“நீ வாம்மா..” நரசிம்மன் திரும்ப கூப்பிட, 

“பல்லவி.. குழந்தை ரொம்ப அழுகிறா.. வீட்டுக்கு போலாம்..” ரத்னாவும் மகளை கூப்பிட, பல்லவி இப்போதும் கணவனை தான் பார்த்தாள். அவன் எதுவும் பேசாமல் நிற்க,  

“வீடு பக்கத்துல தான்..” என்று அழும் மகளை சமாதானம் செய்த படி வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள். கங்கா, ரத்னா இருவரும் அவளின் பின் நடந்தே செல்ல, நரசிம்மன், பரணி காரை அவர்களின் பின்னால் உருட்டி கொண்டு சென்றனர். 

“நாம என்ன..?” விஷ்ணு கேட்க, ஈஷ்வர் நடந்து செல்லும் மனைவி, மகளை பார்த்தான். அவனின்  கால்கள் அவர்களின் பின் செல்ல, விஷ்ணு தள்ளி நின்றிருந்த அவர்களின் காரை சென்று எடுத்து வந்தான். 

பல்லவி வீட்டு கதவை திறந்து உள்ளே போக, உள்ளே மெல்லிய லைட் வெளிச்சம். மகளை இறக்கி விட, அவளோ பல்லவியை விடவில்லை. அவளை கையில் வைத்து கொண்டே சேரில் சிதறி இருந்த துணிகளை எடுத்து ரூமில் போட்டவள், டியூப் லைட் போட்டுவிட்டாள். 

“உட்காருங்க..” இருந்த இரண்டு சேரை எடுத்து போட, நரசிம்மன் மறுக்காமல் அமர்ந்து கொண்டார். ரத்னா, கங்கா இருவரும் நின்ற வண்ணம் வீட்டை சுற்றி பார்க்க, பரணி சுவற்றில் சாய்ந்து நின்று அனுவை  பார்த்தான். 

சிறுவயதில் அவனின் தோள் தொங்கிய பல்லவி தான் நினைவிற்கு வந்தாள். அவளுடனான அவனின் பந்தம் எப்போதும் ஸ்பெஷல் தான். அவர்களின் அப்பா மூர்த்தி எப்போதும் அமைதி. மனைவி, பிள்ளைகளுடன் அமர்ந்து பேசி சிரித்து அவர்களுடன் நேரம் செலவழிக்கும் சராசரி தந்தை இல்லை. சில அப்பாக்களை போல அப்பா எனும் மாயை பிம்பம் கொண்டவர். 

பிள்ளைகளிடம் என்ன என்றால் என்ன என்று மரியாதையான இடைவெளியுடன் இருக்கிறேன் எனும் பேரில் சொந்த குடும்பத்திடமே ஒதுங்கி இருப்பவர். அதற்கு முக்கிய காரணம் அவரின் அம்மா கோமதி தான். 

“அவங்களோட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு மூர்த்தி, அப்போதான் உன் பொண்டாட்டி, பிள்ளைங்களுக்கு உன்கிட்ட ஒரு  பயம் இருக்கும்.. இல்லை உன் தலைக்கு மேல ஏறி உட்கார்ந்திடுவாங்க..”  என்று திருமணமான புதிதில் இருந்தே ஓதிய மாபெரும் அம்மா அவர். மூர்த்தியும் அவரின் ரத்தம் அல்லவா. அதை விரும்பியிருக்க வேண்டும்.

அம்மாவின் போதனையை ஏற்று அதையே செய்ய, ரத்னா, பரணி, பல்லவி இடையே ஒரு நெருக்கம். அதிலும் பல்லவி, பரணி இடையே ஒருவித ஆழ்ந்த பாசம்மற்ற அண்ணன், தங்கையை போல சண்டை, சச்சரவு, வம்பு என்று என்றுமே அவர்கள் இருந்ததில்லை

அதற்கு அவர்களின் வயது வித்தியாசமும் ஒரு காரணம்இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட ஆறேழு வயது வித்தியாசம். அவளின் எல்லாம் முதலில் அண்ணனிடம் தான். அவனின் வழி தான் அம்மா, அப்பா என்று போகும்

அப்படிப்பட்ட தன்னிடம் கூட அவளின் காதலை பற்றி சொல்லவில்லை. அது தான் அப்படி என்றால் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகும் தன்னை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாத தங்கை மேல் கோவத்தோடு. வேதனையும்.

அவ்வளவுதான் எங்க பாசமா..? ஒரு சில வருட காதல் என்னுடைய இத்தனை வருட பாசத்தை முடிக்கும் என்றால்..?”  அண்ணனாக அதை இப்போதும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை

அதிலும் மகள் பிறந்த பிறகு இன்னும் இன்னும் பல்லவி மேல் கோவம், வருத்தம் கூடி கொண்டு தான் போனது. அவளையும் இப்படித்தானே பார்த்துக்கிட்டேன்.. மகளுக்கு செய்யும் போதெல்லாம் பல்லவியை நினைக்காமல் இருந்ததில்லை

அதன் பிரதிபலிப்பு தான் பல்லவியை பார்த்தவுடன் கை நீட்டவும் வைத்தது. ஆனால் அடித்த பிறகு அவனையே அவன் வெறுத்தான். இது தான் முதல் முறை அவளை அவன் அடித்தது. பல்லவியின் அதிர்ந்த பார்வை அவனுக்கு அவன் தவறை உணர்த்த, தங்கையையும், அனுவையும் பார்த்தான்.

ஈஷ்வர் உள்ளே வந்தவன், நரசிம்மனை பார்த்ததும் அப்படியே வெளியே வந்துவிட்டான். பல்லவி தேம்பிய மகளை சமாதானம் செய்து முன்னமே காய்ச்சி வைத்திருந்த பாலை வற்புறுத்தி குடிக்க வைக்கமகளின் மறுப்பு வெளியே வரை கேட்டது

ஒரு ஹால், கிட்சன், ஒரு சிறிய ரூம் என்று இருக்கும் சின்ன  வீட்டில அவர்களின் பேச்சு குரல் கேட்காமல் போகாது.  

என்னடா உன் ரத்தத்துக்கும் பால் பிடிக்காது போல.. வேணும்ன்னா பல்லவிகிட்ட சொல்லி பீர் ட்ரை பண்ண சொல்லலாமா..?” விஷ்ணு படு நக்கலாக கேட்டான்

உன்னை.. போய் தொலை..”  மகளின் பூரிப்பில் இருந்தவனுக்கு விஷ்ணு கிண்டல் பெரிதாக தெரியவில்லை. அவன் சொன்னதில் இருந்த ரகசிய உண்மை அவனுக்கு சிரிப்பை தான் கொடுத்தது

என்ன இவளும் அவங்க அப்பா மாதிரி பால் குடிக்கிறதில்லையா..?” கங்கா பெருமையுடன் மருமகளிடம் பேச்சை துவக்கினார்

அவர் திடீரென கிட்சன் வந்து பேச, பல்லவி லேசான தயக்கத்துடன்ஆமாம்..” என்றாள். அத்தை கூப்பிட்டா பிடிக்குமோ பிடிக்காதோ பயம் அம்மணிக்கு. உஷாராக கட் பண்ண, புரிந்து சிரித்த கங்கா

அத்தை கூப்பிடு.. ஒன்னும் சொல்ல மாட்டேன்..” என்றார். பின்னே நின்றிருந்த ரத்னாவிற்கு மனம் கொஞ்சம் சமன்பட்டது. அவர்கள் கேள்விப்படத்திற்கும், நடப்பதிற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. ஆனாலும்..? இன்னமும் மகளை அவர்களுடன் அழைத்து செல்லும் எண்ணம் மாறவில்லை.

பல்லவி மகளுக்கு பால் கொடுத்து வெளியே வர, “கிளம்பலாமா..?” என்றான் பரணி அவளிடம். பல்லவி புரியாமல் கணவனை தான் தேடினாள். வாசலுக்கு வெளியே நின்றிருந்தவன் மனைவி பார்வை  புரிந்து வாசல் கதவில் கால் மடித்து நின்றான்

அவனை பார்த்தும் பரணி இன்னும் சத்தமாக, “உன்னை தான் பல்லவி.. நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா கேட்டேன்..” என்றான்

தம்பி.. என்ன இது..?” கங்கா பேச வர

நாங்க முதல்லே கேட்டது தானே எங்க வீட்டு பொண்ணை எங்களோட அனுப்பிடுங்கன்னு..” பரணி உடனே அவரின் பேச்சை நிறுத்தினான்

சரி.. உங்க வீட்டை பொண்ணை நீங்க அழைச்சிட்டு போங்க..” என்றான் ஈஷ்வர். பல்லவி அவனை சந்தேகமாக பார்க்க

ஈஷ்வர் என்னடா பேசுற..?” கங்கா மகனிடம்  பாய்ந்தார்

ம்மா..  அவங்க கேட்கிறது சரி தானே.. அவங்க வீட்டு பொண்ணு அவங்களோட போகட்டும்ஆனா  நம்ம வீட்டு பொண்ணு நம்மளோட வரட்டும்..” அவனின் பார்வை மனைவியின் தோள் சாய்ந்திருந்த மகள் மேல் அழுத்தமாக பதிந்தது

ம்ப்ச்.. ஈஷ்வர் என்ன பேசுற நீ..?” கங்கா அதிருப்தியுடன் சொல்ல, பல்லவியோ கணவனை நேர் பார்வை பார்த்தாள். 

“என்னை பார்க்க உனக்கு என்னடி தகுதி இருக்கு..?” கணவன் பதில் பார்வை கொடுத்தான். 

“தம்பி.. இது நானும், நீயும் எடுக்கிற முடிவு இல்லை. அவங்க பேசட்டும்..” நரசிம்மன் பரணியிடம் அழுத்தமாக சொன்னவர், “நாம எல்லாம் ஹோட்டல் போய் சாப்பிட்டு வரலாம்..” என்று வெளியே நடக்க, பரணியால் அவரின் பேச்சை மீற முடியவில்லை. 

ஈஷ்வர் இப்படி அனு வைத்து பேசுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. “இந்த முறையாவது எங்களை நினைச்சு பார்ப்பன்னு நினைக்கிறேன்..” பல்லவியிடம் சென்று சொல்லியே வெளியே வந்தான். 

ரத்னா மகளின் தலை தடவியர், “உன்கிட்ட என்ன பேசன்னு கூட தெரியலடா.. வந்து நிறைய பேசலாம்..” அனு யாரிடமும் வராததால் அவளை பல்லவியிடமே  விட்டு எல்லோரும் கிளம்பினர். விஷ்ணு வீட்டிற்கு வெளியே அவர்களின்  காரிலே இருந்து கொண்டான். 

“வாடா சாப்பிட்டு வரலாம்..” கங்கா கூப்பிட, 

“அவங்களோட சேர்த்து எனக்கும் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க..” என்றுவிட்டான். 

இப்போது அந்த சிறிய வீட்டில் பல்லவி, ஈஷ்வர், அவர்களின் மகள் மட்டுமே. ஈஷ்வர் நடு ஹாலில் மனைவி, மகளை பார்த்தபடி கை கட்டி நிற்க, “அனு.. நீ இதை விளையாடு..” என்று மகளை பில்டிங் பிளாக்ஸ் முன் உட்கார வைத்த பல்லவி, அவன் முன் வந்து நின்றாள். 

பரணியின் அறையில் பல்லவியின் வலது கன்னம் லேசாக சிவந்திருக்க, ஈஷ்வர் கைகள்  அவளின் கன்னத்தை பிடிக்க பரபரத்தது. 

“அடங்குடா..” கைகளை இறுக்கமாக கட்டி கொண்டான். 

“பேசட்டும்.. இன்னிக்கு இவளை பிரிச்சுடுறேன்..”  மொத்த கோவத்தை தேக்கி மனைவியை பார்த்தான். 

அவளோ மிக மெதுவாக அவனின் இறுக்கமாக கட்டி கொண்ட கைகளை பிரித்தவள் முதலில்  லேசாக  அவனை அணைத்தாள். ஈஷ்வர் அதிர்ந்து நிற்க, அவளின் லேசான அணைப்பு.. நொடி செல்ல செல்ல மிகவும் நெருக்கமாக மாறி கொண்டே சென்றது. 

அணைப்போடு மட்டும் பல்லவி நிற்கவில்லை.  அவளின்  உதடுகள் அவனின் டாலரோடு சேர்ந்து அவனின் கழுத்திலும் அழுத்தமாக பதிய, ஈஷ்வர் இந்த உலகத்திலே இல்லை.