Advertisement

நிலவு 12

மருதநாயகம் பார்கவியிடம் இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளும்படி கூறி இருந்தாலும், ஈகையை காதலித்து ஏமாற்ற உனக்கு சம்மதமா என்று கேளாமலையே! அவளை அவனோடு அனுப்பலானார். அதற்கு காரணம் அவளுக்கு இவரை விட்டால் வேறு வழி இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தமையாளையே! “எதற்கு உன்னிடம் கேட்க வேண்டும்? நான் சொல்வதை நீ செய்தால் போதும்” என்ற மனப்பாங்கு அவருக்கு.    

இரண்டு வாரங்களாக ஏதேதோ காரணங்கள் கூறி பார்கவியை தர்மதுரை அல்லது விக்னேஸ்வரன் ஈகையோடு அவனது வண்டியில் அனுப்பி வைக்கலாயினர்.    

அழைத்து செல்வது போலவே! அழைத்து வருவதும் ஈகையின் பொறுப்பென்றாகா, அவனும் ஆசையாக, ஆர்வமாக அதை செய்யலானான்.    

ஆனால் மருதாநயம் எதிர்பார்த்தது போல் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக தெரியவில்லை. பார்கவியை அழைத்து “கொஞ்சம் அப்படி, இப்படி நடந்துகொள்ள கூறினேனே” என்று மிரட்டி கூற,  

  “முதல் ஒரு வாரம்தான் அவர் தனியே! வரார். மத்த நாட்கள் எல்லாம் அவரின் பாதுகாப்பைக் கருதி அவர் ஆட்கள் கூடவே! வராங்க. வீட்டிலும் அவர நெருங்க முடியலே” என்று விட்டாள்.    

  “என்ன அப்பா யோசிச்சுகிட்டு இருக்கீங்க” அரிசி ஆலையில் பலத்த யோசனையில் விழுந்திருந்த மருதநாயகத்தின் அருகில் வந்தமர்ந்தான் தங்கதுரை.  

 “விகேஸ்வரன் எங்கடா?”    

“கரும்பு லோட் ஏத்த போய் இருக்கான்”    

“வேல முடிஞ்சதுனா உடனே வர சொல்லு”  

தங்கதுரையும் தம்பியை அலைபேசியில் அழைத்து தந்தை அவசரமாக அழைத்ததாக சொல்ல விக்னேஸ்வரன் வரும்வரை மருதநாயகம் காரியாலய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தார்.    

“என்னப்பா” என்றவாறு விக்னேஸ்வரன் வந்தமர    

தனது இருக்கையில் வந்தமர்ந்த மருதநாயகம் கைகளை கோர்த்தவாறு “பத்து நாளா பார்கவி பொண்ணு அவன் கூடத்தான் போறா வாரா ஆனா எந்த முன்னேற்றமும் இருக்குறது போல தெரியல. அதான் யோசிக்கிறேன்”    

“புரியல” விக்னேஸ்வரன் தந்தையை ஏறிட    

“அவங்களுக்குள்ள ஒண்ணுமே நடந்தா மாதிரி தெரியலன்னு அப்பா சொல்லுறாரு”    

“எத வச்சி அப்படி சொல்லுறீங்க? நான் பார்த்தவரைக்கும் ரெண்டு பேரும் சிரிச்சி பேசிக்கிறாங்க” இன்னும் என்ன வேண்டும் என்பது போல் விக்னேஸ்வரன் பார்க்க    

“சிரிச்சி பேசினா மட்டும் போதுமா? அந்த பார்கவிக்கு சாமர்த்தியம் பத்தாது. ரெண்டு நாள் டைம் கொடுத்தோம் அவ சம்மதம்னு சொல்லவும் இல்லாம அவளை அவன் கூட அனுப்பி வச்சோம் அவளும் வேற வழில்லாம்தான் போய் வந்துகிட்டு இருக்கா. எங்கடா அவன் கூட பேசலாம்னு காத்துகிட்டு நிக்குற உன் பொண்ண சமாளிச்சு, அவனுக்கு காபி, டி, ஜூஸ்னு இவ கைல கொடுத்து மாடிக்கு அனுப்பினா அவன் கூட இருக்கிற தடியனுக இவள உள்ள விடுறதே! இல்ல. இவனுக்கு இவ மேல ஆச இருந்தா அவனே! உள்ள கூப்பிட்டு பேசி இருப்பான்ல. மொட்டை மாடிக்கு வா, தோட்டத்துக்கு வானு கூப்பிட்டு இருப்பான்ல” மருதநாயகம் பேச    

“இவரு எத்துணை பொம்பளைங்கள கூபிட்டிருப்பாரோ” என்ற பார்வைதான் விக்னேஷ்வரனிடம்.    

“என்னடா பார்வை” மருதநாயகம் முறைக்க    

“அவன்தான் அந்த நிலத்த கட்டிக்கிட்டு அழுறானே! எதோ இயற்கை விவசாயம்னு சுத்திகிட்டு இருக்கான். அவனுக்கு காதலிக்க நேரம் இருக்குமா? அத பத்தி யோசிக்கத்தான் நேரம் இருக்குமா?” தங்கதுரை கூற    

“அப்போ அவன் எப்போ காதலிச்சு, இவ எப்போ சொத்து பத்திரத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து தர போறா?” விக்னேஸ்வரன் தந்தை கூறவந்ததை புரிந்துக் கொண்டவனாக கேள்வி எழுப்ப    

“அதான் எனக்கும் என்ன செய்யுறதுனு புரியல”  மருதநாயகம் கைகளை கோர்த்தவாறு யோசனையில் விழ    

“அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா தான் காரியம் நடக்கும்” தங்கதுரை கூற    

“அதுக்காக ஈகைக்கும் பார்கவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுறியா?” மருதநாயகம் மகனை முறைத்துக்கொண்டிருக்கும் பொழுது  கதவை திறந்தான் ஹரிஹரன்.    

“ஈகைக்கும், பார்கவிக்கும் கல்யாணம் பண்ணி வச்சாத்தான் என்ன” ஹரிஹரனின் வரவை கவனிக்காமல் விக்னேஸ்வரன் பேச     

“என்ன ஹரிஹரா” தங்கதுரை மகனை ஏறிட, பேரனை கண்டு அமைதியானார் மருதநாயகம்.    

அவன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. அதை மறைத்தவன் “ஊர் மக்கள் சிலபேர் மருதநாயகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறிவிட்டு வெளியேறினான்.    

அவன் வந்ததும் பேச்சை நிறுத்தியதை வைத்து, ஈகைக்கும், பார்கவிக்கும் திருமணம் செய்து வைக்க போவதாக தவறாக கருதினான் ஹரிஹரன்.    

அவன் உள்ளம் கொதித்தது. பார்கவியின் அன்னை வேறு ஜாதி ஒருவரை திருமணம் செய்ததால் அவளுக்கு தங்கள் ஜாதியில் மாப்பிளை கிடைப்பது முடியாத காரியமென்றுதான் ஈகையை தாத்தா அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்திருப்பது பார்கவியை அவனுக்கு திருமணம் செய்து வைக்கவா? ஒருநாளும் நடக்க விடமாட்டேன். பார்கவி எனக்கு சொந்தமானவள். அவள் எனக்கு மட்டும்தான் சொந்தம்” கருவியவாறே யோசனையில் விழுந்தான்.

ஹரிஹரன் காதம்பரியின் வாரிசு மட்டுமன்றி, மருதநாயகத்தின் பேரன் என்ற திமிரும் அவனுள் அடங்கி இருக்க, தான் நினைப்பதை எவ்வழியிலேனும் நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவன். அது என்றும் நேர்வழியாக மட்டும் இருக்காது. குறுக்குவழியிதான் அவன் புத்தியும் பயணிக்கும்.    

காதம்பரியிடம் நேரடியாகவோ! குறிப்பிக்காட்டியோ! தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்பவன் ஹரிஹரன்.    

பெண்கள் விஷயத்தில் இவன் எந்த ரகம் என்று சொல்ல முடியாது. வயதெல்லை எல்லாம் கிடையாது. அவனுக்கு பிடித்திருந்தால் மட்டுமே அந்த பெண்ணை நாடுவான். பிடிக்கவில்லை என்றால் திரும்பியும் பார்க்க மாட்டான். பிடித்திருந்தால் காத்திருந்தாவது காரியம் சாதித்துக்கொள்பவன் ஹரிஹரன்.    

காலேஜ் படிக்கும் பொழுது காதலிக்கிறேன் என்று வந்த நின்ற இரண்டு பெண்களை முகத்து நேராகவே பிடிக்கவில்லை என்று விரட்டியவன். தனக்கு பிடித்த பெண் என்பதால் நண்பனின் காதலியென்றும் பாராமல் இருவரையும் தன்னுடைய சொந்த செலவில் சுற்றுலா அழைத்து சென்று குடிக்க வைத்து அன்றிரவே அவளை அனுபவித்திருந்தான்.    

தான் இருந்தது தன் காதலனுடன் என்று அந்த பெண் நினைத்திருக்க, இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த நண்பனுக்கு தெரியமலை போய் விட்டது. தெரிந்தால் கூட போதையில் தவறு நேர்ந்து விட்டது என்று சொல்லி விடுவதுதானே! காலேஜின் பின் அவர்களோடு எந்த உறவையும் அவன் வைத்துக்கொள்ளவும் இல்லை. அதன் பின் அவள் அவனுக்கு தேவையில்லை.    

அவனுக்கு பிடித்த எல்லாமே அப்படிதான் ஒருதடவை கிடைத்தால் போதும் என்ற மனநிலைதான். இவனுக்கு உதவி செய்யவே வந்து சேர்ந்தான் ஊமையன். பெயர்தான் ஊமையன். வாய் பேசக் கூடியவன்தான். அவனுக்கு அந்த பெயர் வரக்காரணம் அவ்வளவு நம்பிக்கையானவன். அவ்வளவு சீக்கிரத்தில் எந்த ஒரு விஷயத்தையும் அவன் வாயிலிருந்து கறந்திட முடியாது.     

மருதநாயகத்துக்கு சொந்தமான கரும்புசக்கரை ஆலையொன்றில்தான் ஊமையன் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனுக்கு நடந்த ஒரு சிறு விபத்தினால் இரத்தம் கொட்ட ஹரிஹரன் வண்டியிலையே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால்தான் இந்த விசுவாசம்.    

அன்றிலிருந்து ஹரிஹரன் தன் மனதை இவனிடம் திறக்க, ஊமையனும் இவனின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பது தன் தலையாய கடமையாக எண்ணிக் கொண்டிருக்கின்றான்.    

ஊரிலுள்ள அவனுக்கு பிடித்தமான எல்லா பெண்களையும் எவ்வழியிலாவது ஹரிஹரனிடம் கொண்டு வந்து சேர்ப்பது ஊமையனின் பொறுப்பென்றானது. ஒருநாள் தானே! இந்த அசிங்கம். சாக்கடையில் விழுந்து விட்டதால் உயிரை யாரும் மாய்த்துக்கொள்ள மாட்டார்கள். குளித்து விட்டு வீட்டுக்குள் வந்தால் சரி என்று பெற்றோர் மாத்திரமன்றி, தாலி கட்டிய கணவன்மார்களே! மருதநாயகத்தின் குடும்பத்தை பகைத்துக்கொள்ள முடியாமல் பெண்களை அனுப்பி வைக்க, அவனிடம் மெளனமாக பெண்களும் வர, குடும்ப பின்னணி, பணபலம் என்று எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருப்பான் என்று அவன் கணக்கு கூட பார்த்திருக்க மாட்டான்.    

அவ்வாறுதான் ஊமையன் செல்லப்பாவின் வீட்டையடைந்து ஹரிஹரனுக்காக ஒரே ஒரு இரவுக்காக மட்டும் அந்த வீட்டு பெண்ணை கேட்க, கதறி துடித்தான் செல்லப்பா.    

“ஐயா விட்டுட்டாங்க ஐயா அது வாழ வேண்டிய பொண்ணுயா.. பதினெட்டு வயசுகூட ஆகலையா”    

“யோவ் எதுக்கு இப்போ கத்துற? ஐயா ஒன்னும் உன் பொண்ண கேக்கல நீ ரெண்டாம் தாரமா கட்டி கூட்டிட்டு வந்தியே! உன் கொழந்தியா, அவளத்தான்யா கேக்குறாரு. அதுவும் ஒரே ஒரு நாள்தானே! இதெல்லாம் பெரிய மனுசங்க சமாச்சாரமயா. உன் பொண்ணு மேல கண்ணு விலலைனு சந்தோச படுவியா! காசும் கிடைக்கும்யா. அத வச்சு உன் பொண்ணு கல்யாணத்த ஜாம்ஜாம்னு பண்ணு” பேச வேண்டிய விதத்தில் பேசி ஆசை காட்டி செல்லப்பாவை சம்மதிக்க வைத்தான் ஊமையன்.    

படுத்த படுக்கையாக இருந்த அன்னையை கவனிப்பதில் திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தவள் அக்கா இறந்ததும் யோசித்து, வீட்டில் பேசி பெற்றோருக்கு நிம்மதியளிக்கவும், மாமனுக்கு ஆறுதலாகவும், அக்கா பொண்ணுக்கு இன்னொரு தாயாகவும் இருக்க எண்ணியே! குழந்தையோடு தனியாக தவிக்கும் மாமனை வயது வித்தியாசம் கூட பாராமல் கட்டயாப்படுத்திதான் கல்யாணம் செய்துகொண்டாள் பேச்சியம்மாள்.    

அவளை செல்லப்பா திருமணம் செய்துகொண்டு வரும் பொழுது ஹரிஹரனுக்கு பதினெட்டு வயசுதான் இருக்கும். பேச்சியம்மாளுக்கு இருபத்திநான்கு.      

ஏதோ ஹரிஹரன் மூலம் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடும் என்பது போல் ஊமையன் பேசியதில் பேச்சியம்மாளின் சம்மதம் இல்லாமலையே அவளை காவுகொடுக்க முடிவு செய்துகொண்டனர் இந்த ஆண் சிங்கங்கள்.    

“ஐயா உன்ன தோட்டத்துக்கு வர சொன்னாரு” என்று பேச்சியம்மாளை செல்லப்பா அனுப்பி வைக்க மருதநாயகம் தான் வரச்சொல்லி இருப்பார் என்று போனவளுக்கு ஹரிஹரன் தன்னிடம் நடந்துகொள்ளப்போன விதம் அதிர்ச்சியோடு அருவருப்பையும் தர அங்கிருந்த தென்னை மட்டையால் அவனை நன்கு விளாசி விட்டு வீடு திரும்பினாள்.    

வீடு வந்தவள் கணவனிடம் நடந்ததை கூறவில்லை. அவள் வீடு வந்த கோலமும் செல்லப்பாவை எதுவும் கேக்க தூண்டவுமில்லை.    

அடிவாங்கிய ஹரிஹரனோ! “எட்டு வருசமா அவளுக்காக காத்திருந்தேன். அவ சம்மதம் இல்லாமைதான் வரச்சொன்னியா” என்று ஊமையனை காய்ச்சி எடுக்க,     செல்லப்பா முழு விவரத்தையும் சொல்லித்தான் அனுப்பி இருப்பான் என்று நினைத்ததாக சொன்னான் ஊமையன்.    

“இதற்கு மேலும் காத்திருக்கு முடியாது. ஏதாவது செய்” என்று அடிபட்ட பாம்பாக ஹரிஹரன் சீற    

செல்லப்பாவை சந்தித்து திட்டித்தீர்த்த ஊமையன் போதை மருந்தை கொடுத்து இரவு உணவில் கலந்து விடும் படி கூற செல்லப்பாவும் ஹரிஹரனையோ! மருதநாயகத்தையோ! பகைத்துக்கொண்டு இந்த ஊரில் வாழ முடியாது என்பதை அறிந்து வேறு வழியில்லாது ஊமையன் கொடுத்ததை உணவில் கலந்து வைக்க அதை சாப்பிட்டு மனைவியும், மகளும் மயங்கி கிடக்க, வீட்டுக்கு வெளியே ஹரிஹரனுக்காக காத்திருக்கலானான்.    

நடு இரவில் ஊமையனோடு வந்த ஹரிஹரன் உள்ளே நுழையும் பொழுது “ஐயா என் பொண்ணு உள்ள…” அந்த குடிசையில் ஒரு வராண்டா, ஒரு அறை, ஒரு சமையல்கட்டு என்றிருக்க மகளையும் ஏதாவது செய்து விடுவானோ என்று அஞ்சினான் செல்லப்பா.    

அவனுக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் செல்லப்பாவின் மகளை திரும்பியும் பாராது தனது எட்டு வருட ஆசையை பேச்சியம்மாளிடம் தீர்த்துக்கொண்டு வெளியே வர ஊமையன் அழுது கொண்டிருந்த செல்லப்பாப்பாவை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.    

ஊமையனுக்கு கண்ணசைத்த ஹரிஹரன் தனது பைக்கில் ஏறி பறந்து விட, பணக்கட்டை செல்லப்பாவின் கையில் திணித்த ஊமையன் ஒரு குடும்பத்தை சிதைத்த எந்த குற்ற உணர்ச்சியுமின்றி தனது வண்டியை கிளப்பி இருந்தான்.    

அந்த விடியல் அந்த ஊரில் பேச்சியம்மாள் கிணத்தில் தவறி விழுந்து இறந்தது விட்ட செய்தியோடுதான் விடிந்தது. பேச்சியம்மாள் இறந்தது தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சியில் அடுத்த நாளே! தூக்கில் தொங்கி இருந்தான் செல்லப்பா. கடைசியில் அனாதையாக நின்றது செல்லப்பாவின் மகள் பொன்னி ஒருத்தியே!    

இந்த ஒன்றுதான் இறப்பு சம்பவம் அதன் பின் தனது காரியத்தில் ரொம்பவும் கவனமாகத்தான் நடந்துகொள்வான் ஹரிஹரன். பெண்ணனின் சம்மதம் இல்லாமல் அடைய எண்ண மாட்டான். ஒருதடவைக்கு இரண்டு தடவை ஊமையனை விசாரித்து விட்டே! காரியத்தில் இறங்குவான்.    

இதுவரை இவனின் லீலைகள் வீட்டுக்கும் தெரியவில்லை. தெரியும்படி நடந்துகொண்டதுமில்லை. தெரிந்தாலும் ஆண்பிள்ளைதானே என்று காதம்பரி சொல்லி விடுவாள். அந்த நம்பிக்கை ஹரிஹரனுக்கு இருந்தது.    

ஆனால் பார்கவியின் விஷயம் அவ்வாறில்லை. அவள் அத்தை மகள் என்ற பாசமா? அவள் மேல் காதலா? என்று அவனுக்கே! தெரியாது. அவனிடம் இருக்கும் பிளஸ்சே பொறுமைதான். வீட்டில் தானே! இருக்கிறாள் எங்கே போய் விடப் போகிறாள்” என்ற எண்ணம்தான் அவளை நெருங்க முயலவில்லை.    

பார்கவி தன்னை கண்டால் ஒதுங்குவதும், ஓடி ஒளிவதுமே! அவனுக்கு அவளின் மேல் மேலும் மேலும் ஆசையை தூண்டி இருக்க, எலியை துரத்தும் பூனை போல் பார்வையாலையே! அவளை துரத்தலானான்.    

மாதேஷ் பார்கவியின் மேல் எடுத்துக்கொள்ளும் அக்கறையினால் அவனுக்கும் அவளின் மேல் ஈடுபாடு இருக்குமோ! என்ற சந்தேகம் முளைத்திருக்க, பார்கவியை தான் அடைய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து போனது. அது கல்யாணம் என்ற ஒன்றால் தான் சாத்தியம் என்றால் அதை கூட செய்ய தயங்குவதேன் என்ற கேள்விதான் அவனுள்.    

உறவுமுறையில் அத்தை மகள் என்று எண்ணிக் கொண்டிருப்பதால் எல்லா உரிமையும் இருக்கு. வீட்டில் பேசினால் மறுக்க எந்த காரணமும் இல்லை. குறுக்க வரக்கூடிய ஒரே ஆள் மாதேஷ் மட்டும் தான். பார்கவி கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வதாக அவனிடம் நாடகமாடினால் போதும் தாலி கட்டும் நேரத்தில் அவனே! என் கையை பிடித்து இழுத்து வந்து தாலியை கையில் கொடுத்து கட்ட சொல்லி விடுவான்.      

எல்லாம் தான் நினைத்தபடி நடந்தேறும் என்று  பொறுமையாக காத்திருந்தால், எங்கிருந்தோ வந்த ஒருவனுக்கு பார்கவியை திருமணம் செய்து வைக்க போகிறார்களாம். திட்டமிட்டு அவனை வீட்டில் தங்க வைத்து. அவளை அவன் கூட தினமும் அனுப்பி வைத்து, பழக வைத்து நினைத்ததை சாதிக்க பார்க்கிறார்களா?    

விடமாட்டேன். அவள் எனக்குத்தான்” வாய் விட்டே கத்தினான் ஹரிஹரன்.    

“சின்னையா  ஏதாவது பிரச்சினையா?” ஊமையன் ஓடி வந்து கேட்க,    

“கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. பொழுது சாஞ்சதும் தோட்டத்து வீட்டுக்கு வா”    

“சரிங்க ஐயா”    

ஹரிஹரன் ஒருநிலையில் இல்லை. பார்கவியை திருமணம் செய்ய அன்னையை சம்மதிக்க வைப்பது ஒன்றும் அவனுக்கு பெரிய விஷயமே! இல்லை. கண் காணாத இடத்துக்கு போய் விடுவேன் என்று மிரட்டினாளே! போதும் காதம்பரி அடங்கி விடுவாள். தந்தையை, தாத்தாவை ஏன் பார்கவியை கூட சம்மதிக்க வைத்துவிடுவாள்.    

ஆனால் பெருசுகள் கூடி ஒரு முடிவோடு இருக்கும் பொழுது தனது ஆசையை சொன்னால் வீம்புக்கு செய்கிறேன் என்று சொல்வார்கள். கூடவே! பார்கவியின் அம்மா வேற ஜாதி ஒருத்தரை திருமணம் செய்த்தை நியாபகப்படுத்தி காதாம்பரியை ஏற்றி விடுவார்கள்.    

அல்லது இவர்கள் நினைத்தது போல் அந்த வெள்ள பன்னியும், பார்கவியும் காதலிக்க ஆரம்பித்தால் தன்னால் எதுவுமே செய்ய முடியாது. என்ன செய்வது என்ற யோசனையிலையே! அன்றைய வேலைகளையும் ஒழுங்காக பார்க்காமல் தோட்டத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஹரிஹரன்.       

“சொல்லுங்க சின்னையா, என்ன பிரச்சினை? நான் என்ன செய்யணும்” ஹரிஹரனுக்கு முன்னாடியே! அங்கு வந்து அவன் குடிப்பதற்காக சரக்கு பாட்டிலையும், கொறிக்க சிப்ஸையும் தட்டில் வைத்தது மேசையை தயார் செய்து வைத்திருந்தான் ஊமையன்.     

ஊமையன் கிளாசில் சரக்கை ஊறிக்கொடுக்க கொஞ்சம் கொஞ்சமாக அதை அருந்தியவாறு பார்கவியை பற்றி கூறலானான் ஹரிஹரன்.    

“என்ன சின்னையா வீட்டுலயே! இருக்குற அம்மணிய போய்” ஊரிலிருக்கும் பெண்களின் மேல் கைவைத்தது கூட ஒன்றுமில்லை. இது ஹரிஹரனின் குடும்பப்பெண். காரியம் தவறினால் ஹரிஹரனை விட்டுவிடுவார்கள் ஊமையனை கொன்றுவிடுவார்கள். அதனாலே! இழுத்து நிறுத்தினான் ஊமையன்.    

“அவ வேணும்னு நினைச்சி இருந்தா என்னைக்கோ! சாப்பாட்டுல போதை மறந்த கலந்து கொடுத்து… அவ எனக்கு மனைவியா வேணும்”    

“ஓஹ்… வீட்டுல பேசினீங்களா? பெரியய்யா மறுத்துட்டாரா? இல்ல அம்மணி மறுத்துச்சா?” ஹரிஹரனின் கவலை என்னவென்று ஊகித்துக் கேட்டான் ஊமையன்.    

“ரெண்டும்தான். சொல்லு என்ன பண்ணலாம்”    

“கட்டாய தாலி காட்டினா என்ன? வீட்டுல வச்சி கட்டுறது விட அடுத்த வாரம் உங்க குலசாமிக்கு சிறப்பு பூஜை நடக்குதே! அப்போ ஊரே கூடி இருக்கும் பொழுது தாலிய கட்டிடுங்க”    

“கட்டிட்டா மட்டும் என் தாத்தா என்ன வாழ விட்டுடுவாரா? சொத்துல நயா பைசா கொடுக்காம வீட்டை விட்டு துரத்தி விட்டுடுவாரு. எல்லா சொத்தையையும் அந்த மாதேஷ் பய அனுபவிப்பான். எனக்கு சொத்தும் வேணும் பார்கவியும் வேணும்” மிதமான போதையில் தெளிவாக பேசினான் ஹரிஹரன்.    

சற்று நேரம் இருவரும் யோசனையில் ஆழ்ந்திருந்த பின் ஒரே நேரத்தில் “நான் நினைக்கிறதுதான் நீயும் நினைக்கிறியா?” ஹரிஹரன் கண்ணில் மின்னலொடு கேட்க,    

“ஆமா சின்னையா” தலையசைத்தான் ஊமையன்.    

அந்த ஊரின் ஆதி குடி மக்களான சடையப்பன், மங்கம்மாதேவி மட்டும் இந்த ஊர் மக்களின் காவல் தெய்வங்கள். அவர்களின் திருமண நாளைத்தான் இவர்கள் சிறப்பாக பூஜை செய்து கொண்டாடுவார்கள்.        

ஊரின் எல்லையிலுள்ள கோவிலில் சிறப்பாக  ஏழு நாட்கள் பல பூஜைகள் நடைபெற்றாலும் இரவு எட்டு மணிக்கு நடையை சாற்றி விடுவார்கள். அந்த காதல் ஜோடிகளான காவல் தெய்வங்களுக்கு யாரும் எந்த தொந்தரவும் செய்யக்கூடாதென்று ஊரின் ஐதீகம். ஜோடிகளின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்து கறி, விருந்து என ஒரே விழாக்கோலம் பூண்டு அந்த நாளே திருவிழா போல கொண்டாடப்படும்.    

எட்டு மணிக்கு மேல் யாராவது கோவிலுக்குள் இருந்து ஊர் மக்களின் கண்களில் சிக்கினால் கடுமையான தண்டனை வழங்கப்படும். இதுவே! அவர்கள் இளம் ஜோடியாக இருந்தால் ஊர் மக்களே! திருமணம் செய்து வைப்பார்கள்.    

இதை அறிந்து காதல் ஜோடிகள் அந்த நாளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தனர். வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக கோவிலில் வந்து பதுங்கி இருக்க, காலையில் பூஜைக்காக அர்ச்சகரோடு ஊர் மக்களும் கோவிலுக்கு வரும் பொழுது அவர்கள் முன்னாடி கையை பிடித்தவாறு வந்து நிற்க, வேறு வழியில்லாது ஊரு மக்களும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.    

இதுவே! மருதநாயகத்தின் ஜாதியாக இருந்தால் ஊர் மக்கள் முன்னாடி திருமணம் செய்து வைத்து விடுவார். அப்படி திருமணம் செய்து வைக்கும் ஜோடிகள் மூணு மாசத்துக்குள் சாலை விபத்திலையோ! பாம்பு கடித்தோ! அல்லது அவர்களே! உயிரை மாய்த்துக்கொண்டு இறந்து விடுகிறார்கள்.    

தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதால் அது மருதநாயகத்தின் வேலைதான் என்று ஊருக்குள் புரளி பரவ, கோவிலை சுற்றி ஏழடிக்கு சுவர் எழுப்பி முன்னும், பின்னும் இரும்பு கேட் போட்டு பெரிய பூட்டு போட்டு ஒரு சாவியை பூசாரி வைத்திருக்க, மற்றுமொரு சாவியை மருதநாயகம் வைத்திருக்கிறார்.         

அடுத்த  வாரம் குலதைவ பூஜை அதற்கு அடுத்த வாரம் காவல் தெய்வங்களான சடையப்பன், மங்கம்மாதேவிக்கும்தான் ஊரின் எல்லைக் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அந்த நியாபகத்தில்தான் ஊமையனும் ஹரிஹரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அன்று இரவு பார்கவியோடு கோவிலில் தங்கி விட்டால் போதும். அடுத்த நாள் காலை ஊர் மொத்தமும் கூடி பார்கவிக்கும் தனக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று எண்ணினான் ஹரிஹரன்.    

Advertisement