Advertisement

அத்தியாயம் 3

 
நித்யகலாவின் வீட்டு அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது. அவள் அலைபேசியை எடுக்கக் காணோம். மறுமுனையில் வாசன் விடாது டயல் பண்ணிக்கொண்டே இருந்தான். அவளின் மொபைலும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கணணிப் பெண்குரல் கூற, அக்ஷரா கேம் விளையாடியே அனைத்திருப்பாள். என்று அவனக்கு நன்கு தெரியும். ரயிலில் ஏறியதிலிருந்து அவள் கையில்தான் நித்யாவின் அலைபேசி இருந்தது. வாசனுக்கு இருந்த பதட்டத்தில் ஆதியின் கையில் அலைபேசி இருப்பதையே மறந்து விட்டான்.    
 
இங்கு இருக்கும் பொழுதும் நித்யாவின் அலைபேசி அக்ஷராவிடம் இருக்கும். ஆத்மநாதன் அழைத்துப் பேசினால்தான் அவளிடம் அலைபேசி பறக்கும். இல்லையாயின் இவளே! அன்னை பிசி என்று பதில் மெஸேஜ் அனுப்பி விட்டு கேமில் மூழ்கி விடுவாள்.
 
“இந்நேரம் டில்லி போய் சேர்ந்திருப்பாளே!” தான்தானே! அவளையும் குழந்தைகளையும் ரயில் ஏத்திவிட்டு சாப்பிட உணவும், குடிக்க தண்ணீர் பாட்டில், ஜூஸ் பாட்டில், குழந்தைகளுக்கு கொரிக்க சிப்ஸ் பாக்கேட்ஸ், படிக்க புத்தகம் எல்லாம் வேறு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தேனே!”
 
வாங்கிக் கொடுப்பவருக்கு கணக்கு பார்ப்பவனல்ல வாசன். அவன் மனநிலை செய்த ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து கொண்டிருக்க, வேண்டியவை வேண்டாதவை என்று எல்லாமே! மனதில் முட்டி மோதிக்கொண்டிருந்தது அவன் தவறல்லவே!
 
“டிராபிக்கில் மாட்டி இருந்தாலும் இந்நேரம் வீடு போய் சேர்ந்திருக்கணுமே! ஏதாவது பிரச்சினையா?” பலமுறை தொடர்பு கொண்டும் அலைபேசியை எடுக்கவில்லை என்றதும் அவன் மூளை அப்படித்தான் சிந்திக்காத தோன்றியது.
 
“இருக்காது” ஆழ்மனம் கூற எதற்கும் இன்னொரு தடவை அழைத்துப் பார்க்கலாம். அவள் பேசாவிட்டால் மாப்பிளைக்கு பேசிப் பார்க்கலாம்” என்ற முடிவுக்கு வந்தான் வாசன்.
 
ராமநாதன் வாசனோடு பேசும் பொழுது ஸ்ரீராமும் அவன் மனைவி மதுவும் அங்குதான் அமர்ந்திருந்தனர். ஸ்ரீராம் மனைவியை எதோ சைகை செய்வதும், அவள் எதோ சைகை செய்வதும் வாசனின் கண்ணில் பட்டாலும் அது அவர்களுக்கு எதோ ரகசிய பாஷை என்று கண்டுகொள்ளாமல் தந்தையோடு பேசிக்கொண்டிருந்தான்.
 
வாசனின் அலைபேசி அடிக்கவும் சத்யா அழைக்கவே! ஏதாவது பிரச்சினையை இழுத்து கொண்டாளோ! என்றுதான் வாசனின் உள்ளம் எண்ணியது ஏனெனில் அன்று இருவரும் தேனிலவுக்கு கிளம்புவதாக சொல்லி அரைமணித்தியாலத்துக்கு முன்பாகத்தான் ரமேஷ் அழைத்துப் பேசி இருந்தான். 
 
நிதானமாக அலைபேசியை காதில் வைத்த வாசன் “சொல்லுமா சத்யா கிளம்பிட்டீங்களா?” என்று வினவ
 
“எங்க போக? என் சந்தோசம் மொத்தமும் பறிபோய் விடும் போல இருக்கு. முதல்ல நீ கிளம்பி இங்க வா” அழுகுரலில்
சத்யா கூற
 
“என்னமா ஆச்சு” நிதானம் தவறாது கேட்டான் வாசன்.
 
“என்ன அத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே! நீ கவிதாவ கல்யாணம் பண்ணிக்கணும் எங்குறதுக்காக வேண்டி என்று புஷ்பா அத்த சொல்லுறாங்க. நீ வந்து கவிதாவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு” அழுவதை நிறுத்தாது சத்யா சொல்ல அதிச்சியடைந்தான் வாசன்.
 
கவிதா ரமேஷின் ஒரே தங்கை. சத்யாவுக்கு திருமணம் பேசும் பொழுது இப்படி ஒரு விஷயத்தை கூறி இருந்தால் கண்டிப்பாக வாசன் இந்த திருமணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டான். அது கவிதா கணவனை பிரிந்து வந்து ரமேஷின் வீட்டில் வாழ்வதனால் அல்ல. அவள் பிரிந்து வந்த காரணத்தினால்.
 
கவிதாவின் கணவன் ஆக்சிடண்டில் சிக்கி படுத்த படுக்கையில் இருக்கும் பொழுது கணவனை பிரிந்து வந்து விட்டாள். அவள் மனம் மாறி செல்லக் கூடும். அல்லது கணவனை விவாகரத்து செய்து மறுமணம் செய்வது அவள் தனிப்பட்ட விருப்பம்.  அப்படி ஒருத்தியை மணந்து தனக்கும் அதே! நிலை வந்தால் விட்டு செல்ல மாட்டாள் என்றால் என்ன நிச்சயம். சத்யா என்ன புரியாமல் பேசுகிறாள் என்று வாசனுக்கு கோபம் கூட வந்தது.
 
ராமநாதனும் பதட்டமாக என்னவென்று வினவ, வாசன் அலைபேசியை ஸ்பீகர்மூடில் போட சத்யா உளறுவதை அங்கிருந்த அனைவரும் கேட்க நேரிட்டனர்.
 
“அறிவிருக்கா உனக்கு உன் அத்தைதான் எதோ உளறுவதாக சொன்னால் நீயும் அத சொல்லிக்கிட்டு இருக்க?” என்று ராமநாதன் திட்ட சத்யாவின் அலைபேசி ரமேஷின் கைக்கு மாற்றப்பட்டது புரியவே! அவர் அமைதியானார்.
 
“மாப்புள நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. எங்கம்மா என் கல்யாணம் நடக்கும் போதே! இந்த விசயத்த பேசலாம் என்றுதான் சொன்னாங்க, கவிதாக்கும் இஷ்டமில்லை, உங்களுக்கும் இஷ்டமில்லன்னு தெரியுது. நான் சத்யாவை கல்யாணம் பண்ணிக்கணும் எங்குறதுக்காக இந்த விசயத்த சொல்லாம மறைச்சிட்டேன். எங்க வீட்டுல இட வசதி பத்தாதில்ல கவிதாவை உங்களுக்கு கட்டிக் கொடுத்து நானும், சத்யாவும் உங்க கூட உங்க வீட்டுலயே! தங்கலாமேன்னுதான் அம்மா சொல்ல வராங்க” ரமேஷ் பேசிக்கொண்டே போக ஸ்ரீராமின் முகம் இருண்டது என்றால் இந்த புறம் சத்யா நடுங்கலானாள்.
 
“அதுக்கென்ன மாப்புள நீங்களும் சத்யாவும் எப்போ வேணாலும் வந்து இங்க தங்குங்க. அதுல என்ன இருக்கு. அதுக்காக உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?” நாசூக்காக வாசன் மறுக்க,
 
“இல்ல அது முடியாது” சத்யா மறுப்பது வாசன் காதிலும் நன்றாக விழுந்தது.
 
“ஏன் முடியாது” அலைபேசியை காதில் வைத்தவாறே கேட்டான் ரமேஷ்.
 
“நம்ம வீட்டுல போய் தங்க முடியாது. வீட்டைத்தான் ஸ்ரீராம் வித்துட்டானே!”
 
“என்ன சொல்லுற” ரமேஷ் அதிர்ந்தான் என்றால் இந்த பக்கம் வாசனும் ராமநாதனும் அதிர்ச்சியாக ஸ்ரீராமை பார்க்க முழித்துக்கொண்டிருந்தான் அவன்.
 
அவன் மனைவி மதுவோ! அங்கே நடப்பவைகளை எதுவும் தனக்கு சம்பந்தமில்லை என்று டிவியில் ஓடும் படத்தில் மூழ்கி இருந்தாள்.
 
 ராமநாதன் கலாவதியை பெண் பார்த்து முறையாகத்தான் மணந்து கொண்டார். அந்த காலத்தில் கல்யாணத்தை செய்து வைப்பார்கள்! தவிர சம்பாத்தியத்தை பற்றி பெரிதும் யோசிக்க மாட்டார்கள். வாசனும், நித்யாவும் அடுத்தடுத்து பிறந்த பின்னும் ராமநாதன் பெரிதாக தொழிதில் அக்கறையில்லாது சுற்றிக்கொண்டிருக்க, ராமநாதனின் அண்ணிகளின் குத்தல் பேச்சில் கலாவதி மனமுடைந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் தன்னால் எந்த பிளவும் வந்து விடக்கூடாதென்று பொறுமையாக இருந்து விட்டாள்.
 
இதை கவனித்த ராமநாதனின் அன்னைதான் மகனுக்கு புத்திமதி கூறி தனியாக கடையும் வைத்துக் கொடுக்க தொழிலில் முன்னேற்றம். நல்ல விலைக்கு இந்த வீடு தோட்டத்தோடு அதுவும் நகரத்துக்கு அருகே! கிடைக்க யோசிக்காமல் கலாவதியின் பெயரில் வாங்கி விட்டார்.
 
வீடு வாங்க கொஞ்சம் பணம் கடன் வாங்கியதில் வரும் வருமானத்தில் பாதிக்கும் மேல் கடன் கொடுக்க வேண்டியதில் பெரிதாக அவளுக்கென்று நகையோ! அவளை அழைத்துக்கொண்டு எங்கும் செல்லவோ! ராமநாதனால் முடியவில்லை. கலாவதி பொறுமையின் சிகரம். அதையெல்லாம் கணவனிடம் எதிர்பார்க்காமல் இன்னும் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொடுத்து விட்டு இறைவனடி சேர்ந்து விட்டாள்.
 
வீட்டை வாங்கியதிலிருந்து அவள் எங்கும் சென்றதும் இல்லை. அவள் கால் தடம் படாத இடம் இந்த வீட்டில் இல்லவே இல்லை. அவள் கையால் நட்டுவித்த மரங்கள்தான் எத்தனை எத்தனை. கனிதரும் மரங்களும், பூச் செடிகளும் வித விதமாய் இன்றும் அவள் நினைவுகளை சுமந்திக்கொண்டுதானே! இருக்கின்றன. ராமநாதனை பொறுத்தவரையில் இந்த வீடு அவருடைய காதல் சின்னம். அதை அவர் அறியாமல் இளைய மகன் விற்று விட்டானா? கோபத்தின் உச்சிக்கே! சென்றவர் ஸ்ரீராமை அறைந்து விட்டுத்தான் என்ன? ஏது? என்றே விசாரிக்க ஆரம்பித்தார்.
 
கணவனை மாமனார் அடித்ததும் திடுக்கிட்ட மது “என்ன மாமா கை நீளுது? காசு செலவு பண்ணும் போது மட்டும் எந்த கேள்வியும் யாரும் கேக்கல. இப்போ மட்டும் கேக்குறீங்க?”
 
“அப்போ வீட்டை வித்த காசுலதான் இவன் சத்யா கல்யாணத்த நடத்தினானா?” வாசன் உருமாளோடு கேக்க, ஸ்ரீராம் ஒன்றும் அறியா பிள்ளை போல் மனைவியை பேச விட்டு அமர்ந்திருந்தான்.
 
“ஆமா மாமாவோட ஆஸ்பிடல் பில்லையும் அதுல சேர்த்துக்கோங்க” என்றவள் டீவி ரிமோட்டை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் அமர்ந்து விட வாசனுக்கு அப்படியொரு கோபம். 
 
வீட்டை அடமானம் வைத்து வாசன்தான் காசு எடுத்துக்கொடுத்தான். அந்த கடனை வாசன் இன்னும் கட்டிக்கொண்டிருக்க, இவ்வளவு செலவு செய்கின்றானே! அந்த கடனை கட்ட கூட வாசனுக்கு காசு கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லை. வீட்டில் அண்ணன், தந்தை இருவரும் இருக்க இவன் எவ்வாறு பத்திரத்தை எடுத்து வீட்டை விற்றான் என்ற கேள்வி எழ ஸ்ரீராமை தூக்கி உலுக்கியவன் “பத்திரம் வீட்டுலதான்! இருந்தது? உன் கைக்கு எப்படி வந்தது? அதுவுமில்லாமல் பத்திரத்தின் நகலை வைத்து கடன் எடுத்திருக்கும் போது நீ எப்படி வீட்டை வித்தாய்? வீடு அம்மாவின் பெயரில் இருப்பதால் இறப்பு சான்றிதழும் தேவை படுமே!” யோசனையாக கேள்விகள் வாசனிடமிருந்து வந்து விழ”
 
“இங்க பாருங்க மாமா எதுவானாலும் பொறுமையா பேசுங்க” மது சொல்ல
 
அவளை முறைத்த வாசன் கர்ஜனை குரலில் ஸ்ரீராமை மிரட்ட, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். அதை ஈடு கட்ட பணம் தேவை பட்டதால் வீட்டு பத்திரத்தை சத்யாவிடம் கேட்க சத்யாதான் வீட்டை வித்துடலாம் என்று ஐடியா கொடுத்ததாக கூறினான் ஸ்ரீராம்.
 
ராமநாதனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தான் இறக்கும்வரை இந்த வீட்டில் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்க தான் பெற்ற இரண்டும் செய்திருக்கும் வேலை உயிரோடு கொன்றுவிட்டதாகவே! எண்ணினார்.
 
ரமேஷிடம் அலைபேசியை சத்யாவிடம் கொடுக்குமாறு கூறும் முன்பாகவே! மறுமுனையில் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சத்யா பதறியடித்துக் கொண்டு ரமேஷிடம் அலைபேசியை பிடுங்கி,  ஸ்ரீராம் கூறியதை மறுத்து ஸ்ரீராம்தான் கல்யாணத்தை விமர்சையாக செய்யலாம் வீட்டை விற்று விடலாம் என்று கூறியதாக கூறினாள்.
 
தான் வளர்த்த இருவரில் யார் உண்மையை கூறுகிறார்கள் யார் பொய் கூறுகிறார்கள் என்று குழம்பிய வாசன் எதேச்சையாக திரும்ப மது கேலியாக அவனை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு அது அவள் கைகாரியம் என்று புரிந்தது.
 
ஸ்ரீராமிடம் பேசி சத்யாவிடம் ஆசை வார்த்தைகளால் மயக்கி பத்திரத்தை எடுத்து வீட்டை விற்று பழியை சத்யா மேல் போடுவதுமில்லாமல் ஸ்ரீராமை தான் கைக்குள்ளும் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறாள்.
 
“இரண்டு பேரும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது இப்போவே! பெட்டி படுக்கையை கட்டணும். இனி இந்த பக்கம் ஊர்க்கு சொந்தமென்று தேடிக்கொண்டு வரக்கூடாது” வாசன் கறாராக சொல்ல எந்த குற்ற உணர்ச்சியுமில்லாமல் மது சென்னை செல்ல பயணப்பை எடுக்க உள்ளே செல்ல திரும்பினாள்.
 
 
“ஸ்ரீராம்” என்று கத்திய வாசன் “வீட்டை எவ்வளவுக்கு வித்த
 
“ஒரு கோடி ரூபாக்கு” பயந்து நடுங்கியவாறே சொன்னான் தம்பி.
 
மது கணவனை முறைத்துக்கொண்டிருக்க அவளை அண்ணனும், தம்பியும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.        
 
“கடனை கழிச்சி, உன் தொழில்ல காசு போட்டுட்ட, அப்பாக்கு செலவு பண்ணின, சத்யா கல்யாண செலவு போக இன்னும் கைல எவ்வளவு இருக்கு” கர்ஜனை குரல்தான்.
 
“இருப்பது லட்சம் இருக்கு”
 
செக் புக் கைல இருக்கில்ல”
 
“எதுக்கு கேக்குறீங்க?” மது பதட்டமாக முன்னால் வர
 
அவள் முகத்துக்கு நேரே கையை ஓங்கிய வாசன் பின்பு கையை இறக்கி தனது வாயில் ஒற்றை விரலை வைத்து “ஷ்…. பேசாத…. நீ நேத்து வந்தவ நான் என் தம்பி கிட்ட பேசிகிட்டு இருக்கேன்” என்று விட
 
அவன் கண்களில் இருந்த சீற்றமும் கோபத்தால் முறுக்கேரி இருந்த அவன் தேகமும் அவனின் கோபக் குரலும் மதுவுக்கு அவனை நெருங்கவே! அச்சத்தை தோற்றுவிக்க எடுத்து வைத்த இரண்டடியையும் பின்னாடி வைத்திருந்தாள்.
 
வாசனின் சத்தத்தில் ஸ்ரீராமின் தலை தானாக ஆட தம்பியிடம் செக்புக்கை கொண்டு வருமாறு கூறியவன் எழுதுமாறு கூறி கையொப்பமிட்டு காசோலையில் கையில் எடுத்தவன் யோசனையாக “பணத்த உன் பேர்ல தானே! போட்டிருக்க? இல்ல உன் பொண்டாட்டி பேர்ல போட்டிருக்கியா? இல்ல ஜோஇன்ட் அக்கவுண்ட் வேற வச்சிருக்கியா?”
 
“இல்லன்னண்ணே! இதுதான்” பவ்வியமாக பதிலளித்தான் சகோதரன். 
 
“ஏதாவது தில்லுமுல்லு பண்ண தம்பின்னு கூட பக்க மாட்டேன் போலீஸ் கம்பளைண்ட் கொடுப்பேன்” என்று வாசன் மிரட்ட
 
மதுவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. “நீங்க ஒண்டிகட்ட தானே! முப்பது வயசு தாண்டிறிச்சு இப்போ யாரு உங்களுக்கு பொண்ணு கொடுக்க போறா? மொட்டையா இருக்குற உங்களுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு? இந்த வீட்டை கட்டிக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ண போறீங்க? அப்படியே! உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க ஆச வந்தாலும் கவிதா மாதிரி வாழ்க்கையை இழந்த யாராவது உங்களுக்கு வாழ்க கொடுத்தாதான் உண்டு” இன்னும் என்னென்னமோ வாய்க்கு வந்த வார்த்தைகளை பேச அதிர்ச்சியிலும், மனவேதனையில் அமர்ந்திருந்த ராமாந்தன் எப்போ எழுந்தார்? எப்படி அவள் அருகில் வந்து நின்றார் என்று யோசிக்கும் முன் அவளை அறைந்திருந்தார்.
 
மருத்துவமனையில் படுத்திருக்கும் பொழுதுதான் தான் குடும்பத்தை கவனிக்காதது அவருக்கு புரியவே! ஆரம்பித்தது. வாசனின் வயதில் அவருக்கு ஸ்ரீவத்சனும் பிறந்திருக்க மகனை நினைத்து கவலையடைந்தார்.
 
மனைவியை நினைத்து குடித்து வாழ்க்கையை அழித்துக்கொள்ள முடிவெடுத்த தன்னை நல்ல கணவன் என்று ஊர் சொல்லாது கேடுகெட்ட அப்பா என்றுதான் ஊர் தூற்றும் என்று நன்கு புரிந்துக்கொண்டார்.
 
தான் இறப்பதை பற்றி அவர் கவலையடையவில்லை. இறந்தால் கலாவதியிடம் தானே! போய் சேரப் போகிறேன் என்று மகிழ்ந்தார். ஆனால் இறப்பதற்கு முன்னால் வாசனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும், தான் முழுநேரக் குடிகாரனாக இருப்பதால் ஒருவேளை அவனுக்கு கல்யாண வாழ்க்கையில் பிடித்தமில்லையோ! என்றும் அஞ்சினார்.
 
சத்யாவை வீட்டில் வைத்துக்கொண்டு வாசனின் திருமணத்தை பற்றி பேச முடியாது. அதனால்தான் சத்யாவின் திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு பேச்சை ஆரம்பித்தார். மறுத்து விட்டால் நித்யாவிடம் கூறி பேசச் சொல்லலாம் என்று தான் நித்யா போகும்வரை இருந்து இந்த பேச்சை எடுத்தார். அவர் ஒன்று நினைக்க, வீட்டுக்கு வந்த மருமகளே! அவரின் மூத்த மகனைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள். வாசன் அவருக்கு குலசாமி. அவர் குடும்பத்தை காத்த தெய்வம். அவனை போய் பேசினால் தாங்குவாரா? ராமநாதன் விட்ட அறையில் மதுவின் காதில் “நோய்ங்” என்ற சத்தம் கேட்டலானது.
 
ஸ்ரீராம் “அப்பா” என்று கத்த
 
“பொறக்கும் போது என் கலாவ கொன்னுட்டு பொறந்தவன் தானே! நீ. நான் அவளுக்கு வாங்கின வீட்டை என்ன அவ உயிரோட இருந்தா அவளையும் வித்திருப்ப. அவ உன்ன பெத்தெடுத்த வயித்தையும் வித்திருப்ப” அவ்வளவு கோபம் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் வார்த்தைகளில் ஈட்டியை இறக்கினார் ராமநாதன்.
 
ஸ்ரீராம் என்றாலே! அவருக்கு எப்போதும் செல்லம்தான். தந்தை இவ்வாறு பேசிய அதிச்சியில் திகைத்து நின்றான் ஸ்ரீராம்.
 
“என்ன பாக்குற எப்போ என் கலாவுக்காக நான் வாங்குன வீட்டை எனக்கு தெரியாம வித்தியோ! அப்போவே! நீ எனக்கு பிள்ளை இல்லனு ஆகிட்டா. நீ என் மூஞ்சிலையே! முழிக்கக் கூடாது. வெளிய போ” 
 
“இது உங்களுக்கு தேவைதான்” என்ற பார்வையோடு இருந்த வாசன் போகும் அவர்களை தடுக்காது சோபாவில் தொப்பென்று அமர்ந்து விட ராமநாதன் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
 
அங்கே புஷ்பா சத்யாவை வசை பாடிக்கொண்டிருந்தாள். வீட்டை நம்பித்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்ததாகவும் கவிதாவை வாசனுக்கு கட்டி வைக்க எண்ணியதாகவும் புலம்பித் தீர்க்க
 
கவிதாதான் “அப்போ ஏன்  அப்போவே! வாசன் அத்தானுக்கு என்ன கட்டி வைக்க நினைக்கல? அப்போ அவர் சொந்தமா கடை வச்சிருக்கல, என்னதான் சொந்தமா வீடு இருந்தாலும் சொந்தமா தொழில் இல்லாததால என்ன வெளிய கட்டிக் கொடுத்த. இப்போ அவர் தொழில்ல முன்னேறி வர்றதால் உன் கண்ணு உறுத்துது” என்று அன்னையை அதட்ட
 
“அடியேய் கூறு கெட்டவளே! உனக்கும் சேர்த்துத்தாண்டி நான் பேசிக்கிட்டு இருக்கேன். வந்த மகராசி வரும் போதே! சொந்த வீட்டை வித்துட்டு வந்திருக்கா. இங்க ஏற்கனவே௧! இடம் பத்தாது. இவ ராசி இன்னும் என்னெல்லாம் செய்ய காத்திருக்கோ” அன்னையின் பேச்சில் கவிதாவின் முகம்தான் இருண்டது.
 
புஷ்பாவின் மூத்த இரண்டு மகன்களுக்கும் கொஞ்சம் வசதியான இடத்தில் பெண் எடுத்து இருப்பதால் அவர்களை வெளியேற்ற புஷ்பா விரும்ப வில்லை. காரணம் மகள்களை பார்க்க வரும் சம்மந்திகள் அள்ளிக்கொண்டு வரும் அத்தியாவசிய பொருட்களால் வீட்டுச் செலவென்பதே இல்லை.
 
கவிதாவும் கணவனை பிரிந்து வந்து மூன்று மாதங்களாக வீட்டில் இருக்க, ரமேஷ் சத்யாவை விரும்புவதாகக் கூறி பெண் கேட்கும்படி சொல்ல பலவற்றை யோசித்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தாள். இப்போ என்னவென்றால் அந்த வீடே இல்லை என்றாகிவிட்டது.
 
உள்ளே நுழைந்த ரமேஷ் அன்னையின் சத்தம் ஓங்கி ஒலிப்பதைக் கண்டு சத்யா உளறி விட்டாள் என்று புரிய
 
“அதான் வீடு இல்லனு ஆகிருச்சே! வாசனுக்கு இனி கவிதாவை பேச வேண்டியதில்லையே!” என்றவாறே ரமேஷ் வர
 
“ஆமாடா…. அத்தோட இவளையும் இவ வீட்டுல கொண்டு போய் விட்டுடு” மனசாட்ச்சியே இல்லாது கூறினாள் புஷ்பா.
 
சத்யா அதிர்ச்சியாக ரமேஷை பார்க்க “என்ன விளையாடுறியா? கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள மருமகள வீட்டை விட்டு துரத்த சொல்லுற. இப்போ என்னதான் உனக்கு பிரச்சினை?”
 
“நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சது வாசனுக்கு கவிதாவ கட்டி வைக்கணும், அந்த வீட்டுல உங்க ரெண்டு பேரையும் குடிவைக்கணும் என்றுதான்” புஷ்பா கறாராக சொல்ல.
 
“அப்போ கல்யாணம் பேசும் போது ஏன் இதை பத்தி பேசல?” அமைதியாக அமர்ந்திருந்த ரமேஷின் தந்தை பாண்டிராஜ் கேட்க முழித்தாள் புஷ்பா. “ஏன்னா உனக்கே தெரியும் நீ இதப்பத்தி பேசினா வாசனோ! ராமநாதனோ! இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க அப்படித்தானே! கல்யாணம் நடந்தா பொண்ணு வாழ்க்கையை நெனச்சி சம்மதிப்பாங்க என்று அவசர அவசரமா கல்யாணத்த நடாத்திட்ட. உன் பையனும் அவன் ஆசைப்பட்ட பொண்ண கட்டிக்கணும் என்று அமைதியா இருந்துட்டான்”
 
“அவங்க சும்மா ஒன்னும் கட்டிக் கொடுக்கலையே! சீரும் சிறப்புமா நீ கேட்ட எல்லா நகையையும் போட்டுத்தான் கல்யாணம் பண்ணி அனுப்பி இருக்காங்க. அதுவும் நீ சொன்ன அதே! வீட்டை வித்து” ரமேஷ் சொல்ல பார்வையாளர்களாக அமர்ந்திருந்த ரமேஷின் அண்ணிகள் இருவரும் சத்யாவை கேலியாக பார்த்து வாய் பொத்தி நகைக்கலாயினர்.
 
“இத சொன்னதுக்கே! இதுங்க சிரிக்குதுங்க, பத்திரத்தை எடுத்துக்கொடுத்தது நாமதான்னு தெரிஞ்சா கேவலமா பாப்பாளுங்களே!” சத்யாவின் மனம் கூவ
 
“அம்மா நீ எதிர்பார்த்த மாதிரி வரதட்சணையோட மருமக வந்திருக்கா, நான் ஆசைப்பட்ட பொண்ண கட்டிகிட்டேன். இதுக்கு மேல ஒன்னும் பேசாத. வீடுதான் பிரச்சினைனா. நான் என் கடைக்கு பக்கத்துல வாடகைக்கு வீடு பார்த்து போயிடுறேன். அது யாருக்கும் பிரச்சினையில்லல” என்று விட
 
“புஷ்பா வீட்டை வித்தது அவங்க சொந்த பிரச்சினை இதுல கவிதா கல்யாணத்த பேசி மருமகளை வீட்டை விட்டு துரத்திட்டாளே என்று நாளைக்கு சொந்தபந்தத்துக்கு முன்னாடி உனக்குத்தான் அசிங்கமா போயிடும். பாத்துக்க” ரமேஷின் தந்தை கூற  
 
வீட்டை விற்றது அவர்களுடைய சொந்த பிரச்சினை அதற்காக மருமகளை வீட்டை விட்டு அனுப்பினால் சொந்தபந்தத்தினரிடம் தான்தான் பதில் சொல்ல நேரிடும் என்று புரிய “எதோ பண்ணு” புஷ்பா அமைதியானாள். 
 
எவ்வளவு நேரம் வாசன் அந்த இடத்தில் அமர்ந்திருந்தானோ! அவனுக்குத் தெரியாது. ராமநாதனின் புலம்பல்கள் குறையவே! இல்லை. தந்தையை எவ்வாறு சமாதானப்படுத்துவதென்றும் அவனுக்குப்புப் புரியவில்லை. அவன் வார்த்தைகள் அவருக்கு ஆறுதலை நிச்சயமாக கொடுக்காது.
 
ஸ்ரீராம் சொன்னபடி ஏற்கனவே! கடன் வாங்கியவரிடம்தான் வீட்டை விற்று இருக்கிறான். இன்னும் ஒருவாரத்தில் அவர்கள் வீட்டை காலி பண்ணி கொடுக்க சொல்லி இருக்கிறார்களாம். ஸ்ரீராமின் எண்ணமெல்லாம். எதையும் வாசனிடம் கூறாமல் சென்னை சென்று விடுவது. அவர்கள் வந்து சொல்லும் பொழுது வீட்டை காலி செய்துதானே ஆகா வேண்டும். அப்பொழுது வாசனால் ஒன்றும் செய்ய முடியாதே! மதுவின் ஆலோசனைப் படி சென்னையில் தன்னுடைய வீட்டையும் மாற்றி விட்டான். தந்தையும், தமையனும் சண்டையிட தேடி வந்தாலும் கிடைக்க மாட்டான். செய்த லெதர் தொழில் நஷ்டமடைய புதுத் தொழில் செய்வதற்காகத்தான் இந்த பணம். லெதர் பேக்டரிக்கு போனால் அதையும் விற்று விற்றதை அறிந்துகொள்வார்கள். இவனை இவர்கள் எங்கு தேடியும் கிடைக்க மாட்டான்.
 
ஆனால் சத்யாவின் மூலம் உண்மையை அறிந்து கொண்ட பின் ஊர்மக்களின் முன் அவமானப்படாமல் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடிந்ததே! என்று என்னும் பொழுதுதான் அவனுக்கு நித்யாவின் நியாபகமே! வந்தது. “நித்யா! நித்யா! வீட்டை விற்றதை அறிந்தால் துடித்துப் போவாளே! விடுமுறைக்கு வந்தாலும் வீட்டை அழகு படுத்துவதிலும் தோட்டத்தை பராமரிப்பதிலும்தான் அவள் நேரம் செல்லும்” மனம் வெம்பியவனாக தங்கைக்கு அழைப்பு விடுக்க அவள் அலைபேசியை எடுக்கவில்லை என்றதும் வாசனின் மனதில் என்னென்னவோ எண்ணங்கள்.
 
ஒருவாறு நித்யா அலைபேசியை எடுக்க வாசன் என்றதும் அலைபேசி அணைந்து போனதற்கு காரணம் அக்ஷராவை வசைபாடியவாறே! சூர்மார்க்கெட் சென்றதால் கொஞ்சம் தாமதமானதாக கூற அவள் பேச்சில் இடையிட்ட வாசன் இங்கு நடந்த க்ளோபரத்தை ஒரேமூச்சில் கூறி முடித்தவன் தங்கையிடம் தனக்கு பெண் பார்த்து உடனே! திருமணம் செய்து வைக்கும்படி கூறினான். மது பேசியது அவன் மனதை அவ்வளவு ரணப்படுத்தியிருந்தது.
 
நித்யாவுக்கோ! ஒன்றும் புரியவில்லை. பிறந்து வளர்ந்த வீடு. என்ன இருந்தாலும் ஊருக்கு செல்வதே! சொந்த வீடு ஒன்று இருக்கும் நம்பிக்கையில் தானே! அதுவும் இல்லை என்றால் எப்படி? கண்ணீர் முட்டிக்கொண்டு வர வாசன் கடைசியில் சொன்னதில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள். இப்பொழுதுதான் வீட்டை விற்றுவிட்டதாக கூறினான். அதற்குள் கல்யாணம் செய்து வை என்று கூறுகிறான். வீட்டை விற்றதில் வாசனின் மூளை குழம்பி விட்டதா என்றுதான் எண்ணத் தோன்றியது நித்யாவுக்கு.
 
நித்யாவிடம் உடனே! பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வை என்று கூறினாலும் ஒரு வருடங்களுக்கும் மேலாக பெண்
தேடி ஆறு மாதங்களுக்கு முன் தான் வாசுகியை மணந்தான் வாசன். 
 
தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைத்தபடி கடைக்கு வந்து சேர்ந்தான் வாசன். அங்கு வாசுகியோ! எதுவும் செய்யத் தோன்றாமல் கட்டிலில் போய் சுருண்டு படுத்துக்கொள்ள, அவளின் மனக்கண்ணில் அவர்களின் கல்யாண நாளும் அதை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையும் வந்து போக கண்ணீர் பெருக்கெடுத்தது.

Advertisement