செவ்வானில் ஒரு முழு நிலவு 16-1

7005

நிலவு 16
 
ஜாதிவெறி பிடித்த மருதநாயகம் தனது மகள் வயித்து பேத்தியை அழைத்து வந்தார் என்பது ஆச்சரியம் கலந்த சந்தேகத்தை ஈகைக்கு உண்டு பண்ணி இருந்ததோடு தயாளன் வயதான காலத்தில் கொஞ்சமாலும் திருந்தி இருப்பார் மனிசன். பேத்தி மீது பாசம் இருக்காதா? சொந்த இரத்தம் இல்லையா? என்றெல்லாம் பேசியதில் ஒருவேளை அப்படியும் இருக்கக் கூடும் என்றெண்ணியே! அவரை பழிவாங்க பார்கவியை பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.
 
திட்டம் போட்டு அந்த வீட்டுக்குள் வந்தவனுக்கு பார்கவியை தனிமையில் எவ்வாறு சந்திப்பது? அவளோடு எவ்வாறு பேசுவது? அவளை எவ்வாறு அணுகுவது? தன் காதல் வலையில் அவளை எவ்வாறு வீழ்த்துவது என்றெல்லாம் பெரிய கேள்விக்குறியா தோன்றி இருக்க சந்தர்ப்பம் தானாகவே! அமைய ஆரம்பிக்கவும் சந்தேகப்பட ஆரம்பித்தான்.
 
மருதநாயகம் பார்கவியை உயரத்திப் பேசுவதும், ஹரிணியை தாழ்த்திப் பேசுவதும், தங்கதுரை தன் மகள் எனும் பொழுது ஈகையை நெருங்க விடாமல் காவல் காப்பதும், பார்கவியை கண்டு கொள்ளாமல் இருப்பதும், விக்னேஸ்வரன் பார்கவி, ஈகை சந்திப்புக்கு வழி வகுத்துக்கொடுப்பதுமாக இருக்க அவன் சந்தேகம் உறுதியானது.
 
என்ன இருந்தாலும் பார்கவி அந்த வீட்டுப் பெண். அவர்களுடைய தங்கை மகள் அவளை யாரென்றே தெரியாத ஈகையோடு தனியாக காலேஜுக்கு என்றாலும் அனுப்ப இவர்கள் முயல்வது எங்கையோ இடிக்கிதே! என்று ஈகையின் மூளை அலர்ட் செய்து கொண்டேதான் இருந்தது.
 
காலேஜுக்கு காலையில் அழைத்து சென்ற ஈகை, சென்ற அன்றே மாலையும் அழைத்து வந்தான். மாதேஷை தவிர யாரும் அவளை அழைத்து சென்றதுமில்லை. யாரோடும் அவள் சென்றதும் இல்லை. அப்படி இருக்க, யாரென்றே தெரியாத ஈகையோடு மட்டும் எப்படி அனுப்பி வைத்தார்கள். அதுவும் அவனே! அழைத்து செல்வதும் அழைத்து வருவதும் தொடர ஒரு வாரத்துக்கு பின் தயாளன் மற்றும் ஜெய்யை தன்னோடு வருமாறு கூறினான் ஈகை.
 
“ஏன் டா?” என்று தயாளன் கண்களாளேயே! வினவ
 
பார்கவியை காலேஜில் இறக்கி விட்ட பின் “அவனுகளே! சந்தர்ப்பம் அமைச்சு கொடுக்கறானுக, “பார்கவி பேஸ்ஸ கவனிச்சியா? ஒரு நொடி டென்ஷனும், கவலையும் காட்டுறவ மறுநொடி இயல்பா பேசுறா”
 
 
“எனக்கு அப்படி தோனலா. அவ நடிக்கிறான்னு சொல்லுறியா?” தயாளன் யோசனையாக கேக்க
 
“தெரியல. ஏதோ தப்பா இருக்கு” என்று அமைதியானவன் சுற்றி நடப்பதை கவனிக்கலானான்.
 
ஈகையோடு பார்கவி சிரித்துப் பேசினாலும், இன்றும் இவனோடுதான் செல்ல வேண்டுமா என்று அவள் முகம் ஒருநொடி வாடி விடுவது ஈகையின் கண்களிலிருந்து தப்பவில்லை. அவளை இவர்கள் வலுக்கட்டாயமாக அவனோடு அனுப்பி வைக்கிறார்கள் என்று ஈகைக்கு  புரிந்துகொள்ள கொஞ்சம் நாட்கள் போதுமாக இருக்க,  ஏன்? என்ற கேள்வி அவன் முன்னால் பூதாகரமாக வந்து நின்றிருந்தது. பார்கவி உண்மையிலையே! மருதநாயகத்தின் பேத்திதானா? என்ற கேள்வி அப்பொழுதான் அவனுள் மலையளவு உயர்ந்து நிற்க பார்கவியை பற்றி ஒரு டிடெக்டிவ் மூலம் விசாரிக்க கோரி இருந்தான்.
 
அதில் அவனுக்கு கிடைத்த தகவல்தான் பார்கவி விசாலாட்சி மற்றும் சுப்பிரமணிய சாஸ்திரிகளின் மகள் என்றும் அவர் இறந்தபின் மருதநாயகம் அவளை அழைத்து வந்திருக்கிறார் என்பதுமே!
 
வேதநாயகிப் பாட்டி பொய் கூறுவதாக தெரியவில்லை. காதாம்பரியின் வெறுப்பிலும் பொய்யில்லை. அப்படியாயின் தன் குடும்பத்தையே! மருதநாயம் நம்ப வைத்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் மண்டையை குடைந்தான் ஈகை.
 
“ஈகைனு இளிச்சவாயன் வருவான். பழிவாங்க பேத்தின்னு யாரோ ஒருத்திய கற்பமாக்குவான்னு கூட்டிட்டு வந்திருப்பாரு” தயாளன் முறைக்க
 
“நீ ஒழுங்கா விசாரிக்கலைனு சொல்லு. அறையும் குறையுமா விசாரிச்சுட்டு வந்து என்ன கிண்டல் பண்ணுறியா?” அண்ணனை முறைத்தான் ஈகை
 
“இப்போ என்ன பண்ண போற?”
 
“ஈகை வருவான்னு அந்த பொண்ண கூட்டிக்கிட்டு வரல. வந்த ஈகைகிட்ட இருந்து நிலம் வேணும்னு பார்கவிய என் கூட பழக சொல்லுறாங்க”
 
“பணத்துக்காக என்ன வேணாலும் செய்வாளா? இந்த மாதிரி பொண்ணுங்கள” தயாளன் பல்லைக் கடிக்க
 
“ம்ம்.. இல்ல… பணம் இல்ல… அவ அம்மா… ஒன்னு மருதநாயம் அவ அம்மாவ கடத்தி வச்சி இவள மிரட்டி செய்ய சொல்லி இருக்கணும். இல்லனா அவங்கம்மா ஆபத்தான நிலமைல இருக்கணும். அவங்கம்மாவை பத்தி தேட சொல்லி இருக்கேன். டீடைல்ஸ் கிடைச்சதும் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பார்க்கலாம். இவள கூட்டிகிட்டு வந்ததும் அந்த நிலத்துக்காகத்தான்னு தோணுது” ஈகை சொல்ல
 
“சரியான கிரிமினல் பா இவனுங்க. சரி இந்த பொண்ண விட்டுடலாம். அடுத்து என்ன?”
 
“சொத்துபத்தோட இருக்குற மருமக காதம்பரி அவங்கள இந்த குடும்பத்துல இருந்து பிரிக்கணும். அவங்களால எந்த உதவியும் இவனுங்களுக்கு கிடைக்கக் கூடாது”
 
“அவங்க அப்பா சொத்தை ரெண்டா பிரிச்சி அவங்க அண்ணனுக்கும் அவங்களுக்கும் கொடுத்திருக்காரு. தங்கதுரை அத அவர் பேர்ல எழுதிக்க பார்த்தப்போ.. இல்ல. என் தங்கச்சி பேர்லயே! இருக்கட்டும். வேணும்னா பிஸினஸ்ல போடுங்கனு சொல்லி இன்வெஸ்ஸும் பண்ணி இருக்காரு அவங்க அண்ணன். அதனால அவர்மேல் இவருக்கு காண்டு பேச்சு வார்த்த இல்லை. இந்தம்மாவும் அண்ணன் வீட்டுக்கு போறதில்ல ஆனா புருஷன் பேர்ல சொத்தை எழுதவுமில்லை. உசார் பார்ட்டி. தங்கதுரைகிட்ட கலந்தாலோசிக்காம அண்ணனும், தங்கையும் குடும்ப பிஸினஸ்ல சொத்தை முடக்கிட்டாங்க. இவங்க ஆலைகளல்ல ரெண்டு பேரும் பங்குதார்கள். அது நமக்கு தெரியுமே!”
 
“ம்ம்.. குடும்பம் பிரிஞ்சா அந்தம்மா பிஸினஸ்ல போட்ட காச கேப்பாங்க ஹெவி லாஸ் இல்ல”
 
“ஆமா… என்ன பண்ண போற?”
 
“தெரியல. யோசிக்கணும்” புருவம் உயர்த்தி மூச்சை இழுத்து விட்டான் ஈகை. ஆனால் ஈகையின் வலையில் வழிய வந்து சிக்கினான் ஹரிஹரன். 
 
“ஈகை இந்த பையன் நடவடியைல சந்தேகம் இருக்கு” என்றவாறு வந்த ஜெய் ஈகையிடம் சீசீடிவி புட்டேஜுகளை காட்ட அதில் ஹரிஹரன் இரவில் அடிக்கடி வெளியே செல்வது தெரிய வந்தது. அவனை கண்காணிக்க சென்னையிலிருந்து ஒரு ஆளை ஜெய் ஏற்பாடு செய்ய அவனின் லீலைகளை பற்றி அறிய வரவே!
 
“போலீஸ் கேஸ்பா இதெல்லாம்” தயாளன் சொல்ல
 
தாடையை தடவிய ஈகை “பெரிய மனிசனுங்க, பெரிய குடும்பம்னு யாரும் கம்பளைண்ட் கொடுக்க மாட்டாங்க. கண்டிப்பா இவனால பார்கவிக்கு ஆபத்து இருக்கும். இவன் மேல நாலு கண்ணு ஒரு கன்ன வைங்க” என்று ஜெய்யிடம் சொல்ல ஹரிஹரனின் அறையிலும் அவனுக்கு தெரியாமல் ஒரு ஸ்பை கேமரா பொருத்தப்பட்டது.
 
ஊருக்கு செல்ல வேண்டி உள்ளதால் ஜெய்யிடம் ஒரு தடவைக்கு பலதடவை கவனமாக இருக்கும்படி கூறிவிட்டே சென்னை செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் ஊர் கட்டுப்பாட்டின்படி அந்தவாரம் பூஜைகள் ஆரம்பமாக உள்ளதால் யாரும் ஊரை விட்டு போகக்கூடாது என்பதாலும்,   எல்லைச்சாமியின் திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாலும் ஊரிலையே! ஈகையும் தயாளனும் தங்கி விட்டனர்.
 
மூன்று நாட்களாக ஹரிஹரன் நடுஇரவில் மருதநாயகத்தின் அறைக்குள் நுழைய முற்படுவதை சீசீடிவியின் மூலம் கண்டுகொண்ட ஈகை அவன் அப்படி என்ன எடுக்க முயற்சி செய்கிறான் என்று யோசிக்க ஜெய்யும், தயாளனும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை கூற ஒன்றும் ஈகைக்கு உவப்பாக தோன்றவில்லை.
 
ஜெய்யுடைய ஆட்களை அனுப்பி விசாரித்ததில் ஊர் எல்லைக்கோவிலை பற்றின தகவல்களை அறையும், குறையுமாக ஈகையின் காதுக்கு வந்து சேர்ந்தது.
 
“அட ஆமா இத நான் எப்படி மறந்தேன். ஈகா அப்போ நீ சின்ன பையனில்ல. ஊருக்கும் அடிக்கடி வரமாட்ட அதனால உனக்கு இதப்பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று கோவிலில் காதலர்கள் இரவில் தங்கினால் ஊர் மக்களே! திருமணம் செய்து வைப்பார்கள் என்ற கதையை தயாளன் ஈகைக்கு கூறலானான்.
 
“அப்படியென்றால் கோவில் சாவியை எடுக்கத்தான் மருதநாயகத்தின் ரூமுக்குள்ள போறானா? அவனை இன்னும் நல்லா வாட்ச் பண்ணுங்க”
 
ஹரிஹரன் நான்காம் நாள் மருதநாயகத்தின் அறையிலிருந்து ட்ராவர் சாவியை எடுத்து காரியாலய அறைக்கு சென்றதும் குழப்பமாக பார்த்திருந்தவர்கள் அவன் அங்கிருந்து வெளிப்பட்டு மீண்டும் மருதநாயகத்தின் அறைக்கு சென்று தனதறைக்குள் வந்து கையேடு கொண்டு வந்திருந்த இரண்டு சாவியையும் கையில் வைத்திருக்கும் காட்ச்சிகளை பார்த்த ஈகை
 
“மருதநாயகம் ரொம்ப உஷார்தான். எல்லா சாவியையும் ஒரு ட்ராவர்ல போட்டு ஒரு சாவிய தன் கைவசம் வச்சிருக்கிறாரு. ஒன்னு கோவில் சாவி மத்தது?” என்று யோசிக்க
 
ஜூம் பண்ணி பார்த்து “அதுல ஏதோ நம்பர் இருக்கு சார்” என்றான் ஜெய்.
 
“ஆமா அது இந்த வீட்டு அறையோட சாவிகள்ள ஒன்னு. பார்கவி ரூம் சாவியா இருக்கும்” ஈகை கூற
 
 “மருதநாயகத்தோட பேரன்னு தப்பாம இருக்கான் பாரு” தயாளன் கோப மூச்சுக்கலை விடலானான்.
 
“அவனுக்கு ஹெல்ப் பண்ணுறது அவன் கையால் ஊமையானாதான் இருக்கும். நமக்கும் அந்த கோவில் சாவியோட டூப்ளிகேட் சாவி வேணும்” ஈகை சொல்ல
 
“ரெண்டு நாள்ல பண்ணிடலாம் சார்” என்றான் ஜெய்.
 
“குட்” ஈகை சொல்வதையெல்லாம் உடனுக்குடன் செய்து முடிக்கும் இந்த சாதாரண ஸ்டாண்டு மாஸ்டர் ஜெய் மீது கொஞ்சமாலும் ஈகைக்கு சந்தேகம் என்பதே! வரவில்லை என்பதுதான் ஆச்சரியம். அது அவன் தயாளன் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம் என்றால் மிகையாகாது.
 
“என்ன டா உன் பிளான்” தயாளன் கேக்க
 
“முதல்ல ஹரிஹரனோட பிளான் என்னனு புரிஞ்சுதா?”
 
“இல்ல”
 
“பார்கவி தூக்கிட்டு போய் நைட்டு முழுக்க கோவில்ல இருந்தா காலைல ஊர் கூடி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க”
 
“ஓஹ்.. இத வீட்டுல சொல்லியே பண்ணலாமே!”
 
“சொல்லி இருப்பான். அவதான் பேத்தியே! இல்லையே! இவனுங்க மறுத்திருப்பானுங்க. அதான் குறுக்குவழி” ஈகை நெத்தியை தடவ
 
“சரி நீ என்ன பண்ண போற?” தயாளன் கேக்க
 
“கல்யாணம்” என்றான் ஈகை.
 
“என்னடா சொல்லுற?”
 
“உன் தம்பி கடைசி வரைக்கும் இப்படியே! இருந்திடட்டுமா? இல்ல பார்கவிய கல்யாணம் பண்ணிக்கட்டுமா?”
 
“அவசரப்படுற ஈகை” தயாளன் முறைத்தவாறே சொல்ல
 
“ஹாஹாஹா பயந்திட்டியா? பார்கவி கல்யாணம் பண்ணுற ஐடியா எல்லாம் இல்ல. சும்மா சொன்னேன். இவன கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த பொண்ணு அல்லல் படணுமா? அன்னைக்கி நைட் பொண்ண தூக்காம தடுத்தா சரிதானே!” என்றவன் ஹரிஹரன் பார்கவியை கடத்திய அன்று காலைதான் தனது முடிவை மாற்றி இருந்தான்.
 
ஊரை விட்டுத்தான் யாரும் செல்லக் கூடாது. ஆனால் ஊருக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றிருக்க, ஜெய்யின் உதவியோடு ஹரிஹரன் மற்றும், ஊமையனின் ஹைட், வெய்ட் இல் இரண்டு பேரை ஏற்பாடு செய்து ஹரிஹரன் பார்கவியை தூக்கிச் சென்ற இருபது நிமிடங்கள் கழித்து அவர்கள் வந்த அதே! வழியாக உள்ளே! வந்து ஈகையை தூக்கிக் கொண்டு சென்றிருந்தனர்.