தேவதையிடம் வரம் கேட்டேன் 29

3453

அத்தியாயம் 2
உதித் அஜய்க்கு பலவாறு உதவி செய்தாலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டேதான் இருந்தான்.
 
 
சமேலி அவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாமல் பாடசாலை செல்லும் அஜய்யிடம் காசை பிடுங்கிக் கொண்டு சென்று விடுவான்.
 
 
அஜய் வளர்ந்த பின் காசை பிடுங்க முடியா விட்டாலும் பிடிவாதமாக நின்று காசு வாங்கி செல்பவன் கொடுக்கா விட்டால் மிரட்டவும் செய்வான்.
 
 
 “இவனுக்கு அப்படி என்ன காசு தேவை? ஒண்டிக்கட்டை. இருப்பதும் ஒரு சிறிய சொந்த வீடு. சாப்பாடு செலவு, மின்சார கட்டணம், நீர் கட்டணம் என்று பெரிதாக செலவு கிடையாது. மருந்து மாத்திரைனும் செலவு கிடையாது. எல்லாம் கொண்டு போய் கண்ட கண்ட பொம்பளைங்களுக்கு செலவு செய்ய வேண்டியது, சூதாட்டத்துல போடவேண்டியது. அதுக்கு நான் காசு கொடுக்கணுமா?” பொருமிக்கொள்வான் அஜய்.
 
 
உதித்தின் இந்த செயல் அஜய்க்கு பெரும் எரிச்சலாக இருந்தாலும் அவன் உதவி பெரிதும் தேவை என்பதால் பல்லை கடித்து சகித்துக்கொண்டிருந்தான் அஜய்.
 
 
அஜித்தை பத்தியோ  அவன் சொத்துக்களை பத்தியோ எதுவும் சமேலி உதித்திடம் கூறி இருக்கவில்லை. உதித்தும் அஜித்  சமேலி மற்றும் அசோக்கின் மகன் என்றே நினைத்துக்கொண்டிருந்தான்.  அஜித்துக்கு உண்மைகள் தெரிந்த பொழுதுதான் அவனுக்கும் உண்மைகள் தெரிய ஆரம்பித்திருக்க, புதிதாய் அவன் மனதில் திட்டம் தீட்டி இருந்தான்.
 
 
அது அசோக்கை கொன்ற பிறகு சமேலியை திருமணம் செய்து கொண்டு சொத்துக்கு அதிபதியாவது, அதற்கு முதல் படியாக சமேலியிடம் காதல் மொழி பேச, அவள் வசை பாடி துரத்தி விட, நேராக அஜய்யிடம் போய் நின்றவன் அஜித்தின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு தனக்கும் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கலானான்.
 
 
“யார் சொத்தை யார் கேட்பது? நான் இந்த உலகத்து வர நீ காரணமாக இருக்கலாம். அதற்காக உனக்கு சொத்தெல்லாம் தர முடியாது. அதான் நாய்க்கு எலும்பு துண்டை தூக்கி போடுவதை போல் அடிக்கடி காசு கொடுக்கிறேனே! இதற்க்கு மேல் ஒரு நயாபைசா கொடுக்க மாட்டேன்” என்று அஜய்யும் துரத்தி விட அதன் பின் உதித்தை அந்த பக்கம் காணவில்லை. அதனால் தான் அஜய்க்கு அன்னையை காணவில்லை என்றதும் உடனே உதித்தின் மேல் சந்தேகம் வந்தது.
 
அஜித்தை அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்த சீசீடிவியை ஏற்கனவே ஆப் பண்ணிதான் வைத்திருந்தான். ஆனால் அதற்கு முந்தைய அறையில் சீசீடிவி வேலை செய்வதால் அஜித் அன்னையை கடத்தவில்லை என்று எண்ணினான்.
 
அக்ஷையும் மதியும் சென்ற பிறகு அன்னைக்கு வந்த அலைபேசி அழைப்போடு அவள் காரியாலய அறைக்கு செல்வதும் அதன் பின்னே சீசீடிவி
ஆப்பாவதும் தெரிய அன்னைதான் சீடிவியை ஆப் செய்தாள் என்று முடிவு செய்தவன். யாருடைய அழைப்பை ஏற்றாள் என்று பார்க்க அலைபேசியின் நிலையை கண்டு வீட்டில் எதோ நடந்திருக்கு என்று கண்டு கொண்டவன் ஆராயலானான். 
 
அவன் கண்ணில் வாசலில் இருந்த சாஸ் பாட்டில் தென் படவும் அன்னை சாஸ் சாப்பிட மாட்டாள் இது எப்படி இங்கே வந்தது என்று சிந்தித்தவாறு அதை கையில் எடுத்தவன்
 
“மதி நீ இங்க வந்த பொழுது சாஸ் சாப்பிட்டியா?” அஜய் மதியின் புறம் திரும்பி கேட்க
 
“இல்லையே! வந்து அரைமணித்தியாலம் கூட இருக்கலையே!” அஜய் எதற்காக கேட்கிறாள் என்று புரியாமல் பதில் சொன்னாள் மதி. நடந்ததை தந்தை வந்து கூறி இருந்தால் அதற்கேற்றது போல் பதில் கூறி இருப்பாள்.
 
அஜய் காஜலை ஏறிடும் பொழுதே! “நான் வந்த உடனே என்னென்ன நடந்ததுன்னு எல்லாம் சொல்லிட்டேன்” இன்னும் விசும்பியவளாகத்தான் கூறினாள் காஜல்.
 
அக்ஷையின் பார்வை வாசலை அலச நிலைக்கண்ணாடியின் மீது சிவப்பாய் ஒரு சிறிய புள்ளி தெரிய இரத்தமாக இருக்குமோ! என்று சந்தேகமாக பார்க்க அஜய்யும் அக்ஷையின் பார்வையை தொடர்ந்தான்.
 
அக்ஷய் அங்கே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க, அது சாஸ் என்று கண்டு கொண்ட அஜய். உதித் சாப்பிட்டு கொண்டே அன்னையோடு சண்டை போட்டிருப்பான் என்றே எண்ணினான். அவனின் எந்த ஒரு ஊகத்தையும் அக்ஷையிடம் பகிர்ந்துகொள்ளாமல்  
 
“அக்ஷய் நீ போய் ஒரு பக்கம் அப்பாவை தேடு நான் அம்மாவை தேடுறேன்” என்று அக்ஷய் மதியை அனுப்புவதில் குறியானான்.
 
மதிக்கு காஜலை அவனோடு விட்டு செல்ல மனமில்லை “காஜல் வா நான் உன்னை உங்க வீட்டில் விட்டுட்டு போறேன்”
 
“இல்ல நான் அஜய் கூட இருக்கேன். இந்த நேரத்துல நான் அவர் கூட இருக்கிறதுதான் அவருக்கு ஆறுதலாக இருக்கும்”
 
“இவ ஒருத்தி நேரங்கெட்ட நேரத்துல ஆறுதல் சொல்லுறேன், கூட இருக்குறேன்ன்னு, புரியாதவ. இவ கூட இருந்தா? உதித்த எப்படி புடிச்சி விசாரிக்கிறது?” அஜய் அவளை மனதுக்குள் முறைக்க,
 
மதி பல்லை கடித்தவாறு அக்ஷையை ஏறிட அக்ஷய் பேசுவதற்கு முன் அஜய் பேசினான்.
 
“லுக் காஜல் நான் அம்மாவை காணோம்னு வீட்டுல உக்காந்து அழுது கிட்டு இருக்க போறது இல்ல. நாலு இடத்துக்கு போகணும். சில இடத்துக்கு உன்ன கூட்டிகிட்டு போக முடியாது. மதி கூட போ” கண்கள் சிவந்து கோபமாக சொல்ல அவனின் கோப முகம் அவளுக்கு புதிது. அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், அஜய்க்குள் இப்படி ஒரு வித்தியாசமானவனா? என்ற பார்வையோடு மதியுடன் கிளம்பினாள் காஜல்.
 
அவர்கள் கிளம்பிய அடுத்த நொடி உதித்தின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான் அஜய். அது அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக பெண்ணின் குரல் ஒலிக்க, கடுப்பானவன் அவனை தேடி அவனின் வீட்டுக்கு சென்றான்.
 
ஆனால் உதித் வீட்டில் இல்லை. அவன் வழமையாக செல்லும் கிளப்பில் கூட இல்லை. அலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டிருக்க, அவன்தான் அன்னையையும், அஜித்தையும் கடத்தி இருப்பான் என்று முடிவே செய்தான் அஜய்.
 
காஜலை வீட்டில் விட்டு விட்டு வந்த மதியும் அக்ஷையும் வெகு நேரமாகியும் அஜித் வந்து சேரவில்லை என்ற கவலையில் இருக்க, ராஜவேலுவிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை என்ற கவலையும் அவர்களை ஒரு பக்கம் வாட்டலானாது.
 
“அக்ஷய் அப்பாக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமா?” கண்களில் அச்சம் நிறைத்து குழந்தை போல் கேட்டாள் மதி.
 
“என்ன மதி மாமா ரெண்டு, மூணு நாள் கூட காணாமல் போய் திரும்ப வந்திருக்காரே! டோன்ட் ஒர்ரி வந்துடுவார்” மதியை சமாதானப்படுத்தினான் அக்ஷய்.
 
நேரம்தான் சென்று கொண்டிருந்ததே தவிர அஜித் வந்து சேர்ந்த பாடில்லை. அவனை தேடி ஆட்களை அனுப்பினான் அக்ஷய். ஆனால் எந்த ஒரு தடயமோ! தகவலோ அக்ஷய்க்கு கிட்டவில்லை.
 
“அக்ஷய் ரொம்ப லேட் ஆகிருச்சு. பகல் கூட ஒழுங்கா சாப்பிடல, வாங்க சாப்பிட்டு தூங்குங்க” மதி அழைக்க,
 
“அஜித்துக்கு உண்மை தெரிஞ்ச பிறகும் என்ன சகோதரனான ஏத்துக்க அவனால முடியல இல்ல மதி நினச்சா ரொம்ப கவலையா இருக்கு” தனது காரியாலைய அறையில் யோசனையில் மூழ்கி இருந்தவன் திடிரென்று கூற  
 
“ஏன் அப்படி நினைக்கிறீங்க? அவர் எதோ திட்டத்தோடதான் அந்த அம்மாவை கடத்தி இருப்பார்னு தோணுது” அவனின் மனநிலையை புரிந்துகொண்ட மதி அருகில் அமர்ந்துகொண்டு கையை பிடித்துக்கொண்டாள்.
 
“அவனுக்கு முன் கோபம் ஜாஸ்தி. கோபத்துல ஏதாவது தப்பா பண்ணிடுவானோனு பயமா இருக்கு. அப்பா ரொம்ப வறுத்த படுவாரு” புருவத்தை நெளித்தவன் உதடு குவித்து காற்றை வெளியிட
 
 
விட்டா இப்படியே பேசிக்கிட்டு இருப்பான் என்று தோன்ற “எதுவானாலும் காலைல பாத்துக்கலாம். வாங்க எனக்கு ரொம்ப பசிக்குது” அவனின் கையை பிடித்து இழுத்தாள்.
 
“நீ இன்னும் சாப்பிடலையா?”
 
“நீங்க சாப்பிடாம யாருக்கு சாப்பாடு கிடையாதுன்னு பிர்ஜு சொல்லிட்டாரு” என்று சிரித்தாள் மதி.
 
ஏதோ சாப்பிட்டேன் என்று பெயருக்கு சாப்பிட்ட அக்ஷையும் மதியும், அடுத்த விடியல் அவர்களுக்கு ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் கொடுக்க போவதை அறியாமல்  மனதுக்குள் பல கவலைகளோடு உறங்க சென்றனர்.
 
டிவியில் பிளாஷ் நிவ்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. “பிரபல தொழிலதிபர் அசோக் சாம்ராட்டின் மூத்த மகன் அஜய் சாம்ராட் கைது. தந்தையை விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்ததாக அவரது அன்னையே! வாக்கு மூலம் கொடுத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றன. அஜய் சாம்ராட் அசோக் சாம்ராட்டின் மகன் இல்லை என்றும் சமேலி சாம்ராடின் காதலனுக்கு பிறந்த மகன் என்றும் மேலும் கூறியவர் தன் மகனுக்கு சொத்து கிடைக்க வேண்டிய இந்த கொலை முயற்சியை மேற்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீஸ் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் பொய் என்று அஜய் மறுப்பு தெரிவிக்க, சமேலியின் வாக்குமூல காணொளி இணையத்தில் வைரலாகி தற்பொழுது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிலையில் அன்னை, மகன் இருவரையும் போலீஸ் கைது செய்து மேற்கொண்டு விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிகிறது. அது மட்டுமல்லாது இவர்களுக்கு உடந்தையாக இருந்த சமேலியின் காதலன் எனும் உதித் என்பவரை போலீஸ் வலைவீசி தேடிக்கொண்டிருக்கின்றனர்.
 
“யார் பாத்த வேல டா இது” எனும் விதமாக பிர்ஜு மற்றும் பாஸ்கர் அமர்ந்திருக்க,
 
 
“அக்ஷய் நாம இவனுங்கள புடிக்க ட்ரை பண்ணா நம்ம வேலைய யாரோ பாத்திருக்காங்க” மதி கூற
 
 
“யாரோ இல்ல. அஜித்” அக்ஷய் கூறி முடிக்கும் பொழுது
 
 
“உள்ளே வரலாமா?” என்றவாறு வந்த அஜித் அக்ஷையோடு எவ்வாறு பேசுவது என்று தயங்கி நின்றான்.
 
 
“என்ன ப்ரோ. அதான் உள்ள வந்துட்டியே இன்னும் என்ன தயக்கம்?”
 
 
“எல்லாத்துக்கும் சாரி. என்னால உனக்கு ரொம்ப கஷ்டம். சாரி மதி” என்று மதியிடமும் சாரி கேட்டவன் மனதார கேட்டானா? அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.
 
 
 
பிர்ஜு எழுந்து குடிக்க எடுத்து வருவதாக உள்ளே சென்றிருக்க “இவர் என்ன அக்ஷய் சார் கூட ஒட்டி பொறந்திருப்பாரோ அவரை மாதிரியே பிகேவ் பண்ணுறாரு” பாஸ்கர் பாத்திருக்க,
 
 
 
“பாஸ்கர் அப்பாவை அழைச்சிட்டு வர சொல்லிட்டியா?” அந்த கேள்வியே இன்னும் கிளம்பல எனும் விதமாக இருக்க,
 
 
“சொல்லிட்டேன் சார். இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாரு” என்றவன் இடத்தை காலி செய்தான்.
 
சகோதரர்கள் பேசட்டும் என்று தானும் உள்ளே செல்ல வேண்டுமா? அல்லது அங்கேயே இருக்க வேண்டுமா? மதி குழம்பியவாறு பார்க்க அவளின் கையை பிடித்து தன் கைக்குள் பொத்தி வைத்துக்கொண்ட அக்ஷய்
 
“சோ ப்ரோ பெரிய வேலையெல்லாம் பாத்திருக்கிறீங்க, எங்களையும் கூட்டு சேர்க்க, வேண்டியதுதானே!”
 
“உனக்கு அவனுங்கள பத்தி எவ்வளவு தூரத்துக்கு தெரியுமோ! சொன்னா
நம்புவியோனும் தெரியல. அண்ட் மதியோட அப்பா இருந்ததால ரொம்ப ஹெல்ப் ஆகிருச்சு”
 
“ஆமா அப்பா எங்க?” மதி கேட்க
 
“ஹாஹாஹா அத ஏன் கேக்குற, இவ்வளவு சீக்கிரம் எல்லாம் நல்ல படியா முடியும்னு அவராலையும் நம்ப முடியலையாம். உதித்த தேடி போய் இருக்குறாரு”
 
“ஓஹ்..” அத்தோடு மதி நிறுத்திக்கொள்ள
 
“ஓகே அன்னைக்கி என்ன நடந்தது, நீ என்ன பண்ண” அக்ஷய் கதை கேக்க ஆரம்பித்தான்.
 
“உன்ன அப்பா முதல் முதல் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ வீட்டுல அப்பாகும் அம்மாக்கும் பெரிய சண்டையே! அந்த பொம்பளையே என் வாயால அம்மானு சொல்ல கூடாது. சரி விடு. சண்டை நடந்திருச்சு. நியாபகம் இருக்கா? அப்போ அந்த லேடி சொன்னது உன் அம்மா அப்பாவை மயக்கி சொத்துக்காக கல்யாணம் பண்ணி கிட்டாங்களாம். நீ அப்பாக்கு பொறக்கவே இல்லனு சொன்னாங்க. இன்னும் என்னென்னமோ. அந்த வயசுல அதெல்லாம்  புரியாதும் கூட.
 
அப்போ விதைச்ச நஞ்சு உன் மேல வெறுப்பை மட்டும்தான் கக்கி கிட்டு இருந்தேன். என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. அஜய்ய விட பாசம். ஒரு படி மேலதான். எது பண்ணாலும் ஒரு பங்கு அதிகமாகவே பண்ணுவாங்க. அஜய்யும் பொறாமை பட்டதே இல்ல. அவனுக்கு பண்ணா நான் பொறாமை பட்டிருக்கேன். சண்டை போட்டிருக்கேன். அவங்களுக்கும் அதுதான் வேணும். அப்பா முன்னாடி என் தரம் தாழனும். இப்போ தான் எல்லாம் புரியுது.
 
 
 
அப்பாக்கு தனி ரூம் அவங்களுக்கு தனி ரூம். இந்த ஒரு விஷயம் போதும் அவங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் சந்தேகப்பட, ஆனா பணக்கார வீடுகளுள பிரைவசி கெடும்னு தனித்தனி ரூம்ல இருக்குறது சாதாரண விஷயம்னு அதைக்கூட நான் பெருசா கண்டுக்கல.
 
அவன் அப்பனையே என்கூட பழக வச்சி. என்ன நோட்டம் பார்க்க வச்சி இருக்கான்னா. எவ்வளவு கிரிமினல் அவன். அதான் அவன் அம்மாவை தூக்கினேன். நேரா நொய்டால இருக்குற பரம்பரை பங்களாகுதான் போனேன். அங்க அடச்சீ வச்சி சோறு, தண்ணி இல்லாம டாச்சர் பண்ணனும்னு தான் நினச்சேன். அவ்வளவு கோபம். அப்பாக்கு விஷம் வெச்சேன்னு என் காதால கேட்டப்போ என் ரெத்தம் கொதிச்சது”
 
“உனக்கு உண்மை தெரிஞ்சதாலதான் உன்ன கட்டி போட்டாங்களா?”
 
“ஆமா நான் ஆபத்துல இருக்குறது உனக்கு எப்படி தெரியும்? அப்பாக்கு விஷம் கொடுத்தது உனக்கு ஏற்கனவே தெரியுமா? நான் சொல்லியும் கோபப்படாம இருக்க? ஆமா அவனுங்கள நீ வேட்டையாட பாக்குற சொத்துக்காக இருக்காது” நொடியில் கணித்து தானும் சாம்ராட் தான் என்று நிரூபித்தான் அஜித்.
 
புன்னகைத்த அக்ஷய் சிங்கப்பூரில் நடனத்தையும், தன் சந்தேகம் முதலில் அஜித் பக்கம் இருந்ததையும் எவ்வாறு சந்தேகம் விலகி, சமேலியை பின் தொடர்ந்ததையும் கூற அவனை முறைத்தான் அஜித்.
 
“என் பேர்ல சொத்து இருக்கிறதே எனக்கு தெரியாது. தெரிஞ்சாலும் அப்பாவை விட்டுட்டு போக மாட்டேன். என்னைக்கும் அவர் எனக்கு அப்பா தான் சித்தப்பான்னு கூப்பிட முடியாது. உன்ன இத்தனை வருஷம் அவர் கிட்ட இருந்து பிரிச்சி வச்ச பாவத்துக்கு வேணும்னா நஷ்ட ஈடு கொடுக்குறேன். என் சொத்தை பூரா கூட எழுதித்தறேன் அப்பாவை எனக்கு கொடுத்துடு” அஜித் அதை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது அசோக் உள்ளே நுழைய
 
அக்ஷய் கண்களால் தந்தைக்கு அவனை காட்டி “ஆமா அவர்தான் எங்கம்மாவை கல்யாணம் பண்ணி உன் குடும்பத்துக்கு துரோகம் பண்ணினாரே! உன்னால எப்படி அவர் மேல இவ்வளவு பாசம் வைக்க முடிஞ்சது? அதுவும் அந்த லேடி இவ்வளவு வன்மத்தை உன் மனசுல விதச்சும்”
 
“ம்ம்.. அவரோட உண்மையான பாசம் தான். அவர் நினைச்சி இருந்தா எங்களை விட்டுட்டு உன் கூட போய் இருக்கலாம். அப்படி செய்யல இல்ல. அதான்”
 
“அஜித்” என்று வேக எட்டுக்களை வைத்து வந்த அசோக் அவனை இறுக அனைத்திருக்க, “அப்பா” அவனும் அசோக்கை இறுக அனைத்திருந்தான். அக்ஷய் அவர்களின் நடுவில் செல்லாது பாத்திருக்க,
 
“என்ன ப்ரோ பங்கு போட வேணாம்னு சொல்லல, மொத்தமா எடுத்துக்க கூடாதுனு தான் சொல்லுறேன்” என்ற அஜித் அக்ஷையை இழுத்து அணைத்துகொள்ள அஜித்தோடு இப்படி சேர்ந்திருக்கும் நாள் வரும் என்று கனவிலும் நினைத்திருக்காத அக்ஷய் சந்தோசமாக அவர்களை அனைத்திருந்தான்.
 
சந்தோசமான சில உரையாடல்கள், பாசப் பரிமாறல்கள் சில அங்கே அரங்கேற சிற்றுண்டியோடு பிர்ஜு போட்ட டீயையும் மதி கொண்டு வந்து வைக்க அனைவரும் அமர்ந்து மீண்டும் அஜய், சமேலியை பற்றி பேசலாயினர்.
 
“என்ன மன்னிச்சிடுங்க டா பசங்களா என்னாலதான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்” அசோக் சொல்ல
 
“எல்லாம் விதிப்படிதான் மாமா நடக்கும்” மதி சிரித்தவாறே கூற 
 
“அது என்னவோ உண்மைதான் இல்லனா அக்ஷய்க்கு மதி கிடைச்சிருப்பாளா?” அஜித் கிண்டலடிக்க,
 
“நீ நல்ல விதமாதானே சொல்லுற?” அக்ஷய் சேர்ந்துகொள்ள
 
“ஹெலோ அஜித் சார். கதைல இன்னும் பாக்கி  இருக்கு. என்ன அப்போரமா ஓட்டலாம். அந்தம்மா கிட்ட எப்படி வாக்குமூலம் எடுத்தீங்க? அத சொல்லுங்க” 
 
“ஒரு பொம்பள, என்ன எப்படி ஏமாத்தி இருக்கா, நானும் அவளை நம்பி… சே” அசோக் நொந்தவாறு சொல்ல
 
“அதான் விதி பா…” அக்ஷய் பெருமூச்சு விட்டவாறே மதியை பார்க்க மதியோ கதை கேக்க புன்னகைத்து கொண்டிருந்தாள்.
 
“பங்களாகு போனா மான்சிங்னு வயசான வேலைக்காரன் என்ன பாத்ததும் சின்னையானு கால்ல விழுந்துட்டான். நாமதான் அந்த பங்களாகு போனதே இல்லையே! இந்தாளுக்கு  என்ன எப்படி தெரியும்னு குழப்பம் ஒரு பக்கம் வீட்டுக்குள்ள போனா சுவர் நிறைய என் புகைப்படங்கள்.
 
பேக எடுக்க போனவரு வண்டில இருந்த அந்த லேடிய பாத்துட்டு “சின்னையா.. இன்னும் உசுரோடதான் இருக்கா.. போட்டுடவா? அடச்சீ வைக்கவான்னு? கேட்டாரு. எனக்கு அப்படியே பாடி ஷேக் ஆகிருச்சு. அடச்சீ வைங்கன்னு சொல்லிட்டு உக்காந்தா… மதியோட அப்பா வேற “என்ன பண்ண போறான்னு” கேட்டு டாச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.
 
“மதியோட அப்பாவா?” அசோக் புரியாது கேட்க, மதி அக்ஷையை பார்க்க அக்ஷய் சுருக்கமாக அசோக்குக்கு எடுத்து கூற ஆச்சரியமாக மதியை ஏறிட மதியும் தலையசைத்தாள்.
 
“அப்பொறம் அரைமணித்தியாலம் யோசிச்சேன். இதுங்கள சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துறதுதான் சரினு பட்டிருச்சு. உடனே கமிஷ்னருக்கு போன் பண்ணி வர வளச்சி, மதி அப்பாவை வச்சி பயமுறுத்தி அவர் முன்னிலையில் வாக்குமூலம் வாங்கிட்டேன். அத ரெகார்ட் பண்ணி நெட்டிலையும் ஏத்திட்டேன்” அஜித் கண்சிமிட்டி சிரிக்க,
 
சிம்ரனை உதித் கொலை செய்த்தை கூறிய அக்ஷய் “நான் அஜய் மற்றும் உதித்தை பயமுறுத்தி போலீஸ்ல புடிச்சி கொடுக்கலாம்னுதான் பிளான் பண்ணேன். எப்படியோ எனிமீஸ் ஒளிஞ்சாங்களே” அக்ஷய் சொல்ல
 
“அந்த உதித் எங்க இருப்பான். நான் நினச்சேன் நீ அவனை தூக்கி இருப்பான்னு” அஜித் கேக்க,
 
“நான் நினச்சேன் நீ அவனையும் கடத்தி இருப்பான்னு” அக்ஷய் புருவம் உயர்த்தினான்.