Advertisement

அத்தியாயம் 13

 
வாசுகி “ஆனா நாம கண்டிப்பா சந்திச்சு இருக்க வாய்ப்பிருக்கு” என்று கூறியவாறு சமயலறைக்குள் நுழையவும்
 
அவள் பின்னாடியே வந்து “நாம சந்திச்சு இருக்கோமா? சான்ஸே இல்ல” அடித்துக் கூறினான் வாசன்.
 
நாம சந்திச்சிருக்கோம். என்று கூறுவதிலும் கண்டிப்பா சந்திச்சிருக்க வாய்ப்பிருக்கு என்று கூறுவதிலும் பெரிய வித்தியாசம் இல்லை. சந்திச்ச இடமும், காலமும், நேரமும் நியாபகத்தில் இருந்தால் சந்திச்சோம் என்று உறுதியாக கூறலாம். 
 
“வாய்ப்பிருக்குனு சொல்லுறேன் இல்ல” தன் கூற்றில் உறுதியான வாசுகி சாம்பார் சாதம் பண்ணிடவா என்று கேட்டும் வைக்க,  
 
தலையாட்டியவாறே “எப்படி சொல்லுற?” “இவ என்ன இவ்வளவு உறுதியா சொல்லுறா?” என்ற பார்வையோடு வாசுகியை ஏறிட்டான் வாசன்.
 
“என்ன யோசிக்கிறீங்க? இன்னும் புரியலையா? உங்க தங்கச்சிய எங்க ஊர்லதானே! கட்டி கொடுத்து இருக்கீங்க? அந்த கல்யாணத்துக்கு நானும் தான் வந்தேன். அப்போ கண்டிப்பா நாம மீட் பண்ணி இருப்போம்” என்று தெனாவட்டாக சொல்லியவாறே வாசுகி அரிசியையும் பருப்பையும் கழுவி குக்கரில் போட்டு வேகவைக்க அடுப்பை பற்ற வைத்தவள் காய்கறிகளை கழுவ ஆரம்பித்திருந்தாள்.
 
சத்தமாக சிரித்த வாசன் அவள் தலையில் கொட்டி “உன் கனவுல வந்திருக்கேன்னு சொல்லி இருந்தா கூட நம்பி இருப்பேன் டி அத விட்டுட்டு என்னமா பில்டப்பு கொடுக்குற? நித்திக்கு கல்யாணம் ஆகும் போது எனக்கு பதினைஞ்சி வயசுதான் உனக்கு ஒன்பது இருக்குமா? குட்ட கவுனை போட்டுக்கிட்டு மூக்கை ஒழுகி கிட்டி அங்கேயும் இங்கயும் ஓடிக்கிட்டு இருந்திருப்ப இதுல நீ என்ன பார்த்த அத நான் நம்பனும். இதுல உன்ன நான் பாத்திருப்பானு வேற சொல்லுற? போடி…” அவளை ஏகத்துக்கும் வெறுப்பேத்த
 
“நான் சின்ன வயசுல குட்ட கவுன் எல்லாம் போட்டதில்லை பாவாட தாவணி மட்டும்தான் போடுவேன்” மூக்கை சுருக்க
 
“ரொம்ப முக்கியம். அப்படியே போட்டாலும் இவ பெரிய ராஜகுமாரி நாம இவளை சைட் அடிச்சிட்டோமாம். சைட்டடிக்கிற வயசா உனக்கு?” கிண்டல் தொனியில் சொன்ன வாசன் சமையல் மேடையில் சாய்ந்தவாறு அவளோடு பேசலானான்.
 
“சைட் அடிச்சேன்னா சொன்னேன். சந்திச்சிருக்கோம்னுதானே! சொன்னேன்” கண்களாளேயே எரித்து விடுவதை போல் ஒரு பார்வை பார்த்தாள் வாசுகி.
 
“ஆகா… ரொம்ப பேசினா அடிச்சாலும் அடிச்சிடுவா. சமாதானமா போய்டலாம்” என்ற முடிவோடு “இங்க கொண்டா நான் காய வெட்டி தாரேன் நீ மத்த வேலைய பாரு…” என்றவன் அவள் பேசிய பேச்சுக்கு பதில் சொல்லும் விதமாக “சந்திச்சிருந்தா? ஏதாவது சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கும் அது நம்ம நியாபகத்துல இருந்திருக்கும். சோ நாம சந்திக்கலன்னுதான் நினைக்கிறேன்” வாசன் தாடையை தடவியவாறே சொல்ல
 
வாசலில் போடப்பட்டிருந்த மேசையின் மீதிருந்த புகைப்படத்திலிருந்த அம்மனோ! “அன்னக்கி இவ ஓடிப்பிடிச்சி விளையாடும் போது உன் மேல மோதினதும் “என்ன பாப்பானு நீ கேட்டதும், சாரி அண்ணனானு இவ சொன்னதும் உங்க ரெண்டு பேர் நியாபகத்துல இருந்து எடுத்தது நான்தான்” என்று புன்னகைத்தவாறே இவர்களை பார்த்திருந்தாள்.
 
“சரி அத விடுங்க. எங்கம்மா என்ன கூட்டிட்டு போய் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னபோ அதுக்கு பதில் சொல்லுறதா சொன்னீங்களே! இப்போ சொல்லுங்க” என்றவள் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் போதுமானதால் தேங்காயை உடைத்து துருவியவள் மசாலாவையும் வறுக்க ஆயத்தமானாள். குக்கர் வேறு தன் பாட்டுக்கு அதன் வேலையை செய்து சத்தமெழுப்பலானது.  
 
‘”அதுவா… உன்ன உங்கம்மா கூட்டிட்டு போய் இருந்தா இப்போ நீ எங்க இருப்ப? எப்படி இருந்திருப்பானு கூட எனக்கு தெரியாது. சரியா? உங்க அப்பா மாதிரி ஜாதகம் பார்த்துகிட்டு உன் இருபத்தி எட்டு வயசு வரைக்கும் உங்கம்மா உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்காம வச்சிருந்திருப்பாங்களா? இல்ல நீதான் காலேஜ் போய் படிச்சிருந்தா யாரையாச்சும் லவ் பண்ணாம இருந்திருப்பியா? மொத்தத்துல உங்கம்மா கூட போய் இருந்தா எனக்கு நீ இல்ல. என்ன நீ உங்க சித்தி கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டுட்ட” கவலையாகவே சொன்னவன் செய்யும் வேலையை நிறுத்தி அவளை ஒரு பார்வையும் பார்த்து வைத்தான்.  
 
“ஒஹ்… அப்போ எங்கம்மா என்ன கூட்டிட்டு போகாதது நல்லதுதான். இல்லனா எனக்கு நீங்க கிடைச்சிருக்க மாட்டீங்க” என்றவள் தலையை தட்டி யோசித்து விட்டு “ஆனா ஒரு வேல எங்கம்மா கூட்டிட்டு போய் இருந்தா? எனக்கு நீங்கதான்னு கடவுள் முடிவு செஞ்சி இருந்தா? உங்க விதியை அவன் மாத்தி எழுதி இருந்திருப்பானில்ல” என்றவள் சிரிக்க,
 
“எப்படி” வாசனும் ஆர்வமாக கேட்டானே ஒழிய செய்யும் வேலையில் கவனைத்தை வைத்திருந்தவன் அவளை திரும்பி பார்த்தானில்லை.  
 
“ஹ்ம்ம்.. உங்கம்மா உயிரோடு இருந்திருப்பாங்க, உங்கப்பா கடைய ஒழுங்கா நடத்தி இருப்பாரு. நீங்களும் நல்லா படிச்சி, கம்பனியெல்லாம் வச்சி கோட்டு சூட் போட்டு பெரிய ஆளா வந்திருப்பீங்க. அப்போ நாம மீட் பண்ணி இருக்க வாய்ப்பிருக்கில்ல. அப்படி சந்திச்சிருந்தா ஒருவேளை நாம லவ் பண்ணி இருக்கலாம்” கொஞ்சம் திமிராகவே! சொல்ல
 
“ஹாஹாஹா கடவுளுக்கு தெரியும் டி யாருக்கு என்ன கொடுக்கணும்னு. ரொம்ப பேசுற உன்னயெல்லாம் படிக்க வச்சிருந்தா ஒருவேளை லோயரா ஆகி இருப்பியோ! இல்ல இப்படித்தான் கற்பனை பண்ணி கத எழுதுறேன்னு கிளம்பி இருப்பியோ! என்னமோ!” என்று கிண்டலடிக்க மிக்சியில் மசாலாவை அரைத்துக் கொண்டிருந்தவள் அதை விட்டு விட்டு வந்த வாசுகி அவனை மொத்த ஆரம்பித்திருந்தாள்.
 
“அடிக்காத டி ராட்சசி. கத்தி, கத்தி” என்றவாறே கத்தியை தூக்கிப் போட்டவன் “ஒத்துகிறேன், ஒத்துகிறேன். அப்படி நடந்தா அப்படியெல்லாம் நடந்திருக்கும் இப்படி நடந்ததனால இப்படியெல்லாம் நடக்குது. போதுமா?” என்று சிரிப்பை அடக்கியவன் “ஏன் கல்யாணத்துக்கு முன்ன தான் மீட் பண்ணி லவ் பண்ணனுமா? கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ண கூடாதா?” என்று அவளை சமையலறையிலிருந்து கதிரையில் அமர்த்தி கதிரையை இழுத்துப் போட்டு தானும் அவளுக்கு எதிரே அமர்ந்து கொண்டவனின் குரலின் தொனியே மாறிப்போய் இருந்தது.  . 
 
அவனின் காதல் சொட்டும் குரலெல்லாம் இவள் கவனத்தில் இல்லை “ஆமா ஆமா காதலிச்சு கல்யாணம் பண்ணுறவங்களே! கல்யாணத்துக்கு பிறகு சண்டை போட்டுக்குவாங்கலாம். இவரு கல்யாணத்துக்கு அப்பொறம் லவ் பண்ணுவாராம். எப்படி தொர உங்களுக்குத்தான் டைம் இல்லையே! கடையிலேயே! உங்க காலம் போகுதே! கல்யாணம் பண்ணி ஹனிமூனாவது கூட்டிட்டு போனீங்களா?” கிண்டலாக ஆரம்பித்தவள் குறையாக முடிக்க,
 
காதல் குரல் கொஞ்சம் கடினக் குரலாகி “ஏய் ஏய் இதான்னே வேணாகிறது. போறதுக்கு எல்லாம் பிளான் பண்ணி, அதுவும் எங்க? டில்லிக்கு தாஜ்மகால் பாக்க கூட்டிட்டு போங்கன்னு சொன்னதும் எல்லா ஏற்பாடும் செஞ்சேனா இல்லையா? அதுக்குள்ளே உங்க பெரியப்பா மண்டைய போட்டுட்டாரு. நம்ம பயணம் தட பட்டிருச்சு. அப்பொறம் பதினாறாம் நாள் காரியம் முடியாம எங்கயும் போகாதீங்கன்னு உன் பாட்டிதான் தட உத்தரவு போட்டாங்களே! நான் என்ன பண்ண?”
 
“அதுக்கு அப்பொறம் கூட்டிட்டு போக வேண்டியது தானே!” இவள் முறிக்கிக்கொள்ள
 
அவள் செய்கையில் சிரிப்பு எட்டிப்பார்க்க “எப்போ கல்யாணமாகி ரெண்டு மாசத்து அப்போரமா?” அவள் கன்னத்தை சுண்டி விட்டான்.
 
“இப்படி ஏதாவது காரணம் சொல்லிகிட்டே இருங்க” வாசுகி முகத்தை சுருக்க, வாசன் சிரிக்க ஆரம்பித்தான்.
 
போதும் போதும் இக்கட்டான சூழ்நிலைல நித்தி அண்ணிக்கு பெரிய உதவியெல்லாம் பண்ணதால உங்கள மன்னிச்சு விட்டுடுறேன்” போனால் போகிறது என்பது போல் வாசுகி பேச
 
“உதவியா? என்ன உதவி ஒரு சகோதரனான நான் என்தங்கைக்காக பண்ணதெல்லாமே! அன்பால பண்ணதுமா…” அது தன் கடமை என்று கூறாமல் பாசத்துக்குள் அடக்கினான் அவன். குரல் முற்றிலும் இளகி ஒலித்தது.
 
“அப்போ எனக்காக பண்ணது?” என்ன பதில் சொல்வான் என்று ஆவல் தோன்ற கன்னத்தில் கைவைத்தவாறு அவன் முகத்தை ஏறிட்டாள் வாசுகி.
 
யாரையும் காதலிக்க கூடாது. இல்ல காதல் திருமணம் செய்யக் கூடாது அத்த பொண்ணோ! மாமா பொண்ணோ! தனக்காக காத்துக்குக் கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் வாசனுக்கு இல்லை. அவன் சிந்தனையெல்லாம் கடை கடை கடை மட்டும் என்றிருக்க, அவன் எந்த பெண்ணையும் பார்க்கவில்லை. பருவப் பெண்களின் பார்வையை கூட கவனித்தானா? என்று கேட்டால் தெரியாது. எந்த பெண்ணாவது அவனிடம் தைரியமாக வந்து பேசி காதலை சொல்லி இருந்தால் யோசித்திருப்பானோ! திருமணம் கூட செய்ய வேண்டும் என்று எண்ணாதவனை மதுவின் பேச்சு தூண்டி விட்டதோடு ராமநாதனின் ஆசையும் அவனை ஆட்கொள்ள கல்யாண பந்தத்தில் தன்னை இணைத்துக்கொண்டான்.
 
“நாம யாருக்கு பொறக்குறோம், யார் கூட பொறக்குறோம் இதெல்லாம் கடவுள் விருப்பம். ஆனா நாம துணையை தேடுகிறது நம்ம இஷ்டம்னு கடவுள் விட்டுக்கொடுத்து இருக்கிறாரே! அதுவே! பெரிய விஷயமில்லை. உன்ன பொண்ணு பார்க்க வர முன்னாடி நான் எத்தனை பொண்ணுகளை பொண்ணு பார்க்க போய் இருக்கேன் தெரியுமா?” என்றவன் புன்னகைக்க
 
“ஊர்ல அத்தனை பொண்ணையும் பார்த்துட்டு புடிக்காமத்தான் ஐயா கடைசியா என்ன பார்க்க வந்தீங்களா?” கடுப்பாகி கேட்டாள் வாசுகி.
 
“யாரையும் புடிக்கலை அது உண்மை உன்ன மட்டும்தான் பார்த்த நொடி புடிச்சது அதுவும் உண்மை. அது… சினிமால வரத்து மாதிரி கண்டதும் காதலானு தெரியாது. மனசு சொல்லணும் இல்ல. இவதாண்டா உன் ஆளுன்னு மனசு சொல்லிச்சு. மனசுல பட்ட அடுத்த நொடி உன்கிட்ட சொல்லிட்டேன். உனக்கு எப்படி இருந்துச்சு? நீ உன் அப்பா சொன்னதுக்காக என்ன கல்யாணம் பண்ணி இருப்ப. நீ என்ன குறை சொல்லுற. போடி…” திட்டுவது போல் கூறினாலும் புன்னகையோடுதான் சொன்னான்.
 
அவள் மனதை கவரும் அளவுக்கு அவள் யாரையும் இதுவரைக்கும் பார்த்ததில்லை என்று கூறுவதை விட அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் காதல் என்று மனதை அலைபாய விடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள் வாசுகி.
 
“ம்ம்.. அது அப்படியில்ல. யாருமே என் கிட்ட பட்டுனு எனக்கு உன்ன புடிச்சிருக்கு உனக்கு என்ன புடிச்சிருக்கானு சொல்லி பேச்ச ஆரம்பிக்கவே இல்ல. உங்க பேச்சுலேயே நான் கவுந்துட்டேன். உண்மைய சொல்லனும்னா… என்ன பொண்ணு பார்க்க வந்தவங்களல்ல நிறைய பேர் வரதட்சணை எவ்வளவு கொடுப்பாங்க, எவ்வளவு நகை போடுவாங்கனு கேட்டுத்தான் பொண்ணே பார்த்தாங்க, அப்படியே ஒருத்தன் வந்தாலும் எங்க அம்மாக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்குனு ஆரம்பிச்சான் உங்கள மாதிரி எனக்கு உன்ன புடிச்சிருக்கானு பட்டுனு சொன்னதும் இல்ல, உனக்கு என்ன புடிச்சிருக்கானு பட்டுனு கேட்டதும் இல்ல. நானும் அப்பா என்ன சொல்வாரோ! தெரியாதுனுதான் சொல்வேன். உங்க கிட்டாதான் பிடிச்சிருக்குனு மண்டைய ஆட்டினேன்”
 
“பாருடா மேடம்கு என்ன பார்த்த உடனே! லவ்வாம். அத சொல்லாம அப்படி நடந்த அப்படி நடந்திருக்கும், இப்படி நடந்தா இப்படி நடந்திருக்கும்னு கத சொல்லுறாங்க” என்று அவளை ஓட்ட
 
“அப்போ உங்களுக்கு என் மேல லவ் இல்லையா?” சோகமான முகத்தை வைத்துக்கொண்டு கேக்க
 
“நீதானே! என் பொண்டாட்டி, உன்னைத்தானே! நான் காதலிக்கனும்” என்று வாசன் கூற
 
“ஒஹ்..ஒஹ்.. தொர லவ் பண்ணுவாராம் ஆனா சொல்ல மாட்டாராம்”
 
“எதுக்குடி விடல பையன் மாதிரி சொல்லி கிட்டு சைகையிலையே காட்டிட்டா போச்சு” என்றவன் அவள் கதிரையை தன் புறம் இழுக்க,   
   
“ஐயோ, அம்மா… என் புருஷன் பட்ட பகல்ல லவ் டாச்சர் பண்ணுறாரு. யாராவது வாங்களேன்” பெருங்குரலெடுத்துக் கத்த
 
“அடிப்பாவி” என்றவாறே அவள் வாயை பொத்தியவன் “போடி போய் சமையலை கவனி” என்று அவளுக்கு வழி விட
 
அவனுக்கு பழிப்பு காட்டியவாறே எழுந்து சென்றவள் குக்கர் விசில் பட்டது போதும் என்று அதை அனைத்து விட்டு “அன்னக்கி நீங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது கடைல இருந்து அப்படியே வந்துட்டீங்களா என்ன?”
 
“ஏன் கேக்குற?”
 
“நீங்க என் ரூமுக்குள்ள வந்ததும் மசாலா தூள் வாசனை குப்புனு அடிச்சிருச்சு” என்றவள் சத்தமாக சிரிக்க
 
அன்று தான் விருப்பமே! இல்லாமல் பெண் பார்க்க சென்றது நியாபகம் வர “அன்னக்கி நான் இஷ்டமே! இல்லாமைதான் உன்ன பார்க்க வந்தேன். பார்த்த உடனே! பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா நல்ல ட்ரெஸ்ஸா போட்டு வந்திருப்பேன்” என்று வாசன் சொல்ல
 
“நிஜமாவா? இது கூட நல்லாத்தான் இருக்கு. நம்ம பசங்க உங்க கல்யாணம் எப்படி ஆச்சுன்னு கேட்டா
சொல்ல சுவாரஸ்யமான கத ஒன்னும் இல்லையேன்னு யோசிச்சேன். இதோ இருக்கே! விருப்பமில்லாம பொண்ணு பார்க்க வந்து பொண்ண பார்த்ததும் கப்புனு கால்ல விழுந்துட்டாருனு. இதுல மளிகை கடைக்கார் மசாலா டிரஸ்னு  டைட்டல் வேற போடலாம்” என்றவள் வறுத்து அரைத்த மசாலாவையும் சேர்த்து காய்கறிகளை வேகவைத்திருந்தாள்.
 
“அடிப்பாவி இப்படித்தான் பொம்பளைங்க ஹிஸ்டரிய மாத்தி எழுதுறீங்களா?” என்றவன் வாசுகி முறைக்கவும் பேச்சை மாற்றினான்.
 
“அது சரி தங்கச்சி லவ் பண்ணுறது சொல்ல சொன்ன மேடம் தன்னோட லவ் ஸ்டோரிய சொல்லிக்கிட்டு இருக்காங்க, உண்மையிலயே! சந்திரா யாரை லவ் பண்ணுறா? என்ன பிரச்சினை?”
 
“அத ஏன் கேக்குறீங்க” என்று வாசுகி ஆரம்பிக்க
 
“ஏன் கேக்க கூடாதா…” வேண்டுமென்றே இடையில் புகுந்தான் வாசன்.
 
“குறுக்க பேசாதீங்க… மறந்துடுவேன்…” செல்லமாக சிணுங்கியவள் தொடர்ந்தாள் “நம்ம கலைவாணி அத்த இருக்காங்க இல்ல. அவங்க பையன் ஜெயமணி அத்தானை தான் சந்திரா லவ் பண்ணுறாளாம்”
 
கண்ணை உருட்டி அவள் சொன்ன விதத்தில்லையே! தான் வீட்டுலையே! இருந்தும் தனக்கு தெரியவில்லை என்ற சோகம் இருந்ததை உணர்ந்தான் வாசன்.
 
“ம்ம்.. எவ்வளவு நாளா லவ் பண்ணுறாங்களாம்?”
 
“சின்ன வயசுல இருந்ததுன்னு சந்திரா சொன்னா…அதனாலதான் ஜெயமணி அத்தான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு” சோகமான முகத்தை வைத்தவாறு சொல்ல
 
“இது என்ன புதுக் கதையா இருக்கு” என்று யோசித்தவன் கண்ணை சுறுக்கிப் பார்த்து மனைவியின் முகத்தை ஆராய அவளின் உதட்டோரம் மலர்ந்த புன்னகையில் “அடி கள்ளி என்ன வெறுப்பேத்த பாக்குறாளா? இரு டி உன்ன வச்சுகிறேன்” “ஐயோ அப்போ நான்தான் உன் கிட்ட சிக்கிக்கிட்டேன் போல இருக்கு” என்று சொன்னதுதான் தாமதம்
 
“என்ன சொன்னீங்க” என்றவள் அவன் தோளிலையே! அடிக்க ஆரம்பித்தாள் வாசுகி. 
 
“அடிச்சே கொல்லுறா? யாராவது என்ன காப்பாத்துங்க, கையா உலக்கையானு தெரியல” சிரித்தவாறே சீண்ட
 
அவன் குறும்பு புரிய அடிப்பதை நிறுத்தியவள் “எதுல விளையாடுறதுன்னே தெரியல வர வர உங்க அட்டகாசம் தாங்க முடியல”
 
“நீங்க எங்களை வெறுப்பேத்துவீங்களாம், நாங்க பண்ணா தப்பா? அது என்ன டி ஆ..ஊ.. னா கைய நீட்டுறது, வலிக்குது டி”
 
“ஆ… என் புருஷன்தான் சொன்னாரு கோபம் வந்தா ரெண்டு அடி வேணாலும் அடிச்சிக்க, உம்முனு இருக்காதான்னு” அசால்டாக சொல்ல
 
“அடிப்பாவி ஒரு பேசுச்சுக்கு சொன்னா இப்படி வெளுத்து வாங்குற, நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்” குழந்தையாக கெஞ்சினான் இவன்.
 
“அதெல்லாம் முடியாது. சொன்னா சொன்னதுதான்” இவளும் பிடிவாதமாக சொன்னாள்.
 
“ரெண்டு அடித்தான் சொன்னேன், நீ கல்லாட்டம் ஆடுற, போ..போ..” அவளுடனான அந்த பொழுது இனிமையாக இருக்க பேச்சை வளர்த்தான் வாசன்.
 
“ஐயோ…” என்றவள் ஓடிச்சென்று அடுப்பை அனைத்து “உங்களாலதான் பேசி பேசியே! அடுப்புல இருக்குறத கருக விட்டிருப்பேன்” என்று முறைக்க,
 
“வரவர எல்லாத்துக்கும் என்ன திட்ட ஆரம்பிச்சிட்டு, ரொம்பதான் பொண்டாட்டி அவதாரம் எடுக்குற அப்பப்போ காதலி, தோழி, அம்மா.. இந்த அவதாரமெல்லாம் எடுங்க மிஸிஸ் வாசன்.  
 
“பதிலுக்கு நீங்களும் திட்டுங்க” என்றவள் கணவன் சொன்ன விதத்தில் புன்னகைத்தவாறே வெந்த காய்கறிகளை சாதத்தோடு சேர்த்து கலந்து அதை தாளிக்க ஆயத்தமாக்கினாள்.
 
“சரி சந்திரா லவ் பண்ணுறது சொந்த அத்த பையன தானே! இதுல என்ன பிரச்சினை? ஏன் உங்க அப்பாக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை. ஏற்கனவே! உனக்கு பார்த்த மாப்புள தானே!” வாசுகி முறைக்கவும் “நான் என்ன சொல்ல வரேன்னா… நல்ல பையன்னு தானே! உனக்கு பாத்திருப்பாரு சந்தராவை கட்டிக்குடுக்குறதுல என்ன பிரச்சினை?”
 
பிரச்சினை காதல் தான். அம்மா காதலிச்சதினாலதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சுனு அப்பா நினைக்கிறாரு. அதனாலதான் அவங்க லவ்வ ஏத்துக்க மறுக்குறாரு”
 
“உன் சித்தி என்ன சொல்லுறாங்க?”
 
ஒரு நொடி முகம் சுருங்கியவள் “சந்த்ராவோட கம்பனி ஜி.எம் அவள பொண்ணு கேட்டு வந்ததனால சித்தி அவருக்குத்தான் கட்டி கொடுப்பேன்னு ஒத்த கால்ல நிக்குறார்ங்க”
 
“இது வேறயா…” என்று சிறுது நேரம் யோசித்தவன் “ஆமா சந்திரா கிட்ட ஒரு வார்த்த கேக்காமலையா அந்த ஜி.எம் பொண்ணு கேட்டு வந்தாரு, எங்கயோ! இடிக்குதே!”
 
“என்ன சொல்லவாறீங்க?”
 
“இல்ல ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ் சந்த்ராவ பார்த்த உடனே! பிடிச்சிருந்தா, அவ கிட்ட போய் பேசி இருந்தா அவ தனக்கு விருப்பம் இல்லனு தெளிவா சொல்லி இருப்பா இல்லையா? அதையும் மீறி பொண்ணு கேட்டு வந்திருக்கான்னா?”
 
“பிரச்சினை பண்ண போறான்னு சொல்ல வாரீங்களா?”
 
“தெரியல. முதல்ல அவன் கிட்ட பேசி பார்க்கலாம். அவன ஒதுக்கிட்டா உங்க சித்தி அடங்கிடுவாங்க, அப்பொறம் உங்க அப்பா கிட்ட பேசி சந்திரா ஆசைப்படி கல்யாணத்த பண்ணி வச்சிடலாம்” வாசன் சொல்ல
 
“நிஜமாவா?” வாசுகி சந்தோசமாக கேட்க
 
“என்ன ரொம்ப சந்தோசப்படுற மாதிரி தெரியுது? சும்மா எல்லாம் பண்ண முடியாது உன்கிட்ட வட்டியும் முதலுமா வசூல் பண்ணிட்டுதான் வேலையில்லையே! இறங்கலாம்னு இருக்கேன்” கள்ளச் சிரிப்போடு இவன் சொல்ல
 
அர்த்தம் புரிந்தவளும் அறியாதவள் போல் “என்ன வட்டியும் முதலும்? முதல்ல கடைக்கு போய் ரகுக்கும், குமாருக்கும் சாம்பார் சாதம் கொடுத்துட்டு வாங்க” என்றாள் கோபப் போர்வையால் நணப் புன்னகையை மறைத்தவாறு.
 
“அதுக்கு எதுக்கு டி நான் போகணும். போன் போட்டா ரெண்டு பேர்ல ஒருத்தன் வந்து எடுத்துட்டு போவானுங்க” என்று அலைபேசியை கையில் எடுக்க,
 
“அப்படியே மாமாகும் போன் பண்ணுங்க, பசிக்கும், மாத்திரை போடணும் வீட்டுக்கு வர சொல்லுங்க”
 
“சொல்லலாம் சொல்லலாம் முதல்ல நீ பக்கத்துல வா… எங்க ஓடுற” என்று அவளின் இடுப்பில் கைபோட்டு தன்னோடு சேர்த்தித்தவாறே ரகுவை அழைத்து வீட்டுக்கிட்டு வருமாறு கூறலானான் வாசன்.
 
வாசுகிக்கு படபடவென்று வந்தது. மருத்துவமனைக்கு சென்று வந்த போது அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதவள்தான். அப்பொழுது இல்லாத தடுமாற்றம் இப்பொழுது மேனியில் தாவி இருந்தது. அது கணவன் பேசிய இரகசிய பாஷையால் வந்ததால் என்று கேட்டால் தெரியவில்லை. இவ்வளவு நாளும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒரு வித இறுக்கமான சூழ்நிலைதான் இருவருக்கிடையில் இருந்தது. பழையபடி இன்றுதான் மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர். அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவனின் அழைப்பு அவளை தடுமாற செய்ததும் அவன் நெருக்கம் அவளை அவஸ்தைக்குள்ளாக்க, இடையில் இருக்கும் அவன் கையை விலக்குவதில் குறியாகி இருந்தால் அவள்.
 
ரகுவோடு பேசியவாறு அவளை ஏறிட்டவன் கண்களையே! என்னவென்று கேட்க
 
“ஒண்ணுமில்லையே!” என்று தலையாட்டியவளின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் பூத்திருக்க அலைபேசியை அனைத்தவன் இடுப்பில் சொருகி இருந்த அவள் புடவை முந்தியை இழுத்து முகத்தை துடைத்து விடலானான்.
 
“என்ன டி இப்படி வேர்க்குது? ஒரேயடியா வேல செய்ய கூடாதுனு சொன்னா கேட்கவும் மாட்டேங்குற?” வா வந்து பேன போட்டு வாசல்ல உக்காரு இல்ல கட்டில்ல போய் படுத்துக்க என்று அவள் கையை பிடிக்க அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் அவனை தள்ளி விட்டு அறைக்குள் நுழைந்து கதைவடைத்துக்கொண்டாள்.
 
நொடியில் நடந்த நிகழ்வால் திகைத்து நின்றவன் “ஏய்..ஏய்.. இப்படியெல்லாம் பண்ணைக் கூடாது” என்று கதவை தட்ட வாசல் பக்கம் ராமநாதனின் குரல் கேட்கவும்
 
“அட சே… ஊர சுத்தினாலும் கரெக்ட்டா வந்துடுறாரு”  என்றவாறு வாசல் பக்கம் நகர்ந்தவன் ஒன்றும் அறியாதவன் போல் டீவியை போட்டு அமர்ந்துகொள்ள 
 
உள்ளே வந்தவரோ அதிசயமாக அவனை பார்த்து “இன்னைக்கி நீ கடைல இருப்பான்னு நினச்சேன்” என்று சொல்ல
 
“வாசு சாம்பார் சாதம் பண்ணுறேன்னு சொன்னா அதான் சாப்பிட்டுட்டு போலாம்னு…” என்று இழுக்க புன்னகைத்தவாறே அவரும் முகம் கழுவவென பின்பக்கமாக சென்றார். 
 
வாசன் “வாசு.. அப்பா வந்துட்டாரு வா…” என்று சத்தமாகவே அழைக்க ராமநாதனின் குரல் கேட்டதில் கதவை மூடி விட்டு சாய்ந்து நின்றவளும் புடவையை சரி செய்து, தலையை வாரிக்கொண்டு வெளியே வர கடையிலிருந்து குமாரும் வந்து சேர்ந்தான். 
 
பாயை விரித்து குக்கரில் இருந்ததை பாத்திரத்துக்கு மாற்றி வைத்து குடிக்க நீரும் வைத்து, தட்டும் வைத்தவள், குமாருக்கும், ரகுக்கும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுத்து அவனை கடைக்கு அனுப்பி வைக்க,
 
அவனும் “என்ன வாசன் அண்ணா.. இன்னைக்கும் கடைக்கு லீவா..” என்று கிண்டல் தொனியில் கூறியவாறு நகர வாசன் அவனை அடிக்க கையொங்க வாசுகி கணவனை முறைக்க, குமார் சிட்டாக பறந்திருந்தான்.
 
ராமநாதனும் வரவே! மூவரும் அமர்ந்து ஒன்றாகவே! உணவுண்டனர். மருத்துவர் என்ன கூறினார், திரும்ப செல்ல வேண்டுமா? என்று அவர் கேட்க, வாசன் விவரம் கூறியவாறே சாப்பிடலானான்.
 
சாப்பிட்டு முடித்த உடன் வாசன் கடைக்கும், ராமநாதன் வெளியே செல்வதாகவும் கிளம்ப,
 
“வர வர ரொம்ப ஊர் சுத்துறீங்கப்பா… ரொம்ப நேரம் உங்களால வேல பார்க்க முடியாது, உக்காரவோ! நின்னுகிட்டோ! இருக்க முடியாதுன்னுதானே! கடைக்கும் வர வேணாம்னு சொல்லுறேன். இப்போ நீங்க எங்க போறீங்க?” அமைதியான குரலில்தான் கேட்டான்.
 
“நான் படிக்க போறேன்”
 
“என்னது?”
 
“ஆமப்பா… இயற்கை விவசாயம், குறைந்த இடத்துல, பூந்தொட்டில எல்லாம் செடிகளை வளர்க்குறது எப்படினு இலவசமாகவே! சொல்லித்தரங்க அங்கதான் போறேன். சும்மா போய் பாத்துகிட்டு இருப்பேன். முடியலைன்னா உக்காருவேன், கொஞ்சம் நடப்பேன். அந்த இடம் நல்ல காத்தோட்டமாகவும் இருக்கு”
 
“யாரு இடம்?”
 
“அதான் நம்ம ராமசாமி…” என்று இழுக்க
 
“அவர் இடம் ஊரு எல்லைல இருக்கு நடந்தா போறீங்க?’
 
“எனக்கென்னப்பா யார் கிட்டயாவது லிப்ட்டு கேட்டு போவேன்” என்று சொல்ல
 
அவர் சொல்லிய விதத்திலையே! தெரிந்தது அறிந்தவர் அறியாதவர் என்றெல்லாம் அவருக்கு பாரபட்சமில்லை. பேசியே யார் கூடயாவது போய் இருப்பார். அது போல வந்தும் இருப்பார் என்று.
 
“பாதுபா.. யாராவது உங்கள கடத்திட்டு போக போறாங்க”  என்று வாசன் கிண்டலடிக்க, ராமநாதனுக்கும் சிரிப்பு வர வாசுகியிடம் விடை பெற்றார்.
 
வாசனும் வாசுகியிடம் கூறிக்கொண்டு கடைக்கு சென்றான்.
 
தாய் மொழி போலே நீ வாழ்வை என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்

தாமதமாய் உன்னை கண்ட பின்னும்
தாய் மடியை வந்தாய் நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

உன் தேவையை நான் தீர்க்கவேய
வெண்ணீரில் மீனை நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்

Advertisement