Advertisement

நிலவு 24
தான் பெத்த மகள் ஜானவியை முத்துராஜுக்கு திருமணம் செய்து கொடுத்து சத்யநாதனின் சொத்துக்களை தம் மகள் அனுபவிக்கட்டும் என்று கூட மருதநாயகம் நினைக்கவில்லை. தான் அடைய வேண்டும், தான் அனுபவிக்க வேண்டும் என்றுதான் எண்ணினார். அதற்காக பாசம் வைத்த ஜானகியை குடும்பத்தோடு கொலையும் செய்தார்.
 
மருதநாயகம் போன்ற மனிதர்கள் இருக்கும் இந்த பூமியில்தான் காயுவின் தந்தை போன்றவர்களும் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அடுத்தவர்களின் சொத்துக்கு ஆசைப்படாமல். அடுத்தவரின் பிரச்சினையில் வீணாக தலையிடாமல், முடியுமான அளவில் அடுத்தவருக்கு உதவி செய்து கொண்டு, தன் குடும்பத்தை மாற்றுமல்லாது தன் கூடப் பிறந்தவர்களையும், அவர்களுக்கு பிறந்தவர்களையும் நல்லா இருக்கிறார்களா? என்று தேடிப்பார்க்கும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். இது போன்ற மனிதர்கள் இன்னும் பூமியில் வாழ்வதினால் தான் இன்னும் மழை பொழிகிறது, பூமி விளைகிறது, கடவுள் பூமிப்பந்தை அழிக்காமல் விட்டு வைத்திருக்கின்றானோ! என்று எண்ணத் தோன்றுகிறது.  
 
இரண்டு நாட்களாக மருத்துவமனையில் ஓய்வெடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார் காயுவின் தந்தை.
 
உண்மையில் கல்யாணத்துக்கான செலவில் பாதியைத்தான் செலவானதாகவே! கூறி இருந்தான் தயாளன். ஆடம்பரமாக திருமணம் செய்வது அவனுக்கும் பிடிக்கவில்லை.
 
வாழ்த்த சொந்தபந்தங்கள்தான் இல்ல. இவர்களாவது வாழ்த்தட்டும் என்று ஈகையின் வற்புறுத்தலின் பெயரில் தங்கள் கம்பனியிலுள்ள மொத்த பேரையும் திருமணத்துக்கு அழைத்திருந்தான்.
 
மதியம் திருமணம் இரவு ரிஷப்ஷன் என்றிருக்க, பிரித்து அழைப்பு விடுத்ததால் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால் மண்டப செலவு, சாப்பாட்டு செலவு என்று கணக்குப் பார்த்தால் அதிகம் வரும் என்று காயுவின் தந்தை ஈகையிடம் கேட்க,
 
“மண்டபம் எங்களுக்கு தெரிஞ்சவருடையது ப்ரீதான் அங்கிள். சாப்பாட்டு செலவு மட்டும்தான். அதுவும் அடிக்கடி கம்பனி ஆடர்ச கொடுக்குறதால டிஸ்கவுண்ட் கொடுத்தாரு” என்று பொய் கூற அவரும் நம்பி விட்டார். இன்னும் இதர செலவுகள் என்று கணக்குப் பார்த்து ஈகையிடம் கேட்க, “என்ன மனுஷன்யா” என்றுதான் எண்ணினான்.
 
அதற்கு மேலும் குறைத்து சொல்ல முடியாது மாட்டிக்கொள்ள நேரிடும் என்று “ஆம்” என்றுவிட பாதியை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள, தயாளன் “நீங்க எவ்வளவு பண்ணனும்னு நினைக்கிறீர்களோ! அத மட்டும் கொடுங்க”
 
“இல்ல மாப்புள அது சரியில்ல” என்றவர்  கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுக்க ஆரம்பித்தார். காயத்திரியின் சம்பளத்தை வீட்டில் கொடுத்திடலாம் என்று தயாளன் கூற அதையும் வாங்க மறுத்துவிட்டார். என்ன செய்வதென்று அவரை அவர் பாட்டில் விட்டுவிட, மாதா மாதம் தயாளனின் அக்கவுண்டில் பணத்தை போட்டுக்கொண்டு வந்தார்.
 
இடையில் ரஸ்மியின் திருமணம் அந்த செலவுக்கு யார் கையையும் எதிர்பார்க்கவுமில்லை. யாரையும் செலவு செய்ய விடவுமில்லை. தயாளனுக்கு கோபம் கோபமாக வந்தாலும் அவர் குணத்தை மாற்ற முடியாததால் அமைதியானான். இரண்டாவது அக்கா திருமணத்தின் போது வீட்டை அடமானம் வைத்திருந்தார் அதை இப்பொழுதுதான் மீட்டியிருந்தார் இடையில் காயுவின் அன்னைக்கு ஒரு ஆபரேஷன் பண்ண நேரிட அதற்கும் கடன் பட்டவர் அதைக் கட்டிக்கொண்டு இருக்க, தயாளனின் பணத்தைக் கொடுக்க முடியவில்லை.
 
“உடம்பு முடியாம இருக்கீங்க மாமா. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று விட்டான். வேறு என்ன சொல்ல முடியும்.
 
இதோ வீடு வந்த உடனே! ஆரம்பித்து விட்டார். “மாப்பிள என் பென்ஷன் பணம் அதில் கொஞ்சம்தான் கொடுக்க முடியுது. ஒன்னு பண்ணலாமா? வீட்டை வித்துடலாமா? வரும் பணத்துல உங்களுக்கு சேர வேண்டியதையும் கொடுத்து மீதி இருக்குறத ஐஞ்சி பொண்ணுகளுக்கு பிரிச்சி கொடுத்துடலாம்”
 
“வீட்டை வித்துட்டு எங்க போக உத்தேசம்” அமைதியாகத்தான் கேட்டான்.
 
“எனக்கும் இவளுக்கும் ஏதாவது ஆசிமரம் பாத்து தங்கிக்கொள்ளலாம்”
 
அவர் சொன்னதில் காயத்திரிக்கும் கோபம் வந்தது. “அஞ்சு பொண்ணுகளை பெத்து, வளர்த்து  ஆசிரமத்துல அனாதைங்க போல இருக்க போறீங்களா? அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு. நாளைக்கு நீங்க செத்தா கூட உங்கள பக்கத்துல இருந்து பார்க்க முடியல என்ற வேதனையை எங்களுக்கு கொடுக்க போறீங்களா?”
 
கோபத்தில் சொன்னதுதான். அதற்கே அன்னை பதற, பாயல் மற்றும் ரஸ்மி அழ ஆரம்பித்திருந்தனர். அதன்பின்தான் தான் என்ன பேசினோம் என்பதையே! உணர்ந்தாள் காயத்திரி.
 
“காயு கொஞ்சம் அமைதியா இரேன். மாமா உங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தா உங்க கூடவே! இருந்திருப்பான். உங்க பாரத்த சுமந்திருப்பான்” தயாளன் பேச
 
இடையில் குறுக்கிட்ட ஈகை “என்ன வேணா உங்க புள்ளையா தத்தெடுத்துகோங்க. ஏற்கனவே! காயத்திரி ராகிய கட்டி தம்பியாக்கிட்டா” கண்சிமிட்டி சிரிக்க, அனைவரின் முகத்திலும் சிறு புன்னகை எட்டிப்பார்த்தது.
 
“சொன்னாலும் சொல்லலைனாலும் நீ எங்களுக்கு பையன்தான் பா” என்றாள் காயுவின் அன்னை.
 
பெங்காலியில் அவர்கள் என்ன பேசுகிறார்கள். காயத்திரி எதுக்கு ஆவேசமாக பேசினாள். எதற்கு அழுதார்கள். ஈகை என்ன சொன்னான். சொன்னதும் ஏன் புன்னகைத்தார்கள் ஒன்றுமே! புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் பார்கவி.
 
“சரி வீட விக்கிறது உங்க இஷ்டம் ஆனா ஒரு கண்டிஷன். நீங்க ரெண்டு பேரும் எங்க கூட வந்து தங்கணும். இல்லனா வீட விக்க நாங்க விடமாட்டோம்” என்றவன் சுதீப்பை பார்க்க அவனும் தயாளனின் கூற்றை ஆமோதித்தான்.
 
“அதுவந்து…”
 
“ஒன்னும் சொல்ல வேணாம்… பேரன் பேத்தியோட இருக்க நிறைய பேருக்கு கொடுத்து வைக்கல. உங்களுக்கு அந்த கொடுப்பன இருந்தும் இழந்திடாதீங்க” காயு கறாராக சொல்ல
 
“உங்களுக்கு எந்த பொண்ணு வீட்டுக்கு போகணும்னு தோணினாலும் சொல்லுங்க ஏற்பாடு பண்ணித்தறோம். ப்ளீஸ் இப்போவாவது கொஞ்சம் நாங்க சொல்லுறத கேளுங்க” தயாளன் சொல்ல
 
“என் பொண்ணு பொறந்தப்போ வந்து ஒரு மாசம் தங்கி இருந்தேன். அதுவும் நீங்க அங்க வரமாட்டீங்க என்ற ஒரே காரணுத்துக்காக. அதுக்கு பிறகு கோவில்ல வச்சிதானே! சந்திச்சிக்கிறோம். ஒருதடவையாவது வீட்டுக்கு வந்திருக்கிறீங்களா? நீங்க இப்படி பண்ணுறது சின்னக்கா மாமியார் பேசின பேச்சுன்னு எனக்கு தெரியும். அதுக்காக எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்கல்ல. என் பொண்ணுக்கும் அவ தாத்தா பாட்டி வேணும் இதோ இவங்க பசங்களுக்கும்தான்” தந்தையை பார்த்து கூறியவள்
 
“ரெண்டு பேரும் அழ மட்டும் வாய தொறக்குறீங்க, பேசுங்களேன் டி” அக்காவையும் தங்கையையும் கடிய அவர்களும் அழுதவாறு தந்தையை கெஞ்சலாயினர்.
 
அவர் இந்த விஷயங்களில் மானம், ரோசம், சுயகவுரவம் என்று பிடிவாதம் பிடித்தாலும், பாசமான தந்தை. அன்பான குரு.
 
ஐஷுவும், பாயலின் இளைய மகளும் என்ன நடக்குது என்று புரியாவிட்டாலும், தாத்தா எதுக்கோ சம்மதிக்கவில்லை. அதனால்தான் அனைவரும் கெஞ்சுகிறார்கள் என்று புரிய “ப்ளீஸ் பாபா, ப்ளீஸ்” தாத்தனை கெஞ்ச தலையசைத்து விட்டார்.
 
எப்படியோ ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்திருக்க அனைவரும் அங்கு உணவுண்டு பின் கதைபேசி அமர்ந்திருந்தனர்.
 
மாலையானதும், அக்காவும் தங்கையும் குடும்பத்தாரோடு விடைபெற்று செல்ல ஐஷு மட்டும் தாத்தாவோடு பேச்சுக்கொடுக்கலானாள்.
 
அவள் மழலையில் உருகியவர் இந்த குழந்தைகளுக்காகவாவது தன் முடிவை மாற்றிக்கொண்டதில் மகிழ்ந்தார்.  
                     
“ஐஷு தூங்கிட்டாளா?” என்றவாறு வந்த தயாளன் கதவை சாத்தி தாப்பாலிட்டான்.   
 
“கல்யாணமானபோ வந்தீங்க அப்பொறம் ஐஷு கிடைச்சி ஒருமாசம் இங்க இருந்தப்போ வந்தீங்க. அதுவும் ரெண்டு நாள் என்கூட தங்கினீங்க. அதுக்குமேல உங்களால இந்த ஏழை வீட்டுல தாங்க முடியாம டெயிலி ஈவினிங் மட்டும் வந்து என்னையும் பாப்பாவையும் பாத்துட்டு போனீங்க. அதுக்குப்பிறகு  இன்னைக்குத்தான் இந்த வீட்டுக்கு வரீங்க. நீங்களும் ஒருவகைல என் அப்பா மாதிரிதான் பிடிவாதம் பிடிக்கிறீங்க”
 
ஐஷு நடுவில் தூங்கிக் கொண்டிருக்க காயத்திரி இடது புறத்தில் தூங்கிக்கொண்டிருக்க தயாளன் வந்து வலது புறத்தில் படுத்து கண்ணை மூடியதும் புலம்பலானாள் அவன் மனையாள்.
 
அவள் முறைக்கிறாளா? சிரிக்கிறாளா? கண்ணை மூடியிருந்தவனுக்கு புரியவில்லை. “மாப்பிளைங்க வீட்டுக்கு வந்தா ஓவரா கவனிக்கிறார். நாம ஏதாச்சும் வாங்கிட்டு வந்தாலும் மறுக்கிறார். இனி இந்தப்பக்கம் வரத்தோணுமா? ஆமா அது என்ன நடுல ஏழை வீட்டுல தங்க பிடிக்கலைனு குத்தி பேசுற? நானும் ஏழை வீட்டு பிள்ளைதான் காயு. உங்கப்பா பண்ண அலப்பரைலதான் அவருக்கு செலவை இழுத்து வைக்கிறோமோன்னு இந்த பக்கம் வராம இருந்துட்டேன். ஏழை வீடுன்னு சொல்லுற? உங்க வீடு எவ்வளவு பெருசு? இத விலைக்கொடுத்து வாங்கவே! என் சொந்த வீட்டை விக்க வேண்டி இருக்கும். “
 
“சாரி. நான் எதோ கோபத்துல சொல்லிட்டேன்” காயத்திரி சொல்ல
 
“நானும் உங்கப்பாவை முதல்ல தப்பாதான் நினச்சேன். பையன் வேணும்னு வரிசையா பொம்பள புள்ளைங்கள பெத்துக்கிட்டாரோனு” தயாளன் சிரிக்க,
 
“உங்கள…” எட்டி அவன் தோளில் அடித்தாள் காயு.
 
“சாரி காயுக்குட்டி… ஆனா அவர் புள்ளைங்கள தைரியமா வளர்த்திருக்குற  விதமும், பொண்ணுங்க படிக்கணும்னு படிக்கவும் வச்சி ஒரு பெர்பெக்ட் அப்பாவா இருக்காரு” ஐஷுவின் தலையை தடவியவாறு தயாளன் சொல்ல
 
“ஆமா வீட்டை யாருக்கு விக்க போறீங்க?” அவன் முகம் பார்த்து கேக்க
 
“அதுவா?…. அது” புன்னகைத்தவன் அமைதியாக
 
“என்ன தில்லுமுல்லு பண்ண போறீங்க?” வீட்டை விற்பதில் காயத்திருக்கு உடன்பாடில்லை. அவள் பிறந்து வளர்ந்த வீடு. வந்து செல்லவாவது தாய் வீடு என்று ஒன்று இருப்பது எவ்வளவு முக்கியம். வீட்டை விற்றால்தான் தாயும், தந்தையும் தங்களோடு வந்து இருப்பார்கள். தந்தையின் மனநிம்மதிக்கு அது ரொம்ப முக்கியம் என்று பட சம்மதித்து விட்டாள். கணவனின் மௌனத்தை பார்த்தால் எதோ திட்டமிடுகிறான் என்று தோன்றுகிறது.
 
“காயு உனக்கு இந்த வீடு எவ்வளவு முக்கியம்னு எனக்கு நல்லாவே! தெரியும். அதனால நானும் சுதீப்பும் இந்த வீட்டை வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்”
 
“என்ன சொல்லுறீங்க? அப்பாக்கு தெரியுமா?”
 
“இப்போ சொல்லுறதுக்கு ஐடியாவும் இல்ல. வாங்கின பிறகு பேசிக்கலாம். ஈகைத்தான் இந்த ஐடியாவ கொடுத்தான்”
 
“உங்க தம்பிதானே! ஆமா சமீபத்துலதான் ஊருல இருக்குற ஆலைகள்ல பங்கு வாங்கினீங்க? காசு?”
 
“நாம என்ன ஒரு தொழிலா பண்ணுறோம். தமிழ்ச்செல்வனோட அக்கவுண்ட் அப்படியேதான் இருக்கு. அதுவும் இல்லாம நாங்க கொடுக்குற காசுல ஐஞ்சுல மூணு பங்கு என் கிட்டயே! வரப்போகுது”
 
“ரெண்டுதானே! கடன் மத்தது பங்கு”
 
“சுத்தீப்போட பங்க அவன் வேண்டாம்னு சொல்லிட்டான். அத வீடு வாங்க கொடுத்ததாக இருக்கட்டும்னு சொல்லுறான்”
 
“உன் பேர்ல வாங்கி இருப்பேன். பாயலும் சுதீப்பும் இருந்துதான் வீட்டை பாத்துக்கணும். அவங்களும் எத்துணை நாளைக்கு வாடகை வீட்டுல இருக்கிறதாம். நாம மட்டும் வாங்கினா அது எங்க வீடு என்ன இருந்தாலும் அது சொந்த வீட்டு பீலிங்கை கொடுக்காது. அதனால சுதீப் காசு கொடுத்ததும் புரிஞ்சிகிட்டு வாங்கிட்டேன். நாமளும் அடிக்கடி இங்க அப்பா அம்மாவ கூட்டிகிட்டு வந்து தங்கினா அவங்களும் சந்தோசப் படுவாங்க”
 
“எதுக்கும் அப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லிடுங்க. முருங்கை மரத்துல ஏறிடப்போறாரு”
 
“உங்கப்பாவை வேதாளம்னு சொல்லுறியா? விடியட்டும் மொத வேலைய உன்ன போட்டு கொடுக்குறேன்” என்று அவளிடமிருந்து அடியையும் பெற்றுக்கொண்டவன் “ஈகை சொல்லுற விதத்துல சொல்லுவான். நாளைக்கி நாம கிளம்புறோம். இன்னொருநாள் வந்து வீடு வாங்கின சந்தோசத்தை விருந்து வைச்சி கொண்டாடலாம்” 
 
“சரி தூங்குங்க, நாளைக்கு நாம ஊருக்கு போகணும்”
 
“இந்த ரூம்லதான் நம்ம பர்ஸ்ட் நைட் நடந்திருச்சில்ல”
 
“இப்போ எதுக்கு பழசெல்லாம் பேசிகிட்டு? பேசாம தூங்குங்க” கணவனை அதட்டினாலும் ரகசிய புன்னகை மலர்ந்தது.
 
 அன்று காயு இதே! அறையில் தயாளனுக்காக காத்திருக்க, அறைக்குள் நுழைந்தான் தயாளன். காயு கட்டிலில் அவள் முகத்தை துப்பட்டாவால் மூடி அமர்ந்திருக்க, அவள் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டவன் துப்பட்டாவை நீக்கி அவள் முகம் பார்க்க அவனை முறைத்துக்கொண்டிருந்தாள் காயு.
 
“அம்மா… பேய்” என்று வேண்டுமென்றே கத்த அவனை மொத்தலானாள் காயு. 
 
“ஏன் டி என்ன கொல்ல பாக்குற?”
 
“இத்துணை வருஷமா எங்க போய் இருந்தீங்க?”
 
“ஏன் உனக்கு தெரியாதா? உன் பின்னாலதான் நான் இருக்கேன்னு” குறும்பாகக் கேக்க
 
அவள் உள்ளுணர்வு பொய்யில்லை என்று புரியவும் சற்று நிம்மதியடைந்தவள் மீண்டும் அவனை அடிக்க
 
“இப்போ என்ன டி” அவள் கைகளை பிடித்து தடுத்தவாறே! கேட்டான் தயாளன். 
 
“நான் உங்க ஆபிஸ்லதான்! வேல செய்யிறேன். ஒருதடவையாவது வந்து என்கிட்ட பேசினீங்களா? கண்டும் காணாத மாதிரி போறீங்க?”
 
“யார் டி இவ. இல்லாத வேலைய இருக்குற மாதிரி உன் டிபார்மண்ட்டுக்கு வர்ரதே! உன்ன பார்க்கத்தானே! உனக்குத் தெரியாது. உன் அக்காகே! தெரியுமே! அது மட்டுமா? லன்ச் ஹவர்ல என் டிபன் பாக்ஸ் காணமாம போய் அங்க வேற ஒரு டிபன் பாக்ஸை பார்த்ததும். அது உன்னோடதுதான். நீதான் மாத்தி வச்சிருக்கானு ஒரே நாள்ல கண்டு பிடிச்சேன்! தினமும் இது தொடர என்ன ஈகை கிண்டல் செய்ய உன்ன பாயல் கேலி செய்ய, இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை உன்கிட்ட வந்து கேள்வி கேட்டு பஞ்சாயத்து பண்ணேனா?” பொய்க் கோபம் கொண்டான் கணவனானவன்.
 
“நீங்க கேக்கணும், என் கூட பேசணும்னுதானே! நானும் தினம் இதெல்லாம் பண்ணேன்” கழுத்தை நொடித்தாள் காயு.
 
“நீதானே! உன் கூட பேசக்கூடாது. உன்ன பார்க்க கூடாதுனு சண்டை போட்டுட்டு போன” தயாளன் கோபமாக கூற
 
“ஆமா அப்படியே! பெரிய நீதிவான். சொன்ன உடனே! ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் சரியா பண்ணிட்டாரு. இப்போதான்! சொன்னீங்க எனக்குத் தெரியாம என் பின்னால அலைஞ்சீங்கன்னு. அது மட்டுமா? நீங்க ஆபீஸ்ல எந்த பொண்ணுகூட நின்னு பேசினாலும் அடுத்த செக்கன் உங்க மொபைலுக்கு திட்டி மெஸேஜ் வருமே! அது நான் அனுப்பியதென்று உங்களுக்கு தெரியாது? எங்க என்கூட பேசினா நான் நேர்லயே உங்கள மொத்துவீங்கன்னு உங்களுக்கு பயம்” தெனாவட்டாக கூற
 
“நீ எனக்கு மெஸேஜ் பண்ணிட்டு அந்த பொண்ணுக சின்னதா தப்பு பண்ணாலும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கின கத எல்லாம் எனக்கு தெரியும்” மனைவியை அணைத்துக்கொண்டு “உண்மையிலயே! பயம் தான் டி எங்க எல்லார் முன்னிலையிலும் அடிச்சிடுவியோன்னு. ஆனாலும் நீ என்ன முறைக்கிறது ஆபீஸ் பூரா தெரியும். சிலபேர் கேட்டும் இருக்காங்க”
 
“ஹிஹிஹி அவ்வளவு வெளிப்படையாகவா தெரிஞ்சது. என்ன சொல்லி சமாளிச்சீங்க”
 
“கூடிய சீக்கிரம் தெரியவரும்னு சொன்னேன். இல்லனா ஈப்டீஸிங் கேஸ்ல என்ன உள்ள தள்ளியிருப்பாங்க”
 
“குருவி தலைல பனங்காயை வச்சா மாதிரி ஒரு போஸ்டிங்க கொடுத்து அதிகமா சம்பளமும் கொடுத்து, எனக்கும் பாயலுக்கும் மட்டும் ஸ்பெஷலா போக்குவரத்து சேவை வேற ஏற்பாடு செஞ்சிக்கொடுத்த கம்பனி உங்க கம்பெனி” எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை கிண்டலாகவே! சொல்ல
 
“வேற என்ன பண்ண சொல்லுற? உதவி செய்யவும் விடுறதில்ல. வேற வழியில்லை. போதும் போதும் பேசினது. பேசியே! டைம் வேஸ்ட் பண்ணுற”
 
அன்றைய நாளின் இனிமையான நினைவுகளோடு மனைவியையும், மகளையும் அணைத்தவாறு தூங்கி இருந்தான் தயாளன்.
 
“என்ன பட்டு ரோஜா தூங்காம என்ன பண்ணுற?” அலைபேசியை அனைத்தவாறு கட்டிலில் சாய்ந்த ஈகை கேக்க 
 
“நானும் பெங்காலி கத்துக்கணும்”
 
“வாரே வா கத்துக்கிட்டா போச்சு. தெலுங்கு படம் பாக்குற மாதிரி உக்காந்து இருக்கும் போதே! நினச்சேன். நீ இப்படி ஒரு நல்ல முடிவுக்கு வருவான்னு”
 
 “என்ன கிண்டல் பண்ணுறேளா?” பார்கவி முறைக்க,
 
“ஐயோ இல்ல பட்டு” என்றவன் வாய் மூடி சிரிக்கவும் வலிக்க அவன் தோளில் அடித்தவள். திரும்பி படுத்துக்கொள்ள
 
அவளை இழுத்து அணைத்தவன் “என்ன டி ஹனிமூன் வந்துட்டு நீ பாட்டுக்கு தூங்குற”
 
“என்னது ஹனிமூனா?” என்றவள் மீண்டும் அடிக்க
 
“மொத மொத ஊரு விட்டு ஊரு வந்திருக்கும். அப்போ இது ஹனிமூன் ட்ரிப் தானே! பாரு”
 
“நாம ஏன் அவசரமா கிளம்பி வந்தோம்னு உங்களுக்கு தெரியாது?” கணவனின் புறம் திரும்பி முறைக்க,
 
“அதனால என்ன பாரு. ஒரே கல்லுல ரெண்டு மங்கா? வந்த வேலையையும் பார்த்தாச்சு, அப்படியே! ஹனிமூனையும் கொண்டாடிடலாம்”
 
“உங்கள என்ன பண்ணலாம்? அடி வாங்காம தூங்குறேளா நாளைக்கு ஊருக்கு போகணும்”
 
“நாம வேணா இன்னும் ஒரு வாரம் தங்கி ஹனிமூன் சிறப்பா கொண்டாடிட்டு போலாமா?”
 
“பேசாம தூங்குங்க” அவன் வாயில் ஆள் காட்டி விரல் வைத்து தடுக்க
 
“சாரி டி… உன் அம்மாவ பார்க்க கூட்டிட்டு போகாம இங்க வந்தணு உனக்கு ஒன்னும் கோபம் இல்லையே!”
 
“என்ன பேசுறேல். அம்மா நல்லா இருக்காங்கல்ல. அதான் அவங்க பார்த்துக்க ஏற்பாடு பண்ணவங்க வீடியோ கால் பண்ணி காட்டினங்களே!” அன்னையை பார்க்க முடியவில்லை என்ற கவலை மனதில் இருந்தாலும், கணவனை சமாதானப்படுத்த வேண்டி பேசினாள் பார்கவி.
 
“நாளைக்கு சென்னை போனதும் மொத வேலையா உங்கம்மாவ போய் பார்க்கலாம் சரியா?”
 
“சரி. இப்போ பேசாம தூங்குறேளா? தூங்கினாதான் காலம்பற எந்திரிக்க முடியும். எந்திரிச்சாதான் பிளைட்டை பிடிக்க முடியும்”
 
“ரொம்ப பேசுற நீ…” என்றவன் அவளை இழுத்தணைத்து கன்னத்தில் அழுத்த முத்தமிட்டவன் அவள் கத்தவும் விளக்கை போட்டு கன்னத்தை பார்த்தான்.
 
“நீ வரும் போது கன்னத்துல மார்க் ஒன்னும் இருக்கலையே! இன்னுமா வலிக்குது?”
 
“ரொம்ப வலிக்கலைங்க. வரும் போது மேக்கப் போட்டு மறைச்சேன். இல்லனா என் ஆத்துக்காரர் என்ன அடிச்சிட்டார்னு ஊரே சொல்லும்” என்றவள் சிரிக்க
 
“அடிச்சிட்டாரா? அடிப்பாவி” ஈகை வாயில் கைவைக்க,
 
“விரல் தடம் இருந்தா அப்படித்தான் நினைப்பாங்க” முகம் சுருக்கினாள் பார்கவி.
 
“அப்போ பல்தடம் இருந்த என்ன நினைப்பாங்க” கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான் ஈகை.
 
அவனை மொத்தியவள் “அசிங்கமாக பேசாம தூங்குறேளா” திரும்பி படுத்துக்கொள்ள
 
“நீ ரொம்ப பண்ணுற மாமி நான் இப்போ என்ன அசிங்கமா பேசிட்டேன்” அவளை அணைத்துக்கொண்ட ஈகை வம்பு வளர்க்கலானான்.
 
 
இங்கே மருதநாயகம் விசாலட்சியை பார்த்துக்கொள்ள நியமித்த பெண்னின் அலைபேசி இயக்கத்தில் இல்லை என்று வரவும். பலதடவை முயன்று பார்த்து கோபத்தில் கனன்றுக்கொண்டிருந்தார். தாங்கள் மருதநாயகத்தின் அனைத்து பிஸ்னஸுகளிலிருந்தும் நீங்கிக்கொள்வதாகவும் தங்கள் இன்வெஸ்ட் பண்ணியிருந்த காசை திருப்பிக் கேட்டு காதாம்பரி வக்கீல் நோட்டீஸ் அனுப்ப கொதித்தே! விட்டார். அதேசமயம் அவர் கொதிநிலையை அதிகரிக்கவே! வந்து சேர்ந்தது ஈகை அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் முத்துராஜின் மகன் தமிழ்ச்செல்வன் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை கோரி கோட்டில் கேஸ் போட்டுள்ளதாகவும் இந்த மாதம், இந்தினாம் திகதி கோட்டுக்கு வரவும் என்றிருக்க அதை படித்து எரிமலைக் குழம்பாக வெடிக்கலானார் மருதநாயகம்.
 
“என்னடா இது? யார்டா இவன்? முத்துராஜ் பையன்தான் செத்துட்டானே! அவன் எப்படிடா உயிரோட வந்தான்? என்ன டா நடக்குது? என்னென்னமோ நடக்குது ஒன்னும் புரியல” மருதநாயகம் தலையை பிச்சிக்கொள்ளாத குறையாக புலம்ப ஆரம்பித்திருந்தார்.
 
“என் பொண்டாட்டி வேற வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்காளே! அதுக்கு என்ன பண்ண போறீங்க?” தங்கதுரை தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
 
“அந்த பார்கவியோட அம்மாவ பாத்துக்க நாம ஏற்பாடு பண்ண பொம்பள என்ன ஆனா மொத அத யோசிங்க?” விக்னேஸ்வரன் கத்த
 
“என்னங்க டா? ஆளாளுக்கு என் கையையே! பாத்துகிட்டு இருக்கீங்க?” புத்திரர்களை முறைத்தவர் “விக்னேஸ்வரா நீ நாளைக்கு சென்னை போய் பார்கவியோட அம்மாவ பாத்துட்டு எனக்கு போன் பண்ணு”
 
“துரை நீ உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்த பாரு” இரண்டு பிரச்சினைக்கு தீர்வு சொன்னவர் “முத்துராஜ் பையன் யாரு? இவ்வளவு நாளும் எங்க இருந்தான்? என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்? ஒன்னும் தெரியல”
 
“ஒருவேளை நம்ம கிட்ட இருக்கிற சொத்தை அபகரிக்க எவனாச்சும் திட்டம் போட்டு கேஸ் கொடுத்திருப்பானோ!” விக்னேஸ்வரன் கேக்க
 
தங்கதுரையும் “அப்படியும் இருக்குமோ!” என்று தந்தையை ஏறிட்டான்.
 
“அதான் வக்கீல் தெளிவா சொன்னானே! அவன் முத்துராஜ் பையன்தானாம். அதுல எந்த சந்தேகமும் இல்ல. எல்லா ஆதாரங்களையும் கொடுத்திருக்கான்னு. அந்த கிழட்டு செல்வம் பேரன் செத்துட்டான்னு நாடகமாடி நம்மள நம்பவச்சிட்டான். அதுக்கு அந்த டைவர் மணி பையன் அவன் பொண்டாட்டி ரெண்டு பேரும் உடைந்த. ஆமா மணி இறந்துட்டான் அவன் பொண்டாட்டி பசங்கள கூட்டிகிட்டு அவ சொந்த ஊருக்கு போய் இருப்பான்னு நினைச்சோம். ஆனா செல்வம் கூட சேர்ந்து நம்மள ஏமாத்திட்டாங்க” மருதநாயகம் உறும
 
“அப்படினா செத்தது மணி பையனா? மூத்தவன் இப்போ முத்துராஜ் பையன் கூடத்தான் இருப்பான். அப்படினா இவனுங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கு. அதான் நாடகம் ஆடி இருக்காங்க” தங்கதுரை சொல்ல, மருதநாயகத்துக்கு எல்லாம் புரிந்தது.
 
இருவது வருஷமா எங்கயோ! இருந்தவன் திடிரென்று சொத்தை கேட்டு கேஸ் போட்டிருக்கான்னா? எல்லாத்துக்கும் துணிஞ்சிதான் வந்திருப்பான். அவன் யாரு? எப்படி இருப்பான்னு கூட தெரியல” விக்னேஸ்வரன் கூற
 
“ஆளாளுக்கு ஒவ்வொன்ன யோசிக்க வேணாம். முதல் ஹியரிங்கு வருவானல்ல ஆள் யாருனு முதல்ல பார்க்கலாம் அப்பொறம் ஆள எப்படி தீர்த்துக் கட்டுறதுனு யோசிக்கலாம்” மருதநாயகம் கூற அவர் புத்திரர்களும் அதுதான் சரி என்று பட்டது.
 
ஆனால் தமிழ்ச்செல்வன் ஈகைத்தான் என்பதை சென்னை சென்ற விக்னேஸ்வரன் கண்டுபிடித்து தந்தைக்கு தெரிவித்திருந்தான். 
 

Advertisement