Advertisement

அத்தியாயம் 11

 
மெதுவாக கண்களை திறந்தாள் வாசுகி. தலை வின் வின் என்று வலிக்க ஆரம்பித்திருக்க, நெற்றியை சுருக்கியவள் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டவாறே தலையை தொட்டுப் பார்க்க வலது கையை தூக்கினால் அதில் கட்டு போடப்பட்டிருக்க, இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. வலது கையை மெதுவாக தூக்கி தலையை தடவ தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருப்பது தெரிந்தது.
 
கண்ணை மூடி இருந்தவளின் கண்களுக்குள் நடந்தவைகள் காட்ச்சிகளாக தோன்ற வாசன் யார் கூடயோ! மெதுவாக அலைபேசியில் பேசுவது காதுகளை தீண்ட “என்ன சொல்கிறான்? யார் கூட பேசுகிறான்?” என்று மனம் அவன் புறம் தாவியது.
 
“ஆமாப்பா… டிஸ்சார்ஜ் பண்ண மூணு நாலாவது ஆகும். கடைய லீவு விடவும் முடியாதே! வியாபாரம் நடக்கணுமில்ல. அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சரக்கு வரும் அத இறக்கணும். ரகு பாத்துப்பான்தான். இருந்தாலும் காசு விஷயம் யாரையும் நம்பி விட முடியல. உங்க உடம்பும் இருக்குற கண்டிஷன்ல ஓடியாடி வேல பார்க்கவும் முடியாது. ரொம்ப நேரம் உக்காந்துகிட்டு இருக்கவும் முடியாதே! என்ன பண்ணுறது?”
 
ராமநாதனின் உடல் நிலையால் அவரால் அதிகமான வேலைகளை செய்யவோ! நீண்ட நேரம் அமர்ந்திருக்கவோ முடியாது. இருந்தாலும் அதிகமான வேலைகள் வாசனை இழுத்துக்கொள்ளும் பொழுது கல்லாவில் இருந்துக்கொள்வது ராமநாதன்தான். அவர் பார்த்த தொழிலை பற்றி அவருக்கு தெரியாதா?
 
உடல் உபாதையின் காரணமாக தந்தையிடம் வேலை வாங்காமல் அவரை ஓய்வாகவே! வாசன் வைத்திருக்க முயல அதில் ராமநாதனுக்கு பிடித்தமில்லை. தன்னால் முயன்ற மட்டும் வேலைகளை செய்வார்.
 
செக்கப்புக்கு போனால் வாசன் மருத்துவரிடம் புகார் வாசிக்க, இவரோ! வாசன் தன்னை நோயாளி போல் பார்ப்பதாகவும், தனக்கு ஒற்றுமில்லை என்று புகார் வாசிப்பார். மருத்துவரும் தந்தை மகன் சம்பாஷணையை ரசித்துப் பார்த்து விட்டு சில வேலைகளை மாத்திரம் செய்ய அனுமதி வழங்க ராமநாதனை கையில் பிடிக்க முடியவில்லை. அப்படி அமைந்ததுதான் பின்னாடி தோட்டம்.    
 
வாசன் பணத்துக்காக அலையும் போதும், தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதை எண்ணி ராமநாதன் வருந்தும் போதும் வாசனிடம் அடிக்கடி கூறுவதுதான் “நான் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா இந்நேரம் நம்ம கடை…” என்று அவர் ஆரம்பிக்கும் பொழுதே! வாசன்
 
“இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல உடம்பு மட்டும் தேரட்டும் உங்களுக்கு ஒரு கடைய வச்சி கொடுக்குறேன். எனக்கு என்ன பயம்னா… எனக்கே! போட்டியா வந்துடுவீங்களோ! என்றுதான்” என்று வேறு கிண்டல் செய்வான்
 
இந்த கிண்டல் பேச்செல்லாம் வாசுகியை திருமணம் செய்த பின்புதான் வாசனிடம் வெளிப்பட ஆரம்பித்திருந்தது. மகனின் இந்த மாற்றத்தை பெரிதும் ரசித்த ராமநாதன் “சீக்கிரம் ஒரு பேரனையோ! பேத்தியையோ! பெத்து கொடு வாசா.. இப்போ எனக்கிருக்குற ஒரே ஆச அதுதான்” என்பார்.  
 
மறுமுனையில் அவர் என்ன சொன்னாரோ! “மூணு நாளைக்கு எனக்கு, வாசுக்கு துணி, சோப்பு, டூத் பிரஷ், பேஸ்ட்டு எல்லாம் வேணும். சாரியெல்லாம் கட்ட முடியாது. உங்களால வாசு துணி எடுக்க முடியலைன்னா பக்கத்து வீட்டுல நிர்மலா இருப்பாளே! அவ கிட்ட சொல்லுங்க எடுத்துக் கொடுப்பா. அலுமாரிய திறக்கும் போது பக்கத்துல இருங்க அங்க இங்க போகாதீங்க, வாசு நகையெல்லாம் இருக்கு, பாத்து பத்திரம். எல்லாம் ஒழுங்கா எடுத்துட்டு வந்துடுவீங்கல்ல” விளக்கமாக சொல்லி விலாவரியாக கேட்டுக் கொண்ட பின்தான் அலைபேசியை அனைத்திருந்தான் வாசன்.
 
வாசுகிக்கி அந்த வலியிலும் கணவனை நினைத்து புன்னகை மலர்ந்தது. எந்த வேலை செய்தாலும் திருத்தமாக, ஒழுங்காக செய்பவன் வாசன். என்னவன் என்ற பெருமை வேறு நெஞ்சில் ஏறிக்கொண்டு “நம்ம பையனும் உங்கள போலத்தான் இருக்க போறான்” என்று வேறு நினைத்துக்கொண்டாள். அப்பொழுது மயக்கம் தெளிந்தவளுக்கு கரு கலைந்தது இன்னும் தெரியவில்லை.
 
“இவர் பேசுவதை பார்த்தால் தன்னோடு ஆஸ்பிடலில் தங்குவதை பற்றித்தான் மாமாவோடு பேசினார் போலும். வீட்டுல இருந்து யாரும் வரலையா?” கண்களை மீண்டும் மெதுவாக திறக்க வாசன் அவளருகில் ஓடி வந்திருந்தான்.
 
“கண்ணு முழிச்சிட்டியா வாசு. ஆபரேஷன் பண்ணதால டாக்டர் இப்போவே எதுவும் சாப்பிட வேணாம்னு சொல்லிட்டாரு. கொஞ்சமா தண்ணி மட்டும் குடிக்கிறியா? தொண்ட காஞ்சி போய் இருக்கும்”
 
“ஆபரேஷன்?” என்று சிந்தித்தவள் தலை காயத்தைத்தான் சொல்வதாக எண்ணி தண்ணீர் வேண்டாம் என்று கூறும் பொழுதே! நர்ஸ் உள்ளே நுழைந்து வாசுகி கண்விழித்ததை கவனித்து அவளை பரிசோதித்து விட்டு வாசனிடம் திரும்பி
 
“இவங்கள பாத்துக்க லேடீஸ் யாரும் இல்லையா?” நைட் டியூட்டிக்கு வந்த நர்ஸ் என்பதனால் மாலையிலிருந்தே! வாசன் அங்கு இருப்பது அவருக்கு தெரியவில்லை. 
 
“நான் அவ ஹஸ்பண்ட் தான் சிஸ்டர்” என்றான் வாசன்.
 
“இல்ல சார். இந்த மாதிரி நேரத்துல லேடீஸ் யாராவது இருந்தா நல்லா இருக்கும்” என்று அவர் இழுக்க
 
முகம் இறுகியவன் “எனக்கு ஒன்னுனா அவ பாத்துக்க மாட்டாளா? அவளுக்கு ஒன்னுனா நான்தான் கூட இருப்பேன். அதுல உங்களுக்கு ஏதும் பிரச்சினைனா சொல்லுங்க நாங்க வேற ஆஸ்பிடல் போறோம்” என்று கடுகடுவென பொரிய
 
“ஐயோ சார் நான் அந்த அர்த்தத்துல சொல்லல” எதுக்குடா வம்பு என்ற முக பாவனையோடு அவர் வெளியேறி இருக்க வாசுகியின் முகத்தில் புன்னகை பெரிதாகவே! விரிந்தது.
 
கணவனை அருகில் அழைத்தவள் “சாப்பிட்டீங்களா?” என்று கேட்க
 
“சாப்பிட்டேன் வாசு. இப்போ மணி என்ன தெரியுமா? நைட் பதினொன்னு. தலை வலிக்குதா?” என்றவனின் இடது கை தலையை தடவ வலது கையை அவள் வயிற்றின் மேல் வைத்திருந்தான்.
 
“எனக்கும் ஒண்ணுமில்லைங்க, எல்லாம் சரியாகிடும்” என்று அவள் கணவனுக்கு ஆறுதல் கூற முகம் இறுகி இருந்தவன் அமைதியையே! கடை பிடிக்க வீட்டில் நடந்த களோபரம் அவனுக்கு தெரிந்திருக்கும். தெரிந்தும் ஒன்றும் கேட்காமல் அமைதியாக இருக்கின்றான் என்றால் கோபமாக இருக்கின்றானா? அவன் முகத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஒன்றும் தெரியவில்லை. அல்லது உடம்பு முடியாமல் இருப்பவளிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் இருக்கின்றானா? என்று வாசுகியால் கணிக்க முடியவில்லை. 
 
“வீட்டுல இருந்து யாரும் வரலையா?” ஒருவாறு கேட்டு விட்டாள். அவன் கோபம் கொள்வானோ! என்ற அச்சம் வேறு அடிமனதை இறுக்கியது.
 
அவனது முகமோ! பாறை போல் இறுகி இருக்க, எந்த உணர்ச்சியும் இல்லாது “எல்லாரும் மாறி மாறி வந்துக்கிட்டுதான் இருந்தாங்க, ப்ரைவட் ஆஸ்பிடல் இல்லையா? எப்போவேனா வரலாம். யார்வேனா வரலாம். நான்தான் இருப்பேன்னு சொல்லிட்டேன். அதனால உங்கப்பா காலைல வரதா சொல்லிட்டு போய்ட்டாரு” குரலில் எந்த பிசிறும் இல்லை. கோபமோ! வருத்தமோ! என்று பிரித்தறிய முடியாத குரலில் கூற கோபமில்லை என்னு நினைத்து வாசுகி நிம்மதியடைந்தாள்.
 
நடந்ததும் அதுதான். வாசுகியிடன் இவன் தன்மையாக, அமைதியாக கூறினான். ஆனால் நாதனிடம்? 
 
“பிறப்பு, இறப்பு எல்லாம் கடவுள் தீர்மானிப்பது. அது நம்ம கைல இல்ல. நம்ம கூட இருந்தவங்க இறந்துட்டதால நாமளும் இறந்துடணும்னு நினச்சா நம்மள நம்பி இருக்குறவங்கள என்ன செய்யிறது. கடவுளுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ! அவங்கள சீக்கிரமே! அவன் கிட்ட அலைச்சிடுவானாம். நம்மள கஷ்டப்படுத்த நம்ம கூட இருக்குறவங்கள அவன் பிரிக்கிறதில்ல. நம்மள சோதிக்கத்தான் இப்படி செய்யிறான். அம்மாவ எடுத்துகிட்டவன் சகோதரர்கள கொடுத்திருக்கான்னா என்ன அர்த்தம் அவங்கள நீங்கதான் பாத்துக்கணும், வளர்க்கணும், அது உங்க பொறுப்பு” வாசனின் அன்னை கலாவதி இறந்த துக்கத்தில் வாசன் மற்றும் நித்யா அழுது கரைந்த போது செல்லம்மா பாட்டி சொன்ன அறைவுரைதான் இது.
 
“ராமநாதன் குடிபோதையில் ஸ்ரீராம் கலாவதியின் உயிரை எடுத்த எமன்” என்று திட்டுவதை கேட்டு வாசனும், நித்யாவும் செல்லம்மாவை கேள்வி கேக்க, 
 
“அம்மாவ எடுத்துகிட்டவன் ஸ்ரீராம கொடுத்திருக்கான். ஸ்ரீராமாலதான் அம்மா இறந்தானு சொன்னா ஏத்துப்பீங்களா? அவன் குழந்தை அவனால உயிரை எடுக்க முடியுமா? உங்க அம்மாவோட ஆயிசு அவ்வளவுதான். அவ எனக்கு பொண்ணு. என்னால முடிஞ்சா என் உசுர கொடுத்து அவளுக்கு பதிலா நான் செத்திருக்க மாட்டேனா? இல்ல நீங்க கொடுத்திருக்க மாட்டீங்களா? யாரு எப்போ பூமிக்கு வரணும் என்கிறது கடவுள் சித்தம். அதே மாதிரி யாரு எப்போ இறக்கணும் என்கிறதும் கடவுளோட விருப்பம்” பத்து வயதில் பாட்டி சொன்னது பசுமரத்தாணி போல் வாசனின் மனதில் பதிந்து போனது.
 
நித்யாவுக்கு அக்ஷரா கிடைக்க முன்பாக குழந்தை உண்டாகி இருந்தாள். அப்பொழுது சஹானாவுக்கு உடம்பு முடியாமல் போக மருத்துவமனையில் இரண்டு நாள் நான்கு மாத கருவையும் சுமந்துக்கொண்டு தூக்கமில்லாமல் இருந்திருக்கிறாள். குழந்தைக்கு கொஞ்சம் உடம்பு தேறியதும்தான் வீட்டார் நியாபகம் வந்தது. வாசனை அழைத்து கூற, இவனும் “ஏதாவது இருந்தா சொல்ல மாட்டியா தனியாத்தான் எல்லாம் செய்யணுமா?” என்று கடிந்தவாறே டில்லி சென்று சேர்ந்தான்.
 
சஹானா உடம்பு தேறி வந்துவிட்டாள். ஆனால் அந்த குழந்தைதான் நித்யாவுக்கு தங்கவில்லை. ஆதி தந்தையோடு நேர்சரி சென்றிருக்க, சஹானா தூங்கிக் கொண்டிருக்க, வாசன் டீவி பார்த்துக்கொண்டிருந்தான். நித்யா துணிகளை கழுவலாம் என்று குளியலறைக்கு சென்றிருக்க, குளியலறை கதவில் எதோ ஒரு பொருள் மோதிய சத்தம் கேட்டு வாசன் யோசனையாக நித்யாவை அழைத்துப் பார்க்க அவளிடமிருந்து பதிலில்லை.
 
கதவு திறந்துதான் இருந்தது. மெதுவாக தள்ளியவன் கண்ட காட்ச்சி அவன் வாழ்நாளில் என்றுமே! மறக்க முடியாத காட்ச்சி. நித்யா தரையில் விழுந்திருக்க அவளுடைய நான்கு மாத கரு கலைந்திருந்தது.
 
இப்படி
ஒரு அனுபவத்தை எந்த ஆணும் தன் வாழ்நாளில் சந்தித்திருக்க மாட்டார்கள். அப்படியே சந்தித்திருந்தாலும் கணவனாக முகம் கொடுத்திருப்பார்கள் அல்லது தந்தையாக மகளை அணுகி இருப்பார்கள் ஒரு சகோதரனாக எந்த ஆணும் இப்படியொரு நிகழ்வை தன் வாழ்வில் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.
 
அதிர்ச்சியில் உறைந்த வாசனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியவில்லை. நித்யா விழுந்திருந்தாளே! ஒழிய மயங்கி இருக்கவில்லை. அவளுடைய இடுப்புக்கு கீழே மரத்துப்போய் அவளால் அசையாக கூட முடியாத நிலையில் சத்தமும் எழுப்ப முடியாமல் தொண்டை வறண்டு ஏதோ ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள். அந்த நிலையிலும் கைக்கு அகப்பட்ட சோப்பை வீசியடித்திருக்கிறாள். ரொம்பவே தைரியமான பெண்தான் நித்யா. அந்த சத்தத்தில்தான் வாசன் உள்ளே வந்ததும் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றதும்.
 
நித்யா பேச முடியாமல் கையை அசைத்து வாசனை அழைக்க அவளருகில் ஓடியவன் அவளை தூக்கி மடியில் வைத்துக்கொள்ள அவன் கண்கள் கலங்கி கண்ணீர் தாரைதாரையாக கொட்ட கலங்கிய விழிகளோடு அப்பபொழுதுதான் அவள் பாதங்களை நோக்கினான். 
 
கரு கலைந்ததில் குளியலறை முழுக்க குருதியில் மூழ்கி இருக்க, சதை பிண்டம் போல் எதோ ஒன்று. அது.. அது.. நித்தியின் குழந்தை. வாய் விட்டே கதறி விட்டான் வாசன். கையும் காலும் நன்கு வளர்ச்சியடைந்திருக்க, கழுத்தும், தலையும் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்க, மீன் போன்ற கண்கள். காது இன்னும் வளரவில்லை. தொப்புள்கொடி வேறு தொங்கிக்கொண்டிருந்தது. சஹானாவை உரித்து வைத்திருந்தது அந்த சிசு.
 
நித்யா அழவில்லை. வலியையும் பொறுத்துக் கொண்டு “ஆஸ்பிடல், ஆம்புலன்ஸ்” நித்யா திக்கிக் திக்கி கூறியதும்தான் வாசனுக்கு சுயநினைவே! வந்தது. குளித்து விட்டு துடைக்க வைத்திருந்த அந்த வெள்ளை துண்டில் குழந்தையை சுற்றியவன் நித்யாவின் வயிற்றின் மீதே வைத்து அவளை தூக்கிக் கொண்டு வந்து சோபாவில் கிடத்தி மருத்துவமனைக்கு அழைத்திருந்தான். அம்பியூலன்ஸ் வருவதற்குள் நித்யாவுக்கு முதலுதவியும் செய்தவன் ஆத்மநாதனையும் அழைத்து கூறி விட்டு நித்யாவோடு, சஹானாவையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தான்.
 
குழந்தை இறந்தே! பிறந்திருக்க, ஆத்மநாதன் வந்த உடனே! அடக்கம் செய்யும் வேலைகளை கவனிக்கலானான். வீட்டுக்கு வந்து குளியலறையை சுத்தம் செய்தவன் நினைத்து நினைத்து அழுதது மட்டுமல்லாது ஆத்மநாதனிடம் புலம்பித்தீர்த்தான். இரண்டு நாட்கள் மருத்துமனையில் இருந்த நித்யா வீடு வந்த பின்பும் ஒருவாரம் அவளை கவனித்துக்கொண்டு பின்புதான் வாசன் ஊருக்கே! வந்தான்.
 
அங்கிருந்த ஒரு வாரமும் வாசனால் சரியாக உண்ணவும் முடியவில்லை. ஒழுங்கான தூக்கமும் இல்லை. ஆனால் நித்யா அந்த சம்பவத்தை கடந்து வாழ பழகி இருந்தாள். வீட்டு வேலைகள் அத்தனையும் செய்தாள். கணவனை கவனித்துக்கொண்டாள். குழந்தைகளை பரமாரித்தாள். அமர்ந்து அழுவதற்கு கூட அவளுக்கு நேரமில்லை. வாசனும் அவளை பார்த்துக்கொண்டுதான் இருந்தான். என்ன பெண் இவள் என்று அவனால் எண்ண மட்டும்தான் முடிந்தது.  
 
யார் சொல்கிறார்கள் பெண்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்று. தன் துக்கத்தை பிறர் அறியாமல் மறைப்பதில் அவர்களை போல் கல்நெஞ்சம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் இல்லை.
 
அக்ஷரா உண்டான போது இவன்தான் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பார்த்துக்கொண்டான். தங்கையை அன்னையாக கவனித்துக் கொண்டவனுக்கு மனைவியை பார்த்துக்கொள்வதெல்லாம் பெரிய விடயமும் இல்லை. அவள் மனநிலையை புரிந்துக்கொள்ள முடியாமலுமில்லை. வாசுகியின் வலியை நீக்க வாசன் ஒருத்தனால் மட்டும்தான் முடியும். நித்யா போல் மனதைரியமான பெண்ணாக இருந்தால், வீட்டு வேலைகள் இழுத்துக்கொண்டால் அவளாகவே மீண்டு விடுவாள். வாசுகிக்கு அவ்வளவு மனதைரியம் இருக்குமா? தெரியாது. வாசன்தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.
 
இழப்பும், வலியும் இருவருக்கும் தான். அவள் மேல்தான் தவறு என்று குற்றம் சாட்டி பேசி அவளை இன்னும் மனதளவில் காயப்படுத்துவதில் என்ன பிரயோஜனம்? மேலும் மனதளவில் ஒடுங்கி விடுவாள். இப்பொழுது தேவை அவளுக்கு ஆறுதலான வார்த்தைகளும். வாசனின் அருகாமையும் மட்டும்தான். அது வாசனுக்கு நன்கு புரியவே! வலியையும் மறைத்துக் கொண்டு சாதாரணமாக இருக்க முயன்றான்.
 
வாசுகியின் அருகில் நான் இருக்கேன் என்று அத்தைகள் சொன்னதுதான். “இல்ல அத்த அவளுக்கு சத்தாக சாப்பிட ஏதாச்சும் செஞ்சு அனுப்புங்க, நான் கூட இருக்கேன். பகல்ல நீங்க யாராச்சும் இருங்க. பாட்டியாளையும் தூக்கம் முழிக்க முடியாது” என்று மந்த்ரா சொல்ல பூர்ணாவாலும் முடியாததால் அவர்களும் சரியென்று விட்டனர்.
 
வாசுகியை அறையில் பார்த்து விட்டு மந்த்ரா இரவு அவளருகில் அவளோடு தங்க தயாராக “என்ன பண்ணுற?” அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த வாசன் வாய் திறந்திருக்க
 
மந்த்ராவின் மனதுக்குள் மணியடிக்க “இல்ல மாமா அக்கா கூட யாராச்சும் இருக்கணுமே!” என்று இழுக்க
 
“அதெல்லெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ வீட்டுக்கு கிளம்பு” என்று சொல்ல
 
“இல்ல மாப்புள… உங்களால முடியாது. மந்த்ரா இருப்பா” நாதன் சொல்ல
 
“என்ன என்னால முடியாது? என்னால முடியாதுனு நீங்க கூட்டிட்டு போய்தான் அவளை இப்படி சாக விட்டுடீங்களா?” வாசனின் வார்த்தை தடித்து விழ,
 
“மாப்புள….” நாதன் அதிர்ச்சியடைந்தார்.
 
“என்ன மாப்புளனு ஓவரா செல்லம் கொஞ்சுரீங்க? அவளை பாத்தீங்களா? ரெண்டு நாள்ல உடம்பு இளச்சி போய், ஒழுங்கா சாப்பாடு போட்டீங்களா? அவ முகத்தை பாத்தீங்களா? யாரோ மாதிரி இருக்கா? என் கூட இருக்கும் போது நல்லாதானே! இருந்தா? இதுதான் நீங்க அவளை பாத்துகிட்டே லட்சணமா?” குரலில் அவ்வளவு சீற்றம் இருக்க, நெருங்கினால் அடித்து விடுவான் என்ற தோற்றம், ஆனால் முகத்தில் கடுகளவேனும் கோபத்தின் சாயல் இல்லை. ஒரு மனிதனால் தன் உணர்ச்சிகளை இப்படியும் மறைக்க முடியுமா?
 
வாசன் சொல்ல சொல்லத்தான் மந்த்ராவும், நாதனும் வாசுகியை கவனித்து பார்த்தனர். உண்மைதான் கல்யாணத்துக்கு பிறகு கொஞ்சம் மிளிர்ந்த அவள் சருமம் இந்த இரண்டு நாட்களில் வாடி வதங்கித்தான் போய் இருந்தது. அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
 
“நீங்க பாத்து கிழிச்சதெல்லாம் போதும். என் பொண்டாட்டிய நான் பாத்துக்கிறேன். நீங்க போங்க” முகம் சாந்தமாகத்தான் இருந்தது இவன் திட்டுகிறானா? இல்ல சாதாரணமாக சொல்கிறானா என்று சந்தேகம் வந்தது ஆனாலும் அவன் குரலில் இருந்த தொனியும், அழுத்தமும், வார்த்தைகளுக்கிடையிலான வேகமும் அவன் கோபத்தின் அளவைக் காட்ட போதுமாக இருந்தது.
 
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவன் இவ்வளவு பேசுவானா? என்ற யோசனையில்லையே! “வேணும்னா பாட்டியா வர சொல்லவா?” மந்த்ரா கேக்க
 
“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?, வெளிய போ” பற்களை கடித்தவாறு அவள் புறம் அடியெடுத்து வைக்க, நடுநடுங்கிப் போனாள் மந்த்ரா. அடக்கி இருந்த மொத்த கோபத்தையும் ஒரு நொடியில் அவன் முகம் காட்டி இருந்தது  
 
“சரி மாப்புள நாங்க போறோம். வாசுகிக்கி நைட் ஒன்னும் சாப்பிட கொடுக்க மாட்டாங்க, காலைல எடுத்துட்டு வரோம். உங்களுக்கு மட்டும் கேன்டீன்ல வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு போறேன்” அவசரமாக சொன்ன நாதன் வாசனின் பதிலையும் எதிர்பார்க்காமல் விரைந்திருந்தார்.
 
சுவரில் ஓங்கி குத்தியவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வர நாதன் சாப்பாடோடு வந்து சேர்ந்தார். மந்த்ரா பல்லி போல் ஒரு மூலையில் போய் நின்று கொண்டிருக்க, சாப்பாட்டை வாசனின் கையில் திணிக்காத குறையாக கொடுத்தவர் மந்த்ராவை அழைத்துக்கொண்டு  காலை வருவதாக சென்றிருந்தார்.
 
வாசனும் மறுக்கவில்லை. ஏனெனில் வாசுகியை விட்டு ஒரு அடியேனும் வெளியே எடுத்து வைக்க அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. பகலும் அவன் சாப்பிட்டு இருக்கவில்லை. வாசுகி கண் விழிக்கும் வரையில் அவனால் பச்சை தண்ணீர் கூட குடிக்க முடியாது. கண்விழித்த பின் அவளிடம் குழந்தையை இழந்து விட்ட செய்தியை எவ்வாறு கூற போகிறேன் என்று நினைக்கையில் பயம் மட்டும்தான், பசி, தூக்கம் எல்லாம் வருமா? சந்தேகம்தான். இவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாது. சாப்பாட்டை வாங்கி வைத்துக்கொண்டவன் அவர்கள் கிளம்பியதும் வாசுகி கண் விழிக்கும் வரை அவள் அருகில் அமர்ந்து அவளையே! பார்த்திருந்தான்.
 
ரகு அழைத்து விசாரிக்கவும் வாசுகி அனுமதித்திருக்கும் விஷயத்தை கூறி விட்டு தந்தை காத்துக்கொண்டு இருப்பார் என்று நியாபகம் வரவே! அவருக்கு சாப்பாடும் எடுத்துக்கொண்டு வீட்டில் போய் அவருக்கு துணையாக தூங்குமாறு ரகுக்கு கூறினான். அதன் பின் தந்தையை அழைத்து வாசுகி அனுமதிக்க பட்டிருப்பதையும், கரு கலைந்ததையும் கூறியவன் தேவையான பொருட்களை எடுத்து வருமாறு கூறிக்கொண்டிருக்க, வாசுகி கண்விழித்திருந்தாள்.
 
அவள் “சாப்பீட்டிங்களா?” என்று கேட்டதும் “ஆம்” என்று பொய்யுரைத்தானே! தவிர சாப்பிடும் மனநிலையிலா அவன் இருக்கின்றான்?
 
அவள் வலது கையை தடவியவாறு அருகில் அமர்ந்து விட வாசுகி மருந்தின் வீரியத்தில் கண்களை மூடிக்கொள்ள சிறிது நேரத்தில் அடி வயிற்றி மெது மெதுவாக அவளுக்கு வலி ஏற்பட ஆரம்பித்தது.
 
கருக்கலைப்பு நடந்தால் வயிற்றை சுத்தம் செய்த பின் வலி நிவாரணியை ஆசனவாய் வழியாகத்தான் செலுத்தப்படும். வலிநிவாரணியின் வீரியம் குறையும் பொழுது மீண்டும் வலி ஆரம்பிக்கும். அதுதான் வாசுகிக்கும் நடக்க ஆரம்பித்திருந்தது.  
 
முகத்தை சுளித்து பொறுத்து பொறுத்து பார்த்தவள் வாசனின் கையை இறுக்கி பிடித்து “வயிறு ரொம்ப வலிக்குது. பாப்பா… பாப்பா.. ” என்றவளின்  குரலில் வலியையும் தாண்டி அப்பட்டமான பயம் இருந்தது.
 
  முகம் இறுகியவன் “ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல எல்லாம் சரியாகிடும்” என்றவன் தாதியை அழைக்க பொருத்தி இருந்த ஸ்விட்ச்சை அழுத்த இரண்டு நிமிடங்கள் செல்வதற்குள் அவர் அறையில் பிரசன்னமாகி இருந்தார்.
 
“வயித்த கிளீன் பண்ணினா வலிக்கத்தான் செய்யும்மா.. அதுக்காக ஓவரா பெயின் கிளர் கொடுக்க கூடாதே!” என்றவர் எதோ ஒரு மருந்தை ட்ரிப்சில் ஏற்ற, அவர் சொன்னதை ஊகித்த வாசுகி கணவனை முகம் பார்த்து அவர் கூறியதன் அர்த்தம் என்ன என்று கேள்வியாகவே! நோக்கியவள் அவனின் சிவந்த கண்களைக் கண்டு விசும்பலானாள்.
 
“அழாதீங்கம்மா… உங்களுக்கு வயசும் இருக்கு, இன்னொரு குழந்தையை பெத்துக்க முடியுமே! அதிர்ச்சியிலதானே! கரு கலைஞ்சிருச்சு. வேற எந்த பிரச்சினையுமில்லையே! மனச போட்டு குழப்பிக்காதீங்க” என்று விட்டு வெளியேற வாசுகியின் விசும்பல் கேவலாக வெடித்து கதறியாளலானாள்.
 
“ஷ்…. வாசு அழாத… எல்லாம் மனிசங்களுக்கு நடக்குறதுதான்” வாசன் கண்களை துடைத்து விட அவன் குரலும் கமறியிருந்தது. முயன்று சாதாரணமாக பேசலானான்.
 
“என்ன மன்னிச்சுடுங்க. நான் வீட்டுக்கு போகலானா… இப்படியொரு சம்பவம் நடந்திருக்காது. என்னாலதான் இப்டியாச்சு. நம்ம பாப்பா…”  வலியில் திக்கியவாறு அவள் பேச
 
 “இப்போ நீ ரெஸ்ட் எடுக்கணும். ஒன்னும் யோசிக்காத தூங்கு” அவள் கையை தட்டிக்கொடுத்தவன் அருகிலையே! அமர்ந்திருக்க மருந்தின் வீரியத்தில் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றாள் வாசுகி.
 
தூங்கும் மனைவியையே! பாத்திருந்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெறுக துடைக்கத் துடைக்க வழிந்தது.
 
“என் அம்மாவே! எனக்கு புள்ளையா பொறப்பாங்கனு நினைச்சேனே டி. இப்படி ஆகிருச்சே!” 
 
எவ்வளவுதான் கவலைகள் மனதை இறுக்கினாலும். ஆண்கள் அவ்வளவு சீக்கிரத்தில் கண்ணீர் வடிப்பவர்களல்ல. கதறி அழுதுவிடுபவர்களுமல்ல. வாசுகிக்கிதான் ஆறுதலாக இருக்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு அவள் கதறிய கதறலால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தூங்கி விட்டாள் என்றதும் மனதில் உள்ள பாரத்தேயெல்லாம் இறக்கி வைக்கலானான்.
 
“இதுக்கா டி. போன? உன்ன நான் பாத்துக்க மாட்டேனா? என்னால உன்ன பாத்துக்க முடியாதா?” கண்களில் நீர் நிறைந்து மனைவியின் உருவம் மங்கலாக தெரிய துடைத்துக்கொண்டவன்,  “தல பட்டதுல உனக்கு ஏதாவது ஆகி இருந்தா? என் நிலமய யோசிச்சு பாத்தியா? இனி நீயாக கேட்டாலும் உன்ன எங்கயும் தனியா அனுப்ப மாட்டேன் டி” விடியும் வரை தூங்காது புலம்பிக்கொண்டே! இருந்தான் வாசன்.
 
வாசுகிக்கு அதிகாலையில்லையே! விழிப்பு தட்டியது. ஒரு கணம் தான் எங்கு இருக்கின்றோம் என்று பார்வையை சுழற்றியவள் மருத்துவமனை என்றதும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் நியாபகத்தில் வர வாசன் அறையில் இல்லை என்றதும் பதட்டமானாள். கழிவறையை திறந்துகொண்டு வெளியே வந்தவன்
 
“எந்திரிச்சிட்டியார்? எந்திரிச்சா
உனக்கு சூடா குடிக்க ஏதாச்சும் கொடுக்க சொன்னாங்க, என்ன சாப்புடுற?” மிக மிக சாதாரணமாகவே! அவன் குரல் ஒலிக்க, உதடு கடித்து வரும் அழுகையை கட்டுப்படுத்தியவள் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லவும் அவளை மெதுவாக கட்டிலில் இருந்து இறக்கி அழைத்து சென்றான் வாசன்.
 
வாய் கொப்பளித்து, முகத்தையும் கழுவி விட்டவன் “வெறும் வயித்தோட இருக்காத, ஏதாச்சும் குடி, அப்பா இப்போ வந்துடுவார் வந்த பிறகு பல்லு விளக்கிக்கலாம். சரி என்ன சாப்பிடுற?”
 
“ஏதாச்சும்”
 
பிளாஸ்க்கோடு கதவருகில் சென்று எட்டிப்ப பார்த்தவன் அவன் கேன்டீன் செல்லாது அப்பக்கம் செல்லும் யாரையோ அழைத்து காசு கொடுத்து வாங்கிக் கொண்டு வருமாறு சொல்வது வாசுகியின் காதில் விழுந்தது. மொத்தத்தில் அவன் அவளை தனியாக விட மாட்டான் என்று மட்டும் புரிந்தது.
 
டீயும் வரவே! அதை கப்பில் ஊற்ரிக் கொடுக்க, பெற்றுக்கொண்டவள் அமைதியாகவே அருந்த வாசனும் ஒரு கப்பில் தனக்கும் ஊற்றிக்கொண்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
 
வாசன் கேட்டவைகளோடு ராமநாதனும் வர, காலை உணவோடு ராஜம் மற்றும் மந்த்ரா வந்திருந்தனர்.
 
பல்துலக்கி விட்டு, உடம்பு துடைத்து, துணி மாற்றி, அவளுக்கு உணவு ஊட்டி மாத்திரைக் கொடுத்து அத்தனை வேலைகளையும் வாசன் ஒருவனே! பார்கலானான் யாரையும் நெருங்கக்
கூட விடவில்லை.
 
 
தலையசைத்து கேட்டுக்கொள்பவளிடமிருந்து ஒரு வார்த்தையேனும் பதில் வரவில்லை. அவன் சொல்வதையெல்லாம் செய்துகொண்டிருந்தாள்.
 
மூன்று நாட்களாக ஒரே அறையில் இருந்தாலும் மௌனமே! ஆட்ச்சி செய்ய, நான்கு விழிகளும் அடிக்கடி சந்தித்துக்கொண்டு மௌனபாஷை பேசிக்கொண்டுதான் இருந்தன.

Advertisement