“அதுசரி சரக்கடிக்கிற பயபுள்ள தானே?!”தானாய் புலம்பினான் அஜய்மித்ரன்.

ரிஃபாஷாவிற்கு இந்த அலங்காரம் முகப்பூச்சு எதுவுமில்லாமல் இருக்கவும் தன்னை பழைய நெடுங்குழலியாக உணர்ந்தாள் அந்த நிமிடம். 

நெடுங்குழலி என்பவள் கிராமத்தில் அரட்டை அடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரும் சுதந்திரப் பறவை. தன்னைத்தானே காக்க தெரிந்த ஜீவன். அதனாலேயே அஜயைப் பார்த்து பயம் கொள்ளவில்லை அவள். அது மட்டுமின்றி சர்ஷிமன் போன்று பார்வை செலுத்தவில்லை இவன். நடிகை என்ற அதிசயமோ அல்லது பிரபலமானவளோடு பேசுகிறோம் என்ற உணர்வோ இல்லாது இயல்பாய் பேசினான். அதுவே அவளை நிம்மதியடையச் செய்தது. 

************

அகரா ஒரு வித நடுக்கத்துடனேயே அறைக்குள் அமர்ந்திருந்தாள். வெளியே தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் உள்ளூர நடுக்கம் தான். நமசிவாயத்தின் வீட்டிலும் அப்படி தான் இருப்பாள். எப்போது வருவான் என்றே சொல்ல முடியாது. பெரும்பாலும் தனியாக இருந்திட மாட்டாள். பகலில் எப்படியும் பிஸியாக இருப்பதை போல இருப்பவள் இரவில் ஷகீராவின் உதவியில் அவன் பிடியிலிருந்து தப்பி விடுவாள். 

இங்கே மனுஷ் உடனிருப்பது புரியாத புதிராக இருந்தது அவளுக்கு. இவன் எந்த ரகம் என்றே யூகிக்க முடியவில்லை அவளால். 

சற்று முன் தான் யாரோ ஒருவருடன் பேசுவதை கேட்டிருந்தாள். “அவ என்னையே எதிர்ப்பாளா அவ்வளவு திமிரா இனி ஜென்மத்துக்கும் அவளால சந்தோஷத்தையே பார்க்க முடியாது “என்று பேசியிருந்தான். 

அதுவே அவளுக்கு பயத்தைக் கொடுத்தது. பின்னே கேங்ஸ்டர் போல குரலில் பேசினால் அவளும் என்ன செய்வாள். 

சற்று நேரத்தில் எல்லாம் வந்து ,’மனைவியாக நடி உனக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கும்’ என்று இயல்பாய் பேசுகிறான். எதற்காக நடிக்க வேண்டும் என்று அவளுக்கு புரியவே இல்லை. எல்லார் முன்னிலையிலும் மனைவி என்று சொல்லியாயிற்று. குடும்பத்தினர் முன்பாய் தாலி கட்டி ஆகிவிட்டது. எனினும் நடி என்றால்… 

“ஆவ்வ்வ் மண்டை குழம்புதே… யோவ் டைரக்டரே நீ என்ன பீஸுயா?” என்று வாய்விட்டே புலம்பிவிட்டாள். 

“எந்தா இது தலச்சோறு (மூளை) வெளியே கொட்டப் போகுது இப்படி பிச்சு வைக்கிறியே?” என அவள் பிடித்திருந்த முடியை காட்டினான். 

‘எல்லாம் உன்னால தான்னு சொன்னா என்ன சொல்லுவாரு?’ என யோசித்தவள்,” ஆமா நீங்க டைரக்டரா இல்ல கொள்ளைக் கூட்டத்தலைவனா?” என்று கேட்கவும் மனுஷிற்கு முதலில் புரியாது பின்னர் சத்தமாய் சிரித்தான். 

“இதானு உன் பிரச்னையோ… ஞான் டைரக்டர் அதே… வேற என்ன கேழ்க்கணும்?” என்று கேட்கவும் 

“இல்ல…”என்று இன்னும் தயங்கினாள். 

“எந்தா… எதெங்கிலும் பறா பொண்ணே… சத்யம் பறைஞ்சு கேட்டோ” என்றான் எச்சரிக்கையுடன். 

“நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி பேசினதை நான் கேட்டேன். அதான் டவுட் “என்றாள் படபடப்பாக.

“ஓஓஓ அதா…! வேறொன்னுமில்லா வினித்ன்ட சீன் பறைஞ்ஞு “என்றான் இயல்பாய். 

“இப்படி எல்லாமா சீன் வைப்பாங்க ?”என வாயை பிளந்தவளை சிரிப்புடன் பார்த்தான். 

“புருஷனை ஏமாத்தின பொண்டாட்டியை இப்படி தான் செய்யணும்” என்றான்.

அவன் குரலில் ஒரு வித வலி தெரிந்ததோ.. 

“அப்போ பொண்டாட்டியை ஏமாத்தின  புருஷனுக்கு தண்டனை. “

“அதே தான், ஆணும் பெண்ணும் சமம் அல்லே… உனக்கு எதுக்கு இத்தர ஞானம் பொண்ணே? விடு. இங்க இருக்கிற வரை ஜாலியா இரு. ஒரு மூணு மாசம் பிறகு ஞான் அவுட்டோர் ஷூட்டிங் போகு. அப்புறம் ஒரு மூணு மாசம் நீ இங்க இரு. பின்னே ஞான் உனக்கு வல்லியதொரு இடம் காட்டும். போய்க்கோ.” என்றான். 

“நிஜமாவா ?!”என்றாள் மகிழ்ச்சியோடு. 

‘ஆனால் பிரியும் போது இம்மகிழ்ச்சி அவளிடம் இருக்குமா…?’என்பது காலம் தான் அறியும். 

********

மகிழன் மைத்ராவின் கைகோர்த்தபடி ஊரை வலம் வந்து கொண்டிருந்தான். சிலுசிலுப்பான சிம்லா அவனுக்கு இதம் சேர்த்தது. ஆனால் மைத்ராவிற்கு நெருப்பில் நிற்க வைத்தது. 

கையை விலக்கினாலும் வம்பாய் பிடித்து வைத்து கொண்டான். 

“ஏன்டி?” கேட்கையிலேயே காதல் சொட்டியது அவனுக்கு. 

“இதை எல்லாம் காட்டி யாருக்கு உங்களே நிரூபிக்கிறீங்க?” என கேட்டுவிட்டாள் மனம் பொறுக்க முடியாமல். 

“மைத்ரா !”என்று அதட்ட

“இதே போல எத்தனை அவுட்டோர் ல யார் யார் கையைப் பிடிச்சு சுத்தி வந்தீங்க. மனசு அதைத்தான் யோசிக்குது. என்னால உங்க கூட ஒன்ற முடியல. என் மகிழ் எங்கே போனான்னு ஒவ்வொரு நாளும் உங்களுக்குள்ள நான் தேடுறேன். என்னைப் புரியுதா உங்களுக்கு?” 

“மைத்தி என்னடி?” என்று இறைஞ்சுதல் பார்வை பார்க்க

“உங்க ஒரு மன்னிப்பு என்னை உங்க தவறை ஏத்துக்க விடலையேங்க “

“மைத்ரா ,ப்ளீஸ்! நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டேன் கேட்கிறேன் ஒரு மனுசன் திருந்தவேக் கூடாதாடி. எனக்கு அப்போ புரியலைடி ஒத்துக்கிறேன் நான் தடுமாறி இருக்கக் கூடாது தான்” இறைஞ்சினான் அவன். 

இறைஞ்சுதல் மனதைப் பிசைந்தது தான் அவளுக்கு. ஆனாலும் அவளின் மனவுளைச்சல் அதனை பதியவிடவில்லை.

எத்தனை நேசம், காதல், எவ்வளவு தாங்கினான் ஒரு நொடியில் அதுவெல்லாம் தகர்ந்து விட்டதே என்ற ஆதங்கம் அவளுள். 

“ஸ்ட்ரெஸ்ல என்னை நானே ஏதாவது செஞ்சிப்பேனோன்னு இருக்கு.”என்றாள் விழிகளில் உவர்நீர் வழிய. 

மகிழன் உடைந்துபோனான். அவள் காலடியிலேயே மடங்கி சரிந்தவன்,” மன்னிச்சுடுடி கானல்நீருக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது என் தப்பு தான்.”என்றான் மனதார. 

மைத்ரா அப்படியே நின்றிருந்தாள் அசையாமல். 

மைத்ராவின் பதிலில் மகிழனின் மனம் சுக்கு நூறாக உடைந்திருந்தது.

“வேற என்னை என்ன செய்யச் சொல்ற? தப்பு செஞ்சுட்டேன். அதை நான் ஏத்துக்கிறேன். ஒரு க்ரேஸ், ஒரு விதமான க்யூரியாசிட்டியில் பண்ணது. நான் என் மிஸ்டேக்கை ரியலைஸ் பண்ணி மன்னிப்பு கேட்கிறேனேடி?!” என்று அவளை நெருங்க

“நோ… !”என்று விலகியவள்,” மன்னிப்பு தந்துட்டேன் ஆனா என்னால் அந்த மன்னிப்பை ஏத்துக்க முடியலை. கடக்க முடியாத நாள் அது. அதுவரைக்கும் என் மகி எனக்காக இருந்தார். காதல் கொட்டிக் கிடந்தது அவர் கிட்ட. அப்படி தான் நான் நம்பினேன். சினிமா துறையில் இருக்கறவங்க எப்படியெல்லாம் வாழறாங்கனு ஓரளவு எனக்கும் தெரியும். பட் நீங்க ஜெனியூன்னு நான் நினைச்சேன்.”என்றாள் விம்மலாக. 

“இப்பவும் நான் ஜெனியூன் தான்டி. அப்படி இல்லைன்னா உன் கிட்டே வந்து மன்னிப்பு கேட்டு இருப்பேனா சொல்லு. நம்ம குட்டிப் பையன் மேல ப்ராமிஸ் எந்த பொண்ணையும் நான் டச் பண்ணதில்லை. உடலால உன் கூட மட்டும் தான் என் கூடல் இருந்திருக்கு. ” 

“மனசால… ஹான் சொல்லுங்க சக்ரவர்த்தி, மனசால, பேச்சால இன்னொருத்தி கூட “என்று முகத்தை மூடி அழ

மகிழனுக்கு சலிப்பாய் இருந்தது ஏன் அந்த நாள் வந்ததென்று,

நிஜமாய் இல்லீகலாய் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள மகிழன் விரும்பவே இல்லை தான். ஆனால் சாதாரண பேச்சு எப்போது திசைமாறிப் போனது என்று அவன் அறியவில்லை. அன்று மட்டும் மைத்ரா சரியான நேரத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால், உடல் ரீதியாகவும் தொடர்பு ஏற்பட்டு இருக்க நூறு சதவீதம் வாய்ப்பிருந்தது. அதைத்தான் மைத்ராவினால் ஏற்க இயலவில்லை. நான் அங்கே வராமலே போயிருந்தால் நீ இன்னொருத்தியோடு வாழ்ந்திருப்பாய் தானே என்ற கேள்வியை அவளால் மறக்க இயலவில்லை. மகிழனால் அதை மறுக்கவும் முடியவில்லை தான். நிச்சயம் நடந்திருக்கும். 

மன்னிப்பு சுலபமாய் கேட்டுவிடலாம்,ஆனால் கொடுக்கும் இடத்தில் இருக்கும் போது தான் தெரியும் அவஸ்தையும், ஏமாற்றங்களும். சரியென்று சகஜமாய் போக முடியாத வலி, நடந்ததை நினைக்காமல் இருக்க தன்னைத்தானே நிலைப்படுத்திக் கொள்ளும் திறன், மீண்டும் மன்னித்த நபரோடு வாழும் போது அதே நிகழ்வு நடந்திடுமோ என்ற பயம், அந்த பயம் உண்டாக்கும் சந்தேகம் எனும் தீ, மீண்டும் சந்தேகம் ஊர்ஜிதப் படுத்தப்பட்டுவிட்டால் ஏற்க முடியுமா ஏமாற்றத்தை. வாழ்க்கை என்ன கரும்பலகையா எழுதியதை அழித்து விட்டு மீண்டும் எழுதிக் கொள்ள எங்கோ ஓர் மூலையில் படிமமாக அந்த கசந்த நிகழ்வுகள் இருக்கத் தானே செய்கிறது. படிமங்கள் அமிழ்ந்து போனால் பரவாயில்லை காலச்சுழலில் தொல்பொருளியலாய் மீண்டும் சூழ்நிலைகள் அமைந்து படிமங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டால் எல்லோரிடமும் பகிர்ந்து மகிழ அதுவொன்றும் பொக்கிஷங்கள் அல்லவே… கொத்துக் கொத்தாய் மடிந்த மனிதர்களின் மண்டையோடு போல அந்த நினைவுகள் உச்சக்கட்ட பயத்தைத் தாராதா என்ன… ஆராயும் அவள் மனதை அடக்க அவனல்லவா மெனக்கெட வேண்டும்.

“காலம் எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து மகி. காலப் போக்கில் நான் மாறினா சரி, இல்லாட்டி நீங்க உங்க விருப்பம் போல வாழலாம் இப்பவும் நான் உங்களை தடுக்கலை, கேள்வி கேட்கலை” என்றாள். 

மகிழன் அவளையேப் பார்த்திருந்தான். மீண்டும் அவள் கையோடு தன் கை கோர்த்தவன்,”மன்னிப்பு கேட்க மாட்டேன் இனி. ஆனா உன் மனசில் மறுபடியும் இடம் பிடிக்க ஏதாவது செஞ்சுட்டே இருப்பேன்.” என்றான் சிரிப்புடன் . 

“நான் ஒன்னும் அவ்வளவு ஸ்பெஷல் இல்லையே!” என்று கையை விலக்கப் பார்க்க,

அவனோ விடாது பிடித்துக் கொண்டு,” யார் சொன்னா…?” என்றபடி,” நொடிநேர தடுமாற்றம் வாழ்க்கையையே வீணாக்கிடுது. சுதாரித்தவன் பொழைச்சான் இல்லையா சோலி முடிஞ்சது” என்று சொல்ல

“இப்போ எல்லாம் நல்லா தமிழ் பேசுறீங்க” எதிரே  இருந்த மரத்தின் பூக்களை ரசித்தபடி பேசினாள். 

“உங்கூட பேசவே தனியா கத்துக்கிட்டேன்.”என்றவன் மரத்தில் இருந்து கீழே விழப் போன மலரைப் பிடித்து அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். 

நடந்த எதுவும் மாறவில்லை. இருவருமே அதைக் கடந்து வர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

************

“டைரக்டர் சார் இந்த அவார்ட் எதுக்கு வாங்கீனிங்க.?” ஒரு விருதை சுட்டிக்காட்டி கேட்டாள் அகரா. 

“கனவு படத்துக்கு “

“ஓஓஓ செம அந்த படம் நான் நாலு தடவை பார்த்திருக்கேன்.ஆனா முடிவு தான் பிடிக்கலை” என்றாள் முகத்தை சுளித்தபடி. 

“ஹாஹாஹா அதனால தான் அது அவார்ட் வாங்கினதே.” என்றான். 

“ம்ம்ம்.. ஆமா இது…?” என்று அடுத்ததை கேட்க ஒவ்வொன்றிற்குமாய் பதிலளித்தவன், சட்டென சலிப்பாய்,” ஜோர்னலிஸ்டோ ?!,இத்தர கேள்வி… என்ட குருவாயூரப்பா !”என்றான் 

“உங்க அப்பா பேரு குருவாயூரா ?”என்று விழி விரிக்க 

“நினக்கு பிராந்தானு… ஓரம் போய்க்கோ ஞான் ஜோலிக்காரனாக்கும்” என்றபடி போய் விட்டான். 

வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வர ,”என்னாச்சு?” என்றாள் .

“நத்திங். அம்மை விளிச்செங்கில்,ப்ப்ச் கூப்பிட்டு பேசினா தத்து பித்து னு உளறாதே சரிதன்னே?” 

“நான் ஒன்னும் ஒளற மாட்டேன்.” என்று முறுக்கிக் கொண்டாள். 

“ஹான் ஹான்… எனிக்கு ஷூட்டிங் இருக்கு. ஸோ” என இழுக்க

“சார் ரொம்ப தான் பண்றீங்க நீங்களும் நானும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறோம்னு சொல்ல மாட்டேன் போதுமா ?”என்றாள் சத்தமாக. 

“இதே இதே இதுதான் பிரச்சனை ஒளறுவாய், ஓட்டை வாய். மகி கிட்ட என்ன ஒளறினியோ அவன் உன்னை என் கூட சேர்த்து விட்டுட்டான்”என்று அவளின் வாயைப் பொத்தியபடி திட்ட

அகராவிற்கோ மூச்சு முட்டும் நிலை தான். 

அப்போது தான் பூஜை முடித்து நெற்றியில் சந்தனம் மினுங்க வாசனைதிரவியத்தின் மணம் கமழ நின்றிருந்தான். 

பெரிதாய் விழிவிரித்தவளை புரியாது பார்த்தவன் ,பின்னரே தான் செய்த செயல் கண்டு விலகினான்.