தேவதையிடம் வரம் கேட்டேன் 35 {இறுதி அத்தியாயம்}

5242

அத்தியாயம் 35
மதி கண்விழிக்கும் பொழுது அக்ஷையின் கைவளைவில் இருந்தாள். அக்ஷையும் மதியும் பின் இருக்கையில் இருக்க, பாஸ்கர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பொன்தாலி அவளுக்கு அங்கே நடந்த அனைத்தையும் நியாபகமூட்ட ஆயிரம் கேள்விகளோடு அக்ஷையை ஏறிட்டாள்.
 
அக்ஷய் புன்னகை முகமாக அவளை பார்க்க பதிலுக்கு அவனை முறைத்தவள் அவனை விட்டு விலகி அமர்ந்துகொள்ள அக்ஷய் மதியை தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டான்.
 
பின்னால் நடக்குக் அனைத்தும் முன்னால் இருக்கும் கண்ணாடியினூடாக பாஸ்கரனின் கண்களுக்கும் தப்பவில்லை.
 
“சார் கிடைக்க மாட்டாரா என்று முகம் வாடி இருந்தவங்க கிடைச்சதும் முரண்டு பிடிக்கிறாங்க. இந்த பொம்பளைங்களே! இப்படித்தான் போலும்” தனக்குள் எண்ணியவனாக வண்டியை ஓட்டலானான்.
 
பாஸ்கர் இருப்பதால் கோபத்தை இழுத்துப் பிடித்தவள் அம்மாவும் நிர்மலும் எங்கே என்று விசாரிக்க, அவர்கள் முன்னால் சென்றுகொண்டிருப்பதாக அக்ஷய் அவளுக்கு பதில் கூற அதன் பின் அமைதியானவள்தான்.
 
அக்ஷையிடம் பேச வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருந்தது. கேட்க வேண்டிய கேள்விகள், போட வேண்டிய சண்டைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அதுவரைக்கும் பொறுமை காக்க பிடிக்காமல் அவன் கையை நறுக்கென கிள்ளியவள் எதுவுமே நடவாதது போல் இருக்க,
 
வலித்தாலும் அவள் கோபம் புரிய சிரித்தவன் கையை தடவிக்கொண்டு அவள் புறம் குனிந்தவன் “நமக்கு கல்யாணம் ஆகிருச்சு மதி தண்டனையெல்லாம் இப்படி கொடுக்க கூடாது. வேற மாதிரி கொடுக்கணும்” என்று இரட்டை அர்த்தத்தில் கிசுகிசுக்க முகம் சிவந்தாள் மதி.
 
வண்டி அக்ஷையின் வீட்டை அடைந்ததுதான் தாமதம். முத்துலட்சுமி விரைந்து மணமக்களை ஆளம் சுற்ற ஏற்பாடு செய்யலானாள். காஜலும் ஸ்வீட்டியும் ஆளம் சுற்றி மணமக்களை உள்ளே அழைத்து வர, அமரவைத்து பாலும் பழமும் கொடுக்கப்பட்டது.
 
அக்ஷைக்காக உள்ளே இருந்து வேண்டா வெறுப்பாக வந்த பிர்ஜு அக்ஷையோடு மதி அமர்ந்திருப்பதை கண்டு சந்தோசமிகுதியில் அவளருகில் செல்லப்போக பாஸ்கர் அவன் கையை பிடித்து தடுக்க அவனை முறைத்தான் பிர்ஜு.
 
பிரஜூவை பார்த்து கண்சிமிட்டி சிரித்த மதியை கண்டு “நம்ம மேலதான் கோபத்துல இருக்கா மத்தவங்க கூட சிரிச்சி பேசுறா” தொண்டையை கனைத்து தான் இருப்பதை அக்ஷய் கூற பிர்ஜு மரியாதையோடு அவ்விடத்தை விட்டு நழுவி இருக்க, மதி அக்ஷையை முறைக்கலானாள்.
 
நிர்மல் வந்து அக்ஷையின் அருகில் அமர்ந்து “என்ன சார் திட்டமெல்லாம் பலமாக போட்டிருக்கீங்க போல, போடுற திட்டத்தை என் கிட்டயாவது சொல்லிட்டு செஞ்சிருக்கலாம். இந்த அழுமூஞ்சிய சமாளிக்க நான் பட்ட பாடிருக்கே” என்று நெஞ்சில் அடித்துக்கொள்ள மதி நிர்மலை முறைத்தவள் அக்ஷையிடம் அவனை அடிக்க சொல்ல
 
“அடக்கடவுளே! ராட்சசி இவ அடிக்கிறது பத்தாதென்று புருஷன விட்டு அடிக்க விடுறா” நிர்மல் அந்த இடத்தை விட்டு எஸ்கிப் ஆகி இருந்தான்.
 
அம்மன் பிரவேசித்தது முதல் அங்கே நடந்தது அனைத்தையும் அறியாதவர்கள் ருத்ரமகாதேவி எங்கே என்று அக்ஷையிடம் விசாரிக்க, மதியுடனான தன் திருமணத்தை  ஏற்றுக்கொண்டவள்  சென்று விட்டாள் என்று கூற,
 
“பாத்தியா நீ பயந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. ருத்ரமகாதேவி நல்லவள்தான். அவளிடம் எடுத்துக்கூறி கல்யாணத்தை சிறப்பாக செய்திருக்கலாம் என்று அவளுக்கு வக்காலத்தும் வாங்கி அக்ஷையை குறைகூற ஆரம்பிக்க, நொந்துபோனவன் அமைதியானான்.
 
மதி கொடியாக மாறியது எதுவும் அவர்கள் நியாபகத்தில் இல்லை. யார் யாருக்கு என்னென்ன நியாபகத்தில் இருக்கு? மதிக்கு என்ன நியாபகம் இருக்கு என்று கவனத்தில் வைத்து பேச வேண்டி இருப்பதால் அக்ஷையும் சற்று குழம்பித்தான் போய் இருந்தான்.
 
எப்படியோ தன் மகளுக்கு திருமணம் நிகழ்ந்துவிட்ட பூரிப்பில் இருந்தது முத்துலட்சுமிதான். ஓடியாடி வேலைகளை ஏவிக்கொண்டிருந்தவள் நிர்மலிடம் வந்து “நிர்மல் சாந்திமூர்த்தத்துக்கு இன்றே ஏற்பாடு செய்து விடலாமா என்று சம்மந்திய கேட்டு சொல்லு பா?” என்று கேட்க
 
ருத்ரமகாதேவி தேவதை என்று அறிந்திருந்த நிர்மல் மதியை விட்டுவிட்டு அக்ஷய் அவளை திருமணம் செய்ய போகும் கோபத்தில் இருந்தவன். எப்பொழுது அக்ஷய் மதியின் கழுத்தில் தாலி கட்டினானோ அப்பொழுதே அக்ஷையின் மனதையும், திட்டத்தையும் புரிந்துகொண்டிருந்தான்.
 
புன்னகைத்தவன் “அவர் கிட்ட என்ன கேக்குறது அத்த. இது உங்க பொண்ணு வீடு நீங்க வைக்குறதுதான் சட்டம். சமாய்ங்க” என்று விட்டு செல்ல அவனை முறைக்க முடியாமல் அசோக்கிடம் எவ்வாறு பேசுவது என்று தயங்க,
 
“என்னமா… ஆகா வேண்டிய காரியங்களை பார்க்காம என்ன யோசனை?” என்று அசோக்கே முத்துலட்சுமியை கேட்க,
 
“என் பொண்ண உங்க பையன் கல்யாணம் பண்ணிகிட்டத்துல உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே!”
 
“பண்ணாம இருந்திருந்தா தான் வருத்தப்பட்டிருப்பான். வாழப்போறது அவங்க என்னைக்கும் நான் குறுக்க வர மாட்டேன். நீ கவலை படாம போய் ஆகா வேண்டியதை பாரு. இது உன் வீடு. அத மறந்துடாத. அண்ணன் சொல்லுறேன் போ” கொஞ்சம் அதட்டலாகவே சொல்ல மனநிம்மதியோடு அவ்விடத்தை விட்டு அகன்றாள் முத்து.
 
அக்ஷய் தனதறையில் மதிக்காக காத்திருந்தான். சந்தோசம் மனதை நிறைத்திருந்தாலும், ஒரு பக்கம் டென்ஷன் அவனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. அது அவனின் செல்ல ராட்சசி மதியழகி கேட்கப்போகும் கேள்விகளினாள். சாதாரணமாக பதில் சொல்லி மழுப்பி அவளை சமாதானம் செய்து விட முடியாது. அவள் ஒரு போலீசும் கூட.
 
“அக்ஷய் உன் முதலிரவு இன்னைக்கு கோவிந்தாதான். பேசாம அவ வர முன் தூங்கிடு. அதுதான் உனக்கு நல்லது” மனம் கேலி செய்ய
 
“தூங்கினா மட்டும் விட்டுடுவாளா? சுடுதண்ணிய ஊத்தியாவது எழுப்பி கேள்வி கேப்பா போலீஸ்காரி” உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் முதலில் அவளை பேசவிட்டு அதன் பின் பதில் சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தான். 
 
காஜலும் ஸ்வீட்டியும் கிண்டல் செய்தவாறே மதியை அக்ஷையின் அறைக்கு அழைத்து வர, அக்ஷையின் திட்டத்துக்கு உடந்தையாக காஜல் இருந்தாள் என்ற கோபம் சிறிதுமின்றி அஜித்துடனான அவள் வாழ்க்கையை தொடங்கி விட்டாளா? என்று நேரடியாகவே கேட்டு விட “ஹனிமூன் போலாம்னு இருக்கோம்” என்று காஜல் வெக்கிக் சிவந்தாள்.
 
ஸ்வீட்டியையும் விடாது அடுத்து நீதான் என்று வம்பு செய்ய, “இன்னைக்கு உனக்குத்தான் கல்யாணம். உன்னைத்தான் நாங்க கிண்டல் செய்யணும். இது என்ன புதுசா நீ மாத்தி பண்ணிக்கிட்டு இருக்க” ஸ்வீட்டி சிறு குழந்தை போல் முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள,
 
“ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே!” அவளை சீண்டினாள் மதி.
 
மதி என்ன கேட்கிறாள் என்று புரிந்த ஸ்வீட்டி “சீ… யாரு உன் பிரெண்டு தானே! அமெரிக்கால இருந்தான்னுதான்னு பேரு சுத்த பட்டிக்காடா இருக்கான். ஒரு கிஸ்ஸுக்கே பஞ்சம் இதெல்லாம் தப்பு கல்யாணத்துக்கு அப்பொறம்னு சொல்லுறான். அவனை வச்சிக்கிட்டு…. நான் படுற பாடு இருக்கே! உனக்கு கல்யாணம் ஆகாம எங்க கல்யாணம் நடக்காதுனு வேற சொல்லிட்டானா? கடைசிவரைக்கும் இப்டித்தான்னு நினைச்சிட்டேன். நல்லவேளை அக்ஷய் சார் உன் கழுத்துல தாலிய கட்டிட்டாரு. நீ வனவாசம் போவியா இல்லையோ! அந்த லூசு போய் இருக்கும்”  கலவையான முகபாவங்களை கொடுத்த ஸ்வீட்டி நிர்மலை வசைபாட
 
“ஓன் ஸ்க்ரீன் பேபி, டார்லிங்னு கொஞ்சுற, ஆப் ஸ்க்ரீன் இப்படித்தான் இல்ல. இரு இரு அவன் கிட்ட போட்டுக்கொடுக்குறேன்” மதி மிரட்டலாக சொல்ல
 
“நாளைக்கு சொல்லிக்க, இப்போ உள்ள போ அக்ஷய் சார் வைட்டிங்” என்றவள் “விடியும் பொழுது எங்க கிட்ட என்ன பேசினானு நியாபகம் இருந்தாத்தானே! இல்ல காஜல் என்று கண்சிமிட்டியவாறே அகல காஜலும் சிரித்தவாறே நகர்ந்தாள்.
 
 
கதவை சாத்தியவள் பால் செம்பை “நங்” சென்று சத்தம் வர மேசையில் வைக்க, அந்த சத்தத்தில் யோசனையில் இருந்த அக்ஷய் மதி உள்ளே வந்ததை கவனித்து அவள் புறம் பிரும்பி புன்னகைக்க அவன் மீது பாய்ந்தவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
 
இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராதவன் அவளை தடுக்க இறுக கட்டியணைத்துக்கொள்ள, அவன் தோள்பட்டையை அவள் பற்கள் நன்றாக பதம் பாதித்திருந்தது.
 
“ஐயோ.. அம்மா” என வலியால் அக்ஷய் கத்த ஆரம்பித்ததும்
 
“விடுங்க என்னை”
 
“மாட்டேன். கோபம்னா என்ன வேணாலும் பண்ணிக்க உன்ன விடமாட்டேன்” அவளை இறுக்கி இருக்கும் கைகளை தளர்த்தாது கட்டிலில் சரிய தன் நெற்றியால் அவன் நெற்றியை பலமாக மோதினாள்.
 
“ஆ… உனக்கும் வலிக்கும் டி”
 
“பரவால்ல. என் மனசு வலிச்சது விட இது ஒன்னும் வலிக்காது” சொல்லும் பொழுதே கண்கள் கலங்க, அக்ஷையின் வலது கை அவளை அணைத்திருக்க இடது கை பெருவிரல் கண்களின் ஓரம் கசியும் கண்ணீரை சுண்டி விட்டது.
 
“ஆழாதே மதி.  என் மேல கோபப்படு, என்ன என்னவேனாலும் பண்ணு தயவு செஞ்சி அழாத பார்க்க சகிக்கல” என்று சொல்ல
 
“அடங்க மாட்டீங்களா? நீங்க” மதி மீண்டும் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
 
“போதும் டி நாளை காலைல நாம ரூமை விட்டு வெளில போகணும். மறந்துடாத”
 
அவன் கூறும் அர்த்தம் புரிய முகம் சிவந்தவள் “அந்த ருத்ரமகாதேவியோடு அப்படி என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு உங்களு” பேச்சை மாற்றும் பொருட்டு பொய் கோபம் கொண்டே ஆரம்பித்தாள்.
 
“ஆஹா ஆரம்பிச்சிட்டாளே!” அக்ஷையின் மைண்ட் வாய்ஸ் அவனை கேலி செய்ய அதை மட்டம் தட்டியவன் “நாய் வேஷம் போட்டா குறைத்துதான் ஆகணும் மதியழகி”
 
அவனை முறைத்தவள் “உங்க கண்ணுக்கு நான் அங்க நிக்கிறது தெரியலையா? என்ன பார்க்கணும்னு கூட தோணல வண்டில வரும் போது அந்த பாஸ்கர் கூட கதையடிக்கிறீங்க, கடைக்குள்ள தேவி தேவின்னு அவளை கொஞ்சுரீங்க, என்ன பாஷை அது’ முகம் சுளித்தாள் மதி.
 
“அது புராண பாஷை டி. ராஜாகள் பேசினது. நீ வரும் போதே உன்ன சைட் அடிச்சிட்டேனே. ருத்ரமகாதேவி முன்னால உன்ன சைட் அடிச்சி மாட்டிக்க விரும்பல”
 
“அவ என்ன பெரிய இவளா?” மதி முறைக்க
 
“அவளால வசியம் கூட பண்ண முடியும் அந்த பயம்தான். அதான் எல்லாம் சுமூகமான முடிஞ்சிருச்சே!”
 
“என்ன முடிஞ்சிருச்சே! இப்படியெல்லாம் பண்ண போறேன்னு ஒரு வார்த்த என் கிட்ட சொல்லி இருக்க வேணாமா? எவ்வளவு வேதனை? நான் பட்ட துன்பம். உங்கள என்ன பண்ணாலும் என் ஆத்திரம் அடங்காது”
 
“ஆமா ஆமா. ருத்ரமகாதேவிகிட்ட இவங்க வரம் கேட்டாங்களாம். அவங்களும் கொடுத்தாங்கலாம். அதுக்கு கைமாறா அவ அக்ஷய விட்டுகொடும்மான்னு கேட்டிருந்தா கொடுத்துட்டு அப்படியே போய் இருப்பா. இவகிட்ட என் திட்டத்தை எல்லாம் சொல்லி இருக்கணும். யாரடி இவ” அக்ஷய் மதியின் நெத்தியில் உள்ளங்கையால் அடிக்க,
 
பாஸ்கர் சொன்ன கதையை ருத்ரமகாதேவி வந்து சொல்லி இருந்தால் பாஸ்கர் சொன்னதுக்கே ஒதுங்கிப் போனவள், அக்ஷையிடம் அவளே பேசி அக்ஷய்க்கும் ருத்ரமகாதேவிக்கும் தானே திருமணம் செய்து வைத்திருக்க வாய்ப்புண்டு என்பதை நினைத்து திருதிரு என்று முழிக்கலானாள் மதி.
 
சத்தமாக சிரித்த அக்ஷய் “என்ன மதியழகி. அப்படிதான் நடந்திருக்கும்னு உன் முழியே சொல்லுது. அதான் யார்கிட்டயும் எதுவும் சொல்லல. எப்படி ஐயா உன்ன சரியாதான் கணிச்சி வச்சிருக்கேன்” தற்பெருமைப்பாட
 
அவனை முறைக்க முயன்று தோற்றவள் “ஆமா காதலிக்கிறவள பக்கத்துல வச்சிக்கிட்டு இன்னொருத்தி கூட கொஞ்சி பேசுவாராம்” என்று அவனை மட்டம் தட்ட
 
“நான் லவ் பண்ணுறவ தான் மக்கு. என்ன பண்ணுறது. ருத்ரமகாதேவியோடு சிரிச்சி பேசும்போது என் பார்வை முழுக்க உன் மேலதான் இருந்தது. அத எங்க நீ பார்த்த. நீ அவளை இல்ல பார்த்துகிட்டு இருந்த. அது மட்டுமா? உன்கூட  இன்னும் கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு சாப்பிட்டுட்டு போலாம்னு சொன்னா அம்மணிக்கு அப்படி என்ன வேலையோ என்ன விட்டுட்டு ஓடுறதுலையே குறியா இருக்கிறீங்க?. ரெஸ்டூரண்ட்டுல என் இடது புரத்துல உன்ன உக்கார வச்சிக்கிட்டேனே எதுக்கு? உனக்கு பிடிச்சதை வரவழைச்சி சாப்பிட்டுக்கிட்டே உனக்கு பிடிச்சதெல்லாம் பரிமாறத்தான்” அக்ஷய் சிரிக்க,
 
“நான் எங்க சாப்பிட்டேன். அன்னைக்கி இருந்த மனநிலைக்கு. என்ன சாப்பாடு இருந்ததுன்னே தெரியல” மதி முறிக்கிக்கொள்ள
 
“கவனிச்சிருந்தா இந்த அக்ஷய் மனசு யாருக்குனு புரிஞ்சிருக்கும்” குறும்பாக சிரித்தான் அக்ஷய். 
 
“போதும் போதும் உங்க புராணம் வந்து தூங்குங்க நேரமாச்சு” மதி கொட்டாவி விட்டபடி சொல்ல
 
“அடியேய் எங்க அம்மா எனக்கு பொண்ணா பொறுக்க வேணாமா? லேட் பண்ண முடியாது சீக்கிரம் வா”
 
“உலகத்துலயே மருமகளா போறவளை கொஞ்சினவரு நீங்களத்தான் இருக்கும்” மதி கிண்டல் செய்ய 
 
“மதி உனக்கு ருத்ரமகாதேவி பேசினது நியாபகம் இருக்கா?” மதிக்கு கொடிமலரின் நியாபகங்கள் முற்றாக நீங்கவில்லையோ! என்று அக்ஷய் அதிர்ச்சியாக கேட்க
 
“அதான் போன ஜென்மத்துல உங்கள மாதிரியே இருந்த உங்க சகோதரனை காதலிச்சதாக அம்மன் கிட்ட சொன்னாளே! அம்மனும் அவரு எங்களுக்கு மகனா பொறப்பாருனு வரம் தந்தாளே! பாவங்க ருத்ரமகாதேவி. காதலிச்சவன் அவளை மருந்துட்டான் எவ்வளவு வேதனை பட்டிருப்பால்ல.      ஒருவருஷமா? ரெண்டு வருஷமா? பலநூறு வருஷம் காதல் தோல்வி” மதி கவலையான குரலில் சொல்ல
 
“சாபம் கொடுத்தவளே! கவலை படுறாளே இதுதான் விதி” அக்ஷையால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
 
கொடியின் நியாபகங்கள் மதிக்கு இருந்தால் ருத்ரமகாதேவியை முழுதாக மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டாளோ! என்ற கவலையில்தான் அக்ஷய் அப்படி ஒரு வரத்தை அம்மனிடம் கேட்டிருந்தான்.
 
நிம்மதி பெருமூச்சுவிட்டவன் “அதானே! அவன் வேற காத்துகொண்டு இருக்கிறான் நீ வேற டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு” என்று அவளை இழுத்து அணைத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான். 
   
அக்ஷையின் அருகில் மதிமயங்கும் மதியழகி அவன் நடாத்தும் இதழ் யுத்தத்தில் தன்னையே இழக்க, போன ஜென்மத்தின் காத்திருப்பையும், இழந்த சுகத்தையும் ஒன்று சேர்த்து தனது ஆசைகள் மொத்தத்தையும் அவள் மீது கொட்டலானான் அக்ஷய்.
 
கூடிக்களித்த பின்னும் மதியை விட்டு விலகும் எண்ணம் சிறிதும் இல்லாமல் அக்ஷய் அவளை அணைத்திருக்க
 
“உங்களுக்கு பசங்கள பிடிக்கும்னு புரளியை கிளப்பின உங்க அண்ணன் தலையில ஒரு கொட்டு வைக்கணும்”
 
சத்தமாக சிரித்தவன் “இதுக்குதான் என்ன சீண்டாதே! சீண்டாதேனு சொன்னேன். நீ கேக்கல. இனி தினம் அனுபவி”  அவள் கன்னத்தை செல்லமாக கடித்து விட்டே அவளை விடுவித்தவன் அவள் புறம் திரும்பி “ஹனிமூன் எங்க போலாம்”
 
“ஹனிமூனா? நான் எங்கயும் வரல, நாளைக்கே வேலைல ஜோஇன் பண்ண போறேன்” என்று முறிக்கிக்கொள்ள
 
“உடம்பு முடியலைன்னு மூணு மாசம் லீவு போட்டிருக்க, கேட்ட உடனே கிடைச்சதும் தெரிய வேணாம். கமிஷ்னர் என்கிட்டயும் போன் பண்ணி விசாரிச்சு இருப்பார்னு. லீவு முடிய இன்னும் ரெண்டு மாசத்துக்கு மேல இருக்கு. அடுத்த ரெண்டு மாசமும் ஹனிமூன் கொண்டாட போறோம். நீ வரலைனா உன்ன தூக்கிட்டு போவேன்”
 
“அதானே பார்த்தேன் அந்த ஓல்ட் மேன் லீவ் கேட்டதும் குடுத்துட்டாரேன்னு. அது கூட உங்க ரெகமெண்டேஷனா” மதி முறைக்க,
 
“ரெக்கமண்டேஷன் இல்ல. ஹனிமூன் போகணும்னு சொல்லித்தான் கேட்டேன்” மதியின் மூக்கை பிடித்து ஆட்டியவன் அவளை அணைத்துக்கொள்ள
 
“கமிஷனர்கிட்ட அப்படியேவா கேட்டிங்க?”
 
“பின்ன, காய்ச்சல், தலைவலின்னு கூட நீ லீவ் போட்டது கிடையாது. உண்மையை சொல்லித்தான் லீவ் கேக்கணும்” சீரியஸாக சொல்வது போல் அக்ஷய் கிண்டல் செய்ய மதி அவனை அடிக்கலானாள்.
 
“நோ வயலன்ஸ் மதி. ஒன்லி ரொமான்ஸ்” என்று அவள் கைகளை பிடித்தவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
 
இனி அவர்களின் வாழ்வில் எந்த துன்பமும் இல்லை. மதியின் வேட்டை வளமை போல் தொடரும்.