Advertisement

அத்தியாயம் 10

நாதனுக்கு வாசுகியை தனது சகோதரிகளின் பசங்களில் யாராவதுக்கு கட்டிக்கொடுக்க வேண்டும், அவளை தன் கண் முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று குடும்பாத்தாரிடம் அடிக்கடி சொல்லலானார்.
 
ஆனால் உண்மையில் அவர் மனதில் அபர்ணா பெற்ற பெண் அவள் போல் யாரையாவது காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் விடுவாளோ என்ற அச்சம் மறைந்திருந்தது அவர் மட்டுமே! அறிவார்.
 
அபர்ணா ரொம்பவே! சாது வீட்டுக்கு அடங்கிய பெண். பூர்ணா அவளுக்கு நேர் எதிர். அபர்ணா அப்படி  இருக்கப் போய்தான் தான் காதலிப்பதை வீட்டில் கூறவும் முடியாமல் தவித்து வீட்டையும் எதிர்க்க முடியாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையான சொந்த மாமன் மகன் நாதனை திருமணம் செய்துகொண்டாள்.
 
கடைசியில் அந்த வாழ்க்கையை வாழவும் முடியாமல், அதை சொல்லவும் முடியாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் தலைமறைவாகி விட்டாள்.
 
தாயின் குணம் கொஞ்சம் வாசுகியிடம் இருந்தாலும் தந்தையின் குணம் அவளிடம் இருப்பதினாலையே! வாசனிடம் வாயாடலானாள். ஆனால் நாதனுக்கு வாசுகி அபர்ணாவின் மொத்த உருவமாகவே! தெரிய அவர் அச்சம் அவளை திருமணம் செய்து கொடுத்தாலும் தீருமா என்றுதான் இருந்தது. அதனாலையே! அவளை காலேஜுக்கு அனுப்பவில்லை. குடும்பத்துக்குள்ளையே! திருமணம் செய்து கொடுத்து விட்டால் நாளை பின்ன என்ன பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான் அவர் எண்ணம்.
 
அவர் அச்சமும் வீண். நான் என் அன்னையையின் வழியில் செல்ல மாட்டேன் என்பது போல்தான் வாசுகியின் அனைத்து நடவடிக்கைகளும் இருந்தது.  
 
“அபர்ணா செய்ததை போல் நீ செய்து விடாதே!” என்று ராஜம் அன்று பூர்ணனாவுக்கு சொன்ன அதே! வார்த்தையை பூர்ணனா இன்று வாசுகியை பார்த்து “உன் அம்மா போல் செய்து எங்க மானத்த வாங்கிடாதே!” என்று அவள் வயது வந்தது முதல் கூறிக்கூறியே! வாசுகியின் மனதில் காதல் என்ற ஒன்றை விதைக்க விடாமல் செய்து விட்டாள்.
 
கொஞ்சம் விவரம் வந்த பிறகு அவள் அத்தை பசங்களோடு கூட நின்று பேசுவதை குறைத்துக்கொண்டாள். எல்லோரும் ஒன்றாக இருந்து சிரித்து, பேசி மகிழ்வார்களே! தவிர தனியாக யாரிடமும் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை.
 
கோவிலுக்கு தவிர வேறு எங்கும் வெளியே செல்வதும் இல்லை. கோவிலுக்கும் அத்தைகளோடுதான் செல்வாள். இவ்வாறு ஒவ்வொரு அடியையும் பார்த்து
பார்த்து வைத்து எவ்வழியிலும் தனக்கும், தன் பெயருக்கும் எந்த களங்கமும் வராது பார்த்துக்கொண்டாள்.
 
நாளாக நாளாக நாதனுக்கு வாசுகியின் குணமும் பிடித்து விட, நடத்தையிலும் நம்பிக்கை வந்தது.
 
பூர்ணாவின் தம்பிக்கு கட்டிக்கொடுக்கலாம் என்று பார்த்தால் வயது வித்தியாசம் ரொம்பவே! அதிகம். சரி அக்கா பசங்க என்று பார்த்தால் வாசுகிக்கு பொருத்தமான வயதில் இரண்டே பசங்கதான்.
 
ஒருத்தன் அக்கா கலைவாணியின் மகன் ஜெயமணி அவனோ! தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி ஒரேயடியாக மறுத்து விட சரி செல்வராணி அக்கா மகன் ரவீந்தரனை பார்க்க அவனின் ஜாதகம் பொருந்தவில்லை.
 
செல்வராணி நாதனிடம் கெஞ்ச கலைவாணி மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்
. மணியோ! “கவலை படாதீங்க வாசுகிக்கி கல்யாணம் நடக்கட்டும் அதற்கு பிறகுதான் என் கல்யாணம் நடக்கும். அதுவரை என் கல்யாணம் நடக்காது” என்று விட்டான். மகனை புரியாது பார்த்த கலைவாணி பெருமூச்சோடு அமைதியானாள். 
 
குடும்பத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாமல் போக வெளியே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து, வாசனையும் பேசி முடித்து, மூத்த மகள் வாசுகியின் திருமணத்தை வெகு விமர்சையாக செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், அவளை தொடர்ந்து இன்னும் இரண்டு பெண்கள் இருக்க பூர்ணா கூறியது போலும், வாசன் வீட்டாரின் விருப்பப்படியும் எளிமையாகவே! திருமணத்தை செய்தார் நாதன்.
 
மூத்த மகள் தப்பு செய்து விடுவாள் என்றிருந்தவருக்கு பூர்ணா பெத்த இரண்டின் மேலும் பார்வையை செலுத்தக மறந்து போனது விதியா? அல்லது கடவுளின் விளையாட்டா?
 
சந்திரா வாசுகியை விட ஒரு வருடமும் இரண்டு மாதங்கும் சிறியவள் வாசுகியின் திருமணம் முடியக் கூட இல்லை. பூர்ணாவுக்கு சந்திராவை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான். அவளுக்கு இரண்டு வருடங்கள் சிறியவள் மந்த்ரா.
 
வாசுகியின் திருமணம் முடிந்த கையேடு பூர்ணனா சந்திராவுக்கு மாப்பிள்ளை தேடும்படி நாதனை நச்சரிக்க, “அவளுக்கு கல்யாண யோகம் இன்னும் நான்கு மாதத்தில்தான் தொடங்குது பூர்ணா” என்று நாதன் கூற அவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் வந்த வரன் தான் ரோஹனுடைய வரன்.
 
ரோஹன் சந்திராவின் ஜி.எம். அவள் அவனை எவ்வாறு கவர்ந்தாள் என்று தெரியவில்லை பெண் கேட்டு வந்திருந்தான். சந்திரா வேலை பார்க்கும் கம்பனி கூட ரோஹனின் தந்தையின் நண்பனின் கம்பனியாம். தனக்கு அனுபவம் வேண்டும் என்பதினால்தான் இங்கு வேலை செய்கிறானாம். அவன் சொந்த ஊர் சென்னையாம். தந்தையின் கம்பனியில் வேலை செய்தால் முதலாளி என்று மரியாதையாக அனைவரும் பார்ப்பதால் தன்னால் எந்த வேலையும் கற்றுக்கொள்ள முடியவில்லையாம். இரண்டு வருடம் வேறு எங்கயாவது வேலை செய்கிறேன் என்று தந்தையிடம் சொல்ல “எங்கு செல்ல முடியாது வேண்டுமென்றால் இந்த கம்பனியில் வேலை செய்” என்று தந்தை கூறி விட்டதாகவும். வேறு வழியில்லாது இங்கு வந்ததாகவும், இங்கு வந்தால் இவர் தன்னை ஜி.எம் போஸ்ட்டில் உக்கார வைத்திருக்கிறார் என்றும் கூறியவனை நாதனுக்கு பிடித்துத்தான் போனது.
 
ஜாதகப் பொருத்தம் பார்த்து விட்டுத்தான் எதுவும் சொல்வேன் என்று நாதன் கூற ரோஹன் சிரித்தவாறு “சரி” என்று விட பூர்ணாதான் முகத்தை சுளித்தாள். இப்படியொரு சம்பந்தத்தை இழக்க அவள் தயாராக இல்லை.
 
வீட்டுக்கு வந்த சந்திரா இதை அறிந்து தனக்கு ரோஹனை திருமணம் செய்ய இஷ்டம் இல்லையென்றும் தான் ஜெயமணியை காதலிப்பதாகவும் கூறி விட
 
“நகரத்தில் இப்படியொரு வாழ்க்கை காத்திருக்க, ஊரில் விவசாயம் செய்யும் ஜெயமணியை திருமணம் செய்ய உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா?” என்று பூர்ணா மகளை அறைந்து விட்டாள்.
 
மாலையில் வீடு வந்த நாதனின் காதிலும் தனது இரண்டாவது மகள் காதலிக்கும் விஷயம் விழ கலங்கித்தான் போனார். வாசுகியின் மீது சந்தேகக் கண்ணை வைத்திருந்தவர் மத்த இரு பெண்கள் மீது கவனம் செலுத்த தவறியதை எண்ணி வருந்தினார்.
 
சந்திராவை பொறுமையாகத்தான் விசாரித்தார் “யாரை காதலிக்கிறாய்” என்று அவளும் ஜெயமணியை ரொம்ப காலமாக காதலிப்பதாக கூற நொந்து விட்டார்.
 
ஜெயமணியை வாசுகிக்கு மணம் முடித்து வைக்கத்தான் கலைவாணியும் நாதனும் ஆசைப்பட்டனர். ஆனால் சந்திராவும் ஜெயமணியும் வீட்டிலுள்ளோருக்குக்கு தெரியாமல் காதலித்தது மட்டுமல்லாது ரொம்ப நல்லவர்கள் போல் வாசுகிக்கு கல்யாணம் ஆனா பிறகுதான் தாங்கள் கல்யாணம் செய்து கொள்வதாக பேசியது நாதனின் கோபத்தை தூண்டி இருக்க, ஏற்கனவே! அபர்ணா காதலித்ததால் அவமானப்பட்டு காதல் மீது வெறுப்பாக இருந்தவர் இதற்கு ஒருகாலமும் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி விட பூர்ணாவும் ரோஹனுக்குத்தான் சந்திராவை கட்டி வைப்பேன் என்று ஒத்தை காலில் நிக்காத குறையாக கூற சந்திரா உண்ணா விரதம் இருக்காத குறையாக வீட்டில் தினமும் ஒரு போராட்டம்.
 
வீட்டில் நடப்பவைகளை எல்லாம் மந்த்ரா மூலம் வாசுகிக்கு தெரிய வர தனது கல்யாண விஷயத்திலும் “அக்காக்கு கல்யாணம் நடக்காமல் தான் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று சந்திரா சுயநலமாக பேசியதாகத்தான் அவளுக்குத் தோன்றியது. பூர்ணா வேறு போன் செய்து ஜெயமணியை வாசுகி காதலித்து தொலைக்க வேண்டியதுதானே! என்று இவளை வசை பாடி இருக்க, வாசுகிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
 
எல்லாவற்றையும் மனதில் போட்டு உழன்றுக்கொண்டிருந்தவள் கணவனிடம் பகிரவுமில்லை. அவன் காதலாக, ஆசையாக அவளுக்கு செய்யும் பணிவிடைகளையும் குழந்தையின் வரவால் சுயநலமாக செய்வதாகவே! எண்ணி குழம்பி, அவனை வேறு பேசி இருவரும் மனசங்கடத்துக்கு ஆளாகி இருந்தனர்.   
 
இவ்வளவு பிரச்சினைகள் வாசுகியின் வீட்டில் நடந்து கொண்டிருப்பது வாசனுக்கு தெரியவுமில்லை. வாசுகி சொல்லவுமில்லை. சொல்லி இருந்தால் அவன் அனுப்பி இருக்கவும் மாட்டான். இன்று அவள் மருத்துவமனையில் படுத்திருக்கவும் மாட்டாள்.
 
கல்யாணமாகி வந்த நாளிலிருந்து இருவரும் பிரிந்ததில்லை. இதுதான் முதல் முறை. அது கூட வலியான சுகமாகத்தான் இருக்கிறது. என்றெண்ணியவாறே தனது வேலையில் மூழ்கி இருந்த வாசன் மனைவிடமிருந்து வரும் குறுந்செய்திக்காக காத்திருந்தான்.
 
“சாப்பிட்டுட்டேன், மாத்திரை போட்டுட்டுட்டேன்” என்று அவள் அனுப்பும் செய்தி வர தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அலைபேசியை பார்த்த வண்ணம் இருப்பவன் பொறுமை இழந்து அவளுக்கு அழைத்தும் விடுவான்.
 
ரகு வேற “என்ன அண்ணா அண்ணி ஊருக்கு போனாலும் போனாங்க போனும், கையுமா அலையிறீங்க?” என்று கேலி செய்ய
 
“போடா டேய் போய் வேலைய பாரு” என்று இவன் விரட்ட கடையில் உள்ளவர்கள் சத்தமில்லாமல் நகைக்கலாயினர்.
 
“இரண்டு நாள் போறதுக்குள்ள இப்படி இருக்கே! இன்னும் எத்தனை நாள் அங்க தங்க போற?” மானசீகமாக அவளிடம் கேட்டுக்கொள்பவன் அலைபேசி வழியாக வீட்டுக்கு வா” என்று அழைக்கவில்லை. அழைத்தாலும் அவள் மறுத்து விடுவாளோ! என்ற அச்சம் வேறு அவனை இம்சித்தது. அவளே! அழைத்து “என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்று சொல்ல மாட்டாளா? என்ற ஏக்கம் வேறு பிறந்தது.
 
“இதெல்லாம் ரொம்ப ஓவர் வாசா…. பொண்டாட்டி ஊருக்கு போய் ரெண்டு நாள் கூட ஆகல சொல்ல போனா ரெண்டு நைட்டுதான் ஆச்சு” அவன் மனசாட்ச்சி எடுத்துரைக்க
 
“ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம பாடி தாங்காது நாளை காலைல மொத பஸ்ஸ புடிச்சு வாசுவ பார்த்துட்டு வரணும். அப்போதான் நிம்மதியா வேல பார்க்க முடியும்” தனக்குள் சொல்லிக் கொண்டவன் வேலையில் மூழ்க மாலை நான்கு மணி தாண்டி இருக்கும் நாதன் அழைக்கவே!
 
“மாமா எதுக்கு கூப்புடுறாரு” என்ற யோசனையிலையே! தான் அலைபேசியை இயக்கி காதில் வைத்தான் வாசன்.
 
“மாப்புள சீக்கிரம் ஆசுபத்திரிக்கு வாங்க, வாசுகியை சேர்த்திருக்கோம்” என்றதோடு அவர் வைத்து விட வாசனுக்கு ஒன்றும் புரியவில்லை. மதியம்தான் பேசினாள் சாப்பிட்டு விட்டதாக வேறு கூறினாளே!
 
மீண்டும் நாதனுக்கு அழைக்க மந்த்ராதான் எடுத்தாள் “மாமா அக்கா ரொம்ப சீரியஸா இருக்கிறதா டாக்டர் சொல்லுறாங்க சீக்கிரம் வாங்க” என்றவள் அலைபேசியை அனைத்திருக்க என்ன நடந்தது என்று சொல்லாமல் அரைகுறையாக சொல்வதால் வாசனுக்கு கோபமும் வந்தது. அவர்கள் சொல்வதை நம்பவும் முடியவில்லை. மனம் அடிக்க ஆரம்பிக்க மருத்துவமனைக்கு விரைந்தான்.
 
போகும் வழியெல்லாம் “நல்லாதானே! இருந்தா? நல்லாதானே! பேசினா, அவளுக்கு ஒன்னும் ஆகி இருக்க வாய்ப்பில்லை, இவங்க எதோ உளறுறாங்க”
என்று அவன் மனதோடு பேசியவாறே வந்து சேர வாசுகியை அனுமதிக்கப்பட்டிருந்ததோ தீவிர சிகிச்சை பிரிவில் என்றதும் அவனது மொத்த சக்தியும் வடிந்து விட்டது.
 
கால்கள் தள்ளாட ஐ. சி.யுவை நோக்கி நடந்தவனுக்கு மனதுக்குள் சொல்ல முடியாத அச்சம் பரவ உடல் குளிர் எடுத்திருந்தது.
 
வாசன் ஐ.சி.யு வாசலை அடையும் பொழுதே! தாதி ஒருவர் “பெசன்ட்டோட வீட்டுக்காரர் வந்துட்டாரா?” என்று நாதனிடம் விசாரிப்பது தெரியவே வாசன் அங்கே விரைய நாதனும் “இதோ வந்துட்டார்” என்று கூற ஏதேதோ காகிதங்களை அவன் கையில் கொடுத்து “இங்க சைன் பண்ணுங்க, இங்க  சைன் பண்ணுங்க” என்று கையொப்பங்களை வாங்கியவர் சென்று விட்டார்.
 
தீவிர சிகிச்சை பிரிவு என்பதால்தான் இருவரை மாத்திரம் அங்கே இருக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது வாசனுக்கு புரிந்தது. நாதன் ஒரு இருக்கையில் தொப்பென்று அமர இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்தவன்
 
“என்ன நடந்தது” என்று  கேட்க அவன் குரலில் பதட்டமோ! பயமோ! இல்லை. மாறாக கோபமும் கர்ஜனையும் கலந்து இருக்கவே! நாதன் அவனிடம் எவ்வாறு சொல்வதென்று யோசிக்க, கையை பிசைந்துகொண்டு நின்ற மந்த்ராதான் வாய் திறந்தாள்.
 
“அது வந்து மாமா வீட்டுல கொஞ்சம் நாளா சந்திரா அக்கா லவ் பண்ணுறத சொன்னதால பிரச்சினை ஓடிக்கிட்டு இருந்தது. இன்னைக்கி அவளுக்கும், சித்திக்கும் சண்டை பெருசாகி வாசுகிக்கா நடுவுல போகப்போய் ….”
 
அவ்வளவு நேரமும் அவள் சொல்வதை கைகளை கோர்த்தவாறு கையை பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் இழுக்கவும் திரும்பி அவள் முகத்தை பார்க்க எச்சில் கூட்டி விழுங்கியவாறே விலாவரியாக சொல்லலானாள்.
 
மாமனாரும், கணவனும் தனக்கு சேவகம் செய்வது பிடிக்காமல்தான் வீட்டுக்கு போகவே முடிவு செய்தாள் வாசுகி. போனாலும் அவளை பூர்ணனா கவனித்து பார்த்துக்கொள்வாள்  என்றெல்லாம் நம்பிக்கை அவளுக்கு இருக்கவில்லை. அவளும் தாய் வீடு என்று வேறு எங்குதான் செல்வாள்.
 
வீட்டுக்கு போனால் சந்திராவின் காதல் பிரச்சினையால் வீடே கலவர பூமியாக மாறி இருந்தது. மந்த்ரா ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறாள். நாதனும் வயலுக்கு சென்று வருவதால் வீட்டில் பூர்ணாவும், வாசுகியும் தான். சந்திரா நினைத்தால் வேலைக்கு செல்வாள் இல்லையா லீவு சொல்லி விடுவாள்.
 
வாசுகி வந்த இரவு அவள்தான் சமைத்தாள். அந்த வாசனையில் வாந்தி எடுத்து சோர்ந்து போய் இருந்தவள் “கர்ப்பம் ஒன்னும் நோயில்ல, இப்படி படுத்து கெடந்தா உடம்பு ஊதி போய்டும், அப்படி, இப்படி” என்று பூர்ண பேசிய பேச்சுக்களால் சிறுது நேரத்தில் எழுந்து வேலையை கவனிக்கலானாள்.
 
இரண்டு நாட்களாக ஏன்டா வந்தோம் என்ற அளவுக்கு வேலைகள் வாசுகிக்கி கொட்டிக்கிடக்க, ஓய்வென்பதே இல்லாமல் வாந்தியும், மயக்கமும் வேறு அவளை பாடாய் படுத்தி இருந்தது. சரியாக உணவு உண்ணவுமில்லை. நேரத்துக்கு மாத்திரை போடவுமில்லை. வாசன் அழைத்து சாப்பிட்டியா? மாத்திரை போட்டியா? என்று கேட்டதும்தான் “ஆ.. போட்டேங்க” என்று சாப்பிடாமல் மாத்திரையை மட்டும் முழுங்கி இருந்தாள்.  
 
நாதனும் வீட்டில் இல்லாததால் வீட்டில் நடப்பது அவருக்கு தெரியவில்லை. வந்ததற்காக ஒரு வாரம் தங்கி விட்டு வீடு செல்லலாம் என்று வாசுகி முடிவு செய்திருந்தாள். இல்லையென்றால் தந்தையின் மனம் நோகும், கவலையடைவார் என்று அவரை பற்றி சிந்தித்தாளே! தவிர அவள் உடல் நிலையை பற்றி சிந்திக்க மறந்தாள்.
 
இன்று ஒருவாறு எல்லா வேலைகளையும் முடித்து விட்டு கணவனுக்கும் அழைத்து பேசி விட்டு கண்ணயர்ந்தவள்தான். பூர்ணாவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் திடுக்கிட்டு எழுந்தமர்ந்து விட்டாள்.
 
வாசலில் சந்திரா கத்துவது கேட்டது. “நான் என்ன காதலிச்சு வீட்டை விட்டு ஓடி போறேன்னா சொல்லுறேன்? கல்யாணம் பண்ணி வைங்கன்னு தானே! சொல்லுறேன்”
 
“போவ டி போவ, கால ஒடச்சி அடுப்புல போடுறேன். டேய் நீ எதுக்கு இங்க வந்திருக்க? உங்கம்மா இவளை இழுத்துட்டு ஓட சொன்னாளா?” பூர்ணா கத்த அந்த நேரம் தான் மந்த்ராவும் உள்ளே நுழைந்தாள். பாடசாலையில் பரீட்சை நடைபெறுவதால் அவளும் நேரங்காலத்தோடு வீடு வந்திருந்தாள்.
 
“ஐயோ மணி அத்தான் வேற வந்திருக்காரு போலயே! பிரச்சினை பெருசாகும் போல” என்றவாறு வாசுகி வாசலுக்கு வர அவளைக் கண்டு பூர்ணாவின் இரத்தம் கொதித்ததோ! என்னவோ! வாசுகியையும் வசை பாட ஆரம்பித்து விட்டாள்.
 
“உன்னாலதான் டி எல்லாம். உங்கம்மாவை போல நீயும் எவனயாச்சும் இழுத்துட்டு ஓடி இருக்கணும், அதுவுமில்லை. ஜாதகமாச்சும் ஒழுங்கா இருந்ததா? அதுவுமில்லை”
 
“சித்தி என்ன உளறுற?” மந்த்ரா அன்னையை திட்ட
 
“இங்க பாருங்க அத்த இவ்வளவு நாளும் நானும் பொறுமையாக இருந்தது வாசுகி கல்யாணம் நடக்கணும் என்கிறதுக்காகத்தான். நான் சந்திராவை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாசுகி வாழ்க கேள்விக்குறியாகும்னுதான் பொறுமையாக இருந்தேன். இப்போ அப்படி இல்ல. நாங்களா பண்ணிக்கிட்டா உங்களுக்கு அசிங்கம். நீங்களா பண்ணி வைக்கிறதுதான் உங்களுக்கு மரியாதை” ஜெயமணி பேச
 
“ஆமாம். அத்தான் நானும் அக்காகாகத்தான் பொறுமையாக இருந்தேன். இல்லனா… எப்பயோ வீட்டை விட்டு வந்திருப்பேன்” சந்திரா சொல்ல
 
அவர்கள் இருவரும் தன்னை நினைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது வாசுகிக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்க, “மணி அத்தான் மொதல்ல வெளியே போங்க, அப்பா இல்லாத நேரம் வந்து இப்படி பேசுறேதே! தப்பு” என்று வாசுகி சொல்ல
 
“ஆமா டி உங்க அப்பா அப்படியே! பேசி கிழிச்சிடுவாரு. எப்படி இவளை இவனுக்கு கட்டி வைக்கிறாருனு நானும் பாக்குறேன். அடியேய் சந்திரா… இப்போ சொல்லுறேன் கேட்டுக்க, உனக்கு கல்யாணமே! ஆக்கலானாலும் பரவால்ல இவனுக்கு மட்டும் கட்டிக் கொடுக்க மாட்டேன்” ஆவேசமாக பூர்ணா கத்த
 
“அத்தான் போதும், நா ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன்” என்று சதந்திரா வெளியேற போக வாசுகி அவள் வலது கையை பிடித்து இழுக்க மந்திரா அவள் இடது கையை பிடித்து இழுக்கலானாள்.
 
பூர்ணா அறுவாவை கொண்டு வந்து அவள் கழுத்தில் வைத்து “வாசல் படிய தாண்டினா நான் என் கழுத்தை அறுத்துப்பேன்” என்று பயம் காட்ட சந்திரா அங்கேயே ஆணியடித்தது போல் நின்று விட வாசுகி வந்து பூர்ணாவின் கையிலிருந்த அறுவாவை பறிக்க முயல மந்திராவும் அதிர்ச்சியில் உறைந்தவள் சுதாரித்து  பூர்ணாவிடம் கெஞ்சலானாள்.
 
அவ்வளவுதான் “அங்கிட்டு போடி தரித்திரம் புடிச்சவ உன்னாலதான் எல்லாம்” என்று பூர்ணா வாசுகியை தள்ளி விட அறுவாவை பிடித்திருந்த வாசுகியின் உள்ளங்கையும் வெட்டுண்டு பூர்ணா தள்ளியதில் விழுந்தவளின் தலை வேறு சோபாவின் மேசையில் மோதி இரத்தம் பெருகி மயக்கத்துக்கு செல்ல சரியாக அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் நாதன்.  
 
அதன் பின்தான் வாசுகி அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். கையில் இருந்த காயம் ஒன்றும் ஆழமான காயம் இல்லை என்று தையலிட்டு கட்டு போடப்பட்டிருக்க, தலை மோதியது தேக்கு மரத்தால் செய்யப்பட்ட மேசையின் நுனியில் என்பதால் தலைக்காயம் கொஞ்சம் ஆழமாக இருப்பதாகவும் தையல் போட வேண்டி இருக்கு என்று டாக்டர் கூறி இருந்தார்.
 
“அது கூட பிரச்சினை இல்லை. ஆனா அதிர்ச்சில அவங்க கர்ப்பம் கலைஞ்சிருச்சு. அத வேற அகற்றானும். எது பண்ணவும் அவங்க ஹஸ்பண்ட் அனுமதி வேணும். அவர் சைன் பண்ணாம ஒன்னும் பண்ண முடியாது. உடனே! அவர வர சொல்லுங்க” என்று விட
 
“டாக்டர் நீங்க ஆபரேஷனுக்கு தயாராகுங்க அவர் வந்துடுவார்” என்றார் நாதன். வேறென்ன சொல்வது. வாசனிடம் இதை எப்படி தெரிவிப்பது என்று கூட தெரியவில்லை. கண்கள் கலங்கியவாறே! வாசனுக்கு அழைப்பு விடுத்து மருத்துவமனையில் வாசுகியை அனுமதித்திருப்பதாக மாத்திரம் கூறி விட்டு அலைபேசியை துண்டித்து விட்டார். 
 
நடந்ததை மந்திரா கூறி முடிக்கவும் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தவனின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் நாதனால் படிக்க முடியவில்லை.
 
பெண் பார்க்க வந்து போது வாசன் நாதனுக்கு அந்நியன். பொதுவான பேச்சுகளோடு விடை பெற்றான். கல்யாணமென்றும் அவ்வளாவான பேச்சுக்கள் இல்லை. மறு விருந்துக்கு வந்த போதும் சரி வாசனின் வீட்டுக்கு வாசுகியை பார்க்க சென்ற போதும் சரி ஓரிரண்டு வார்த்தைகளோடு கடந்து விடுபவனை “இவன் குணம் இப்படித்தான்” போலும் என்று கணித்திருக்க,
 
குழந்தை உண்டான சேதி கேட்டு வாசுகியை பார்க்க போன போது என்றுமில்லாமல் இன்முகமாகவே! சிரித்துப் பேசியவன் வித்தியாசமான வாசனாக தெரிந்தான். வாசுகியை அவன் வழியனுப்பி வைக்கும் பொழுது அவளிடம் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவள் மீதான அக்கறையும், பாசமும் வெளிப்படையாகவே! தெரிய மனம் நிறைந்தது.
 
கொஞ்சம் முரடனாக இருப்பான், கோபக்காரனாக இருப்பான் என்று நாதன் நினைக்க, இப்படியொரு வாசனை அவர் எதிர் பார்க்கவில்லை. யார் கண்ணோ! பட்டது போல் வாசுகிக்கி இப்படி ஆகி குழந்தையும் இழந்து வாசன் இறுக்கிப் போய் அமர்ந்திருப்பது அவருக்கு புரிந்தாலும், என்ன சொல்லி அவனை ஆறுதல் படுத்துவது என்றுதான் அவருக்கும் புரியவில்லை.    
 
சில மணித்தியாலங்கள் கடந்த பின் மருத்துவர் வாசனை அழைக்க, அவரை சந்திக்க அவரின் அறைக்குள் நுழைந்தான் வாசன்.
 
“உங்க மனைவிக்கு ஒண்ணுமில்ல, அவங்க நல்லா இருக்காங்க. ரெஸ்ட் எடுத்தாவே ஓகேதான். இரத்தம் அதிகமா போய் இருக்குறதால. நல்ல சத்தான ஆகாரம் சாப்பிடணும். இந்த மருந்தெல்லாம் சாப்பிடணும். அவங்கள நல்லா பாத்துக்கோங்க. ஏதாச்சும் கேட்கணுமா?”
 
“இல்ல. டாக்டர்” என்றான் வாசன்.
 
“ஓகே போய் உங்க வைப்ப பாருங்க. டிஸ்டப் பண்ணாதீங்க. கண்ணு முழிச்சதும் பக்குவமா கரு கலைஞ்சத பத்தி எடுத்து சொல்லுங்க”
 
“சரி” என்றவன் வாசுகி அனுமதித்திருந்த அறையை நோக்கி நடக்கலானான். அவன் எண்ணமெல்லாம் வாசுகி குழந்தை உண்டாக முன்பாகவே! விட்டமின் மாத்திரைகளை உட்கொண்டிருக்க, குழந்தை ஆரோக்கியமாகத்தானே! இருந்திருக்கும். இப்படி விழுவதினால் கர்ப்பம் கலையுமா? விழும் போது அதிர்ச்சு என்று டாக்டர் சொன்னாரே! அவ்வளவு வீக்காகவா இருந்தா? ஒழுங்கா சாப்பிட்டாளா? இல்லையா?” ஏதேதோ சிந்தனையில் உழன்றவாறு அறைக்குள் வந்தவன் வாசுகியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தான்.
 
இரண்டு நாட்களில் தேகம் கருத்துப்போய், உதடுகள் காய்ந்து, கண்களில் கருவளையம், உடலும் மெலிந்து, பஞ்சத்தில் அடிப்பட்டவள் போல் ஆகி இருந்தாள். 
 
நாதனும் மந்த்ராவும் உள்ளே வர வாசன் வாசுகியின் அருகில் அமர்ந்து அவள் கையை பிடித்தவாறு அவள் முகத்தையே! பார்த்திருந்தான்.
 
“என்ன இந்த மாமா இவ்வளவு கல்நெஞ்சுக்காரரா இருக்காரு. குழந்தை போயிருச்சு. கோபத்துல அக்காவையே! நம்மளையோ! திட்ட கூட இல்ல. என்ன செய்ய காத்துகொண்டு இருக்காரே” மந்த்ராவுக்கு வாசனை பார்க்கப் பார்க்க வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டு ஒருவித அச்சம்தான் பரவியது.

Advertisement