செவ்வானில் ஒரு முழு நிலவு 8

6395

நிலவு 8
ஈகைசெல்வன் சத்யநாதனின் வீட்டுக்கு செல்வதாக கூறிய பொழுது பாதுகாப்பாளர்களோடுதான் செல்லவேண்டும் இல்லையாயின் போகக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி இருந்தான் தயாளன்.
 
“நாம் இருவரும் போனால் போதாதா?” என்று ஈகை இரண்டு தடவை கேட்க,
 
“அந்த ஆளை என்னால் கடுகளவேனும் நம்ப முடியாது. அதனால் பாதுகாவலர்களோடுதான் போறோம். இல்லையென்றால் போக மாட்டோம். உன்னையும் போக விட மாட்டேன்” என்று தனது வார்த்தையில் உறுதியாக இருந்தான் தயாளன்.
 
வேறு வழியில்லாததால் ஈகை ஒத்துக்கொள்ள, தனது நண்பன் என்று ஒருவனை அழைத்து வந்து அறிமுகப் படுத்திய தயாளன்
 
“ஈகா இவன் என் காலேஜ் பிரென்ட் ஜெய் இப்போ ஹிந்தி சினிமால ஸ்டண்ட் மாஸ்டரா இருக்கான்”
 
“என்னடா சொல்லுற? என்னமோ இன்டலிஜென்ஸ் சர்வீஸ்ல இருந்து பாதுகாப்பு இல்லாம ஊருக்கு வர மாட்டேன்னு பில்டப்பு கொடுத்துட்டு போயும் போயும் பைட் மாஸ்டர கூட்டிட்டு வந்திருக்க” தயாளனின் காதில் ரகசியம் பேசினாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் ஈகை சத்தமாக சிரிக்க, தயாளனின் நண்பன் ஜெய் புரியாது முழித்தான்.
 
“நல்லவேளை இவனுக்கு கேக்கல. கேட்டிருந்தா… என் மூக்கை உடைச்சி நடையை கட்டி இருப்பான். ஆமா நீ பெரிய விவிஐபி பாரு. உனக்கு ப்ளாக் கேட்ஸ் பாதுகாப்பு கொடுக்க” தயாளனும் அதே போல் ரகசியமாக சொல்லி கிண்டல் செய்தவன்
 
“இவன் நான் சொல்றத கேப்பான். இவன் ஆளுங்க இவன் சொல்றத கேப்பானுங்க. நல்லா திறமையா நடிக்கக் கூடியவங்க சோ நம்ம திட்டம் ஜெ ஜெ”
 
“உனக்கு மட்டும் எங்கிருந்துதான் இப்படிப்பட்ட ஆளுங்க கிடைக்கிறாங்களோ” ஈகை தலையில் அடித்துக்கொள்ள
 
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ. அண்ணனும் தம்பியும் என்ன வச்சிகிட்டே ரகசியம் பேசினா எப்படி?” ஜெய் கொஞ்சம் கடுப்பாக
 
“அப்போ நீ கொஞ்சம் வெளிய இரு டா நாங்க பேசிட்டு கூப்பிடுறோம்” தயாளன் பட்டென்று சொல்ல
 
அவனை முறைத்த ஜெய் “நீ கூப்பிட்டதும் வந்தேன் பாரு என்ன சொல்லணும். எனக்கு என்ன வேலைவெட்டி இல்லனு நெனச்சியா?” கோபமாக வெளியேற போக
 
“ப்ரோ ப்ரோ கூல்” என்று ஈகை சமாதானப்படுத்த அறிமுக படலத்தோடு என்ன என்ன செய்ய திட்டமிருப்பதாக ஜெய் விளக்க
 
“பாடிகாட்ஸ் எல்லாம் ஒரே மாதிரி துணி போடணும், கன்னு வச்சிருக்கணும்”
தயாளன் அடுக்கிக்கொண்டே போக
 
“ஏதோ பண்ணித்தொல. என்ன மட்டும்  விடு” ஈகை சொன்னாலும் தயாளனின் செட்டப்பு ஈகைக்கு பெரிதும் கைகொடுத்தது.
 
வீட்டுக்கு வந்த உடனே! வரிசை கட்டி நின்ற வாகனங்களும், அடியாட்கள் போன்ற பாதுகாவலர்கள் புடைசூழ ஈகை நின்ற தோற்றம் தான் மருதநாயகம் பின் வாங்கினார் என்பது மறுக்க முடியாத
உண்மை. ஆறடியில் நூறு கிலோவில் இருந்த தயாளனின் நண்பன் ஜெய்யை ஈகை அடித்தது கூட ஈகையின் பலம் என்று அவருக்கு உணர்த்தி இருந்தது.
 
ஈகை தனியாக சந்தித்து ஜெய்யிடம் மன்னிப்பு கேட்க “என்ன சார் நீங்க, நான் இப்போ உங்க கிட்ட வேல பாக்குறேன். ஸ்டண்ட் மாஸ்டர் ஆனாலும் எனக்கு நடிக்க ஆச. ஸ்க்ரிப்ட் என்னனு தெரியல. ஆனாலும் த்ரில்லிங்கா இருக்கு. காலேஜ்ல தயாளன் உங்கள பத்தி மட்டும்தான் பேசுவான். உங்களுக்காக அவன் என்னவேனாலும் பண்ணுவான். அவன் என் தோஸ்த் சார் அவனுக்காக ஒரு அடி என்ன? எத்துணை அடி வேணாலும் வாங்கிக்கிறேன். அதெல்லாம் பழகின உடம்புதான்” என்று சிரிக்க ஜெய்யை கட்டியணைத்துக்கொண்டான் ஈகை.
 
ஈகையின் பின் புலம் பக்கபலமானது என்று மருதநாயகத்தை நம்ப வைத்தால் மட்டும் போதும் என்று ஈகை சொல்ல சரி என்ற தயாளன். அதன் படி காய்கள் நகர்த்த, ஈகை மற்றும் பாதுகாவலர்களாக நடிக்க வந்தவர்களுக்கும் பாதுகாப்பை கருதி தனியாக சமைத்துக்கொள்ளலாமா? என்று தயாளன் ஈகையை கேட்க,
 
“இது என் தாத்தன் சொத்து டா. நான் உக்காந்து சாப்பிடணும். எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அப்படியே நாம தனியா சமைச்சு சாப்பிட்டாலும் அதுல ஏதாவது கலந்திட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?” ஈகை புருவம் உயர்த்தி தயாளனை கேட்க
 
அவன் கேட்பதும் நியாயமாக தோன்ற ஜெய்யோடு சேர்ந்து ஸ்க்ரிப்ட் தயார் செய்தான். ஈகை எங்கே இருந்தாலும் அவன் கண்ணில் படும் படி நால்வர் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். அறையில் ஒருவன். கண்டிப்பாக இருக்க வேண்டும். இரவில் வேட்டை நாய்கள் வீட்டை சுற்றி காவல் இருக்க வேண்டும். இரவில் மூன்று பேர் காவல் இருக்க வேண்டும். இப்படி பல பல. திட்டங்களோடுதான் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தான் தயாளன்.
 
பார்கவி தோட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு ஈகை செல்ல போக “தனியாக எங்க போற இரு நானும் வரேன்” என்று தயாளன் கூற
 
“விளக்கு புடிக்கவா?” என்று கேட்டு கடுப்படித்தவன் “டேய் அண்ணா பாதுகாப்பு ஏற்பாடு பண்ணிடல்ல டிஸ்ரன்ஸ் மெயின்டைன் பண்ணிக்க அவளுக்கும், எனக்கும் நடுவுல மட்டும் வராத ப்ளீஸ். காரியம் கெட்டுடும் புரிஞ்சிக்க. நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல”
 
“சரி சரி போ” என்று அவனை அனுப்பியவன் ஜெய்யிடம் இரவு உணவு மேசையில் நடக்க வேண்டிய நாடகத்தை விவரித்தான். இது ஈகைக்கே தெரியாது.
 
ஈகை, தயாளன் மற்றும் ஜெய் சாப்பாட்டறையில் நடந்ததை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருக்க, காரியாலய அறையில் மருதநாயகமும், தன் இரு மகன்களோடு அதை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்.
 
ஈகையோடு தயாளன் சரிசமமாக சாப்பிட அமர்ந்து இருப்பதைக் கண்டு மருதநாயகம் “இவன் இவனுக்கு பி.ஏ தானே! எதற்கு சரிசமமாக உக்கார வச்சிருக்கிறான் என்ற யோசனையில்தான் வந்தார். ஈகை பார்கவியை பற்றி கேட்டதில் தயாளனான் மற்றும் ஈகையின் உறவை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு இருநூறு ஏக்கர் நிலத்தை பற்றி சிந்திக்கலானார்.
 
ஈகை சாப்பிட உணவை அள்ளி வாயில் திணிக்க முன் தயாளன் அவனை தடுத்ததும் மருதநாயகம் உட்பட அனைவரும் அவனை வித்தியாசமாகத்தான் பார்த்தனர். ஏன் ஈகையும் கூட. தயாளன் சாப்பாட்டை வாயில் திணித்து விட்டு தொண்டையை பிடித்துக்கொண்டு இருமியதும் ஜெய்யின் கண்ணசைவில் மற்ற பாதுகாப்பு நடிகர்கள் அனைவரும் துப்பாக்கியோடு மருதநாயகம் உட்பட குடும்பத்தாரை சூழ்ந்து தலையில் ஆளுக்கொரு துப்பாக்கியை வைக்க இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு அவர்கள் நின்றவிதம், அதிலும் எச்சில் கையேடு நின்ற விதம், இன்னும் கண்ணுக்குள் வர விழுந்து விழுந்து சிரிக்கலாயினர் தயாளன், ஈகை மற்றும் ஜெய்.  
 
தயாளனுக்கு என்னாச்சு என்று ஈகை பதற தண்ணீரை எடுத்து அருந்தியவன். “மீன் முள்ளு சிக்கிருச்சு” போல என்று சொல்ல
 
“நீ சாப்பிட்டது அப்பமும் பாயாவும் தானே! நீ சைவம் தானே! இன்னைக்கி மீன் சமைக்கவே! இல்லையே!” கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி  தான் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி சரிவதையும் கையால் சரி செய்ய முடியாமல் தலையை உயர்த்தி சரி செய்தவாறு வேதநாயகி கூற
 
மாட்டிக்கிச்சே! மாட்டிக்கிச்சே! மாட்டிக்கிச்சே! மாட்டிக்கிச்சே! தயாளனின் மைண்ட் வாய்ஸ் பாட கெத்தை விடாது “அட ஆமா. என்ன சிக்கினதுனே! தெரியல. தம்பி சாப்பிட முன்னாடி நான் சாப்பிடணும் இது தமிழ்செல்வன் உத்தரவு. தம்பிக்கு உணவுல பாய்சன் வச்சிருந்தா? தொண்ட இறுகினதும் பாய்சன்னு நினைச்சிதான் இவங்க உங்க தலைல கன்ன வச்சிட்டாங்க” ஒன்றுமே நடக்காதவாறு தயாளன் மருதநாயகத்தை ஏறிட்டு கூற
 
“ஓவரா பண்ணுறானே” ஈகையின் மனம் தயாளனை வசை பாட
 
ஈகையை திரும்பியும் பாராதவன் “தம்பிக்கு ஒன்னுனா தமிழ்செல்வனுக்கு நான்தான் பதில் சொல்லணும்” என்று விட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க
 
தொண்டையடைத்தது போல் அவன் செய்தது நாடகம் என்று புரிந்து கொள்ளாத அளவுக்கு மருதநாயகம் முட்டாள் கிடையாதே! ஈகையின் மீது கை வைத்தால் நீயும் உன் குடும்பமும் காலி என்று மறைமுக மிரட்டல் என்று புரிய “ஓஹ்.. அதான் இவன சரிக்கு சமமா உக்கார வச்சிருக்கானா. அதானே! பார்த்தேன்” மருதநாயகம் புன்னகைத்தார்.
 
“உனக்கு ஒண்ணுமில்லையே! அப்போ இவங்கள இந்த துப்பாக்கியை எடுக்க சொல்லலாமே! நாங்களும் சாப்பிடணும்” பயந்தவாறே காதம்பரி சொல்ல.
 
ஈகை ஜெய்யை பார்த்து “மூவ்” என்றதும் அவனுடைய ஆட்களோடு சற்று நகர்ந்து நின்றான் ஜெய்.
 
“என்னங்க இது யாரு இந்த தம்பி கொள்ளைக் கூட்டத்து தலைவன் போல அடியாட்களோடு இருக்குறாரு. பயமா இருக்குங்க” உமையாள் கணவனிடம் மெதுவாக கூற  
 
விக்னேஸ்வரனும் மிரண்டுதான் போய் இருந்தான். மதியம் மருதநாயத்திடம் தான் ஈகையை வெட்டி வீசுவேன் என்று வீராப்பாக பேசியது நினைவில் வர “அவனின் சுண்டு விரல் வெட்டுப்பட்டாளே! நம்ம தல துண்டாகும் போல இருக்கே! இதுல அந்த பொண்ணு இவன ஏமாத்தி நம்ம சொத்தை எழுதி வாங்கி நடக்குற காரியமா இது” மனைவி சொன்னது காதில் விழவே இல்லை. அவன் மனதில் இருநூறு ஏக்கர் நிலம் ஈகையிடமிருந்து கிடைக்காது என்ற எண்ணம் உருவானது.
 
“வாவ். திரில்லர் மூவி பார்த்த மாதிரி இருக்கு. ஈகா. உங்களுக்கும் கன்னெல்லாம் ஹாண்டல் பண்ண தெரியுமா?” ஹரிணி குலைந்தவாறு கேக்க
 
“என்ன இப்படி கேட்டீங்க? தம்பி துப்பாக்கி சுடுறது, அம்பு விடுறது, குதிரை ஓட்டுறது இதுல எல்லாம் கலந்துக்கிட்டு பாஸ்ட் ப்ரைஸ் வாங்கி இருக்காரு” தயாளன் ஈகையின் புகழ் பாட
 
“ரொம்ப முக்கியம்” ஈகை முணுமுணுக்க கப்சிப் என்றானான் தயாளன்.
 
“வாவ். ரியலி. வெறி நைஸ். எனக்கும் துப்பாக்கி சுட சொல்லிக்கொடுக்குறீங்களா?”
 
“வாய் நோட். ஜெய்” ஜெய்யை அழைத்தவன் ஹரிணிக்கு பிரீ டைமில் கிளாஸ் எடுக்கும் படி கூற முகத்தை சுளித்தவள்
 
“என்ன ஈகா நீங்க சொல்லி கொடுப்பீங்கன்னு பார்த்தா, யாருக்கோ சொல்லுறீங்க”
 
“ஓஹ்.. சாரி சிஸ்டர். அண்ணன் வாங்கின நிலத்துல நாளைக்கே வேலைய ஆரம்பிக்க சொல்லி இருக்கான் சோ ஐம் கோயிங் டு வெரி பிசி” என்று மருதநாயகத்தை பார்க்க அது அவருக்குமான தகவல் என்று கூறுவதை புரிந்து கொண்டவரின் கண்கள் சிவந்தது.
 
“இவன சாதாரண வில்லனா நினைச்சிட்டேனே! என்னால இவன் கூட மோத முடியாது போல இருக்கே! பார்கவி எப்படியாவது கரெக்ட் பண்ணனும்” ஹரிஹரனின் மனம் அவனை கூறு போட்டுக்கொண்டிருக்க,
 
“யாரிவன்? பார்க்க படு கேசுவலா இருக்கிறான்.  சாதாரணமானவனா தெரியல? லேசு பட்டவன் இல்ல. ஏதோ திட்டத்தோடுதான் வீட்டுக்குள்ள வந்திருக்கான். தாத்தாவும் இவன அந்த நிலத்துக்காகத்தான் வீட்டுல வச்சிருக்குறாருனு தெரியுது. இவன் திட்டம் என்னானு புரியலையே! ஹரிணி நெருங்க முட்பட்டாலும் சிஸ்டார்னு ஒதுக்கி வைக்கிறான். குடும்பத்தார் இருக்குறதாலையா? இல்ல அவன் குணமே! அதுவா? பார்கவி பத்தியும் சாதாரணமாத்தான் விசாரிச்சானா? நான் தான் குழம்பினேனா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் மாதேஷ்.
 
ஒருவாறு சாப்பிட்டு முடியவும் தன் படை சூழ மாடி ஏறி செல்லமு ஈகைச்செல்வனை ஹரிணி ஆசையாக பார்த்திருக்க, மற்ற பெண்கள் பீதியோடு பார்த்திருக்க, ஹரிஹரனும் மாதேஷும் யோசனையாக பார்த்திருக்க, மருதநாயகம் இரு மகன்களுக்கும் சைகை செய்தவாறு காரியாலய அறைக்குள் சென்றார்.
 
“வாரத்துக்கு ஒருக்கா இந்த மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட் எக்சிகியூட் பண்ணனும் டா ஜெய். ரொம்ப இன்டர்ஸ்டிங்கா இருக்கு” தயாளன் குஷியில் குத்தாட்டம் போட
 
“ஆமா தொண்டையடைச்சது உனக்கு. எதுக்கு கன்ன வச்சாங்க? எனக்கு ஒன்னுனாதானே! கன்னு வெளிய வரணும்” ஈகை சந்தேகம் கேப்பது போல் அண்ணனை வம்பிழுக்க
 
“ஏன் டா உனக்கு வச்சத தான் நான் சாப்பிட்டேன். அப்படினா உன்னைத்தானே கொல்ல பார்த்திருக்காங்க, எனக்கு ஏதாச்சும் ஆனா கன்ன எடுத்து அவனுகள பட்டு பட்டுனு போட்டிருக்கணுமா இல்லையா?”
 
“அப்படிங்குற? ஆனாலும் நீ ஓவரா நடிக்கிற எது பண்ணாலும் சொல்லிட்டு செய்டா. அவங்க முன்னாடி அண்ணான்னு கூப்பிட்டு நானே நம்மள காட்டி கொடுத்துட்டு போறேன்” ஈகை சிரிக்க,
 
“யாரு நீ?” கிண்டலாக ஈகையை பார்த்தவன் நொடியில் முகம் மாறி “எத்துணை வருஷ தவம் இது? என் உயிர் போற சூழ்நிலை வந்தாலும் அவனுகள அழிக்காம நம்ம யாருனு அவனுக்களுக்கு தெரிய கூடாதுடா ஈகா..” கோபமும், ஆத்திரமும் கலந்து தயாளன் கத்த அவன் வாயை பொத்தினான் ஈகை.
 
“டேய் கத்தி நீயே காட்டி கொடுத்துடுவ போல இருக்கே! சரக்கடிக்கலாமா?” தயாளன் எமோஷலானதும் அவன் மனதை மாற்ற எண்ணி அனுமதி கேட்க,
 
“என்ன விளையாடுறியா? வந்த வேல முடியிற வரைக்கும் நோ சரக்கு. போய் படு காலையிலையே எந்திரிக்கணும்” தம்பியை துரத்த, ஈகையும் அண்ணனை முறைத்தவாறு எழுந்து சென்று கட்டிலில் விழுந்தான்.
 
இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்தவன் விட்டத்தை பாத்திருக்க அவன் கண்களுக்குள் பார்கவி வந்து நின்றாள். அவனால் அவளை புரிந்துகொள்ள முடியவில்லை.
 
“இது அவள் வீடு. உரிமையாக இருக்க வேண்டிய இடத்தில் ஏன் ஒதுங்கி இருக்கிறாள் என்று புரியவில்லை”
 
“என்னது அவள் வீடா? இது என் வீடு” ஈகை தன் மனதிடம் சொல்ல
 
“சரி, சரி அவ தாத்தா வீடுனு
நினைச்சி தானே வந்தா உரிமையா இருக்க வேண்டியதுதானே!”
 
“அவ எப்படி இருந்தாலும் உனக்கென்ன? மருதநாயகத்துக்கு பேத்திமேல கொள்ள பாசம்னு தெரிஞ்சிபோச்சில்ல. நீ வந்த காரியத்தை பண்ணி முடி”
 
“அந்த லூசு ஹரிணி வேற நடுல வாரா அவளால ஏதும் பிரச்சினை வராம இருக்கணும்”
 
“இதெல்லாம் எதிர்பார்த்துதான் வந்த. சமாளிபிகேஷன் பண்ணிதான் ஆகணும் ராசா”
 
“காலைல காலேஜ் போகத்தான் வெளியே வருவாளா? அப்படி வந்தா? மாதேஷ் கூட இருப்பானே! பேச முடியாம போய்டுமே! பகல்ல வீட்டுல வேலையாட்கள், பாட்டி, உமையாள் ஆன்டி தவிர யாரும் இருக்க மாட்டாங்க, அவங்களும் அடிக்கடி கோவிலுக்கு போறதா தயாண்ணா சேகரிச்சு தகவல் சொல்லுது. காலேஜ் இல்லாத நாட்கள்ல பார்கவி பாட்டி கூட இருப்பா. நேத்து மாதிரி”
 
“அப்போ அந்த மாதிரி நாட்களை தேர்ந்தெடு”
 
“மாசத்துக்கொருக்கா வந்தா? நா கிழவனாகும் வரைக்கும் சைட் மட்டும்தான் அடிக்க வேண்டி இருக்கும்”
 
மனதோடு சண்டை போட்டவாறே கண்ணயர்ந்தான் ஈகைசெல்வன். ஆனால் அவனிடம் பார்கவியை கொண்டுவந்து சேர்க்க காரியாலய அறையில் கிழட்டு குள்ளநரி திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதை அவன் அறியவில்லை.
  
“அப்பா அந்த ஈகைசெல்வன் லேசு பட்டவன் போல தெரியல. அவனை ஒன்னும் பண்ண முடியும்னு தோணல” தங்கதுறை கோபமாக தந்தையிடம் கூறிக்கொண்டிருக்க,
 
“அவன் மேல சின்ன கீறல் விழுந்தாலும் நம்ம தல உருளும். எனக்கென்னமோ நீங்க அந்த பார்கவி பொண்ண வச்சி போட்ட திட்டம் கூட சொதப்பிடும்னுதான் தோணுது. பேசாம அவள அனுப்பிடுங்க. தண்டமா அவளுக்கு எதுக்கு செலவு பண்ணனும்” விக்னேஸ்வரனும் பேச மருதநாயகம் அமைதியாக இருந்தார்.
 
தந்தையின் அமைதி அண்ணன், தம்பி இருவருக்குமே! எரிச்சலை உண்டு பண்ண அவரை திட்ட முடியாமல், பல்லைக் கடித்து அவர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தந்தையை முறைத்துக்கொண்டிருந்தனர் இருவரும்.
 
“பார்கவி யாரு?”
 
மருதநாயகம் கேட்ட கேள்வியில் எரிச்சலாக அவரை பார்த்த விக்னேஸ்வரன் “அவ யாரா இருந்த என்ன? எங்க ஜாதியும் இல்ல சொந்தமும் இல்ல. அவள அனுப்பிடுங்க”
 
“நீங்க ரெண்டு பேருமே என் மகன் எங்குறது எனக்கு சந்தேகமாகவே இருக்கு. கொஞ்சமாச்சும் அறிவா சிந்திங்கடா. அந்த பயல காதலிச்சு ஏமாத்தி அந்த பார்கவி பொண்ணு அவன் சொத்து பத்திரத்தோட காசையும் சுருட்டிக்கிட்டு காணாம போய்டுறா”
 
“விளங்கிடும். அவன் எங்க மொத்த குடும்பத்தையும் கொன்னு குழிதோண்டி புதைச்சிடுவான்” தந்தை வயதாகி விட்டார். எதோ உளறுகிறார். இனி அவரால் பிரயோஜனம் இல்லை. என்று தங்கதுரை நொந்து போய் சொல்ல
 
“அதான் இல்ல. ஜானகியை மாதிரியே! இருந்ததால. அனாதையா இருந்த அவள பாசமா இங்க கூட்டிட்டு வந்து பார்த்துக்கிட்டேன். இப்படி அவ திருடியா, ஏமாத்துக்காரியா இருப்பான்னு எனக்கு தெரியல”
 
“என்ன சொல்லுறீங்க” தங்கதுரை கேட்க,
 
“அவ அப்பா இறந்ததை பார்த்து. அவ அம்மாக்கு உடம்பு முடியாம போகவும் தனக்கு யாருமில்லன்னு கதறி அழுதவளை அங்கேயே விட்டுடு வந்திருக்கணும். அப்படி பண்ணாம வந்ததுக்கு. அவ எனக்கு நல்ல பேரு வாங்கி கொடுத்துட்டா” மருதநாயகம் தன் நாடகத்தை அரங்கேற்ற,
 
“என்ன உளறுறீங்க” விக்னேஸ்வரன் கடுப்பாக,
 
“பின்ன என்னடா… அவ என்ன என் சொந்த பேத்தியா? அவன் கிட்ட இருந்து அசல் பத்திரத்தை அவ எனக்கு கொண்டு வந்து கொடுத்ததும். அவள கொன்னுடுவேன். இவன் அவளையும் காணாம, பத்திரமும் தொலஞ்சி போய் பேயாட்டம் ஆடுவான்ல. அப்போ சொல்லுவேன் அவள பத்தி. அவ என் பேத்தியே இல்ல. ஜானகி மாதிரி இருந்ததால கூட்டிட்டு வந்தேன். இப்படி பண்ணுவான்னு தெரியலன்னு. அவ அம்மாவ கொண்டு வந்து அவன் முன்னாடி நிறுத்துவேன். விசாரிப்பான்ல. நான் சொல்லுறதுதான் உண்மைன்னு தெரியவரும்ல. ஓடிப்போனவள தேடி இவன் அலையும் போது. நிலத்தை வித்து காசாக்கிடலாம். அவ நிலத்தை வித்துட்டான்னு கதையை கட்டிடலாம். எப்படி?” கர்ஜனையாக தன் திட்டத்தை சொல்லி முடித்தார் மருதநாயகம்.
 
“ஏன் பா அந்த நிலத்த பெறத்தான்! இவ்வளவு போராட்டம். அத விக்கணும்னு சொல்லுறீங்க?” தர்மதுரை சந்தேகமாக கேக்க,
 
“அறிவு கெட்டவனே!  சொத்தெல்லாம் உன் மாமா சத்தியநாதன் பேர்ல இருக்கு. நம்மாளால ஒன்னும் பண்ண முடியாது. இவன் பேர்ல இருக்குறத ஆட்டைய போட்டு காசாக்கி நமக்குன்னு சொந்தமா வாங்கிக்கலாம்டா. வேணும்னா கொஞ்சம் நாள் கழிச்சி அதே! நிலத்த வாங்கலாம். என்ன நான் சொல்லுறது” என்று சத்தமாக சிரிக்க,
 
“அப்பா… வயசானாலும் உங்க சாணக்கியத்தனம் இன்னும் அப்படியே தான் இருக்கு. உங்கள யாராலும் அசைக்க முடியாது” தங்கதுரை உணாச்சி பெருக்கில் அவரை கட்டித்தழுவி இருக்க, விக்னேஸ்வரனும் அணைத்திருந்தான்.
 
“தள்ளி இருங்கடா… இதெல்லாம் ஒழுங்கா நடக்கணும்னா பார்கவி அந்த ஈகைசெல்வன விழுந்து விழுந்து உபசரிக்கணும். துறை ஹரிணியை அவன் பக்கம் நெருங்க விடாம பாத்துக்க” 
 
ஹரிணியின் பேச்சும் பார்வையும் சரியில்லை என்று புரிந்தே மகனுக்கு எச்சரிக்கை செய்தார் மருதநாயகம்.
 
“அவனே! அவள ஒதுக்கி வைப்பான்” தங்கதுரை கூற
 
“கண்டுக்காம விட்டுடாத, மாறி எரிஞ்சதுன்னா, அவ என் பேத்தின்னு பார்க்க மாட்டேன். வெட்டிடுவேன்” பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்காதேன்னு சொல்லிவிட்டேன். எறிஞ்சா அது உன் பொறுப்பு என்று சொல்லி விட்டு தூங்க சென்றார் மருதநாயகம்.