செவ்வானில் ஒரு முழு நிலவு 13-1

5763

நிலவு 13-1
எல்லைச் சாமிகளுக்கான பூஜை நடைபெற்று முடியும்வரை இந்த ஒரு வாரமும் யாரும் ஊரை விட்டு செல்லக் கூடாது என்பதனால் ஊர் மொத்தமும் திருவிழாபோல் காவல் தெய்வங்களின் கல்யாணத்தை சிறப்பித்து கண்டு மகிழ வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து சார்பாக மருதநாயகம் கேட்டுக்கொண்டிருந்தார்.
 
மதில் சுவர் கட்டப்பட்ட பின் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறுவதில்லை என்ற நிம்மதியிலையே! ஊர் மக்களும் பூஜையில் கலந்துகொண்டு தெய்வங்களின் கல்யாணத்தை பார்வையிட ஆவலாக காத்திருந்தனர்.
 
ஊர் எல்லைச் சாமிகளுக்கான பூஜைகள் இந்த வாரம் ஆரம்பமானதால் யாரும் ஊரை விட்டு வெளியூர் பயணம் செல்லக் கூடாதென்று ஊர் பஞ்சாயத்து முடிவு பண்ணி இருப்பதாக தெரிவிக்கப்படவும், சென்னை செல்ல ஆயத்தமான ஈகைச்செல்வனும் தயாளனும் ஊரிலையே! தங்கி விட்டனர்.
 
ஊருக்கு வந்து ஒரு மாதமாகப் போகிறது. நிலத்தில் மும்முரமாக பயிர்களும் நடப்பட்டு வேலை தொடர்ந்துக் கொண்டிருக்கின்ற நேரம் இது. மருதநாயகத்தின் ஆட்களை தான் வேலைக்கு எடுக்க போகிறாயா என்று தயாளன் கேட்டது போல் ஈகை வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று கூறிய போது மருதநாயகத்துக்கு கைக்கூலி பார்க்கும் சில கறுப்பாடுகளும் வருகை தந்திருந்தனர்.
 
மருதநாயகத்தை பற்றி ஓரிருவார்த்தை தப்பா பேசியவன் அவருக்கு துரோகம் இளைத்து தனக்கு நம்பிக்கையாக இருக்க விரும்புவோரை வலது பக்கம் வருமாறு கூற
 
“இந்த ஊரில் இருந்துகொண்டு அவரை எதிர்க்க நம்மால் முடியாது” என்று பலர் கூறும் வேளையில் சிறிது நேரத்தில் பத்து பேர் அவனது வலது புறத்தில் நின்றிருந்தனர்.
 
அந்த பத்து பேரும் மருதநாயகத்தின் ஆட்கள்தான். அங்கே ஈகை பேசியதை மருதநாயகத்துக்கு ஒளிபரப்பி. அவரின் இரத்தத்தை கொதிக்க வைத்தபின் ஈகை சொற்படி செய்யுமாறு அவரே! இவர்களுக்கு ஏவி இருந்தார்.
 
அந்த பத்து பேரை ஒரு பார்வை பார்த்த ஈகை “உண்ட வீட்டுக்கே! துரோகம் செய்பவன் என்றா என்னை நினைத்தீர்கள்?  நான் இருப்பது அந்த வீட்டில்” மறந்தும் அது மருதநாயகம் வீடு என்று கூறவில்லை. “சத்தியநாதன் ஐயாவுக்கு சொந்தமான நிலத்தை வாங்கி இருக்கிறேன். இவ்வளவுகாலம் அவர்களுக்கு வேலை பார்த்த நீங்கள் நேற்று வந்த எனக்கு வேலை செய்து அவர்களுக்கு துரோகம் செய்ய துணிந்தீர்களாயின் உங்களை போல் கேடு கெட்டவர்கள் இந்த உலகத்திலையே! இருக்க முடியாது. உங்களுக்கு என்னிடம் வேலை கிடையாது. போய் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர் மன்னித்தால் வேலை தருகிறேன்” என்று வசனம் பேச மருதநாயகமே ஈகையின் மகுடியில் மயங்கித்தான் போனார்.
 
தன்னிடம் வேலைக்கு வருகிறவர்கள் ஒருவகையில் மருதநாயகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிந்துகொண்டவன் தன்னாலான உதவிகளை செய்ய ஆரம்பித்து வேலை செய்யாதவர்களுக்கு கூட உதவி இருந்தான். ஊர் மக்கள் மத்தியிலும் இந்த ஒரு மாதத்தில் அவனுக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்திருந்தது.
 
 
இந்த நேரத்தில் ஒரு வேலை விஷயமாக தயாளன் சென்னை செல்ல தேவை இருக்க, ஈகையை இங்கே தனியாக விட்டுச்செல்ல அவன் விரும்பவில்லை.
 
“அதான் ஜெய் இருக்கிறானே!” என்று ஈகை பலதடவை சொல்லிப் பார்த்தும்
 
“நீ வந்தால்தான் போவேன்” என்று அடம்பிடிக்கும் குழந்தையாக மாறி நின்றான் தமையன்.
 
வேறு வழியில்லாது ஈகையும் கிளம்ப, அன்றே! ஊர் இப்படி ஒரு கட்டுப்பாடை விதித்திருக்க, இருவரது பயணமும் ரத்தானது.
 
வேலையை காரணமாக வைத்து சென்னை செல்வது தன் குடும்பத்தை பார்க்கத்தானே! காதல் மனைவியின் முகத்தை பார்த்துப் பேசி ஒரு மாதமாகப்போகின்றது என்றால் அவனால் நம்பவும் முடியவில்லை. தொழில்நுட்பம் மட்டும் வளர்ச்சியடையவில்லையாயின் படுதிண்டாட்டம்தான் என்றெண்ணியவாறே காயத்திரியை அலைபேசியில் அழைத்து தான் சென்னை வர முடியாத விவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தான் தயாளன்.
 
“என்ன தயா சொந்த ஊருக்கு போனீங்க அப்படியே அங்கேயே! தங்கிடுவீங்கபோல” மெல்லிய சிரிப்பு சத்தம் அலைபேசியினூடாக வர
 
பெருமூச்சு விட்டவன் “ஊரோட சுகமே! தனிதான் காயு ஆனா இப்படியெல்லாம் நடந்து நாம கொல்கத்தா வரலைனா நான் உன்ன சந்திச்சிருக்கவே! மாட்டேன் இல்ல”
 
“ம்ம்… அதுக்காக உங்க வாழ்க்கைல இப்படியெல்லாம் நடந்திருக்க கூடாது தயா” கணவனது மனக்கவலையை உணர்ந்தவளாக சொல்ல
 
“இதுக்குதான் ஒருவாசல் மூடி மறுவாசல் திறப்பான் இறைவன்னு சொல்லுறாங்க போல இருக்கு” சிரித்தான் தயா.
 
தயாவின் வாழ்க்கையில் ஆயிரம் சோகங்களை சுமந்த அத்தியாயங்கள் இருந்தாலும் அவன் வாழ்க்கையில் வந்த வசந்தம் காயத்திரி.
 
முதன் முதலாக காலேஜ் செல்லும் பஸ்ஸில்தான் அவளை பார்த்தான். பார்த்த நொடியே அவன் மனதை ஈர்த்து விட்டாள் காயத்திரி.
 
தங்களுக்குள் எவ்வளவு சோகங்கள் இருந்தாலும், ஒருவரை ஒருவர்  கேலியும், கிண்டலும் செய்து கொண்டு நல்ல நண்பர்களை போல்தான் ஈகையும், தயாவும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள்.
 
ஒருநாள் பேச்சுவாக்கில் ஈகை “காலேஜ் முடிஞ்ச கையேடு நீ கல்யாணம் செய்துகொள் தயண்ணா” என்று சொல்ல
 
வேலை கிடைத்ததும் செய்து கொள்வதாக கூறி இருக்க வேலை கிடைத்தும் கல்யாணத்தை பற்றி பேசக்காணோமே! என்று மீண்டும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தான் ஈகை.
 
நொடிநேரம் காயத்திரியின் முகம் கண்முன் வந்து சென்றாலும் “என்ன டா விளையாடுறியா? படிச்சிகிட்டே பார்ட் டைம் ஜோப் என்ற பெயர்ல  ஐம்பதோ நூறு கிடைச்சாலும் பரவால்லன்னு பசங்களுக்கு பாடம் எடுத்தேனே! காசு கிடைக்கும்னா எந்த மாதிரியான வேலையையும் செய்ய தயாராக இருக்கேன். சாப்பாட்டுக்கு
வழி இல்லாமலையா? எல்லாம் எங்க லட்சியத்துக்காக”
 
அன்று ஏதோ சின்ன பையன் புரியாது கூறி இருப்பான் என்று சமாளிப்பதற்காக வேலை கிடைத்த பின் கல்யாணம் செய்துகொள்வதாக கூறி இருக்க இன்றும் ஈகை அதையே கூற எரிச்சலடைந்தான் தயாளன்.
 
 
“கண்டிப்பா எங்க லட்ச்சியம் நிறைவேறும் தயண்ணா.. ஆனா அது என்னைக்குனு தெரியாது. அப்படி நிறைவேறி நாம திரும்பி பார்க்கும் பொழுது நாம ரெண்டு பேர் மாட்டு இருக்கக் கூடாதில்ல நமக்குன்னு ஒரு குடும்பம் இருக்கணும்ல” ஈகை கண்ணீரோடு சொல்லி முடிக்கவும் அவனை அணைத்துக்கொண்டான் தயாளன்.
 
தன்னுடைய பெற்றோரை அவன் ஒவ்வொரு நாளும் நினைவு கூர்ந்துகொண்டுதான் இருக்கிறான் என்பதுக்கு அவன் கண்ணீரே! சாட்ச்சி.
 
அதன்பின்தான் ஈகையிடம் காயத்திரியை பற்றி மெதுவாக கூறலானான் தயாளன்.
 
“பார் டா பார்த்த உடனே! லவ்வா?”
 
“ரொம்ப தைரியமான பொண்ணுடா. என்னா அடி” பஸ்ஸில் நடந்த சம்பவத்தை விவரித்தவன்  தனக்கு அடித்தது போல் கன்னத்தை தடவிக்கொள்ள 
 
“எனக்கென்னமோ நீ தான் செமத்தியா வாங்கி இருப்பான்னு தோணுது” ஈகை கிண்டலாக சிரிக்க
 
புன்னகைத்தவாறே “கண்டிப்பா அவ நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பா. ஆனா நம்ம லட்ச்சியத்துக்கு குறுக்க வரமாட்டான்னு என்ன நிச்சயம்? அது மட்டுமா? அவ குடும்பத்தை பத்தியும் தெரியல”
 
“இவ்வளவுதானே! ஆள் யாருனு மட்டும் காட்டு நான் பாத்துக்கிறேன்” என்ற ஈகை சொன்னது போலவே! செய்து முடித்திருந்தான்.
 
காயத்திரியை சம்மதிக்க வைப்பது ஒன்று அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. ஏனெனில் அவள்தான் தயாளனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக்கொண்டிருந்தாளே! அவள் குடும்பத்தை சம்மதிக்க வைத்தான் பெரும் போராட்டமே! பண்ண வேண்டியதாக இருந்தது.
 
“அம்மா கரெக்ட் டைம்முக்கு மாத்துற போடுறாங்களா?”
 
“அவங்க மறந்துடுறாங்க நான் எடுத்து கைல கொடுத்து சாப்பிட வைக்கிறேன். ஐசு வேற மாத்துற போடும் வர பக்கத்துலயே! இருப்பா. அம்மாவும் பொய்க்கி கசக்குதுனு சொல்வாங்க. இவளும் மிரட்டுவா” என்று சிரிரிக்க,
 
“என் பொண்டாட்டி எப்படி இருக்கா? என்ன மிஸ் பண்ணுராளாமா?” சிரிப்பை அடக்கிக்கொண்டு யாரோ போல் கேட்க
 
“அவளுக்கென்ன அவ புருஷன் கூட கடல போட்டுக்கிட்டுதான் இருக்கா” அதே! பாணியில் பதில் சொன்னாள் காயு.
 
“உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? ஐசு தூங்கிட்டாளா காயு”
 
“உங்க தம்பியோடதான் வீடியோ கால்ல பேசிகிட்டு இருக்கா”
 
“அப்போ இன்னைக்கி என்கூட பேச வர மாட்டா. நானும் அங்க போய் ஜோஇன் பண்ணிக்கிறேன்” மனைவிக்கு பல முத்தங்களை வாரி வழங்கியவன் அலைபேசியை அனைத்திருந்தான். 
 
 
ஹரிஹரானோ! தோட்டவீட்டில் அமர்ந்து ஊமையனோடு பார்கவியை கோவிலுக்குள் எவ்வாறு அழைத்து செல்வது? மருதநாயத்திடம் இருக்கும் கோவில் கதவின் சாவியை எவ்வாறு எடுப்பது என்று திட்டம் தீட்டலானான்.  
 
எல்லா சாவியையும் காரியாலய அறையில் உள்ள கப்போர்டில் ஒரு ட்ராவரில் வைத்து பூட்டி கபோர்ட் சாவியை கையில் வைத்திருப்பார் மருதநாயகம். அதை எடுத்து ட்ராவரை திறந்துதான் கோவில் சாவியை எடுக்க முடியும்.
 
அவர் தூங்கும் பொழுது மட்டும்தான் இடுப்பில் கட்டி இருக்கும் பெல்ட்டை கழட்டி வைப்பர். அதில் இருக்கும் மினி பர்சில்தான் சாவி இருக்கும். அல்லது அவர் குளிக்க சென்ற நேரத்தில் எடுத்தால்தான் உண்டு.
 
இதில் அவர் குளித்து விட்டு ஆடை அணியும் பொழுது பர்சில் உள்ள பொருட்களை சரிபார்ப்பதை வழக்கமாக்கி வைத்திருக்க, சாவி இல்லை என்றால் வீட்டையே! ரணகளப்படுத்தி விடுவார்.
 
அவர் குளிக்க போன கேப்பில் சாவியை எடுத்து காரியாலய அறைக்குள் சென்று கப்போர்டை திறந்து கோவில் சாவியை எடுப்பதெல்லாம் சாத்தியமில்லை. வீட்டில் இருப்பவர்கள் யாராவது பார்த்துவிடக் கூடும். சாவியை எடுக்க கூடிய ஒரே! நேரம். அவர் தூங்கும் பொழுதுதான். வீட்டாரும் தூங்கி இருப்பார்கள். அதிக நேரமும் இருக்கு.
 
ஊமையனிடம் சாவியை எவ்வாறு கைப்பற்றுவதென்று ஹரிஹரன் விளக்க “கோவில் சாவிய பெரியய்யா தேட மாட்டாரா?” சந்தேகமாக கேட்டான் ஊமையன்.
 
 
“இல்ல. பூசாரி காலைல கோவிலை திறந்து, மாலைல நடையை சாத்திடுறதால. இவரோட சாவி பாவிக்காம அப்படியேதான் இருக்கு”
 
“எப்போ சாவிய எடுக்க போறீங்க?” எண்ணி ஏழு நாள் இருக்கே! ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வேன். ஒரு நாள் கண்டிப்பா எடுத்துடுவேன். ஆனா அதில்ல பிரச்சினை” ஹரிஹரனின் முகம் யோசனைக்குள்ளாக
 
“சொல்லுங்க சின்னையா?” பவ்வியமாக செவிசாய்க்கலானான் ஊமையன்.
 
“பார்கவி கோவிலுக்கு கூட்டிட்டு வரணும். சொல்லப்போனா தூக்கிட்டு வரணும். அன்னைக்கி நைட் அவ சாப்பிட சாப்பாட்டுல தூக்க மாத்திரையை கலந்துட்டா தூங்கிடுவா” இந்த வீட்டோட எக்ஸ்ட்ரா கீ எல்லாம் அந்த ட்ராவர்லதான் இருக்கு. அவ ரூம் சாவியையும் கையோட எடுத்துட்டா பிரச்சினை இல்ல. அவ சாப்பாட்டுல தூக்க மாத்திரையை கலக்குறதுதான் பிரச்சினை. அத என்னால செய்ய முடியாது”
 
“இதுதான் பிரச்சினையா? நான் என்னமோ! அம்மணிய தனியா தூக்க முடியாதுன்னுல்ல நெனச்சேன்” என்றவன் அமைதியாகவே இருக்க, இவன் தன்னை கேலி செய்கிறானோ என்று ஹரிஹரன் அவனை ஒரு பார்வை பார்க்க, அவனின் அமைதியான முகம் அவ்வாறில்லை என்று கூறியது.
 
“கவலை படாதீங்க சின்னையா! அதற்கு நான் ஏற்பாடு பண்ணுறேன்”
 
“என்னடா சொல்லுற”
 
“அட நம்ம வடிவு உங்க வீட்டுலதானே! வேல செய்யுறா. அவ கைல கொடுத்தா காரியத்தை கச்சிதமா முடிச்சி கொடுப்பா”
 
“யாரு வடிவா?” அப்பாவியான முகத்தோடு இருக்கும் அந்த வேலை செய்யும் பெண்மணியின் முகத்தை நியாபகப்படுத்தியவன் “அவ சரியா செய்வாளா?” சந்தேகமாக கேட்க, தலையை ஆட்டினான் ஊமையான்.
 
ஹரிஹரன் நினைத்தது போல் சாவியை எடுப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்க வில்லை. மருதநாயகத்தின் அறை திறந்து இருந்தாலும் சின்ன சத்தத்துக்கும்
விழித்துக்கொள்பவர் வேதநாயகி.
 
மூன்று நாட்களாக முயற்சி செய்தும் மருதநாயகம் இரவு பன்னிரண்டு மணி வரை காரியாலய அறையில் விழித்து தந்தையோடும், சித்தப்பாவோடும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு கடுப்பானவன் நான்காம் நாள் சாவியை கை பற்றி இருந்தான்.