Advertisement

கண்மணி 3:
அடுத்த நாள் காலையில் யாழ்முகை மணி எட்டாகியும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, திருநாவுக்கரசன் எழுந்து குளித்து விட்டு மனைவியின் அருகில் செல்பேசியில் அன்றையை செய்திகளை ஆன்லைனில் வாசித்துக்கொண்டே படுத்திருந்தான்.
நேரமாகியும் அவள் எழாமல் இருக்க,”யாழ்மா…யாழ்…எழுந்திரு..” என சொல்ல யாழ்முகையோ நித்திரை கலைந்து கண்களை சுருக்கி இயல்புக்கு வர முயன்றாள்.பின்பு தான் நேற்றைய திருமணம் அதைத் தொடர்ந்த இரவு எல்லாம் நினைவுக்கு வர,தயக்கமும் நாணமுமாய் அவனை ஏறிட,
அவனோ செல்பேசியை மேஜையில் வைத்து விட்டு ,மனைவியின் நெற்றியில் முட்டி, “என்னங்க பொண்டாட்டி மேடம்..?கொசுவர்த்தி சுத்தினெதெல்லாம் போதும்…மணி எட்டரை ஆகப்போகுது..கொஞ்சம் சீக்கிரம் ரெடியானீங்கன்னா நானும் வெளியே போவேன்..” என திரு சொல்ல
“சாரி…சாரி..” என்றபடி அரக்க பறக்கத் துணியை எடுத்துக் கொண்டு குளியறைக்குள் புகுந்தாள்.குளித்து விட்டு புடவையை ப்ரயர்த்தனப்பட்டுக் கட்டிக் கொண்டவள் கணவனிடம் ,
“சாரிங்க…நான் லீவ் நாள்னா கொஞ்சம் லேட்டா எழுந்திருப்பேன்..அதான்…” என தாமதத்துக்குக் காரணம் சொல்ல
“விடுமா…இவ்வளவு ஃபார்மலா ஏன் இருக்க?…இன்னிக்கு நாம எப்போ எழுந்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க…ஆனா டெய்லி நைட் நான் உன்னையும் தூங்க விடாம நானும் தூங்க மாட்டேன்…பட் காலையில சீக்கிரமா எழுந்திடனும்..ஓகேவா..?” என கண் சிமிட்ட ,அவளோ இதுக்கு என்ன மாதிரி பிரதிபலிப்பது என்றறியாமல் தலைகுனிந்து இருக்க அவளது தாடையில் கைவைத்துத் தலை நிமிர்த்தியவன்,
“இங்க பாரு யாழ்..எனக்கு யாரா இருந்தாலும் தலை குனிஞ்சா பிடிக்காது..”  என்றான் கண்டிப்போடு.
அவனது கண்டிப்பால் கன்னி மனம் சுணங்கியது.ஏதோ டீச்சரிடம் மாட்டிக் கொண்ட உணர்வு தான் அவனருகில்.
‘இவன் பேசுறதுக்கும் நைட் செஞ்சதுக்கும் அப்படியே தலை நிமிர்ந்து நான் இவனைப் பார்க்க முடியுமா…? லூசு லூசு..பார்த்தாலே கூச்சமா வருதே…முருகா…என்னைக் காப்பாத்து..’ என ஆண்டவனிடம் அவளது ஆப்லிகேஷனை அப்ளிகேஷனாய் அனுப்பி விட்டு கணவன் முகம் நோக்க,
“நீ என்னோட பெட்டர் ஹாஃப்…சோ என்னை விட பெட்டரா இருக்கணும்…இப்படி ஷையா வெட்கப்பட்டுட்டு இருக்காதே..தைரியமா இருக்கணும்..தென் ஒன்லி ஐ வில் லைக்” என்றான் அதே மிலிட்டரி தோரணையோடு.
அவனுக்குப் பெண்ணவளின் நுண்ணிய நுணுக்கங்கள் புரியவில்லை.அவனைப் போல் வெகுவிரைவாக அவளால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைப் பொருத்திக் கொள்ள தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட அது முடியாத ஒன்றாயிற்றே…!
இவனுக்கு அது அவனது சொந்த வீடு. அவனது அம்மா,தாத்தா என்று உறவுகளோடு இருக்கிறான்.ஆனால் அவளைப் பொருத்தவரையில் அவள் தாலி என்ற  நிரந்தர விசா வாங்கி புதிதாய் ஒரு அன்னிய தேசத்துக்குள் நுழைந்த நிலைதானே..!
நேற்று இரவு அவன் காட்டிய புதுவித உணர்வுகள்,அதன் தாக்கங்கள் இவற்றிலிருந்து அவள் இன்னும் மீளவில்லை.அவள் வளர்ந்த முறை பின்பற்றும் கலாச்சாரம் அதன் அடிப்படையில் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை.
ஆனால் திருநாவுக்கரசனுக்கோ அவள் இயல்பாய் இல்லாதது பிடிக்கவில்லை.அவனைப் பொருத்தவரை விலங்குகளே அதனதன் இயல்போடு இருக்கும்போது மனிதர்களும் அப்படி இயல்பாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம்..!
பல நாடுகள் சுற்றியவன், பல மனிதர்களை அவர்களுக்குள் இருக்கும் வெவ்வேறு குணங்களைக் கண்டவன் அவன். சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னைப் பொருத்திக் கொள்ளுதல் என்ற பண்பு ஒவ்வொருக்கும் மாறுபடும்.அவனைப் போலவே மனைவியும் இருக்க வேண்டும் என்பது என்ன நியதி..?
யாழ்முகை அவன் வாயிடமிருந்து அவள் வயிற்றிடமிருந்தும் தப்பிக்க நினைத்தாள்.பசி வேறு எடுத்தது.அவளால் பசி தாங்க முடியாது.
“அத்தை தேடுவாங்க…இவ்வளவு நேரம் ஆச்சுன்னா தப்பா நினைப்பாங்களே..நான் போகவா..?” என தயக்கத்துடனே கேட்க
அத்துடன் விட்டானா அவன்..???
“ஆங்….முக்கியமான விசயம் யாழ்..எப்பவுமே இதை நீ நினைவில வைச்சிக்கோ….என்னிக்குமே உனக்கு நான் முக்கியமா இல்லை உங்க அம்மா முக்கியமா..??அப்படி மீன் செய்ற கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்க கூடாது..இப்ப கூட நீ அம்மா கிட்ட பயப்பட தேவையில்லை…ஒருத்தங்கட்ட நீ எதை காட்றியோ அதை தான் அடுத்த முறை உங்கிட்ட எதிர்ப்பார்ப்பாங்க..சோ  நீ என் அம்மாக்குப் பயப்படத் தேவை இல்லை..அன்பா இருந்தா போதும்…ஐ லிட்ரலி ஹேட் தட் மாமியார் மருமகள் சண்டை..”
“சோ…இது உன் வீடு…நீ எல்லா உரிமையோட இங்க இருக்கலாம்…அண்ட் அட் எனி காஸ்ட் எந்த பிரச்சனையா …ஐ மீன் பிரச்சனைனு இல்ல..எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லிடு…நம்ம இரண்டு பேருக்குள்ள எந்த ஓளிவு மறைவும் இருக்க கூடாது.அண்ட் நானும் அப்படியே செய்வேன்”
‘என்னைப் பார்த்தா சண்டை போடுற மாதிரியா தெரியுது..?லூசு..முதல் நாளே என்னை பசியில மயக்கம் போடுவ வைச்சிடுவான் போல இருக்கு…அட்வைஸ் பண்ணாலே நான் அரை கிலோமீட்டர்  ஓடி போறவ..என்னைக் கூப்பிட்டு வைச்சு கொல்றியே புருசா..?எனக்குப் பசிக்குதே…இப்ப இந்த டிஷ்கஷன் தேவையாடா…உனக்குப் பேர்லையும் நாக்கு இருக்குன்னு ரெண்டு பேருக்கும் சேத்து நீயே பேசுவியா..அப்பனே முருகா பசி என்னை வதைக்கிறேதே’ என அவள் மனதிற்குள் அலறினாள்.
“என்னடா இவன் இப்பவே இதெல்லாம் சொல்றானேன்னு பார்க்கிறியா..? என்னைப் பொருத்தவரை இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது..எப்பவுமே ஒரே பேச்சுதான்..” என ஸ்டைலாய் சொன்னவன் ,
“இங்க பாரு யாழ்மா…ஸ்கூலோ காலேஜோ சேர முன்னாடி எல்லா ரூல்சையும் சொல்லிடுவாங்க..எதுக்கு ரூல்ஸை மீறக்கூடாதுனு..அதே தான்.சோ அம்மாகிட்ட அன்பா நடந்துகோ…”
‘ஓ…திரு ரூல்ஸா..’ என மனதில் நினைத்தவள், ஈஈஈ என்று வாயை விரித்து வைத்து அவனைப் பார்க்க,அவளை அருகிலிழுத்தவன் அவள் தோளில் கைப்போட்டு,
“என்ன பொண்டாட்டி..என்னை மனசுக்குள்ள நிறையா கலாய்ச்ச போல…முகமே சரியில்லையே கேடி..” என சொல்ல திருதிருவென அவள் முழித்தாள்.
அந்த முழிப்பே அவளை காட்டிக்கொடுக்க,”மாட்டினியா..சும்மா தான் கேட்டேன்..அப்போ உண்மையாவே என்னைக் கலாய்ச்சியா….?என்ன  நினைச்ச சொல்லு…?” என கேட்க அவள் திட்டிய லூசைத் தவிர அப்படி இப்படி கொஞ்சம் மனதில் உள்ளதை சுருக்கி சொல்ல,
“ஹா ஹா ஹா..” என வாய் விட்டு சிரித்தவனின் சத்தம் வெளியே கேட்டுவிடுமோ என பயந்தவள் அவன் வாயை அனிச்சையாக மூடி,
“ப்ளீஸ்பா…எனக்குப் பசிக்குது..ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப……..” என பாவனையாய் சொல்ல
“அச்சோ..சாரிடா…வா வா…சாப்பிடலாம்..” என அழைத்துச் சென்றான்.
உண்டு முடித்த பின் அவன் ஏதோ வேலை என்று வெளியில் செல்ல,சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு மாமியார் சொல்ல அறைக்குள்  வந்து கட்டிலில் சாய்ந்தாள். வயிறு நிறைந்திருக்க, மனமோ காலையில் கணவன் சொன்னதையெல்லாம் அசைபோட தொடங்கியது.
‘அப்போ அவருக்கு அம்மா தான் முக்கியமா..? என்ன சொல்ல வந்தாரு அவரு…சரி எதுக்கு வம்பு…அத்தைக் கிட்ட இனி அளவா பேசணும்..அதிகமா பேசினாதானே சண்டை…’ என முடிவெடுத்துக் கொண்டாள்.
‘ஆனா ரொம்ப டாமினேட்டிங்கா இருக்கார்…மிலிட்டரி மேன்…சும்மா ரூல்ஸ்..பேசிட்டு…ப்ச்..எல்லாமே அவர் இஷ்டமா இருக்கு..இந்த ஆம்பிளைங்களே இப்படி தான் போல…எதாவது கொஞ்சம் அன்பா…ஆசையா..ஃப்லீங்க்ஸா பேசுறாரா…?காதல் சின்னத்தைக் கட்டிடமா நினைக்கிறார்..இந்த கண்ணம்மா..குட்டிமா..புஜ்ஜிமா…இப்படி எதாவது சொல்லி கூப்பிடுறாரா..?சரியான போர்…’ என எண்ணிக்கையிலா எண்ணங்கள் யாழ்முகையின் மனதில் ஊர்வலம் போயின.
இருவருக்கும் இருக்கும் முரண்கள் இடர்ப்பாடாகுமா..இல்லை ஈர்ப்பாகுமா..???
இரவில் அவளிடம் வந்த திரு யாழ்முகையை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.
அவளின் தோளில் கையைப் போட்டவாறே, “யாழ்..சொல்லு ஹனிமூனுக்கு எங்க போகலாம்..?” என்றான் விழிகள் முழுதும் ஆசையுடன்.
“எனக்கு…அப்படி எந்த ப்ளானும் இல்ல…எங்க வீட்ல யாரும் இதுவரைக்கும் போனதில்லை..சோ தெரில” என்றாள் மெய்யாக.
ஆனால் தோழிகளோடு அரட்டை அடிக்கும்போது ஸ்விட்சர்லேண்ட் பற்றி பேசிய ஞாபகம் நெஞ்சில் உலாவியது.அவனிடம் சொன்னால் எப்படி எடுப்பானோ என்ற தயக்கம்.அதை விட இவளிடம் பாஸ்போர்ட் என்று ஒன்று இல்லை.இனி வாங்கி எப்போது போக??அதனாலேயே அமைதியானாள்.
“ம்ம்… நம்ம வீட்ல கூட யாரும் போனதில்லை..பட் இப்போ எல்லாரும் போறாங்க தானே…எனக்கு பேசிக்கலா ட்ராவல்னாலே பிடிக்கும்..எனக்கு ஒரு ப்ளான் இருக்கு சொல்லவா…?” என கேட்க
கண்மணியின் மனமோ ,’வேண்டாம்னா விடவா போற…சொல்லுமய்யா..’ என குரல் கொடுத்தது.
ஏனோ இரண்டு நாட்களில் அப்படி ஒரு சலிப்பு மனதில்.கொஞ்சம் பயம் கூட..!! திருமண வாழ்வு இப்படி தான் போகுமோ என?!.திருமணத்துக்குத் தயாராகாத நிலையில் நடந்த நிகழ்வு என்பதாலோ இல்லை திருவின் ஆர்ப்பாட்டமில்லாத தெளிவான பேச்சிலோ என்னவோ அவள் மிகவும் குழம்பிப் போனாள்.
அவனது தெளிவே இவளது குழப்பம்..!!அவனது இயல்பான நடத்தையால்  இவள் இயல்பைத் தொலைத்திருந்தாள்.
திருமண வாழ்வென்றால் இப்படி தான் இருக்கும் இருக்க வேண்டும் கணவன் எப்போதும் கொஞ்ச வேண்டும் தன்னைக் கையினில் தாங்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகளோடு இந்த உறவுக்குள் அடியெடுத்து வைத்தவள் அவள்.
யாழ்முகையின் வீட்டு ஆட்கள் அப்படி இல்லையென்றாலும் கூட  இந்த தலைமுறை இளைஞர்கள் எல்லாம் மனைவியிடம் அன்பாக காதலாக…ஒருவித அன்யோன்யத்துடன் தானே நடந்து கொள்கின்றனர் என்பது அவள் எண்ணவோட்டம்.
ஏன் அவளது அண்ணன் கூட மனைவியைக் ‘கண்ணம்மா’ என்றுதான் கூப்பிடுவான்.சமீபத்தில் திருமணமான அவளது தோழி கூட ‘என் ஹப்பி சோ ஸ்வீட் டீ..அப்படி பார்த்துப்பார்..செம கேரிங்.என்னை எப்போதுமே ஷாலுக்குட்டின்னு தான் கூப்பிடுவார்..’ என பூரிப்புடன் கூறியது  நினைவில் நிழலாடியது.
ஆனால் திருநாவுக்கரசனோ இவளது எதிர்ப்பார்ப்புகள் அனைத்துக்கும் எதிராகவே இருந்தான்.அதுதான் அவளது குறையே…! இப்போது கூட அவன் ஹனிமூன் டிக்கெட்ஸோடு வந்து  நின்று சர்ப்பரைஸ் செய்திருந்தாள் மகிழ்ந்திருப்பாளோ என்னவோ..?
அவன் ஆட்டுவிக்கிறான் என்ற எண்ணம் நெஞ்சின் அடியில் ஆழமாய்த் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.இவள் ஆட்படுகிறாள் என்பதால் தான் ஆட்டுவிக்கின்றான் என்பதை அவள் உணரவே இல்லை..!இவளது ஆட்சிக்குள் வர விரும்புகிறான் என்பதையும் அறியவில்லை..!அவன் தரும் உரிமைகள் புரியவில்லை..!புரிந்து கொள்ள மனம் விழையவில்லை…!அதனால் அவன் அருமை தெரியவில்லை..!இதுதான் நிஜம்…!!அவளுணராத நிஜம்…!
திரு தனது திட்டத்தை சொல்லத் தொடங்கினான். “யாழ்..அக்சுவலி இப்போ தான் தாத்தா கொஞ்சம் கொஞ்சமா அமௌண்ட் எனக்குத் தரார்..அதை வைச்சு நான் நம்ம கம்பெனியை ஸ்டார் செய்யணும்..சோ அந்த வேலைகள் நிறையா இருக்கு..ஐ ஷுட் கிவ் மை இன் அண்ட் அவுட்..அது என்னோட கனவு…லட்சியம்…கார்னர்ஸ் ஆஃப் எர்த்..நம்ம கம்பெனி நேம்..பிடிச்சிருக்கா..?”
“ம்ம்..நல்லா இருக்கு…ஆனா ஏன் இவ்வளவு பெருசா நேம்..?”
“அது வந்து நம்ம பெருசா தான் எல்லாமே செய்யப் போறோம் இல்லையா..? அதான்..” என்றவனை இடைமறித்தவள்
“நான் என்ன செய்யப் போறேன்..எல்லாம் நீங்க தானே…இது உங்க ஆசை தானே..” என்றாள் உண்மையாக. ஆனால் அச்சொற்கள் தரும் அர்த்தம் அவளுக்கு நிஜமாக தெரியாது.
ஆனால் சில சொல் சொன்னவர்களை விட கேட்டவர்களுக்கு உடனே புரிந்து விடும்.இவன் அவளையும் சேர்த்து ‘நீ வேறு  நான் வேறு இல்லை’ என்பதன் பொருட்டு ‘நாம்’ என சொல்ல அவளோ இப்படி பேச உண்மையில் அவனுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.ஆனாலும் வெளி காட்டவில்லை.
ஒரு பெருமூச்சை விட்டவன் “இனி நீ வேற நான் வேற இல்ல..யாழ்…நாம தான்..சரியா…இது என் வீடு இல்ல.. நம்ம வீடு..” என்ன தான் முயன்றாலும் குரலில் ஒரு கடினத்தன்மை வருவதை தடுக்க முடியவில்லை.
“சாரி..இப்படி அர்த்தம் வரும்னு தெரில..”
“இட்ஸ் ஓகே…உலகத்தோட மூலையைக் கூட சுத்திக் காட்டுவோம்னு தான் நம்ம மோட்டோ…அதான் இந்த பெயர்.தென் நிறையா அட்வெஞ்சர்ஸ்லாம் நம்ம டூர் பேக்கேஜ்ல இருக்கும்..அது பத்தி டீடெய்ல்ஸ் நான் இன்னொரு நாள் சொல்றேன்..சோ இந்த வேலைகள் இருக்கதால இப்போதைக்கு ஹனிமூன் போக ப்ளான் இல்ல.உனக்கும் பாஸ்போர்ட் அப்ளை செய்யணும் இல்லையா..?ஆனா ரொம்ப நாள் கழிச்சுப் போனாலும் அது நல்லா இருக்காது..சோ ஒரு மினி ஹனிமூன்..கூர்க் போகலாமா…ஜஸ்ட் ஒரு இரண்டு மூணு நாள்ல போயிட்டு வந்துடலாம்..வந்தவுடனே இதெல்லாம் நான் ஆரம்பிச்சிடுவேன்..அதுக்கு அப்புறம் எனக்கு டைம் கிடைக்காது”
“சரி போகலாம்..” என்றாள் யாழ்முகை.
மனதில் உள்ள சஞ்சலங்கள் மட்டும் தீர்ந்தபாடில்லை.தானாக எதுவும் தீராதே..தீர்க்க வேண்டும்..இல்லை யாராவது தீர்த்து வைக்க வேண்டுமல்லவா..?
இவள் அவனிடம் எதிர்ப்பார்க்க மட்டுமே செய்தாள்.அவள் அவனிடம் எதிர்ப்பார்ப்பதை அவனிடம் கொடுக்க வேண்டும் என்று தோணவில்லை.முதலடியை அவள் எடுக்க தயாராக இல்லை.ஏனெனில் எதிலுமே முன் நின்று ஒரு வித தலைமைப் பண்போடு அவள் இருந்ததில்லை.
***************************************************
ஒரு வாரம் ஓடி இருக்க,தனது கம்பெனி வேலைகளை முன்னிட்டு அவனும் ஓடிக்  கொண்டே இருந்தான்.இன்னும் அவர்கள் கூர்க் போக இரண்டு நாட்களே இருந்தன.
அன்றிரவும் அவன் வழக்கம்போல் தாமதாகமாகவே வந்தான்.வரும் வரையில் விழித்திருப்பதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது என்பதால் யாழ்முகை சீக்கிரமே உறங்கச் சென்று விட்டாள்.
ஏற்கனவே சாப்பிட்டு விட்ட காரணத்தால் வந்தவுடன் உறக்கம் அவனைத் தழுவியது.மணி ஒன்று இருக்கும்…அப்பொழுதுதான் யாழ்முகை ரெஸ்ட் ரூம் சென்று வந்தாள்.
அவள் படுத்த சில நிமிடங்கள் இருக்கும் திருவின் செல் அடிக்க,அதை அரைகுறை தூக்கத்தில் ஆன் செய்தான்.அந்த பக்கம் ஒரு பெண் குரல் பேசியது இவள் காதில் விழுந்தது.வார்த்தைகள் சரியாய் விழவில்லை.ஆனால் அழுது கொண்டே பேசுவது தெரிந்தது.
“இடியட்…சரி அங்கேயே இரு..நான் வரேன்..அழாதமா…ஐ வில் கம்…யூ ஸ்டே கூல் இவா..” என்று அன்பாய் சொன்னான்.அடுத்த நொடி வேகமாக ஒரு ட்ராக் பேண்டை அணிந்தவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
மனைவி உறங்குகிறாள் என்று நினைத்தவன் அவளை தொந்தரவு செய்ய விருப்பமற்று சொல்லாமல் காரில் வேகமாகச் சென்றான்.
ஆனால் அவளோ கணவன் இந்த நடு ராத்திரியில் ஒரு பெண்ணைத் தேடி சென்றிருக்கிறான் என்ற நினைவிலேயே உறங்காமல் உழன்றாள்.

Advertisement