காதலின் தீபம் ஒன்று..!! – 13

எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

 

“என்ன காவி இது..? யாழியோட அப்பா இப்படி பேசுறாரு.. உங்களோட நான் வந்ததுல அப்படி என்ன தப்பு இருக்கு? நம்ம எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் தானே? இவரு ஏன் இப்படி இருக்கிறார்..? அப்பிடியும் நான் உன் பக்கத்துல தானே நடந்து வந்துகிட்டு இருந்தேன். பேசிக்கிட்டு இருந்தேன்.. யாழினி முன்ன தனியா தானே நடந்திட்டு இருந்தா.. அதுக்கே இப்படி பேசறாரு.. இவர் என்ன இந்த காலத்துல இப்படி இருக்கிறாரு?”

 

மகிழன் நம்ப முடியாமல் கேட்க “அவர் அப்படிதான்டா.. அவர் அப்படி இருக்கறது கூட ஆச்சரியம் இல்லடா.. இந்த யாழி இருக்கா பாரு.. அப்படியே அவருக்கு மொத்தமா அடங்கி போவா.. ஒரு வார்த்தை எதிர்த்து பேசமாட்டா.. அவர் என்ன சொல்றாரோ அதுதான் அவளுக்கு வேதவாக்கு.. ஆனா நம்ம அவரை ஏதாவது திட்டினா நமக்கு தான் திட்டு விழும்.. அவர் மேல உயிரையே வச்சிருக்கிறா அவ.. ஏன்னா அவரும் எவ்வளவுக்கு எவ்வளவு அவளை கண்டிப்போட அடக்கி வச்சிருக்கறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவ மேல பாசமாவும் இருப்பார்.. அவ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பாரு.. அவன் அழுதா அவருக்கு மனசு தாங்கவே தாங்காது.. அவங்க அம்மா அவளை திட்டுனா கூட அவங்களுக்கும் அப்படி ஒரு திட்டு விழும்.. வீட்டில் அவளை ஒரு வேலை கூட வாங்க மாட்டாரு.. ஒரு அப்பா தான் பொண்ணுக்கு இதெல்லாம் கூட செய்வாரான்னு நினைக்கிற அளவுக்கு அவ்வளவு பத்திரமா பார்த்துப்பாரு அவளை.. அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா தலை பின்னி விடுவாரு.. யூனிபார்ம் போட்டு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாரு.. இன்னும் இதோ இப்ப காத்துட்டு இருந்தாரு இல்ல? இந்த மாதிரி அவ எங்க போனாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்துகிட்டு இருந்து அவளை பத்திரமா வீட்டுக்கு அழைச்சிட்டு போவாரு.. அவர் வாழ்க்கையில அவ ரொம்ப முக்கியம்.. அவளுக்கும் அவளோட அப்பா அவளோட தெய்வம்.. அவர் கிழிக்கற கோட்டை என்னைக்கும் தாண்ட மாட்டா.. நானும் எவ்வளவோ முறை சொல்லி இருக்கேன் அவகிட்ட.. கொஞ்சம் அந்த கோட்டை தாண்டி வர பாருனு.. நீ விரும்புற மாதிரி உன் வாழ்க்கை வாழ உங்க அப்பாவோட விருப்பத்துக்காக வாழாதன்னு எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன்.. ஆனா அவளுக்கு அதுக்கு தைரியமே வர மாட்டேங்குது.. அவளுக்கு தெரியுது.. அந்த மாதிரி இருக்கிறது நல்லது இல்லைன்னு.. ஆனா இந்த ஜென்மத்துல அவ அப்பா சொல்றதை அவ மீற மாட்டா..”

 

அவன் தலையை இட வலமாக ஆட்டி “யாழினியை தங்க கூண்டில வெச்சு இருக்கற கிளி மாதிரி அவரோட பாசங்கிற கூண்டுல அடைச்ச வச்சிருக்காரு அவரு.. அவரு அவளை அடிச்சு கொடுமைப்படுத்தி அடக்கி வச்சிருந்தா அவளை  அதிலருந்து ஈஸியா வெளியில கொண்டு வர முடியும்.. ஆனா பாசத்தை காட்டி இல்ல அவளை அடக்கி வச்சிருக்காரு.. அவளால் அதை உடைச்சிக்கிட்டு எப்படி வெளில வர முடியும்? கொஞ்சம் கஷ்டம் தான்..”

 

அவனுக்கு யாழினியின் நிலை புரிந்தாலும் ஏனோ அதை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை.. ஒரு பெருமூச்சை விட்டு “சரி வா.. போலாம்..” என்றான்..

 

குமாரவேலு வேகமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தவர் வண்டியில் ஏறுவதற்கு முன் ரத்தினசாமியை கைபேசி மூலம் அழைத்து யாழினி காவியாவோடு மகிழன் வந்திருப்பதை அவருக்கு சொல்லி “சாமி.. உங்க பொண்ணை கொஞ்சம் கண்டிச்சு வைங்க.. இதெல்லாம் நல்லாவா இருக்குது? பொம்பளை பிள்ளைங்களோட ஆம்பளை பையன் வர்றது.. பாக்குறவங்க எல்லாம் என்ன சொல்லுவாங்க?”

 

இவர் சொன்னதும் அந்த பக்கம் இரத்தின சாமியோ “இந்த காலத்தில இதெல்லாம் யாரு பாக்குறா வேலு? இப்பல்லாம் பொண்ணுங்க பசங்க எல்லாம் ஃப்ரெண்டா பழகுறதெல்லாம் ரொம்ப சகஜம் தானே..? மிஞ்சி மிஞ்சி போனா என்ன ஆயிடும்? அந்த பையனை அவ விரும்பவாளா? விரும்பினா அவனையே கட்டி வச்சுட்டா போகுது.. நான்லாம் இந்த ஜாதி குலம் கோத்திரம் இதெல்லாம் பாக்க மாட்டேன்.. என் பொண்ணு ஆசைப்பட்டா அவனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்.. என் பசங்ககளுக்கும் அதேதான்.. நீங்க எந்த காலத்துல இருக்கீங்க குமாரவேலு..?”

 

அவர் அப்படி அது பெரிய விஷயம் இல்லை என்பது போல் சகஜமாய் பேசிவிடவும் குமாரவேலுவுக்கு சப்பென்று ஆனது.. “அப்போ சரி.. உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா என்னவோ பண்ணிக்கோங்க.. ஆனா யாழினிக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.. அதனால தான் அந்த பையன் கிட்டயே சொல்லிட்டேன்.. இனிமே யாழினியோட ரொம்ப நெருங்கி பழக வேண்டாம்னு.. சரி சாமி.. நான் யாழினியை கூட்டிட்டு போலாம்னு தான் வந்தேன்.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லி இணைப்பை துண்டித்தவர் ரத்தின சாமியை வாய்க்குள்ளயே அர்ச்சிக்க தொடங்கினார்.. யாழினியை வண்டியில் ஏறச்சொல்லி வண்டியை கிளப்பி வீட்டை நோக்கி செலுத்தினார்..

 

காவியாவோடு ஆரியன் அவளுடைய வீட்டிற்கு சென்றிருக்க அங்கே அவனுக்கு வரவேற்பு அமோகமாய் இருந்தது.. அவளுடைய தந்தை அண்ணன்கள் எல்லாருமே அவனை இன்முகத்தோடு வரவேற்று அவள் அன்னை விருந்து சமைத்து காவியாவோடு அவனை ஊர் சுற்றி பார்க்க அனுப்பியும் வைத்தார்கள்..

 

ஆரியன் காவியாவிடம் “காவியா.. உங்க வீட்ல இருக்கிற எல்லாரும் ரொம்ப ஸ்வீட்.. எவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க உன்னை.. இந்த மாதிரியே எல்லாரும் இருந்துட்டா பிரச்சனையே இல்லை.. இவ்வளவு நாளா அங்க காலேஜ்ல என் கூட தானே நீங்க ரெண்டு பேரும் இருந்துட்டு இருக்கறீங்க.. தப்பு பண்ணனும்னு நினைக்கிறவன் அங்கேயே பண்ண மாட்டேனா.. இவ்வளவு தூரம் உங்களை கூட்டிட்டு வந்து தான் பண்ணனுமா? எனக்கு இன்னும் யாழியோட அப்பா பேசினது மனசை விட்டு போகவே இல்லை.. அந்த மாதிரி ஒரு மனுஷன் இருக்கற உலகத்தில தான் உங்க வீட்ல இருக்கிற மாதிரி மனுஷங்களும் இருக்காங்க.. ரொம்ப விசித்திரமான உலகம் தான் இது..”

 

“அது அப்படித்தான் ஆரி.. நம்ம அஞ்சு விரலும் எப்படி ஒண்ணா இருக்குறதில்லையோ அதே மாதிரி தான் இந்த உலகத்துல இருக்குற மனுஷங்க எல்லாம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி.. சரி.. அதை விடு.. எங்க அம்மா அப்பா உனக்கு ஊரை சுத்தி காட்ட சொன்னாங்க இல்ல..? வா போகலாம்.. எங்க போகலாம்? ஏதாவது மாலுக்கு போலாம்.. லேக்ல போட்டிங் போலாம்.. வண்டலூர் ஜூ இருக்கு.. அப்படியே ஓ எம் ஆர்.. ஈ சிஆர்.. பக்கம் போனா பீச்சுக்கு போலாம்.. அப்புறம் டைம் இருந்தா மகாபலிபுரம் கூட போலாம்..”

 

“ஏ காவி.. நானும் இதே சென்னைல தான் இருக்கேன்.. நீ எக்ஸ்ட்ரீம்  சவுத் மெட்ராஸ்ல இருக்க நான் நார்த் மெட்ராஸ்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. சென்னையில நான் பாக்காத இடமே எதுவும் கிடையாது.. சரி.. நம்ம இன்னைக்கு லேக்குக்கே போலாம்..  போய்ட்டு வந்துட்டு நைட்டே நான் கிளம்பிடுவேன்.. எங்க வீட்டுல இன்னிக்கு வரேன்னு சொல்லிட்டேன்.. வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. ரொம்ப நாள் கழிச்சு அவங்களை எல்லாம் பாக்க போறேன் இல்ல..?”

 

“ஆமா.. நீ உங்க அம்மா அப்பா யாரோட ஃபோட்டோவும் காட்டினதே இல்லையே.. அவங்க ஃபோட்டோ ஏதாவது இருக்கா?”

 

“இருக்கு.. அவங்க ரெண்டு பேரும் ஃபோட்டோல மட்டும் தான் இருக்காங்க..” அவன் சொல்ல அதிர்ந்து அவனைப் பார்த்தாள் காவியா..

 

“என்னடா சொல்ற?”

 

குரலில் அதிர்வு விலகாமல் அவள் கேட்க “போன வருஷம் நடந்த ஆக்சிடென்ல ரெண்டு பேரும் இறந்து போயிட்டாங்க காவி.. இப்போ நான் மட்டும் தான்.. நான் பெரிய மியூசிக் டைரக்டராகி அதை பாக்கணும்னு ரெண்டு பேருமே ஆசையா இருந்தாங்க.. ஆனா அதை பார்க்கிறேன் அளவுக்கு அவங்க லக்கி இல்லையா? இல்ல நான் லக்கி இல்லையான்னு தெரியல.. என்னை விட்டு சீக்கிரமே போயிட்டாங்க.. என்ன..? நிறைய சொத்துக்களை சேர்த்து வெச்சுட்டு போயிருக்காங்க.. எங்கம்மா பெரிய பிசினஸ் வுமன்.. மியூசிக்கல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் மேனுஃபேக்சர் பண்ற கம்பெனி வெச்சு ரன் பண்ணிட்டு இருந்தாங்க.. எங்க அப்பாவும் தமிழ் வாத்தியாரா இருந்தாரே தவிர அவருக்கும் மியூசிக் இன்ட்ரஸ்ட் உண்டு.. நல்லா பாடுவார்.. எங்க அம்மா அப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ ரொம்ப சாதாரணமான ஃபேமிலியா இருந்தவங்க தான்.. நாளாக ஆக அந்த கம்பெனி நல்லா வளர்ந்து இப்போ என்கிட்ட நிறைய பணம் இருக்கு.. ஆனா நான் பெரிய சொத்தா மதிக்கிற எங்க அம்மா அப்பா என்னோட இல்ல.. நான் ஒவ்வொரு வாட்டி ஒரு இன்ஸ்ட்ருமென்ட்டை வாசிக்கும் போதும் அதுல எங்க அம்மா அப்பா ரெண்டு பேரையும் பார்க்கிறேன்..”

 

“அதான் உன் மியூஸிக்கை கேட்டா அப்படி மனசு உருகி போகுது.. நிச்சயமா அந்த மியூசிக் வழியா உங்க அம்மா அப்பா உன் வளர்ச்சியை பாத்துட்டு தான் இருப்பாங்க ஆரி.. நீ ஒன்னும் அன்லக்கி எல்லாம் கெடையாது.. இப்பவும் உங்க அம்மா அப்பா உன் கூடவே தான் இருக்காங்க..”

 

அவள் ஆறுதலாய் அவனுடைய கை பிடித்து சொல்ல அவனும் தன் இன்னொரு கையை எடுத்து அவள் கை மேல் வைத்து “தேங்க்ஸ் காவி.. எனக்கும் தெரியும்.. எங்க அம்மா அப்பா என் கூட தான் இருக்காங்க இப்போவும்.. ” என்று சொல்லி புன்னகைத்தான்..

 

“ஆமா.. உங்க வீடு எங்க இருக்கு?” அவள் கேட்க “எங்க வீடு அம்பத்தூரில இருக்கு.. ஒரு நாள் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. ஆனா உங்க வீட்ல இருக்குற மாதிரி ஜேஜேன்னு அங்க ஆளுங்க எல்லாம் இருக்க மாட்டாங்கம்மா.. எங்க வீடு பெருசா இருக்கும்.. ஆனா அதுல மனுஷங்க ரொம்ப கம்மிதான்.. இப்போதைக்கு அங்க வேலை செய்றவங்க தான் என்னோட உறவுக்காரங்க.. அம்மா அப்பா இருந்த வரைக்கும் அங்க வேலை செய்றவங்களை எங்க குடும்பத்துல ஒருத்தங்களா தான் ட்ரீட் பண்ணுவாங்க.. அந்த ஒரு விஷயத்துனால தானோ என்னவோ இப்பவும் அவங்க மட்டும் தான் எனக்கு உறவுக்காரங்களா இருக்காங்க.. அதுவும் எங்க வீட்ல சமையல் செய்ற ஒரு ஆன்ட்டி இருக்காங்க.. அவங்க இருக்கறதுனால தான் என்னால எங்க அம்மா என் கூட இல்லாததை கூட ஜீரணிச்சுக்க முடியுது.. அவங்க கிட்ட நான் எதையுமே மறைக்க மாட்டேன்.. அவங்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி..” அவன் சொல்லிவிட்டு சிரிக்க அவனுடைய சிரிப்பில் இருந்த ஒரு விரக்தி உணர்வு காவியாவையும் வேதனைக்கு உள்ளாக்கியது..

 

திடீரென ஏதோ நினைவு வந்தவளாய் “ஆமா.. உனக்கு ஒரு அக்கா இருக்காங்க.. அவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கன்னு நீ ஏற்கனவே சொல்லி இருக்க இல்ல? அவங்க வந்து உன் கூட இருக்கலாம் இல்ல?”

 

“ம்ம்.. என் அக்கா இருக்கா.. ஆனா எங்க அம்மா அப்பா மாதிரி என் அக்காவும் லவ் மேரேஜ் தான்.. அவ ஒரு பஞ்சாபியை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. எங்க மாமா கல்யாணம் முடிஞ்சதும் அவங்க சொந்த ஊருக்கே அவளை கூட்டிட்டு போய்ட்டாரு.. எப்பயாவது தான் வருவா.. வரும்போது வீடே கலகலன்னு இருக்கும்.. அவ பொண்ணுங்க ரெண்டு பேரும் என்னோட அவ்வளவு ஒட்டிக்கிட்டு இருப்பாங்க.. ஆனா மேக்ஸிமம் வந்தா ஒரு அஞ்சு நாள் இருப்பா.. அவ்வளவுதான்.. அதுக்கப்புறம் மறுபடியும் எனக்கு இந்த தனிமை தான்..”

 

அவனை கொஞ்சம் கொஞ்சமாய் நேசிக்க தொடங்கி இருந்த அவளின்  மனமோ அவனுடைய தனிமையை போக்கி அவன் வேதனையை முழுவதாய் குறைத்து விட வேண்டும் என்று துடித்தது.. அவனை திருமணம் செய்து கொண்டு அவனுடைய அன்னை தந்தையின் இழப்பை தன்னுடைய ஆழமான அன்பினாலும் தன்னுடைய உறவுகளின் அன்பினாலும் ஈடு செய்து விட வேண்டும் என்று திரும்ப திரும்ப அவளிடம் சொல்லியது..

 

கூடிய விரைவில் அவனிடம் தன் நேசத்தை சொல்லி அதற்கான அச்சாரத்தை இட்டு விட வேண்டும் என்று அந்த நொடி முடிவெடுத்துக் கொண்டாள் காவியா..

 

“சரிடா வா கிளம்பலாம்..” இருவரும் கிளம்ப அப்போது யாழினியிடம் இருந்து காவ்யாவுக்கு அழைப்பு வந்திருந்தது.. “சொல்லு யாழி.. வீட்டுக்கு போய் சேர்ந்துட்டியா?”

 

காவியா நிதானமாக கேட்டாள்.. ஆனால் அடுத்து யாழினி சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனாள் காவியா..

 

அந்த அழைப்பு யாழினியிடமிருந்து வந்திருந்தது என்று அறிந்திருந்த மகிழன் காவியாவின் அதிர்ந்த முக பாவனையில் கொஞ்சம் பதைப்பதைத்து தான் போனான்..

 

🎶🎼🎵நீரோட்டம் போலோடும்

ஆசைக் கனவுகள் ஊர்கோலம்

ஆஹா ஹா ஆனந்தம்

ஆடும் நினைவுகள் பூவாகும்

 

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

 

பூங்கதவே தாள் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும் பூவாய் 

பெண் பாவாய்

 

திருத்தேகம் எனக்காகும்

தேனில் நனைந்தது என் உள்ளம்

பொன்னாரம் பூவாழை

ஆடும் தோரணம் எங்கெங்கும்

 

 

மாலை சூடும் அந்நேரம் 

மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…🎶🎼🎵

 

தொடரும்..