Advertisement

அத்தியாயம் 27
“இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் அக்ஷய் ருத்ரமஹாதேவியிடம் உதவி கேட்கலாம். அவளை நான் அழைத்தால் உடனே வந்து விடுவாள். அவள் நொடியில் இந்த கொலைகார கும்பலை ஒருவழி பண்ணி விடுவாள்” என்று மதி அக்ஷையிடம் கூற
 
ருத்ரமகாதேவியின் பெயரை கேட்டதும் உள்ளுக்குள் குளிரெடுக்க மதியின் அருகில் அமர்ந்த அக்ஷய் “மதி நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே” என்று புதிரோடு ஆரம்பித்தான்.
 
மதியும் அக்ஷய் என்ன சொல்ல போகிறான் என்று அவன் பழுப்பும், கருப்பும் கலந்த கண்களையே பாத்திருக்க,
 
“ருத்ரமகாதேவி ஒரு தேவதையாக இருக்கலாம். நீ அவங்கள எதேச்சையாக சந்திச்ச, வரம் கேட்ட, அவங்களும் கொடுத்தாங்க, அத்தோட அவங்களுக்கும் உனக்குமான உறவு முடிஞ்சது. தேவதைகளோடு சகவாசம் வச்சிக்கிறது நல்லதல்ல. புரியுதா? அதுமட்டுமல்ல, என் குடும்ப விசயத்துல மூணாவதா ஒருத்தர் தலையிடுறத நான் விரும்பல. நல்லா கேட்டுக்க என் குடும்ப விசயத்துல மூணாவதா ஒருத்தங்க மூக்கை நுழைக்கிறத நான் விரும்பல, எனக்கு பிடிக்காது. நீ என் மனைவியாக போகிறவ உனக்கு பிறகுதான் என் மத்த சொந்தம் எல்லாம் சோ அவங்க விஷயத்துக்கே ருத்ரமகாதேவிக்கு இடம் இல்லனா உன் விசயத்துல நோ எண்டரி. புரியுதா?” அழகாக எந்த ஒரு காரணத்துக்காகவும் ருத்ரமகாதேவியை தங்கள் வாழ்க்கையில் சம்பந்த படுத்தவே கூடாது என்று அக்ஷய் தெளிவாகவே எடுத்துக் கூற அவன் கண்ணின் காந்த சக்திக்கு கட்டுண்டவளாக மண்டையை ஆட்டினாள். மதி
 
ஆனால் விதி அவர்கள் மூவரையும் இணைத்துதான் ஸ்கெட்ச் போட்டிருப்பதை அக்ஷய் உணரவில்லை.
 
மதி கூறியது போல் அஜய் எந்த நேரத்தில் எந்த மாதிரி முடிவெடுப்பான் என்று அக்ஷையால் கணிக்க முடியாததால் தந்தையை தன் ஹோட்டலில் வைத்திருப்பது அவருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் அது தனக்கும் எதோ ஒரு வகையில் அஜய் நெருக்கடி கொடுப்பான் என்று தோன்ற மதி கூறிய படி தந்தையை வேறு இடம் அனுப்ப முடிவெடுத்தான் அக்ஷய்.
 
மதியும் அக்ஷையும், பாஸ்கரும் எதோ திட்டமிடுவது பிர்ஜுவின் கண்களுக்கு படவே அனைத்தையும் யோசனையாக பாத்திருந்த பிர்ஜு என்ன நடக்கிறது என்று புரியாமல் முற்றாக குழம்பியவன் அவர்களை கண்காணிக்கலானான்.
 
மதி அக்ஷையின் திட்டப்படி  அக்ஷய் ஆபீஸ் கிளம்பிய பின், பிர்ஜு கடைத்தெருவுக்கு கிளம்பும் வரை இருந்த மதி பாஸ்கரோடு அசோக்கை பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு தானும் சமேலியை பார்க்க கிளம்பி விட்டாள்.
 
மதி வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த அஜய் அக்ஷய் ஆபீசில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவன் இடத்துக்கே சென்று அசோக்கை கொன்று விட திட்டம் தீட்டினான்.
 
அதற்கு அவன் பயன் படுத்த போவது புதியவகை பாய்சன். அதை செலுத்தி மூன்று நாட்களில் தான் உடம்பில் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சல் அதிகமாகி மூளை வேலைநிறுத்தம் செய்யும்.
 
அக்ஷய் மற்றும் மதி இல்லாத சமயத்தை பயன் படுத்தி அந்த பாய்சனை அசோக்கின் உடம்பில் செலுத்தி விட்டால் தான் நினைத்தது நிறைவேறி விடும் என்று திட்டமிட்ட அஜய் அக்ஷையின் ஹோட்டலை அடைய அவனுடைய மெய்ப்பாதுகாவலர் வழமைக்கு மாற்றமாக ஒருவன்தான் அங்கே இருந்தான். அவனும் அஜய்யை பரிசோதிக்காமலையே உள்ளே அனுமதித்தான். 
 
அக்ஷையின் அண்ணன் என்பதினால் தான் தன்னை பரிசோதிக்கவில்லை என்று எண்ணினான் அஜய். அந்த வீட்டில் வசிக்கும் பாஸ்கர், பிர்ஜு இருவரும் எத்தனை தடவை வெளியே சென்று வந்தாலும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க படுவார்கள், இதை அறியாத அஜய் இறுமாப்பில் உள்ளே செல்ல அக்ஷையின் வீட்டில் யாருமில்லை. வீடு வெறிச்சோடி காணப்பட்டது.
 
கோபத்தின் உச்சிக்கே சென்ற அஜய் அங்கிருந்த பொருட்களை உடைக்க போக “வாங்க அஜய் சார். எப்போ வந்தீங்க? அக்ஷய் சார் ஆபீஸ் போய்ட்டாரே! அவரோட போலாம்னு வந்தீங்களா?” பாஸ்கரின் குரலுக்கு சுயநினைவுக்கு வந்த அஜய் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன் பதில் சொல்லாது அருந்த நீர் கேட்டான்.
 
பாஸ்கர் எடுத்து வர உள்ளே சென்றதும், அசோக் வீட்டில் இல்ல. அக்ஷய் ஆஃபீஸ் சென்றிருக்கிறான். மதி எங்க வீட்டுக்கு, இவன் இப்போதான் வெளிய இருந்து வருகிறான். இன்னொருத்தன் இருக்கிறான் அவனை காணோம். அப்போ அப்பா ஏற்கனவே வீட்டுல இல்லையா? அக்ஷய் ஏன் சொல்லல” அஜய் மூளையை குடைய மார்க்கட் சென்றிருந்த பிரஜூவும் கூடையை சுமந்தவாறு உள்ளே வந்தான்.
 
அஜய்யை கண்டு வணக்கம் வைத்தவன் சமயலறைக்குள் போக, பாஸ்கர் நீர்குவளையை ஏந்திய தட்டோடு வெளிப்பட்டான்.
 
அதை அஜய்க்கு ஊற்றி கொடுத்தவன் நின்றவாறே இருக்க, பாஸ்கரை ஏறிட்ட அஜய் “அப்பா எங்க?” என்று ஒற்றை கேள்வியை கேக்க
 
புரியாத குழந்தை போல அசோக் இருந்த அறையை காட்டினான் பாஸ்கர்.
 
“அவர் அங்க இல்ல. எங்க?”
 
“பிர்ஜு நீ எங்க போன?” பாஸ்கர் அறியாதவனாக கேக்க
 
“மார்க்கட்டுக்கு ஏன்” பிரஜூவும் புரியாமல் பதில் சொன்னான்.
 
“பெரிய சார் எங்க?” பாஸ்கர் பிர்ஜூவிடம் கேட்க,
 
“என் கிட்ட என்ன கேக்குற நீயும் அக்ஷய் சாரும் தானே வண்டியில ஏத்திக்கிட்டு போனீங்க” என்று பிர்ஜு சொல்லி முடிக்கவில்லை அஜய் பாஸ்கரின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்திருந்தான்.
 
“சொல்லுடா.. சொல்லுடா எங்க அப்பா.. எங்க கடத்தி கொண்டு போய் வச்சி இருக்கிறீங்க?” அஜய் கத்த பாஸ்கரை கேலியாக பார்த்து புன்னகைத்தான் பிர்ஜு. 
 
“எனக்கு தெரியாது. எனக்கு தெரியாது. இவன் உளறுறான்” பாஸ்கர் அடித்து கூற பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பிர்ஜு
 
“சார் சார் அவரை விடுங்க இவரும், அக்ஷய் சாரும் அன்னைக்கி பெரிய சார் உடம்பு முடியாம போகவும் வண்டில ஏத்திக்கிட்டு ஆஸ்பிடல் போனாங்க, அப்பொறம் கொஞ்சம் உடம்பு சரியானதும் இங்கதான் கூட்டிகிட்டு வந்தாங்க, நான் தான் என் ரெண்டு கையாலையும் சமைச்சி கொடுத்த பார்த்து கிட்டேன்” என்று கைகளை திருப்பி திருப்பி காட்டியவன்
 
“ஆனா ஊட்டி விடுறது, சாரோட உடம்ப கழுவுறது, துடைக்கிறது எல்லாம் அந்த மதித்தான் பாத்துகிறா, அதுல அக்ஷய் சார் அவளதான் பாராட்டுறா, கஷ்டப்படறது நானு பேர் வாங்குறது அவ” முகத்தை நொடித்தான் பிர்ஜு
 
வாய் பேசியதை விட அதிகமாக கைகள் பேச அவனை எரிச்சலாக பார்த்தது “டேய் டேய்… அப்பா எங்கன்னு சொல்லு” அஜய் கத்த
 
“அவர் இங்கதான் சார் ரூம்ல இருப்பாரு அந்த மதி சேவகம் செய்வா… இன்னைக்கி என்னமோ தெரியல என்ன பாதுக சொல்லி மினுக்கி கிட்டு எங்கயோ போனா… கைல வேறு சாப்பாடு கூட வேற எடுத்துட்டு போனா” என்று ரகசியமாக கூறியவன்.
 
“அநேகமா அக்ஷய் சருக்கு சாப்பாடு எடுத்துட்டு போய் இருப்பாளா இருக்கும். போகும் போது பெரிய சார் தூங்குறதாகவும், எந்திரிச்சா ஜூஸ் கொடுக்க சொன்னா. அவர் தூங்குறதால நானும் மார்க்கட் போய்ட்டேன். இப்போதான் வரேன். நீங்க பாத்தீங்களே!” என்று பற்கள் அனைத்தும் தெரிய புன்னகைக்க பல்லை கடித்தான் அஜய்.
 
“அப்போ இவனும் அக்ஷையும் அப்பாவை வண்டில ஏத்திட்டு போனதாக சொன்னது”
 
“பெரிய சார் இங்க வந்த அன்னைக்கி என்ன நடந்தது, அப்பொறம் என்ன நடந்ததுன்னு விலாவாரியா சொன்னாத்தானே உங்களுக்கு புரியும். அதான்” என்றவன் பாஸ்கரை பார்த்து கண்சிமிட்ட பாஸ்கர் பிரஜூவை “ஆ” வென பாத்திருந்தான்.
 
“அடேய் லூசுங்களா… அப்பா இங்க இல்ல”
 
“என்ன சார் சொல்லுறீங்க, நா போகும் போது தூங்கிட்டு இருந்தவரு எங்க போய்ட போறாரு, வாங்க காட்ட ரூம்ல தூங்குறாரு” அஜய்யின் கையை பிடித்து இழுக்க, பிரஜூவை தள்ளி விட்டான் அஜய்.
 
“நீ எங்க போன” பாஸ்கரை சந்தேகமாக ஏறிட்டான் அஜய்.
 
“அக்ஷய் சார் பி.ஏ நான் அவர் பிஸ்னஸ் விஷயமா தான் நான் வெளிய போய் இருந்தேன்” என்று பாஸ்கர் கூற அசோக்கின் அறைக்கு சென்ற பிர்ஜு அங்கு அசோக் இல்லாததைக் கண்டு வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டவன்
 
“ஐயோ நான் என்ன செய்வேன். அந்த மதி வந்து என்ன கேள்வி கேப்பாளே! என் பொறுப்புலதான் விட்டுட்டு போனதா சொல்லுவாளே! அக்ஷய் சார் என்ன வேலைய விட்டு அனுப்பிடுவாரே! என்று கதற தலையில் கைவைத்து அமர்ந்தான் அஜய்.
 
“உண்மையில் இந்த திட்டத்தில் பிரஜூவை அக்ஷய் கூட்டு சேர்க்கவே இல்லை. அசோக்கை இங்கிருந்து அழைத்து செல்லும் பொழுது பிர்ஜு இங்கு இருக்கவே இல்லை. இவனுக்கு எப்படி தெரியும்” பாஸ்கர் புரியாது பாத்திருந்தான்.
 
அடுத்த சில நிமிடங்களில் அக்ஷய் மற்றும் மதி ஹோட்டலில் இருக்க, அசோக் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்று விட்டதாக பேசிக்கொண்டனர்.
 
சீசீடிவி இல்லையா என்று அஜய் அக்ஷையை காய்ச்சி எடுக்க, “பிரைவசி போயிடும்னு என் போசனுக்கு மட்டும் வைக்கல” பாவமாக முகத்தை வைத்திருந்தான் அக்ஷய்.
 
“ஐம் சாரி அக்ஷய் வீட்டுல அத்தையும் மனசு சரி இல்லாம இருப்பாங்க, அவங்க கிட்டயும் ஆறுதலா பேசி, இங்க மாமாவையும் சரி கட்டி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கலாம்னுதான் உங்க வீட்டுக்கு போனேன். உங்க கிட்ட கூட சொல்லாம போனது ஏன் தப்புதான். சொல்லிட்டு போய் இருந்தா நீங்க ஆபீஸ் போகாம வீட்டுல இருந்து மாமாவை பார்த்துக்கொண்டு இருந்திருப்பீங்க” மதி கவலையான குரலில் கூற
 
“இட்ஸ் ஓகே மதி என் குடும்பம் ஒத்துமையா, சந்தோசமா இருக்கணும்னு நீ நினைக்கிற, எல்லாம் தப்பாவே நடக்குது” என்றவன் பாஸ்கரை ஏறிட்டு “பாஸ்கர் கீழ ஒரு சிகியூரிட்டி தான் நிக்குறான் மத்தவன் என்ன ஆனான்?”
 
“அவனைத்தான் நாம அசோக் சார் கூட வச்சி இருக்கோமே” மனதுக்குள் சொல்லியவன் “அவன் அம்மாக்கு ரொம்ப உடம்பு முடியலைன்னு போன் வரவும் என் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான்”
 
“என்னடா வேல பாக்குற? ஒருத்தன் போனா இன்னொருத்தன் வேலைக்கு வைக்க வேணாமா? அப்பா போன நேரம் இருந்தவனுக்கு வாஷ்ரூம் போனேன்னு சொல்லுறான். ஆகா மொத்தத்துல அவர் இங்க இருந்து போனதா பாத்தவங்க யாருமில்ல. ஒன்னு பண்ணு தெருத்தெருவா அப்பா போட்டோ எடுத்துட்டு போய் நடந்து போனாரான்னு விசாரி”
 
“சரிங்க சார்” பவ்வியமாக தலையசைக்க உள்ளுக்குள் சிரித்தாலும் நன்றாக பாஸ்கரை முறைத்தான் அக்ஷய்.
 
“என்ன இந்த பாஸ்கர் பய இப்படி நடிக்கிறான், விடக்கூடாது, இப்போ பாரு என் நடிப்ப” என்று ஓடி வந்த பிர்ஜு அக்ஷையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி கண்ணீர் வடிக்க,
 
“வாங்கின காசுக்கு ஓவர் ஆக்டிங் பண்ணுறது பாத்திருக்குறேன், இங்க காசே வாங்காம என்னமா நடிக்கிறான்” பாஸ்கர் மதியின் காதை கடிக்க,
 
“பிர்ஜுவ என்னமோன்னு நினச்சேன். முதலாளி விசுவாசம் கொஞ்சம் ஓவர்தான்” என்றாள் மதி.
 
“பிர்ஜு உன்ன வேலைய விட்டு தூக்க மாட்டேன் போய் எல்லாருக்கும் டீ போடு தல வலிக்குது” அக்ஷய் அதட்ட, மூக்கை சிந்தியவாறு சமயலறைக்குள் சென்றான் பிர்ஜு.
 
“அஜய் அப்பா ஒருவேளை வீட்டுக்கு போய் இருப்பாரோ!” அக்ஷய் சந்தேகமாக கேக்க அன்னையை அழைத்து விசாரித்த அஜய் இல்லை என்றான்.
 
“அஜித்தை பார்க்கணும், அஜித்தை பார்க்கணும்னு புலம்பிகிட்டே இருப்பாரு. ஒருவேளை அவனை பார்க்க போய் இருப்பாரோ! அவன் இந்நேரம் ஆபீஸ்லதானே இருப்பான் அவனுக்கு போன் போட்டு கேளேன்” அக்ஷய் அறியாதவனாய் சொல்ல
 
அக்ஷையின் பேச்சிலிருந்தே அசோக் அஜித்தை பற்றி அக்ஷையிடம் எதுவும் கூறவில்லை என்று புரிந்துக்கொண்ட அஜய் அஜித்துக்கு அழைப்பு விடுத்து அலைபேசி அனைத்து வைத்திருப்பதாக கூறினான்.
 
“என்ன சொல்லுற? போன் சுவிட்ச் ஆப்பா.. ஒருவேளை அஜித் அப்பாவை கடத்தி இருப்பானா? அஜய் அப்பாவை காணோம்னு பத்திரிக்கை, டிவில நியூஸ் கொடுத்து போலீசிலையும் கம்ளைண்ட் கொடுக்கலாமா?” அக்ஷய் யோசனை சொல்ல
 
“ஆஹா.. இவனே சூப்பர் ஐடியா தரானே” மனதுக்குள் எண்ணியவன் “வேணாம் வேணாம்” உடனே மறுத்தான் அஜய்.
 
அஜய்யின் மனதில் அசோக்கை கண்டு பிடித்து கொலை செய்து அஜித்தான் அசோக்கை கடத்தி கொலை செத்ததாக சித்தரித்தால் என்ன என்று எண்ணம் தோன்றி மறைய அன்னையோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்று எண்ணினான்.
 
சமயலறையில் மெதுவாக பாடியவாறே அனைவருக்கும் டி போட்டுக்கொண்டிருந்தான் பிர்ஜு.
 
“என்ன பிர்ஜு ரொம்ப குஷியா இருக்குற மாதிரி தெரியுது” மதி சமையல் மேட்டில் தாவி அமர்ந்தவாறே கேக்க
 
அவளை முறைத்தவன் “என் கூட கண்டவங்க பேச கூடாது, சொல்லிட்டேன்” வளமை போல் அவளை திட்டி விட்டு தன் வேலையை கவனிக்கலானான் பிர்ஜு.
 
பிர்ஜுவின் தலையில் தட்டிய பாஸ்கர் “வருங்கால முதலாளியம்ம்மா கிட்ட இப்படித்தான் பேசுவியா” என்று அதட்ட
 
“அக்ஷய் சார் இந்த அம்மாவை முதல்ல கல்யாணம் பண்ணட்டும் அப்பொறம் மரியாதை கொடுக்கிறத பத்தி யோசிக்கிறேன்” என்று பாஸ்கரை முறைத்தான் பிர்ஜு.
 
“ஆமா இங்க வேலைக்கு சேரும் முன்னால ஏதாவது நாடக கம்பனில வேல பாத்தியா? இந்த கிழி கிழிக்கிற?”
 
“ஆமா… ஒரே வீட்டுல இருக்கோம் என்றுதான் பேரு மூணு பேரும் குசுகுசுன்னு மூலைல போய் பேசுறீங்க, என்ன ஒதுக்கி வைக்கிறீங்க, என்ன எல்லாம் மனுசனா மதிக்கிறீங்களா?” என்றவனின் கண்கள் கலங்கி இருக்க, ஒரு விரலால் ஸ்டைலாக துடைத்துக்கொண்டான்.
 
மதிக்கே பார்க்க பாவமாக இருக்க பிர்ஜுவின் அருகில் வந்தவள் “அப்படி நினைத்து, உன்ன ஒதுக்கள பிர்ஜு ரகசியம் வெளிய போக கூடாதென்றுதான்”
 
“நீ பேசாத, பொம்பளைங்கள நம்ப கூடாது. அழகா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஆம்பளைங்கள மயக்கி ஏமாத்திடுவாளுங்க, நீயும் அக்ஷய் சார் பணத்துக்காகத்தான் அவர் கூட இறுக்கியோனு எனக்கு பயமா இருக்கு” மதியை திட்டியவாறே போட்ட டீயை தட்டில் வைத்து எடுத்து சென்றவன் அக்ஷய்க்கும், அஜய்க்கும் கொடுத்து விட்டு வர மதியும் பாஸ்கரும் தங்களுக்கான டீயை அருந்திக்கொண்டிருப்பதைக் கண்டு கழுத்தை நொடித்தான்.
 
பிர்ஜுவின் மனமும், அக்ஷையின் மீதான பாசமும், பயமும் புரிய, கோபம் வரவில்லை. மாறாக தான் அக்ஷையோடு வாழப்போகும் வாழ்க்கையில்தான்  பிர்ஜுவின் தன் மீதான கோபம் தீரும் என்று புரிய, டீயை அருந்தி முடித்தவள் “தேங்க்ஸ் ப்ரோ” என்று அவனை இருக்க கட்டி அனைத்து விட்டு வாசலுக்கு சென்று விட திகைத்து நின்று விட்டான் பிர்ஜு. 
 
“ஐயோ.. ஐயோ.. இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லையா?. இவ்வளவு நாளா என்னோட  நல்ல விதமா பழகுறவங்க, நான் மரியாதை கொடுத்து பேசியும், என்ன தள்ளி வச்சாங்க, இவன அண்ணனா நினைச்சி கட்டி புடிச்சிட்டு போறாங்களே!” பாஸ்கர் வாயில் அடித்துக்கொள்ள மதியா தன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டாள் என்று பிரஜூவுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
 
தன்னை அனைவரும் ஒதுக்கிய பொழுது அக்ஷய் மாத்திரம் தான் வேலை கொடுத்து, மரியாதையாக நடாத்தினான். அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் அக்ஷய்க்கு காலம் முழுக்க விசுவாசமாக இருக்க கடமை பட்டவனாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த பிர்ஜு, அக்ஷையை பாதுகாக்கவும் எண்ணினான்.
 
அதி முக்கியமாக பெண்களிடமிருந்து. பிர்ஜு பொறந்தது வளர்ந்தது சாதாரண குடும்பத்தில்தான். ஐந்து சகோதரர்களோடு பிறந்ததால் என்னவோ அன்னை அதிகம் பாசம் காட்டி கண்ணே மணியே என்று செல்லம் கொஞ்சி சீராட்ட வில்லை. அதனாலயே அன்னையோடான உறவும் அவனுக்கு பாசப்பிணைப்பானதாக இருக்கவில்லை. கூட பிறந்த சகோதரிகளும் இல்லை.
 
அவனை பெற்ற தாயே அவன் பாலினம் மாறிய காரணத்தால் அடித்து வீட்டை விட்டு துரத்தியதால், பெண்களின் மீது அதீத வெறுப்புடையவனாக இருக்கும் பிர்ஜு மதியை இலகுவில் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தேக கண்கொண்டேதான் பார்கலானான்.
 
என்னமோ மதி அக்ஷையை ஆட்டிப்படைக்க வந்த ராட்சசியாகவே அவன் கண்களுக்கு தெரிய, வார்த்தைகளாலும், செய்கைகளாலும் மதியை காயப்படுத்தலானான். ஆனால் அதில் எல்லாம் ஒரு குழந்தை தனமே தெரிந்தது. மதியும் அவனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
 
அக்ஷையும் இதை பார்த்தவாறுதான் இருக்கின்றான்.  மதி ஒரு வார்த்தை கூறினால் பிரஜூவை வேலையை விட்டு அனுப்பி விடுவான். பிரஜூவை அழைத்து கண்டித்திருந்தாலே அவன் மதியை பேச மாட்டான். அதையும் செய்யவில்லை. அவன் குணம் தெரியுமானதால் மதி புரிந்துகொள்வாள் என்று விட்டு விட்டான். அதனால் அவர்களின் நடுவில் வராது இருந்தான். 
 
ஆனால் வீட்டில் நடப்பவைகளை அவன் கண்களுக்கும், செவிகளுக்கு விழாமலா போய்விடும்? அதை சரியாக புரிந்து கொண்டவன் அஜய்யின் முன்னால் ஒரு நாடகத்தையே அரங்கேற்றி விட்டான். 
 
 

Advertisement