Advertisement

அத்தியாயம்—10
வல்லரசு நினைத்தது போல் தான் மதியின் முகம் செந்தாமரையாய் மலர்ந்தது.அந்த  கூப்பனை காமித்து…”இது..இது..” அவள் பேச்சு வராது திக்கி தான் போனாள்.
அவளுக்கு வல்லரசு தன் அக்காவிடம் வாழ்ந்தான் என்பதை விட. தான் அனைவரும் இரண்டாம் பட்சம் தானா….என்ற நினைவு தான் கல்யாணம் ஆனாதிலிருந்து அவளை இம்சித்தது.
ஆனால் தன் கணவரின் மனதில் நான் தான் முதன்மை என்று அறிந்த நொடி அவளுக்கு வார்த்தை வர சண்டி தனம் செய்ய.
அவளின் தோள் தொட்டு எழுப்பியவன். முகம் காட்டும் ட்ரஸ்ஸிங் டேபில் முன் கொண்டு வந்து நிறுத்தி அவளின் பின் பக்கமாக அணைத்தவன்.
அவளின் தோள் வளைவில் தன் முகத்தை பதித்து கண்ணாடியைய் பார்க்க. மதியும் அந்த கண்ணாடி வழியாக தன் கணவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
எப்போதும் அவனை பார்த்து பயப்படும் மதி. இப்போது அவன் கண்ணில் தெரிந்த காதலில் கிறங்கி போய் அவனை பார்க்க.
இப்போது வல்லரசுவும் கண்ணாடி வழியாக அவள் கண்களையே பார்த்த வாறு. “ முதன் முதலில் இந்த கண்ணாடி வழியாக தான் உன்னை பார்த்தேன்.” அவனின் பேச்சில் அதிசயத்து அவனை திரும்பி பார்க்க முனைந்தவளை தடுத்தவன்.
“இப்படியே பேசலாம் ஸ்ரீமா…. “ இப்போது ஸ்ரீ என்ற அவன் அழைப்பு அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக மகிழ்ச்சி தான் துளிர்த்தது.
கூடவே காலையில் கூட தன்னை தான் ஸ்ரீ என்று அழைத்து இருக்கிறான். நான் தான் முட்டாள் தனமாக நினைத்து அவனை விலக்கி என்று நினைத்துக் கொண்டே இருந்தவள்.
காலையில் அவனிடம் தான் நெகிழ்ந்ததை நினைக்கும் போதே அவள்  கன்னம் இரண்டும் சிவக்க. அவளையே கண்ணாடி வழியாக பார்த்திருந்த வல்லரசு
“என்ன நினச்ச ஸ்ரீ …..?” என்று கேட்டதுக்கு.
“எதுவும் இல்லையே….” என்ற  அவளின் பதட்டமான பதிலே ஏதோ நினைத்து இருக்கிறாள். என்ற நினைவு ஓடும் போதே அவர்கள்  நெருக்கமாக இருந்தது இன்று காலை  தானேஅதை தான் நினைத்தாளோ….
அதை பற்றி கேட்க வந்தவன் முதலில் அனைத்தும் பேசி சரி படுத்திய பிறகு தான் மற்றது என்ற முடிவோடு தன் கவனத்தை திசை திருப்பாது.
“உன்னை நான் பார்க்கும் போது இந்த கண்ணாடி பார்த்துட்டேமுடியையைய் காதுக்கு பின் பக்கம் எடுத்து விட்டுக்கிட்ட.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… செயல் முறை விளக்கமும் கொடுக்க.
அவனின் கைய்  தன் காது மடல் தீண்டலில் உடல் சிலிர்த்து கூச்சத்துடம் நெளிவதை பார்த்து தன் கையைய் எழுத்துக் கொண்டவன்.
“அப்போ உன்  அம்மா உன் கிட்ட இங்கு பெண்ணை பெத்தவங்க காசு கொண்டு வந்தா போதும் கல்யாணத்துக்கு உண்டான அனைத்தும் வாங்கிடலாமுன்னு சொன்னதுக்கு.
நீ மாப்பிள்ளையுமா…. என்ற உன்னுடைய பேச்சி  இங்கு துடித்து அடங்கியது ஸ்ரீமா…..” என்று தன் நெஞ்சத்தை தொட்டு காட்ட.
அவனின் அந்த பேச்சில் விழி விரித்து பார்த்த மதி. இதற்க்கு மேல் தாங்காது என்பது போல்  அவன் சொன்னதை கேட்காது திரும்பி  அவன் முகத்தை பார்த்து….
“உண்மையா….?” என்ற அவள் கேள்விக்கு.
“நான் பொய் சொல்வது போல் தெரியுதா….”
“உங்க கண்ண பார்த்தா தெரியல. ஆனா இதே ரூமில்…” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கோ….
அன்று அவன் பேச்சில் அவளுக்கு  வலித்ததை விட அதிகமான வலி அவன் கண்ணில் தெரிய.
அதை பார்த்த மதி…”சாரிங்க சாரிங்க. தெரியாம நியாபகப்படுத்திட்டேன்.” என்று வருந்தியவளின் கைய் பற்றியவன்.
“நான் தான் சாரி கேட்கனும் ஸ்ரீம்மா….நான் விரும்பிய பெண் என் அறையில்…அதுவும் எதில் கண்டு மயங்கினேனோ…அதன் எதிரில்….நானும் மனிதன் தானே…
எவ்வளவு தான் கடமை,குடும்பம், கெளரவம் என்று ஆயிரெத்தெட்டு சமாதானம் காரணம் என் மனதுக்குள் சொன்னாலும் இங்கு உன்னை பார்த்து தடுமாறி போய் உன் கிட்டயே வர ஆராம்பித்து விட்டேன். அப்புறம் தான் என் நிலமை புரிந்து அதன் கோபத்தை உன் மீது காமிச்சு…” பேசிக் கொண்டே இருந்தவன்.
அன்றைய நாள் நினைவின் தாக்கத்தில் விடுபட முடியாதவனாய் வருந்தி நின்றவனின் தோளை பற்றி ஆறுதல் படுத்தியவளின் தோள் மீதே  சாய்ந்தவன்.
“அன்னிக்கி  உன்ன திட்டுட்டு போய் நான் எவ்வளவு கஷ்ட்ட பட்டேன் தெரியுமா….? என்பவனின் பேசை மாற்றும் பொருட்டு.
“ எங்க வீட்டுக்கு முதன் முதலா  அத்தை,மாமா, வரும் போது நான் தான் கதவு திறந்தேன். அப்போ அவங்க தெளிவா எங்க அப்பா, அம்மா, கிட்ட உங்க பெண் ஸ்ரீன்னு மட்டும் சொல்லலே.. உங்க அதிர்ஷ்டக்கார பொண்ணுன்னு சேர்த்து தான் சொன்னாங்க. “
 தன்னை விரும்பியவனுக்கு எப்படி தன் அக்காவை பேசி  முடித்தார்கள் என்று தெரிந்துக் கொள்ள கேட்க.
அதிர்ஷ்ட்ட கூப்பனை எடுத்து காமித்த வல்லரசு…”உனக்கு நியாபகம் இருக்கா…இந்த கூப்பனை நான் தான் உன் அப்பா கிட்ட கொடுத்தேன். அவர் பேனா எழுதாது மக்கர் செய்யும் போது நானே கூப்பனை வாங்கி உங்க அதிர்ஷ்ட்ட பெயர் சொல்லுங்கன்னு  கேட்டதுக்கு.
உன் அப்பா என் மகள் தான் எனக்கு அதிர்ஷ்ட்ட தேவதைன்னு சொல்லி ஸ்ரீன்னு தான் சொன்னாரு. அட்ரஸ் எல்லாம் சொல்லி முடிக்கவும் அவருக்கு போன் வரவும் சரியா இருந்தது. அவர் போன் பேச அந்த இடத்தை விட்டு போனதும் உன் கிட்ட அந்த கூப்பனை கொடுத்து கைய்யெழுத்து போட சொன்னதுக்கு.”
அந்த கூப்பனை காமித்து “ஸ்ரீமதின்னு போட்ட… போட்டுட்டு உன் அப்பா கூப்பிட்டதும் தோ வரன்பான்னு ஓடிட்ட….நீயே சொல். நான் யாரைஸ்ரீன்னு நினச்சிப்பேன்.
உங்க வீட்டில் இன்னொரு பெண் இருப்பதே எனக்கு தெரியாத போது அந்த பெண்ணின் பெயரும் ஸ்ரீயில் தான் ஆராம்பிக்கும் என்று எனக்கு எப்படி தெரியும்…..?
அப்போது உன் அப்பா  அந்த இடத்தை விட்டு போனது என் அதிர்ஷ்ட்டமா தான் கருத்தினேன். ஆனா  அதன் பிறகு நடந்தை வெச்சி பார்க்கும் போது அவர் மட்டும் இருந்து இருந்தா….? என்று தான் நினைக்க தோன்றியது.
இன்னொன்னும் தான் உன்னை பார்த்த அன்னைகே வீட்டில் சொல்லாம ஊருக்கு போய் வந்து சொல்லி இருந்தா….?இன்னும் எவ்வளவோ ஸ்ரீ.
நான் உங்க வீட்டுக்கு வரமா இருப்பதில் அத்தைக்கு எவ்வளவு மனசு கஷ்டம் என்று எனக்கு தெரியும் ஸ்ரீ.
ஆனா எப்படி வருவேன். உன்னை பாக்கும் போது எல்லாம் மறக்கனு மறக்கனும் என்று நானே உருப்போட்டு இருந்தது எல்லாம் காற்றில் பறந்து போயிடறது….நான் என்ன செய்வது….?”
தன்னை  விளக்க  அவன் பேச பேச தான் .மதிக்கு தன்னை ஏன் அப்படி பேசினான் நடத்தினான் என்ற காரணம் முழுமையாக விளங்கியது. அதை நினைப்பது கூட அவனுக்கு மனது என்ன வேதனை அடையும் என்று நினைத்து… “ வேண்டாம் அத்தான். உங்க  மனசு கஷ்ட படுத்துற எதையும் நான் தெரிஞ்சிக்க விரும்பல.”
“இல்ல ஸ்ரீ …”ஏதோ பேச வந்தவனின் வாயை கைய்யால் மூடி….
“வேண்டாம் அத்தான்  தெரிஞ்ச  வரை போதும். இனி எதுவும் எனக்கு தெரிய வேண்டாம்.” என்று சொல்லியவளின் கைய் பிடித்தவன்.
“எனக்கு தெரியனுமே…ஸ்ரீ.” என்றதுக்கு.
“என்ன தெரியனும்.”
“என்னை உனக்கு பிடிக்குமா…..?”
அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு நிமிடம் யோசிக்க. அந்த ஒரு நிமிடம் வல்லரசுக்கு ஒரு யூகமாக கடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
தன்னை ஆழ மூச்சோடுத்து…”உண்மைய சொல்லனும் என்றால் …உங்களை கல்யாணம் செய்துக் கொள்வதில் துளி கூட எனக்கு விருப்பம் இல்லை.” அவள் பதிலில் வல்லரசுவின் முகம் செத்தே விட்டது என்று சொல்லலாம்.
இவள் உண்மை சொல்லாது பொய்யாவது சொல்லி இருக்கலாமே….? என்று தான் வல்லரசுக்கு நினைக்க தோன்றியது.
அவனின் முகத்தை பார்த்த  ஸ்ரீ… “உங்களை பிடிக்க வில்லை என்ற காரணம் இல்லை.” என்ற மனைவியிடம் “என்னை கல்யாணம் செய்துக் கொள்ள விருப்பம் இல்லேன்னா வேறு  என்ன காரணம் சொல்லு ஸ்ரீ .” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க.
அவனின் கோபத்தில்  இப்போது ஸ்ரீக்கு பயம் ஏற்படவில்லை. மாறாக  மகிழ்ச்சி தான் ஏற்பட்டது.
“என் நிலையில் இருந்து யோசிங்க அத்தான். அக்காவ  விருப்ப பட்டு கல்யாணம் செய்திங்க. இருங்க இருங்க அப்போ அப்படி தானே நினைத்து இருந்தேன்.
அக்கா  கணவராய் மட்டும் பார்த்தேன். அதுவும் எப்போதும் என்னை வாட்டி வதைக்கும் அத்தானாய். அக்கா இறந்ததும் நமக்கு திருமணம்.
உங்கள குழந்தைய வெச்சி போஸ் பண்ணாங்கலோன்னு தான் நான் அப்போ நினச்சேன்.” என்று சொன்னவள்.
பின் தன் சின்ன வயதில் இருந்து தனக்கு நடந்ததை சொல்ல சொல்ல. வல்லரசுவின் முகம் வெகுவாய் மாறியது.
அனைத்தையும் சொல்லி முடித்து தன் கணவனின் முகத்தை பார்த்தவள் அதிர்ந்தே விட்டாள். அப்படி அடக்க பட்ட வேதனை  அதில் தெரிந்தது.
“என்ன அத்தான்…” என்று அவள் முடிக்கவில்லை.
“வேண்டாம் ஸ்ரீ. நான் உனக்கு வேண்டாம். நான் உனக்கு அருகதை இல்லாதவன். உன் அக்காவின் கணவன். ஒரு குழந்தையின் அப்பா. வேண்டாம் ஸ்ரீ.
குடும்பமாவது உனக்கு முதன்மையானதாய் அமையட்டும்.” என்று மன வேதனையுடன் சொல்ல.
“இல்ல அத்தான். இப்போ தான் எனக்கு நீங்க வேண்டும். இரண்டாவது எது அத்தான். உடம்பா…
என்னை பொறுத்தவரை மனது தான் அத்தான் முக்கியம் .அதில் நான் தான் முதன்மை என்ற போது வேறு என்ன வேண்டும் சொல்லுங்க. இனி இது மாதிரி பிரிந்து விடலாம் என்று பேச கூடாது.அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வந்துடும்.” என்று அதட்டும் மனைவியின் தோள் பற்றி கட்டிலில் அமர வைத்தவன்.
“உனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லையே…?” என்று கேட்க.
அவன் எதை கேட்கிறான் என்று புரியாது இடது வலதுமாய் அசைத்து இல்லை என்று சொல்லியவளை விட்டு விடுவானா….அவன்.
மனதுக்கு பிடித்த பெண்ணின் சேர்க்கை சொர்க்கம் அல்லவா….குழந்தையின் அழுகுரலில் தான் மனைவியைய் விட்டு எழுந்தான்.
தன் கலைந்த முடியையும், நலிங்கிய ஆடையையும் பார்த்து எப்படி போவது என்று தயங்கி நின்ற மனைவியின் கன்னம் தட்டி… “நீ பொருமையாவே வா…நான் குழந்தையைய் மேல கூட்டிட்டு வர்றேன்.” என்றதும்.
“வேண்டாம் மேல எல்லாம் வேண்டாம். நான் குளிச்சிட்டு வர்றேன். நீங்க போங்க.” கணவனை அனுப்பியவளுக்கு அவ்வளவு மனது நிம்மதி.
குளித்து விட்டு கீழே சென்று குழந்தையைய் தூக்கிக்  கொஞ்சும் தன் மருமகளின் முகத்தை வைத்தே அனைத்தும் சரியாகி விட்டது என்ற நிறைவோடு சுந்தரி கணவனை பார்க்க.
அவருக்கும் அதே நிறைவு  தான் என்று அவரின் சிரித்த முகம் காட்டிக் கொடுக்க. அந்த மன நிறைவோடு அனைவரும் சாப்பிட அமரும் போது
எப்போதும் தோன்றும் கேள்வியான வள்ளி ஏன் ட்ரைவரிடம் காரை எடுக்க சொல்லாது ஸ்கூட்டியில் சென்றாள்.அதுவும் குழந்தையைய் விட்டு  என்ற கேள்வி வல்லரசுவின் மனதில் எழ.
எப்போதும் தன் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பவன். இன்று அதையும் தெரிந்துக் கொண்டால் நிம்மதியாக இருக்குமோ…
அம்மா.அப்பா, அதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைத்து அதை கேட்டு விட.
கணவன் , மனைவி இருவரும்  ஒரு சேர… “ “எங்களுக்கு தெரியாது.”  என்று விட.
மதியோ….ஏதோ நினைத்தவளாய்…”அத்தான் அந்த கூப்பனை பார்த்து….” என்று பேசியவளின் பேச்சில் இருந்து பெரியவர்கள் இருவருக்கும் அனைத்தும் பேசி இருக்கிறார்கள் என்று புரிந்தாலும் அதை பற்றி மேலும் கேட்காது இருக்க.
வல்லரசு  மதியின் கேள்விக்கு…. “ இல்ல ஸ்ரீ நான்  வைத்த இடம் எனக்கு மட்டும் தான் தெரியும். அதுவும் நான் எங்கு வைத்தேனோ அங்கு தான் இருந்தது. அதனால் கண்டிப்பாக அவள் பார்க்கவில்லை என்பது எனக்கு நிச்சயம்.” என்ற கணவனின் பதிலில் கொஞ்சம் நிம்மதி உற்றாள். தன் அக்கா சாகும் போது நிம்மதி இழந்த சாகவில்லை என்பதில்.
மதி சாப்பிட்ட உடன் குழந்தையைய் தூக்கிக் கொண்டு தன் அறைக்கு சென்று விட. வல்லரசுவின் பேச்சு தந்தையிடம் இருந்தாலும் பார்வை மேல் நோக்கியே இருக்க.
அதை பார்த்த சுந்தரி… “என்னங்க போதும் எது என்றாலும் நாளை  பேசிக் கொள்ளலாம்.” என்று அதட்டிய தன் மனைவியைய் பார்த்த சுகவனம்.
அவரின் கண்ஜாடை புரிந்தவராய்…. “ஆமா அரசு. எனக்கும் ரொம்ப டையடா இருக்கு.” என்று அவனிடம் சொன்ன உடன் எழுந்து சென்று விட.
மகனின் மகிழ்ச்சியைய் பார்த்த அந்த தம்பதியருக்கு கண் தன்னால் கலங்கியது. சுந்தரி… “எந்த பாவம் என்றாலும் அது நம்மோடு போகட்டுமுங்க நம்ம பசங்கல வந்து அது சேர கூடாது.” என்ற  மனைவியின் பாவம் என்ன என்று அவர் கேட்கவில்லை.
அது தான் அவருக்கே தெரியுமே….ஆம் தெரியும் தான். ஸ்ரீ வள்ளி குழந்தையைய் இவர்களிடம் கொடுத்து விட்டு குளிக்க செல்கிறேன் என்றதும். குழந்தையைய் கொஞ்சிக் கொண்டே சுந்தரி கணவரிடம்.
“ அரசு இந்த கல்யாணம்  நடக்கட்டும் என்று சொன்னதும் நான் கூட பயந்து விட்டேன் எப்படி மதியைய் மறந்து அவள் அக்காவோடு வாழ்வான் என்று. இந்த குழந்தை வந்த பிறகு தான் என் பயம் கொஞ்சம் தெளிந்தது.” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே…
பின் பக்கம் கதவு படால் என்று திறக்கும் சத்தத்தில் என்ன என்று பார்ப்பதற்க்குள் வள்ளி ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு போய் விட.
தன் கணவர் காரை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்ததில் பார்த்தது அவளின் விபத்தை தான்.
ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் மகனின் நிலை உணர்ந்து  பெரியவர்கள் இருவரும் மறைத்து விட்டனர்.
அதில் இருந்து கடவுளே இதன் தண்டனை எங்களுக்கு கொடுங்க எங்க வாரிசை ஒன்று செய்யாதே என்று வேண்டாத தெய்வம் இல்லை.
பெரியவர்களின் இந்த பிராத்தனை பளித்தது என்ற விதமாய் அடுத்த ஆண்டே ஜெய்க்கு ஒரு தங்கை பிறந்தாள்.

Advertisement