செவ்வானில் ஒரு முழு நிலவு 23

6204

நிலவு 23
காயத்திரியின் தந்தையின் உடல்நிலை சீரற்றநிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அன்னை அழுதவாறு அலைபேசி தொடர்பில் கூறி இருக்க, காயத்திக்கு கை,கால் ஓடவில்லை. தயாளனின் அலைபேசிக்கு இரண்டுமுறை அழைத்தும் அவன் எடுக்காததால் ஈகைக்கு அழைத்து விவரம் ஏதும் சொல்லாமல் தான் உடனே! கொல்கத்தா செல்ல வேண்டும் என்று அழுது கரையலானாள். தயாளனை தேடிச்சென்றால் அவன் அப்பொழுதுதான் குளித்துவிட்டு குளியலறையிலிருந்து வெளியேறினான்.
 
“அக்கா பேசுறாங்க பேசு” என்று ஈகை அலைபேசியை கொடுத்ததும் காயத்திரியின் அழுகுரல்தான் அவனுக்கு கேட்டது. என்ன எது என்று அவனுக்கு புரியவில்லை. ஈகையை ஏறிட
 
தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான் “காயு ப்ளீஸ் முதல்ல அழுகுறத நிறுத்திட்டு என்ன பிரச்சினைனு உன் புருஷன்கிட்ட சொல்லு” ஈகை அதட்டவும் அவள் சமாதானமாக என்னவென்று விசாரித்தான் தயாளன்.
 
விஷயத்தை ஒருவாறு அவள் சொன்னதும் ஈகை “வா உடனே! செல்லலாம்” என்று கிளம்ப பார்கவிதான் இவர்களுக்குள் இருக்கும் உறவை புரியாது பாத்திருந்தாள். 
 
வேதநாயகியிடம் மட்டும் சொல்லிக் கொண்டவர்கள் ஜெய்யிடம் பொறுப்புக்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு சென்னையை நோக்கி வண்டியை கிளப்பி இருந்தனர். அங்கிருந்த்து விமானத்தில் கொல்கத்தா பயணம்.
 
சென்னை விமானநிலையத்தில் தயாளனையும், ஈகையையும் கண்டு ஐஷு பாய்ந்து வந்து கட்டிக்கொள்ள அந்த மனநிலையிலும் காயத்திரி பார்கவியிடம் நலம் விசாரித்தாள்.
 
“அம்மாவ பாத்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிடல்ல காயு” தயாளன் கேக்க “ஆமாம்” என்று தலையசைத்த, மனைவியை அணைத்துக்கொண்டு “அப்பாக்கு ஒன்னும் ஆகாது டி. சுதீப்பும், பாயலும் பக்கத்துலயே! இருக்காங்க, உன் தங்கச்சி ரஸ்மி அவ வீட்டுக்காரரும் வந்துட்டதா சுதீப் சொன்னாரு” மனைவியின் கவலையை உடனடியாக போக்க தகவல்களை கூறினான்.
 
அனைவரும் விமானத்தில் ஏறிய பின்னும், ஐஷுவின் “சித்து” என்ற அழைப்பும் “தயாளன்தான் ஈகையின் அண்ணனா? அவர் எதுக்கு இவர் பி.ஏவாக இருக்கார்” என்று மண்டையை குடையலானாள் பார்கவி.
 
“என்ன பட்டு? என் அண்ணன் யார்னு தெரிஞ்சு போச்சில்ல”
 
“அவர் பேர் தயாளனா? தமிழ்செல்வனா?” அடுத்த சந்தேகத்தைக் கேக்க
 
தயாளனை சந்தித்தது முதல் அவன் வாழ்க்கையில் காயத்திரி அடியெடுத்து வைத்ததுவரை கூறலானான் ஈகை.
 
ஐஷுவை அணைத்துக்கொண்டு தன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் மனைவியை பார்த்த தயாளனுக்கும் அதே! சிந்தனைதான். 
 
அந்த பார்க்கில் அமர்ந்திருந்தனர் தயாவும், காயத்திரியும். தயா லட்ச்சியத்துக்காக திருமணம் செய்துகொள்ள மாட்டான் என்று ஈகை கூறியதும் முகம் வாடியவள் “நான் உன் அண்ணன் கிட்ட பேசலாமா?” என்று கேட்க
 
“ஓஹ்… தாராளமா… இந்த பார்க்குக்கு இத்தனை மணிக்கு வாங்க கூட்டமும் அதிகம் இருக்காது. மனசவிட்டு பேசுங்க” என்று ஈகைத்தான் தயாளனிடம் காயத்திரி காத்துக்கொண்டிருப்பாள் என்று அனுப்பிவைத்திருந்தான்.
 
வந்ததிலிருந்து லேசாக சிரித்துவிட்டு இருவரும் மாறிமாறி முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்களே! ஒழிய பேசும் வழியைக் காணோம்.
 
“என்ன பேச வரச்சொல்லிட்டு அமைதியா இருக்கா” தயாளன் மனதுக்குள் கேட்டுக்கொள்ள
 
“எப்படி ஆரம்பிக்கிறது? வந்ததிலிருந்து கல்லூளிமங்கன் போல் அமர்ந்திருக்கிறார் ஏதாவது பேசி தொலைக்கிறாரான்னு பாரு. எனக்கு படபடன்னு வருது” வியர்த்திருக்கும் தன்முகத்தை கைக்குட்டையால் துடைக்கலானாள் காயு.
 
“சரி அப்போ நான் கிளம்புறேன்” என்ற தயாளன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையவே! இல்லை.
 
அவனை முயன்ற மட்டும் முறைத்தவள் “நான் இன்னும் பேசவே! இல்ல” என்று கூற 
 
“ஓஹ்… பேசத்தான் வரச்சொன்னியா? சும்மா பார்த்துட்டு போலாம்னு வரச்சொன்னியோனு நினச்சேன்” குரலில் கிண்டல் வழிய
 
“நீங்க பேச்ச ஆரம்பிக்க வேண்டியதுதானே!” கோபமாக காயு சொல்ல
 
“நான்தான் உன் மௌனவிரதத்தை உடைச்சேன்மா… சொல்லு என்ன விஷயமா வரச்சொன்ன”  நேரடியாகவே! விசயத்துக்கு வர
 
“உங்க லட்ச்சியத்தை முடிச்சிட்டு வாங்க. காத்திருக்கிறேன்” என்றாள் இவளும். லட்ச்சியம் என்னவென்று கூட கேட்கவில்லை.
 
புன்னகைத்தவன் “என் லட்ச்சியம் என்னவென்று தெரியுமா? அதனால நான் ஜெயிலுக்கு போக நேர்ந்தாலும் நேரும். எத்துணை வருஷம் காத்திருப்ப?”
 
“என் உடம்புல உசுரு இருக்குற வரைக்கும் காத்திருப்பேன் போங்க” என்றவள் எழுந்துகொள்ள
 
அவள் கையை பிடித்து அமர்த்தியவன் தங்களது குடும்பத்துக்கு நடந்ததை கூற ஒருநொடி திகைத்தவள் வருந்தலானாள்.
 
“அதனாலதான் சொல்லுறேன் நீ எனக்காக காத்துகிட்டு இருக்காத” 
 
அவனை முறைத்தவள் “இருப்பேன் இப்போ போங்க” என்று அவன் பதிலையும் எதிர்பார்க்காது சென்று விட்டாள்.
 
வீடு வந்த தயாளனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஒருவாரம் யோசித்ததில் காயத்திரியை விட முடியாது என்ற முடிவுக்கு வர அன்னையையும் ஈகையையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டான் காயத்திரியின் வீட்டுக்கு. அவள் அப்பொழுது வீட்டில் இல்லை. காலேஜ் சென்றிருப்பாள் போலும்.
 
அவளுடைய அப்பா நல்லமுறையில் வரவேற்று உபசரித்தார். தயாளன் தான் யார்? என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் கூறிவிட்டு தனக்கு காயத்திரியை பிடித்திருப்பதாகவும் சம்பந்தம் பேசி முடிக்க வந்திருப்பதாகவும் கூறியவன் “உங்க மத்த பொண்ணுங்க கல்யாணம் முடிந்த பிறகு பண்ணிக்கிறேன். என்ன உங்க மகனா ஏத்துக்கோங்க, வீட்டு பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன். அவர்களும் என் பொறுப்பு” என்று பெருந்தன்மையாக, அவருக்கு புரியும் படி கூறினான்.
 
தயாளனின் அன்னைக்கும் மகனை நினைத்து ரொம்ப பெருமை. ஈகையும் அண்ணன் தோளோடு அணைத்து நான் உனக்கு பக்கமலமாக இருப்பேன் என்று கூறிக்கொண்டான்.
 
ஆனால் காயத்திரியின் தந்தை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, கண்டிப்பா காயத்திரிக்கு மாப்பிளை பார்க்கும்போது உங்ககிட்ட சொல்லுறோம். இப்போ சம்மதம் பேசி வைக்க முடியாது. அது நல்லதுமில்லை. என் பொண்ணுங்கள பெத்து வளர்த்த எனக்குத் தெரியாதா? அவர்களுக்கு எப்படி கல்யாணம் செய்ய வேண்டும் என்று. நான் பார்த்துக்கொள்கிறேன். அப்போ நீங்க போய்ட்டு வாங்க” என்று வாசல் கதவைக் காட்ட தயாளனால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே! முடியவில்லை. எதுவும் பேசாமல் தன் குடும்பத்தோடு வெளியேறி விட்டான்.
 
அடுத்தநாள் காயத்திரியை சந்தித்துப்பேச அவளும் அவனை திட்ட ஆரம்பித்தாள் “யாரைக் கேட்டு எங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தீங்க? அக்கா மூணு பேர் இருக்கும் பொழுது நான் கல்யாணம் செய்ய முடியுமா? அதுவும் இன்னும் என் படிப்புக்கூட முடியல”
 
“பேசி வைக்கலாம்னுதான் வந்தேன். பேசி ஒரு முடிவுக்கு வந்தாத்தானே! என்னால உன் குடும்பத்துக்கு உதவ முடியும்”
 
“போதும் நிறுத்துங்க, எங்க அப்பா ஆசிரியர்தான். கொறஞ்ச சம்பளம்தான் அதுக்காக மத்தவங்ககிட்ட எப்பயும் கையேந்த மாட்டார். என்ன நினைச்சுகிட்டு இருந்தீங்க உங்க மனசுல இனிமேல் என்ன பார்க்கவோ! பேசவோ! கூடாது” பொரிந்தவள் சென்றுவிட்டாள்.
 
அவள் தயாளனை திட்டுவதற்கான ஒருகாரணம் அவள் அக்கா மூவரும் சம்பாதிக்கும் பணத்தில்தான் அவள் படிக்கிறாள். தந்தையின் உழைப்பு வீட்டு செலவுக்கே! பத்தவில்லை. இதில் இவன் பெண்கேட்டு வந்ததை மூத்த அக்கா சாடைமாடையாக பேசி இருக்க, காயுவால் தாங்கவே! முடியவில்லை. தனக்கு இருபத்தி எட்டு வயதாகியும் இன்னும் மாப்பிள்ளை அமையவில்லை என்ற கோபம் அக்காவுக்கு.
 
இவள் காத்திருப்பேன் என்று கூறி இருந்தாலும் தயாளனை காக்க வைக்கக் கூடாது என்று திட்டி அனுப்பினாள். அதன்பின் இருவரும் சந்தித்துக்கொள்ளவே! இல்லை.
 
ஒருவாறு மூத்த அக்காவை பிடித்திருப்பதாக அவளோடு வேலை செய்யும் கொலிக் ஒருவரே! வந்து பெண் கேட்க திருமணம் தடல்புடலாக நடந்தது. செலவெல்லாம் இரண்டு குடும்பங்களும் சமமாகத்தான் பார்த்துக்கொண்டனர். இருந்தாலும் பெண் வீட்டில் மணப்பெண்ணுக்கு நகை, துணிமணி என்று கொஞ்சம் அதிகச் செலவு.
 
அவள் திருமணத்தை முடித்து ஒரு வருடம் கடந்த நிலையில் இரண்டாவது அக்காவுக்கு ஒரு நல்ல சம்பந்தம் கைகூடியது. ஆனால் வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்தனர். காயூவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததால் சமாளித்துக்கொள்ளலாமென்று அந்த திருமணத்துக்கு வீட்டார் சம்மதிக்க, திருமணமும் நடந்தது. ஆனால் கடன் சுமை தலையில் பாரமாக ஏறிக்கொள்ள மற்ற பெண்களின் திருமணத்தை எப்படி செய்வதென்ற குழப்பத்தில் ஆழ்ந்தார் காயுவின் தந்தை.
 
பெண்கள்தான் அவரை தைரியம் சொல்லி வழிநடாத்தினர். அதில் அன்னையும் வீட்டிலிருந்தபடி கைத்தொழில்களை செய்ய ஆரம்பிக்க வீட்டில் இருக்கும் நாட்களில் பெண்களும் உதவளாயினர்.
 
மூன்றாவது அக்கா பாயலின் கழுத்துக்கொஞ்சம் வளைந்ததுபோல்தான் இருக்கும். அது ஒன்றும் பெரிய குறையில்லை. ஆனால் அதுவே! ஒரு பெரிய குறை என்பதுபோல் பேசி சிலர் பெண் வேண்டாம் என்று கூறிவிட்டு செல்ல, சிலர் வரதட்சணை அதிகம் எதிர்பார்த்தனர்.
 
மேலும், மேலும் கடன்பட்டாவது பாயலின் திருமணத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இரண்டாவது பெண் போல் அவள் வாழ்க்கையும் அமைந்து விடுமா? பணத்துக்காக கட்டிக்கொண்டு போய் அவள் அந்த வீட்டில் சந்தோசமாக இல்லையென்றால் திருமணம் செய்துகொடுத்து என்ன பயன்? அல்லது பணத்தாசை பிடித்தவர்கள் அவளை ஏதாவது செய்துவிட்டால்? என்ற என்ணெமெல்லாம் மனதில் அலைக்கழிக்க அவளுக்கு நல்ல வரன் அமையாதா என்று காயுவின் அன்னை அந்த காளியை வேண்டாத நாளே! இல்லை. 
 
வருடங்கள் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து காயத்திரியும் இருபத்தி ஏழு வயதில் நிற்க தங்கள் பெண்களின் வாழ்க்கையை நினைத்து சதா கண்ணிரோடுதான் அந்த அன்னையின் நாட்கள் செல்ல கண்ணீரை மறைத்துக்கொண்டு வீட்டாரிடம் புன்னகைசெய்து வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ. என்ன நியாபகம் இருக்கா? தயாளனின் குரல் கேட்டு திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க காரில் சாய்ந்து அழகாக புன்னகைத்துக்கொண்டிருந்தான் அவன். இத்தனை வருடங்களில் ஆளே மாறி இருந்தான். ஒரு முழுமையான ஆண். அவனை அவ்வப்போது அவள் செல்லும் இடங்களில் பார்த்தது போலவும் அவள் நியாபக அடுக்கில் வந்து போக தலையை உலுக்கியவாறு காயத்திரி முகத்தை திருப்பிக்கொண்டாள்.
 
“ஹாய் அண்ணி” ஈகையின் குரல் கேக்க புன்னகைத்தவள் கையில் கட்டி இருக்கும் வாட்ச்சை காட்டி தனக்கு நேரமாவதாக கூறி அவ்விடத்தை விட்டு நகர முற்பட “இருங்க இருங்க பேசிட்டுப்போலாம்” என்றவன் வலுக்கட்டாயமாக அவளை அழைத்துக்குக்கொண்டு ஒரு காபி ஷாப்பில் நுழைந்தான் ஈகை. தன்னவளை அருகில் பார்த்து ரசித்துக்கொண்டு, தயாளன் அவர்கள் பேசும்வரை அமைதியாக அமர்ந்திருந்தான்.
 
தாங்கள் இருவரும் கட்டுமான கம்பனி ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேலாவதையும், அவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் பற்றி கூறியவன். நம்பிக்கையான ஆட்கள் தேவை என்று தங்களது கம்பனியில் வேலைக்கு வரும்படி கேட்டுக்கொண்டான். அவளை மட்டுமல்ல அவள் அக்கா பாயலையும்தான்.
 
தயாளனை தினமும் பார்க்க வேண்டி இருக்கும் அவனுக்கு திருமணம் கூட ஆகி இருக்கும், தன்னால் முடியுமா? என்று சிந்தித்துக்கொண்டிருந்தவளின் சிந்தனையை தடுத்து வந்துதான் ஆகா வேண்டும் என்று வற்புறுத்துவிட்டு சென்றான் ஈகை. தயாளன் எதுவும் அவளிடம் பேசவில்லை என்பதால் மனம் சுணங்கியவாறுதான் வீட்டுக்கு சென்றாள் காயு.
 
அவள் தற்போது செல்லும் கம்பனியை விட அருகில் இருந்ததாலும், சம்பளம் கூட அதிகம் என்பதனாலும், கம்பனி வண்டி வேறு வந்து அவர்களை அழைத்து செல்வதாக கூறி இருந்ததனால் செல்வதாக தன் மனதிடம் ஆறுதல் வார்த்தைக்கு கூறிக்கொண்டு ஈகையின் கம்பனிக்குள் நுழைந்தாள் காயத்திரி. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் தயாளனை சந்திக்கவோ! பேசவோ! வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வேலை விஷயமாக யாரவது ஒருவருடன் பேசிக்கொண்டு செல்பவனை காணுகிறாள். அது பெண்ணாக இருந்தால் இவள் வயிறு கபகபவென எரியும்.
 
அன்று விடுமுறை தினம் என்பதனால் பாயலோடு துர்கை அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தாள் காயு. அம்மனை வணங்கி விட்டு வெளியே வந்த இருவரும் பேசியவாறு நடப்பதை தனது வண்டியில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் தயாளன்.
 
இத்தனை வருடங்களாக அவளை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதுதான் அது அவளுக்குத்தான் தெரியவில்லை. ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் அவள் இந்த கோவிலில் வந்துதான் கடவுளை வணங்கி விட்டு செல்வாள். அப்பொழுது அவளுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவுப்பொருளை யாராவது கொடுத்து “இன்னைக்கி உனக்கு பிறந்த நாளாமா? சாமி கும்பிடும் போது அர்ச்சகரிடம் சொன்னதை கேட்டேன். இந்தா சாப்பிடு” என்று கொடுத்துவிட்டு போவார்கள். கடவுளே! தன்னை ஆசிர்வதித்ததாக காயு நினைத்துக்கொள்ள,
 
“உனக்காக என்னென்னெல்லாமோ! வாங்கி வச்சிருக்கேன். உன் பிடிவாதத்தால் ஒன்னத்தையும் கொடுக்க முடியல. பரவால்ல நான் கொடுத்ததை சாப்பிடுறியே!” என்று புன்னகைத்தான்.
 
வாராவாரம் இருவரும் இந்த கோவிலுக்கு வருவதுதான். அது தவிர வீட்டில் யாருக்காவது  பிறந்தநாளென்றால் வருவார்கள்.
 
 
செல்லும் அவர்களை பாத்திருக்க, பாயல் கால் இடறி விழுந்துவிட ஒரு ஆடவன் அவளை தாங்கிப் பிடித்திருந்தான். தயாளனும் வேகமாக அவ்விடத்தை அடைய. பாயலின் கால் பிசகியதில் அவளால் நடக்க முடியவில்லை. தயாளன் அழைத்தும் மறுத்த காயத்திரி பயலை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி சென்று விட செல்லும் பயலை மனவேதனையோடு பாத்திருந்தான் அவன்.
 
“என்ன ப்ரோ அவங்கள உங்களுக்கு நல்லாகவே! தெரியும் போல” அவனிடம் பேச்சுக்கொடுத்தான் தயாளன்.
 
தயாளனின் தோற்றம் பார்த்து பெரிய இடம்போல் தெரிய “அப்படி ஒன்றுமில்லை. உதவி செஞ்சேன் அவ்வளவுதான்” என்றவன் நகரப்போக
 
“நான் பாயலின் தங்கையை விரும்புறேன். பயலுக்கு கல்யாணம் ஆனாதான் என் ரூட் க்ளியராகும். உங்களுக்கு பயலை பிடித்திருந்த சொல்லுங்க பேசி முடிச்சிடலாம்” பளீரென்று சிரிக்க
 
திடுக்கிட்டவன் தன்னுடைய தோற்றத்தை குனிந்து பார்த்துக்கொண்டு “அவங்க யார்னே! எனக்கு தெரியாது” என்றான்.
 
“தெரியாமத்தான் வியாபாரத்தையும் கவனிக்காம அவங்க வந்து போகும்வரை அவங்களையே! பாத்துக்கொண்டு இருந்தீங்க”
 
தயாளன் சொன்னதில் அதிர்ச்சியோடு, அச்சமும் மேலோங்க என்ன சொல்வதென்று முழித்தான்.
 
தயாளனைவிட இரண்டு வருடங்களாவது சிரியவனா இருப்பான். பாயலைவிட ஒரு வருடம் அல்லது அதுக்கும் குறைந்த மாதங்கள் பெரியவனாக இருப்பான். “வாங்க உங்க கடைல உக்காந்தே! பேசலாம்” என்று அவன் கடைக்குள் சென்று சட்டமாக அமர அது ஒரு பிளேட் போர்ம் கடை. சமையலறை உபகரணங்கள், கோவிலுக்கு வரும் பெண்கள் வாங்குவார்கள் என்று கொஞ்சம் கலர் கலர் கண்ணாடி வளையல்கள், கொஞ்சம் அலங்கார பொருட்கள். மழை வந்தால் பொருட்களை மூடி வைக்க ஒரு பெரிய சீட் மடித்து வைக்கப்பட்டிருக்க, பொருட்களை எடுத்துவந்த பைகளும் அங்கே இருக்க, அவன் அமர்ந்து வியாபாரம் பார்க்க ஒரு முக்காலி. அவன் கடைக்கு அவன் முதலாளி.
 
அவன் ஏழ்மைநிலையை எண்ணியே! பாயலை நெருங்க முயலவில்லை என்று நன்றாக தயாளனுக்கு புரிந்துபோனது. அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் விசாரிக்க, அவன் பெயர் சுதீப் என்றும் அன்னை மாத்திரம்தான் இருக்கிறாள் தற்பொழுது குறைந்த விலையில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி இருப்பதாக கூறியவன் எட்டு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் இடுப்பெலும்பு முறிந்தால் இத்தனை வருடங்களாக கட்டிலில் இருந்தவனை, இருந்த வீட்டையும் வித்து மருத்துவம் பார்த்து அன்னைதான் நடமாடவைத்தாள் தன்னை பற்றிய கவலையிலையே! தந்தை இரண்டு வருடங்களுக்கு முன் போய் சேர்ந்துவிட்டார் என்று கூற, தயாளனால் எப்படி ஆறுதல் செய்வதென்றே! தெரியவில்லை.
 
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதோ சோக சம்பவம் அல்லது கொடிய சம்பவம் நடந்துதான் இருக்கின்றது என்று எண்ணிக்கொண்டவன். “பாயலை பிடிச்சிருக்கா?” என்று நேரடியாகவே! கேட்க
 
“இல்லங்க அது சரிப்பட்டு வராது. மனிசன் ஆச படலாம் பேராசை படக்கூடாது” என்று விட
 
“நீங்க நல்ல நிலமைல இருந்திருந்தா பாயலை பெண் கேட்டு வந்திருப்பீர்களா?”
 
“கண்டிப்பா நல்லா சம்பாதித்து சொந்தமா கடை வாங்குவேன். வீடுகட்டுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா காலம் யாருக்காகவும் காத்திருக்காதில்லை” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
 
“சரி நான் உங்களுக்கு கடன் தரேன் வாடகைக்கு ஒரு கடைய எடுத்து செய்ங்க, நல்ல ஒரு ஏரியால வாடகைக்கு வீடு பாருங்க, ஏன் பாயல் வீட்டு பக்கத்துலயே! பாருங்க. உங்க அம்மாக்கு அவங்களும், காயுவோட பேரன்ஸும் உங்க அம்மாவும் துணையா இருப்பாங்கல்ல”
 
“நீங்க எதுக்கு சார் எனக்கு பண்ணனும்” வாயால் கேட்கவில்லை தீர்க்கமான பார்வையை தயாளன் மீது செலுத்தினான்.
 
இதுதான் ஏழையாக இருந்து உழைத்து முன்னேற வேண்டும் என்பவனின் பார்வை.
 
“கொஞ்சம் சுயநலம்தான். பயலுக்கு கல்யாணம் நடந்தாதான் காயுவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும். அக்கா தங்கையை கட்டிக்கிட்டா நாம சகலைங்க ஆகிடுவோம். ஒருத்தருக்கொருத்தர் உதவுறதுல என்ன தப்பு?” தயாளன் புன்னகைக்க
 
என்ன நினைத்தானோ! அன்னையிடம் கலந்தாலோசித்து பதில் கூறுவதாக கூற தனது அலைபேசி என்னைக் கொடுத்த தயாளன். அங்கிருந்த அலங்கார பொருட்கள் சிலவற்றையும் வாங்கிச் சென்றான்.
 
தன்னுடைய வியாபார நேரத்தை எடுத்துக்கொண்டதுக்காக பணம் கொடுக்க முடியாமல் வாங்கி இருப்பான் என்று சுதீப் எண்ணினான்.
 
இரண்டு நாட்களாகியும் சுதீப் அழைக்காததால் ஈகையையும் அழைத்துக்கொண்டு அவன் வீடு தேடி சென்றான் தயாளன்.
 
அது ஒரு வீடு என்று சொல்ல முடியாது பலகையால் கட்டப்பட்ட நான்கு சுவர். வாசல், படுக்கையறை, சமையலறை எல்லாம் அங்கேதான். அவன் அன்னையுடன் பேசவே! இல்லை என்று அந்த இடத்தை பார்த்ததும் புரிந்துபோனது.
 
அவர்களை வரவேற்று அமரவைக்கே! தயங்கினாள் சுதீப்பின் அன்னை. அவர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறிருந்தது? எவ்வாறு மாறி இருக்கிறது? கண்கூடாக கண்டபின் இவளைபோல் அன்னைகளின் பாதம் தொட்டு வணங்குவதில் தப்பே இல்லை என்று காலில் விழுந்து ஆசிர்வதிக்கும் படி சொல்ல ஆசிர்வதித்தவள் தயாளன் மற்றும் ஈகையின் உரிமை பேச்சும், அந்த சிறு குடிசையில் அவர்கள் தங்கள் வீடுபோல் நடந்துகொண்ட உரிமையிலும் சகஜநிலைக்கு வந்தாள். 
 
அதன்பின்தான் அவர்கள் வந்ததற்கான காரணத்தைக் கூறினான் தயாளன். அந்த அன்னைக்கு ஆனந்தம்தான். மகனை நடமாடவைக்க கையிலிருந்த காசும், இருந்த ஒரே வீடும் போனதை பற்றி அவள் கவலைகொள்ளவில்லை. நன்றாக இருந்தபோது இருந்த சொந்தபந்தங்கள் அவர்களின் ஏழ்மையை காரணம் காட்டி ஒதுக்கியபோது நிரம்பவே! வலித்தது. திருமண வயதில் இருக்கும் மகனை நினைத்து அவனையறியாமல் கண்ணீர் வடிப்பவள் அவன் வாழ்க்கை சிறக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வாள்.
 
வீட்டுக்கு வந்த சுதீப் தயாளனைக் கண்டு திகைக்க “வாங்க ப்ரோ” என்று அவனையே! அவன் வீட்டுக்கு அழைத்து அதிர்ச்சியும் கொடுத்தான்.
 
தயாளனும், ஈகையும் மாறிமாறி பேசியதில் ஒருவாறு சுதீப் சம்மதிக்க, கோவிலுக்கு அருகில் வாடகைக்கு கடை எடுத்து பொருட்களோடு சுதீப் கடையில் அமர்த்தப்பட்டான். அதேபோல் காயுவின் வீட்டுக்கு அருகே! குடிபோயினர்.
 
ஒரு வருடத்துக்கான வீட்டு வாடகையும், கடை வாடகையும்தான் கட்டிவிட்டதாகவும், அது கடன்தான் எப்போ முடியுமோ! அப்போ கொடுங்கள் என்று கூறி விட அடுத்து பாயலை பெண் கேட்டு சென்றனர் அன்னையும், மகனும்.
 
தங்களுடைய உண்மையான நிலைமையையும் நண்பன் ஒருவர் உதவியதாகவும் சுதீப் காயுவின் தந்தையிடம் கூறினான். எங்கேயும் தயாளனின் பெயர் வரக்கூடாதென்று அவன்  உத்தரவு. பெரிதாக செலவு செய்து கல்யாணம் பண்ண முடியாது எங்காதரப்பில் யாரையும் அழைக்க மாட்டோம் சீதனம் எதுவும் வேண்டாம் என்று விட்டாள் சுதீப்பின் அன்னை.
பாயலுக்கு கல்யாணம் நடந்தா போதும், சுதீப் உழைப்பாளி என்று தெரிய காயுவின் தந்தை சம்மதித்தார்.
 
கல்யாணத்திலும் பெரும்தொகை பணத்தைத்தான் கல்யாண பரிசாக கொடுத்தான் தயாளன். சுதீப் வாங்க மறுக்க, அது கடன் இது கல்யாண பரிசு என்று ஈகை பேசியே! வாங்க வைத்திருந்தான்.
 
அதன் பின் காயுவை பெண் கேட்டு மீண்டும் அவள் வீட்டு வாசப்படிக்கு ஏறினான் தயாளன். இந்த தடவை காயுவின் தந்தை மறுக்கவில்லை. இப்பொழுதுதான் பாயல் கல்யாணம் முடிந்ததென்றும், இப்போதைக்கு இன்னொரு செலவை செய்ய தன்னால் முடியாதென்றும் கூற கடுப்பானான் தயாளன். அவனால் காயுவை முறைக்கத்தான் முடிந்தது.
 
“ஒன்னு பண்ணுங்க கல்யாணத்துக்கான மொத்த செலவையும் நாம பண்ணுறோம். நீங்க எவ்வளவு செலவு பண்ணனும்னு இருந்தீங்களோ! அத அப்போரமா கொடுத்துடுங்க. கல்யாணமும் நடந்தா மாதிரி இருக்கும், உங்க சுமையும் கொறஞ்சிடும்” ஈகை சொல்ல
 
காயுவின் அன்னை தந்தையை அழைத்துக்கொண்டு போய் “எத்தனையோ! வருஷமா நம்ம பெண்ணுக்காக காத்துக்கொண்டு நிக்குறாரு சரினு சொல்லுங்க, உங்க பிடிவாதத்தால் நல்ல பையன இளந்துடாதீங்க. நமக்கு இன்னொரு பொண்ணு இருக்கா” என்று மூக்கை சிந்த அது கொஞ்சம் அவரை அசைத்தது.
 
அதன்பின் காயு-தயாளன் திருமணம் எந்த சிக்கலும் இல்லாமல் பெங்காலி முறைப்படி இனிதே! நடந்தது. சுதீப் தயாளனோடு நெருங்கிப் பழகுவதைக் கண்டு இந்த ரெண்டு மாப்பிள்ளைங்களாவது ஈகோ பார்க்காமல் பேசிக்கிறாங்களே! என்று சந்தோசம் வேறு பட்டுக்கொண்டனர் காயுவின் பெற்றோர்.
 
“அப்பா அத்துணை வருஷம் காத்துண்டு கல்யாணம் பண்ணிகிட்டாரா? பார்கவி ஆச்சரியமாக கேக்க”
 
“ஆமா ஆனாலும் அவனை விட நான் சினியார்தான்” என்று பெருமை பாட
 
“நீங்க ஒன்னும் எனக்காக காத்துண்டு இருக்கலையே! எதேச்சையா தான் உங்களுக்கு நான் கெடச்சேன்” ஈகையின் மூக்கை உடைத்தாள் பார்கவி. 
 
விமானம் தரையிறங்கியதும், நேராக மருத்துவமனையை அடைந்தனர். அதிக மனஉளைச்சலால் மைல்டு அட்டாக் என் மருத்துவர் கூறி இருந்தார்.
 
ஐந்து பெண்களையும் திருமணம் செய்துகொடுத்தாயிற்று. ஐந்தாவதுப் பெண் ரஸ்மி கூட காதல் திருமணம்தான். தயக்கமில்லாமல் தயாளனிடம் கூறியவள் வீட்டில் பேசி மணந்துகொண்டாள். அவள் காதலித்த நரேனின் அன்னை வரதட்சணை வேண்டும் என்று இல்லையென்றால் இந்த திருமண நடக்காது என்று கூறிச்செல்ல. யாரும் அறியாமல் பணத்தைக் கொண்டு சென்று கொடுத்தவன் அவர்களே! மீண்டும் வந்து பேசுவதுபோல் பேசி கல்யாணத்தை நடாத்தி இருந்தான்.
 
கணவன் காதல் மயக்கத்தில் ரஸ்மியிடம் உளறிவிட ஒற்றைப்பையன் என்றும் பாராமல் மகனை பிரித்து தனியாக அழைத்துக்கொண்டு மும்பாய் சென்றுவிட்டாள்.
 
காயு கூட “ஏன் டி” என்று கடிய
 
“அதான் விலைகொடுத்து அவங்க மகனை வாங்கியாச்சே! இனி உரிமைகோரி என்ன பயன்? பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க, மகன படிக்க வைக்க இந்த மாதிரியான காரணம் என்றாலும் பரவாயில்ல அந்தம்மா காச வாங்கி பேங்க்ல போட்டு வச்சிருக்கு” என்று விட காயுவால் தங்கையின் தைரியத்தை மனதில் மெச்சிக்கொள்ள மட்டும்தான் முடிந்தது.
 
மூத்த அக்கா டில்லியில் இருக்கிறாள். தனது இருபத்தி எட்டு வயதுவரை குடும்பத்துக்காக உழைத்துவிட்டேன். இனி என் குடும்பம் என்று வாழ விடுங்க என்றவள் கணவன் குழந்தைகளோடு ஒதுங்கிக் கொண்டாள். பண்டிகை, திருவிழா என்றால் மாறிமாறி மாமியார் வீடு, பெத்தவங்க என்று பார்த்துவிட்டு செல்பவள் பணமும் கொடுத்தால் தந்தை வாங்க மாட்டார் என்று துணிமணியாகவே! வாங்கி வருவாள்.
 
 
இரண்டாவது அக்கா ஊரில்தான் இருக்கிறாள். குழந்தை, கணவன் என்று நன்றாகத்தான் இருக்கிறாள். என்ன மாமியார் தாய்வீட்டுக்கு அனுப்புவதில்லை. அனுப்பினால் மகனை சுரண்டி விடுவார்களாம். அவள் வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் இருப்பதே! மேல் என்று அமைதியாக இருக்கின்றனர் பெற்றவர்கள்.
 
எல்லாம் நன்றாகத்தானே! போய் கொண்டிருக்கு இவருக்கு என்ன மனஉளைச்சல் என்று தயாளன் சுதீப்பை கேட்க அவனுக்கும் புரியவில்லை.
 
கண் விழித்தவர் முதலில் தயாளனைத்தான் தேடினார். காயு-தயாளன் கல்யாண செலவில் பாதியை கூட கொடுக்க முடியவில்லை கொடுக்க முடியாமல் இறந்து விடுவேனோ! என்று அஞ்சியதாக கூற அவர் மனக்கவலை என்னவென்று அறிந்த அனைவருக்குமே! இப்படி ஒரு மனிதரா? என்றுதான் நினைக்காத தோன்றியது.