Advertisement

நிலவு 26

 
ஈகையும் தயாளனும் ஆலையினுள் நுழைய மருதநாயகம் ஒரு கதிரையில் அமர்ந்திருக்க, விக்னேஸ்வரனும், தங்கதுரையும் இருபுறம் நின்றிருந்தனர்.
 
“எங்க டா என் அம்மா?” தயாளன் கத்தியவாறு மருதநாயகத்தை நெருங்க அவன் கையை பிடித்து தடுத்த ஈகை குறிப்பிட்ட இடைவெளி விட்டு நின்றுகொண்டு தயாளனையும் நிறுத்திக்கொண்டான்.   
 
“அட இவ்வளவு சீக்கிரத்துல உன் அம்மாவ தூக்கினது நான்தான்னு கண்டுபிடிச்சு வந்துருக்கியே!” மருதநாயகம் கிண்டலாக சிரிக்க,
 
“நாங்க கண்டு பிடிக்கணும்னுதானே! இந்த ஆலையிலிருந்து போன் பண்ண” ஈகையும் அதே! கிண்டல் தொனியில் கேக்க,
 
“இவன் கொழுப்பு குறையவே! இல்ல. நாலு ரௌடிய கூட வச்சு இருந்தா? நீ எல்லாம் தாதாவாக முடியுமா? ஒழுங்கு மரியாதையா சொத்தெல்லாம் அப்பா பேருக்கு எழுதிக்கொடுத்துட்டு உன் அம்மாவ கூட்டிட்டு போய்டு” தங்கதுரை எகிற
 
“உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும். எங்க வீட்டுக்குள்ளேயே! எங்க கண்ணுமுன்னாடியே! வந்து எங்க கிட்டயே! நடிச்சிருக்க” விக்னேஸ்வரன் கத்த
 
“என்னது உங்க வீடா?” புருவம் உயர்த்திக் கேட்ட ஈகை விக்னேஸ்வரனை கிண்டலாக பார்க்க ஈகையை முறைத்தான் அவன். 
 
உன் பார்வையெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிடாது என்று அவனை பார்த்த மருதநாயகம் “இவன நாம எப்படி கண்டுபுடிச்சோம்னு இன்னும் சொல்லவே இல்லல”
 
“அதான் நீ கல்யாணம் பண்ணி இருக்கியே! பார்கவி அவ அம்மா சென்னைலதான் இருக்கா.. அட அவ எங்க தங்கச்சி பொண்ணே! இல்ல. அந்த விஷயம் உனக்கு தெரியாதில்ல” விக்னேஸ்வரன் எள்ளலாக கூற
 
ஈகை நகைக்கவும் “அப்போ உனக்கு தெரிஞ்சிருக்கு. எப்படித் தெரியும்” மருதநாயகத்தின் புத்திரர்கள் யோசனையாக பார்க்க மருதநாயகமோ! “பார்கவி சொல்லி இருக்க மாட்டாளே!” என்று வாய் விட்டே கூறினார்.    
 
“அவ உங்க பேத்தியா இருந்தா? கல்யாணம் பண்ணி இருக்கவே! மாட்டேன்” ஈகை சிரிக்க
 
“என்ன சொல்லுற? உனக்கு எப்படித் தெரியும்” மருதநாயகம் பதட்டமாக கேட்டார்.
 
“அவ யார் பொண்ணுன்னு சென்னா இன்னும் டென்ஷன் ஆவிங்களே! ஆனா பாருங்க சொல்லித்தானே! ஆகணும். அவ ஜானகி பொண்ணு. என் அத்த ஜானகி பொண்ணு” குரலில் கேலியும் கிண்டலும் வழிய சொன்னவன் கோபம் கணக்க முடித்தான்
 
“வாய்ப்பில்லை. வாய்ப்பே! இல்ல. ஜானகியையும் அவ புருஷனையும் நான் தான் என் கையாலையே! கொன்னேன்” மருதநாயகம் தன் வலது கையை விரித்துக் காட்ட
 
“அத உங்க வாயாலையே! ஒத்துக்கிட்டதுக்கு தாங்க்ஸ். நீங்கதான்  கொலை பண்ணிருப்பீங்கனு இருந்த டவுட்டு கிளியர் ஆச்சு” மருதநாயகத்தை அடித்தே! கொல்லும் வெறி இருந்தாலும் கையைக் கட்டிக்கொண்டு அவரை அமைதியாக பார்த்தான் ஈகை. 
 
“எங்ககிட்ட வேல செஞ்ச நாயி அவளை இழுத்துட்டு ஓடி இருக்கான். அவன் காலுளையே! நான்தான் வெட்டினேன்” தங்கதுரை கூற அவனையும் அமைதியாக பார்த்தவன்
 
“அவங்கள மட்டுமா கொன்னீங்க? என் குடும்பத்தையும் திட்டம் போட்டு ஆக்சிடன்ட் பண்ணி கொன்னீங்களே!” ஈகை சொல்ல
 
“என்ன பிரயோஜனம்? உன் தாத்தன் சொத்தும் என் கைக்கு வரல, உன் அப்பன் சொத்தும் என் கைக்கு வரல”

உச்ச கொட்டிய மருதநாயகம் “முதல்ல உன் தாத்தன தான் கொன்னேன். அதுவும் அன்னைக்கி அந்தாளுக்கு கொஞ்சம் நெஞ்சு வலின்னு தோட்டத்துல மயங்கி விழுந்துட்டதா கேள்விப்பட்டேன். அப்பொறம் வீட்டுக்குப் போய் அவரை பார்க்குற சாக்குல தலையணையை முகத்துல அமுக்கி” குரூரமாக சிரித்தார் மருதநாயகம்

அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான் ஈகை. தாத்தா சத்தியநாதன் இயற்கையை மரணம் எய்தார் என்று நினைத்திருக்க அவரையும் இந்த மருதநாயகம்தான் கொன்று இருக்கிறார். அவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் கைமுஷ்டியை இருக்க, தயாளன் அவன் கையை இறுக்கிப் பிடித்தான்.


 
“அத விடுங்கப்பா… சொல்லவந்ததை சொல்ல விடுங்க” என்ற விக்னேஸ்வரன் தொடர்ந்தான். அந்த பார்கவியோட அம்மாவ திடிர்னு காணோம். அவளை காணாளனு தேடிப்போனா இதோ இவனோட அம்மா கோவிலுக்கு போய் வந்துகிட்டு இருந்தா… இவ எங்க இங்கனு அவ பின்னாடியே போய் வீட்டுக்குள்ள நுழைஞ்சா சுவர்ல என்னாம் பெரிய போட்டோ. குடும்பமா எடுத்து வச்சிருக்கீங்களே! போட்டோ அத பார்த்ததும் எல்லாம் புரிஞ்சிருச்சு. அப்படியே அவ கன்னத்துல ரெண்டு அப்பு அப்பி வண்டில தூக்கிப் போட்டு ஊருக்கு வந்துட்டேன்” விக்னேஸ்வரன் சிரிக்க பல்லைக் கடித்தான் தாயாளன்.
 
“அம்மாவ கடத்திட்டோம்னு சொல்ல போன் பண்ணா ரெண்டு பேரும் அப்படி பிசியா என்ன. அதான் அம்மாவ காணலையேன்னு துடிக்கட்டும். அப்பொறம் தேடட்டும்னு இருந்துட்டோம். அப்பொறம் பாவம் பார்த்து போன் போட்டேன். அதுவும் யாரோ மாதிரி பேசி கொஞ்சம் டென்ஷன் பண்ணலாமேன்னுதான் அப்படி பேசினேன்” என்றான் தங்கதுரை.
 
“போதும்டா வீண் பேச்சு. இதோ சொத்து பத்திரம் சீக்கிரம் கையெழுத்துப் போடு” மருதநாயகம் உறும
 
“உங்க மனைவியும், ரெண்டாவது மருமகளையும் வீட்டுலையே! விட்டுட்டு வந்திருக்கீங்க போல” ஈகை நிதானமாக கேக்க
 
“அவங்கள கொன்னுடுவேன்னு மிரட்டிரியா? கொல்லுறதுன்னா தாராளமா கொன்னுடு. அவளாலதான் எனக்கு உன் அப்பன் சம்பாதிச்சத அடைய முடியல. தாத்தன் சொத்தையும் அடைய முடியல. இவன் பொண்டாட்டி ஒண்ணுமில்லாதவ அவ செத்தா யாருக்கும் நஷ்டமில்லை” என்றவர் கையெழுத்து போடுமாறு கண்ணால் சைகை செய்ய
 
“ஈகைச்செல்வன் என்று போடவா? இல்ல தமிழ்ச்செல்வன் என்று போடவா?” ஈகை நிதானம் தவறாது கேட்டான்.
 
“ஓஹ்…  உன் பேர் தமிழ் இல்ல” என்றவர் மீண்டும் கையெழுத்து போடுமாறு கேட்க
 
“என் சொத்தை எழுதி கொடுத்துட்டு உங்க சொத்தை பாத்துக்கிறேன்” ஈகை புன்னகைக்க
 
“என்ன சொல்லவர” மருதநாயகம் யோசனையாக கேட்க
 
“என் இன்னொரு பெயர் தமிழ்செல்வன்ன்னு சொன்னேன் புரியலையா?” புன்னகை மாறவே! இல்லை.
 
“ஓஹ்.. என் ஆலைகள்ல பங்குதார் வெளிநாட்டுல இருக்கிற தமிழ்ச்செல்வன் அது நீயா? ஆனா முப்பது வீதம்தானே!” என்றவர் சிறிதுநேரம் யோசித்துவிட்டு “சேகரன் உன்கிட்ட அவன் பங்கை வித்தான். அப்போ என் ஆலைகளை உன்னால ஆக்கிரமிப்பு செய்ய முடியுமில்ல” சரியாக கணித்தார்.
 
“அத எழுதிக்கொடுக்க சொல்லுவீங்களே! அதுக்கும் பெபர்ஸ் இருக்கா இதுல” என்றவன் பத்திரங்களை புரட்டிப் பார்த்து “இல்லையே! அப்போ அதுக்கும் சேர்த்து பெபர்ஸ் தயாரிங்க” என்றுவிட்டு கையிலிருந்த பத்திரங்களை கிழித்தெறிந்தான்.
 
“டேய்” என்று கத்தியவாறு எழுந்த மருதநாயகம் ஈகையை அடிக்க கையோங்க
 
“கூல் கூல் மருதநாயகம். முதல்ல உக்காருங்க. பொண்டாட்டி செத்தா பரவால்ல, மருமக செத்தா பரவால்ல சொத்துதான் முக்கியம்னு இந்த என்பது வயசுலயும் நினைக்கிறீங்க. நூறு வருஷம் வாழுவீங்கன்னு எண்ணமா? அப்படியே வாழ்ந்தாலும் அது ஜெயில்லதான்”
 
“என்ன விளையாடுறியா? இவன் அம்மா எங்ககிட்ட இருக்கா மறந்துட்டியா?” விக்னேஸ்வரன் கத்த
 
“என் அம்மாதானே! எங்களை இங்க வரவழைச்சு அவங்கள பக்கத்து ஆலைல வச்சிருக்குறதும் தெரியும். அவங்களையும் அந்த கேயார் டேகரையும் காப்பாத்தியாச்சு” தயாளன் கண்ணடிக்க
 
“அப்போ வந்ததிலிருந்து எங்க என் அம்மாக்கு கத்தினது” தங்கதுரை எகிற
 
“இப்போ உங்க அப்பா கொடுத்தாரே! வாக்கு மூலம் அதுக்குதான்” என்றான் ஈகை.
 
“வாக்குமூலமா? என்ன உளறுற?” மருதநாயகம் எகிற
 
“பின்ன பண்ணுறதெல்லாம் கொலை. போலீஸ் வராம அவார்டாங் கொடுப்பாங்க” ஈகை சொல்ல தீரன் தன் டீமோடு உள்ளே நுழைந்தான்.
 
“அரெஸ்ட் தேம்” என்றவன் ஈகைக்கு தலையசைக்க, ஈகையும் தயாளனும் தீரனிடம் விடை பெற்று பூவிழி மற்றும் பூவிழியின் கேயா டேகரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
 
இந்த ஆலையில்தான் மருதநாயகமும் புத்திரர்களும் இருக்கிறார்கள் என்று அறிந்த உடனே! பூவிழியையும் அங்குதான் வைத்திருப்பார் என்ன நிச்சயம் என்று ஈகை கேட்க,
 
“எல்லா ஆலையிலையும் தேடுதல் வேட்டை நடக்குது ஈகை. பூவிழி அம்மாவ கடத்தின கேஸ் ரொம்ப ஸ்ட்ரோங் இல்ல. அது உங்களுக்கே தெரியும். நீங்க ரெண்டு பேர் மட்டும் உள்ள போங்க இதோ இந்த மைக், மற்றும் கேமராவ உங்க ஷர்ட்டுல பொருத்திட்டு போங்க. நிதானம் தவறாம பேசி மருதநாயகத்துக்கிட்ட இருந்து வாக்குமூலம் பேரப்பாருங்க. அவர் செய்ததா ஏதாவது ஒன்னு ஒப்புக்கொண்டா போதும் அவரை அரெஸ்ட் பண்ணலாம்” என்றிருக்க அதன்படியே பேசி மருதநாயகத்திடமிருந்து வாக்குமூலம் பெற்ற மறுநொடி தீரன் மற்றும் போலீஸ் படை உள்ளை நுழைந்து அவர்களை அரெஸ்ட் செய்திருந்தது.
 
வீட்டுக்கு வந்த ஈகைக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக ஹரிஹரன் பார்கவியை வீடு புகுந்து கடத்தப் பார்த்ததாகவும், தக்க சமயத்தில் மாதேஷ் வீட்டுக்கு வந்ததால் அவனை அடித்து தூணில் கட்டிப்போட்டிருப்பதாகவும் கூறினாள் உமையாள்.
 
“நீங்க எல்லாம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?” கத்தினான் ஈகை.
 
“நானும் பார்கவியும் தோட்டத்துல பேசிகிட்டு இருந்தோம். அத்த தூங்கிகிட்டு இருந்தாங்க, இதோ இவர் பொண்டாட்டி குழந்தையோட உள்ள இருந்தா” தயாளனை காட்டி உமையாள் கூறிக்கொண்டிருக்கும் பொழுதுதான் அவள் கையில் சிராய்ப்பு தெரிய
 
“அம்மாவ தள்ளி விட்டு பார்கவி இழுத்து வண்டில ஏத்த பார்த்தான்” என்றவாறு முதலுதவிப் பெட்டியோடு வந்தான் மாதேஷ்.
 
தூணில் கட்டியிருந்த ஹரிஹரனை ரெண்டு அறை விட்டவன். “ஊருக்குள்ள எத்தனை பொம்பளைங்க வாழ்க்கைல விளையாடி இருக்க, இன்னும் நீ அடங்கள்ல இல்ல. உன்ன இப்படியே! விடக்கூடாது” என்றவன் தீரனுக்கு அழைத்து விஷயத்தைக் கூற
 
“அங்கதான் இருக்கானா? இதோ வந்துடுறேன்” என்றான் தீரன்.
 
“ஈகா என்னப்பா சொல்லுற?” தூங்கி எந்திரிச்சு வந்த வேதநாயகி அப்பொழுதுதான் வாசலில் விருந்தாளி போல் அமர்ந்திருந்த மஞ்சுவையும், தனது ஒரே மகள் ஜானவியையும் கண்டு “ஜானகி…” என்று கத்தியவாறு செல்ல “அம்மா…” என்று ஜானவியும் வேதநாயகியை அணைத்துக்கொண்டாள்.
 
“எங்க அம்மா பேரு ஜானகி இல்ல. ஜானவி” பாட்டியை முறைத்தாள் மஞ்சு.
 
“உன் பொண்ணா…” கண்ணில் நீர் நிறைத்துக் கேட்ட வேதநாயகி பார்கவியை யோசனையாக பார்த்தார்.
 
தலையசைத்து ஒப்புக்கொண்டவள் “அவள் பிடிவாதம் பிடிச்சு என்ன இங்க கூட்டிட்டு வந்துட்டா” கண்ணீரோடு அன்னைக்கு பதில் சொன்னாள்.
 
“வந்தது நல்லதா போச்சு…” அங்கிருந்தவர்களை முறைத்தாள் மஞ்சு.
 
“நீ.. நீ.. முத்துராஜ் அத்தான் மகன் இல்ல” ஈகையை பார்த்து கேட்டாள் ஜானவி.
 
அன்னை சொன்ன பிறகுதான் அவள் தினமும் பார்க்கும் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் ஈகை என்று  மஞ்சுவுக்கு புரிந்தது.
 
“உனக்கு ஈகாவை தெரியுமா?” வேதநாயகி யோசனையாக கேக்க,
 
“எனக்கும், அவருக்கும் கல்யாணம் பண்ணி வச்சதே! முத்துராஜ் அத்தான்தான். வேலைக்கு ஏற்பாடு செஞ்சி அப்பா கண்ணுல படாம எங்களை பாத்துக்கிட்டதும் அவர்தான்” என்றவள் பார்கவி பார்த்து “நீ.. ஜானகி அக்கா பொண்ணா.. அவங்கள மாதிரியே! இருக்கியே! அவங்களைத்தான் அப்பாவும் அண்ணன்களும் வெட்டிக் கொன்னுட்டாரே!” என்றவள் உடல் உதற மாதேஷ் ஜானவியை சோபாவில் அமர்த்த உமையாள் குடிக்க தண்ணீர் புகட்டினாள்.
 
அவள் கூறியதை கேட்டு திகைத்து நின்று விட்டார் வேதநாயகி. “ஜானகியை கொன்னுட்டாரா?..” அதுதான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தனது கணவர் ஜாதிக்காக ஆணவக்கொலை செய்பவர்தான் ஜானகி வேதநாயகிக்கு மாத்திரமல்ல மருதநாயகத்துக்கும் பிடித்தமானவள் அவளை கொன்னுட்டார் என்பது அவரால் ஜீரணிக்கவே! முடியவில்லை.
 
“என் அண்ணனுக்கு பொறந்த மூத்த பொண்ணு ஜானகி. அவ பொறந்ததிலிருந்தே! அண்ணிக்கு அடிக்கடி உடம்பு முடியாம போக ஆரம்பிச்சிருச்சு. அவள நான்தான் வளர்த்தேன். எனக்கு கல்யாணமாகி போகும் போது இந்த வீட்டை விட்டு போறத நினைச்சி அழுதத விட ஜானகியை விட்டுட்டு போறேன்னு அழுதேன். அத பார்த்து அவரே! ஜானகியை எங்க கூட கூட்டிட்டு போலாமான்னு கேட்டாரு. அவருக்கும் ஜானகினா உயிரு.
 
அதுக்கு பிறகு அண்ணிக்கு எந்த குழந்தையும் தங்கள, ஏழு வருஷம் கழிச்சி முத்துராஜ் கிடைச்சான். அத்தோட அவங்க ஆயுளும் முடிஞ்சிருச்சு. அண்ணனும் வேற கல்யாணம் பண்ணிக்கல”
 
“ஓஹ்.. அதான் எங்கம்மாவ ஜானகினு கூபிட்டங்களா?” மஞ்சு மாதேஷின் காதில் ரகசியம் பேச
 
“எங்கம்மா பேர் ஜானவி” என்று சொல்லும் பொழுது மஞ்சு மூக்கு விடைக்க நிற்கும் தோற்றம் கண்ணில் தெரிய “புரிஞ்சா சரி. சும்மா.. சும்மா.. கோபப்பட்டுக்கிட்டு” நக்கலாக சிரித்தான் மாதேஷ்.
 
அசையாது இருக்கும் வேதநாயகியை அமர்த்திய ஈகை “பாட்டி நடந்தது நடந்து போச்சு. இப்போ நான் சொல்லுறது இன்னும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்” என்றவன் தன் குடும்பத்தை மருதநாயகம் ஆக்சிடன் செய்து கொலை செய்ததையும் அவர் இப்பொழுது அரெஸ்ட் ஆகி இருப்பதையும் கூற
 
கண்களை துடைத்துக் கொண்ட வேதநாயகி பார்கவியை ஏறிட்டு “நீ ஜானவி பொண்ணுன்னு நினச்சேன். என் ஜானகி மாதிரியே! இருக்க” மருதநாயகத்தை பற்றி பேச விரும்பவில்லை என்று அந்த பேச்சில் சொன்னார்.
 
“ஜானகி பொண்ணுதான். ரெண்டாவது பொண்ணு” என்றான் ஈகை.
 
“என்னடா நடக்குது இங்க?” வளமை போல் உமையாள் வேடிக்கை பார்க்க
 
“அப்போ ஈகை முத்துராஜ் மாமா பையனா?” மஞ்சு மாதேஷை பிராண்ட, அவளை முறைத்தவன் அமைதியாக இருக்கும்படி கூறினான்.
 
“ஏன் ஜானவி அத்த ஜானகி அத்தைய குடும்பத்தோட உங்க அப்பா கொன்னத நீங்க பாத்தீங்களா?” ஈகை கேட்க,
 
“முத்துராஜ் அத்தான் குடும்பத்தோட மதுரைக்கு போனப்போ ஜானகி அக்காவை பாத்திருக்காரு. அவங்கள பார்க்க நானும் என் கணவரும் போய் இருந்தோம். அப்போ அப்பாவையும் அண்ணன்களையும் அங்க பார்த்து எங்களைத்தான் தேடி வந்திருப்பார்னு நினைச்சி பயந்துட்டோம். அவர்கிட்ட இருந்து தப்பி வந்தா போதும்னு மறஞ்சி வந்துகிட்டு இருக்கும் பொழுது ஜானகி அக்காவும் அவர் வீட்டுக்காரரும் பூவங்கி கிட்டு இருந்தாங்க அத பார்த்து அப்பாவும் அண்ணன்களும்” மேலும் சொல்ல முடியாமல் மூச்சு திணறலானாள். ஜானவி அவளை ஆசுவாசப் படுத்திய மஞ்சு பேச வேண்டாம் என்று செய்கை செய்ய
 
“இல்ல நான் சொல்லணும். சின்ன பொண்ணுனும் பார்க்காம அம்மானு அழுத அவங்க பொண்ணையும் வெட்டிகொன்னுட்டாரு. அவங்ககிட்ட ஓடப்போன என்ன என் கணவர் இழுத்து பிடிச்சிகிட்டாரு. அப்போ அப்பா என் பொண்ணையும் இதே! மாதிரி வெட்டி சாய்க்கணும்னு அப்போதான் என் ஆத்திரம் அடங்கும்னு சொன்னாரு. போய் இருந்தா எங்களையும் வெட்டி கொன்னிருப்பாரு”
 
மஞ்சுவுக்கு அப்பொழுதுதான் அன்னையின் பயமும், புலம்பலின் தீவிரமும் ஏன் என்று புரிந்தது.
 
“அவங்க சொல்றது உண்மைதான். அப்போ பார்கவிய நான் கைல வச்சுண்டு இருந்தேன்” சக்கர நாட்காலியை தள்ளிக்கொண்டு விசாலட்சி உள்ளே வரவும் பார்கவி “அம்மா” என்று அழைத்தவாறு அவளிடம் ஓடி இருந்தாள்.
 
பார்கவியை கட்டிக்கொண்ட விசாலாட்சி பேச ஆரம்பித்தாள்.
 
“நான் ஜானகியோட பக்கத்து வீடுதான். குழந்தைகள் ரெண்டும் எங்க ஆத்துல இருப்பாங்க. அன்னைக்கி நாங்க ஒன்னாதான் கோவிலுக்கு போனோம். பார்கவி நான் தூக்கிண்டு இருந்தேன். என் கண்ணு முன்னாடிதான் அவங்க ஜானகியையும் அவா ஆத்துகாரரரையும் அந்த பதிமூணு வயசு கொழந்தையும் வெட்டி கொன்னுட்டாங்க. அதிர்ச்சில நான் நின்னேனா என் ஆத்துக்காரர் என்ன இழுத்துன்னு போய்ட்டாரு. பார்கவி காப்பாத்தணும் மட்டும்தான் அப்போ அவர் நினைச்சாரு. இறுதி சடங்கெல்லாம் நாமதான் பண்ணோம்.
 
நேக்கு கடவுள் கொழந்த வரத்தை கொடுக்கவே! இல்ல. பார்கவி அந்த பகவானே! கொடுத்த கொழந்தையா பார்த்தேன். சமீபத்துலதான் ஜானகியோட தம்பி அவளை சந்திச்சிட்டு போனதா அவள் சொல்லியிருந்தா எங்க அவள் தம்பி வந்து கொழந்தைய வாங்கிட்டு போய்டுவார்ரோனு பயம் வேற. எங்க வீட்டுலையும், அவர் வீட்டுலையும் பார்கவி வச்சிருந்தது பிடிக்காம கண்டபடி பேச வேற செஞ்சாங்கங்க. அது அவருக்கும் பிடிக்கல. அதனால நாங்க சொந்த ஊர் விட்டு வந்துட்டோம்”
 
தனக்காக உறவுகளை துறந்த இந்த அன்னையை கட்டிக்கொண்டாள் பார்கவி.
 
“பார்கவிக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்தா போதும்னு அவர் சொல்லிண்டு இருப்பார். ஆனா அவள் யார் என்கிற உண்மைய சொல்லித்தான் கல்யாணம் செய்யணும் என்கிறது நினச்சா பயமா இருக்குனும் சொல்லுவார். அந்த பகவான் புண்ணியத்துல இவள் சேர வேண்டிய இடத்துலதான் சேர்ந்திருக்கா” என்ற விசாலாட்சியின் பார்வை முழுவதும் பார்கவியின் கழுத்தில் இருந்த தாலியில் நிலைத்திருக்க, ஈகை அவள் அருகில் வந்து வணக்கம் வைத்து பார்கவியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினான்.
 
பாவம் சுப்பிரமணிய சாஸ்திரிகள் பார்கவிக்கு திருமணம் பேசப்போய் உண்மையை கூறுகிறேன் என்று பார்கவியை பற்றிய உண்மையை கூறி அவரை அவமானப் படுத்தியதால் மனமுடைந்தவர் அதை தாங்க முடியாமல் வண்டியோட்டியவாறு மாரடைப்பில் இறந்த உண்மை மறைக்கப்பட்ட உண்மையாகவே! யாரும் அறியாமல் போனது விதி. 
 
“நான் உள்ள வரலாமா?” அந்த குரலுக்கு அனைவரும் திரும்பி வாசற்கதவைப் பார்க்க அங்கே! நின்றிருந்த விஷ்வதீரனைக் கண்டு
 
“நீங்க விஷ்வதீரன்…” என்றவாறு ஈகை கையை நீட்ட ஈகையோடு கை குலுக்கியவன்
 
“இவரும் இவர் மனைவியும் தான் என்ன பாத்துக்கிட்டாங்க” விசாலாட்சி கூற
 
யோசனையாக ஈகை விஷ்வதீரனை ஏறிட “நான் இங்க வந்தது அந்த அக்கியூஸ்டே அரெஸ்ட் பண்ண” என்று ஹரிஹரனை கைகாட்ட, அதுவரை அவன் அங்கு இருப்பதை மறந்து அனைவரும் நடந்தவற்றை பேசிக்கொண்டிருக்க அப்பொழுதுதான் தூணில் கட்டப்பட்டிருந்த ஹரிஹரனை அனைவரும் கவனித்தனர்.
 
மாதேஷோடு வந்த மஞ்சுவும் சேர்ந்துதான் ஹரிஹரனை புரட்டி எடுத்து தூணில் கட்டியிருந்தாள். இப்பொழுதுதான் மாதேஷிடம் அவன் யார் என்றே! விசாரிக்கலானாள். அதையே! ஜான்வி உமையாளிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
 
“இவர் இந்தம்மா கூட தானே! வந்தாரு. இவன இவர் எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்” ஈகையும் தயாளனும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள
 
அவர்களின் பார்வை மாற்றத்தை புரிந்துக்கொண்டு புன்னகைத்த விஷ்வதீரன் “இவன் என்னெல்லாம் பண்ணானு உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே! தெரியும். அதெல்லாம் கண்டு பிடிச்சு தீரா சொல்லி இருப்பான் இல்லையா?” எனும் போது உள்ளே நுழைந்தான் தீரமுகுந்தன்.
 
“ஈகா ஹரி என்னப்பா பண்ணன்?” வேதநாயகி பதற
 
அவரை அமைதி படுத்திய மாதேஷ் “இருங்க பாட்டி விசாரிக்கலாம்”
 
“ஹரிஹரன் பண்ணதுக்கு ஊருல யாராவது கம்பளைண்ட் கொடுத்திருக்கங்களா? ஜெய்” ஈகை சந்தேகமாக கேக்க
 
“ஊருல யாரும் எந்த
கம்பளைண்ட் கொடுக்கல. இது ஒரு ஸ்பெஷல் கேஸ்” என்று விளக்கிய தீரமுகுந்தன் “பை தி வே என் பேர் தீரமுகுந்தன்” என்று கண்சிமிட்டி சிரிக்க அவனை ஆச்சரியமாக பார்த்தனர் ஈகையும் தயாளனும்.
 
தீரன்ஸ் உள்ளே வரவும் அளவுக்கு ஹரி என்ன செய்தான் என்று விசாரித்த மாதேஷ் அதிர்ச்சியடைய, ஹரிஹரனை கைது செய்த தீரன் சகோதரர்கள் ஈகை மற்றும் தயாளனிடம் விடைபெற்றனர்.
 
ஹரிஹரன் செய்த அனைத்தையும் அறிந்து உடைந்து போனார் வேதநாயகி.
 
மருதநாயகமும் புத்திரர்களும் கைது செய்யப்பட்டது காட்டுத்தீ போல் ஊருக்குள் பரவ அதே வேகத்தில் ஈகை யார் என்ற உண்மையையும் அறிந்துகொண்ட ஊர்மக்கள் அவனை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கொண்டாடினர். 
 
ஈகை தனது பரம்பரை சொத்தை மீளப்பெற போட்ட கேஸ் அவசிமற்றதாக்கிப் போனது. சத்யநாதனின் பேரனும் பேத்தியும் உயிரோடு இருப்பதால் எல்லா சொத்துக்களும் அவர்களின் பெயரில் மாற்றப்பட்டதோடு, எல்லா பொறுப்புக்களிலிருந்தும் நீங்கிக்கொள்வதாக கையொப்பமிட்டுக் கொடுத்தார் வேதநாயகி.
 
அத்தோடு நிற்காமல் வீட்டை விட்டும் கிளம்பி விட்டார் தன் மகளோடு.
 
“என்ன பாட்டி… எங்களோடு இருந்து விடுங்களேன். இவ்வளவு நாளா இங்க இருந்தீங்க. இது உங்க வீடு” ஈகை அன்பான வேண்டுகோள் விடுக்க, 
 
“இது நான் பொறந்து வளர்ந்த வீடுதான் பா… கல்யாணமான பொண்ணுங்க பொறந்த வீட்டை விட்டு போய்டணும். நான் ரொம்ப நாள் இருந்துட்டேன். இனி கூடாது”
 
அவர் முடிவில் அவர் உறுதியாக இருப்பது தெரியவே! அவரை வற்புறுத்த விரும்பாதவன் மாதேஷை ஏறிட்டு
 
“மாதேஷ் நீ என்ன செய்யுறதா உத்தேசம்?”
 
“ஏதாவது வேல தேடிப்பேன் ஈகை”
 
“உன் தாத்தாவோட ஆலைகளை நீ பொறுப்பேத்துக்க அத நான் உன் பேர்ல எழுதி கொடுத்திடுறேன்”
 
“நீங்க அவர  ஏமாத்தி ஒன்னும் எழுதி
வாங்களையே! நேர்மையாத்தானே! வாங்குனீங்க” என்றவன் மறுக்க
 
தயாளன் ஈகையின் காதில் ஏதோ கூற  ஈகைக்கும் அதுவே! சரி என்று தோன்ற “அப்போ எனக்காக ஒன்று செய்றியா?” மாதேஷ் என்னவென்று ஏறிட “என் அப்பாவோட டெக்ஸ்டைல் பிஸ்னச நீ தான் பாத்துக்கணும். நான் கால் பதிக்காதது டெக்ஸ்டைல்ஸ் மட்டும்தான். எனக்கு சுத்தமா ஒன்னும் புரியல. நீதான் உதவனும்” என்றவன் வழமையான தன் பேச்சால் மாதேஷை சம்மதிக்க வைத்து பொறுப்புக்களை ஒப்படைத்தான்.
      
மாதேஷ் உமையாளை அழைத்துக்கொண்டு வேதநாயகியோடு சென்னை சென்று விட்டான். ஜானவியின் வீட்டில் தங்கி தொழிலை பார்ப்பதாக கூற, மஞ்சுவுக்கு அவனுக்கும் கூடிய விரைவில் திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஜானவி அன்னையிடம் கூறி அவர்களின் காதல் விவகாரத்தை போட்டுடைத்தாள்.
 
உமையாள் கொஞ்சம் கணவனுக்காக வருந்த, வேதநாயகிதான் மருமகளை அதட்டி அவர்களை பற்றி இனி பேசவே! கூடாது. தங்கள் வாழ்க்கையில் இனி அவர்கள் நுழையவே! மாட்டார்கள் என்று உறுதியாக கூறிவிட, மருதநாயகம் மற்றும் புத்திரர்கள் மேல் எந்த மாதிரி வழக்குகள் பதிவானது. அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்று இவர்கள் அறியாமளையே! போயினர்.
 
ஹரிஹரன் கைதானத்தோடு ஊரில் சில பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வாய் திறந்து கூறி அவன் தண்டனையை இரட்டிப்பாக்க உதவி செய்தனர் அதில் பொன்னியும் ஒருத்தி.
 
இப்படி ஒரு நியூஸ் கிடைத்தால் மீடியா விட்டு வைக்குமா? பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஹரிஹரனை தோலுரித்து தொங்க போட்டுக்கொண்டிருக்க, காதாம்பரி அண்ணனோடு மகனை வெளியில் எடுக்க போராடிக்கொண்டிருந்தாள். 
 
கொல்கத்தாவிலுள்ள காயத்திரியின் வீடும் பேசியபடியே விற்கப்பட்டது. பத்திரம் எழுத தேவையில்லை என்று காயத்திரி சொல்ல, அவள் தந்தைதான் பணத்தையும் வாங்கிக்கொண்டு மற்ற மூன்று சகோதரிகளில் யாரவது பின்னொரு காலத்தில் பிரச்சினை பண்ணி விடக்கூடாது அதனால் அவர்களிடம் இவ்வாறுதான் செய்வதாக கூறியே செய்யச்சொன்னார். அவர் வீட்டை விற்றது தயாளன் மற்றும் சுதீப்புக்கு என்று எழுதிக்கொடுத்திருந்தார்.
 
காயத்திரி மற்றும் பாயலின் பெயரில் வீட்டுப்பாத்திரம் மாற்றப்பட்டு பாயல் குடும்பம் குடியேறியபின் காயுவின் பெற்றோர் காயுவோடு வந்து தங்கிக்கொண்டனர். 
 
தயாளன் தான் தன் அண்ணன் என்றும் இனி அவன் தான் கம்பனியை பொறுப்பேற்பான் என்றும் ஈகை அதிரடியாக அறிவித்து எல்லா பொறுப்புக்களையும் காயத்திரி மற்றும் தயாளனிடம் ஒப்படைத்தவன் பார்கவி மற்றும் விசாலாட்சியோடு ஊர் திரும்பினான்.
  
“என்ன பட்டு இருட்டுல உக்காந்து என்ன யோசிச்சுகிட்டு இருக்கேள்” தனியாக ஊஞ்சலில் அமர்ந்து வானத்தில் வளம் வரும் பௌர்ணமி நிலவை வெறித்துக்கொண்டிருந்த மனைவியை சீண்டியவாறு வந்தமர்ந்தான் ஈகை.
 
“வீடே வெறிச்சோடி போய் இருக்கு. எவ்வளவு பேர் இருந்த வீடு இது. நீங்களும் வேல வேலனு வெளிய கிளம்பி போய்டுறேள். நானும் அம்மாவும் மட்டும்தான்”
 
பார்கவி வாக்கியத்தை முடிக்கும் முன் “அஞ்சாறு புள்ளய பெத்துக்குவோம் பாரு வீடே சத்தமா இருக்கும். இதுக்கு போய் கவலையா இருக்க” சிரிக்காமல் சீண்ட
 
கணவனை முறைத்தவள் “உங்களுக்கு எல்லாம் விளையாட்டு இல்ல”
 
“இப்போ நான் என்ன விளையாடினேன். அடுத்த மாசம் எக்ஸாம் வருது. அத்தோட உன் காஜேஜ் முடியுது. மேல படிக்கிறியா படி. இல்ல உனக்கு என்ன பிடிக்குதோ அத செய். அப்படியே! என்னையும் கவனினு தானே! சொல்லுறேன்” அவளை அணைத்தவாறு கூற
 
“கவனிக்கிறேன், நல்ல கவனிக்கிறேன்” என்றவள் அவனை அடிக்க ஆரம்பிக்க
 
அவளை தடுத்தவாறே “கவனிக்க சொன்ன கொல்ல பாக்குற? மாமி வர வர ராட்சசியா மாறிக்கிட்டு வர”
 
“சரி சீக்கிரமா கொழந்த பெத்துக்கலாம்”
 
வாய்மூடி சிரித்தவன் “அதுக்கு இப்படி பேசிகிட்டு டைம் வேஸ்ட் பண்ண கூடாதே பொண்டாட்டி. நிறைய வேல பார்க்க வேண்டி இருக்கு”
 
“அசிங்கமா பேசாதேல்”
 
“இப்போ நான் என்ன அசிங்கமா பேசிட்டேன்” என்றவன் அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.
 
மருதநாயகத்திடம் சிக்கி செவ்வானில் முழுநிலவாக இருந்த பார்கவியை இரவாக தழுவி குளிர்வித்திருந்தான் ஈகை.
 
மேகம் மறைத்திருந்த முழு நிலவு மேகம் விலகி இரவு வானில் பிரகாசமாக வளம் வந்துகொண்டிருந்தது.
 
                                           நிறைவு
                                            By MILA
 

Advertisement