மதி (போதுமா)… இனி எதுவும் சொல்ல மாட்டிங்களே…?வாங்க வந்து டிபன் எடுத்து வைங்க” என்று எதுவுமே நடக்காதது போல உணவு மேசைக்கு சென்றான்.  

அகரயாழினிக்கு அழுகை பீறிட்டது.  முதல் முறை நமசிவாயம் திருமணம் செய்யும் போதும் இப்படி தான் வீட்டிற்குள்ளேயே திருமணம் செய்து வீட்டோடு வைத்திருந்தான் இப்போது இவனும் இப்படி பூஜையறையில் திருமணம் செய்து இருக்கிறான். சாதாரண வாழ்வு நம்மால் வாழவே முடியாது போல என்று நொந்து போனாள். 

விதி அப்படியா விடும் அவளை…  மகிழன் என்ற ஒருவன் பிறகெதற்கு இருக்கிறான். 

அறை வாயிலில் நின்று இதை எல்லாம் பார்த்த மகிழன் உடனே வினித்தை அழைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யும்படி கூறி விட்டான். 

“சாரே…  பிரஸ்மீட் வச்சா அந்தப் பொண்ணோட உறவுக்காரங்க பார்த்து பிரச்சினை ஆகிடுச்சுனா?” என்று கேட்க 

“அதுவும் சரிதான், ஆனால் நீ தான் சொன்னியே அந்த நமசிவாயம் இவளை கொழுந்தியா’னு சொல்லி புகார் தந்திருக்கான்’னு…  அதனால பிரச்னை வராது பார்த்துக்கலாம்” என்றான் மகிழன். 

“மனு இன்னைக்கு ஈவ்னிங் ப்ரஸ்மீட் இருக்கு அட்டண்ட் பண்ணு..யாழினி உன்னோட வொய்ஃப்’னு அஃபிசியலா அனௌன்ஸ் பண்ணிடு “என்றான் மகிழன். 

எந்தா சேட்டா இத்ர (இத்தனை) வேகம்,யாரைக் கேட்டு ஏற்பாடு பண்ணிங்க கேன்சல் பண்ணிடுங்க. ப்ரெஸ்மீட் எனிக்கு அவஸ்யமில்லா சரிதன்னே “என்றான் கொண்டைக்கடலை கறியை ருசி பார்த்தபடி. 

அம்மே புரிய வைங்க இவனுக்கு…நாளே இன்டஸ்ட்ரீல யாராவது தயவாயி சம்சாரிக்கு(தப்பா பேசுவாங்க) நிங்ஙளுடைய மருமகளே…இத்ர பிரச்னை வேண்டாம் மனுஷா. என்றான் அவனிடமும். 

நிங்ஙளுடைய சேட்டன் சரியாயிட்டு சம்சாரிக்குன்னது. ப்ரெஸ்மீட் இடாம். சரிதன்னே மோனே… வேண்டாமெனு பறையாதேடா மனுஷா. நிண்ட பார்யாளை ஞான் மீடியாவில் அறிமுகம் செய்யு என்றார் அவரும் .

சேட்டத்தி எதெங்கிலும் பறா என மைத்ராவை துணைக்கழைக்க அவளோ அத்தை சொல்றதும் சரிதான் மனுஷ் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டாங்க என்றாள் அவளும். 

“கேட்டோ !”என்ற மகிழன்,”நீ இப்போ எதுக்கு யோசிக்கிற? யாரானும் தப்பு சொல்வாங்க மனுஷா. அவ்வளவு ஏன் பார்த்து பார்த்து காதலிச்சு விவாகம் பண்ணிக்கிட்டியே மெட்டில்டா அவளே தப்பா பேசி நியூஸ் தருவா, என்றவன்

“ஏற்கனவே இவனை குழந்தை பெத்துக்க தகுதி இல்லாதவன்னு சொல்லி இருக்கா” என்று பத்மாவதியிடம் கூற அவருக்கும் மகிழன் கூறுவது சரியெனப்பட்டது .

*******

ரிஃபாஷா படப்பிடிப்பிற்குச் சென்று இருந்தாள்.  உதவி இயக்குனர் வைத்து மற்ற காட்சிகளை எல்லாம் படமாக்கிக் கொண்டிருக்க,ரிஃபாவிற்கு எதிலும் மனம் ஒட்டவே இல்லை மனு இல்லாமல்.  நான்கைந்து முறை டேக் வாங்கி இருந்தாள். 

“மேடம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அதுக்கப்புறம் சூட் ஆரம்பிக்கலாம் ப்ளீஸ் சீனை நல்லா உள்வாங்கிட்டு நடிங்க… மனுஷ் சார் இன்னைக்குள்ள இவ்வளவு சீனையும் முடிச்சாகணும்’னு சொல்லி இருக்காங்க ப்ளீஸ் கோ ஆப்ரேட் பண்ணுங்க “என்றான் உதவி இயக்குனர். 

“சாரி கேகே… ஆமா மனுஷ் எப்போ ரிட்டர்ன் ஆகறார்?” என்று கேட்க 

“தெரியாது மேடம், அவர் சொல்லலை “என்றவன் அங்கிருந்து முனகியபடி சென்றான். 

‘இன்றைக்கு இந்தம்மா நமக்கு பொங்கல் வைக்காம விடாது போல ‘என அலுத்துக் கொண்டான். 

சர்ஷிமன் மனுஷ் இல்லையென்றதும் படப்பிடிப்புக்கு வந்து அமர்ந்து வேடிக்கைப் பார்த்தான். 

இன்று மனு இல்லை எப்படியாவது ரிஃபாவை ஏதேனும் பேசி தன் ஆசைக்கு இணங்க வைத்திட வேண்டும் என்ற முடிவுடனேயே வந்திருந்தான். 

“ஹாய் ரிஃப்  என்ன சீன் இன்னைக்கு…?” என்று அசடு வழிய அவளுக்கு அருகில் சேரை போடச் சொல்லி அமர்ந்தான். 

“ஹான்…  ஹீரோயின் கிட்ட வழிஞ்ச ஒருத்தனை ஹீரோயின் செருப்பாலேயே அடிச்சு ஓட விடுறா அதான் சீன்” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு. 

“ஓஓஓ தட்ஸ் குட் என்னைக் கேட்டால் பொண்ணுங்க இவ்வளவு தைரியமா தான் இருக்கணும்னு சொல்வேன் “என்று சொல்ல 

“எஸ் சர்ஷிமன்… நானும் இந்த படத்தில் வர்ற ஹீரோயினை மாதிரி ஒருத்தனை செருப்பால அடிக்கப் போறேன்’னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறிங்க செஞ்சுடலாமா?” என்று கீழே குனிந்து தன் காலைப் பார்த்தாள். 

உயர்ரக ஹீல்ஸ் பளபளக்க சர்ஷிமனுக்கு பயத்தில் தொண்டை கவ்வியது. 

“அஸிஸ்டன்ட் ,கிவ் மீ த ட்ரிங்க் கம் டூ மை கேரவன், இங்க ரொம்ப ஹாட்டா இருக்கு” என்று கூறி விட்டு ரிஃபாவிடம் ,”எக்ஸ்க்யூஸ் மீ !”என அசட்டுத் தனமாக சொல்லி விட்டு நகர்ந்தான்.

“அலைஞ்சான் மூஞ்சியைப் பாரு “என்று முனகினாள் ரிஃபா. 

அன்று மாலையே ப்ரஸ்மீட் துவங்கிட அகரயாழினியை தன் மனைவி என்று அறிமுகம் செய்தான் மனுஷ்யபுத்திரன்.

“எங்கேப் பார்த்திங்க? எப்போ கல்யாணம் நடந்தது காதல் திருமணமா பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா காதல் திருமணம் என்றால் முதல் சந்திப்பு எங்கே நிகழ்ந்தது…?  இதனால் தான் நமசிவாயத்தின் வீட்டை விட்டு வெளியேறினாரா உங்கள் மனைவி, அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனரா ?”என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் மனுஷிடம் கேட்கப்பட்டது. 

“காதல் திருமணம் தான்… காதலித்தால் எதிர்ப்பு வரத் தானே செய்யும் ,அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி என்னை திருமணம் செய்து கொண்டாள் “என்று அப்பட்டமாக பொய்யுரைத்து விட்டு சிலபல புகைப்படங்களை நெருக்கமாக நின்று போஸ் கொடுத்து விட்டு மனைவியோடு உள்ளே சென்றான் மனுஷ். 

மகிழன் புன்னகையுடன் மெட்டில்டாவிற்கு அழைத்தவன் ,”ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் என்ஜாய் மெட்டில்டா !”என்று இணைப்பைத் துண்டித்தான்.

மெட்டில்டா கொதிநிலையில் இருக்க, இங்கே மனுஷும் அதே நிலையில் தான் இருந்தான். 

அகரயாழினியை பெட்டில் தள்ளி விட்டு இருந்தான்.

“ஹாப்பி…!ரொம்ப ஹாப்பியா இருக்குமே… இடியட் … எதுக்குடி என் வாழ்க்கையில் விளையாடுற …?இனிமேல் தான் இருக்கு உனக்கு…  நீ என் மனைவி இல்லையா, இந்த கணவனோட அன்பைப் பாரு” என்று கொந்தளித்து விட்டு அவளை நெருங்கி இருக்க அங்கே நமசிவாயம் மனுஷின் பேட்டியை கோபத்துடன் பார்த்திருந்தான். 

மனுஷ் அகரயாழினி திருமணம் நடந்தேறியது. 

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் அதை உறுதிபட தெரிவித்து விட,நமசிவாயம் செய்தியை அறிந்து கொந்தளித்தான்.  ஆனால் அவனுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலை.  

மனுஷ்யபுத்திரன் மிகப் பெரிய இயக்குநர் மகிழன்சக்ரவர்த்தி குறிப்பிட தகுந்த சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவன் . பணத்தில் புரள்பவர்கள், பின்புலம் பெரிது அவர்களுக்கு.  கிட்ட நெருங்க நினைத்தாலே சுட்டுப் பொசுக்கிடும் அவர்களின் பணம்.  ஆனாலும் அகரயாழினி வேண்டும் அவனுக்கு.  அவளின் அழகு பித்தம் கொள்ள செய்திருந்தது அவனை.  ஷகீராவும் பேரழகி தான்.  வெள்ளைத்தோல்காரி  சாதாரணமாக பேசும் போதே கன்னம் சிவந்து அழகாய் தெரிவாள். ஆனால் யாழினியோ  பசும்பாலில் லேசாக தேநீரை கலந்த நிறத்தில் இருப்பாள்.  தன் கைத் தீண்டாமலேயே தப்பித்து விட்டாளே என்ற கோபம் அவனுள் கனன்றது.  சமீபத்தில் தான் ஷகீரா மூலமாகத் தெரிந்தது யாழினியை அவன் தீண்ட விடாமல் செய்த தில்லுமுல்லு எல்லாம்.  அப்போதிலிருந்தே யாழினியை அடைந்தேத் தீர வேண்டும் என்று வெறி கொண்டு அலைய, இப்போது அவளோ பாதுகாப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறாள்.  நேர்மையான வழியில் அவளைக் கொண்டு வர முடியாது என உணர்ந்தவன் யாழினியின் தந்தையை வரவழைக்க முடிவு செய்து இருந்தான். 

இங்கே மனுஷோ, யாழினியை பெட்டில் தள்ளி அவளிடம் தன் கோபத்தைக் காட்டி இருக்க, அவளோ மிரண்டு விழித்தாள். 

‘ஏற்கனவே ஞாபக மறதி வேஷம் போட்டாயிற்று, அதனை அப்படியே மெய்ன்டெயின் செய்ய வேண்டுமே அதனால் அப்படி ஒரு பார்வை. 

“என்ன முழிப்பு?” என கேட்க 

“அதில்ல இப்ப எதுக்கு கோவப்படுறீங்கனு சொன்னா நானும் என் தப்பை சரி பண்ணிப்பேன்” என்றாள் பவ்யமாக 

“ஓஓஓ டைரக்டர் கிட்டயே நடிக்குறியா…? பெரிய ஆள் தான் நீ,  என்ட குருவாயூரப்பா வல்லிய ஆக்டிங் “என்றான் ஏளனமாக 

“நடிப்பா அப்படினா…? அதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று அப்பாவி போல சொன்னவளை உறுத்து பார்த்தான். 

“இதே இதே ஆக்டிங்..” என திட்டி விட்டு, அவளை தன் புறம் இழுக்க அவளது விழிகள் படபடவென்று அடித்துக் கொண்டது.  

“அடியேய் நடிச்சு மயக்கப் பார்க்குறியா?” என்றவனைத் தள்ளி விட்டு ,”எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க நான் ஒண்ணும் நடிக்கலை” என்றாள் மூக்கை விடைத்தபடி. 

“அய்யடா நடிக்கலையாம், அப்போ இது என்ன என்னைத் தெரியாத மாதிரி நடிக்கிறியே இதுக்கு பேர் எந்தினு…?” 

“நான் எப்போ சொன்னேன் உங்களை எனக்குத் தெரியாது னு, நீங்க என் ஹஸ்பண்ட் அது எனக்குத் தெரியுமே ?”என்றாள் அடுத்து அவன் கூறப் போவது அறியாமல். 

“ஓஓஓ பார்யாவா (புருஷனா) !, ஷமிக்கணும்  ஞான் மறந்து போயி… நம்மட விவாஹம் கழிஞ்சு போயில்லே, புருஷன் பொண்டாட்டி கிட்ட எப்படி நடந்துப்பான் னு நான் காட்டுறேன் லெட்ஸ் ஸ்டார்ட்” என்று அவளிடம் நெருங்கி செல்ல, அகராவிற்கு அய்யோ என்றானது. 

“அது வந்து… டாக்டர் உடம்பு சரியில்லை’னு தள்ளி இருக்க சொன்னார் அதனால கிட்ட வராதீங்க “என்று சமாளித்தாள். 

“ஓஹோ அங்கன (ஓஓஓ அப்படி)…!!  ஞான் ஒரு தவணை கூடி(இன்னொரு தடவை)டாக்டர் கிட்ட  செக் பண்ண சொல்றேன்” என்றவன் கைபேசியை எடுத்து வினித்திற்கு அழைத்தான். 

“ஃபேமிலி டாக்டரை வரச் சொல்லு” என்றதும்,” இல்லை இல்ல வேண்டாம் நான் நான் சொல்லிடுறேன், நான் சொல்லிடுறேன் ப்ளீஸ் “என்று கெஞ்சவும் அவளை விடுவித்தான். 

“எனி சத்யம் பறா (என்னனு இப்ப உண்மை சொல்லு) . இல்லையெங்கில் ஞான் டாக்டருக்கு கால் செய்யும்” என்று சொல்ல

“இல்லையில்ல நான் சொல்றேன்” என்றாள் பதறிப் போய். 

************

மைத்ரா தனது அறைக்குள் குழந்தைக்கு சோறூட்டியபடி அமர்ந்திருந்தாள். 

மகிழன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை முடித்து விட்டு உள்ளே வந்தவன், அவளின் அருகில் அமர்ந்தான். 

“இன்னைக்கு அவுட்டோர் சூட்டிங். ஒரு தெலுகு படம், வர  ஒரு வாரம் ஆகும் நீ வேணும்னா உன் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வர்றியா?” என்றான். 

“இல்ல வேண்டாம் “என்று சோறூட்டுவதில் கவனத்தை வைத்தாள். 

“ஏன்டி எப்ப பார்த்தாலும் எதையாவது யோசிச்சுட்டு இறுக்கமாகவே இருக்க?”சலிப்பாக கேட்டான். 

அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு எழுந்தாள்.  அவளது பார்வையின் வீரியம் தாளாது தலை குனிந்து கொண்டான். 

“எத்தனை செட் டிரெஸ் எடுத்து வைக்கணும்…? இல்ல கம்பெனியில் பார்த்துக்கிறிங்களா?” எதுவுமே நடக்காதது போல கேட்டாள். 

“ரெண்டு பேரும் போகலாமா டி… ?!” ஆவல் தலை தூக்க கேட்டான். 

“குழந்தையைப் பார்த்துக்கணும்” ஒற்றை வரியில் முடித்து விட்டாள் தான் வர முடியாது என்று. 

கோபம் சுள்ளென்று வந்தது மகிழனுக்கு. 

“எங்க கூப்பிட்டாலும் வராதே, அப்புறம் என்னையே குத்தம் சொல்லு… அப்புறம் அங்க நோகுது,இங்க நோகுதுனு என்னைப் பேசாம கொல்லு “என்று கடுப்பாக மொழிந்தான். 

“இனி எதுவும் சொல்ல மாட்டேன் “என்றாள் அழுத்தமாக. 

அவளது அழுத்தம் அவனுக்கு நெஞ்சை நெருடியது.  வேறு வழியின்றி கிளம்பி விட்டான். மனதிலோ,’ கண்டி

ப்பாக இம்முறை திரும்பி வரும் போது எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து நிம்மதியாக இருக்க வேண்டும்’என்று எண்ணிக் கொண்டான். 

நிம்மதி கிடைத்திடுமா… காலம் கடந்து அமைதி தேடினால் அது கைக்குள் வந்திடுமா என்ன… 

***********