Advertisement

நிலவு 19
சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும் வாயை திறக்க மாட்டாள் என்று நன்கு அறிந்தவனாக கையைக்கட்டிக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தான் மாதேஷ்.
 
ஒரு மாதத்திற்கு ஒருநாள்தான் அவளை சந்திக்க முடிகிறது அதுவும் ஒரு மணித்தியாலத்துக்கும் குறைந்த நிமிடங்கள். அவன் ஆசையாசையாக அவளை சந்திக்க வந்தால் அவள் சாப்பிடுவதில் குறியாக இருப்பாள். தினமும் இரவில் அலைபேசியில் உரையாடுவதுதான். அது நேரில் சந்திப்பது போல் ஆகிவிடுமா?
 
அலைபேசியில் உரையாடும் பொழுது தன்னை வந்து சந்திப்பதில்லை. மத்த காதலர்கள் போல் நானும் நீயும் கைகோர்த்து நடக்கணும், மழையில் நனையனும், அது இது என்று சினிமாவில் வருவதையெல்லாம் பேசுவாள். ஆனால் அவன் அவளை சந்திக் வருவதென்றால் அவள் முடிவு செய்யும் இடம் ஏதாவது ஒரு உணவகமாக மட்டுமாகத்தான் இருக்கும்.
 
முதலில் இதை கவனிக்காதவன் போகப்போக கவனித்து கடிய “சாப்பிடும் போது திட்டாதே! அத்தான்” என்று செல்லம் கொஞ்சி அவன் வாயை அடைத்து விடுவாள். அந்த அத்தானில் உருக்கியவன் அதன்பின் அவள் உண்டு முடிக்கும்வரை வாயை திறக்காமல் அவளை சைட்டடிக்கும் வேலையை செவ்வனே! என்று செய்ய ஆரம்பித்திருந்தான்.
 
“பேரர் டூ கூல் காப்பி”
 
“போதும் டி லூஸ்மோசன் ஆகிடும்” மாதேஷ் சிரிக்க
 
அவனை முறைத்தவள் “ஆனாலும் பரவால்ல. கல்யாணம் பண்ணிக்க போறவன் வாங்கிக் கொடுத்தா சாப்பிடணும்”
 
“நான் எங்க டி வாங்கிக் கொடுத்தேன். வந்ததிலிருந்து நீதான் வாங்கி சாப்பிடுற” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்
 
“இங்க பாரு அத்தான். மாசத்துக்கு ஒருக்காதான் என்ன வந்து பாக்குற. போனா போகுதுன்னு உன்ன கட்டிக்க சம்மதிச்சேன். உன்னால வாங்கிக்கொடுக்க முடியலைன்னா சொல்லு நா வேற ஆள பாக்குறேன்”  கண்ணை உருட்டி சொன்னாள் மஞ்சு எனும் மஞ்சுளா.
 
“நீ செஞ்சாலும் செய்யுவ டி என் அத்த பெத்த ரத்தினமே! சாப்பிடு சாப்பிடு. நல்லா சாப்பிட்டு பூசணிக்கா சைசுல இருக்க. பார்த்து வெடிச்சிட போகுது”
 
“கண்ணு வைக்காத” சிணுங்கலோடு சொல்ல
 
“அது எப்புடி டி மாசத்துக்கு ஒருக்கா மீட் பண்ணாலும் ரெஸ்டூரண் தவிர எங்கயும் வர மாட்ட. இந்த பார்க், பீச், சினிமா, இங்க எல்லாம் மீட்டிங் பிளேஸ் இல்லனு போர்ட் ஏதாவது போட்டுட்டாங்களா? இல்ல அரசாங்கமே! தடை விதிச்சிருச்சா?” அவ்வளவு கிண்டல் வழிந்தது அவன் குரலில். 
 
அவன் கிண்டல் செய்வது பச்சையாக தெரிந்தாலும் “அங்கெல்லாம் நல்ல சாப்பாடு கிடைக்காது” உண்மையை ஒத்துக்கொண்டாள்.
 
“அப்படியா?”  பொய்யாய் கண்ணனில் ஆச்சரியம் காட்டியவன் “அப்போ ஒரு மாசமா நீ பட்டினியா இருக்கியா? நா வந்தாதான் சாப்பிடுறியா?” அவளை வார
 
அதை கிடப்பில் போட்டவள் வயிறு நிறைந்து விட்ட மிதப்பில் “எப்படி இருக்கா உன் அத்த மக பார்கவி” வளமை போல் அவனை வம்பிழுத்து நக்கல் கலந்த தொனியில் கேட்டாள். 
 
தான் இருக்க வேண்டிய இடத்தில் எவளோ ஒருத்தி வந்து உரிமையாக இருக்கிறாளே! என்ற கோபம் உள்ளுக்குள் கனன்றாலும். ஊருக்கு சென்றால் அப்பா தன் குடும்பத்தையே! வெட்டி சாய்த்து விடுவார் என்று அன்னை புலம்புவதால் எல்லா கோபத்தையும் மாதேஷ் மேல்தான் காட்டுவாள் மஞ்சு.  
 
“அவளுக்கென்ன நல்ல ஜெகஜோதியா இருக்கா மூணு நாளைக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு”
 
இது என்ன டா புதுக்குழப்பம் என்று பார்த்தவள் “என்ன அத்தான் சொல்லுற? யாரை கல்யாணம் பண்ணா? சீராட்டி பாராட்டி சீர் செஞ்சி கல்யாணம் வேற பண்ணி வச்சீங்களா? உன் அத்த பொண்ணு நான் இங்க இருக்கேன். யாரோ ஒருத்திய அத்தமகனு வீட்டுல வச்சிருக்கீங்க, என்ன நடக்குது அங்க” கோபம் எட்டிப்பார்க்க எகிறினாள் மஞ்சு. இதை இவள் மாதேஷை சந்திக்கும் பொழுதெல்லாம் கூறுவதுதான். தாத்தனுக்கு அப்படி என்ன ஜாதி வெறி? சொந்தபந்தங்கள் இருந்தும். நெருங்க முடியாமல் அனாதையாக வாழ்வது எவ்வளவு கொடுமை என்று நன்கு உணர்ந்தவளின் ஆதங்கம் கோபமாக அப்பப்போது வெளிப்படும்.
 
“இங்க பாரு மஞ்சு உன்னையும் அத்தையும் நான் சென்னைல பார்த்து அத்தைய அடையாளம் கண்டதாலதான் இப்போ நீ அத்தான்னு உரிமையா என்கூட பேசிகிட்டு இருக்க, இல்லனா நானும் பார்கவிதான் என் அத்த மகனு நம்பி இருப்பேன். அவளை தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஜானகி அத்த பொண்ணுன்னு சொன்னப்போ நானும் அவ தாத்தாவை ஏமாத்தி நான் தான் ஜானகி பொண்ணுன்னு சொல்லி இருப்பாளோனு  அவளை சந்தேகப்பட்டேன்.
 
அவளை கண்காணிக்க ஆரம்பிச்சேன். அவ நம்ம குடும்பத்து ஆளுங்க கிட்ட இருந்து ஒதுங்கித்தான் போனா. காசுக்காக நடிக்க வந்திருப்பா. பெரிய அமுண்ட்ட பார்த்தா சுருட்டிக்கிட்டு ஓடிடுவானு நெனச்சேன். காசைப்பார்த்தோ, நகையை பார்த்தோ அவ கண்ணுல பெருசா எந்த ஆர்வமும் வரல. அவகிட்ட பேசி பார்த்ததுல நல்ல பொண்ணா தெரிஞ்சா. படிக்கிற பொண்ணு காலேஜ் சேர்த்தேன். எங்க வீட்டுல இருக்குறதால அவளுக்கு பாதுகாப்பா இருந்தேன். காலேஜ் கூட்டிட்டு போனேன், வந்தேன். எந்த பேச்சு வார்த்தையும் வச்சிக்கலை. அதுக்கு காரணம் பேசி அவளை சங்கடத்துக்கு உள்ளாக்க கூடாதுன்னுதான். ஆனா ஈகை சாருக்கு அவளை ஏற்கனவே! தெரியும் போல அவர் வந்ததுல இருந்தே! அவர் பார்வை சரியில்ல. இப்போ திடீரெண்டு ரெண்டு பேருக்கும் கல்யாணம் வேற ஆங்கிருச்சு” என்று கோவிலில் நடந்ததை கூறினான்.
 
அவன் சொல்வதும் உண்மைதான். அவனாகவே! வந்து அவர்களிளிடம் பேசவில்லையென்றால் இந்த அத்தான் அவளுக்கு கிடைத்திருக்க மாட்டான். அதற்காக கோபத்தைக் கட்டுப்படுத்தி நடிக்கத்தான் முடியுமா?
 
“ஓஹ்.. அவரைத்தான் கல்யாணம் பண்ணிகிட்டாளா? போன மாசம் நாம சந்திச்சப்போ நீ சொன்னியேனு அந்த ஈகையை பத்தி விசாரிச்சேன். அவருக்கு அண்ணன் இருக்குறது உண்மை. அவரு கம்பனியை இங்க ஒரு லேடி தான் பாத்துக்கிறாங்க. அவங்க இவருக்கு யாருன்னு தெரியல. பார்கவி காசுக்காக வரலன்னு நீ சொல்லுற. தாத்தாதான் கூட்டிட்டு வந்தாரு. ஈகை சார் ஏதோ திட்டத்தோட வீட்டுக்குள்ள வந்திருக்காருனு வேற சொல்லுற அவர்தான் பார்கவி அனுப்பி இருப்பாரோ!”
 
“இல்லை. பார்கவிக்கு அவரை தெரியலைனு அவள பார்த்தாலே! தெரியுது. தாத்தா தான் அவளை பொய் சொல்லி வீட்டுல தங்க வச்சாரு.  அந்த நிலம் ஜானகி அத்த பேர்ல இருக்குறதால அந்த நிலத்துக்காகத்தான் பார்கவிய தாத்தா கூட்டிகிட்டு வந்தாலும். ஈகை சார்தான் அத வாங்கிட்டாரே!”
 
“ஈகை சார்கிட்ட இருந்த அந்த நிலைத்த வாங்க திட்டம் போட்டு அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி இருந்தா” மஞ்சு புருவம் தூக்கிக் கேக்க
 
“தாத்தா அப்படி பண்ணி இருப்பாரா?” மாதேஷ் சந்தேகமாக கேட்டான்.
 
“பெத்த பொண்ணு கைல கிடைச்சா இப்பவும் கொலை பண்ண தயங்காதவர் என்ன வேணாலும் செய்வார்” மஞ்சு பெருமூச்சு விட
 
அவள் கையை ஆறுதலாக பிடித்த மாதேஷ் “அத்தைய கவலை படாம இருக்க சொல்லு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்”
 
“ஆமா நீ வீட்டுக்கெல்லாம் வர மாட்டியா? அத்த பொண்ண மட்டும் பாத்துட்டு போற? அத்தைய பார்க்கணும் பேசணும் எங்குற் எண்ணம் கொஞ்சம் கூட இல்ல உனக்கு” அன்னையின் புலம்பல்களை காதுகொடுத்து கேட்பவள்தானே! கோபத்தை அவனிடம் காட்டலானாள்.
 
மஞ்சுவின் அன்னையும் தந்தையும் காலேஜ் படிக்கும் பொழுதே வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தவர்கள். மருதநாயகம் ஜாதிவெறி பிடித்தவர் என்பதால் கண்டிப்பாக தங்களை உயிரோடு விட்டுவிடமாட்டார் என்று நன்கு அறிந்திருந்தபடியால் அவர் கண்ணில் சிக்காமல் வாழ்வதென்று சென்னையில் குடிபெயர்ந்தவர்கள். படிப்புக்கேர்த்த வேலையையும் தேடிக்கொண்டனர்.
 
மஞ்சு பிறந்து வளரும்வரை அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் மஞ்சுவின் தந்தை கேன்சரில் இறந்துபோக அன்னை முற்றாக உடைந்து போனாள். வயதுப்பெண்ணையும் வைத்துக்கொண்டு சொந்தபந்தங்களின் துணையில்லாது தன் மீதும் தன் பிஞ்சின்மீதும் விழும் கழுகுப் பார்வைகளை சமாளிப்பதற்குள் போதும்போதும் என்றாக மஞ்சுவிடம் புலம்ப ஆரம்பிக்க அது இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
 
“வாம்மா ஊருக்கு போலாம். அப்படி என்ன தாத்தா செய்துவிடப் போகிறார்” என்று மஞ்சு பல தடவை கேட்டுப்பார்த்தும் வெறித்துப் பார்ப்பாளே ஒழிய பதில் சொல்ல மாட்டாள்.
 
அன்னையின் மனநிலையை சீராக்க வாரம்தோறும் மஞ்சு வெளியே அவளை அழைத்துக்கொண்டு சுற்ற ஆரம்பித்திருக்க, ஒருநாள் மாதேஷின் கண்ணில் இவர்கள் பட்டுவிட அவனே! வந்து பேசவும் மஞ்சுவின் அன்னை கொஞ்சம் பயந்துதான் போனாள்.
 
மஞ்சு சண்டைக்கு நிற்க, மாதேஷ் அத்தையை கட்டிக்கொண்டு நலம் விசாரிக்கவும்தான் சூழ்நிலை சமனானது. அதன்பின் அடிக்கடி சென்னைவரும் பொழுது சந்தித்துக் கொண்டவர்கள் அலைபேசியில் உரையாடி காதலிக்கவும் ஆரம்பித்திருந்தனர்.
 
மஞ்சு ஊருக்கு வரவேண்டும் என்று சொல்ல மாதேஷ் மறுத்துக்கொண்டிருக்கிறான். இதற்கிடையில் பார்கவியின் வரவு. அதன்பின் ஈகையின் வரவு.
 
“ஜானகி அத்தைய வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும். வீட்டு சூழ்நிலை சீராகணும். அதுவரைக்கும் அவங்க முகத்தை பார்க்க சங்கடமா இருக்கு” கவலையான முகத்தோடு மாதேஷ் கூற
 
“எனக்கு ஒருவிஷயம் புரியல. எங்க அம்மா பேரு ஜானவிதானே! எதுக்கு எல்லாரும் ஜானகினு கூப்பிடுறாங்க” அவன் கவலையை போக்க வேண்டியே! பேச்சை மாற்றினாள் மஞ்சு.
 
 “அதுவா… பேரு வைக்கும் போது பெர்த் சர்டிபிகேட்டுல என்னமோ ஜானவினுதான் இருக்கு. ஆனா பாட்டியோட வாயில ஜானகினுதான் வருதாம். அதுதான் பேரு நெனச்சி வீட்டு வேலைக்காரர்களும் ஜானகியம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அதுல அவங்க எல்லாருக்கும் ஜானகியாகிட்டாங்க. ஸ்கூல் போக ஆரம்பிச்ச பிறகுதான் அத்தைக்கே! தன்னோட பேர் ஜானவினு தெரியும்னா பாரேன்” மாதேஷ் இப்படியும் கூட நடக்குமா என்று ஆச்சரியமான முகபாவனையை கொடுத்து சிரிக்க மஞ்சு கைகைட்டி பார்த்திருக்க, “ரெண்டு ஜானகி இருந்ததால இவங்க சின்ன ஜானகியாகிட்டாங்க” மஞ்சுவுக்கு புரியும் படி விளக்கினான் மாதேஷ்.
 
“சரி எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேல இருக்கு அத முடிச்சிட்டு நைட்டே! ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன்”
 
“ஆமா அந்த செல்வம் தாத்தாவை பத்தி எந்த தகவலும் கிடைக்கலையா?”
 
“முத்துராஜ் சித்தப்பாவோட மேனேஜர்தான் இன்னைக்கு வரைக்கும் அவரோட கம்பனியை பாத்துக்கிறாரு. நேர்மையானவராக இருக்குறதால இத்துணை வருஷமா எந்த பிரச்சினையும் இல்லாம போய்கிட்டு இருக்கு. கம்பளி, பருத்தினு எல்லா விதமான துணிகள் நெய்யப்பட்டாலும் கம்பனியை இன்னும் முன்னேற்றணும் என்று அவருக்கும் ஆச இருக்கு எனக்கும் ஆர்வம் இருக்கு ஆனா பாட்டி வேணாம்னு சொல்லுறாங்க”
 
“ஏனாம்”
 
“முத்துராஜ் சித்தப்பாவும் உயிரோட இல்ல. இதெல்லாம் அனுபவிக்க வேண்டிய அவர் பையனும் உயிரோட இல்ல. யாருக்காக இத பண்ணனும்னு கேக்குறார்ங்க”
 
“வாஸ்தவம்தான். செல்வம் தாத்தாவை பத்தி எந்த தகவலும் கிடைக்கலையா?”
 
“இல்ல” கவலையாக தலையசைத்தான் மாதேஷ்.
 
கனகாவேல்தான் முத்துராஜின் ஜவுளி நிறுவனத்தை ஆள் வைத்து நடத்தலாம் என்ற யோசனை கூறி இருந்தாலும் யார் பார்த்துக்கொள்கிறார் என்று அவருக்கு தெரியவில்லை. முத்துராஜின் மேனேஜர்தான் இதுநாள் வரை பார்த்து வருவதைக் கூறாமல் செல்வத்தை கண்டு பிடித்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அவர் பார்த்துக்கொள்வார். அவரால் தனியாக பார்த்துக்கொள்ள முடியா விட்டால் நாம் துணையாக இருப்போம் என்று வேதநாயகி கூற. செல்வம் தாத்தா கொல்கத்தாவில் இருப்பதாக கூறினால் அவர் எதற்காக அங்கு சென்றார் என்ற கேள்வி எழுந்து ஈகை உயிரோடு இருக்கும் விடயம் தெரியவந்து இருவர் உயிருக்கும் ஆபத்து வரக் கூடும் என்று சொல்லாமல் மறைத்து விட்டவர். செல்வம் தாத்தாவிடமும் இதை கூற மறந்து விட்டார் இதனால் முத்துராஜின் கம்பனி இன்றும் அவர் பெயரில் இருப்பது ஈகைக்கும் தெரியாமல் போனது. 
 
“என்ன காதம்பரி யோசிச்சுகிட்டு இருக்க” சேகரன் தங்கையின் தலையை தடவியவாறு கேக்க
 
“ஏதாவது பண்ணனும் அண்ணே! என் மனசு ஆறல” கோபமூச்சுக்களை வெளி விடவில்லை. வார்த்தைகளில் மட்டும் அனல் தெறித்தது.
 
“என்ன இருந்தாலும் நீ வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது” சேகரன் தங்கைக்கு புரியவைக்க முயன்றான்.
 
“இல்ல அண்ணா. என்ன அடக்கி, முடக்கி மூலைல வைக்கணும்னுதான் என் பையன திட்டம் போட்டு வீட்டை விட்டு அனுப்பி இருக்கானுங்க. இதுல என் புருஷனும் கூட்டு. அந்த ஈகை பேசப்பேசத்தான் என் புத்தில உரச்சது” கையை வீசி வீசி ஈகை பேசிய அனைத்தையும் அண்ணனுக்கு கூறலானாள் காதம்பரி.
 
ஆனால் கைதேர்ந்த வியாபாரியான சேகரன் “ஆமா ஈகை பேசினது உனக்கு எப்படித் தெரியும்?” யோசனையாகவே! கேக்க
 
“வெளிய இருந்துதான் பேசினான்”
 
“வெளியான எங்க? தோட்டத்துலயா? வராண்டாலயா?
 
“என்னோட ரூம்க்கு வெளியே….” என்றவள் குரல் உள்ளே போனவளாக அண்ணனின் முகம் பார்த்து நிற்க சத்தமாக சிரித்தான் சேகரன்.
 
“அவன் நல்லவனா கெட்டவனான்னு எனக்கு தெரியாது. ஆனா அவனை சீண்டினதால உங்க குடும்பத்தை கருவறுக்காம  விடமாட்டன்னு மட்டும் புரியுது”
 
“என்ன அண்ணா சொல்லுற?” கொஞ்சம் கலவரம் அடைந்தாள் காதாம்பரி.
 
“ஈகையை யாரோ கடத்தி உங்க வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அவன் சந்தேகம் உன் மாமனார் மேலதான் இருக்கு. ஆனா சீசீடிவில நம்ம ஹரி இருக்குறதால ஹரியவச்சி உன் மாமனார் செஞ்சிருப்பாருனு நெனச்சி இருப்பான். போலீசுக்கு போறேன்னு சொன்னதும் ஹரியை காப்பாத்த உன் மாமனார் ஹரியை அடிச்சி வீட்டை விட்டு தொரத்துறதா நாடகம் ஆடிட்டாரு. உன் வீட்டுக்காரர் அத சரியா புரிஞ்சி நடந்துக்கிட்டாரு. நீதான் புரிஞ்சிக்கல. ஆனா அவன் கண்ணுக்கு இதெல்லாம் நாடகம்னு புரிஞ்சிருச்சு. சமயம் பார்த்து உன் மாமனார்தான் இத பண்ணார்னு உன்கிட்டயே! போட்டுக்கொடுத்து அவன் நல்ல பேர் வாங்க பார்த்தான். நீயும் கொதிச்சி வீட்டை விட்டு வந்துட்ட” சேகரன் புட்டுப்புட்டு வைக்க
 
ஒருவேளை அப்படியும் இருக்குமோ! என்ற அவள் பார்வை அண்ணனுக்கு பதில் கூறாது எழுந்து ஹரிஹரன் இருக்கும் அறைக்குள் நுழைய சேகரனும் பின்னால் வந்தான்.
 
“டேய் ஹரி உண்மைய சொல்லு நீதான் பார்கவியையும், அந்த ஈகையையும் கடத்தினியா?”
 
கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த ஹரிஹரன் அன்னை கேட்ட கேள்வியில் “இல்லை” என்று பதில் கூறி விட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டான்.
 
“நீ பார்கவி கடத்தி கல்யாணம் பண்ண பார்த்த ஆனா அத தெரிஞ்ச யாரோ! ஈகையையும் கடத்தி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க” பக்கத்தில் இருந்து பார்த்தது போல் சேகரன் சொல்ல எழுந்து அமர்ந்து விட்டான் ஹரிஹரன்.
 
அப்படித்தான் நடந்ததா என்று அண்ணனிடம் கேள்வியாய் ஏறிட்ட காதம்பரிக்கு மகனின் பதட்டமே காட்டிக்கொடுக்க ஹரிஹரனை மொத்தலானாள்.
 
“சொல்லு நீதான் பார்கவி கடத்தினியா? பாவி பாவி ஏன் டா இப்படி செஞ்ச? அவளெல்லாம் ஒரு ஆளுன்னு கடத்திக் கல்யாணம் பண்ண பாத்திருக்க.  உன்னால எவ்வளவு பிரச்சினை?”
 
“ஆமா நான்தான் பார்கவிய கடத்தினேன். ஆனா ஈகையை கடத்தல” வெறுமையான குரலில் கூறினான் ஹரிஹரன்.
 
“ஹ்ம்ம் அப்போ நீ பார்கவி கடத்துறது யாருக்கோ தெரிஞ்சிருக்கு. அத தெரிஞ்சிதான் ஈகையையும் கடத்தி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருறதுல யாருக்கு லாபமோ அவங்கதான் இத பண்ணி இருக்கணும்” ஹரிஹரன் சொல்வதை கைகட்டி கேட்டுக்கொண்டிருந்த சேகரன் தன் கருத்தை முன் வைத்தான்.
 
 
ஈகையை பற்றி முழுவதுமாக தெரியாததால், நடந்ததை கேட்டதறிந்து ஊகித்து தர்க்கமாக யோசித்து இதுதான் நடந்திருக்கும் என்றான் சேகரன்.
 
“வேற யாருக்கு என் மாமனாருக்குத்தான் லாபம். அவர்தான் அவனை வீட்டுக்குள்ள சேர்த்தாரு” காதாம்பரி கோபமாக சொல்ல
 
“தாத்தா, அப்பா, சித்தப்பா மூணுபேரும் அந்த வெள்ளப் பன்னிக்கு பார்கவி கல்யாணம் பண்ணி கொடுக்க பேசிக்கிட்டாங்க அதான் நான் பார்கவிய கடத்தி கல்யாணம் பண்ணவே! முடிவு செஞ்சேன். அது மட்டுமா? திட்டம் போட்டு அவள அவன் கூட காலேஜுக்கு அனுப்பி வைக்கிறாங்க” சொன்ன ஹரிஹரன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
 
“பாத்தியாண்ணே! என்ன காரியம் எல்லாம் பாத்திருக்காங்கனு. அப்போ இவங்கதான் அன்னைக்கி பார்கவியையும், ஈகையையும் கடத்த திட்டம் போட்டு இருக்கணும், ஹரி கடத்தினத்தால் ஈகையை  மட்டும் கடத்தி ஹரியை தோட்ட வீட்டுல கொண்டு போய் வச்சி இருக்கணும். ஈகை போலீசுக்கு போவேன்னு சொன்னதும் போலீசுக்கு போனா மானம் போகும்னு ஹரியை காப்பாத்துறதா நினைச்சி வீட்டை விட்டு அடிச்சி துரத்திட்டாங்க. அத்தனை வேலைக்காரர்களும் வேடிக்கை பாத்தாங்களே மானம் போகலையா? ”
 
“அந்த ஈகைக்கு அது தெரிஞ்சு போச்சு அதான் அவன் அடிக்க ஆரம்பிச்சுட்டான். அவன் நினைச்சி இருந்தா இந்த கல்யாணத்த நிறுத்தி இருந்திருக்கலாம். கல்யாணம் நடந்தாதான் அந்த வீட்டு மாப்பிள எங்குற உறவு முறைல உள்ளேயே! இருந்து அடிக்கலாம்னு நினைச்சி இருப்பான்னு எனக்கு தோணுது. உன் வீட்டுக்காரருக்கு இது தேவைதான்”
 
“இதெல்லாம் பத்தாதண்ணே!” காதாம்பரி வன்மமாக சொல்ல
 
“என்னமா சொல்லுற?”
 
“எப்போ அவங்க திட்டம் நிறைவேறணும்னு பெத்த பையன்னும் பார்க்காம ஹரியையே! பயன் படுத்திக்கிட்டாங்களோ! அவர் எனக்கு வேணாம்”
 
“டிவோர்ஸ் கேக்க போறியா?”
 
“ஹாஹாஹா…. அத கொடுத்துட்டா நிம்மதியா இன்னொரு கல்யாணம் பண்ணி ஜாலியா ஹனிமூன் போய்டுவாரு. அந்த ஈகைக்கு நம்ம பங்குகளை வித்துடலாம். வீட்டாளுங்களும், வீட்டு மாப்பிள்ளையும் அடிச்சிக்கிட்டு சாகட்டும்” எரிமலை குழம்பாக வெடித்தாள் காதாம்பரி.
 
“என்னம்மா பேசுற?” தங்கையின் பேச்சு நல்லதிற்கில்லை என்று சேகரன் அதட்ட
 
“இன்னைக்கு வரைக்கும் நீ சொல்லுறததாண்ணே!  நான் பண்ணேன். இந்த ஒரு விசயத்த மட்டும் எனக்காக விட்டுக்கொடு” காதம்பரி இதுதான் முடிவு என்பதுபோல் பேச
 
“அப்படி எனன அந்த பையனுக்கு உங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிகொடுக்க வேண்டி இருக்கு” சரியான பாயிண்டை பிடித்தான் சேகரன்.
 
“என் மாமனாரை பத்தி உனக்கு தெரியாதா? சொத்துசேர்க்கவென்றே அலையிறவரு. இவள் ஒரு அன்னக்காவடி. அவன் கோடிஸ்வரன். நம்ம ஹரிணிக்கு எங்க வேணாலும் மாப்புள கிடைக்கும். இவன விட்டா இவளுக்கு நல்ல மாப்புள கிடைக்காது. அதனால திட்டம் போட்டு இதெல்லாம் செஞ்சிருப்பாரு” காதாம்பரி சொல்ல சேகரனுக்கும் அதுதான் உண்மையென்று தோன்றியது.
 
“சரி அண்ணே! அப்போ அந்த ஈகையை கூப்பிட்டு பேசலாமா?” காதம்பரி யோசனை கேக்க
 
“பேசலாம். ஆனா…. உன் குடும்பத்து மேல உனக்கு வன்மம் இருக்குறதால பங்குகளை விக்குறதா அவனுக்கு தோன கூடாதே! என் தொழிலில் நஷ்டம் அதனால பங்குகளை விக்கிறோம்னு சொல்லுவோம். வாங்க விருப்பமானு கேப்போம்”
 
“இல்லனு சொல்லிட்டா? என்ன பண்ணுறது”
 
“நீ எதுவும் பேசாதே! நானே! பேசி சம்மதிக்க வைக்கிறேன். சரியா?”
 
“நீ என்ன பண்ணுறியோ! எது பண்ணுறியோ! எனக்குத் தெரியால. இவன் பங்கு வாங்கினதால குடும்பத்துல பிரச்சினை வரணும். அவ்வளவுதான் சொல்லிட்டேன்”
     
இவர்கள் ஒன்றை நினைத்து திட்டம் போட ஈகைக்கு  பழம் நழுவி பாலில் விழுந்த கதையானது.
 
காதம்பரியின் கோபம் உடனடி முடிவை எடுக்க வைத்திருக்க சேகரன் ஈகையை நேரில் அழைத்துப் பேசினான்.
 

Advertisement