Advertisement

நிலவு 10
ஈகைசெல்வனால் நடப்பது கனவா? நிஜமா? என்று ஒருகணம் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தயாளன் ஏதோ மிரட்டுவது போல் பார்கவியை நீதான் காலேஜுக்கு அழைத்து போக வேண்டும் என்று கூற 
 
“ஆமாம் நான் அழைத்த உடனே! அவள் வந்து வண்டியில் உக்காந்திட்டுதான் மறுவேலை பார்ப்பா” என்று அவனை முறைத்தான் ஈகை. ஆனால் இப்பொழுது பார்கவி அவனோடு அவன் வண்டியில் வந்து கொண்டிருக்கிறாள்.
 
 
அவள் அருகில் இருக்கும் பொழுது மட்டும் மனதில் எழும் உணர்ச்சிகள் ஏராளம். அது ஏன் என்று புரியவில்லை. அதை ஆராய்ச்சி பண்ணவும் விரும்பவில்லை. விசில் அடிக்க வேண்டும் போல் இருக்க, வண்டியில் பாடலை ஒலிக்க விட்டான்.
 
 
முன்னழகில் நீயும்
சீற பின்னழகில் ஏறும்
போதை பொட்ட புள்ள
உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா
கரைஞ்சேனே ரெக்க கட்டி
பறந்த ஆளு பொட்டி குள்ள
அடைஞ்சேனே
 
 
ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால்
நுரை சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குற என்ன தாக்குற
 
 
 
பாடல் ஒலிக்க ஈகை
முணுமுணுமுக்க அவன் அருகில் அவஸ்தையாக உணர்ந்தாள் பார்கவி.
 
ஆனால் ஈகையின் சிந்தனையோ சூழ்நிலை கூட அவனுக்கு சாதகமாக அமைவது போலவே தோன்ற பார்கவி அருகில் இருப்பதினாலே அதை பற்றி யோசிப்பதை கை விட்டான்.
 
தனது பரம்பரை சொத்துக்களில் ஒன்றான அந்த இருநூறு ஏக்கர் நிலத்தை பார்வையிட செல்ல தயாராகி வந்தவன் பார்கவி தனியாக நின்று கொண்டிருக்கவும்
 
“ஹாய் காலேஜுக்கா” என்று கேட்க, அவனை கண்டு முகம் மலர்ந்தவள் நொடியில் முகம் சுருங்கினாள்.
 
ஏன் இந்த நொடி மாற்றம் என்று ஈகை சிந்திக்கும் பொழுதே மாதேஷ் வந்து “போலாம்” என்று வண்டியை எடுக்க செல்ல
 
உள்ளே இருந்து வந்த விக்னேஸ்வரன் “மாதேஷ் தாத்தா சாப்பிடாம போய்ட்டாரு நீ அவருக்கு சாப்பாடு எடுத்துட்டு போ. மாத்திரை வேற போடணும். ஈகை சார் நீங்க போற வழிலதான் பார்கவியோட காலேஜ் அவளை கொஞ்சம் இறக்கி விட்டுட்டு போங்க” போக முடியுமா என்றெல்லாம் கேட்கவில்லை. உத்தரவு போடுவது போலவே சொல்ல
 
அவன் வந்த நோக்கம் நிறைவேற போவதன் முதல் படியாக பார்கவி தன்னோடு வண்டியில் பயணிக்க போகிறாள் என்ற குதூகலம் விக்னேஸ்வரன் உத்தரவு போடுகிறான் என்பதை கூட ஈகையின் மூளை அவனுக்கு எடுத்துக்கூற மறந்து விட்டிருந்தது.
 
“ஆஹா இன்னைக்கி என்னோட லக்னத்துல நினைச்ச காரியம் தடையில்லாம நடக்கும்னு போட்டிருக்கோ என்னவோ! அப்படியே நடக்குதே!” ஈகையின் மைண்ட் வாய்ஸ் தன் பாட்டுக்கு அவனோடு பேச பார்கவி அதிர்ச்சியாக மாதேஷை பார்த்தாள்.
 
விக்னேஸ்வரன் அவளை முறைக்கும் பொழுதே “ஈகை சாருக்கு என்னென்ன வேல இருக்கோ! அவரை தொந்தரவு செய்யலாமா? நானே விட்டுடுறேன்” ஈகையை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்கவியை பார்த்தவாறு கூறலானான் மாதேஷ்.
 
“காலேஜ் கிழக்கால இருக்கு. கரும்பு ஆலை மேற்கால இருக்கு. நீ இவள விட்டுட்டு தாத்தாக்கு சாப்பாடு எடுத்துட்டு போகும் வர அவரு பசில இருப்பாரு. அவருக்கு சாப்பாடு கொடுத்துட்டு இவள விடப்போனா இவளுக்கு லேட் ஆகாதா? ஈகா சார் போற வழித்தானே! அவர் விட்டுடுவாரு. என்ன நான் சொல்லுறது” என்று ஈகையை பார்த்து இளித்தான் விக்னேஸ்வரன்.
 
“உங்க யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை என்றால் நான் பார்கவிய ட்ரோப் பண்ணுறேன்” ஏதோ என்னாலான சிறு உதவி இது என்பது போல ஈகை பேச விக்னேஸ்வரன் ஈகைச்செல்வனோடு தன்னை அனுப்பாமல் இருக்கமாட்டான் என்று புரிய பார்கவியும் அமைதியாக அவன் வண்டியில் ஏற சென்றாள்.
 
புரிந்துகொண்டு நடந்துகொள்கிறாளே! என்று சிறு புன்னகை முகத்தில் மலர, ஈகையின் வண்டியில் ஏறப்போகும் பார்கவியை பார்த்து “பத்திரமா போ” என்றவாறு மாதேஷ் தனது பைக்கை எடுக்க சென்றான்.
 
எங்கிருந்தோ குடுகுடுவென்று ஓடிவந்த ஹரிணி பார்கவியை தள்ளி விட்டு முன்னாடி இருக்கையில் சட்டமாக அமர்ந்து பார்கவியை கவனிக்கவே! இல்லை என்பதுபோல் அலைபேசியை நோண்டலானாள். விழப்போன அவளை தங்கி பிடித்திருந்தான் ஈகை.
 
அவனது இடது கை அவள் இடையை பிடித்திருக்க, வலது கை தோளை பிடித்திருக்க, ஹரிணி தள்ளிய வேகத்தில் அவள் தோளில் இருந்த புத்தகப்பை சரிந்து கீழே விழுந்திருந்தது. இடது கை அவள் புடவையும் தாண்டி இடையில் சென்று உரச வேண்டுமென்றே அழுத்தத்தை கூட்டியவன் அவளை நேராக நிறுத்தி ஆர் யு ஆல் ரைட்” என்று வினவியவாறே புத்தகப்பையையும் எடுத்துக் கொடுத்தான்.
 
அவனது தொடுகையில் மேனி சிலிர்த்தவள் முத்துமுத்தாக வியர்வை துளிகள் முகத்தில் பூக்க, தடுமாறியவாறே தலையை ஆட்டுவித்தவள் அவனை தலை நிமிர்ந்துதான் பார்க்கவில்லை. பார்க்கும் தைரியம் வரவும் இல்லை. தன் படபடப்பை அவன் கண்டுகொள்வானோ! என்ற அச்சம் மேலோங்கி அவள் சிறு இதயம்தான் எகிறிக்குதித்து ஓட ஆரம்பித்திருந்தது. எங்கே இதயத்தின் ஓசை அவனுக்கு கேட்டு விடுமோ! என்று வேறு அஞ்சினாள் பார்கவி. 
 
ஈகையின் கைபட்டதும் பார்கவியின் உடல் நடுங்கியதும், அவளின் தடுமாற்றத்தையும் நன்கு உணர்ந்தான் ஈகை. பெண்களை தொட்டு பேசாதவன் அல்ல ஈகை. அவளின் தடுமாற்றம் அவனுள் புதுவித ரசாயன மாற்றத்தை உண்டு பண்ண அவள் மேனியிலிருந்து வீசிய பிரத்தியேக வாசனையும் சேர்ந்து அவனை பித்தம்கொள்ள செய்ய அவளையே கண் இமைக்காமல் பார்த்திருந்தான். 
 
ஹரிணி வந்து வண்டியில் ஏறவும் கடுப்பான விக்னேஸ்வரன் அவளை இறங்க சொல்ல முடியாமல் அண்ணனை அழைக்க வீட்டுக்குள் ஓடி இருக்க இவர்களுக்குள்
நடந்த இரசாயன மாற்றம் அங்கே யார் கண்களிலும் விழவில்லை.
 
தயாளன் அடுத்த வண்டியிலிருந்து ஹார்ன் அடிக்கவும் சுயஉணர்வுக்கு வந்த ஈகைச்செல்வன் பின் கதவை திறந்து பார்கவியை அமரும் படி கூறி தானும் அமர்ந்துக்கொள்ள தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ளலானாள் பார்கவி.
 
“என்ன ஈகா நீங்க போய் பின்னாடி உக்காந்துட்டீங்க, யாரு வண்டிய எடுக்குறதாம்” அவன் புறம் திரும்பி ஹரிணி குலைந்து பேச ஜெய் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமரவும் முகம் சுளித்தாள்.
 
வண்டியின் அருகில் வந்த தயாளன் “அப்போ நான் அடுத்த வண்டில வரேன்” என்று கூறிவிட்டு பின்னாடி நிறுத்தி இருந்த வண்டியை நோக்கி நடந்தான்.
 
மருதநாயகத்துக்கு உணவு எடுத்து செல்ல வண்டியை ஓட்டி வந்த மாதேஷ் ஈகையின் வண்டியை கடக்கும் பொழுது தயாளன் கூறியது காதில் விழவே! பார்கவியை முன் இருக்கையில் அமர்த்தி விட்டு தயாளனும், ஈகையும் பின் இருக்கையில் அமர்ந்து தொழில் விஷயம் பேசிக்கொண்டு செல்ல இருந்ததாகவும், ஹரிணி ஏறியதால் ஈகை பார்கவியோடு பின்னாடி அமர்ந்தது போலவும் தெரிய, தான் தான் ஈகையை பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்ற சிந்தனையில் மருதநாயகத்துக்கு உணவை எடுத்துச் சென்றான்.
 
தங்கதுரை வந்து ஹரிணியை வலுக்கட்டாயமாக வண்டியிலிருந்து இறக்கி தனது வண்டியில் அழைத்து செல்ல பார்கவியையும் அழைத்து செல்லலாமே! என்று ஈகையின் மூளை கேள்வி எழுப்பி இருந்தாலும் அவளோடு இருக்கும் தருணத்தை தவறவிட விரும்பாமல் அவனது வாய் பூட்டு போட்டுக்கொண்டது. 
 
அவன் கொஞ்சம் யோசித்திருந்தாலே! போதும் அங்கே நடப்பதை ஊகித்திருப்பான். பழிவாங்கும் வெறி கண்ணை மறைத்தது மட்டுமல்லாது. பார்கவியின் அருகில் தன்நிலையும் மறந்து நின்றுவிட்டான் ஈகைச்செல்வன்.
 
அவர்கள் செல்லும் வரையில் பொறுமை காத்த ஈகைச்செல்வன். தயாளனோடு ஜெய்யை வரும்படி கூறி விட்டு பார்கவிக்கு முன்னாடி இருக்கையில் வந்து அமரும்படி கூறி தானே வண்டியை எடுத்தான்.
 
ஏன் என்று ஏறிட்ட பார்கவியை “சீசீடிவி விஷயமா ஏதோ பேசணும் என்றான். எனக்கு புரியாது. உனக்கும் புரியாது. அவனுக மொக்க போடுறத கேட்கணுமா? நாம நிம்மதியா போலாம்” சிரித்தவாறே வண்டியை கிளப்பியவன் நினைத்தது நடந்து விட்ட மகிழ்ச்சியில் பாடலை ஒலிக்க விட்டிருக்க, பாடல் வரிகள் அவன் கவனத்தில் இல்லை.
 
“என்ன படிக்கிற பாரு” பார்கவியை சுருக்கி பாரு என்று அழைத்திருந்தான் ஈகை. அது அவனாக அழைத்தானா? தானாக அவன் வாயிலிருந்து வந்ததா? அவனே! அறியான்.
 
தன்னைத்தான் அழைத்தானா என்று அவனை திரும்பி பார்த்தவள் அவன் புருவம் உயர்த்தவும் உறுதியாக தன்னைத்தான் அழைத்தான் என்று புரிய “B.E பைனல் இயர்” என்றாள்.
 
“லன்ச் எடுத்துட்டு வந்தியா? இல்ல கேண்டின்லயா?” அக்கறையாக அடுத்த கேள்வியை கேட்டு வைக்க,
 
“எடுத்துண்டு வந்தேன்”
 
“தினமும் மாதேஷ் கூடத்தான் போவியா?” சாதாரண குரலில்தான் கேட்டான். ஆனால் பார்கவிக்கு ஈகை மாதேஷையும் அவளையும் தப்பாக நினைக்கிறானோ என்று எண்ணம் ஒருநொடி தோன்ற மனம் சுனங்கியவாறே
 
“பஸ்ல போயிட்டு வரேன்னு சொன்னேன். அவர்தான் கேக்கல” தலை குனிந்தவாறு முணுமுணுக்க,
 
“நீ எதுக்கு பஸ்ல போகணும்? உன் தாத்தாக்கு இல்லாத சொத்தா? உன் அத்த பையன் உனக்காக இத கூட செய்ய மாட்டானா அவன்?” புன்னகை முகமாகவே சொல்ல முகம் வாடினாள் பார்கவி.
 
“காலேஜுக்கு கொண்டு வந்து விடுறது மட்டுமா? இல்ல கூட்டிகிட்டு வருவானா?”
 
“வருவார்” அந்த கேள்வி அவளுக்கு பிடித்தமாக
இல்லை. உள்ளே சென்ற குரலில் பதில் கூற
 
ஈகை அடுத்த கேள்வியை கேட்டான் “நல்லா படிப்பியா?”
 
பார்கவி மண்டையை ஆட்டுவிக்க
 
வண்டியை நிறுத்தியவன் “பாரு என்ன பாரு” கை கட்டி அவளையே பார்த்திருக்க
 
எதற்காக வண்டியை நிறுத்தினான் எதற்காக அவனை பார்க்க சொல்கிறான் குழம்பினாலும், அவனை திரும்பிப் பார்த்தாள் பார்கவி.
 
இருவரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்திருந்தனர். மருதநாயகத்தின் மீதிருந்த வெறுப்பு, கோபம் எல்லாம் இந்த சிறு பெண்ணிடம் காட்ட வேண்டுமா? என்று ஒரு நொடி ஈகையின் மனதில் மின்னலாய் தோன்றி மறைய,
 
“அவர் பேத்தியா பொறந்தா எல்லாம் அனுபவிச்சிதான் ஆகணும்” என்றது அவன் மனம்.
 
குளித்து வளமை போல் புடவை அணிந்திருந்தவள் சாமி கும்பிட்டு விட்டு திருநீரு வைத்திருந்தாள். அது அவள் முகத்துக்கே அழகூட்டி இருக்க ஈகையால் அவன் கண்களை அகற்றவே! முடியவில்லை. தெய்வீக அழகு அவளுக்குள் குடியிருப்பதும், அவளை நெருங்கும் பொழுது தான் சுயத்தை இழப்பதும் நன்கு உணர்ந்தான் ஈகை.
 
ஒல்லியான தோற்றம் தான். ஆனால் கன்னம் மட்டும் உப்பி குண்டுக் கன்னங்களாக இருக்க, குழந்தையாக இருக்கும் பொழுது நல்லா கொலுக்கமொழுக்கென்று இருந்திருப்பாள் போலும் என்றெண்ணியவனுக்கு கன்னங்களை தொட்டுப்பார்க்கும் பேராவல் வந்தது.
 
“எதுக்கு இப்படி பார்த்துண்டு இருக்கார்” பார்கவியின் இதயம் தாறுமாக அடிக்க ஆரம்பிக்க அவளை காப்பது போல் எதிரே வந்த வண்டி ஹார்ன் அடித்தவாறு செல்ல ஈகையும்தான் தன்னை மீட்டிருந்தான்.
 
“வண்டில போகும் போது யாராவது ஏதாவது கேட்டா வாயாலதான் பதில் சொல்லணும். இப்படி மண்டைய ஆட்ட கூடாது. வண்டி ஓட்டும் போது கவனம் பாதைல இருக்கணும். அடிக்கடி உன்ன பாத்துக்கொண்டு வண்டி ஓட்டினா அப்பொறம் நேரா சொர்கத்துக்குத்தான் போக வேண்டி இருக்கும்” அவன் கையை நீட்டி சொல்ல அவன் வாயை பொத்தி இருந்தாள் பார்கவி.
 
அவளை பார்க்காதே! ராசிக்காதே! என்று தன் மனதிடம் ஆறுதல் வார்த்தைகளை ஈகை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது பார்கவி அவன் வாயை பொத்தியது உள்ளுக்குள் ஜில்லென்ற உணர்வை கொடுத்திருந்தது.
 
“இப்டில்லாம் அபசகுனமா பேசாதீங்கோ. ப்ளீஸ்” கெஞ்சலாக அவனிடம் கேட்டுக்கொண்டாள்.
 
 
அவள் செய்கையை ரசித்தவாறு நெருங்கி நின்றவளை புருவம் உயர்த்திப் பார்க்க,  அவன் புருவம் உயர்த்தவும் தன் கையை விலக்கிக் கொண்டவள் “சாரி” என்று ஜன்னல் புறம் திரும்பிக்கொள்ள உல்லாக்காசாம புன்னகைத்த ஈகைச்செல்வன் வண்டியை கிளப்பி இருந்தான்.
 
வண்டியில் பாடல் மட்டும் மெல்லிசையாக தவழ்ந்து வர இருவருக்கிடையில் மௌனம் மட்டும் சில நிமிடங்கள் குடிகொள்ள, தான் வந்த வேலை நடக்க வேண்டும் என்று ஈகையின் மனம் கூவ மௌனத்தை உடைத்தவன் அவள் படிப்பை பற்றியும், பொழுதுபோக்கு, விருப்பு வெறுப்பு என சாதாரண கேள்விகளை கேட்டு அவளை பேச வைத்தவன். காலேஜ் வாசலில் அவளை இறக்கி விட்டு அவள் உள்ளே செல்லும்வரை வண்டியை நிறுத்தி அங்கேயே நிற்க அவனை திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றாள் பார்கவி.
 
அவள் உள்ளே சென்றதும் வண்டியை எடுக்க போகும் பொழுது தயாளன் வந்து வண்டியில் ஏறிக்கொண்டு 
 
“என்ன டா விட்டா அவ கூடவே காலேஜ் போய் படிச்சிட்டு வருவ போல” என்று தோளில் அடிக்க,
 
“சிறுதுளி பெருவெள்ளம். அண்ணா… கொஞ்சம் கருணை காட்டினா கவுந்துடுவா”
 
“நீ வண்டிய நிறுத்தியதும் கிஸ் பண்ணத்தான் நிறுத்தினியோனு நினச்சேன்” நமட்டு சிரிப்போடு சொல்ல
 
“என்னால ஒரு பொண்ண ஒரே நாள்ல மடக்கி கிஸ் பண்ணுற அளவுக்கு தைரியம் பத்தாதுன்னு கிண்டல் பண்ணுறியா? இல்ல ஒரே நல்ல இதெல்லாம் பண்ண கூடாதுனு அட்வைஸ் பண்ணுறியா?” சாதாரனக்குரலில் ஈகை கேட்க
 
“அந்த ஹரிணி கூட வந்திருந்தா அவளே உனக்கு கொடுத்திருப்பா மிஸ் பண்ணிட்ட”
 
“அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சி கிட்டு கல்யாணத்துக்கு முன்னாடி நீ என்ன என்ன வேல பாத்திருக்கனு இப்போதான்! தெரியுது” ஈகை கிண்டலாக சொல்ல
 
“அது வாலிப வயசு தம்பி. உனக்கு அனுபவம் பத்தல. காலேஜ் போனோமா ரெண்டு பொண்ண கரெக்ட் பண்ணோமா காதலிச்சோமான்னு இருக்கணும். அத விட்டுட்டு”
 
“அப்படியா?….” என்றவன் “யாக்கோ கேட்டுகிட்டு தான் இருக்கியா? உன் புருஷன் சொல்லுறத? உனக்கே! தெரியாம ஒருத்திய வச்சிருக்கானாம் என்னனு கொஞ்சம் கவனி”
 
ஈகையின் அலைபேசியில் மறுமுனையில் இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த காயத்திரி அலைபேசியை துண்டித்திருந்தாள்.
 
“இப்படி கோர்த்து விட்டுட்டியே டா” என்று தலையில் அடித்துக்கொள்ள அவன் அலைபேசி அடிக்க ஆரம்பிக்க, இயக்கி காதில் வைத்தவன் “டார்லிங்” என்று மட்டும்தான் கூறினான். அதன் பிறகு ஈகை வண்டியை நிறுத்தும் வரை ஒரு பேச்சு பேசவில்லை . வெறும் “அ.. எ.. இ..” என்று உயிரெழுத்துக்கள் மட்டும்தான் அவன் வாயிலிருந்து வந்துகொண்டே இருந்தது.
 
தயாளனை திரும்பிப் பார்த்து நக்கலாக சிரித்து பழிப்பு காட்டிய ஈகையை முறைத்தவாறே வந்தான் தயாளன்.
 
நிலத்தை பார்வை இட்டவனுக்கு திருப்தியாக இருக்கவே சுற்றி இருப்பதும் தாத்தா சத்யநாதனின் நிலம் தான் என்று விசாரித்ததில் அறிந்துகொண்டவன் புன்னகைத்துக்கொண்டான்.
 
“டேய் தம்பி நடுல இருக்குற நிலத்த எதுக்குடா அடமானம் வச்சிருப்பாரு? ஒண்ணுமே புரியல” தயாளன் யோசனையாக கேட்க
 
“எல்லாம் விவசாய நிலம். விவசாயம் மட்டும்தான் பண்ணனும் அதான் நடுல இருக்குற நிலத்த அவசரத்துக்கு அடமானம் வச்சிருக்குறாரு. அவர் புத்திய பாத்தியா. காசு கொடுத்தவன் விவசாயம் மட்டும்தான் பார்க்கணும், யாராச்சும் வாங்கினாலும் விவசாயம்தான் பார்க்கணும்”
 
“நல்லவேள மருதநாயகம் இந்த நிலங்களை விக்க முயற்சி செய்யல”
 
“அவரால விக்க முடியாது. அனுபவிக்க மட்டும்தான் முடியும். பத்திரமெல்லாம் வீட்டுல லாக்கர்ல இருக்கு. லாக்கர் சாவி வேதநாயகி பாட்டி கைல இருக்கு. அது மட்டுமில்ல. சொத்து பெருகினாதான் பெருமனு நினைக்கிறவரு மருதநாயகம்”
 
“ம்ம்.. நீ என்ன பண்ண போற?”
 
“விவசாயம்தான்”
 
“எப்படி டா…”
 
“இயற்கை விவசாயம். அதான் இப்போ ட்ரெண்டு. நெட்டுல நெறைய பார்த்தேன். தெரியாட்டி என்ன கத்துக்க போறேன்”
 
“நீ இறங்கி வேல பார்க்க போறியா?” தயாளன் ஆச்சரியமாக கேக்க
 
“தேவ பட்டா” கண்சிமிட்டியவாறே “இந்த மண்ணோட சாம்பிள் கலெக்ட் பண்ணி சொயில் டெஸ்ட் பண்ண வர சொல்லி இருக்கேன். அத பொறுத்து என்ன பயிரிடலாம்னு முடிவு பண்ணலாம். வேலைக்கு ஆட்கள் உள்ளூருளையே எடுக்கலாம். முக்கியமா மருதநாயகத்தோட ஆட்களை”
 
“டேய் அவனுகளைத்தான் எடுக்கவே கூடாது. இங்க நடக்கிறத போய் சொல்லுவானுங்க. அது கூட பரவால்ல. பயிர் செழிப்பா வளர்ந்த பின்னால ஏதாவது பண்ணிட போறானுங்க”
 
“ஹாஹாஹா அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம்”
 
“நீ பண்ணுற ஒவ்வொன்றும் என்ன டென்ஷன் பண்ணிகிட்டே இருக்கு. இந்த ஊருக்கு வரணும்னு சொன்ன அதுவும் இந்த வீட்டுக்குள்ளயே! வரணும்னு சொன்ன வந்துட்ட இப்போ இது வேறயா?”
 
“சுத்தி இருக்குற நிலம் எல்லாம் என் கைக்கு வரணும் அத பத்தி யோசி” ஈகை புருவம் சுருக்க,
 
“லாக்கரை திறந்து பத்திரங்களை எடுத்துடலாம்” கண்கள் மின்ன சிரித்தான் தயாளன்.
 
அண்ணனின் குறும்கு புரியாமல் “எடுத்து பூஜையறைல பூஜை செய்யவா? நிலம் என்னடாதுன்னு எல்லாரும் சொல்லணும். இது இந்த இருநூறு ஏக்கர் போல” ஈகை அண்ணனை முறைக்க
 
“அதான் நீ பார்கவிக்கு பண்ண போற காரியத்துக்கு அவளை கல்யாணம் பண்ண சொத்தை எழுதி கேளு” இந்த வழி நடந்தேறும் என்று கூற
 
“அந்தாளு அவளை கண்டம்துண்டமா வெட்டிடுவான்”
 
“டேய் என்னடா சொல்லுற?” தயாளன் அதிர்ச்சிக்குள்ளாக
 
“பேத்திக்கு இப்படி ஆச்சேனு கதறுவான் தான் ஆனா சொத்துனு வரும் பொழுது பாசமான பேத்தி கூட இரண்டாம் பட்சம்தான். அந்தாள பத்தி தெரியாதா?”
 
“பண்ணாலும் பண்ணுவான் பணத்தாசை பிடிச்ச அரக்கன்” வெறுப்பை கக்கினான் தயாளன்.
 
“கூல் ப்ரோ” தயாளனின் தோளில் தட்டியவாறு நகர்ந்தான் ஈகை.
 
 அதன் பின் ஈகைசெல்வனுக்கு வேலை இழுத்துக்கொண்டது. சொயில் டெஸ்ட்டுக்காக ஆட்கள் வந்திருக்க, அவர்களோடு பேசி எங்கெல்லாம் பரிசோதனைக்காக மண்ணை எடுக்க வேண்டும் கூறியவன், காயத்திரி அழைத்து புதிய ப்ராஜெக்ட் சம்பந்தமாக சந்தேகம் கேக்க வீடியோ காலில் அதை விளக்கலானான்.

 
காரியாலயத்தில் மொத்த பொறுப்பையும் காயத்திரியிடம் ஒப்படைத்து விட்டுத்தான் வந்திருந்தான் ஈகை.
 
“அது என்னடா என் பொண்டாட்டி என்ன சந்தேகம் இருந்தாலும் உன் கிட்டயே கேக்குறா. ஏன் என் கிட்ட கேக்க மாட்டாலாமா?” தயாளன் ஈகையை முறைக்க,
 
“கம்பெனில நீயும் ஒரு பாட்டனார். நீதான் C.E.O. ஆனா உன் தல எழுத்து என் பி.ஏவாக என் கூட சுத்திகிட்டு இருக்க” ஈகை வெறுமையான குரலில் கூற
 
“ஏன் டா அலுத்துக்கிற “அதனால எவ்வளவு நன்மைகள் விளைஞ்சதுன்னு உனக்கு தெரியாதா? நாம கம்பனி ஆரம்பிக்கும் பொழுது எவ்வளவு தடங்கல்? எவ்வளவு போட்டி? உன் பி.ஏ.வாக இருந்ததுனால தானே! யார் யார் பேரம் பேசினாங்க, யாரு நமக்கு சப்போர்ட்டாக இருந்தாங்க, கம்பெனில இருந்த கறுப்படுங்க வர கண்டு பிடிக்க முடிஞ்சது”
 
“உண்மைதான் இல்லனு சொல்லல. ஆனா இன்னமும் உன் உண்மையான பதவில நீ அமராம இருக்குறது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. காயு கேட்டா நான் என்ன சொல்லுறது?”
 
தயாளனை தான் ஒரு வேலையாள் போலவே நடத்துவதாக காயத்திரி எண்ணி விடுவாளோ! என்ற அச்சம் தான் ஈகைக்கு. ஒரு மனைவியாக காயத்திரியின் எதிர்பார்ப்புகள் என்னவென்று ஈகையால் புரிந்துகொள்ள முடியாவிடினும், தன் கணவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வில்லை என்ற கோபம் இருக்கும் தானே!  தனது குடும்பத்தில் எந்த பிரச்சினையும், குழப்பமும் வர அவன் விரும்பவில்லை.
 
“அவ கெடுக்குறா. விடு” தான் ஏன் இந்த பேச்சை எடுத்தோம் என்று தயாளன் நொந்து விட
 
“அவ கோபமும் நியாயம் தானே!” பெருமூச்சு விட்டான் ஈகை.
 
“எல்லா விஷயமும் சொல்லி புரிய வச்சிகிட்டு இருக்க முடியாது தம்பி. அவளே! புரிஞ்சிக்கட்டும். உன் அக்காவாச்சே புரிஞ்சிப்பா” என்று புன்னைத்தான் தயாளன்.
 
வேலைகளை முடித்துக்கொண்டு வீடு செல்லலாம் என்று வண்டியில் ஏறும் பொழுது தங்கதுரை அழைத்து மாதேஷ் ஒரு வேலையாக பக்கத்து டவுன் வரை சென்றிருப்பதாகவும் வரும் வழிதானே! பார்கவியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடுமாறு கூற சரி என்றவன் வண்டியை பார்கவியின் காலேஜின்
அருகில் நிறுத்த மாதேஷை காணாமல் எவ்வாறு வீடு செல்வது என்று முழித்துக்கொண்டிருந்தாள் அவள்.
 

Advertisement