Advertisement

                                        காட்டு ரோஜா என் தோட்டத்தில் 
                                                                  அத்தியாயம்  –  1
                                                                                                   
மதிய நேரம் வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருக்க அந்த கல்லூரி வளாகத்தில் கலகலவென  பேசிக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் நுழைந்த ரித்தி மேமை பார்க்கவும் அவ்வளவு அமைதி.. தன் கையிருந்த பேப்பர்கட்டை டேபிளில் வைத்தவர் ஒரு மாணவியை அழைத்து அதை கொடுக்கச் சொல்லியவரிடம் கையில் ஒரே ஒரு பேப்பர் மட்டும் இருந்தது.. எல்லோர் கையிலும் எக்ஸாம் பேப்பர்.. சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு வருத்தம், சிலர் எப்போதும் போல டேக் இட் பாலிசி.. 
 
ஸ்ருதி..”  சத்தமாக அவள் பேரை சொன்னவர் அவளுடைய பேப்பரை அவளை நோக்கி வீசினார்..
 
அவள் நிமிர்ந்து மேமை பார்க்க, என்ன எழுதியிருக்க..??”
 
எக்ஸாம் மேம்..
 அவள் பதிலில் தன் நெற்றிக்கண்ணை திறக்க கப்பென வாயை மூடிக் கொண்டாள்.. இவங்கதானே கேட்டாங்க.. தன் காலடியில் கிடந்த பேப்பரை விரித்து பார்க்க எல்லா இடத்திலும் சிவப்பு மையால் கோடு போடப்பட்டிருந்தது.. ஒரு இடத்தில் பெரிய முட்டை அதை நன்றாக கவனித்து பார்த்தவள்….
 
                                                        “ நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
                                                 ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
                                              இன்னா இப்போ லோக்கலுனா
                                                     நம்ம கெத்தா ஒலாத்தனும்
                                          ஆமா அழுக்கா இருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்..”
 
இந்த பாடலை ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தாள்..
 
நீயெல்லாம் படிக்க வந்தேன்கிற பேர்ல எதுக்கு எங்க உயிர வாங்க வர்ற.. தண்டம் தண்டம் .. மேக்கப் பண்ற நேரத்தில கொஞ்சம படிச்சா பாஸாயிருக்கலாம்ல.. எழுத்தா இது கோழி கிறுக்கின மாதிரி ஒரு எழுத்து.. ஒரு பத்துநிமிடம் லெப்ட் ரைட் வாங்க பாவம் அவருக்குத்தான் மூச்சு வாங்கியது..
 
 
இவளுக்கோ பெரிய யோசனை இந்த எக்ஸாம் யாரப்பார்த்து எழுதினோம் என்று.. அடுத்த வகுப்புக்கான  பெல் அடிக்க,
 
 நாளைக்கு வரும்போது பேரண்ட்ஸோட வரணும்…??”
 
அவர் தலை மறையவும் பின்புறம் திரும்பியவள் ,”டேய் மவனே தினேசு நீ பாஸாடா..??” பார்த்து எழுதுற அவசரத்துல இந்த பக்கி என்ன எழுதினான்னு பார்க்காம அப்படியே காப்பி அடிச்சிட்டமே..!!
 
அவன் பேப்பரை வெடுக்கென வாங்கியவள் அதை ஒப்பிட்டு பார்க்க அவள் எழுதியது எல்லாம் அதிலும் இருந்தது..
 
டேய்ய்ய்ய் நீயும் தானடா இந்த பாட்ட எழுதி வைச்சிருக்க..? அதென்ன உனக்கு மட்டும் எல்லாம் கரெக்ட் போட்டுருக்காங்க .. எனக்கு அடிச்சு வைச்சிருக்காங்க.. வாடா போய் மேம்கிட்ட காட்டுவோம்..??”
 
ஏய் கொன்னுருவேன் பார்த்துக்க.. பேப்பரை ஸ்ருதியிடம் இருந்து பறித்தவன்.. நீ மாட்டினதும் இல்லாம என்னையும மாட்டிவிடுறியா..
 
சற்று யோசித்தவள்,” டேய் படிக்காதவன் ஏன்டா எக்ஸாம் அன்னைக்கு அவ்வளவு சின்சியரா எழுதின .. வினோத்த பார்த்து எழுத போனவ சின்சியரா நீ எழுதவும் உன்னை பார்த்து எழுதினேன் பாரு இது எனக்கு ரொம்ப தேவை.. அவனை போட்டு வெளுக்க மற்றவர்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை..
 
தோழிகள் சற்றுநேரம் அவனை அடிவாங்கவிட்டவர்கள் பின் அவளை இழுத்து நிறுத்த,
 
இங்க பாரு ஸ்ருதி இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.. அன்னைக்கு பத்மனாபன் ஸார் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாரு.. அதான் நான் எழுதுர மாதிரி பில்டப் கொடுக்கலாம்னு பார்த்தா ஒன்னுமே நியாபகம் வரலை.. நைட்ஷோ படம் பார்த்தது மட்டும்தான் நியாபகம் இருந்திச்சு.. எப்படியோ நான் பாஸாக்கிட்டேன்ல.. அது போதும் எனக்கு..!! அப்பவும் நான் பேப்பர தரமாட்டேன்னுதானே சொன்னேன்.. என்ன மிரட்டி பறிச்சு பார்த்து எழுதுன.. ராட்சசி என்னமா அடிக்கிற.. உன்னெல்லாம் வீட்ல எப்படி வைச்சிருக்காங்க.. பிசாசே..எருமை எருமை.. உன்னை கல்யாணம் பண்ண போறவன் பாவம்டி.. அவளிடமிருந்து தப்பித்து  அவன் இடத்தில் அமர..
 
ஸ்ருதி இருபத்தியோரு அழகு புயல்.. அடாவடி,  நினைத்ததையும் செய்வாள்,,  நினைக்காததையும் செய்வாள்.. கலகலப்புக்கு சொந்தமானவள்.. பிரண்ட்ஸ் அதிகம் அதில ஆண் பெண் வேறுபாடு கிடையாது.. அவர்கள் டிபார்மெண்டில் அனைவரும் அப்படித்தான் பிரண்ட்ஸாக இருப்பார்கள்.. அவர்களுக்குள் அடிதடி சண்டை நடந்தாலும் வேறு டிபார்ட்மெண்ட் மாணவர்கள் தங்கள் டிபார்ட் மாணவிகளை ஏதாவது சொன்னால் போதும் சட்டையை மடித்துக் கொண்டு சண்டைக்கு கிளம்பிவிடுவார்கள்.. பிஎஸ்சி ஐடி டிபார்ட்மெண்ட்.. இந்த வருடம் கடைசி வருடத்தில இருப்பதால் சீனியர் என்ற கெத்து வேறு..!!
 
அவளுடைய அழகில் கவரப்பட்டு ஐலவ்யு சொல்லி பல்பு வாங்கியவர்கள் அதிகம் அனைவரையும் ஓட ஓட விரட்டுவாள்..
 
நல்ல சந்தன நிறம்.. சிரிக்கும் கண்கள் அதைவிட சிரித்தால் கன்னத்தில் குழி விழும் சிரிப்பு.. அதிலேயே நிறையபேர் விழுவர் .வெள்ளைநிற  சுடிதாரில் தேவதை போல இருந்தாள்.. கழுத்தில் மெலிதான செயின் காதில் நீளமாக ஏதோ தொங்கியது.. நெற்றியில் சிறு கடுகு போல ஒரு பொட்டு.. மாசு மறுவற்ற முகம்.. தலையை பின்னல் என்ற பெயரில் ஏதோ பாடுபடுத்தி வைத்திருந்தாள்.. அதுவுமே அவளுக்கு தனி அழகை சேர்த்தது.. மேம் திட்டியதை மறந்தவள் மற்ற பிரண்ஸோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்..
 
அவள் பிரண்ட் சந்தியா, ஏய் நாளைக்கு உன்னை பேரண்டஸ கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காங்க.. நீ ஜாலியா இருக்க..??”
 
 
 விடுடி பார்த்துக்கலாம் இருக்கவே இருக்காங்க நம்ம சுமதி அக்கா.. அவங்கள கூட்டிட்டு வரவேண்டியதுதான்.. அவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் வேலைப்பார்க்கும் அக்கா அவ்வப்போது இது போல பிரச்சனைகளுக்கு கைகொடுப்பவர்..
 
ஸ்ருதி வீட்டில் இரண்டு பெண்கள் மூத்தவள் ஸ்வேதா.. இவள் இரண்டாவது.. இவள் தந்தை நகராட்சியில் பெரிய அதிகாரியாக இருக்க இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை டிரான்ஸ்பர்.. மூத்தவளை திருமணம் செய்து கொடுத்து ஒரு வருடமாயிருக்க ஆண்குழந்தை பிறந்திருந்திருந்தது…. இவளுக்கும் அக்கா ஸ்வேதாவுக்கும் மூன்று வயது இடைவெளி..
 
இவள் எவ்வளவு கலகலப்போ அதற்கு நேர் எதிர் அவள் அக்கா அவ்வளவு அமைதி.. அதிர்ந்துகூட பேசமாட்டாள்.. ஸ்ருதி 9 வது படிக்கும்வரை இருவரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள்.. பின் ஸ்வேதாவை கல்லூரி படிப்பிற்காக ஹாஸ்டலில் சேர்க்க பின் இவள் ஹாஸ்டலில் என அதிகம் ஒன்று சேர்க்காமல் இருக்க இடையில் சென்ற வருடம் திடிரென அவளுக்கு திருமணம் என்றதும் ஸ்ருதி தன் தாய் தந்தையோடு பெரிய சண்டையே போட்டாள்..
 
 இப்ப என்ன அவசரம் எனக்கு லீவு விடும்போது மேரேஜ் வைங்க,, இப்ப செமஸ்டர் ஆரம்பமாக போகுது.. என்னால ஜாலியா அக்கா மேரேஜ்ல கலந்துக்க முடியாது ப்ளிஸ் ப்ளிஸ்..” என அடம்பிடிக்க ,
 
அவள் தந்தையோ மாப்பிள்ளைக்கு லீவ் இல்லை.. வியாழ நோக்கம் முடிய போகுது என ஏதேதோ சொல்லி ஒரு மாதத்திற்குள் திருமணத்தை முடித்திருந்தனர்.. செமஸ்டர் காரணமாக அவளுக்கு லீவ் கிடைக்காமல் திருமணத்திற்கு முதல்நாள்தான் வந்திருக்க இங்கு வீட்டில் உறவினர் கூட்டம்..
 
தன் அக்காவிடம் தனிமையில்கூட இரண்டு நிமிடம் பேசமுடியாமல் அக்கா கணவரிடம் வம்பிழுக்க முடியாமல் திருமணத்தன்றுதான் அஸ்வினை பார்த்தாள்.. அக்காவுக்கு ஏற்றாற்போல இவனும் அமைதி.. அட போங்கையா இவனும் இப்படி இருந்தா எப்படி குடும்பம் நடத்துவாங்க..’ மைத்துணியாக இரண்டு மூன்றுமுறை சென்று அவனிடம் வம்பிழுக்க முயல அவன் பதிலே பேசவில்லை.. அவள் தாயும் சேட்டையை குறைத்து மாப்பிள்ளைக்கிட்ட எந்த வம்பும் வைச்சிக்க கூடாது என ஸ்டிட்டாக ஆர்டர் போட்டிருக்க இவளுக்கு அவனின் அமைதியில் ஈர்ப்பு குறைந்து மற்றவர்களிடம் தன் கலாட்டாவை ஆரம்பித்திருந்தாள்.. அஸ்வினும் திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் வெளிநாடு சென்றிருந்தான்..
 
இவள் மதுரையில் ஒரு கல்லூரியில் படிக்க அவள் தந்தை இப்போது புதுக்கோட்டையில் வேலைப்பார்த்தார்.. ஸ்வேதா விருதுநகரில் இருந்தாள்.. ஸ்வேதாவின் புகுந்த வீட்டிற்கு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறாள். .ஸ்வேதாவுக்கு மாமனார் கிடையது.. மாமியார் மட்டும்தான் அவரும் அமைதியாகத்தான் இருப்பார்.. ஸ்ருதியிடம் பாசமாக பேசுவார்.. ஸ்ருதியை அங்கே தங்கச் சொன்னாலும் அவளுக்கு அரட்டைக்கு ஆள் இல்லாமல் இரண்டு நாட்களிலேயே கிளம்பிவிடுவாள்..
 
மாலை மூன்று மணி இருக்கும் வகுப்பில் மேம் பாடம் நடத்திக் கொண்டிருக்க ஸ்ருதி தூங்கி வழிந்து கொண்டிருந்தாள்.. பாதி பேருக்கு மேல் சாமியாடிக் கொண்டிருந்தார்கள்..  ஆசிரியரோ தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்க ப்யூனின் குரலில் தன் கவனத்தை வெளியில் செலுத்தினார்..
 
ஹப்பா தப்பிச்சோம்டா சாமி .. அனைவரும் தங்களுக்குள் பேச்சை துவங்க, மேமிடம் மெதுவான குரலில் ஏதோ சொல்லிச் சென்றார்..,
 
 ஸ்ருதி உன்னை ஹெச்ஓடி வரச் சொல்றாராம் போ.. சந்தியா கூடப்போ..
                                                                                                                                                        
ஸ்ருதியோ ஹெச்ஓடி வரச் சொன்னா எதுக்கு நமக்கு துணை.. அவருக்குத்தானே ஒரு துணை வேணும்.. சந்தியாவிடம் வளவளத்துக்கொண்டு செல்ல,
 
ஹெச்ஓடி சொன்ன தகவலில் ஸ்ருதி மயங்கி விழுந்திருந்தாள்.. பதறி தண்ணீரை தெளித்து மயக்கம்  தெளிய வைத்தவர் சந்தியாவை பார்த்து,” கிளாஸ்ல இன்னும் வேற யாரையாவது கூட ஹெல்ப்க்கு வைச்சிக்கோம்மா..
 
சந்தியாவுமே பதறி கிளாஸ்ரூமுக்கு சென்று அவள் பேக்கோடு வர துணைக்கு கிளாஸே கிளம்பி வந்திருந்தது.. மாணவர்கள் சட்டென ஒரு வேனை ஏற்பாடு செய்து போனில் ஸ்ருதி அப்பாவிடம் பேசி தகவலை கேட்டுக் கொண்டவர்கள் விருது நகரை நோக்கி தங்கள் வேனை விடச் சொன்னார்கள்..
 
ஸ்ருதி அழுது கத்தி கதறி மயங்கி மீண்டும் அழுது கொண்டுவர மாணவிகளும் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தங்கள் அழுகையை துவக்க மாணவர்கள்தான் அவர்களை அதட்டி அடக்கினார்கள்..
 
நீங்க எல்லாரும் ஸ்ருதிக்கு ஆறுதல் சொல்லுவிங்கன்னு பார்த்தா எல்லாரும் இப்படி அழுதா என்ன பண்ண..??”
 
ஸ்ருதிக்கு இதை நம்பவே முடியவில்லை.. ஏற்று கொள்ள முடியவில்லை.. எப்படி.. எப்படி என நெஞ்சு தவிக்க கண்ணில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது..
 
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள் .. காரிலிருந்த இறங்கிய ஸ்ருதி தன் தாயை நோக்கி ஓட அவளின் தாய் கோகிலா ஸ்ருதி என கட்டி அணைத்து கதறி அவள் காலடியிலேயே மயங்கி விழுந்திருந்தார்.. தாயோடு சேர்ந்து கதறியவளுக்கு ஸ்வேதா மாமியாரின் கையில் இருந்த குழந்தையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை..
 
மாணவர்கள் அவள் தாயை தூக்கி அங்கிருந்த நாற்காலியில் படுக்க வைக்க அவள் பிரண்ட்ஸ்களோ தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளிய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ருதி அப்பா சந்திரனோ அப்படியே இடிந்து போய் அங்கு விசாரனைக்கு வந்திருந்த போலிஸூக்கு ஏதோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்..  உறவினர் ஒவ்வொருவராக விசயம் தெரிந்து பதறி வந்து கொண்டிருந்தனர்..
 
குழந்தை அழுத குரலை தாங்க முடியாமல் ஓடிச் சென்று ஸ்வேதா மாமியாரிடம் குழந்தையை வாங்கி குழந்தை மார்போடு அணைத்துக் கொண்டவள் குழந்தையோடு சேர்ந்து இவளும் தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள்..
 
அஸ்வின் அப்படியே இறுகிப்போய் நின்றான்.. அவர்கள் அனைவரும் நின்றது பிணவறை முன்..
 
கார் ஆக்ஸிடென்டில் ஸ்வேதா உயிரிழந்திருக்க போஸ்மார்ட்டம் செய்து உடலை வாங்குவதற்காக அனைவரும் அங்கு நின்றார்கள்.. !!!
 
                                                   
 
                                                                       இனி………….?????

Advertisement