நிழலாய் நீ இருக்க ஆசை – 1

1227

ஆசை-1

அது ஒரு அழகான சென்னையின் காலை விடியல் இயல்பாகவே இந்த நகரத்தில் அனைவரும் வேகமாக இயங்கிக் கொண்டு இருப்பார்கள் அது போலவே கதிரவனும் தன் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து விட்டான்.

சிவானந்தம் தன் வீட்டின் வாசலின் கதவை திறந்துகொண்டு வந்தார்.

சிவானந்தம் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அதற்கான கம்பீரம் அவரது பேச்சில் மட்டும் இல்லை நடையிலும் இருந்தது.தனது இளம் வயதிலேயே அனைத்து எதிர்ப்புகளை தாண்டி தன் மனதுக்கு பிடித்த பெண் மங்கலத்தின் கரத்தை பிடித்தவர்.என்றும் தனது முடிவில் தெளிவாக இருப்பவர்.குடும்பத்தின் முதல் நபர்.

“காபி ரெடியா” என்று வாசற் கதவு திறக்கும் முன்னே அவரின் குரல் சமையலறையில் உள்ள அவரது மனைவியின் காதுகளை வந்து தொட்டது.விரும்பிய கணவன் கிடைத்த மகிழ்ச்சி இத்தனை வருடம் கடந்தும் அவள் மனதிலிருந்த புத்துணர்வு அவளை சுறுசுறுப்பாக வைத்திருந்தது.அன்பான தம்பதிகள் என தாண்டியும் சிவானந்தம் எண்ணும் அனைத்து எண்ணங்களையும் அவரது கண்களில் இருந்து தெரிந்து கொள்பவள் கணவனின் பேச்சுக்கு மறுப்பு சொன்னதில்லை இத்தனை வருடத்தில்.அவரும் அவள் மனதை புரிந்து கொண்டு தன்னை நம்பி வந்தவளை சரிக்கு சமமாக நடத்துபவர்.

“இதோ கொண்டுவருகிறேன்” என்று காபி டம்ளருடன் வந்தாள் மங்களம்.

“எல்லாம் ரெடி பண்ணிட்டியா சந்தியா வரும்போது நம்ம அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்”

“இதோ தயார் பண்ணிக்கிட்டே இருக்காங்க முடிஞ்சிடும் விரைவில்… சரி நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் “என்றார்

சுடச்சுட இட்லி தோசை பொங்கல் ஸ்வீட் எல்லாம் செய்து முடித்த நேரம் மாடியில் இருந்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

மென்மையான மேனியில் சிகப்பு அல்லாது மஞ்சள் அல்லாது கலவை கலரில் புடவை உடுத்தி காற்றில் தன் கூந்தலின் வாசத்தை வீசிக்கொண்டு இனிமையான பொன் முகத்தில் உள்ள ரோஜாப்பூ இதழ்களில் புன்னகையுடன் வந்து நின்றாள் சந்தியா.

சந்தியாவின் அழகில் ஒரு நிமிடம் மெய் மறந்து போனால் மங்கலம் மெய்மறந்து நின்ற மங்கலத்தை சிவானந்தத்தின் வாழ்த்துக்கள் நிலைக்கு வரச் செய்தது இருவரும் தங்களின் அன்பான மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.

சந்தியா இரண்டாவது மகள் கடைக்குட்டி என்பதால் அதிகம் பாசம் கொண்டவர்களாக இருந்தார்கள். மகள் எடுக்கும் எந்த முடிவிற்கும் சிவானந்தம் மறுப்பு சொன்னதில்லை மகளின் மேல் வைத்த நம்பிக்கை அதற்கு சான்று.மகளின் முடிவில் ஒரு போதும் குறுக்கிட்டது கிடையாது.செல்லமாக சந்தியா வளர்ந்திருந்தாலும் வீட்டில் கொடுத்த சுதந்திரத்தை ஒருபோதும் அவள் தவறாக உபயோகித்தது இல்லை சந்தியாவின் கனவிற்கு பச்சை கொடி கட்டியவர்கள் இந்த தம்பதியர்கள்.

“தேங்க்ஸ் மா தேங்க் யூ டாடி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” பெற்றோர்களின் காலை தழுவினாள்

“என் கண்ணே உன்னை பட்டிடும் போலிருக்கு இன்று நீ ரொம்ப அழகா இருக்க” என்று மங்களம் சொல்ல

“யாரு பொண்ணு இவ இந்த சிவானந்தம் பொண்ணு அழகா தானே இருக்கணும்”

“சரி போதும் போதும் உங்கள் நக்கல்எல்லாம்…..”

பாருமா உன் அம்மாவுக்கு அழகாய் இல்லையே என்று வருத்தம் போல என்று அவர் நக்கலடிக்க மங்கலம் ஒரு முறை முறைத்தாள்.
சரி சரி வாங்க பூஜை பண்ண நேரம் ஆச்சு ….மூவரும் பூஜை அறையில் பூஜை முடித்து விட்டு வெளியே வந்தனர் .

“சரிமா இன்னைக்கு என்ன ஸ்பெஷல் எனக்கு ரொம்ப பசிக்குது”

“உனக்கு பிடித்த எல்லாம் ஐட்டம்ஸ் ரெடி …..நல்லா சாப்பிடு ….இப்போல்லாம் நீ சரியா சாப்பிடறது கிடையாது… வேலை வேலைனு உடம்ப பாத்துக்கறது இல்லை… எப்படி மெலிச்சுப்போயிட்ட பாரு “

“அம்மா நா நல்லாத்தான் இருக்கேன் டோன்ட் ஒர்ரி ” என்று சந்தியா சொன்னபோது மங்களத்தின் உண்மையான கவலை அவளை ஆள்கொண்டது.

“எனக்கு இருக்குற ஒரே கவலை உன்னை ஒரு நல்லவன்க்கு கல்யாணம் பண்ணிவைக்கணும் தான்”

“அம்ம்மாஆ இன்னைக்கு கூடவா இதைப்பத்தி பேசணும் ….எனக்குஒன்னும் பெருசா வயசுஆகல ஜஸ்ட் 25 தானே ப்ளீஸ் அம்மா என்னை விடு ” தாயின் வாயை அடைத்து ஆகவேண்டுமென்று அவள் சொன்ன பதில் மங்கலத்துக்கு புரிந்துவிட்டது.

“உன் கூட படித்த பிரண்ட்ஸ் லாம் கல்யாணம் பண்ணி குழந்தையே பொறந்தாச்சு “

“அம்மா என்னக்கு இப்போ என் கரீர் தான் முக்கியம் சோ லீவு தா டாபிக் “

தன் அக்காவின் வாழ்க்கை கல்யாணம் என்ற பெயரில் நாசமாக போனதோ என்ற எண்ணம் அவள் மனதுக்குள் நீங்காமல் இருந்தது அதிலளென்னவோ கல்யாணம் என்றாலே நூறடி தள்ளி நிற்பாள்
தன் அக்கா சௌமியா என்றாலே ஒரு தனி பிரியம் உண்டு அவளுக்கு ஆனால் அந்த சந்தோஷயம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை
மனம் ஓட்டாத திருமணம் செய்து தன் அக்காவின் வாழ்க்கை ஒரு மான்ஸ்டரிடம் சீக்கி தவித்த இருந்த நினைவுகள் அவள் மனதில் ஆழமாக படித்திருத்தது

“அவதான் புரியாம பேசுறா நீங்க சொல்லக்கூடாத அவளுக்கு….சிவானதத்தின் சப்போர்ட்டை நாடினால் மங்களம்.

“சந்தியா தெளிவாத்தான் இருக்குற அவளை நீ குழப்பாதே எப்போ மேரேஜ் பண்ணிக்கணும் அவளுக்கு தெரியும் ஷி ஸ் குட் டெசிஸன் மேக்கர் “

மகளின் பேச்சு அவளுக்கு வருத்தத்தை சற்று அதிகப்படுத்தியது.

அதேநேரம் சந்தியாவின் கைபேசி சிணுக்கியது

“ஹலோ ” ஒரு முன்னையில் சந்தியா பேச

மறு முன்னையில் “ஹலோ ரிப்போர்ட்டர் சீக்கிரம் வாங்க முக்கியமான மீட்டிங் போலீஸ் வந்து இருக்கு உங்களை பார்க்க ” என்று இணைப்பு துடிக்க எழுது நீண்ட தன் மகளை தடுத்த மங்களம் “சாப்பிட்டுப்போமா “என்றாள்

“வந்து சாப்பிடுறேன் அம்மா அர்ஜென்ட் ஒர்க் “

தனது உடமைகளை அவசர அவசரமாக பையில் போட்டுகொண்டு புறப்பட்டாள் சந்தியா.

தன் வாழ்வின் ஆடுபுலியாட்டத்தில் புலிக்கு எதிராக தன் ஆட்டதை தொடங்கினாள்

வெற்றி புலிக்கா.. மானிற்கா ..இல்லை வேடனுக்கா….

பொறுத்து இருந்து பாப்போம்.