவாதிக்க ஆரம்பித்திருக்க, அவர்களின் பேச்சு பிடிக்காமல் வாசுகி அவ்விடத்தை விட்டு வெளியேற அதற்கிடையில் வாசலுக்கு சென்ற பத்மா வாசுகி குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டு விட்டதாக அங்கிருந்த பெண்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 
“ஊருல இவங்க பெரிய குடும்பம். இவங்க ஒரு பெரிய மனிசினு கூப்பிட்டா என்னமா பத்த வைக்குது” வாசுகி பத்மாவை எரிச்சலாக பார்த்து விட்டு அகல முற்பட அவளை அழைத்த அவளுடைய பெரிய அத்தை கலைவாணி பத்மா எதோ நல்லது சொல்வதாக நினைத்து மீண்டும் வாசுகிக்கு “சீக்கிரம் குழந்தை பெத்துக்க” என்று சொல்ல அத்தையை முறைக்க முடியாமல் சிரித்து வைத்தாள். 
 
பூர்ணா அவ்விடத்துக்கு வரவும் வம்பு வளர்க்கவென்றே பத்மா “என்ன பூர்ணா உன்ன மாதிரி உன் பொண்ணுக்கு குழந்தை பெத்துக்க ஒன்னும் அவசரம் இல்ல போல” என்று குத்திப் பேச
 
“குழந்தை பாக்கியம் எல்லாம் வரம் பத்மா அக்கா. அதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் எல்லாருக்கும் கிடைச்சிடாது. சில பேர் குழந்தை பெத்துக்குறத தள்ளி போடுறாங்க. சில பேருக்கு உடனே! தங்கிடும். வயசு போய்ட்டா தங்காது”
 
இளசுகள் பேசும் பொழுது பூர்ணா அங்குதான் இருந்தாள். பத்மா பேசியதும் அவள் காதில் விழுந்திருக்கும். வேண்டுமென்றேதான் பொதுவாக பேசுவது போல் இவ்வாறு பேசுகிறாள் என்று வாசுகிக்கு புரிய அங்கு இருக்கவே! பிடிக்கவில்லை. விழா முடிந்த கையேடு. நாதனை வற்புறுத்தி பஸ் ஏற்றி விட சொன்னவள் அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை வீட்டில் வந்துதான் கொட்டித் தீர்த்தாள்.
 
வீட்டுக்கு வந்த வாசனுக்கு இன்ப அதிர்ச்சியாக வாசுகி கட்டிலில் படுத்திருக்க “ஹேய் நீ எப்போ வந்த? யார் கூட வந்த?’ என்று கூச்சலிடாத குறையாக என்னவோ! அவளை பலநாள் பிரிந்திருந்தது போல் கட்டியணைக்க, 
 
அவனைக் கட்டிக்கொண்டு அழுது கரைந்தவள் திரும்பாத திரும்ப சொன்னது “சீக்கிரம் குழந்தை பெத்துக்கலாம். நாளை காலையிலையே! ஹாஸ்பிடல் போலாம். ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுக்கலாம்” என்று மட்டுமே!
 
விழாவில் என்ன நடந்தது என்று வாசனுக்கும் தெரியும் பி.பி.சி, ரொய்ட்டர், போன்ற உலக செய்திகளை மிஞ்சி விடும் பத்மாவின் தகவல் அனுப்பும் சேவை. வீட்டுக்கு வந்த உடன் நித்யாவை அழைத்து உப்பு, புளி, காரம் தூக்கலா சேர்த்து சுடச்ச்சுட வாசன்- வாசுகியின் வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தனக்கு தெரியும் என்பதை கூறியது மட்டுமல்லாது. வாசனுக்கும், வாசுகிக்கும் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளும்படி புத்திமதி செல்லுமாறும் கூறி இருந்தாள்.  
 
தனது அத்தையின் வாய் ஜாலத்தை பற்றி நன்கு அறிந்த நித்யாவும் பவ்வியமாக கேட்டுக்கொண்டு, வாசனை அழைத்து பத்மா வாசுகியிடம் ஏடா கூடமாக ஏதாவது பேசி இருக்கக் கூடும், நீ தன்மையாக பேசி எடுத்துக் கூறி புரியவை என்றுதான் கூறி இருந்தாள்.
 
வாசுகியை அணைத்து ஆறுதல் படுத்திய வாசன் அடுத்த நாளே! மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றான் அது வாசுகி சொன்னது போல் குழந்தை சீக்கிரம் பெற்றுக்கொள்ள ட்ரீட்மெண்ட் எடுக்கவல்ல. அவளுக்கு இப்பொழுது தேவை மனநிம்மதி. ஆளாளுக்கு பேசியதில் மனஅழுத்தில் இருக்கிறாள்.
 
“இந்த ராங்கி கிட்ட நாம பேசி புரிய வைக்க ஒரு வாரமாகும் சொல்லுறவங்க சொன்னாதான் கேட்டுப்பாங்க” என்று அரசமருத்துவமனைக்குத்தான் அழைத்து வந்திருந்தான்.
 
அதற்கும் அவனை முறைத்தாள் அவன் மனைவி. “குழந்தை விஷயம். இங்கெல்லாம் ஒழுங்கா பிரசவம் கூட பார்க்க மாட்டாங்க, ட்ரீட்மெண்ட் பாப்பாங்களா?” என்றிருந்தது அவள் பார்வை.
 
“வா…” என்று அவன் அழைத்து சென்றதும் மகப்பேற்று மருத்துவரிடம்தான். “இவங்க இருவத்தஞ்சி வருஷத்துக்கு மேல பிரசவம் பாக்குறாங்க. எனக்கென்னமோ உன்னையும் இந்த உலகத்துக்கு இவங்கதான் கொண்டு வந்திருப்பாங்கனு தோணுது. அதான் இங்க கூட்டிகிட்டு வந்தேன்” என்று கண்சிமிட்ட வாசுகிக்கும் புன்னகை தானாகா மலர்ந்தது.
 
இருவரும் உள்ளே செல்ல வெள்ளை கோட் அணிந்து, கழுத்தில் டெட்ஸ்கொப் மாலையாக தொங்க, புன்னகை முகமாகவே அமர்ந்திருந்தார் அந்த பெண் மருத்துவர். அவர் மேசையின் மீது திருமதி ராஜலக்ஷிமி என்ற பெயர் பலகை இருக்க, இருவரும் வணக்கம் வைக்க அவரும் பதில் வணக்கம் வைத்தார்,
 
உள்ளே சென்ற வாசன் திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது என்றும் தங்களது வயதுகளையும் கூறியவன், குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும், எதிர்பார்போடும் இருப்பதாகவும் கூற,
 
“என்னோட சர்வீஸ்ல இப்படி ஒரு ஜோடிய பார்க்குறது இதுதான் முதல் தடவ, பொதுவா எல்லோரும் குழந்தை உண்டான பிறகு வருவாங்க, இல்ல, குழந்தை உண்டாகலானு வருவாங்க, யு ஆர் கிரேட்” என்றவர் வாசுகிடம் மாதவிடாய் சக்கரம் சரியாக எல்லா மாதமும் ஒரே மாதிரிதான் இருக்கிறதா? என்று கேட்டுக்கொண்டவர் சில விட்டமின் மாத்திரைகளையும், உன்ன வேண்டிய, மற்றும் கூடாத உணவுகையும் கூறி வழி அனுப்பி வைத்தார்.   
 
இன்று அதற்கான பலன் வாசுகி கற்பமானதுதான் என்று வாசன் கூற அழுகையை நிறுத்தியவள்     
 
“உங்களுக்கு எப்படி தெரியும். இது..இது..” என்று வயிற்றில் கைவைத்தவாறே அவன் முகம் பார்த்து நிற்க,
 
“நீ அக்ஷராவை பார்த்திருக்கியா? எப்பவும் உர்ர்ன்னுதான் இருப்பா.. அவ உண்டானபோ நித்யாவும் இப்படித்தான். எப்போ பார்த்தாலும் கோபமா எடுத்தெறிஞ்சி பேசிக்கிட்டேதான். இருந்தா. கிட்ட நெருங்க முடியாது அனல் அடிக்கும்” என்று சிரித்தவன் வாசுகி முறைக்கவும்
 
“பாத்தியா நான் சொன்னது சரிதானே! போய் முகத்தை கழுவி ரெடியாகு. இப்போ ஆட்டோ வந்துடும். ஹாஸ்பிடல் போய் கண்போர்ம் பண்ணிட்டு வந்துடலாம்” என்று சிரிக்க, வாசுகி போய் தயாராகி வரவும் ஆட்டோ வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது.
 
மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்து கர்ப்பம் என்று உறுதி செய்துகொண்டவர்களை அவர் வாழ்த்தி அந்த நேரத்தில் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை எழுத்திக் கொடுத்து, கர்ப்பம் தரித்து முதல் மூன்று மாதத்துக்கு வரும் பிரச்சனைகளை விலாவரியாக கூற
 
வாசனோ! “டாக்டர் ரொம்ப கோவப்படுறா, எப்போ பார்த்தாலும் மொறச்சிகிட்டே திரியிறா டாக்டர். கொஞ்சம் என்னனு கேளுங்க” என்று கோர்த்து விட வாசுகி அவர் முன்னிலையிலும் கணவனை முறைக்க ஆரம்பித்திருந்தாள்.
 
சிரித்தவாறே “சில பேருக்கு எரிச்சல், கோபம் இந்த மாதிரியான சிம்டம்ஸ் இருக்கு வீட்டுல இருக்குறவங்கதான் புரிஞ்சிகிட்டு நடந்துக்கணும். இல்லையா வாசுகி” என்று அவளிடம் கேட்க புன்னகையை மட்டும் அவருக்கு பதிலாக கொடுத்தவள் அமைதியாகவே! அமர்ந்திருந்தாள்.
 
“அடுத்த மாதம் வாங்க” என்று சொல்லவும் வெளியே வந்தவர்களை நர்ஸ் வந்து “சார் உங்கள டாக்டர் கூப்பிடுறாங்க. மேடம் நீங்க இங்கயே உக்காருங்க” என்று வாசுகியை வெளியே! அமர்த்தி விட வாசன் மாத்திரம் உள்ளே! சென்றான்.
 
“உக்காருங்க வாசன். பயப்படாதீங்க. ஏற்கனவே! அவங்க குழந்தையை நினைச்சி மனஅழுத்தத்துல இருந்ததா சொன்னீங்க, இப்போ அவங்களுக்கிருக்குற சிம்டம்சனால அவங்கள நல்லா பாத்துக்கணும், வேலா வேலைக்கு சாப்பிட்டு மாத்திரையை கரெக்ட்டா போடணும். மாசத்துக்கு ஒருக்கா இங்க கூட்டிட்டு வந்துடுங்க, முக்கியமா அவங்கள டென்ஷன் பண்ணாம பாத்துக்கணும் சரியா. கடைசியா மூணு மாசத்துக்கு ரெண்டு பேரும் விலகியே இருங்க. புரிஞ்சுதா?”
 
“என்னது?” வாசன் புரிந்தும் புரியாமலும் சத்தமாகவே! கேட்டு விட அந்த மருத்துவரோ! தனது இரு கைகளின் ஆள் காட்டி விரல்களையும் ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றை குறுக்காக வைத்து, பின் விலக்கி கூடாது என்று கண்களாளேயே! சொல்ல வாசனுக்கு வெக்கமாகிப்போக ஆள் காட்டி விரலால் மூக்கை தேய்த்து புன்னகையை மறைத்தவன் அவரிடமிருந்து விடைபெற்றான்.
 
வெளியே வந்தவனின் புன்னகை முகத்தைக் கண்டு வாசுகி என்னவென்று கேட்க, வீட்டுக்கு போய் கூறுவதாக கூறியவனின் புன்னகை மட்டும் மாறவே! இல்லை.
 
வீட்டுக்கு வரும் பொழுதே! நித்யாவையும், ராமநாதனையும் அழைத்து விஷயத்தை கூறி இருந்தான் வாசன். சத்யாவை அழைத்து பேசலாம் என்று பார்த்தால் ராமநாதன் வேண்டாம் என்று விட்டார். வீட்டுக்கே! சென்று சொல்லிவிட்டு வரும்படி கூறி இருந்தார். அலைபேசியில் கூறினால் புஷ்பா தப்பாக நினைத்து விடுவாளோ! என்ற அச்சம்தான்.
 
நித்யா உண்டான போது நித்யா வாசனை அழைத்துதான் முதலில் கூறி இருந்தாள். பத்மாவுக்கு அலைபேசியில் கூறியதை பெரும் குத்தமாக ராமநாதனிடம் வந்து முறையிட வாசனுக்கே! “தாயில்லாத மருமகள். பதினைந்து வயதில் கர்ப்பமாக டில்லியில் இருக்கிறாள் போய் அவளுக்கு உதவியாக இருக்க எண்ணமால் அவள் இங்கு வந்து இவங்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்கள்! என்ன இவங்க இப்படி பண்ணுறாங்க” என்றுதான் எண்ணத்தோன்றியது.
 
புஷ்பாவும் பத்தமாவுக்கு சளச்சவளில்லை. ஏற்கனவே! கவிதாவை வாசனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத கோபத்தில் சிறு தவறு செய்தாலும் அதை பெரிது படுத்த காத்திருப்பாள். ராமநாதன் கூறுவது சரியென்றுபட ரகுவை அழைத்தவன் இன்று கடையை தனியாக சமாளித்துக்கொள் நான் வர எப்படியும் மதியமாகும் என்றவன்
 
வாசுகியிடம் “உங்க வீட்டுக்கு எப்படி தகவல் சொல்லணும்? அலைபேசியில் சொன்னால் போதுமா? இல்ல நேர்ல போய் சொல்லனுமா?” என்று கேக்க,
 
“சொன்ன உடனே! சந்தோசமா ஓடி வந்துட போறாங்களா என்ன?” என்று கேக்க துடித்த நாவை அடக்கி புன்னகைத்தவள் “போன் பண்ணி சொன்னா போதும். நானே! அப்பா கிட்ட சொல்லிடுறேன்” என்று சொல்ல
 
“வா வந்து முதல்ல சாப்பிட்டு மருந்து சாப்பிடு”
 
“இல்லங்க நான் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு சாப்பிடுறேன்” கெஞ்சலாக கணவனை பார்க்க சரி என்றவன் சமயறைக்குள் நுழைந்திருந்தான்.
 
இஞ்சி, பூண்டு நெய்யிட்டு தாளித்து, கேரட், கொஞ்சம் முட்டைக்கோஸ், தக்காளி, வெங்காயக்கீரை சிறிதாக நறுக்கி போட்டு இட்லியை போடி செய்து முந்திரியும் சேர்த்து இன்ஸ்டன் இட்லி உப்புமா செய்து ஹாட் பேக்கில் வைத்தவன்
 
“சரி நீ ரெஸ்ட் எடு நான் சத்யா வீடு வரைக்கும் போயிட்டு வரேன். அப்பாவும் நைட்டு வந்துடுறதா சொல்லிட்டாரு” என்றவன் கதவை பூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.
 
பொதுவாக பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களை அன்னையிடம்தான் பகிர்ந்துகொள்ளாவாள். தந்தையிடம் சொல்ல கூச்சப்படுவாள் என்பது கூட வாசனுக்கு தெரியவில்லை. அது அவன் நித்யாவோடு வளர்ந்ததால் மட்டுமல்ல. நித்யாவின் ஒவ்வொரு விடயத்திலும் அவன் இருந்ததால்.
 
நாதனோடு பேச அவனுக்கு பிடிக்கவில்லை. அதனாலயே! தான் அழைத்துக் கூறுவதாக சொல்ல எனோ அவனுக்கு தோன்றவில்லை. சரி நீயே சொல்லிவிடு என்றவன் சத்யாவின் வீடு நோக்கி புறப்பட்டு விட்டான். 
 
பஸ் தரிப்பிடத்துக்கு வந்தவன் முன்னாடி இருந்த கடையை கண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டான். அது ராமநாதனின் கடை. இன்று வேறொருவரின் கைக்கு சென்றிருக்கும் அவர்களின் கடை.

Advertisement