செவ்வானில் ஒரு முழு நிலவு 17

6399

நிலவு 17
“அப்போ ஈகை சார் பழிவாங்க போன பொண்ணையே! கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே!” காயு கேலி செய்ய
 
“தப்பு தப்பு தப்பு.. நான் பழிவாங்க போனது மருதநாயகத்தோட பேத்திய. இது என் பட்டு ரோஜா. அது மட்டுமில்ல என் அக்கா சொன்னாங்க அப்பாவிங்க யாரும் பாதிப்படையாம பார்த்துக்கோனு. அதான்” அன்று ஈகை ஊருக்கு வரும் பொழுது காயத்திரி சொன்னதை நியாபகப்படுத்தினான்.
 
ஈகை தப்பானவன் கிடையாது. பழிவாங்க பணம் சம்பாத்திக்க வேண்டும் என்ற போதும் தப்பான வழியை தேர்வு செய்யாதவன். பார்கவி விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தான் என்று காயத்திரி ஒருகணம் குழம்பிய போதும் அவனுக்கு புரியும்படி கூறி இருந்தாள்.
 
“அவ யாருனு உன் அண்ணன் தலையை பிச்சிக்கிறான். என்கிட்ட மட்டுமாவது சொல்லேன்” காயு கெஞ்ச
 
“ஹாஹாஹா பட்டுக்கு அவ யாருனு தெரியல காயு. பாவம் அவ. இந்த உண்மையெல்லாம் அவகிட்ட எப்படி சொல்லுறதுனு நானே! யோசிச்சிகிட்டு இருக்கேன். சொல்லணுமான்னு கூட தோணுது. சொல்லித்தான் ஆகணும். எப்படி தாங்குவாளோ! நான் சொல்லுறத விட அவ அம்மாவே! சொல்லுறதுதான் சரி. அவங்களைத்தான் தேடிகிட்டு இருக்கேன்”
 
“உண்மைய சொல்லுறேன்னு. உன் முதலிரவ ஸ்பாயில் பண்ணிடாத தம்பி” சத்தமாக சிரித்தாள் காயு.
 
விசாலாட்சியை கண்டுபிடித்து பார்கவியிடம் அவள் யார் என்ற உண்மையை கூறிய பின்னே! தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவோடு இருந்தான் ஈகை அதை காயத்திரியிடம் கூற விரும்பாமல் “ஆ..ஆ.. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ உன் புருஷன கவனி. இல்லனா இங்க ஒரு செட்டப்ப வச்சிப்பான்” அவளை ஏத்தி விட
 
“யாரு தயாவா? இந்த ஜென்மத்துல நான் மட்டும்தான். வேற நெனப்பே வராதபடி சண்டை போடுறேன்!”
 
“பாத்துமா.. ரொம்ப பண்ணா… வேணாம் தாயேன்னு விட்டுட்டு ஓடி போயிடுவான்”
 
“போய்டுவாரா? என்ன விட்டு போய்டுவாரா? போகத்தான் துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாரா?”
 
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என்ற மனநிலையில் பிறபெண்களோடு தயாளன் பேசுவதைக் கண்டு பொறாமையில் காயத்திரி தயாளனிடம் சண்டை போட்டாலும் என்றுமே! அவனை சந்தேகக் கண்கொண்டு பார்த்ததில்லை.
 
காலேஜ் முடித்த கையேடு ஒரு வேலையிலும் சேர்ந்திருந்தான் தயாளன். தனது வேலையை முடித்துக்கொண்டு பஸ்சுக்காக நின்றிருக்க, அவ்வழியாக வந்தது அவனது காலேஜ் பஸ். அவனை கண்ட ஜுனியர் ஒருவன்
 
“பாஸ் நீங்களா?” என்று வற்புறுத்தி அவனை பஸ்ஸில் ஏற்றி இருந்தான்.
 
அந்த நேரத்தில் பஸ்ஸில் பாட்டும், கூத்து, கும்மாளமுமாக இருக்க, இவனைக் கண்டுகொள்ள யாருமில்லை.
 
“பளார்” என்ற சத்தத்தில் பஸ்ஸே அமைதியாக ஒரு மாணவன் கன்னத்தில் கைவைத்து நின்றிருந்தான் என்றால் அவன் முன்னால் நின்றிருந்தவளோ! காளி அவதாரம் எடுத்திருந்தாள்.
 
“ஏய் என்னடி கூட்டம் அதிகமா இருக்குறதால தெரியாம மேல மோதி இருப்பான் அதுக்கு போய் அடிச்சிட்ட” அவள் தோழி ஒருத்தி இவளை கடிய
 
தோழியை முறைத்தவள் “மேல வேற வந்து மோதுவானா? மோதட்டும் தோலை உரிச்சு உப்பு போடுறேன். இவன் என்ன சொன்னான் தெரியுமா? என்ன ரெண்டு வருஷமா லவ் பண்ணுறானாம்” கடைசி வாக்கியத்தை பஸ்ஸில் உள்ள அனைவரும் கேக்கும்படி சத்தமாக கூறினாள். பெங்காலியில் அவள் கோர்வையாக கூறியது தயாளனுக்கு கவிதை போல் கேக்க தலையை உலுக்கிக்கொண்டான். 
 
“போயும் போயும் ப்ரொபோஸ் பண்ணதுக்கா அடிச்சா? சரியான ராட்சசியா இருப்பா போல” என்று அனைவரும் பார்க்க
 
“என்னடா… ப்ரொபோஸ் பண்ணதுக்கு அடிச்சிட்டாளே!னு நினைக்கிறீங்களா? அவன் லவ்வ நான் ஏத்துக்கலைனா என் மூஞ்சில அசிட் அடிப்பானாம்” என்றவள் மீண்டும் “பளார்” என்று அறைந்து “எங்க அசிட் அடி பார்க்கலாம்? மத்த பொண்ணுங்க மாதிரி அழுதுட்டு போய்டுவேன்னு நினைச்சியா? உன் மூஞ்சிலையும் அதே! அச்சிட்ட அடிப்பேன்” பெண்சிங்கமாய் சீறினாள்.  அவள் காயத்திரி.
 
பஸ்ஸில் விசில் சத்தம் பறக்க, கைதட்டலும் ஒலிக்க அவனை நாலுபேர் செமத்தியாக கவனிக்கவும் தவறவில்லை. அவளையே! பாத்திருந்த தயாளனுக்கு அந்த நொடியே! அவள் தைரியம் பிடித்திருக்க, அவன் அரும்பு மீசைக்கடியில் இருந்த உதடுகள் மெல்ல புன்னகைத்துக் கொண்டன.
 
அதன்பின்தான் ஈகை தயாளனை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ள,  காயத்திரியை பத்தி கூறலானான்.
 
அப்பொழுதுதான் ஈகை காலேஜ் சேர்ந்திருந்தான். காயத்திரியை கண்காணித்ததில் உண்மையில் அவள் தைரியமான பெண்தான் என்பது அவளை பார்த்த உடன் புரிந்து போனது. அவள் நடவடிக்கைகளும் அவ்வாறுதான் இருந்தன. அவள் குடும்பத்தை பற்றி விசாரித்ததில் ஐந்து பெண்பிள்ளைகள் நாலாவதாக பிறந்தவள்தான் காயத்திரி.
 
இரண்டு மூன்று தடவை ஈகையை தன் வீட்டு பக்கத்தில் பார்த்ததும் நேராக அவனிடம் வந்து “நீ நம்ம ஜூனியர் தானே! இங்க என்ன பண்ணுற?” நேரடியாகவே! அவனை மிரட்டும் தொனியில் கேட்டாள் காயு.
 
ஈகையும் “என் அண்ணனுக்கு உங்கள பொண்ணு பார்க்க வந்தேன்” என்று பட்டென்று தமிழில் சொல்ல புருவம் உயர்த்தியவாறே புன்னகைத்தாள்.
 
அந்த நொடி ஈகையை அவளுக்கு பிடித்திருந்தது. “வா ஒரு காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”
 
“பெங்காலிலே தமிழ் சேனல் கூட வருமா?”
 
“என்ன?” அவன் தோளில் அடித்தவள் அவன் என்ன சொன்னான் என்று புரிந்துக்கொண்டு. “எங்க அப்பாவை பெத்தவங்க தமிழ்தான். அதனால பேச மட்டும் தெரியும்” என்றவள் அவள் வீட்டு மொட்டை மாடிக்கே! அழைத்து சென்று என்ன ஏது என்று விசாரித்தாள்.
 
எதோ சின்ன பையன் புரியாமல் பேசுகிறான் என்று காயத்திரி நினைத்திருக்க ஈகை தெளிவாக பேசினான். முதலில் தான் யார் தயாளன் யார் என்று கூற காயத்திரிக்கு தானும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை உருவானது.
 
 
தயாளனை சீனியராக காலேஜில் பாத்திருக்கிறாள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். படிப்ஸ் என்று மாணவர்கள் மத்தியில் அவனுக்கு பெயருண்டு. எந்த நேரமும் நாலு பேர் அவனை சுற்றி இருப்பதை அவள் காணுகிறாள். இவன் பேசிக்கொண்டிருக்க அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவனுடைய குரலும் புன்னகை முகம் காயத்திரியை கவர்ந்திழுக்கும். அவனுக்கு தன்னை பிடித்திருக்கிறதா? தனது குடும்ப நிலையை கருதி காதலை பத்தி சிந்திப்பதை நிறுத்தி இருந்தவளுக்கு சந்தோசம் மனதை நிறைத்தாலும், ஒரு சின்ன பையனை பெண் கேட்டு அனுப்பி இருக்கின்றானே! என்ற கோபம் கொஞ்சம் எட்டிப்பார்க்க
 
“உன் அண்ணனை வந்து பேச சொல்லு”
 
“அவர் வர மாட்டாரு”
 
“ஏனாம்?”  காயத்திரியின் கோப எல்லை கடந்துகொண்டிருந்தது.
 
தன் குடும்ப கதையை சுருக்கமாக கூறியவன் “உங்க மேல விருப்பம் இருக்குனு மனம் விட்டு சொன்னதே! பெரிய விஷயம். திருமணம் செய்துக்க அவனுக்கு ஆச இருந்தாலும் லட்ச்சியம்னு மறுத்துடுவான். இதுல உங்ககிட்ட வந்து கண்டிப்பா பேச மாட்டான்”
 
“ஓஹ்…” காயத்திரியின் கோபம் காற்று போன பலூன் போல் காணாமல் போய் இருந்தது. 
 
 
“நான் உன்ன ஓட்டினா நீ என்ன ஓட்டுரியா? போதாததுக்கு என் புருஷனையும் சேர்த்து ஓட்டுரியா? இரு ஐஷு கிட்ட பேசு” என்றவள் ஐஷுவிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு சென்றிருந்தாள்.
 
சித்தப்பனை எவ்வளவு மிஸ் பண்ணுகிறாள் என்று ஆரம்பித்து, அவன் கொண்டுவந்து கொடுத்த சாக்லட் அனைத்தும் தீர்ந்து விட்ட சோகக்கதையை சொல்லி முடித்தவள் எப்பொழுது வருவதாக கேட்டு ஆவலாக காத்திருப்பதாகவும் கூறினாள்.
 
“ஐ ஆல்சோ மிஸ் யு ஐஷு. ஐ லவ் யு டி செல்லம். உம்மா.. உம்மா.. உம்மா..” ஈகை ஐஷுவை கொஞ்சிக்கொண்டிருக்கும் பொழுது அறையினுள் நுழைந்தாள் பார்கவி.
 
“கட்டின மனைவி தான் இருக்க யார் அந்த ஐஷு. யாரோடு அலைபேசியில் கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்” கோபம் புசுபுசுவென்று ஏற பால் செம்பை வைத்தவள் வேகமாக ஈகையின் அருகில் சென்று அலைபேசியை பிடுங்க முயற்ச்சி செய்ய
 
“ஐஷு பேபி. அப்பொறம் பேசுறேன்” என்று அலைபேசியை அனைத்தவன் “என்ன” என்று சைகையால் கேக்க
 
“ஐஷு யாரு” மூக்கு விடைக்க கோபத்தைக் கட்டுப் படுத்திக்கொண்டு கணவனை முறைத்தாள்.
 
முதலிரவுக்காக மிதமான அலங்காரத்தில் ஜொலித்தாள் பார்கவி. அவள் கட்டியிருந்த மாம்பழ வண்ண நிற புடவையும், சூடியிருந்த மல்லிகையும் அவனை வா வா என அழைக்க, கோபமூச்சுக்களை வெளியிட்டவாறு நிற்பவளை அள்ளி அணைக்க கைகள் பரபரத்தாலும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது அவளையே! பாத்திருந்தான் ஈகைசெல்வன். 
 
குட்டிக் குழந்தையாய் குண்டு கன்னங்களோடு மிருதுவான சருமம் அவளுடையது. அதனாலே! கையில் தூக்கி முத்தமிட்ட நொடி ‘பட்டு ரோஜா’ என்று பெயர் வைத்தான். இன்று கொஞ்சம் வாடிய ரோஜாவாகத்தான் இருக்கிறாள். கண்ணில் உயிரில்லை. சோகம் குடிகொண்டுள்ளது. அதை துடைத்தெறியும் பொறுப்பு அவனுடையது.
 
 “கேக்கிறேன் இல்லையோ! சொல்லுங்கோ” தாலி கட்டியதும் இவன் என்னவன். என்ற உரிமை தானாக வந்து விட அதட்டலாகவே கேக்கலானாள்.
 
வாழ்க்கைதான் யார்யாரை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. இவளை எங்குகொண்டு நிறுத்தி இருக்கிறது. அந்த குட்டி தேவதை வாய்திறந்து பேசுமா? என்று ஆவலாக கேட்ட அந்த நாள்! தன் பெயரை அழைக்குமா? என்று எதிர்பார்த்த தன் சிறு இதயம் எல்லாம் நியாபகத்தில்வர இன்று தான் யாரென்று அறியாமல். அவள் பேசும் பாஷை கூட மாறுபட்டு, அவள் உரிமையாக அதட்டுவதைக் கூட மனதுக்கு இனிமையாகத்தான் உணர்ந்தான் ஈகை. சின்ன சிரிப்பினூடாகவே! அவளை பார்த்த ஈகைச்செல்வன் “இப்போ என்ன உனக்கு ஐஷு யாருனு தெரியணும் அவ்வளவுதானே! தெரிஞ்சி என்ன பண்ண போற?”
 
“நான் என்னமோ! பண்ணுறேன். சொல்லுங்கோ” பிடிவாதமாக கணவனை முறைத்தாள். அந்த பிடிவாதம் கூட அவள் இரத்தத்தில் ஊறியது ஒன்றுதானே!
 
“சொல்லுறேன். சொன்னா என்ன தருவ?” இரட்டை அர்த்தத்தில் இவன் கேக்க அதை புரிந்து கொள்ளாமல் அலைபேசியை எட்டிப் பறிக்கலானாள். 
 
அவளுக்கு போக்கு காட்டியவனுக்கு அவள் குழந்தையாகவே! தெரிய அலைபேசியை கொடுக்காது எட்டிப்பிடிக்க அவன் மேனி உரசியவாறு இவள்தான் அதை பிடுங்க முயற்சி செய்துகொண்டிருந்தாள். தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை அவள் உணரவே! இல்லை.
 
அவள் அருகாமை அவனை இம்சிக்க ஒருகட்டத்துக்கு மேல் எங்கே தான் எடுத்த முடிவை மறந்து எல்லை மீறி போய்விடுவேனோ என்று அஞ்சியே! “இரு இரு நானே! போன் போட்டு தரேன்” என்றவன் காயத்திரியை அழைத்து ஐஷுவிடம் அலைபேசியை கொடுக்குமாறு கூற ஐஷுவிடம் அலைபேசி செல்லவே! “ஹலோ சித்து” என்றது அந்த குட்டி ரோஜா
 
ஈகைக்கு திருமணம் ஆகவில்லையென்று ஏற்கனவே! அறிந்ததுதான். அப்படியாயின் அவன் அண்ணன் தமிழ்ச்செல்வன் குழந்தையா இது? என்று பார்கவியின் மனம் கேள்வி எழுப்ப “குழந்தையா?” என்று கண்களால் ஈகையிடம் கேட்டவள் அசடு வழிந்தாள்
 
ஈகையோ “ஐஷு பேபி ரொம்ப நாளா தம்பி பாப்பா வேணும்னு சித்துக்கிட்ட கேட்டுகிட்டு இருந்தியே! கூடிய சீக்கிரம் கொண்டு வந்துடலாம். சரியா” விஷமமாக பார்கவியை பார்த்தவாறே கூற விதிர்விதைத்து போனாள் பார்கவி.
 
மருதநாயகம் கூறியது என்ன? தான் இந்த அறைக்குள் வரும் முன் இவனிடமிருந்து விலகி இருக்க வேண்டும். எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்று எடுத்திருந்த முடிவுதான் என்ன? உள்ளே வந்ததும் எல்லாவற்றையும் மறந்து அவனை உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் மாயம்தான் என்ன? நெஞ்சம் முழுவதும் இறுகுவது போல் பிரம்மை தோன்ற செய்வதறியாது கட்டிலில் தொப்பென்று அமர்ந்து விட்டாள்.
 
 
ஈகையிடம் தயாளன் பார்கவிடம் நம்மை பற்றின உண்மைகளை கூறப்போகிறாயா? என்று கேட்க,
 
“இல்லை. அவள் இங்கு வந்த காரணம், நோக்கம் இரண்டையும் தன்னிடம் கூறும்வரை கூறப்போவதில்லை” என்று கூறி இருந்தான் ஈகை.
 
ஆனால் அவள் தன்னிடம் உரிமையாக “யாரிந்த ஐஷு” என்றுகேட்ட பொழுது ஐஷுவுக்கே அலைபேசி தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க அசடு வழியும் அவள் முகத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் அவள் தடுமாறி அமரவும் அலைபேசியை அமர்த்தி விட்டு “என்னாச்சு பாரு” என்றவாறு அவள் அருகில் அமர்ந்துகொண்டவன் அவள் தலையையும் கையையும் மாறிமாறி வருடிவிடலானான்.
 
பார்கவியின் நெஞ்சம் அடித்துக்கொள்ள கண்ணீர் நிற்காது மழைபோல் கொட்ட ஈகையின் நெஞ்சிலையே! சாய்ந்து அழுது கரையலானாள். 
 
அவள் தலையில் தாடையை பதித்து நெஞ்சை நீவி விட்டுக்கொண்டே இருந்தவனின் நெஞ்சமும் கனத்துதான் போய் இருந்தது. அவள் அவளின் அன்னை விசாலட்சியை நினைத்து அழுகிறாளா? அல்லது மருதநாயகம் அவளை இங்கே! அழைத்து வந்த உண்மையை கூற முடியாமல் அழுகிறாளா? ஈகைக்கு புரியவில்லை.
 
அது இரண்டும்தான் காரணமென்றால் ஈகையால் அதைப்பற்றி கேட்கவும் முடியவில்லை. விசாலட்சி எங்கே இருக்கிறாள் என்று இன்னும் ஈகையால் கண்டு பிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்து விட்டால் பார்கவிடம் மனம் திறந்து பேசலாம். அவள் யார் என்பதையும் கூறலாம். அவன் கூறுவதை அவள் நம்பவில்லையென்றால் ஒரே ஆதாரம் விசாலாட்சிதான். முதலில் அவரை கண்டுபிடித்தாக வேண்டுமே!
 
மருதநாயகம்தான் அவளின் ஆழுகைக்கு காரணம் என்றால் ஈகையிடம் அவளாகவே! கூறவேண்டும். கணவன் என்ற உரிமை மட்டும் போதாது, அவன் மீது அவளுக்கு நம்பிக்கையும் வரவேண்டும். விசாலாட்சி தன்னிடம் பத்திரமாக இருக்கிறாள் என்று அறிந்து கொண்டாளே! மனம் திறந்து பேசுவாள் என்று புரிய அழும் அவளை ஆறுதல் படுத்தினானே! தவிர காரணம் கேட்டு குடையவில்லை.
 
ஒருவாறு அழுது ஓய்ந்தவள் அவனிடம் மன்னிப்பு வேண்டி நிற்க, “சரி போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்றவன் சாதாரணக்  குரலில் கூற அவன் எதுவும் கேளாது பார்கவிக்கு நிம்மதி அளித்தது.
 
அவன் தோண்டித் துருவி இருந்தால் இவள் என்னவென்று கூறி சமாளிப்பது. என்றெண்ணியவாறே முகம் கழுவி வந்தவளை ஈகை அழைத்து கண்ணாடியின் முன் அமர்த்தவும் புரியாது பார்த்தாள்.
 
அவள் மனசஞ்சலம் அறிந்திருந்தும் “பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள பல கனவோடு வருவாங்கனு சொல்வாங்க. ஆனா நீ ஒருத்திதான் பயந்து இப்படி அழுது என்னையும் பயமுறுத்திட்ட” கேலிபோல் சொன்னவன் “நீ அழுததற்கு காரணம் இந்த இரவை நினைத்து தானே!” என்ற காரணத்தை முன் வைக்க, ஆம் என்றும் சொல்லாமல், இல்லையென்றும்
சொல்லாமல் தலைகவிழ்ந்தாள் பார்கவி.
 
கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தவளின் கழுத்திலிருந்த கூந்தலை ஒதுக்கி அவள் கட்டைவிரல் ரேகை சைசில் இருந்த அந்த மச்சத்தை வருடி விட்டவன்
 
“பட்டு ரோஜா இத அன்னைக்கி நான் பார்கலைனா உன்ன அடையாளம் கண்டுகொண்டிருக்க மாட்டேனே! எவ்வளவு வளர்ந்துட்ட நீ” மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
 
அவனின் வருடலில் பார்கவி கூச்சத்தில் சிலிர்க்க அவன் கையை பிடித்து தடுத்தவாறே அவன் முகம் பார்த்து நிற்க தன்னை மீட்டுக்கொண்டவன்
 
“இவ்வளவு ஹெவியா நகை போட்டிருக்க அதான் கழட்ட ஹெல்ப் பண்ணலாமேன்னு உக்கார வச்சேன்” என்று பொறுமையாக கழட்டி அவள் கையில் கொடுத்தவன் “உனக்கு ஏதாச்சும் வாங்கணும்னா என் கிட்ட சொல்லு சரியா” குழந்தையிடம் சொல்வது போல் கூற தலையசைத்தாள் பார்கவி.
 
தாலியை தவிர நகைகள் எதுவுமின்றி அழகுசிலைபோல் அமர்ந்திருந்தவளின் அழகு மனதை கொள்ளைக்கொள்ள தலையை உலுக்கிக்கொண்டவன்
 
 “சரி வா சாப்பிடலாம்” தனக்கு பசியில்லை பிறகு சாப்பிடுறேன் என்று இரவு உணவை அறைக்கே வரவழைத்து இருந்தான் ஈகை.
 
“நான் சாப்பிட்டேங்க”
 
“யாரு நீ? நீ சாப்பிடுற அழகத்தான் நான் தினமும் பாக்குறேனே!”
 
“நிஜமா நான் சாப்பிட்டேன்”
 
அவள் சொல்வதை நம்பாத பார்வை பார்த்தவன் “சரி நான் சாப்பிடும்வரை கம்பனி கொடு” என்றவன் தான் சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது முதல் வாயை அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். அதை பெற்றுக்கொள்ளாது அவள் அவனையே! கேள்வியாக ஏறிட
 
“உன்ன பார்க்க வச்சி நான் சாப்பிட்டா என் வயிறு வலிக்காதா?” கிண்டலாக சொல்லி சிரிக்க பார்கவி அவன் தோளில் அடிக்க ஆரம்பித்தாள்.
 
அடிகளை பெற்றுக்கொண்டாலும் பிடிவாதமாக அவளுக்கு ஊட்டி விட்டவன் தானும் வயிறா உண்டான்.
 
ஈகை கைகழுவ எழுந்து சென்றிருக்க பார்கவிக்கு பதட்டம் கூடியிருந்தது. இன்றைய இரவை பற்றி ஒன்றும் அறியாத குழைந்தை இல்லையே! அவள். கல்யாணக் கனவு ஆசா பாசங்கள் அவளுக்குத்தான் இருக்கிறது. என்ன அந்த கனவை காணத்தான் முடியவில்லை.
 
அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் ஈகையிடம் எவ்வாறு சொல்லி புரியவைப்பது என்றுதான் இத பதட்டம். சாப்பாட்டு தட்டுக்களை அடுக்கியவாறு இருந்தவளை
 
“அதெலலாம் அப்பொறம் வைக்காலம் பார்கவி இப்படி உக்காரு கொஞ்சம் நேரம் பேசிகிட்டு இருக்கலாம். தூக்கம் வருதா? இல்லையே!”
 
இல்லையென்று வேகா வேகமாக தலையசைத்தாள்.
 
புன்னகைத்தவன் “ஆமா எனக்கு ஒரு விஷயம் புரியல நீ இவ்வளவு ஒல்லியா இருக்க ஆனா உன் மூஞ்சில மட்டும் தொப்பை போட்டிருக்கு அது எப்படி?”
 
“என்ன?” கண்ணை அகல விரித்தாள் பார்கவி.
 
உதடு கடித்து புன்னகைத்தவன் அவள் கன்னம் கிள்ளி “புசு புசுனு இருக்கு. ஸ்பெஷலா சாப்பாடு போட்டு வளக்குறியா என்ன?”
 
அவன் கிள்ளியது வலித்தாலும் வெட்கமும் சேர்ந்து ஒட்டிக்கொள்ள கன்னத்தை தடவிக்கொண்டவள் தலைகவிழ்ந்து புன்னகைத்தாள்.
 
ஈகை தனது ஆள்காட்டி விரல் கொண்டு அவள் கன்னத்தில் குத்தி குத்தி விளையாட கூச்சமாகிப் போனது பார்கவிக்கு.
 
தன் முன்னால் அமர்ந்திருப்பது தன் மனைவி, வளர்ந்த யுவதி என்பதை ஒருகணம் மறந்து தான் அன்று பார்த்த அந்த குட்டிக் குழந்தையாகவே! அவளை நினைத்து விளையாட ஆரம்பித்திருக்க அவன் தொடுகையில் பார்கவிதான் அவஸ்த்தைக்குள்ளானாள். 
 
தன் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியன் கண் மூடி “பட்டு ரோஜா” என்று முணுமுணுமுக்க அவன் தொடுகையில் பேச்சற்று சிலிர்த்தாள் பார்கவி.
 
அவன் உதடுகள் அவள் கன்னத்தில் முத்த ஊர்வல நடாத்த அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க தன்னிலை மறந்து அவனுள் கரைய ஆரம்பித்தாள் பெண்ணவள். அவனின் முத்த ஊர்வலம் கன்னத்தில் தொடக்கி கழுத்தில் வளம்வந்து உதட்டில் நிறைவுபெற புதியதொரு உலகத்தை உணரலானாள் அவன் மனையாள்.
 
நீண்ட நெடிய முத்தம். ஈகையின் மூளையோ! இன்னும் அவளிடம் நீ உண்மையை கூறவில்லை. அவள் மனசஞ்சலத்தை போக்கவில்லை. இது இப்போதைக்கு வேணாம் என்று எடுத்துக்கூறிக்கொண்டே இருக்க, ஈகைக்கு அவளை விடவே மனமில்லை. மூளைக்கும் மனதுக்கும் இடையே! நடந்த போராட்டத்தில் உணர்ச்சிகள் வெற்றி பெற மூச்சுக்கு காற்றுக்கு திணர்பவளை விட்டு பிடித்தவன் கைகளில் ஏந்தி இருந்தான்.
 
 
பார்கவி இந்த உலகத்திலையே! இல்லை. அவனோடு வேறு உலகம் பயணம் செய்துகொண்டிருந்தாள். அவள் மனதில் மருதநாயகம் சொன்னவைகளும் இல்லை. தான் எடுத்த முடிவுகளும் இல்லை. ஈகை மட்டும் நிறைந்து நின்றான். பார்த்த நொடியே! ஈகையை பிடித்ததினாலயா?  தன் கணவன் என்ற உரிமையா? அவனோடு ஒன்றிவிட்டாள்.
 
நொடிகள் நிமிடங்களாக கரைந்துகொண்டிருக்க மௌனமே ஆட்ச்சி செய்ய ஒருவருக்குள் இன்னொருவரை தேடும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
 
கூடல் முடிந்து விலகப் போனவளை இழுத்து அணைத்தவன் “தேங்க்ஸ் டி பட்டு” அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
 
காயத்திரியிடம் என் முதலிரவை பத்தி கவலை படாதே! என்று கூறியிருந்த போதும் பார்கவியின் அருகில் தன்னிலை மறப்பவன் தனிமை கிடைத்ததும் அவள் மறுக்கவில்லை என்றதும் சுயத்தை இழந்து விட்டான்.
 
நடந்து முடிந்ததை நினைத்து கவலைகொள்ளவோ! வெக்கப்படவோ! கூடியவனல்ல ஈகை. பார்கவிக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட நிம்மதியில் அதிகமாக பேசி மருதநாயகத்தை நியாபகப்படுத்தி அவள் மனதை ரணப்படுத்த அவன் விரும்பவில்லை.
 
யாரை பழிவாங்க வேண்டும் என்று கிளம்பி வந்தானோ! அவளை விரும்பியே! திருமணம் செய்தான். யாரை ஏமாற்றி கர்பமாக்கி கைவிட வேண்டும் என்று இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தானோ! அவளை மனதில் தாங்கிக்கொண்டான் ஈகைச்செல்வன்.