Advertisement

கண்மணி 5:
கணவனின் கேள்வி சரியென உணர்ந்தவள், “அது நீங்கதான் எப்பவுமே எங்கிட்ட எதையும் மறைக்காம சொல்வீங்க..நம்ம கல்யாணம் ஆனா அன்னிக்கு நைட் கூட நீங்க உங்க வேலை கனவு எல்லாம் சொன்னீங்க…நான் கேட்கலயே..சோ அது மாதிரி நீங்க சொல்வீங்கனு நினைச்சேன்..” என அவள் எண்ணத்தை உரைக்க
“ஹ்ம்ம்..அது என்னைப் பத்திம்மா..அதனால உங்கிட்ட எதையும் மறைக்கல…ஆனா இது என்னோட ப்ரெண்ட்ஸோட பெர்சனல் இஷ்யூ…எல்லா உறவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு..அதுக்கான வேல்யூஸ் உண்டு..சோ என்னால ஒரு உறவுக்காக இன்னொரு உறவோட நம்பிக்கையைக் கெடுக்க முடியாது..இது என்னைப் பத்தின விசயம் இல்ல அதனால தான் சொல்லல.மத்தபடி சொல்லக்கூடாதுனு எந்த இண்டென்ஷனும் எனக்கு இல்லை…”
“அன்னிக்கே என் ப்ரெண்ட்ஸ் பத்தி பேசியிருப்பேன்..பட் இட் வாஸ் எ ஸ்பெஷல் டே..அதான் என்னை தவிர எதையும் உங்கிட்ட நான் தெரியப்படுத்தல…அயன் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்..நான்    அயன் ரன்வீர் எல்லாரும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்…இப்ப வரை எங்க நட்பு தொடருது…இதுல நான் அயன் மட்டும் டூரிஸம் படிச்சோம்..ரன்வீர் மட்டும் இஞ்சினியரிங் படிச்சான்..காலேஜ்ல நான் அயன் அப்புறம் எனக்கு போன் செஞ்ச இவாஞ்சலின் மூணு பேரும் ப்ரண்ட்ஸ்.இவாவும் அயனும் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க…ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் அவங்க கல்யாணம் நடந்துச்சு…எப்ப லீவ் வந்தாலும் நான்,ரன்வீர்,இவா,அயன் எல்லாரும் ஒன்னா தான் சுத்துவோம்…ரன்வீர்க்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட இருக்கு…தன்யா அவன் பாப்பா பெயர்…”
“நேத்து இவாவுக்கும் அயனுக்கும் ஏதோ சண்டை போல…அதனால் அவன் பேசாம இருந்திருக்கான்…இவளும் அவங்கிட்ட கோச்சுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் வந்துட்டா அவ ஊர் கன்னியாகுமரிக்குப் போக..ஆனா நேத்து தான் செம மழையே….ஊரே வெள்ளக்காடா இருந்துச்சே..பஸ் வரல…அங்க தனியா நிக்க சேஃப் இல்ல..ஆட்டோவும் அந்த நேரத்துல நல்லதுல்ல..அவன் மேல உள்ள கோவத்துல அவங்கிட்ட கோச்சுக்கிட்டு ஊருக்குப் போக வந்துட்டு திரும்ப அவனுக்குப் போன் செய்ய ஈகோ தடுக்க தோள் கொடுப்பான் தோழன்னு எனக்குக் கால் பண்ணினாள்.அயன் ஆபிஸ்ல மாட்டிக்கிட்டான்..அவனால் மழையில வீட்டுக்கு வர முடியல..அவளை வீட்ல விட்டுட்டு அவங்கிட்ட போன் செஞ்சு பேசிட்டு நான் வந்துட்டேன்…அண்ட் ரெஸ்ட் இஸ் தி ஹிஸ்டரி…” என கைகளை விரித்தான் திருநாவுக்கரசு.
“எல்லாத்தையும் சொல்லிட்டேன்…உங்கிட்ட இனி எதையும் மறைக்க மாட்டேன்..ஆனா எதுனாலும் நீ கேட்கணும்..எப்பவுமே நானே சொல்லணும்னு எதிர்ப்பார்க்காத யாழ்…எதிர்ப்பார்ப்புகள் நம்மை ஏமாத்திடும்..சரியா..?” என அவன் கேட்க அவளும் தலையை ஆட்டினாள்.
“சரி…நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்..” என்றபடி அவன் வேகமாக அறையை விட்டுச் சென்றான்.அதைக் கண்டு இவள் வேதனையுடன் அமர்ந்தாள்.
அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.அவன் மீதுள்ள பாசம் தான் இப்படி கேட்க காரணி.மற்றபடி சந்தேகமெல்லாம் இல்லை என சொல்லத் தோன்றியது.அவனது பொறுமையும்  நேர்மையும் நிமிர்வும் அவளைக் கொள்ளைக் கொண்டது.அவன் இவளிடம் அத்தனைப் பக்குவமாக நிதானமாக நடந்து கொண்டது கண்டு அவளுக்கு ஆச்சர்யம் தான்.ஏனெனில் அவர்கள் வீட்டு ஆண்கள் எங்கே போகிறோம் எப்போது வருவோம் என்று சொல்ல மாட்டார்கள்.வீட்டில் இருக்கும் உனக்கு அது எதுக்கு? என்றபடி தான் இருப்பார்கள்..இவனும் அதைப் போலவோ என்றுதான் அவள் நினைத்து வருந்தியது.
இரவில் அவன் பதினொறு மணிக்கு வர, யாழ்முகை திருவுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள்.அவன் வந்தபின் அவனுக்கு சாப்பாடு பறிமாறி விட்டு அவனருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து அவளுக்கும் சாப்பாடு போட்டு தட்டில் உள்ளதை உண்ணப் போகும் போது திரு கேட்டான் ,
“என்ன நீ இன்னும் சாப்பிடலயா யாழ்..?”
“இல்ல..நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு…” என அவள் இழுக்க,
உடனே அவளது வலக்கையை தனது இடக்கையால் பிடித்தவன் அவளை சாப்பிட விடாமல் அவன் பாட்டிற்கு அவனது தட்டில் உள்ளதை ரசித்து உண்டான்.
“என்ன செய்றீங்க நீங்க..? கையை விடுங்க..ப்ளீஸ்..” என யாழ் கெஞ்ச
“ம்ம்..மேடம் இவ்வளவு நேரம் எதுக்கு சாப்பிடல..?” என்றான் நக்கலாய்.
“நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு வெயிட் பண்ணினேன்னு சொன்னேன்ல…” என சிணுங்க,
“என்னோட வயிறுக்கும் உன் வயிறுக்கும் எதாவது கனெக்ஷன் உண்டா யாழ்..இல்லை இல்லையா..? அப்படி இருக்கும்போது என் வயிறு நிரம்பினால் உன் வயிறு எப்படி நிறையும்..? அப்படியே நான் சாப்பிடுறதைப் பார்த்திட்டே பட்டினியா இரு…” என்றவன் அவளருகில் இருந்த தட்டை தள்ளி வைத்து விட்டு அவள் வலக்கையை விடாமல் பிடித்திருந்தான்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்து பசி தாங்காதவள் முகம் சுருக்கி, “என்னப்பா நீங்க…நான் பசி தாங்க மாட்டேன்னு முதல் நாளே சொன்னேன் தானே…ப்ளீஸ் எனக்குப் பசிக்குது..” என கெஞ்ச
“எனக்காக தானே வெயிட் பண்ணின…நான் சாப்பிட்டாலே உன் பசி போயிடும் டா” என்று கூறிவிட்டு அவன் சாப்பிட துவங்க,
“என்னங்க…ப்ளீஸ்…” என அவள் மீண்டும் கெஞ்ச
“முதல்ல எங்க அம்மா ஏன் சாப்பாடு எடுத்து வைக்காம போய் தூங்குறாங்க தெரியுமா…?இப்படி தான் எனக்காக சாப்பிடாம இருப்பாங்க…அவங்களையும் நான் சாப்பிட விடமாட்டேன்..இது மாதிரி சாப்பிடாம இருந்து தான் பாசம் காட்டணும்னு கிடையாது சரியா….?” என கேட்க
“சரி சரி..என் தட்டை தாங்க..” என சிடுசிடுக்க
அவனும் சிரித்துக் கொண்டே “சாப்பிடுங்க பொண்டாட்டி..” என சொல்ல முகத்தை உம்மென்று வைத்தவள் வேகமாக சாப்பிடத் துவங்கினாள்.அவள் சாப்பிட்டு முடிக்கவும் இவன் அனைத்தையும் சுத்தப்படுத்தி கிச்சனில் கொண்டு போய் வைத்து விட்டு அறைக்குள் நுழைந்து கட்டிலில் பின்பக்கம் ஒரு தலையணையை வைத்து அதில் வாகாய் சாய்ந்து கொண்டவன்,காலை நீட்டி அமர்ந்து செல்பேசியில் வழக்கம்போல் செய்திகளைப் படிக்கத் தொடங்கினான்.
யாழ்முகை அறைக்கு வந்தபின் அவள் அமைதியாக இருக்க,அவளை வேகமாக இழுத்து தன் மடியில் அமர்த்தியவனிமிருந்து விலக அவள் முயற்சிக்க,
“என்னை விடுங்க…என்னை சாப்பிட விடாம டார்ச்சர் செஞ்சீங்களே..?” என கோபம் கொள்ள
“அடடா மேடமுக்கு அதான் கோவமா…? இங்க பாருடா யாழ்…பாசத்தை பட்டினி இருந்து தான் காட்டணும்னு இல்ல..அவங்க அவங்க பசிக்கு அவங்க தான் சாப்பிடனும்டா…”
“நீங்க வேற சாயங்காலம் கோச்சுக்கிட்டு போயிட்டீங்க..அதான் சாப்பிட்டா தூங்கிடுவேன்னு சாப்பிடாம உங்களுக்காக வெயிட் செஞ்சேன்…”
அவள் சொன்னதும் அவன் சிரிக்கத் துவங்க ,அவள் புரியாமல் விழிக்க
“இல்ல..நான்  எதுக்கு கோபமா போகணும்..?”
“நான்…நான்…உங்கிட்ட சண்டை போட்டேன்ல..சாரி…தெரியாம…ஏதோ கோபத்துல…அது….உங்க…..பிடிக்குமா…” என வார்த்தைகள் சரிவர கிடைக்காமல் திக்கித் திணற,
அவளை அப்படியே கை கொடுத்து தன் பக்கத்தில் அமர்த்தியவன் ,
“சொல்லு..ரிலாக்ஸா சொல்லு…என்ன நினைக்கிறியோ சொல்லிடுடா…பேசி தீர்க்க முடியாத பிரச்சனைனு ஒன்னு இல்ல..பட் பேசற விதம் இருக்கு..ஒருத்தர் கருத்து சொன்னா ஒருத்தர் கேட்கணும்..அது இல்லன்னா சண்டை வரும்.பேசறது வேஸ்ட்…கமான்..பேசு கண்மணி பேசு…” என அவன் வசனம் பேச
“நீங்க கையை எடுத்தா பேசுவேன்..” என்றதில் அவன் அவளை முறைக்க
அவன் தோளில் தட்டியவள் “அச்சோ….இப்படி கைப்பிடிச்சீங்கன்னா எனக்கு நார்மலா இருக்க முடியல..ப்ளீஸ்…அதான்…” என்று சொல்ல அவன் மாலை போல் சோஃபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்.
“பார்டர் தாண்டி வர மாட்டேன் மேடம்..நீங்க பேசுங்க..” என்றதும் அவள் பேசத் தொடங்கினாள்.
“எனக்கு முதல்ல இப்போ கல்யாணம் செய்ய இஷ்டமே இல்ல..அன்னிக்கு நீங்க பேசினப்போ சரி பெரியவங்க சொல்றதைக் கேட்டு நம்மைக் கல்யாணப் பண்ணிக்கிறார்னு நினைச்சேன்..ஆனா எனக்கு அது பிடிக்கல..பெரியவங்க சொல்றாங்கன்னு தான் நான் இஞ்சினியரிங் படிச்சேன்..அதுவும் எனக்குப் பிடிக்கல..இப்ப திரும்பவும் அப்படியே கல்யாணம்..ஒரு மாதிரி வாழ்க்கையே எரிச்சலா இருந்துச்சு..எங்க வீட்ல எல்லாரும் ரொம்ப டாமினேட்டிங்….பிரகாஷ்ராஜ் மாதிரி ஒரு விரல் சாய்ஸ் தான்..அதுவும் எங்க பெரியப்பா சொல்றதை  தான் எங்க வீட்டு நாய்க்குட்டி கூட கேட்கும்…அப்படி இருக்கப்போ எங்க லைஃப்ல எல்லா டிஷிசனும் அவர்தான்..அதுவும் ஆண்பிள்ளைங்கன்னா ஒரு ரூல்ஸ் பெண்பிள்ளைகள்னா ஒரு ரூல்ஸ்..”
மனைவியின் பேச்சை ஒரு அமைதியான முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.
“என் பெரியப்பா சாய்ஸ் நீங்க.அதனாலயே எனக்குப் பிடிக்கல…அதுவும் நீங்க ரொம்ப ஃப்ராங்கா பேசவும் எனக்கு ஒரு மாதிரி இரிடேஷனா பிடிக்காம போச்சு…அப்புறம் என்னைப் பிடிக்கல..பெரியவங்க சொன்னாங்க…அதான் வந்தேனு சொல்லவும் இன்னும் கோவம்..அப்புறம் எப்படியோ கல்யாணம் முடிஞ்சதும் நீங்க நல்லா ப்ரண்ட்லியா பேசினீங்க…அப்புறம் எனக்கும் உங்களைப் பிடிச்சது…ஆனா என்னோட எதிர்ப்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நீங்க இல்ல..ஆனாலும் சரி இதான் வாழ்க்கைனு ஏத்துக்க பழகினேன்…பட்  நேத்து ஒரு பொண்ணு வாய்ஸ் கேட்கவும் அதுவும் நடு ராத்திரியில் என்னால டாலரேட் செய்ய முடியல…எனக்கு உங்க நட்பு புரியுது…ஆனாலும் நானெல்லாம் ப்ரண்ட்ஸ்க்கு பத்து மணிக்கு மேல போன் செஞ்சதே இல்ல..நான் உங்களை சந்தேகப்படல..அது ஒரு மாதிரி பயமா போச்சு..” என தன் நடத்தைக்கான காரணம் விளக்கினாள்.
“அது பொசசிவ்நெஸ் பொண்டாட்டி..அது தப்பே இல்ல…நீ என்னை சந்தேகப்படல..பட் அதே சமயம் நம்பவும் இல்ல..அது தப்பு இல்ல..ஏன்னா கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல நான் நீ நம்பணும் எதிர்ப்பார்க்கிறது தப்புதான்.எல்லாரும் ஒரு சூழ்நிலைக்கு ஈசியா அடாப்ட் ஆக முடியுது…உன்  நிலைமை புரியுதுடா..சரி வேற எதாவது இருந்தா அதையும் சொல்லிடுடா..” என்றான் தன்மையாக.
“நீங்க இப்ப செஞ்சது கூட பிடிக்கல..நான் உங்களுக்குக்காக ஆசையா காத்திட்டு இருந்தா நீங்க என் மனசைப் புரிஞ்சிக்காம சும்மா விளையாடுறீங்க…சாப்பிடாம வெயிட் செஞ்சா கிண்டல் செய்றீங்க..” என குற்றப் பார்வையோடு சிணுங்க,
“ஹா ஹா…அது கொஞ்சம் மூளை சொல்றதையும் சில நேரம் கேட்கணும்டா…நீ என்ன சொன்னாலும் இதை ஒத்துக்க முடியாது அன்பைக் காட்ட ஆயிரம் வழி இருக்கு…சாப்பிடாம இருக்கறது இல்ல..சரியா..இனி இப்படி சாப்பிடாமல் இருக்க கூடாது…அது மாதிரி  நான் கோச்சுக்கிட்டு போவேன்லாம் நினைக்காத…அதெல்லாம் எனக்குப் பழக்கமே இல்ல..அந்த அயன் பாக்ஸூக்கு குள்ள வாத்துக்கும் கூட என் அட்வைஸ் இதான்…சண்டை போடணும்..செமையா போடணும்..சமாதானம் ஆகறதுதான் சண்டையோட நோக்கமா இருக்கணுமே தவிர பிரிஞ்சிப் போறதா இருக்க கூடாது…அதே தான் நமக்கும்…” என்றவனை அவள் விழியகல குறுகுறுவென பார்த்தாள்.
“திரு ரூல்ஸே தான்டி” என அவன் சிரிக்க
இவளும் அவனைக் கிண்டல் செய்யும் தோனியில் தலையை இடம் வலமாய் ஆட்டினாள்.
“அப்புறம் வேற என்ன பிடிக்காது…?”
“நீங்க என்னை செல்லமா கூப்பிட மாட்றீங்க..? “ என சிணுங்க
“வாட்..? செல்லமாவா..? எனக்குச் செல்ல பெயர் வைக்க வேலை வைக்காம மாமனாரே கண்மணின்னு பெயர் வைச்சிட்டார்..கண்ணம்மா பாரதியோட வார்த்தை..செல்லமா அவர் வைஃப் நேம்…அப்புறம் ஒரு பெரிய பொண்ணை பேபின்னு சொல்ற அளவுக்கு நல்ல மனசு எனக்கு இல்லயே….” என்று கிண்டல் செய்து அவன் சிரிக்க ,அவளோ
“இதுக்குத்தான் நான் சொல்லாம இருந்தேன்..பாருங்க…இப்போ ..இப்படி….” என முறைக்க
“அய்யோ..அதனால சொல்லாம இருக்காத….என்ன செய்றது ..? திரு அப்படியே வளர்ந்துட்டான்…ஓகே ….கமிங் டூ தி பாய்ண்ட்…செல்லப்பெயர் வைச்சுக் கூப்பிட்டாதான் பாசம்னு எந்த மடையன் சொன்னான்…என் ப்ரெண்ட்ஸ் கூட அவங்க மிஸஸை குட்டிம்மா,அம்மு,பேபிம்மா அப்படி இப்படினு கூப்பிடுவானுங்க…பட் எனக்கு அது செயற்கையா தெரியும்டா..கேட்டா ஸ்பெஷலா கூப்பிடுறேன்….யாரும் கூப்பிடாத நேம்..எனக்கு மட்டுமே..! அப்படி இப்படிம்பாங்க..பட் அம்முக்குட்டின்னு குட்டிமா எல்லாம் யாராவது ஒருத்தர் உலகத்துல சொல்லிட்டே தான் இருப்பாங்க..ஆனா உன்னோட பெயர்…உனக்கு மட்டுமே சொந்தம்…உன்னோட அடையாளம்..!!”
“ஐ அக்ரீ…பெயர்களும் பொதுவானவைதான்..நான் செல்லமா கூப்பிடலனு சொல்றியே….யாழ்முகை எவ்வளவு அழகான பெயர்..ஆனா உன் வீட்டு சோம்பேறிங்க கண்மணினு கூப்பிடுறாங்க…நான் எவ்வளவு ஸ்வீட்டா க்யூட்டா யாழ்னு கூப்பிடுறேன்..” என்று இலகுவான தொனியில் பேசியிவன் குரல் ஆழ்ந்து போய் ,
“நான் யாழ்னு உன்னை மனசோட ஆழத்துல இருந்து ஆத்மார்த்தமா ஒவ்வொரு தடவையும் கூப்பிடுறது ஏன் உனக்குப் புரியல??…” என்றான் சீரியசாக.
‘ஓஹ்..இதில் இப்படி வேற ஒரு கோணம் இருக்கா… நான் இதை யோசிக்கலயே…யோசிச்சா நான் திருவாகியிருப்பேனே..’ என்ற நினைக்க நெஞ்சம் இனிக்க அது முகத்தில் பிரதிபலிக்க அதை திரு உணர்ந்தான்.
“என்ன மனசுக்குள்ள திட்டுறியா நீ…? ஆனாலும் என்னால மாற முடியாது..நான் டாமினேட்டிங் தான்…ஆனா உனக்கு என்னை எப்படி கூப்பிடனுமோ கூப்பிடு…நோ இஷ்யூஸ்….பட் என்னால செயற்கையா இருக்க முடியாது…” என்றான் திடமாக.
“பிடிக்காதது எல்லாம் சொல்லிட்டேன்..பிடிச்சது சொல்லவா..?” என ஆசையாய் அவள் கேட்க, அவனும் தலையசைத்தான்.
“என்ன தான் நான் எவ்வளவு யோசிச்சும்..எது சொன்னாலும் கடைசியில நீங்க சொல்றதை என்னை ஒத்துக்க வைக்கிறீங்க…அது என்னவோ டாமினேஷன் தான் பட்..அந்த டாமினேஷன் பிடிச்சிருக்கு…” என சொல்ல அவன் முகத்தில் ரசனையான  ஒரு புன்னகை.
ஆள்வது ஒரு சுகம்..!அன்பால் ஆளப்படுவது பெரும் சுகம்…!!
“சரி..கைப்புள்ள எப்ப இந்த கோட்டைத் தாண்ட ஐடியா..? “என புருவம் உயர்த்தி  யாழ்முகைக் கேட்க
“உன்னை….கைப்புள்ளயா நான்…? “என்றபடி மெத்தையில் விழுந்து அவன் அவளை அணைத்துக் கொண்டு ,
“சந்தோசமா இருக்கணும்மா நீ…என்ன பிரச்சனைனாலும் சொல்லுடா…இப்படி மனசுல வைக்காதம்மா…ஓகேவா…”
“அய்யோ…நான் ஒன்னும் ஃபீல் பண்ணல..அது இந்த திருடனை ரொம்ப்ப்ப்ப பிடிச்சுப் போச்சா…அதான்…கொஞ்சம் ஃபீல் ஆகிட்டேன்..” என சொல்லி அவன் நெஞ்சில் சாய,
“நீங்க எப்பவுமே 100 % நேச்சுரலாவே இருங்க..அதான் எனக்கு உங்க கிட்ட ரொம்ப பிடிச்ச விசயம்…ஏன்னா சிலருக்கு முதல்ல நமக்கு கிடைக்காத எல்லாம் வேற ஒருத்தங்களுக்குக் கிடைச்சா ஒரு பொறாமை கோவம் வரும்….அப்புறம் கொஞ்ச நாள் ஆனா சரி நம்ம செய்ய முடியாத ஒன்னை இவங்க செய்றாங்க..தெய் ஆர் ப்ள்ஸ்ட்னு ஒரு எண்ணம் வரும்…அப்படிதான்..நீங்க இப்படியே இருங்க..அதான் எனக்கு சந்தோசம்..” என்றாள் கணவனை அவன் குணத்தை அதில் உள்ள சுகத்தை சுகமாய் உள்வாங்கி உணர்ந்து சொன்னாள்.
“நீ மட்டும் என்னவாம்..? எல்லாருமே கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவங்கதான்..சரி நீ ஏன் நேச்சுரலா இருக்க முடியாது..ஹ்ம்ம்…சொல்லு யாழ்மா..” என்றான் அன்போடு.
“ப்ச்..போங்க..நீங்க உங்களுக்குப் பிடிச்ச படிப்பு படிச்சீங்க..பிடிச்ச மாதிரி இருக்கீங்க…கல்யாணம் கூட தாத்தாவுக்காக செஞ்சாலும் யூ வெர் ப்ரீபேர்ட் ஃபார் இட்..இப்போ உங்க ஆசைப்படி உங்க கம்பெனி ஸ்டார்ட் செய்ய போறீங்க….நினைச்ச மாதிரி வாழ்றீங்க..என்னால அப்படியா..?” என தாங்கலாய் சொல்ல
“ஏய்….சரி..நீ என்ன படிக்க ஆசைப்பட்ட…சொல்லு..?”
“ஃபேஷன் டெக்னாலஜி….ஆனா எங்க சொந்தபந்தத்துல பொண்ணுங்க எல்லாம் சீக்கிரமே கல்யாணம் செஞ்சிக் கொடுத்துடணும்னு நினைப்பாங்க..பெரும்பாலும் யாரும் வேலைக்குப் போக மாட்டாங்க..சோ எதுக்கு படிக்க வைக்கணும்னு நினைப்பு..ஆனா இப்போ படிச்ச பொண்ணை தானே எதிர்ப்பார்க்குறாங்க அதனால படிக்க வைக்கிறாங்க..ஒரு டிகிரி..அதுவும் இப்ப இஞ்சினியரிங் என்னமோ ஆதார் கார்ட் மாதிரி வீட்டுக்கு ஒன்னு அத்தியாவசியமா இருக்கறதால  அதைப் படிக்க வைக்கிறாங்க…நான் ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறேன்னு சொன்னதுக்கு அதெல்லாம் வேண்டாம்…இதை படி…அப்ப தான் படிக்க வைப்போம்..இல்லன்னா கல்யாணம் செஞ்சுக்கன்னு சொன்னாங்க…அதான்..” என சோகமாக சொல்ல
“சரி விடுடா…போனதை விட்டுடனும்…நோ இஷ்யூஸ்….டாவோன்னு ஒரு அறிஞர் இருந்தாரு….அவர் ஒரு கதை சொல்லுவார்…ஒரு பெரியவரை ஆத்துல வந்த பெரிய சுழல் அடிச்சிட்டுப் போச்சாம்..அவ்வளவு வெள்ளமாம்…யாராலும் அவரைக் காப்பாத்த முடியல..அப்போ ஆச்சரியமா பார்த்தா மறுகரையில் அவர் வந்தாராம்..எப்படி பிழைச்சீங்கன்னு கேட்டதுக்கு ‘ நான் என்னை முழுவதுமாக இந்த சுழலிடமே கொடுத்து விட்டேன்…எதிர்க்கவில்லை.அதனால் அப்படியே அது என்னை கரை சேர்த்து விட்டது’ அப்படின்னு சொன்னாராம்..சோ நீ வாழ்க்கையில எதிர்ப்பார்க்காத…அது நடக்கலன்னா கஷ்டமா போகும்..நம்மை அப்படியே வாழ்க்கையை அதன் போக்குல அழகா வாழணும்…லெட்ஸ் செலிப்ரேட் திஸ் மினிட்..” என சொல்ல
“அப்படியே பண்ணிட்டாலும்…கதை சொல்லியே பாதி நைட் போச்சு…” என யாழ்முகை விசமமாய்ச் சொல்ல
அவளை இன்னும் இறுக்கி அணைத்தவன் ,”அடியே திரு ரூல்சே உனக்குத் தெரில…போனதை விட்டுடனும்…பாதி நைட் போனால் என்ன..மீதி நைட் இருக்கே யாழ்மா…” என்றவனின் குரல் கிசுகிசுப்பாய் ஒலித்தது.
***********************************************************************************
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் மிகவும் ஆவலாய் எதிர்ப்பார்த்த ,அதுவும் குறிப்பாக யாழ்முகைக்குக் கணவனைப் பிடித்த பின் போகும் முதல் பயணம்…தேனிலவு என்பதால் மகிழ்ச்சியாக இருந்தாள்.ஆனால் அது எல்லாம் ரெயில் நிலையம் செல்லும் வரையில் தான்.
போகும் முன் அவன் செய்த வேலையில் அவள் மீண்டும் மலையேறினாள்.

Advertisement