செவ்வானில் ஒரு முழு நிலவு 18

6575

நிலவு 18
சத்யநாதனுக்கு ஊரில் ஏக்கர் கணக்கில் வயல் வரப்புகளும், கரும்புத் தோட்டங்களும் இருந்தாலும் விவசாயம் ஒன்றை தவிர வேற எந்த தொழிலை பற்றியும் அவர் சிந்தித்து பார்த்ததில்லை. பணத்தை சம்பாதித்து சேமித்து வைப்பதை விட ஊர் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்குள் இருந்தது.
 
எந்த காலத்தில் எந்த பயிரை பயிரிட்டால் விளைச்சல் அதிகம் கிடைக்கும். ஏழை எளிய மக்களின் பசியை போக்கலாம். லாபம் பார்க்கலாம் அதனால் ஊருக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இருப்பவர் சத்தியநாதன்.
 
 
ஆனால் மருதநாயம் அவ்வாறில்லையே! பணம் சம்பாதிப்பது அதை பெருக்குவதுதான் மருதநாயகத்தின் ஒரே! குறி.
 
சத்தியநாதன் இறந்ததும் அவரது மகன் முத்துராஜ் குடும்பத்தை விபத்துக்குள்ளாகி கொன்றதும் அவர்களது சொத்து முழுவதும் தன் கைக்குள் வந்து விடும் என்று எண்ணினார். ஆனால் சத்யநாதனோ தன்னுடைய சொத்துக்களை தன் குடும்ப வாரிசுகளுக்கு பிரித்து உயில் எதுவும் எழுதி இருக்க வில்லை. அவரது உயிலில் இருந்தது பரம்பரை சொத்துக்கள் தன்னுடைய வாரிசுகளுக்கு சொந்தம் அவர்கள் இல்லாத பட்சத்தில் ஊருக்கு செலவழிக்கப்பட வேண்டும் என்பதே!
 
சத்யநாதனின் உயிலில் என்ன இருக்கிறது என்று அறியாமல் தனக்குத்தானே! ஆப்பு வைத்துக்கொண்டார் மருதநாயகம். சொத்துக்கள் தன் பெயருக்கு வாரா விட்டால் என்ன மனைவி வேதநாயகி பெயரிலாவது
மாற்ற முடியுமா என்று முயற்சித்துப் பார்த்து தோல்வியை தழுவினார். ஒருவாறு தலையிட்டு வேதநாயகி சத்யநாதனின் தங்கை என்று கூறி சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டார்.
 
வேதநாயகியும் சத்யநாதனின் தங்கையாக அண்ணன் சொற்படியே! ஒவ்வொரு ரூபாயையும் ஊருக்காக மட்டும் செலவழிக்க பல்லைக் கடித்தார் மருதநாயகம். வேதநாயகி இறந்து விட்டால் இந்த சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை கூட போய் விடும் என்று நன்கு அறிந்ததனாலையே! அவரை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார். இருந்தாலும் அவரையும் சத்யநாதனின் வக்கீலையும் ஏமாற்றி கையாடல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
 
முத்துராஜின் சென்னை தொழிலை தன்னால் பார்க்க முடியாது அதை விற்று விடலாம் என்று மருதநாயகம் கூற கணக்குப்பிள்ளை கனகவேல் ஆள் வைத்து நடாத்தலாமே! என்று யோசனை கூற அது வேதநாயகிக்கும் சரியென்று பட்டது. அந்த கணக்கு வழக்குகளும் வேதநாயக்கிடமே! வந்து சேர கையாளாதவராக நின்றுவிட்டார் மருதநாயகம்.
 
பேரன்கள் வளர்ந்ததும் தங்களது தொழிலை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாதேஷை சென்னைக்கு அனுப்பி வைக்க அவனும் வேதநாயகியின் மறு உருவமாகி நின்று கணக்கு வழக்கை கறாராக பாட்டியிடம் சமர்பிக்கலானான். மொத்தத்தில் மருதநாயத்தின் திட்டங்கள் ஈகையின் வருகைக்கு முன்னாலையே! தடை செய்யப்பட்டிருந்தது.
 
சத்யநாதனின் விவசாய நிலங்களை விற்று தன் பெயரில் சொத்து சேர்க்கலாம் என்று தான் கண்ட கனவு பொய்த்துப் போக என்ன செய்வது? தான் எவ்வாறு சொத்து சேர்ப்பது என்று மண்டையை குடையும் பொழுதுதான் கரும்புச்சக்கரை ஆலை ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தார் மருதநாயகம்.
 
மருதநாயகமும் ஒன்றும் இல்லாதவர் இல்லை. வேதநாயகிக்கு வீட்டுப்பெண் என்று நகைக்களும் ஒரு துண்டு நிலம் மட்டும்தான் திருமண சீராக கொடுக்கப்பட்டிருந்தது. வேதநாயகியின் நிலத்தை விற்க முடியாது அது சத்யநாதனின் நிலத்தோடு இருப்பதால் சிக்கல் அதிகம். அதனால் தன்னுடைய சொத்தை வித்து வேதநாயகின் நிலத்தில் கரும்புச்சக்கரை ஆலையை கட்ட முடிவு செய்தார்.
 
சத்யநாதனின் கரும்புத்தோட்டங்களும் விசாலமானவை ஆலை தேவைப்படும் என்ற காரணம் போதுமானதாக இருக்க வேதநாயகியும் மறுக்க வில்லை. கட்டிடம் கட்டுவதை பற்றி அறிந்திருக்காத மருதநாயம் ஆலையை பற்றி  என்ன அறிந்திருக்க போகிறார் என்று அவரையே! சுரண்டி இருந்தனர் தொழிற்சாலையை கட்டிக் கொடுக்க வந்தவர்கள். பாதிக் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் கட்டிடத்தை கட்டி முடிக்க காசு தேவைபட வேலையை பாதியில் நிறுத்தவும் முடியாது. தான் கண்ட கனவை நிறைவேற்றியே! ஆகவேண்டும் என்ற கட்டாயம். வேறு வழியில்லை. வேதநாயகியின் பரம்பரை நகைகளை அடகு வைக்கவோ! விற்கவோ! வேண்டிய நிலை.
 
மானம், மரியாதை, ஜாதி பார்க்கும் மருதநாயகத்துக்கு மனைவியின் நகைகளில் கை வைப்பது பெருத்த அவமானமாகத்தான் தோன்றியது. நாளைபின்ன திருமணம், திருவிழா என்று ஊர் கூடி இருக்கும் பொழுது நகை நட்டு இல்லாமல் வேதநாயகி அவர்கள் முன் நின்றால் மற்ற ஜாதிக்காரர்களோடு தன் ஜாதிக்கார்களும் கேலி பேசி கைகொட்டி சிரிப்பது போல் காட்ச்சி தோன்ற என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு மூளை குறுக்கு வழியிலில் ஆலோசனை சொல்லியது.
 
 
மருதநாயம் தங்கதுரையை வைத்து மருமகள் காதாம்பரியிடம் நாடகமாடலானார். முடிவில் காதாம்பரி நகைகளை அடகு வைக்க வேண்டாம் குடும்ப மானப்பிரச்சினை. நான் பணம் தருகிறேன் என்றவள் தன் அண்ணனிடம் அழைத்துச் செல்ல கைதேர்ந்த அந்த தொழிலதிபரான காதம்பரியின் அண்ணன் சேகரன் தனக்கும், தங்கைக்கும் பங்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மருதநாயகம்தான் இறங்கி வரவேண்டியதாக போயிற்று.
 
ஆலை கட்டுவதற்கான இடமும் அதிகமான பணமும் தான் போட்டிருப்பதால் எழுபது விகிதம் தனக்கு வர வேண்டும் என்றும் முப்பது விகிதம் காதம்பரிக்கும் அவள் அண்ணன் சேகரனுக்கு சேரும்படி ஒப்பந்தம் போடப்பட்டது.
 
 
சரியாக விசாரிக்காமல் தங்கதுரைக்கு காதம்பரியை திருமணம் செய்து வைத்து விட்டதாக காதம்பரியின் அண்ணன் சேகரனுக்கு குற்றஉணர்ச்சி  இருந்துகொண்டே இருக்க, தங்கையிடம் மன்னிப்புக் கேட்டவன் எக்காரணத்தைக்கொண்டும் அவள் பெயரில் உள்ள சொத்துக்களை மட்டும் எழுதிக் கொடுக்க கூடாது என்று அவள் சொத்துக்களை தங்கள் குடும்ப தொழிலில் முடக்கி இருந்தான்.
 
அதனால் தங்கதுரைக்கும், சேகரனுக்கும் எப்பொழுதும் வாய்க்கால் தகராறு நடந்துகொண்டிருக்க, இந்த தடவை சண்டை முற்றிப்போய் குடும்பம் ரெண்டானது. சேகரன் உசாராக பங்கு பிரிவினையை கொண்டு வந்து ஆலையில் வரும் லாபத்தில் தனது முப்பது சதவீத லாபம் தனக்கு வந்து விட வேண்டும் என்று கறாராக கூறி சென்று விட்டார்.
 
பத்து பன்னிரண்டு வருடங்களுக்குள் மருதநாயகம் பேராசையில் மூன்று அரிசி ஆலைகளையும், மேலும் மூன்று  கரும்பு ஆலைகளையும் கட்டினார். இதில் வேடிக்கை என்ன வென்றால் அவற்றுக்கும் பணம் தேவை படும் பொழுது தன்னுடைய ஜாதிக்காரரான காதாம்பரியின் அண்ணன் சேகரன் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் சேகரனிடமே! பணம் வாங்கி அவரையே! பங்குதாரர் ஆக்கிக் கொண்டதுதான். ஆனால் சேகரன் தன்னை மட்டுமல்லாது, தன் சகோதரி காதம்பரிக்கும் ஒரு பங்கை வைத்துக்கொண்டார். அதனால்தான் அந்த அண்ணன் தங்கையை பிரிக்க இவர்களால் என்றுமே முடியாமல் போனது.
 
“நானும் என் அண்ணனும் இல்லையென்றால் உங்களால் இந்த நிலைமைக்கு என்றுமே! வந்திருக்க முடியாது” என்பதுதான் தங்கதுரையை பார்த்து காதாம்பரி அடிக்கடி கூறும் வாக்கியம். அதனால்தான் மருதநாயகத்தின் பெயரில் சொத்துக்கள் இருந்தாலும் அவரை ஒன்றுமில்லாதவர் என்று காதம்பரி குத்திக்காட்டி பேசுவாள்.  
 
 
மருதநாயகத்துக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே! தவிர விவசாயத்தை பற்றி பெரிதும் அக்கறை இருந்ததில்லை. அதனால் எந்த காலத்தில் எதை பயிரை வேண்டும் என்ற அறிவு இல்லாமல் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு பயிரிட்டதிலும், அதிக மலை. மழையின்மை என்று தொடர்ந்து மூண்டு வருடங்கள் பலத்த அடி விழ அவரின் ஆலைகளுக்கு மூடு விழா கூட நேர பார்த்தது.
 
இந்த நேரத்தில்தான் கணக்குப்பிள்ளை கனகவேல் பங்குகளை விற்று நஷ்டத்தை சரி செய்யலாமே! என்று ஒரு வார்த்தை கூற சேகரனுக்கு விற்றால் அவன் பங்கு அதிகமாகும் அவன் ஆலைகளை கைப்பற்றிக்கொள்வான் என்ற டென்ஷனில் என்ன செய்வது என்று புலம்பலானார் மருதநாயகம்.
 
அதற்கு கனகவேல் “எதற்கு அவரிடம் விற்கிறீர்கள் வெளியே விற்றுவிடுங்கள். அதிகாரமும் உங்கள் கையில் இருக்கும்” என்று ஆலோசனை கூற சரியான ஆளாக கிடைத்தான் தமிழ்ச்செல்வன்.
 
வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் ஆலைகளின் பங்குளை வாங்க விரும்புவதாகவும் தன்னால் பொறுப்புகளை சுமக்க முடியாதென்றும். பணம் மட்டும் மாதா மாதம் வங்கிக் கணக்கில் போட்டுவிடுமாறும் கேட்டுக்கொண்டிருக்க, மருதநாயகத்துக்கு பரமத்திருப்தியாக போக தனது எழுபது விகித பங்கில் முப்பது விகிதத்தையே! தமிழ்செல்வனுக்கு விற்று விற்றார்.
 
 
முத்துராஜ் குடும்பத்தை மருதநாயகம் விபத்துக்குள்ளாகி கொலை செய்யப்போவதாக அலைபேசி வழியாக மணிக்கு தகவல் சொல்லி இருந்ததே! கனகாவேல்தான். முத்துராஜ் குடும்பத்தின் காரியங்கள் நடந்து முடிந்த பின் செல்வத்தின் கையை பிடித்து கதறியே! விட்டார் கனகவேல்!
 
மருதநாயகமும் அவரின் இரு புத்திரர்களும் அசந்த நேரம் பார்த்து மணினியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்து யார் பேசுவதென்றும் கூறாமல், யார் பேசுகிறார்கள் என்றும் கவனிக்காமல் விஷயத்தை மட்டும் கூறி விட்டு அலைபேசியை வைத்தவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தார்.
 
மருதநாயகத்துக்கு முத்துராஜின் விபத்து செய்தி வரவும் மனம் பதைபதைப்புடையினையே! அவரோடு வண்டியில் தொற்றாதா குறையாக ஏறிக்கொண்டார்.
 
“அவங்க கூடவே! இருந்ததால முன்னாடியே! என்னால போன் பண்ண முடியல. என்ன மன்னிச்சிடுங்க. கோட் கேஸ்னு போனாலும் நான் வந்து சாட்ச்சி சொல்லுறேன்”
 
“இல்லப்பா என் பேரனையாவது நான் உசுரோட பார்க்கணும்” செல்வம் கண்கலங்க
 
“தம்பி உசுரோட இருக்காரா?” கண்ணில் மினோலோடு கனகவேல் கேக்க
 
அவரை ஒரு பக்கமாக அழைத்து சென்ற தயாளன் “உங்க உதவி எங்களுக்கு எப்போ வேணாலும் தேவைப் படும். உதவி செய்வீங்களா?” என்று கேட்டிருக்க
 
“கண்டிப்பா செய்யிறேன் பா. மணி எனக்கு மகன் மாதிரி” என்றவர் வாரா வாரம் ஊரில் நடப்பதை இவர்களுக்கு அலைபேசி மூலம் தகவல் கூறலானார்.
 
மருதநாயகம் ஆலைகளை கட்டுவது முதல் குடும்ப பிரச்சினைவரை அறிந்து வைத்திருந்தவர்கள் கனகவேலுக்கு ஆலோசனை கூறி மருதநாயகத்தின் பங்குதார் ஆனதும் இவ்வாறுதான்.
 
வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்செல்வனுக்கு லாபம் சொற்பம்தான் என்று கணக்கு காட்டி ஏமாற்றலாம் என்று மருதநாயகம் திட்டம் தீட்டி இருக்க, அன்றாடம் நடக்கும் வரவு செலவை கூட அவன் விரல் நுனியில் வைத்து அலைபேசியில் உரையாடி தன்னுடைய பங்குப் பணத்தை சரியாக வங்கியில் போட வைத்தான்.
 
அவனுக்கு உதவுவதற்காகவே! கனகவேலின் பேரன்களில் ஒருவன் கணனி வேலையில் அமர்த்தப்பட்டிருந்தான். தாத்தாவின் உதவியோடு அனைத்தும் ஈகையை நாள் தவறாமல் போய் சேர்ந்துகொண்டு இருப்பது மருதநாயகம் அறியவில்லை.
 
தமிழ்செல்வனாக தன்னோடு பேசுவது ஈகைத்தான் என்று அறியாமலே! இருந்து விட்டார் மருதநாயகம். அவன் பணம் வாங்கிக்கொண்டு பிரச்சினை பண்ணாமல் இருப்பதே! போதும் என்று எண்ணி விட்டார். வெளிநாட்டில் இருந்துகொண்டு இந்த தொழிலில் பங்கு வாங்கி இருக்கிறான் என்றால் நன்கு அறிந்துதான் வாங்கி இருப்பான் அவனை ஏமாற்ற முடியாது என்றெண்ணினாரே! தவிர அவரை ஏமாற்ற யாரும் துணிய மாற்றார் என்று கிஞ்சத்துக்கும் எண்ணவில்லை.
 
பங்குகளை தங்களுக்கு தெரியாமல் யாரோ ஒருவனுக்கு விற்றுவிற்றதை அறிந்த சேகரன் தாம்தூம் என்று குதிக்க காதம்பரியும் அண்ணனின் பக்கம்தான் நின்றாள். தன் கணவனே! தன்னிடம் கூறவில்லை என்ற கோபம் அவளுக்கு.
 
 
இதில் ஈகை செய்தது சேகரனை அழைத்து பேசி அவனோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டதே! தொழில் என்று வரும் பொழுது ஈகையின் மீது தவறில்லை என்று புரிந்துகொண்ட சேகரனும் ஈகையோடு நட்போடு உறவாடலானான். ஆனால் இருவரும் சந்தித்துக்கொண்டதுதான் இல்லை. மருதநாயகம் கடைசியாக கட்டிய கரும்புச் சக்கரை ஆலைக்கு நேரடியாகவே! பணம் கொடுத்து உறவையும் பலப்படுத்திக்கொண்டான் ஈகைச்செல்வன்.
 
 
கனகவேல் மூலம்தான் பார்கவி ஊருக்கு வந்த விடயம் ஈகைக்கு தெரிந்தது. மருதநாயம் ஊருக்கு சொன்னதுதான்! அவருக்கும் தெரியும் தயாளனும் மேற்கொண்டு விசாரிக்காமல் இருந்து விட்டான். நல்லவேளை ஈகையின் புத்திசாதூர்யத்தால் பார்கவி யார் என்று கண்டு பிடித்து விட்டான்.
 
சத்யநாதனின் சொத்துக்களை அடைய வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த மருதநாயகத்துக்கு தெரியாமளையே! அவர் பங்குதாரராகி விட்டிருந்தான் ஈகை. அவனுக்கு தேவை படுவதெல்லாம் சேகரனின் பங்குகளை வாங்க வேண்டும். அதன்பின் மருதநாயகத்தின் மொத்த ஆலைகளையும் தன் கைக்குள் கொண்டுவந்து ஆழ வேண்டும். அவரை ஆட்டிப்படைக்க வேண்டும். தன் சொல்லுக்கு ஆட்டுவிக்க வேண்டும் என்பதே!
 
அதன் முதல் கட்டமாக காதம்பரியை குடும்பத்தை எதிர்க்க செய்ய எண்ணினான். ஹரிஹரனின் நடவடிக்கையால் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவு செய்தான். 
 
அடித்த அடியில் பாம்பும் சாகனும் தடியும் உடையக் கூடாது. ஹரிஹரனும் வீட்டை விட்டு சென்று விட்டான். அதன் காரணமாக காதாம்பரியும் வீட்டை விட்டு சென்றுவிட்டாள். அதற்கு காரணம் தான்தான் என்று யார் மனதிலும் எண்ணம் தோன்றாமல் இருப்பதற்காக பேசிப்பேசியே! காரியம் சாதித்துக்கொண்டான் ஈகை. வெளியேறிய காதாம்பரி அமைதியாக இருக்க மாட்டாள். அவள் செய்வதை வைத்து காய்களை நகர்த்த வேண்டும் என்று திட்டம் வகுத்தான் ஈகை.  
 
மொத்தத்தில் மருதநாயகம் அறியாமளையே! மருதநாயத்தின் தொழிலில் கூட்டு சேர்ந்து வீட்டுக்குள்ளும் அடியெடுத்து வைத்தான்.
 
 
தன்னை அணைத்துக்கொண்டு தூங்கும் மனையாளை ஆசையாக பார்த்திருந்தான் ஈகை. அவளை புகைப்படத்தில் பார்த்த போது மருதநாயகத்தின் பேத்தி என்ற பார்வையை தவிர வேறு சிந்தனை தோன்றவில்லை. நேரில் பார்த்ததிலிருந்து அவன் மனதில் மழைசாரல் வீச ஆரம்பித்திருந்தது. அவள் அருகாமையை விரும்பும் மனதை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தது ஏன் என்று புரியாது இருந்தவனுக்கு அவள் யார் என்ற உண்மை தெரிந்ததும் “இவளை விடாதே! விட்டுச்செல்லதே!” என்று உள்மனம் கூறியதன் அர்த்தம் புரிய புன்னகைத்துக்கொண்டான்.
 
“பட்டு ரோஜா அப்போ உனக்கு ரெண்டு வயசு இருக்குமா டி? கொலுக்கமொழுக்னு குண்டா இருந்த இப்போ ரொம்ப ஒல்லியா இருக்க ஆனாலும் உன் கன்னம் இன்னமும் பண்ணு மாதிரி அப்படியேதான் இருக்கு” கன்னத்தை வருடி விட்டவன் அவள் தூக்கத்தல் சிணுங்கவும் அவளை அணைத்துக் கொண்டு மெல்லிய முத்தம் வைக்க ஆரம்பித்தான்.
 
மெதுவாக தூக்கம் கலைந்தவளோ! தன் முகத்துக்கு அருகே! ஈகையின் முகம் கண்டு திடுக்கிட “என்ன பொண்டாட்டி ஷாக் ஆகுற? காணுறது கனவல்ல நிஜம். கொஞ்சம் முட்ட கண்ண உருட்டாம நமக்கு கல்யாணம் நடந்தது, நேத்து நைட் நடந்தது எல்லாம் கொஞ்சம் நியாபகத்துல டக்குனு கொண்டு வா பாப்போம்” என்றவன் வாய் மூடி சிரிக்க திருதிருவென்று முழித்தவளின் கண்ணுக்குள் கணவன் நிறைந்திருக்க மனதினில் காட்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தனவோ! வெக்கத்தில் அவன் நெஞ்சிலையே! சாய்ந்து கொண்டாள் பார்கவி.
 
அவள் அவஸ்தை கண்டு அவனுக்கு சிரிப்பாக இருந்தது. குழந்தையாக இருக்கும் பொழுது வாமிட் பண்ணினாள் என்று இவன்தான் துணி மாத்தி விட்டான். அந்த கதையெல்லாம் சொன்னால் என்ன செய்வாளோ! அவனுக்கும் அவளுக்கும் எட்டு வருடங்கள் வயது வித்தியாசம் அது கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. அவள் உயிரோடு இருக்கிறாள் என்ற நிம்மதியே! போதுமானதாக இருக்க தன்னருகில் அவள் இருந்தால் சந்தோசம் என்றே! எண்ணினான்.
 
மனையாளை இறுக அணைத்துக்கொண்டவன் “பாரு உனக்கு என்ன பிடிச்சிருக்கா?” அவள் முகத்தை நிமிர்த்தி கேக்க அவன் மனமோ! “உனக்கே இது அபத்தமாக தெரியவில்லையா? கல்யாணம் பண்ண முன்னாடி கேட்டிருக்கணும். அவ மறுத்துடுவானு பயந்து கேக்கல நேத்து நைட் கேட்டிருக்கணும் எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகு கேக்குற” என்று காரி துப்ப மைண்ட் வயிசை மியூட்டில் போட்டவன் மனைவியின் முகம் பார்த்து நின்றான்.
 
அவள் மனதிலும் அதே! கேள்விதான். அவனை பார்த்த நொடியே! பிடித்திருந்தது. காரணம்தான் தெரியவில்லை. மாதேஷோடுதான் காலேஜ் போய் வருகிறாயா என்று கேட்டது ஒரு சாதாரணக் கேள்வி தப்பாய் நினைத்து விடுவானோ! என்று மனம் சுணங்கியது ஏன் என்று அப்போது புரியவில்லை. அவனை பிடித்திருக்கிறது அதனால்தான் அவன் அருகாமையை மனம் விரும்புகிறது. அவன் கேட்ட கேள்விக்கு அவன் பார்வை அவளிடம் “ஆம்” என்று கூறும் படி கெஞ்ச, கன்னத்தில் முத்தம் வைத்து தன் பதிலை சொன்னாள் அவன் மனையாள்.
 
அவளின் செயலால் கவர்த்திழுக்கப்பட்டவன் அவளை மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்டு “எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும். அதனால்தான் யோசிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அது மட்டும் போதாதே! உனக்கு என்ன பத்தி ஒன்னும் தெரியல. எனக்கு உன்ன பத்தி ஒன்னும் தெரியல. ஒருத்தர ஒருத்தர் நல்ல புரிஞ்சிக்கணும். கல்யாணம் பண்ணியாச்சு. கடைசிவரைக்கும் ஒண்ணா வாழ லவ் வேணுமே! அதுக்கு கொஞ்சம் அண்டஸ்டாண்டின்ங் வேணும்” உதடுகளால் அவள் கன்னத்தில் கோலம் போட்டவாறு பேசிக்கொண்டிருந்தான் ஈகை
 
கண்மூடி கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு “பிடிச்சிருக்குனு சொல்லுறது காதல் இல்லையா?” என்ற எண்ணம் தோன்ற கணவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
 
“நான் சொல்லுறது புரியலையா? பார்த்த உடனே! யாரை வேணாலும் பிடிக்கலாம். குழந்தைக்கு உட்பட வயதானவங்கவர மனசுக்கு பிடிக்கும். ப்ரெண்ஸ் கூட அப்படித்தானே! அதையும் தாண்டித்தான் லவ். என் மேல உனக்கு முழு நம்பிக்கை வரணும். உனக்காக நான் இருப்பேன்னு நீ நம்பணும்” அவள் அவனிடம் மனம் திறக்க வேண்டும் என்பதற்காவேண்டியே! பேசினான் ஈகை.
 
அவன் பேசப் பேச அவனுக்கு தன்னை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டாள் பார்கவி. “நிஜமா எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்குங்க” மனதிலிருந்து அந்த வார்த்தை வந்திருக்க, மருதநாயகத்தை மறந்து போனது விதியின் செயல்.     
 
“அப்படியா? அத எப்படி நம்புறது? எங்க ஒரு கிஸ் கொடு பார்க்கலாம்” என்று உதடு குவிக்க “மாட்டேன்” என்று அவனை தள்ளி விட்டு எழப்போனவள் இருவரும் ஒரே போர்வைக்குள் இருப்பதை அப்பொழுதுதான் கண்டாள்.
 
அவள் திருதிருவென முழிக்க, சத்தமாக சிரித்தவன் “எங்க ஓட போற? நான் கேட்டதை கொடுக்காம உன்ன விட மாட்டேன்”
 
கண்சிமிட்டி கேலி செய்பவனை நிமிர்ந்து பார்க்க முடியாதபடி இரவில் நடந்தவைகள் நியாபகத்தில் வேறு வந்து ஆட்டி வைக்க, அதைக் கண்டுக் கொண்டவனோ! “என்ன பட்டு ரோஜா வெக்கம் வருதா?” ஆச்சரியப்படுபவன் போல் வேறு கேட்டு வைத்தான்.
 
அதில் அவள் உப்பிய கன்னங்கள் ரோஜா இதழ்களை போல் செந்நிறம் பூசிக்கொள்ள தன் உதடுகொண்டு கன்னத்தில் மெல்லிய முத்தங்களால் தீண்டலானான். 
 
அவன் அடுத்து முன்னேற முன் “பாட்டி காபி குடிக்காம பார்த்ததுண்டு இருப்பாங்க. ப்ளீஸ்” என்று கெஞ்ச
 
“ஒருநாள் காபி குடிக்கலைனா ஒன்னும் ஆகாது” அவளை போலவே! பேசியவன் “இப்போ மணி என்ன தெரியுமா? பாட்டி ப்ரேக்பஸ்ட்டே சாப்பிட்டு இருப்பாங்க” அவளை விடாது கழுத்து வளைவில் முகம் புதைத்தவாறே கூற  
 
சுவரில் இருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தவள் “ஐயோ காலேஜ் போக டைம் ஆச்சு” என்று பதற
 
“ரிலேக்ஸ் பாரு இன்னைக்கி ஒருநாள் லீவ் எடுத்துக்க, நைட் சரியாவே! என்ன தூங்க விடல நீ”
 
“யாரு நானா?” அப்பாவியாக அவனை பார்த்தவள் அவனை மொத்தவும் மறக்கவில்லை.
 
எழுந்தமர்ந்தவன் அவள் கைகளை பிடித்து தடுக்க மேல்ச்சட்டை இல்லாமல் அவனை கண்டவள் அடிப்பதை நிறுத்திவிட்டு அவனையே பாத்திருக்க
 
“என்ன பொண்டாட்டி இப்படி சைட் அடிக்கிற?”
 
“இல்ல உங்கம்மா நீங்க வயித்துல இருக்கும் போது பால் மட்டும்தான் சாப்பிட்டாங்களா? இவ்வளவு கலரா இருக்கிறீங்க?” அன்று நினைத்ததை இன்று கேட்டு வைத்தாள்.
 
“அப்போ நீ என்ன சைட் அடிக்கலயா?” அவன் கேட்ட தொனியில் வெக்கம் வர போர்வையை இழுத்து தலைவரை போத்திக் கொண்டவள் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.
 
அடக்கமாட்டாமல் சிரித்தவனின் அலைபேசி அடிக்கவே! தயாளன் அழைப்பதாக காட்ட இயக்கி காதில் வைத்தவன் எழுந்து பால்கனிக்கு சென்று பேச போர்வைக்கு இருந்து தலையை நீட்டிப் பார்த்தவள் அவன் சோர்ட் அணிந்திருப்பதைக் கண்டு செல்லமாக முறைத்துவிட்டு அவன் வருவத்துக்குள் குளியலறைக்குள் ஓடி இருந்தாள்.