Advertisement

அத்தியாயம் பதினான்கு:

மனதில் ஒரு நிம்மதி பரவ.. கூட மனம் முழுவதும் இன்னதென்று சொல்ல முடியாது ஒரு உவகை இருக்க.. வெகு சில வருடங்களுக்கு பிறகு வேதாவின் மனம் ஊ லலல்லா என்று பாடிக் கொண்டிருந்தது.   

இரவு மணமக்கள் தனிமையில் விடப் பட.. காண்டீபன் முதன் முதலில் அவளை பார்த்து கேட்ட கேள்வியில் உற்சாகம் எல்லாம் வடிந்தது..

“உன்னோட பிறந்த வருஷம் என்னங்கம்மணி” என,

“ஏன் கேட்கறீங்க?” என்றாள் கவலையாக,  

“இல்லை, ரொம்ப நாளா கேட்கணும்னு. ஒரு வேளை ரொம்ப வித்தியாசம் இருந்தா நீ ஒத்துக்க மாட்டன்னு பயந்து நான் கேட்கவேயில்லை” என்றான் அவளையும் விட டென்ஷனாக.

“அதை ஏன் இப்ப கேட்கறீங்க?” என,

“யாரோட கவனத்துக்கும் இது வராம பார்த்துக்கிட்டோம்,  எனக்கு மட்டும் சொல்லேன்” என,

ஆம்! ஜாதகம், குலம் கோத்திரம் என்ற எதுவும் யார் கவனத்திலும் அதிகம் வராமல் பார்த்துக் கொண்டான் காண்டீபன்.. யார் கவனத்திலும் வராததற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.. ஒன்று பணம்.. இன்னொன்று தொழிலில் வேதாவின் வெற்றி.    

அவள் சொல்லவும்.. “யாஹூ..” என அப்படியே வேதாவை தூக்கி ஒரு சுற்று சுற்ற..

“என்ன?” என்றாள் தலை சுற்றிப் போய்,

“ஜஸ்ட் பதினோரு மாசம் தான், அதுக்காக நீ என்னை எவ்வளவு அலைய விட்டுட்ட, எவ்வளவு டென்ஷன்” என்றவன், அவ்வப்போது ஒருமைக்கும் பன்மைக்கும் மாறி மாறி சென்று கொண்டிருந்தவன்.. அவளை சிறியவளாக காட்ட, முற்றிலுமாக ஒருமையை மட்டும் கடை பிடிக்க முடிவு செய்தான்.

“இதுக்கு தான் கேட்டீங்களா?” என,

“பின்ன எதுக்குன்னு நினைச்ச”  

“ஒரு வேளை நான் பெரியவன்னு யாராவது சொல்லிட்டாங்களோன்னு நினைச்சேன்!”  

“இப்படி சொல்லி சொல்லி தான், என்னை பக்கத்துல கூட வர விடலை” என்றவன், “வா” என்று கண்ணாடி முன் நிறுத்தினான் இருவரையும்.

“பாரு, நீ எப்படி பூ மாதிரி இருக்க.. நான் பக்கத்துல அய்யனார் மாதிரி இருக்கேன்!”

“யாரு சொன்னா?” என சிணுங்கியவள்… “எனக்கு யாரையுமே பிடிக்கலை, உங்களை தான் ரொம்பப் பிடிச்சிருக்கு.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவளின் கண்களில் கரை காணாத காதல் முதல் முறை..

காண்டீபனை நோக்கித் திரும்ப முற்பட..

திரும்ப முடியாமல் இடையோடு இறுக்கி பிடித்தவன்.. கண்ணாடியில் தெரிந்த தங்களது பிம்பத்தை பார்த்து ரசிக்க ஆரம்பித்தான். இடையில் இருந்த கை வேதாவை ஏதோ செய்ய, உடல் முழுவதுமே அவன் மேல்.

அவளின் முகத்தில் தெரிந்த கலவையான உணர்வுகளில் புடவையின் மேல் இருந்த கையை எடுத்து, புடவையின் உள் விட..

“என்ன பண்றீங்க?” என்றாள் கிறங்கிய குரலில் உடல் முழுவதும் சிலிர்க்க..

காண்டீபன் பதிலே பேசவில்லை.. இன்னும் தன் கையினில் அடங்கியிருக்கும் பொக்கிஷத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.. ஆம்! பொக்கிஷம் தான் அவனிற்கு..

“இன்னும் நம்பவே முடியலை வேதா, உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே!”

“ரொம்ப! ரொம்ப! ரொம்ப! போதுமா!”

“போதாது!”  

“என்ன போதாதா?”

“போதாது!” என்றவன் பேசிய ரகசியங்களில், வேதா தானாகவே சிறிய பெண் ஆகிவிட, காண்டீபன் பெரியவனாகிப் போனான்..

முகம் காண்டீபனின் பேச்சுக்களில் சிவக்க, அதை மறைக்கவும் முடியாமல் திணறினாள். அவன் தான் கண்ணாடி முன் நிறுத்தி இருந்தானே.. ரகசியம் பேசிய காண்டீபனின் உதடுகள், அது சென்றடைந்த அவளின் காது மடல்களை தீண்டிய போது, அவளின் கால்கள் தாமாகவே தொய்ந்து விழ.. உடலின் பாரத்தை உணர்ந்தவன், வேதாவை மேலும் சோதிக்கவில்லை..

புதிய உலகத்திற்கு அழைத்து செல்ல.. அவனுள் கரைந்தே போனாள்.

சிறியவன், சிறியவன் என்று நினைத்தது எல்லாம் கனவாகத் தான் தோன்றியது.. இப்போது எதுவுமே தனக்கு தெரியவில்லை என்ற உருவகம் தான் அவளிடம்.

ஆம்! பொறுப்புகளை எல்லாம் கையில் எடுத்து பெரியவளாக தோன்றிய அவளை, ஒரே நாளில் திரும்ப சிறிய பெண்ணாக ஆக்கியிருந்தான்.

அவளே தன்னை சுற்றி அமைத்துக் கொண்டிருந்த மாய வேலியை அகற்றி இருந்தான்..

காண்டீபனின் வாய் இன்னும் அதிகமாகிவிட, வேதா இன்னும் அமைதியாகி விட்டாள்.. பின்னே கணவனை அணு அணுவும் ரசிக்க..  பேச்சுக்கு அங்கே இடமேது.. காண்டீபனின் பரந்த மார்பினில் ஒடுங்கி, அவனின் கைகளுக்குள் சிறை பட்ட போது, அது அவனிடம் இருந்து மீள விரும்பாச் சிறையாக மாறியிருந்தது. 

வாழ்க்கையில் வேதா கொண்டிருந்த சஞ்சலங்களை எல்லாம் அகற்றி வண்ணமயமாக்கி இருந்தான் காண்டீபன்.

“என்னம்மா இப்படி?” என்று திருமலை சாமி புலம்ப.. “நான் எவ்வளவோ சொல்லிட்டேன் மாமா” என்று வேதாவும் புலம்ப..

“ரெண்டு பேருக்குமே என் புள்ளையோட அருமை தெரியறதே இல்லை!” என்று சலித்தார் கிருத்திகா.. அங்கே இருந்த காண்டீபன் பெற்றோருக்கு தெரியாமல் வேதாவைப் பார்க்க,

அவள் இன்னம் கொஞ்சம் புலம்பிக்கறேன் என்ற பாவனையை காட்ட.. யாரும் அறியாமல் மனைவியை பார்த்து கண் சிமிற்ற,

அவள் சின்சியர் சிகாமணியாய் கணவனை குறித்து மாமனாரிடம் புலம்ப.. காண்டீபன் மட்டுமே அறிந்தது, அவனின் ஒவ்வொரு செயலையும் ரசிப்பவள் அவன் மனைவி என,    

பின்னே திருமணமாகி விட்டது என்று அழைத்த அப்பாவிடம் “உங்க பஸ் கம்பனியை நீங்களே பார்த்துக்கங்க, எனக்கு பசங்க பொறந்ததுக்கு அப்புறம் அவங்களை வாரிசாக்கிகோங்க” என்று சொல்லி அவருடன் வர மறுத்து விட்டான் காண்டீபன்.

வேதா ஆசைப்பட்ட படி பிரமாண்டமாய் ஒரு கார் ஷோ ரூம் ஆரம்பித்து, அதனை நீயே பார்த்துக் கொள் என்று அவளிற்கே கொடுத்து விட்டான்.

“சென்னை ஷோ ரூமை ஸ்ருதிக்கு கொடுத்துடு” என்று விட, வேதா மறுத்து எதுவும் பேசாமல் அப்படியே தூக்கி கொடுத்து விட, ஸ்ருதியை திருமணம் செய்து கனகவள்ளியையும், லோகநாதனையும், அவர்களின் கார் ஷோ ரூமையும் தனஞ்ஜெயன் பார்த்துக் கொள்வது என்று முடிவாகிவிட..

எல்லாம் முடித்தவனாக தன்னுடைய தொழிலை ஆரம்பித்து இருந்தான். அதற்கு தான் மாமனாரும் மருமகளும் தலையில் அடித்து கொள்ள..  

அம்மா மெச்சிக் கொண்டு இருந்தார்.. ஆம்! பிரமாண்டமாய் தான் ஆரம்பித்து இருந்தான், ஆனால் ஆரம்பித்தது சைக்கிள் கம்பனி.

அப்பா பஸ், மனைவி கார், இவன் சைக்கில்.. என்ன சொல்ல?

மென்டல் மனதாய் எல்லோரும் நினைக்க..

“இல்லை, அப்படி இல்லை” என்ற காண்டீபன்.. “இன்னைக்கு இருக்குற ஒரு கால கட்டத்திற்கு இது ரொம்ப அவசியம், நீங்க ரெண்டு பேரும் காரையும், பஸ்ஸையும், ஓட விட்டு சுற்று சூழலை மாசு படுத்தறீங்க”

“இன்றைய வேகமான உலகத்திற்கு அது அவசியம் தான்னாலும், நான் அதுக்கு பிராயச்சித்தமா மக்களோட உடல் நலத்தையும் பார்த்துக்கறேன், இந்த பூமியோட உடல் நலத்தையும் பார்த்துக்கறேன்” என வசனம் பேசினான்.

அது மட்டுமா! மூன்று நாள் கார், மூன்று நாள் சைக்கிள் என அவனே போக ஆரம்பித்தான்.. கல்லூரி மாணவிகளிடம் “நீங்க இன்னும் ஷேப்பா இருக்கலாம்” என்று ஒரு பிரசித்தி பெற்ற மாடலை வைத்து சொல்ல வைத்தான்.

திறமையான மார்கெட்டிங் யுக்தியை கையாண்டு, வெற்றிப் படிகளின் ஆரம்பத்தில் இருந்தான். 

இதோ! இன்று ஒரு சைக்கிள் பயணம்!

கோவையில் இருந்து அவினாசி வரை.. சில பல மாடல்கள், சில பல திரை உலக நட்சத்திரங்கள், அவர்களோடு மக்கள், மாணவர்கள் என கோலாகலப் படுத்த.. 

சைக்கிளினால் ஒரு ட்ராப்பிக் ஜாம் கோவையில்!

அதற்கு பரிசாய் மனைவியின் ஆழ்ந்த முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தான்..  காண்டீபன்! அதன் மயக்கத்தில் இருந்து மீளும் முன்னே “என்னை மென்டலாக்கிடீங்க நீங்க உங்க மேல” என வேதா ரகசியம் பேச,

“நீயில்லை நான் தான் உன்மேல!” என்று காண்டீபன் பதில் ரகசியம் பேச..     

“சரி, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் மேல” என்று வேதா டீல் பேச..  பொருத்தமற்ற அனைத்தையும் பொருத்தமாய் மாற்றிக் கொண்ட மென்டல்கள் அவர்கள் இருவருமே!  

                             (நிறைவுற்றது)

Yes for akshaya monthly its over.. but for publication book still more to come…

 

 

           

 

Advertisement