Advertisement

14..

காதல் கரம் சேர்ந்ததில் சேதாரம் எவருக்கு?…

 

காதலில் ஜெயித்து

மகிழ்வில் திளைத்தவர்கள்

அதனை அமுதம் என்பர்….

தோற்று…

மனதில் வலியை

உணர்ந்தவர்கள்..

அதனை விஷத்துடன் ஒப்பிடுவர்..

வென்றதாய் எண்ணவும் முடியாமல்…

தோற்றதாய் துவழவும் முடியாமல்…

என்னைப்போல் தவிப்பவர்கள்..

அதனை அமுத விஷம் என்பர்…

அன்னையின்   வற்புறுத்தல் காரணமாக உண்மையைக் கூறச் சென்றாலும்,  சூழ்நிலை காரணமாக  உண்மையை கூறாமல்  அமுதேவ்வை    திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டிய  ஆயுதத்தை தனுஜ் கையில் கொடுத்து வந்தவள், எப்படியும்    திருமணம் நடக்கும் என்ற உறுதியுடன் இருக்க.. விஷல்யா உண்மையை தெரியப்படுத்தி மன்னிப்பு கேட்டு விட்டதால் திருமணத்தில் எந்தத் தடையும் இருக்காது என்று இரு வீட்டு பெரியவர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்க..  தன்னை மறந்து மது போதையில் மயங்கிக் கிடக்கும் நண்பனை நாளை மண்டபத்திற்கு எப்படி அழைத்துச் செல்வது என்ற தவிப்புடன் இருந்தான் தனுஜ்.

பலர் பல எண்ணங்களில் உழன்று கொண்டிருக்க..    எவர் உணர்வையும் பொருட்படுத்தாது.. திருமண நாளிற்கான பொழுதும்  புலர்ந்தது…

நண்பனின் மனநிலை எப்படியிருக்கும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த தனுஜ்.. வீட்டின் வரவேற்பு சோபாவில் அமர்ந்தபடியே உறங்கிவிட…

அலைபேசியின்    ஒலிக்கடிகை அலறல் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்தவன். ‘ இருக்கிற டயர்ட்ல படுத்தா எந்திரிக்க முடியாதுன்னு  அலாரம் வச்சு படுத்தது நல்லதா போச்சு… ஃஷப்பா முடியல  இப்படி கண்ணைக் கட்டுதே.. இதுல இவனை வேற  சமாளிக்கணுமே!.   மண்டபத்துலயிருந்து  ஓடி வந்து ஃபுல்லா சரக்கு அடிச்சு மட்டையாகுற     அளவுக்கு இவனுக்கு     என்ன   உண்மை  தெரிஞ்சதுன்னு   தெரியலையே,  ஒன்னும் தெரியாம நான் என்னத்த  சமாளிக்கிறது, ஒருவேளை நானும் பொய் சொல்லிட்டேன்னு என் மேலேயே கொலைக் காண்டுல இருந்தா  என்ன செய்யறது. விஷல்யா வேற  எந்த உண்மையும் சொல்லாம    எல்லா உண்மையும் சொல்லிட்ட மாதிரி  பில்ட்டப்  குடுத்துட்டு போயிட்டா! அவ பேச்சை நம்பி  இந்தக் கல்யாணம் நடக்கும்னு எல்லாரும் நம்பிக்கையோட காத்துட்டு இருப்பாங்க. அந்த நம்பிக்கை வீணாகாம  கல்யாணம் நல்லபடியா நடக்க இப்ப நான் தான் ஏதாவது செஞ்சாகணும்.. என்ன நடந்தாலும் சரி உண்மையை  மறைச்சத்துக்கான   காரணத்தை புரிய  வைச்சு மண்டபத்துக்கு கூட்டிட்டு  போயிடனும்..  அப்படியும் முடியலேன்னா வேற வழியே இல்ல   கடைசி ஆயுதமா விஷல்யா குடுத்த லெட்டரைக் காட்டி மிரட்டி இழுத்துட்டு போயிடணும் ‘ என்று தனக்குள் புலம்பியபடி அமுதேவ் அறையை நோக்கி சென்றான் தனுஜ்.

யாரைச் சமாளிக்க வேண்டும் என்று  தனக்குள் பலவாறு திட்டமிட்டபடி சென்றானோ அவன் அவ்விடத்தில் இல்லை என்பது உறுதியானதும்… ‘ தலையை கூட தூக்க முடியாம மயங்கிக் கிடந்தானே!,  எனக்கு முன்னாடி எழுந்திருச்சு எங்க எப்படி போயிருப்பான்?. ஒருவேளை  விஷல்யா பிளான் தெரிஞ்சு..   இங்க இருந்தும் எஸ்கேப் ஆகிட்டானா!. முகூர்த்தத்துக்கு நேரமாயிடுச்சு என்ன பண்றதுன்னு  ஒன்னும் புரியலையே! ,  என்னை நம்பி இவன விட்டுட்டு போன விஷல்யாவுக்கு என்ன பதில் சொல்லப் போறேன்னு தெரியலையே…  “என்று   பரிதவிப்புடன் வாசுதேவ்வை  தொடர்பு கொண்டான் தனுஜ்.

” என்னடா சைலன்சர்.. நல்லத் தூக்கம் போல.. சரி சரி சீக்கிரம் கிளம்பி மண்டபத்துக்கு வா..  மூகூர்த்தத்துக்கு நேரமாச்சு.. ” என்று  தனுஜ் இருக்கும் நிலை புரியாது  அவனை பேசவே விடாமல் திருமண மண்டபத்திற்கு வரும்படி அவசரபடுத்தினார் வாசுதேவ்.

” மண்டபத்துக்கு வரவேண்டிய முக்கியமான ஆளே இங்க  இல்ல …  நான்  மட்டும் அங்க   வந்து என்னப் பிரயோஜனம்..  ” என்று பதட்டத்துடன் பேசினான்  தனுஜ்.

” அது யாருடா எனக்கே தெரியாத முக்கியமான ஆள்.  ஒருவேளை  எங்களுக்குத்  தெரியாம  உனக்கு ஒரு ஆளை செட் பண்ணிட்டியா என்ன? ” என்று   கேலி செய்தார்   வாசுதேவ்.

”  நீங்க வேற  நேரம் காலம் தெரியாம கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களே அப்பா..  கல்யாணத்துக்கு தேவையான முக்கியமான ஆள் அதாவது கல்யாண மாப்பிள்ளை உங்க பையன் இங்க இல்ல அதைத்தான் நான் சொல்ல வந்தேன்… ” என்றான் தனுஜ்.

”  தேவ் அங்க இல்லன்னு எனக்கு தெரியுமே!” என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைவதற்கு பதிலாக.. அசட்டையாக பதில் தந்தார்  வாசுதேவ்.

” என்னப்பா சொல்றீங்க தேவ் இங்க இல்லாத விஷயம் உங்களுக்கு தெரியுமா?” என்று  தனுஜ்   அதிர்ச்சியாகிட.. ” எனக்கு மட்டும் இல்ல, மண்டபத்துல இருக்கிற எல்லாருக்கும் தெரியும்” என்றார் வாசுதேவ்.

” என்ன மண்டபத்துல இருக்கிற எல்லாருக்கும் தெரியுமா?, என்ன  சொல்லுறீங்க?” என்று குறையாத அதிர்ச்சியுடன் வினவினான் தனுஜ்.

”  இங்க இருக்கிறவன்.. அங்க எப்படி டா அங்க  இருப்பான்.. ” என்றார் வாசுதேவ்.

” என்ன தேவ் அங்க இருக்கானா..  எப்போ எப்படி வந்தான், அவன் எப்படி இந்தக்  கல்யாணத்துக்கு சம்மதிச்சான்… ” என்று   நம்ப மனமற்ற சந்தேகத்துடன் வினவினான் தனுஜ்.

” என்னடா இப்படிக் கேட்குற.. நேத்து என் மருமக நேர்ல பார்த்து உண்மையை சொல்லி மன்னிப்புக் கேட்கவும் தேவ்  கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டானே!, இது நடக்கும்போது நீ கூட அங்க தான இருந்த.. இப்போ வந்து ஒன்னுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்குற.. என்னடா குடிச்சிட்டு போதையிலப் பினாத்துரியா?” என்றார் வாசுதேவ்.

” என்னது நான் போதையில இருக்கிறேன்னா.. எனக்கு இது தேவை தான்… ” என்று அலுத்துக்கொண்டவன்.. ” ஆமா தேவ் அங்க வந்து ஏதாவது சொன்னானா?” என்றான் தனுஜ்.

”  சொன்னான் சொன்னான்.. குடிச்சுட்டு கண்ணு கூட திறக்க முடியாம அரை மயக்கத்துல சோபால விழுந்து கிடக்கிறன்னு சொன்னான்.. போதை தெளிஞ்சிருச்சுனா  மண்டபத்துக்கு கிளம்பி வா..   முகூர்த்தத்துக்கு நேரமாச்சு.. ” என்று கட்டளைப் பிறப்பித்தார் வாசுதேவ்.

‘ நாளைக்கு கல்யாணத்தை வைச்சிட்டு குடிச்சிட்டு சுயநினைவு இல்லாம மயங்கிக் கிடந்ததும் இல்லாம  .. நான்  குடிப் போதையில கிடக்குறேன்னு  சொல்லிருக்க.. இருடா உன்னை நேர்ல வந்து கவனிச்சுக்கிறேன்’ என்று தனக்குள் கறுவிக் கொண்டவன்.. தாமதம் செய்யாமல் உடனடியாக கிளம்பி மண்டபத்திற்கு சென்றான்.

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க மண்டபமே பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது..

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க.. அப்போதுதான் மண்டபத்திற்கு வந்து சேர்ந்த உறவுகள் இருக்கையைத் தேடி அமர்ந்தபடி இருக்க…

திருமணத்தை முன்னின்று நடத்தக்கூடிய குடும்பத்து உறுப்பினர்கள் அங்கும் இங்கும் பரபரப்புடன் கால்களில் சக்கரம் இன்றியே பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தனர்.

நண்பன் இருக்குமிடம் அறிந்ததும் அவசரமாய் ஓடி வந்த தனுஜ், மணமகன்  அறையில் ஒன்றுமே நடவாதது போல்   திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த அமுதேவ் அருகில் வந்து… ” டேய் நண்பா.. என்னடா நடக்குது இங்க?, நீ எப்படி டா இங்க வந்த?” என்று  விடை அறியாத குழப்பத்துடன் வினவினான்.

” இங்க என்ன நடக்குது,  எப்படி நடக்குது,  யார் மூலமா நடக்குது இப்படி எல்லாம் தெரிஞ்ச நீயே இங்க என்ன நடக்குதுன்னு  கேட்டா  என்ன அர்த்தம்?,” என்று குற்றம் சாட்டும் குரலில் கூறியவன்,    அதிர்ந்து நின்ற… தனுஜ் முகம் பார்த்து என்ன நினைத்தானோ  ”  இந்தக் கல்யாணம் நடக்க நீயும் ஒரு காரணம் தான, அதை தான் சொன்னேன்” என்று அதுவரை பேசிய வார்த்தையை சரி கட்டுவது போல் சமாதானமாக பேசினான் அமுதேவ்.

நண்பனின்  வார்த்தையில் எப்போதும் இருக்கும் ஒட்டுதலும் உரிமையும் இல்லாததை கவனித்த தனுஜ்…. ” நேத்து என்கேஜ்மென்ட் முடிஞ்சதுலயிருந்து நீ சரி இல்ல. வினோத் உன்கிட்ட என்ன சொன்னான்?” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.

” நேத்து எனக்கு  நடந்ததுக்கு ஒரு நல்ல நண்பன் என்ன சொல்வானோ…  அதைத்தான் வினோத்தும் சொன்னான் .. ” என்று குதர்க்கமாக கூறினான் அமுதேவ்.

இம்முறை வெளிப்படையாகவே அதிர்ச்சியை காட்டிய தனுஜ்.. ” சும்மா சுத்தி வளைக்காம என்ன நடந்ததுன்னு  உண்மைய சொல்லு.. ” என்று  வற்புறுத்தலாய் வினவினான்.

” உண்மை!” என்று வில்லத்தனமாய் சிரித்தவன்… ” கூடப் பழகின நண்பனுக்கு கல்யாணம்னா,   விஷ் தான் பண்ணுவாங்க வேற என்ன செய்வாங்க, ஆனா நீ கேக்கறதை பார்த்தா என் கிட்ட இருந்து வேற எதையோ  எதிர்பார்க்கிற போல  ” என்றான் அமுதேவ்.

” சும்மா நடிக்காத.. நேத்து எதுக்கு  மண்டபத்துல  இருந்து போன? போனதும் இல்லாம.. புல்லா குடிச்சுட்டு சுய நினைவு இல்லாம விழுந்து கிடந்த.. அதுக்கெல்லாம் காரணம் அந்த வினோத தானே” என்றான் தனுஜ்.

” சேச்சே..  எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருந்தது  ரிலாக்ஸ் பண்ணப் போனேன்…   ” என்றான் அமுதேவ்.

” பொய்… உன் ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும். என்கிட்ட பொய் சொல்ல முயற்சி பண்ணாத.. உண்மைய சொல்லு!” என்றான் தனுஜ்.

“நான் உண்மைய சொல்லுறது இருக்கட்டும் நீ முதல என் கேள்விக்கு பதில் சொல்லு?, விஷல்யாவை பொண்ணுப் பார்த்துட்டு காருல திரும்பி வரும் போது ஏதோ உண்மை தெரிய வந்தா எதுவும் மாறலாம்னு   சொன்னயே அது என்ன உண்மை..?” என்றான் அமுதேவ்.

“ அது எதுக்கு இப்போ,  முதல்ல கல்யாணம் முடியட்டும்  மத்ததெல்லாம் பிறகு பேசிக்கலாம்” என்றான் தனுஜ்.

“நீங்க எல்லாரும் என்கிட்டே மறைக்க நினைக்கிற உண்மைய நான்  மட்டும் வெளிப்படையா சொல்லணும், இது என்ன நியாயம்?” என்றான்  அமுதேவ்.

” உன்கிட்ட யாரும் வேணும்னு  மறைக்கல தேவ், உன்னைப் பார்த்து எல்லா உண்மையையும் சொல்லனும்னு தான்  நேத்து   விஷல்யா  உன்  வீட்டுக்கு வந்திருந்தா.. ஆனா அவ..  சொல்ற எதையும் கேட்கிற மனநிலையில நீ இல்ல.. ” என்றான் தனுஜ்.

”  உண்மையை சொல்ல இல்ல… எல்லா உண்மையும் எனக்குத் தெரிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சு…  இது தான் நான்.. இப்படித்தான் இருப்பேன், உன்னால என்னை மாத்த முடியாதுன்னு சொல்லிட்டு போக  வந்தா.. ” என்றான் அமுதேவ்.

” அப்போ உனக்கு நாங்க மறைக்க நினைச்ச எல்லா உண்மையும்  தெரிஞ்சிருக்கு அப்படித்தானே!, உண்மை தெரிஞ்சதுக்கப்புறம் கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணாம, அமைதியா இருக்கயே இதுக்கு என்ன அர்த்தம்?” என்று நண்பனின் விசித்திர செயலுக்கு காரணம் வினவினான்  தனுஜ்.

” இந்தக்  கல்யாணம் நடக்கணும்னு நானும் எதிர்பார்க்குறேன்னு அர்த்தம்!” என்றான் அமுதேவ்.

” நீ இப்படி ஒரு முடிவு  எடுப்பன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நண்பா.. ” என்று  மகிழ்வுடன் தனுஜ் நண்பனை  அணைத்துக்  கொள்ள… அவனைத் தன்னிடமிருந்து  விலக்கி நிறுத்தி..  ” எந்தக் கல்யாணம் நடக்கும்னு இந்த  அளவுக்கு பாடு பட்டீங்களோ,  அந்தக் கல்யாணம் இப்போ  நடக்கப் போகுது அதுக்கு ரெடியாகாம வெட்டி அரட்டை அடிச்சிட்டு நிக்கிற..  போய் துணை மாப்பிளை மாதிரி டிப்டாப்பா ரெடியாகிட்டு வா” என்று  தனுஜை  தயாராகும்படி அறிவுறுத்தினான் அமுதேவ்.

தன் சட்டைப் பையில் இருந்த விஷல்யா   கடிதத்தை  தொட்டுப் பார்த்தவன்,  ‘ உனக்கு அவசியமே  இல்ல’ என்று எண்ணிக் கொண்டவன், ” நீ இப்படி ஒரு முடிவை எடுப்பன்னு  தெரிஞ்சிருந்தா இந்த அளவுக்கு நாங்க ரிஸ்க் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்ல நண்பா.. ” என்று மகிழ்வுடன் கூறி தன்னை தயார்படுத்திக் கொள்ள சென்றான்  தனுஜ்.

மகனை தேடி வந்த வாசுதேவ்… ” உன் அம்மா  உன்கிட்ட பேசணும்னு சொல்லுறா, வரச் சொல்லட்டுமா?” என்று  தன் மனைவி மகனுடன் பேச அனுமதி வேண்டினார்.

அமைதியாக அமர்ந்திருந்தவன்,  சம்மதமாய் மெதுவாய் தலையசைக்க… அவன் சம்மத்திற்காகவே காத்திருந்த வாசுதேவ், அறையின் வாசலில் காத்திருந்த பானுஸ்ரீயை  உள்ளே வரும்படி செய்கை செய்தார்.

” நடந்தது என்னன்னு  விஷல்யா சொல்லிருப்பா.. எல்லாமே  தெரிஞ்சதுக்கு பிறகும் எதுவுமே நடக்காத மாதிரி நீ அமைதியா இருக்கிறத மத்தவங்க வேணும்னா சாதாரணமா எடுத்துக்கலாம். ஆனா எனக்கு என்னவோ உன் இறுகிப்போன முகத்தைப் பார்க்கும் போது,     புயலுக்கு முன்னாடி இருக்கிற அமைதி மாதிரி  ஏதோ  பயம் காட்டுது. பெத்த பிள்ளைக்கு எது நல்லதோ அதை  செய்றதுதான் அம்மாவோட குணம் .. இதுதான் உனக்கு நல்லதுன்னு தோணுனதால தான்  ரிஸ்க் எடுத்து  இவ்வளவும்  செஞ்சேன்.  ஏற்கனவே என் மேல   கோபத்துல  இருக்கிற உனக்கு உண்மை தெரிஞ்சதும்  இன்னும்  கோபம் அதிகமாகிருக்கும்.  என்னக் கோபமா இருந்தாலும்  என்னோட  நிறுத்திக்கோ..  அதை விஷல்யா கிட்ட கொண்டு போகாத.. அவக் காதல் உண்மை அதைக் காயப்படுத்திடாத.. ” என்றார் பானுஸ்ரீ.

பானுஸ்ரீ அறையினுள் வந்ததிலிருந்து  ஏதும் பேசாமல் கண்ணாடி முன் நின்று தன்னைச் சரிபார்த்துக் கொண்டிருந்தவன்,  ”   உங்க வழிகாட்டுதல் படிதான்  எல்லாம் நடக்குதுனு எனக்கு தெரியும். உங்களோடத் தப்புக்கு என் ஷாலுவை நான் எதுக்கு தண்டிக்கணும்.  ஒருத்தங்க செஞ்ச தப்புக்கு அடுத்தவங்கள தண்டிக்கிற பழக்கம் எனக்கு இல்ல. என் பொண்டாட்டியை எப்படி  பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும் உங்க அட்வைஸ் ஒன்னும் எனக்குத் தேவையில்லை.. ” என்று அலட்சியமாக கூறியபடி சற்று கலைந்திருந்த தலைமுடியைக் கோதிக் கொண்டவன்… ”  உங்கப் புரட்சிகரமான சிந்தனை எல்லாம் இனி  உங்க கூடவே வச்சிக்கோங்க என் ஷாலுக்கிட்ட  அதை திணிக்க முயற்சி பண்ணாதீங்க, அது தான்  எல்லாருக்கும் நல்லது”  என்று கர்வமாகவே அறிவித்தான் அமுதேவ்.

மாப்பிள்ளை வரவேற்பிற்கு   அமுதேவிற்கு அழைப்பு  விடுத்திட…. துணைமாப்பிள்ளை எனும் அரிதாரத்தில் அவன் அருகில்  தனுஜ் நின்றிட… அலங்கரிக்கப்பட்ட ஆரத்தி தட்டுகள் கொண்டு ஆலம் சுற்றி புது மாப்பிள்ளைக்கு வரவேற்பு  வழங்கப்பட்டது.

வாசல் கடந்து  மண்டபதினுள் அமுதேவ் நுழையும் வேளை… திடீரென்று அவனுக்கு முன் வந்து நின்ற  இளைஞர் பட்டாளம்… எதற்கோ  தயாராவது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கண்களால் ஏதோ ஜாடை காட்டிட.. அடுத்த நொடி அரங்கமே அதிரும் அளவிற்கு இசை பாடல் ஒன்று ஒலிக்கத் தொடங்கியது…

‘ஏய் என்னடா இது சப்ப பீட்டு கொழுத்துங்கடா.. ஆஅஹ் மஜாபா மஜாபா இதான் இதான் இதான் இதான் ஏய் இடிடா வாங்கடா,  :ஏ வாத்தி கம்மிங் ஒத்து ஆஹ் ஆஹ் ஏய் ஒத்து தக்க துன்னா டோம்பா டோம்பா, ஹோய்…அண்ணா வந்தா ஆட்டோ பாம்மு… ‘

என்று  கூடிநின்ற இளைஞர் கூட்டம்  தோள்களை குலுக்கி நடனம் புரியத் துவங்க..  அதனை தொடர்ந்து ஆணும் பெண்ணுமாய் இணைந்து நின்றவர்கள், தங்களுக்கு முன்பு  ஆடிக் கொண்டிருந்தவர்களை விலக்கித் தள்ளிவிட்டு முன் வந்து  நிற்க,  அடுத்த பாடல் ஒலிக்கத் தொடங்கியது..

‘பாக்கு வெத்தலமாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு,  பூவத் தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சுக் கண்டத பேசி டைம் வேஸ்ட் பண்ணாத பையன் தங்கம் மிஸ்சு பண்ணாத சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் ‘

என்று திரைப்பட பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க,  பாடலுக்கு ஏற்றபடி நடனம் புரியத் தொடங்கினர்  இளைஞர் பட்டாளம்.

சற்று நேரத்தில் அவ்விடமே பலவண்ண ஒளிவெள்ளத்தில் மின்னிட.. ஆடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அமுதேவ்வை மறைத்து நிற்க,  அழகாய் அலங்கரித்த மங்கையர்கள் மீண்டும் அவ்விடத்தை நிறைத்து நின்றனர்,  பின்னணியில் பாடல் வரிகள் ஒலிக்கத் துவங்கும் போதே.. அமுதேவ்வை மறைத்து நின்ற கூட்டம் விலகிச் சென்றது.

‘யாரோ யாரோடி

உன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல நிலாவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு

சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…’

என்று    பாடலுக்கு ஏற்ற படி    அசைந்து கொடுத்த பெண்கள்  அவ்விடத்திற்கு விஷல்யாவை இழுத்து வந்து நிறுத்தி இருந்தனர்.

மணமகள் கோலத்தில் அடர் சிவப்பு நிறத்தில் பட்டுடுத்தி  வேண்டிய ஆபரணங்கள்  சூட்டி அழகுப் பதுமை போல் அலங்கரித்து திருமணக்கோலத்திற்கே  உண்டான வெட்கத்துடன் தலைகுனிந்தபடி நின்றிருந்த விஷல்யா.. மெதுவாய் தலைநிமிர்ந்து, அமுதேவ்வைப் பார்த்து காதலாய் கண்ணடித்து சிரிக்க…  அதுவரை  நிலவிக் கொண்டிருந்த அமைதியை கலைக்கும் விதமாய் பின்னணியில்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்..

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்.. நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு

நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை..

என்று பாடல் வரிகள் இசையுடன் ஒலிக்க.. அரங்கில் இருந்த எவரும் எதிர்பாராத விதமாய்  பாடலுக்கு ஏற்றபடி  இதமாய் நடனம் புரியத் துவங்கினாள்.

இதுவரை கண்டிராத  மாப்பிள்ளை  அழைப்பு.. அதுவும் மணமகளே தேடி வந்து  நடனம் புரிந்தது மணமகனை  வரவேற்க… நடந்த விசித்திர சம்பவத்தை நம்ப முடியாமல் திருமணத்திற்கு  வந்திருந்த உறவினர்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர்  தங்கள்  அலைபேசியில் நடந்த நடன நிகழ்ச்சியை பதிவு செய்யத் துவங்கினர்.

சற்று நேரத்தில் விஷல்யா முன் வந்து நின்ற இளைஞன் ஒருவன் .. ” இது உன் ஸ்டைல் இல்லயே… சும்மா உன்  ஸ்டைல இறங்கிக் கலக்கு” என்று அவன் கையில் இருந்த குளிரூட்டும் கண்ணாடியை (கூலிங் கிளாஸ்) விஷல்யா கையில் கொடுத்துச் செல்ல.. அதை  அவளுக்கே உண்டான திமிரான  தோரணையுடன் அணிந்து கொண்டவள்… அடுத்த பாடல் இசைக்க அதுவரை கொண்டிருந்த நளினத்தை கைவிட்டு..

காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ,  மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ, கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா பொரட்டி போட்டு இழுகுறடா நீ… திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ, என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறாங் கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி…

என்று இசைக்கு ஏற்ற விதத்தில் துடிப்புடன் ஆடி முடித்தாள் விஷல்யா.

” மாப்பிளை..  இப்போ உங்க டர்ன்… ” என்று கூடி நின்ற இளைஞர் பட்டாளம் கூக்குரலிட்டு அமுதேவ்வை இம்சிக்க… ”  சாரி ஐ கான்ட்.. ” என்று இங்கிதமாய் மறுத்தவன்.. நடனம் ஆடிக் களைத்து மூச்சுவாங்கி   நின்ற விஷல்யாவின் கண் கண்ணாடியை  அகற்றியவன், அவள் கரம் பிடித்து… தன்னுடனேயே  மணமேடைக்கு அழைத்துச் சென்றான்.

பாரம்பரிய முறைப்படி தான் தன் திருமணம் நடக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்த அமுதேவ் ஏற்கனவே   செய்து  வைத்திருந்த ஏற்பாட்டின் படி,    ஹோமம் வளர்த்து  புரோகிதர்கள் கொண்டு மந்திரம் ஜெபித்து, பெற்றோர்கள் பாதம்    துடைத்து,  மூதாதையர்களின்    சடங்கு சம்பிரதாயங்களை ஒன்றன்பின் ஒன்றாக..  முறைப்படி பின்பற்றிட எந்தவித தங்கு தடையும் இல்லாமல்  அமுதேவ் விஷல்யா திருமணம் இனிதாய்  நடந்து முடிந்தது.

Advertisement