தேவதையிடம் வரம் கேட்டேன் epilogue

5077

Epilogue
“எங்க கிளம்பிட்டீங்க” பெட்டியை தள்ளியவாறு செல்லும் அசோக்கை வழிமறித்து கேட்டான் அஜித்.
 
“கழுத்தை கெட்டா குட்டி சுவரு. இந்த தடவ தம்பி கூட சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு சித்தப்பா வீட்டுக்கு கிளம்புறாரு” அஜித்தின் மூத்த பையன் அர்னவ் கூற
 
“அர்னவ் தாத்தாவை மரியாதை இல்லாம பேசாத” மகனை அதட்டியவாறே வந்தாள் காஜல்.
 
“பின்ன என்னமா? இந்த வீட்டுல நீயும் அப்பாவும் சண்டை போட்டு நாங்க பார்த்ததே இல்ல. ஏன் நானும் தம்பியும் கூட சண்டை போட்டுக்கிட்டது கிடையாது. இவரு தினம் ஒரு சண்டை போடுறாரு அத சாக்கா வச்சி சித்தப்பா வீட்டுக்கு கிளம்புறாரு” கோபமாக அர்னவ் சொல்ல
 
“இன்னைக்கி என்ன சண்டை?” தினம் நடப்பது தானே! என்று அஜித்தும் பஞ்சாயத்துப் பண்ண தயாரானான்.
 
“ஆ.. அதுவா? பேட்மிட்டன் விளையாடினோம். பூ மதிலுக்கு அங்கிட்டு விழுந்திருச்சு. அடிச்சுது நீங்கதானே போய் எடுத்துட்டு வாங்கனு சொன்னேன். நீதானே தடுக்கல நீ போன்னு சொன்னாரு. முடியாதுனு சொன்னேன். அதுக்குதான் தாத்தா கோவிச்சிக்கிட்டு பெட்டியோட கிளம்பிட்டாரு” சின்னவன் கேசவ் கோபமாக சொல்லியவாறே வந்தமர காஜலால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
 
மனைவியை முறைத்த அஜித். “அப்பா உங்களுக்கு உங்க பேத்தியை பார்க்கணும்னு இருந்தா தாராளமா போய்ட்டு வாங்க. காலைல பிளைட்டை புடிச்சி போனா ஈவினிங் வந்துடலாம். அதுக்காக பசங்க கூட சண்டை போட்டுட்டுதான் போகணுமா?”
 
“அதுக்கு நீ இந்த தடிப்பசங்களை பெத்துக்காம அழகா அம்சமா என் மருமகளை போல ரெண்டு பொம்பள புள்ளைகள பெத்திருக்கணும்” அசோக் தன் குட்டு வெளிப்பட்டதன் பின்பும் கெத்தை விடாது கூற
 
“நாட்டோட சனத்தொகையை கட்டுப்படுத்த முடியல, இது நாம வேற பெத்துக்கணுமான்னு பசங்கனாலும் ரெண்டு போதும்னு இருந்துட்டேன். அதுக்காக இப்படி வீட்டுல தினம் ரகள பண்ண கூடாது” அஜித் தந்தையை முறைக்க,
 
“என்னடா பண்ணுறது. அக்ஷய் அந்த சென்னையை விட்டுட்டு இங்க வரவும் மாட்டேங்குறான். என்னால அங்க இருக்கவும் முடியல. இந்திராவை பார்க்காம இருக்கவும் முடியல. உன்ன விட்டுடும் இருக்க முடியல” என்றவாறு சோபாவில் தொப்பென்று அமர
 
“உண்மையிலயே இந்திரா குட்டி அத்த மாதிரியே இருக்காளா? மாமா?” காஜல் கேக்க,
 
“அச்சு அசலா அப்படியே இருக்கா? அக்ஷய் அம்மா பாசத்துல இந்திராவதினு பேர் வைக்குறானு நினச்சேன். அவன் அம்மாவே அவனுக்கு மகளா பொறந்திருக்கா” பூரிப்பில் அசோக் கூற
 
“அப்பா பேசாம இந்திராவ தத்தெடுத்துகோங்க, அப்போ அவ இங்கதான் இருப்பா” கேசவ் கோபமாக முகத்தை வைத்துக்கொள்ள
 
“ஆமா மதி சித்தி தூக்கி கொடுத்துட்டுதான் மருவேல பாப்பாங்க. நீ வேற” அர்னவ் சிரிக்க
 
“அப்பா உங்களுக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு. ட்ரைவர் உங்கள ஏர்போர்ட்டுல ட்ரோப் பண்ணிடுவாரு. நான் அக்ஷய்க்கு போன் பண்ணி சொல்லிடுறேன் அவன் உங்கள அங்க இருந்து பிக்கப் பண்ணிக்குவான். பத்திரமா போயிட்டு வாங்க” அஜித் அக்கறையாக சொல்ல
 
“டேய் பசங்களா? தாத்தா போயிட்டு வரேண்டா, கிவ் மிய ஹக் டா” இருவரும் கையை கட்டி கோபமாக அமர்ந்திருக்க, வழமையாக நடப்பதுதான் என்று காஜலும், அஜித்தும் சிரித்தவாறு பார்த்திருக்க,
 
அசோக்கே வந்து கட்டியணைத்து முத்தம் வைத்து “தாத்தாவை விட தோளுக்கு மேல வளர்ந்துட்ட டா அர்னவ். உன் பிப்டீந்த் ப்ர்த்டேகு நீ கேட்ட பைக் வாங்கி தரேன்” அவனை சமாதானப்படுத்த ரகசியம் பேச
 
“நிஜமாவா?” சந்தோசமாக புன்னகைத்தான் அர்னவ்.
 
“அப்போ எனக்கு?” அது காதில் விழுந்த கேசவும் டீல் பேச
 
“உனக்கும் தாண்டா, என்ன வேணுமோ வாங்கித்தரேன். இப்போ ஹக் பண்ணா தான் தாத்தா கிளம்ப முடியும்”
 
“சண்டை போடுறது, அப்பொறம் சமாதானம் பண்ணுறது. அப்படி என்ன ரகசியம்னு தெரியல” அஜித் காஜலிடம் முணுமுக்க
 
“உங்க அப்பா வாங்கிட்டு வரும் போது பாருங்க, அள்ளிக்கிட்டு வருவாரு. எல்லாம் கூட்டு களவாணிங்க. அவரு சண்டை போட்டா இவனுங்களுக்கு லாபம் அதான் இவனுங்க இப்படி இருக்கானுங்க” காஜல் நொடித்துக்கொள்ள
 
“அப்படியே உன்ன மாதிரி” என்று கூறி அவளின் முறைப்படியும் பெற்றுக்கொண்டான் அஜித்.
 
அம்மன் கொடுத்த வரம் போலவே அக்ஷய் மதிக்கு முதலில் ஆண் குழந்தையும் இரண்டு வருடங்கள் கழித்து பெண் குழந்தையும் பிறந்திருக்க, ஆண் குழந்தைக்கு வெற்றி என்றும் பெண் குழந்தைக்கு தன் அன்னையின் பெயரான இந்திராவதி என்ற பெயரையும் வைத்தான்.
 
ராஜவேலு தன் பாட்டுக்கு குழந்தைகளோடு விளையாட பொருட்கள் மேலேம்புவதும், அந்திரத்தில் நிற்பதையும் கண்டு முத்துலட்சுமி கத்தி கூப்பாடு போட, ஒருவாறு அவளுக்கு மதியும், அக்ஷையும் ராஜவேலு ஆவியாக தங்களோடு இருப்பதை சொல்லி புரிய வைத்திருக்க மயங்கி சரிந்தவள், இரண்டு நாட்கள் காய்ச்சலில் விழுந்து பின்பு உடம்பு தேறி தன்னை தேற்றிக்கொண்டு ராஜவேலுவை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று கூற, 
 
ராஜவேலுவை பார்க்க முடியாது. பேச மட்டும்தான் முடியும் என்று மதி கூற ராஜவேலுவும் சுவரில் எழுதி தான் இருப்பதை காட்டிக்கொள்ள கதறி அழுது விட்டாள் முத்து.
 
அதன் பின் வந்த நாட்களில் ராஜவேலு முத்துலட்சுமியை சீண்டுவதும், முத்துலட்சுமி ராஜவேலுவை திட்டுவதும் வளமை போல் தொடர,
 
“உங்களாலதான் நொடில எல்லா வேலையையும் பார்க்க முடியுதே! இந்த வேலைய பண்ணி கொடுங்க அந்த வேலைய பண்ணி கொடுங்க” என்று எல்லா வேலையும் ராஜவேலுவிடம் வாங்கலானாள் முத்து.
 
மதியிடம் முறையிட்ட ராஜவேலு “முதல்வரிடம் பேசி என்ன ஆர்மில சேர்த்து விடு மதிமா நாட்டுக்காகவாவது சேவை செய்றேன் உங்கம்மா வீட்டு வேல செய்ய சொல்லி டாச்சர் பண்ணுரா. அத கூட பொறுத்துக்கொள்வேன். குழந்தைக்கு கிட்ட நெருங்க வேணாம்னு ரூல்ஸ் போடுறா. என் பொறுமை ஒரு எல்லைக்குள்ளேதான் இருக்கும் எனக்கு கோபம் வந்தா அவளையும் ஆவியாகிடுவேன்” என்று மிரட்ட
 
“வெளியேதான் ஏகப்பட்ட கேஸ் வீட்டுலயாவது நிம்மதியா இருக்கா விடுறீங்களா?” அவர்களின் சண்டை ஓயாது என்று அறிந்து அன்னையை முறைப்பவள் தந்தையை கடிந்துகொள்வாள். 
 
குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் பொழுது மதிக்கு பெரிதாக அவர்களை பற்றிய கவலை இருக்க வில்லை. அவர்கள் வளர வளரத்தான் அவள் மனதில் அச்சம் குடிகொள்ள ஆரம்பித்திருந்தது.
 
 
தன் மனதில் எழும் கேள்விகளை கேட்டு அக்ஷையை குடைந்தெடுக்கலானாள். சமீபத்தில்தான் இந்திரா பூப்பெய்தி இருந்தாள்.
 
 
அச்சு அசலாக அக்ஷையின் அன்னையை போலவே இருக்கும் அவளை பார்க்கும் பொழுது மனம் திக்கென்று ஆகஆக அக்ஷையிடம் வந்து நின்றவள் “வெற்றிக்கு எப்பொழுது அவனுடைய போன ஜென்ம நியாபகங்கள் வரும்” என்று கேட்க
 
“என்ன மதி அவனுக்கு இப்பொழுதுதான் பதினான்கு வயசாகுது. அதுக்கு இன்னும் நாளிருக்கு. எதுக்கு இப்போவே பயப்படுற?” மதியை தன்னருகில் அமர்த்திக் கொண்டவன் ஆறுதலாக கையை பிடித்துக்கொள்ள
 
“இல்ல அம்முக்கும் அவ முன்ஜென்ம நியாபகங்கள் வருமா? அப்படி வந்தா? உங்க அப்பா அவளுக்கு கணவன். இந்த ஜென்மத்துல தாத்தா. எனக்கு ஒரே குழப்பமாகவும் பயமாகவும் இருக்கு அக்ஷய்”
 
இந்திரா தனக்கு மகளா பொறந்ததும். அவளை அம்மு என்றே அழைக்கலானான் அக்ஷய். அவள் பெயரையோ! ஒருமையிலையோ! ஒரு பொழுதும் மறந்து அழைக்கவில்லை.
 
“நீ வீணா பயப்படுற மதி. என் அம்மா எனக்கு மகளா பொறந்தாலும். அவங்களுக்கு முன்ஜென்ம நியாபகங்கள் வராது. அது மட்டுமல்ல. அவங்களுக்கும் அப்பாகும் இருக்குறது இல் பேட் {ill fate} போன ஜென்மத்திலையும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்ல. நான் பொறக்கணும் எங்குற ஒரே காரணத்துக்காக கடவுள் சேர்த்து வச்சிட்டாரு. இந்த ஜென்மத்துல அவங்க விதி வேற மாதிரிதான் இருக்கும். நீ வீணா பயப்பட்டு, என்னையும் டென்ஷன் படுத்தி, அவங்களையும் டிஸ்டர்ப் பண்ணிடாத, புரியுதா”
 
கொஞ்சம் முகம் தெளிந்தவள் “உங்க கைல இருக்குற காப்ப வெற்றிக்கு கொடுப்பீங்க, என் காப்ப யாருக்கு கொடுக்குறது? அம்முக்கு கொடுக்க விடமாடீங்க” தன் மகள் என்று வரும் பொழுது அக்ஷய் எவ்வாறான முடிவுகளை எடுப்பான் என்று அறிந்து மதி கூற
 
“ருத்ரா வெற்றியை சந்திச்சா அவங்க கல்யாண பரிசா குடு. அப்டர் மேரேஜ் அவ சக்தியெல்லாம் காணாம போயிடும்னு அம்மன் சொல்லிட்டாங்கல்ல. ருத்ராக்குத்தான் அது தேவ படும். வெற்றியும், ருத்ராவும் அடுத்த ஜெனரேஷன்ல ஆவிகளாக அலையும் ஆத்மாக்களுக்கு உதவட்டும்”
 
“அதுவும் சரிதான்” மதி அக்ஷையின் முடிவு சரியானதே எனும் விதமாக தலையசைத்தாள்.
 
“அம்மா இங்க பாருங்க இந்த வெற்றி என் முடிய பிடிச்சி இழுக்குறான்” இந்திராவின் குரல் கேக்க, மதியின் அலைபேசியும் அடிக்க ஆரம்பித்திருக்க, திரையில் நிர்மலின் பெயர் மின்னிக் கொண்டிருந்தது.
 
“உங்க அண்ணனும், அம்மாவும் சண்டை போடுறாங்க போய் என்னனு பாருங்க என்னால முடியாது” மதி அலைபேசியை அக்ஷய்க்கு காட்டியவாறே கூற, புன்னகைத்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டிட்டே அகன்றான்.
 
“எத்துணை தடவ சொல்லுறது வெற்றி அம்மு கூட சண்டை போடாதேன்னு. நீங்க உள்ள போங்க அம்மு”
 
“திஸ் ஐஸ் டூ மச் டேட். அவ என்ன விட ரெண்டு வருஷம் சின்னவ. அவள போய் வாங்க, போங்கன்னு மரியாதையா பேசிகிட்டு. கொரங்கு. வாலில்லா கொரங்கு அவ”
 
“பாருங்க டேட் கொரில்லா என்ன கொரங்குனு சொல்லுது”
 
“இவளுக்கு நீங்க சப்போர்ட்” என்ற பார்வையை அக்ஷய் மீது வீசிய வெற்றி குரங்கு போல் செய்து காட்டி இந்திராவை வெறுப்பேற்ற அவர்களை எவ்வாறு சமாளிப்பது என்று திண்டாடித்தான் போனான் அக்ஷய்.
 
“வெற்றி அப்பா சொன்ன ஒன்னு கேப்பியா?”
 
“என்ன டேட்? டெல் மீ”
 
“பொண்ணுங்க அம்மாக்கு சமம்னு சொல்வாங்க அதான் அம்முவை மரியாதையா பேசுறேன். புரியுதா? அவ உன் தங்கைதானே! நீதான் அவளை பாத்துக்கணும். இப்படி சண்டை போடுக்காத. நீ வளர்ந்துடல்ல” இந்திரா வெற்றிக்கு பழிப்பு காட்ட
 
“அப்போ பசங்க?”
 
“பசங்க தோளுக்கு மேல வளர்ந்தா தோழன்னு சொல்வாங்க”
 
“அப்படியா?” என்றவன் தந்தையின் அருகில் வந்து நின்று தன் உயரத்தை அளந்து பார்த்து விட்டு “அப்போ உங்கள விட வளர்ந்துட்டா? உங்கள நீ, வா,போனு பேசலாமா? இல்ல டேய் அக்ஷய்னு  கூப்பிடலாமா?” என்று கண்சிமிட்டி குறும்பாக சிரிக்க,
 
“உன் முன்ஜென்ம நியாபகங்கள் எல்லாம் வந்த பிறகு டேய் வீரா நீ வயசாகிட்ட டானே  சொல்லுவ” மனதில் நினைத்தவன் புன்னகை மட்டும் சிந்தி விட்டு “இப்போ கூட கூப்பிடலாம் நாம ரெண்டு பேரும் இருக்கும் பொழுது மட்டும். உங்க அம்மா காதுல விழுந்தா உன்ன ஒன்னும் பண்ண மாட்டா என்ன தான் அடிப்பா” என்று ரகசியமாக சொல்லி சிரிக்க
 
“டேட் இவன் கூட நீங்க ரகசியம் பேசுறது எனக்கு பிடிக்கல” இந்திரா முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள
 
“இந்திரா ஒஹ் மை டார்லிங்” என்றவாறு அசோக் உள்ளே நுழைய இந்திரா தாத்தாவிடம் ஓடி இருக்க,
 
“இன்னைக்கு என்ன சண்டை போட்டுட்டு வந்திருக்காரு உன் அப்பா” என்று அக்ஷையிடம் கிசுகிசுத்தான் வெற்றி.
 
“என்ன மதி மேடம். நல்ல இருக்கீங்களா? நாங்க போன் பண்ணி நலம் விசாரிச்சாதான் உண்டு. இந்த பக்கமே வர்ரதில்ல”
 
“எப்படி இருக்க நிர்மல்? ஸ்வீட்டி எப்படி இருக்கா? அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?”
 
“இப்போ கேளு எப்படி இருக்கானு. ஏன் நல்ல இல்லனா ஓடி வந்து பார்கவா போற?”
 
“ஏன் டா..”
 
“அத விடு. இன்னும் ரெண்டு நாள்ல எங்க வெடிங் அனிவேர்சரி வருது. வீட்டுல சின்ன பார்ட்டி. நீ அக்ஷய் சார், பசங்க, அத்த, உங்க அப்பா எல்லாரும் வந்துடுங்க. அவரை கூப்பிடலானா வர மாட்டாரு மறக்காம உங்க அப்பா கிட்ட சொல்லிடு”
 
“பத்து நாளைக்கு மொததானேடா உன் பையன் சிவா பெர்த்டேனு வீட்டுல பார்ட்டி வச்ச”
 
“என்ன பண்ண சொல்லுற? பொண்டாட்டியையும் சமாளிக்கணும், பையனையும் சமாளிக்கணும். இருக்குறது ஒரு பொண்டாட்டி. ஒரு பையன். அம்மாவும் பையனும் மாதிரியா நடத்துக்குறாங்க? அவளுக்கு பண்ணா அதே மாதிரி இவனுக்கு பண்ணனும் இல்லனா இவன் மூஞ்ச தூக்கி வச்சிப்பான். இவளும் சின்ன பாப்பா மாதிரி அவன் கூட சண்டை போடுறா. என் மண்டைல இருக்குற முடியெல்லாம் கொட்டி போகுது இதுங்கள சண்டைல” நிர்மல் அலுத்துக்கொள்ளும் போதே ஸ்வீட்டியும், சிவாவும் எதற்கோ சண்டை போட்டுக்கொள்வது அலைபேசி வழியாக கேட்க மதி வாய் விட்டே சிரிக்கலானாள்.
 
“சரி சரி மறக்காம பார்ட்டிக்கு வந்து சேரு” என்று நிர்மல் அலைபேசியை அனைத்திருக்க, வாசலில் அசோக்கின் குரல் கேட்டு மதி வாசலுக்கு விரைந்தாள்.
*******************************************************************
 
காலேஜினுள் நுழைந்த வெற்றி சிவா எனும் சிவபாலனை தேட
 
“யாரை தேடுற?” இந்திரா அண்ணனை கடிய
 
“எனக்கிருக்கிறது ஒரே ஒரு பிரெண்டு அவனைத்தான் தேடுறேன். எங்க போனான் இவன்” கண்களால் அலசியவாறே முகம் யோசனைக்குள்ளாக
 
“சும்மா சும்மா பாத்துகிட்டு இருந்தா என்ன டா என்ன லவ் பண்ணுறியான்னு கேட்டேன். அதான் பய தெறிச்சு ஓடிட்டான் போல” இந்திரா அசால்டாக சொல்ல
 
“உன்னாலதான் அவன் வீட்டுக்கே வராதில்ல. ஏன் டி. காலேஜ் வந்த மொத நாள் அதுவுமா அவனை இம்ச பண்ணுற”  வெற்றி திட்ட ஆரம்பிக்க,
 
“அவன் ஒரு பயந்தாம்கொல்லி. அவனுக்கு என்ன பிடிச்சிருக்கு. சொல்லத்தான் பயப்படுறான். என் கிட்ட பேசும்போது கவனியென். அவன் காலு ரெண்டும் நடுங்கும்”
 
“பெரிய ரதியா நீ. இரு உன்ன அம்மா கிட்ட மாட்டி விடுறேன்”
 
“உன்ன அப்பா கிட்டு போட்டு கொடுக்குறேன்”
 
“என்னனு”
 
“நேத்து கூட கனவுல ருத்ரான்னு முனகிகிட்டு இருந்தியே அதத்தான்”
 
“கனவுல முனகினது வெளியாவ கேட்டிருச்சு?”
 
“ருத்ராங்குறதும், மகாங்குறதும், தேவிங்கறதும் அப்பப்பா எத்துணை பொண்ணுங்க” அக்ஷையிடம் சொன்னால் திட்டு விழும் என்று மறைமுக மிரட்டல் விடுக்க,
 
“அப்பாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்”
 
“என்னனு” இந்திரா புருவம் உயர்த்த
 
“கனவுல தேவதை மாதிரி ஒரு பொண்ணு வாரா, அவளை நேர்ல பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறேன்னு”
 
“கனவுலதானே நடக்கட்டும், நடக்கட்டு” கிண்டலாக சிரிக்க,
 
“அவ மட்டும் நேர்ல வரட்டும் உன் கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி”
 
“நிறுத்தி”
 
“இதுதான் உன் அண்ணின்னு சொல்லுவேன்”
 
“ஆகட்டும் ஆகட்டும். அப்படியே உன் லூசு ப்ரெண்ட கொஞ்சம் எனக்கு கரெக்ட் பண்ணி கொடு”
 
“ஒரு அண்ணன் கிட்ட பேசுற பேச்சா இது” அவள் தலையில் கொட்ட
 
“இவ்வளவு நேரம் நீ மட்டும் ஒரு தங்கச்சி கிட்ட பேசுற பேச்சா பேசின” அண்ணனை முறைக்க,
 
“எல்லாம் டேடிய சொல்லணும். இவ கூட ப்ரெண்டா பழகுனு சொல்லி என் பாதி உயிரை வாங்கிட்டாரு. இந்த பிசாசு மீதி உயிரை வாங்குது”
 
“உசுரு போகுறதுக்குள்ள உன் தேவதைய கண்டு பிடி டா தம்பி”
 
“அடிங்க” வெற்றி இந்திராவை துரத்த அவள் ஓட்டமெடுத்திருந்தாள்.
 
“அப்பாடா…” இன்னக்கி அந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன்” என்று இவர்களை மறைந்திருந்து பாத்துக்கொண்டிருந்த சிவா நிம்மதி பெருமூச்சு விட
 
“உனக்கு அவ தாண்டா ஜோடி. இப்போ தப்பிச்சிட்ட, உன்ன கடுப்பேத்த, அவ அண்ணன வெறுப்பேத்த அவளும் விளையாட்டுக்கு பேசிகிட்டு இருக்கா. உன் அப்பாவும் அவ அம்மாவும் முடிவெடுக்கும் போது நீ அவளுக்கு தாலி கட்டிதான் ஆகணும், அவ உனக்கு கழுத்த நீட்டித்தான் ஆகணும்” என்று விதி  கைகொட்டி சிரிக்கலானது.
 
இந்திராவை துரத்திக்கொண்டு சென்ற வெற்றி ஒரு பெண்ணின் மீது மோத, அவள் விழுந்து விடாமல் தடுத்து நிறுத்தியவன் அவள் முகம் பார்த்து “தேவி” என்று அழைக்க
 
புன்னகைத்த ருத்ரமகாதேவி “வெற்றி” என்று அழைத்திருக்க,
 
“உனக்கு எப்படி என்னை தெரியும்? ஹேய் எனக்கு வருகிறது போல உனக்கும் கனவு வருதா?” ஆச்சரியம் கலந்த சந்தோசத்தில் கேட்க
 
 அவள் காதல் கைகூடிய ஆனந்தம் அவள் கண்களில் ஜொலிக்க, கன்னங்கள் சிவந்து அழகாக வெட்கப்பட்ட ருத்ரமகாதேவி மௌனம் காத்தாள்.
 
                                                    முற்றும்
                                                         By
                                                       MILA