Advertisement

கண்மணி 4:
ஊரெல்லாம் வெள்ளக்காடாய் இருக்க,எங்கும் மழை..மழை…மழை மட்டுமே..! இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய புயலை நினைவுப்படுத்தும் வண்ணம் தம்மக்களை நனைக்கவென இரவெல்லாம் ஓயாத அடித்த மழையால் சாலைகளில் வழமைப் போல் தண்ணீர் தேங்கி இருக்க…காரை செலுத்துவதே திருவுக்கு பெரும்பாடாய் இருக்க…ஒருவழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றவன் இவாஞ்சலின் இருக்கும் இடம் அறிந்து அவளை அழைக்கச் சென்றான்.
அந்த வானின் மேகம் போல் கருமையும் கலக்கமும் சூழ் முகத்துடன் இருந்த இவாஞ்சலின் இவனைக் கண்டு நிம்மதி அடைந்தாள்.
இவாஞ்சலின்..! இவாஞ்சலின் அயன் வில்லியம்ஸ்.அயனும் இவாவும் திருநாவுக்கரசனின் தோழமைகள்.அவனது பிஸீனஸில் இனி இவர்களும் பங்குதாரர்கள் கூட.அயன் திருவுக்குப் பள்ளி முதலே நண்பன் என்றால் இவாஞ்சலின் கல்லூரித் தோழி.இவாவும் அயனும் ஒருவரை ஒருவர் விரும்பி இப்போது சில மாதங்கள் முன்பு தான் பெரியவர்களின் அனுமதியுடனும் விருப்பத்துடனும் திருமண வாழ்வில் இணைந்தனர்.
தீடீரென இவாஞ்சலின் இன்னேரத்தில் அழைப்பாள் என நினைத்துப் பார்த்திராதவன் அவள் மழையில் மாட்டிக் கொண்டு இருக்கும் நேரம் எதையும் பேசி ப்ரயோஜனமில்லை என்ற காரணத்தால் அவளின் கைப்பிடித்து வேகமாக காரை செலுத்தினான்.ஒருவழியாக அவர்களின் ப்ளாட் இருக்கும் பகுதிக்கு வந்தவன் காரை கார் பார்க்கிங்கில் நிறுத்தினான்.
இவாஞ்சலினுக்கும் அயனும் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாய் சண்டை.அவன் சண்டைப் போட்டு விட்டு சென்று விட கோபத்தில் பிறந்த வீடு செல்லலாம் என நினைத்து இவள் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வர அங்கோ வெள்ளக்காடாய் இருக்க…அவள் ஊருக்குச் செல்லும் பேருந்து இல்லை…என்ன செய்வது என்று புரியவில்லை அப்போதும் கணவன் மீது உள்ள கோபம் போகாததால் தனது தோழனுக்கு அழைத்தாள்.
காரை அவர்கள் ப்ளாட்டின் கார்பார்க்கிங்கில் நிறுத்தியவன், “என்னாச்சு எதுக்கு இந்த நேரத்தில நீ பஸ் ஸ்டாண்ட் போன..?” என அதட்ட
“நான் பதினொறு மணிக்கெல்லாம் போயிட்டேன்.ஆனா பஸ் வரல…என்ன செய்யனு புரியல….பயமா இருந்துச்சு…அங்க தனியா இருக்க முடியும்னு தோணல..அதான்..உனக்குக் கூப்பிட்டேன்..” என  மெல்லமாய் சொல்ல
“உனக்கு ஆண்டவன் அறிவுனு ஒண்ணு படைச்சானா..இல்ல அவசரத்துல உள்ள வைக்காம அனுப்பிட்டானா…?..லூசு…நீ என்னை எப்படி கூப்பிட்டேன்னா  நான் கேட்டேன்..இப்ப ஏன் பஸ் ஸ்டாண்ட் போன..?” என அவன் சத்தம் போட
“அது அவன் கூட சண்டை…இப்ப கூட பாரு…அவன் எனக்கு இவ்வளவு நேரமாகியும் போன் செய்யல..அவ்வளவுதான் உன் ப்ரண்டோட அக்கறை..லவ் பண்ணும்போதுதான்.பின்னாடி சுத்தினான்..இப்ப எதுவும் இல்ல..” என அழ
“ஷ்….ஐ ஹேட் பீப்பீள் க்ரையிங்…..யூ நோ தட் ரைட்….அழாத…சண்டைனா ஒன்னு சமாதானம் செய்யனும்….இல்லையா திருப்பியும் சண்டை போடணும்….சமாதானம் ஆகறவரை போடணும்…ஆனா அது வீட்டுக்குள்ள நடக்கணும்..நாட் லைக் திஸ்…அவன் போன் பண்ணலன்னா என்ன சிட்டிவேஷனு யோசி…டோண்ட் பீ ஜட்ஜ்மெண்டல்…” என அட்வைஸ் செய்ய
“போடா..என்ன இருந்தாலும் உனக்கு அவன் தானே க்ளோஸ்….அதான் என்னை திட்டி அவனுக்கு சப்போர்ட் பண்ற..யூ ..இடியட்..” என திட்ட
“முதல்ல வா….நீ….எனக்கு ப்ரண்ட்ஸ் எல்லாருமே ஒண்ணுதான்..பையன்றதால சில விசயம் அவனோட க்ளோஸா இருப்பேன்..தட்ஸ் இட்….நீயும் எனக்கு முக்கியம் தான்…மேல வா…அவனை போய் நாலு அடி விடுறேன்..” என அழைத்துச் செல்ல
“வேண்டாம்..வேண்டாம்… நானே போய்க்கிறேன்..நீ வீட்டுக்குப் போ…தேங்க்ஸ்டா திரு….இந்த டைம்ல வந்ததுக்கு…” என ஆத்மார்த்தமாய் சொல்ல
“குவா…அடிவாங்காம போய் டோர் திற….உன் புருஷனுக்குக் கொடுக்க வேண்டிய அடியை உனக்குக் கொடுக்க வைக்காத என்ன…?நான் வருவேன்னு தானே எனக்குக் கால் செஞ்ச..அப்போ ஐ ஷூட் கீப் அப் தி ட்ரஸ்ட்…ரைட்…தேங்க்ஸ்லாம் ஒன்னும் வேண்டாம்..” என்றபடியே அவளை படிகளில் பின் தொடர்ந்தான்.
அங்கே சென்று பார்த்தால் வீட்டில் அயன் இல்லை.இன்னும் அவன் வீடு வரவில்லை.
திருவோ ஈரமாக இருப்பதால் வாசலிலே நின்றுகொண்டு , “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க இரண்டு பேரும்… நீ பஸ் ஸ்டாண்ட்..அவன் டிரெய்னா இல்ல ப்ளைனா..?சொல்லு இவா..” என கூலாய்க் கேட்க அவளோ அழத் தொடங்கி விட்டாள்.
“ஹே லூசு …அழாத…சில்…சும்மா தான் சொன்னேன்…ஐ வில் ட்ரை டூ ரீச் ஹிம்…” என்றபடி அயனுக்குப் போன் போட அவன் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
“அவனுக்கு என் மேல கோவம் போகல..அதான்…அவன் போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சுட்டான்..எனக்குப் பயமா இருக்கு…” என கவலைக் கொள்ள
“குவா..! உனக்குக் கன்பார்மா பேக்கேஜிங் டிஃபெக்ட் தான் மூளையை கடவுள் வைக்க மறந்துட்டார்…பாரு முதல்ல உனக்கு அவன் மேல கோவம்னு சொன்ன..இப்ப அவனுக்கு உன் மேல கோவம்னு சொல்ற…அடிக்கிற மழையில..ஹி மைட் பீ ஸ்ட்ரக்…சோ நீ டென்ஷன் ஆகாத….நைட் நான் வீட்டுக்கு வரும்போதே செம மழை..” என்றபடி அயனின் அலுவலக நண்பன் ஒருவனுக்குப் போன் செய்ய நல்ல காலம் அவன் எடுத்தான். அவனிடம் அயன் பற்றி விசாரிக்க,அவன் போனை அயனிடம் கொடுத்தான்.
“டேய்….திரு…இங்க ஆபிஸ்ல ஒரு ப்ராஜ்க்ட்னால டீலே ஆயிடுச்சு..கிளம்பலாம்னு பார்த்தா இங்க கீழ ரோட்ல தண்ணி ஓடுது…பவர் கூட ஆஃப்..என் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுடா…அவளுக்கு ட்ரை பண்ணினேன் நாட் ரீச்சபிள்னு வந்துச்சு.. கடைசியில் இவன் போன்லையும் பண்ணேன்..நோ யூஸ்…உனக்கு லைன் போனா…நீ அவட்ட சொல்றியாடா..பாவம் ஷி வில் பீ அலோன்…” என அயன் சொல்ல
“சாரி..அயன்..” என்று மென்மையான குரலில் சொன்னாள் இவாஞ்சலின்.
“ஹே..ஏஞ்சல்….நத்திங்டா…ஐ வீல் பீ பேக் ஹோம்….நாளைக்கு விடிஞ்சதும் ஐ வில் கம்…எப்படியாவது இன்னிக்கு மேனேஜ் பண்ணிடுடா…திரு அங்க இருக்கானா..?முடிஞ்சா அவனை ஸ்டே பண்ண சொல்லு…”என சொன்னான் அயன்.
சில சமயம் வேலைக் காரணமாய் அயனுடனும் இவாவுடனும் திரு தங்கியிருக்கிறான்.அதனால் தான் தயங்காது அப்படி அயன் கேட்டான்.இன்று அவன் இல்லாத போதும் அதையே சொன்னான் அயன்.
அதுதான் அவர்களின் நட்பின் பிணைப்பு.தன் மனைவி அதுவும் தன்னோடு சண்டை போட்ட மனைவிக்குத் துணையாய் தன் நண்பனை இருக்கச் சொன்னான்.ஆணும் பெண்ணும் தனித்து இருப்பார்களே என்ற அச்சமோ சந்தேகமோ அவனுக்குத் துளி கூட கிடையாது.அவன் நண்பன் மீதும் மனைவி மீதும் கொண்ட நம்பிக்கை அத்தகையது.
திரௌபதியை அவமானப்படுத்திய துரியோதனன்  கூட மனைவியையும் கர்ணனையும் ஒன்றாய்க் கண்டு ‘எடுக்கவா..? கோர்க்கவா..?’ என்று கேட்டானே..! நட்பின் ஆழம் அது..!!
நம்பிக்கை அந்த ஒன்று இருந்தால் போதும் ஆயிரம் சண்டை வந்தாலும் அவர்கள் உறவில் ஓட்டை விழாது.
அனைத்தையும் அலைப்பேசி வாயிலாய்க் கேட்ட திரு ,”டேய்..நீ உன் ஏஞ்சலைக் கொஞ்சுனது போதும்….எனக்கும் கல்யாணம்னு ஒன்னு ஆச்சு…முன்னாடி போல பேச்சுலர் தடிமாடு இல்ல நானு…வீட்ல வேற தூங்கிட்டு இருந்தாங்கன்னு நான் சொல்லாம வந்துட்டேன்….சோ  நான் இப்படியே உத்தரவு வாங்குக்கிறேன்…நீ காலையில லேட்டானாலும் பரவாயில்ல..சேஃபா வா…அதான் முக்கியம்..அண்ட் இங்க உன் சம்சாரமும் உன்னை தேடல…அதனால நீ கவலைப்பட வேண்டாம்டா…..” என சொல்லிக் கொண்டே போக ,திருவின் தலையில் குட்டியவள்,
“நோ நோ அயன்..நீ சீக்கிரமே வா…இவன் பொய் சொல்றான்…ஐ மிஸ்…யூ..” என சொல்ல
“சரிம்மா வந்துடுறேன்…ஆமா… டேய் திரு நீ என்னடா இந்த நேரத்துல…? பயந்து போய் உன்னைக் கூப்பிடாளா..?”
“ஆமா…ஆனா உன்னையும் உன் வீட்டம்மாவையும் கவனிக்க வேண்டி இருக்கு…இப்ப வேண்டாம்… நாளைக்குப் பேசலாம் அதை…சரிடா..இவளுக்குத் தனியா இருக்க பயம்னா நான் வேணும்னா எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகவா…இப்ப  மழை கூட குறைஞ்சிடுச்சு…இவளும் தனியா தானே இருப்பா..” என திரு அக்கறையுடன் சொல்ல,
“இல்லடா…ஐ வில் மேனேஜ்..ஒன்னும் பயமில்ல..” என இவாஞ்சலின் மறுத்தாள்.அடுத்த நாள் விடியலில் கணவனைக் காண வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.அதன்பின் அயனுடன் பேசி விட்டு திருநாவுக்கரசு இவாஞ்சலினை பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு கிளம்பும் முன்,
“உன்னையெல்லாம் வைச்சிட்டு காலம் தள்ளப் போற என் நண்பனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்…!!என்னம்மா பல்டி அடிக்கிற நீ…? இவ்வளவு  நேரம் அவனை விட்டு ஊருக்குப் போறதுக்கு ரெடியான..இப்ப என்னடானா அவனைப் பார்க்கணும்னு என் கூட வர மாட்டேங்குற…ஹ்ம்ம்….வெரி ஸ்டெரெயிஞ்ச்….பொண்ணுங்க சைக்காலஜி கஷ்டம் தான்…” என கிண்டலடிக்க
“ஓவரா செய்யாதடா…இப்படி என்ன சொல்லிட்டு இருக்க..அங்க உன் வீட்டம்மா எப்படி..?கல்யாணத்துல பார்த்தது”
“ஹே..! அவ உன்னை மாதிரி லூசு கிடையாதும்மா..ஷி இஸ் சோ ஸ்வீட்…குட் கேர்ள்..” என மனைவியை புகழ
“ஆஹான்…!வழியுதுடா..ஏற்கனவே வெளியில வெள்ளம்..நீயும் இன்னும் வரவைக்காத…” என அவளும் சரிக்கு சரி வாயடிக்க
“சரி சரி… நாளைக்கு வந்து பேசுறேன்…அவனும் இருக்கும்போது கூப்பிடு..உனக்கு இருக்கு அப்போ..டேக் கேர்..எதுனாலும் கூப்பிடு “ என்றபடி போனான்.
திருநாவுக்கரசு என்னதான் விளையாட்டாய்ப் பேசினாலும் எல்லா விசயத்தில் மிகவும் சரியாக இருப்பான். இன்று சண்டை போட்டதற்கு நாளை இருவரையும் உண்டு இல்லையென செய்துவிடுவான் என அவளுக்குப் புரிந்தது…இவ்வளவு நேரம் சகஜமாய் இருந்தது கூட அவள் மன நிலையை மாற்றவும் இப்போது பேச வேண்டாம் என்பதற்காகவும் என்பதை அவனது தோழி  நன்குணர்ந்து கொண்டாள்.
ஒருவழியாக அவன் காரோடு வீட்டிற்குக் கரை சேர்ந்த போது மணி அதிகாலை மூன்றரை.வந்தவன் நேராக குளியறைக்குள் சென்று குளித்து விட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தான்.ஆனால் அவன் மனைவியோ அவனின் செயல்களை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு விடியலுக்காக உறங்காமல் காத்திருந்தாள்.
காலையில் வழக்கம்போல் எழுந்த திரு குளித்து விட்டு உணவுண்ண வந்தான்.யாழ்முகையோ மனதில் சுள்ளிகளின்றி எரிந்த கோபத் தீயில் கனன்றாள்.வந்தவன் சாப்பிட்டு விட்டு இவளிடம் சொல்லிக் கொண்டு தனது வேலையைப் பார்க்க வெளியில் சென்றான்.
ஒளிவுமறைவே இருக்க கூடாது என்றவன் இன்று எதையுமே சொல்லாமல் செல்லவும் யாழ்முகைக்குக் கோபம் அதிகமானது அதையும் விட ஏமாற்றம்…சிறிதாய் இவன் எதாவது தவறு செய்கிறானோ என்ற பயம்.
மாலையில் அவன் இவளிடம் சகஜமாகப் பேச இவளோ வெளிப்படையாகவே அவனிடமிருந்து விலகிப் போனாள். காரணம் தெரியாமல் திருவும் அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்க,அவள் முகத்தில் எந்த வித பாவனையும் காட்டாமல் அமைதியாகவே இருந்தாள்.அது திருநாவுக்கரசுக்கு புரிய
“என்னாச்சு…யாழ்…ஏன் ஒரு மாதிரியா இருக்க..?என்ன பிரச்சனை உனக்கு..? பேசினால் மதிக்காம இருக்க..நீ..?எதுனாலும் எங்கிட்ட சொல்லுடா..”
“பேச பிடிக்கல…பேசல..”
“அதான் ஏன்…?” என்றான் அழுத்தமாய்.
அவளோ ,”பிடிக்கலனு சொல்லிட்டேன்ல..” என்றபடி அவர்கள் அறையை விட்டு வெளியே போக முயல, அவள் காலையிலும் முகம் கொடுத்து பேசவில்லை என்பது மண்டையில் உரைக்க எப்போதுமே பிரச்சனைகளை வளரவிட விரும்பாத திரு அவளின் கைப்பிடித்து சரசரவென இழுத்துக் கட்டிலில் தள்ளினான்.
அவன் அவளை இழுக்க மட்டுமே செய்தான்.ஆனால் அவள் முரண்டு பிடித்து வெளியே செல்ல எத்தனிக்க கொஞ்சம் பளு கூட்டி இழுக்க ,அவளோ அதைத் தாங்காது அப்படியே விழுந்து விட்டாள்.
அவனது செயலில் காயமுற்றவள் ,வழக்கம்போல் கேகே…அதான் அவளது கற்பனை குதிரையைக் கிண்டி ரேஸ் வேகத்தில் ஓட விட, கண்கள் தானாய் அருவியென அழுகையை உற்பத்தி செய்தது.
அவளது அழுகைக் கண்டு பதறிய திருநாவுக்கரசன் அருகில் சென்று அவள் கையைப் பிடிக்கப் போக… உடனே பின்னால் நகர்ந்தவள்,
“ப்ளீஸ்…. நான் உங்களை நல்லவன்னு நினைச்சிருக்கேன்….இப்படி செய்யாதீங்க…” என தேம்பலோடு சொல்ல
‘அய்யோ..’ என தலையில் கை வைத்து அங்கிருந்த  சோஃபாவில் அமர்ந்து கொண்டவன் மனைவியின் எண்ணங்கள் போகும் வேகத்தில் திகைத்தான்.
“யாழ்..யாழ்..! யாழ்முகை…..என்னை பாரு…” என்று கத்த அதில் அரண்டவள் ,
“ஒரு பெண்ணை அதுவும் என்னோட பெட்டர் ஹாஃபை இப்படியெல்லாம் நான் சாகுற வரைக்கும் டீரிட் செய்ய மாட்டேன்…அந்த நம்பிக்கை இருந்தா நான் சொல்றதைக் கேளு..முதல்ல அழாம கண்ணைத் துடை…லிஸன் டூ மீ….ப்ளீஸ்டா..” என பொறுமையாக சொல்ல அவளும் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“நீ நினைக்கிற மாதிரி நான் நல்லவன் தான் டா…இப்ப என்னாச்சுனு நீ இவ்வளவு சீரியஸா இருக்க..எப்பவும் நீ என்னை மனசுல திட்டுவ…இன்னிக்கு இப்படி ஓபனா வெளியே திட்டுற..கோவப்படுற..உரிமையா நடந்துக்கிற ஐ லைக் இட்..ஆனா நான் என்ன செஞ்சேன் உன் மனசு வருத்தப்படுற மாதிரி…”
அவளும் மௌனமாகவே அமர்ந்திருந்தாள்.கண்ணில் நீர் இல்லை.ஆனா கலக்கம் மட்டும் அப்படியே..!
“நமக்குள்ள நோ சீக்ரெட்ஸ் சொன்னேன் தானே டா…சொல்லு யாழ்மா..” என்றதுதான் போதும்.வெடித்தாள் அந்த கணம்..!!
“என்ன நோ சீக்ரெட்ஸா…? நீங்க மட்டும் அதை ஃபாலோ செய்றீங்களா..? நடுராத்திரில ஒரு பொண்ணு போன் பண்றா..நீங்களும் போயிட்டு இரண்டு மணி நேரம் கழிச்சு வர்றீங்க….வந்தும் கூட எதுவும் சொல்லல..நான் என்னனு நினைக்கிறது..” என்றாள் சத்தமாகவே.
ஒரு நொடி திருநாவுக்கரசனுக்கு நெஞ்சுக்குள் சிறு பிரளயம் தான்.இதுவரை அவன் மனைவியை இப்படி பார்த்தது இல்லையே…ஆனால் அவள் கேள்வியும் அதில் தொக்கி நின்ற அர்த்தமும் அவன் மனைவியின் எண்ணப்போக்கும் புரிய அதை தாங்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது.
ஆனாலும் சிறு நம்பிக்கையாவது கணவன் மேல் இருக்க வேண்டாமா என்ற கோபம் வந்த வேளையில் நம்பிக்கை  தரும் வகையில் என் செயல்பாடுகள் இருந்திருக்கிறதா? அவளுக்கு நான் அதைக் கொடுத்திருக்கிறேனா..? என்று யோசித்தான்.
அதுதான் திருநாவுக்கரசு.எப்போதுமே எந்த ஒரு விசயத்தையும் அறிவால் அணுகுவான்.முதலில் சுயபரிசோதனை செய்து அவ்விசயத்தில் அவன் மீது தவறிருக்கிறதா இல்லை இருக்க வாய்ப்பிருக்கிறதா என்று யோசிப்பான்.எடுத்தவுடன் யாரையும் குற்றம் சாட்டமாட்டான்.
அந்த தெளிவு இருக்கப்போய் தான் மனைவியின் செயலில் இவ்வளவு தூரம் அமைதியாக இருந்தான்.
“ஓஹ்…இதான் விஷயமா..? சரி நான் முதல்ல சொல்லாம இருந்த காரணத்தை சொல்லிடுறேன்..அப்புறமா அது ஓகேனா காரணத்தை சொல்றேன்.ஏன்னா நீ என்னை முதல்ல நம்பணுமில்ல..அப்புறம் நான் காரணத்தை சொல்லியும் நீ நம்பலன்னா..? “ என்றவன் மேலே தொடர்ந்தான்.
“நேத்து நைட் நான் வந்தப்போ நீ தூங்கிட்டு இருந்த…போன் வந்தப்பவும் நீ கண்ணை மூடிட்டு தான் இருந்த..அதாவது தூங்கற மாதிரி நடிச்சிருக்க..அது இப்ப தான் எனக்குப் புரியுது..நீ முழிச்சிட்டு இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா   நான் உங்கிட்ட சொல்லிட்டே போயிருப்பேன்…சரி தூங்கிற உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் சொல்லல…சோ நான் வெளியே போனது உனக்குத் தெரியாதுனு நான் காலையில் கூட சொல்லாம விட்டேன்.ஆனா அம்மா கிட்ட சொல்லிட்டேன்…அது அவங்க காலையில கார் ரொம்ப சகதியா இருக்கவும் கேட்டாங்க அதான் சொன்னேன்.. நீயும் கேட்டிருந்தா மறைக்காம நான் சொல்லியிருப்பேன்.. நீ கேட்டியா எங்கிட்ட?”
வினாக்களின்றி விடையேது….??
அதுவே அங்கே அவளயறியாத விடுகதையானது…!!

Advertisement