Advertisement

உன் நினைவு – 22

கவிதை என்று நினைத்தேனடி…..

காணல் நீராகி போனாயே ??????

ஆருயிர் என்று நினைத்தேனடி…

அமிழமாகி போனாயே???????

என்னவள் என்று நினைத்தேனடி….

எட்டிக்காயாய் கசந்தாயே ???????? 

 “ என்ன டா இது யாருமே இல்லை.  இந்த குட்டச்சி கூட ஆளை காணோம்  “ என்று அவளை பார்வையால் தேடியபடி மேலே ஏறினான் கதிரவன்.  வசுமதியின் அறைக்கு செல்ல திரும்பியவன் உள்ளே பேச்சு குரல் கேட்கவும் அப்படியே நின்று விட்டான்..

 “ சரி பிரன்ட் கூட பேசிட்டு இருக்கா போல.. இப்ப நம்ம போன நன்றாய் இருக்காது “ என்று எண்ணி அங்கு இருந்த சோபாவில் அமர்ந்து விட்டான்..

வசுமதி சந்தோசமாக பெருமையாக தன் காதலை பற்றி கூறி கொண்டு இருந்தாள்..   அவள் பேசியது அனைத்தும் கதிரவன் காதுகளில் விழுந்தது.  கதிரவன் முகத்தில் புன்னகை தான் வந்தது.. ஆனால் இறுதியில் அவள் பேசியதை அனைத்தும் கேட்டு முடிக்கும் பொழுது முகம் கருத்து சிறுத்து விட்டது.. கல் சிலையென சமைந்து விட்டான்..

“ ஆமா டி.. நான் மிகவும் சந்தோசமாக இருக்கேன்.. போறா ??? இங்கயா ?? இல்லை இல்லை… இங்கு எனக்கு பொழுது நன்றாகவே போகிறது அங்கு  சென்னையில்  எல்லாம் எப்படி இருக்கீங்க ?? “

…..

“ ம்ம் நினைத்தேன் இந்த ராம் உளறி இருப்பான் என்று .. ஆமா அதற்கு  என்ன?? ஏன் நான் லவ் பண்ண கூடாதா ??? ஹா !! ஹா !! போடி… எங்க இருந்து தான் இப்படி பேச முடியுதோ??? ”

……….

“ ம்ம்.. என் அத்தான் தான்.. சூப்பர் ஆளு.. ரியல் ஹீரோ இன் மை லைப்..  ஆமா அதற்கு  தான் வந்தேன்..  “ இப்படி பேசியவளுக்கு கதிரவனை நினைக்கும் பொழுதே தன்னவன் என்ற நினைப்பில் கர்வம் கூடியது..

…..

“ ஹே போடி… இங்க வந்து பாரு அப்ப தெரியும்… எல்லாருக்குமே நல்ல ஆட்கள்  அதிலும்  எங்க அம்மாச்சியும் அத்தையும் இருக்காங்களே.. வாவ் சிம்ப்ளி டூ நைஸ்.. ”

…….

“ ம்ம்  ஆமா டி .. விவசாயம் தான் தென்  அவர் பிரன்ட் கூட சேர்ந்து  தனியா தொழில் வேற பண்ணுறாங்க… “        

……

“ ஹா !! எல்லாருக்கும் சொக்கு பொடி தான் போட்டுவிட்டேன்.. பின்ன சும்மாவா.. இங்க இருக்க இத்தனையும் நான் அனுபவிக்க வேண்டாமா ??? ஹா!!! ஹா !!!!!

……

“நீ சொல்வதும் சரி தான்.. இங்க எவ்வளோ இருக்கு தெரியுமா ??? வீடே மிகவும் பெரியது, நாலு மில்லு, லாரி ஆபீஸ், தென்னந்தோப்பு, பழப்பண்ணை, வயல், எஸ்டேட்.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்… எனக்கு இதெல்லாம் மிகவும் பிடித்திருக்கு  ”

……

“ நானும் நினைப்பேன் அம்மா எப்படி இங்கு இத்தனையும் விட்டு அங்கு  வந்தார்களோ தெரியவில்லை. ம்ம் பட் நான் அப்படி இல்லை.. அவர்கள் அனுப்பவிக்காததை எல்லாம் சேர்த்து நான் அனுப்பவிக்க போகிறேன்.. எப்படி முழு உரிமையுடன் சாவி கொத்து மட்டும் தான் என் இடுப்பில் இல்லை  கல்யாணத்திற்கு பிறகு அதுவும் வந்துவிடும், இந்த வீட்டையே  மகராணி மாதிரி சுற்றி வரப்போகிறேன்.. எல்லாரும் நான் சொல்வதை தான் கேட்பாங்க   “

….

“ பின்ன சும்மா வா.. அம்மா தான் இப்படி எல்லாத்தையும் பாதியில விட்டிட்டு போயிட்டாங்க.. நான் அப்படி சும்மா இருக்க முடியுமா ?? விட்டதை பிடிக்க வேண்டாம்  ??? ”

இப்படித்தான் வசுமதி தான் தோழியிடம் பேசி கொண்டு இருந்தாள் அவள் கூறியதன் அர்த்தம் எல்லாம் இது மட்டும் தான்.. இங்கே இத்தனை பேரின் அன்பையும் நேசத்தையும் தன் அம்மா பாதியில் விட்டு சென்று விட்டார்..

அவர் விட்டு சென்றதை தான் கதிரவனின் மனைவி, இந்த வீட்டின் மகள் வயிற்று பேத்தி என்ற உரிமையோடு அனைவரின் நேசத்தையும் அன்பையும் இனி வரும் காலம் முழுவதும் அனுபவிக்க போகிறேன் என்பது மட்டும் தான்..

ஆனால் இந்த அர்த்தங்கள் எல்லாம் கதிரவனுக்கு அனர்த்தமாக பட்டது.. என்றோ ஒரு நாள் பொன்மலர் தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் “ நான் தான்  இவ்வீட்டிற்கு மருமகளாய் வரப்போகிறவள், அதானால் என்னிடம் எல்லாம் மரியாதையோடு நடந்து, நான் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும் “ என்று கர்வமாக கூறியது இன்று கதிரவன் நினைவில் வந்து சென்றது.     

 

இருவரின் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் எண்ணங்கள் ?? அது இரண்டும் ஒன்றே என்பது போல அல்லவா காட்டுகிறது.. அவள் கர்வமாக கூறுகிறாள். இவள் காதல் என்ற பெயரில் அதையே வேறு விதாமாக கூறுகிறாள்.  

முதலில் அவன் கேட்ட எதையுமே அவன் மனம் நம்ப மறுத்தது. ஆனால் நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் தலைக்கேறியது.. தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று நினைத்தான்.. தன் வசுமதி இப்படி எண்ணுவாளா ??? அவள் இப்படி பேசுவாளா ?? என்று ஒரு முறை கூட அவனது மனம் யோசிக்க மூளை விடவில்லை..

உள்ளே வசுமதியின் அறையில் தன் தாயும் தான் இருக்கிறார் என்பதை கூட அவன் அறியவில்லை… அது தெரிந்து இருந்தால் கூட நடக்க போகும் விபரீதங்கள் அனைத்தும் தடுக்க பட்டு இருக்கும்… ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே …..

எப்படி வந்தானோ அப்படியே தன் அறைக்கு திரும்பி சென்று விட்டான்.. இரும்பென இறுகி இருந்தது அவனது முகம்.. யாரும் பார்த்தாலே இரண்டடி பின்னல் நகரும் படியாக ருத்ரமாக இருந்தது அவனது தோற்றம்..  

“ ஆக!! அனைத்தும் இந்த சொத்துக்காக… எப்படி இவளால் இப்படி ஒரு துரோகம் இழைக்க முடிந்தது.. ச்சே !!! என்ன மாதிரி பெண் இவள் காதல் என்ற போர்வை போட்டு என்னை ஏமாற்றி விட்டாள்.. ச்சி நினைத்தாலே பதறுகிறது… என் அத்தை மகள் என்று கூறி கொள்ளவே அசிங்கமா  இருக்கு.. “

“ எப்படி எல்லாம் பேசினாள்?? பழகினாள்??? ஆனால் அத்தனையும் இந்த சொத்துக்காக.. பணத்துக்காக.. கேவலம் காசுக்காக காதலிப்பது மாதிரி நடித்து  என்னை ஏமாற்றிவிட்டாள் என்னை மட்டும் இல்லை இந்த குடும்பத்தையே ஏமாற்றிவிட்டாள் “

அவனுக்கு மீண்டும் வசுமதியின் வார்த்தைகளே காதுகளில் ஒலித்தன..

 “ எங்க அம்மா விட்டதை நான் பிடிக்க போரேன்..”

 “ இங்க எவ்வளோ இருக்கு தெரியுமா ??? முழு உரிமையோட. “

இதை எல்லாம் நினைக்க நினைக்க  அவள் மீது கோவம் அதிகமானது… தான் ஏமாந்து விட்டோம் என்ற எண்ணமே அவனது புத்தியை மறைத்தது..

“ ச்சி !!! என்ன பிறவி இப்படி கேவலமாய் நடந்துக்க முடியுமா.. அதுவும் சொந்த குடும்பத்தில் இரு டி உனக்கு வசமாய் இருக்கு.. என்னை யாரென்று நினைத்தாய் ??? இனிமே தான் தெரியும் உனக்கு கதிரவன் யார் என்று எல்லாத்துக்கும் நீ அனுபவிக்க போகிறாய்  வசுமதி….   ”  என்று சுவரில் ஓங்கி குத்தினான்…

கதிரவனால் எதுவும் செய்ய இயலவில்லை.. எதையும் யோசிக்க முடியவில்லை.. யாரையும் பார்க்க பிடிக்க வில்லை.. முக்கியமாக வசுமதி என்ற பெயரை கேட்டாலே கொலை செய்து விடுவான் போல.. அப்படி இருந்தான்.. தன் அறையிலேயே கூண்டில் சுற்றும் புலியாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான்.. 

ஆனால் விதி அவள் வாழ்வில் சூனியம் செய்தது தெரியாமல் வசுமதி தன் அறையில் தோழியோடு பேசிவிட்டு மீண்டும் தன் அத்தையோடு பேசிக்கொண்டு இருந்தாள்.. கதிரவன் வந்ததோ அனைத்தையும் கேட்டதோ எதுவும் தெரியாது..

காமாட்சி “ வசும்மா கீழே வா டா சாப்பிடலாம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் மாமா வந்துடுவாரு.. ஜோசியர் வீட்டுக்கு வேறு போகவேண்டும் “ என்று அவளையும் இழுத்துக்கொண்டு சென்றார்..

வசுமதி உற்சாகமாக இருந்தாள்.. இன்று நிச்சயத்திற்கு நாள் குறிக்க போகிறார்கள் என்ற எண்ணமே அவளுக்கு மகிழ்ச்சியை குடுத்தது.. அம்மாச்சி என்று அன்னபூரணியை கட்டிகொண்டாள்..

“ என்ன கண்ணமா மிகவும் சந்தோசமாய் இருக்க ??? ம்ம் இப்பவே கல்யாண கலை தெரிகிறது ” என்று அவரும் தன் பங்கிற்கு கேளி செய்தார்…

“ ச்சு போ அம்மாச்சி “ என்று கூறி சந்தோஷம் மிகுதியில் அவருக்கு முத்தம் வேறு வைத்தாள்..

“ அடி கழுதை.. சரி உன் அத்தான் வண்டி சத்தம் கேட்டதே  எங்க அவன் ?? ” என்றார் வாஞ்சையை தன் பேத்தியை பார்த்து..

“ என்ன அத்தான் வந்துட்டாங்களா ??? எப்போ அம்மாச்சி எனக்கு தெரியாதே ??? ” என்று கூறி சுற்றும் முற்றும் தேடினாள்..  அதற்குள் காமாட்சி “ அவன் குளிப்பானாய் இருக்கும்.. வா நீ வந்து சாப்பிடு மதியமும் சாப்பிடவில்லை அப்படி என்ன தான் துக்கமோ “ என்று அவளை சாப்பிட அமர்த்தினார்…

அதேநேரம் கதிரவன் மேலே இருந்து வந்தான் வசுமதி பக்கம் அவன் திரும்ப கூடவில்லை.. தன் அப்பத்தா மற்றும் அம்மாவிடம் மட்டும் பேசி விட்டு சென்று விட்டான்.. வசுமதிக்கு இது வித்தியாசமாக இருந்தது…

” என்ன இது அத்தான் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.  மற்ற  நேரமாய்  இருந்தால்  நான் இப்படி சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது ஏதாவது கிண்டல் பண்ணுவாங்க, இல்லை யாரும் பார்காத மாதிரி எதாவது சேட்டை செய்வாங்க… ஆனால்  இப்போ என் பக்கம் திரும்ப கூட இல்லை..  “ என்று யோசித்தவள்…” சரி எதாவது வேலை இருக்கும் “ என்று அமைதியாக இருந்து விட்டாள்…

ஆனால் இவனின் இந்த பாராமுகமே தினமும் தொடர்ந்தது.. முதல் நாள் வசுமதி பெரிதாக எதையும் கண்டுகொள்ள வில்லை.. வெளியே எதாவது வேலையாக இருக்கும்… வேலை டென்சனாக இருக்கும் என்று அவளாக தனக்கு சமாதானம் கூறிக்கொண்டாள்.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதுவோ அவளுக்கு வேறாக பட்டது…

“ என்ன ஆச்சு அத்தானுக்கு?? ஏன் இப்படி இருகாங்க ?? எல்லார்கிட்டையும் நல்ல தான பேசுறாங்க.. ஆனால்  ஏன் என்னிடம்  மட்டும் இப்படி விலகி விலகி போறாங்க.. நான் எதுவும் தப்பு பண்ணிவிட்டேனோ ??? ” என்று தனக்குள்ளே பல கேள்விகள் கேட்டு குழப்பிக் கொண்டாள்…

இதற்கு நடுவில் இன்னும் ஐந்து நாட்களில் நல்ல நாள் இருப்பதாகவும் அன்றே பால் காய்ச்சவும், நிச்சயமும் பண்ணலாம் என்று ஜோசியர் கூறி விட்டதாக காமாட்சி வந்து வசுமதியிடம் கூறினார்..

அவளது குழம்பிய மனம் இதை கேட்டு சற்றே திட பட்டது.. “ அப்பாடி இன்னும் ஐந்தே  நாட்கள் தான்.  அப்பா அம்மா சிவா ராம் எல்லாம் வருவார்கள். ஆனால்  நிச்சயம் முடிந்து  நான் ஊருக்கு போகவேண்டுமே ஹ்ம்ம் சரி சமாளிக்கலாம்.. இவனை பார்க்காமல் எப்படி தான் இருக்க போகிறோமோ ??? ” தன்னிடம் கேள்விகள் கேட்டு கொண்டு வீட்டை சுற்றி வளம் வந்தாள்..

அப்பொழுதான் ஹாலில் அமர்ந்து கதிரவன் தன் அப்பத்தாவுடன் பேசி கொண்டு இருந்தான்.. இவள் அங்கு செல்லவும் வேலை இருப்பது போல எழுந்து சென்று விட்டான்.. அவளது முகத்தை கூட பார்கவில்லை.. வசுமதிக்கு மனம் வலித்தது.. அவளை யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது..

“ ஏன் இப்படி இவன் விலகி போகிறான்… ஏன் ஏன் ஏன் ???? ” இந்த கேள்வியே அவளை குடைந்து எடுத்தது… “ இன்று விட கூடாது அவன் வரவும் அவனிடம் கேட்க வேண்டும்… ஏன் இப்படி செய்கிறான் என்று “ என முடிவு செய்து கொண்டாள்..

இரவு வெகு நேரம் கழித்து தான் கதிரவன் வந்தான். இந்த இரண்டு நாட்களாகவே கதிரவன் வேகமாக வெளியே சென்று விடுவதும், இரவு மிகவும் தாமதமாக வருவதும் வாடிக்கையாக கொண்டு இருந்தான்.. அழகேசன் கூட சரியான நேரத்தில் வந்தாலும் இவன் இப்படி நடந்து கொண்டது வசுமதிக்கு எதுவோ நடந்து இருக்கிறது என்று தோன்றியது…

வீட்டில் அனைவரும் உறங்கி இருப்பார்கள் என்று நினைத்து கதிரவன் மெல்ல படி ஏறி வந்து தன் அறைக்குள் சென்று விட்டான்.. ஆனால் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல இவனது வரவுக்காகவே காத்திருந்த வசுமதி கண்டு விட்டாள்.. “ ஏன் இப்படி ஒளிந்து வருகிறான்…. என்ன தான் பிரச்சனையோ ??? ஆண்டவா என் அத்தானுக்கு எதுவும் பிரச்சனை இருக்க கூடாது ” என்று வேண்டிக்கொண்டு அமர்ந்து இருந்தாள்..

அவளுக்கு தெரியும் இன்னும் சிறிது நேரத்தில் அவன் மேலே மொட்டை மாடிக்கு ஏறி செல்வான் அப்பொழுது அவனை பிடித்து கொள்ள வேண்டும் என்று.. கதிரவனுக்கு அவனது அறையில் இருக்கவே முடியவில்லை.. அறையில் ஒவ்வொரு மூலையிலும் வசுமதி தான் தெரிந்தாள்.. அவளது நினைவும் அவளது பேச்சும் மாற்றி மாற்றி அவனை வேதனை படுத்தின..

“ கண்களில் காதலை காட்டினாளே வார்த்தைகளில் நேசத்தை காட்டினாளே ஆனால் அத்தனையும் பொய்.. வெறும் நடிப்பு … கிராதகி… படுபாவி… கடைசியில் அனைத்தும் இந்த சொத்திற்காக.. ச்சி.. “

இதை எண்ண எண்ண அவனுக்கு உள்ளே மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது. சிறிது நேரம் மேலே சென்று விட்டு வரலாம் என்று மொட்டை மாடிக்கு சென்றான்.. இதற்காகவே காத்து இருந்த வசுமதி சிறிது நேரம் கழித்து மேலே சென்றாள்.

வானத்தில் பௌர்ணமி நிலா ஜொலித்து கொண்டு இருந்தது.. முன்னொரு நாள் இதே பௌர்ணமி நாளில் அவர்கள் இதே மாடியில் அமர்ந்து காதல் மொழி பேசியது எல்லாம் நினைவு வந்தது.. அவளுக்கு ஏனோ கண்ணை கரித்தது… கதிரவன் அந்த நிலவை வெறித்து பார்த்தபடி நின்று இருந்தான்..

மெல்ல அவன் பின்னே சென்று “ அத்தான் “ என்று அழைத்தாள்… இவளது குரலை கேட்டதும் அவனது உடல் விறைத்தது.. கை முஷ்டி இறுகியது… ஆனாலும் அவளை திரும்பி கூட பார்கவில்லை.. மீண்டும் அத்தான் என்று அழைத்தாள்..

ஆனால் அவனோ அவளை பாராது கீழே இறங்க போனான்.. அவனது இந்த செய்கை வசுமதியை சாட்டையால் அடித்தது போல இருந்தது.. அவனது வழியை மறைத்து “ நில்லுங்க அத்தான்.. நான் உங்களிடம் பேசவேண்டும்  “ என்றாள் வேகமாக..

“ என்ன ??“ என்றான் மொட்டையாக.. அவனது பாராமுகம் அவளை வாட்டியது.. தான் தான் எதுவோ தவறு செய்து விட்டோம் போல என்று எண்ணினாள்..

” அத்தான் நான் எதாவது தப்பு பண்ணிவிட்டேனா ?? அதான் என் மீது கோவமா ??? ” என்றாள் கம்மி போன குரலில்..

ஆனால் அவனோ அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் விலகி சென்றான்.. அவனது பார்வையில் துளி கூட காதல் இல்லை என்பதை புரிந்துகொண்டாள்.. மீண்டும் “ அத்தான் நில்லுங்க நான் பேசிட்டு இருக்கேனே.  பதில் பேசாமல் போனால்  என்ன அர்த்தம் ?? ” என்றாள்

“ என்ன அர்த்தம் ??? பதில் பேச பிடிக்கவில்லை என்று அர்த்தம் “ என்றான் குதர்க்கமாக..

“ பிடிக்கவில்லையா ??என்னை பார்த்து சொல்லுங்க என்னிடம் பேச பிடிக்கவில்லையா ?? ஏன் அத்தான் ??? ” என்றாள் அழும் குரலில்.. வந்ததே அவனுக்கு வேகமும் கோவமும்… வேகமாக அவளிடம் திரும்பி வந்து அவளது தோள்களை இறுக்கமாக பற்றி அவளது விழிகளை கூர்ந்து பார்த்து

 “ ஏன் ??? ஏன் என்று தெரியவில்லையோ ??? இங்க பார் இன்னொரு தடவை  இப்படி என்னிடம் வந்து கேள்வி கேட்கிற வேலை எல்லாம் வேண்டாம்  புரிகிறதா ??? என்னை கேள்வி கேட்கிற அருகதையோ உரிமையோ உனக்கில்லை…” என்று உறுமினான்,..

அவன் பிடித்ததே அவளுக்கு அத்தனை வலிகள் தந்தது.. அவனது வார்த்தைகளோ கூறவேண்டியதே இல்லை அமிலத்தை அள்ளி பூசியது போல துடித்தல் வசுமதி.. அவளது கண்களில் அவளது துடிப்பை கண்டானோ என்னவோ “ச்சேய்” என்று கூறியபடி கைகளை உதறி அவளை விலக்கினான்… அவளுக்கு சுத்தமாக புரியவில்லை ஏன் இவன் இப்படி மூர்க்கமாக நடந்து கொள்கிறான் என்று… மெல்லிய குரலில் “ எனக்கு உரிமை இல்லையா??? அத்தான்  “ என்று கேட்டாள்..

“ ஏய் !!! இன்னொரு தடவை அத்தான் என்று  சொல்லாதே.. கேட்கவே சகிக்கலை.. அவ்வளோ ஏன் உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை.. ச்சி ச்சி.. உன்னிடம் நின்று  பேச கூட எனக்கு இஷ்டமில்லை “ என்று முகம் திருப்பி நின்றான்..

அவளுக்கு மனம் கூற முடியாதா வேதனை தந்தது.. ஏன் என்ற காரணம் தெரியாமல் பேதை அவள் திகைத்து நின்றாள் மறுமொழி கூற முடியாமல். கண்களில் அவள் அறியாமல் கண்ணீர் வழிந்தது.. இருந்தாலும் என்ன என்று தெரிந்தே ஆக வேண்டும் என்று திடம் கொண்டு “ நான் என்ன தப்பு செய்தேன் ??? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க ??? ” என்றாள்..

“ அட அட அட !!! உன் நடிப்பிற்கு ஆஸ்கருக்கு மேல் ஏதா அவார்ட் இருந்தால்  அதை குடுக்கலாம்.. அப்பா!!! எப்படி டி உன்னால் மட்டும் இப்படி எல்லாம் செய்துவிட்டு  எதுவுமே தெரியாத மாதிரி முகத்தை வைக்க  முடிகிறது.. நடிப்பு.. வேஷம்.. அத்தனையும் விஷம்..” என்று கரித்து கொட்டினான்..

அவளுக்கு கதிரவனது வார்த்தைகளை தால முடியவில்லை… பொறுக்க முடியாமல் “ போதும் அத்தான்.. போதும்… நான் என்ன தப்பு செய்தேன் என்று  இப்படி நீங்க என்னை வார்த்தையால்  கொல்றீங்க ?? ” என்றாள் அழுகையோடு..

“ அட உனக்கு நிஜமாவே தெரியாதா ?? அது சரி உன் நடிப்பே அப்படியே உனக்கு ஊறிடுச்சு போல… கேளு சொல்லுறேன்… உன் சுய ரூபம் தெரிந்து போனது  எனக்கு.. இனிமேலும் நீ நடிக்க முக்கியமாக என்னிடம்  நடிக்க வேண்டிய அவசியமில்லை.. புரிகிறதா ??.. ”

“ நடிப்பா ??? என்ன அத்தான் சொல்றீங்க ??? நான் ஏன் நடிக்க போகிறேன்… அதுவும் உங்களிடம் ?? ” என்றாள் கேள்வியாக..

அவனோ அவளை ஏளனமாக பார்த்து “ இதுவும் உனக்கு தெரியாதா ?? சரி இதையும் சொல்கிறேன் கேட்டுக்கோ..  எல்லாம் இந்த சொத்துக்காக…” என்றான் அழுத்தமாக..

அவளுக்கு இந்த பதிலை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.. மெல்ல சிரித்தபடி  “ என்ன சொத்துகாகவா ??? ”

அவளது சிரிப்பை கண்ட கதிரவனுக்கோ மேலும் ஏறியது  “ ஏய்!!! என்ன டி சிரிப்பு … அது சரி உன்னிடம் ஏமாந்தது நான் தானே. அதான் உனக்கு என்னை பார்க்க சிரிப்பு” என்று ஆரம்பித்து அன்று அவள் தன் தோழியிடம் பேசியதை எல்லாம் கூறி… “ நீ வந்தது இந்த சொத்துக்காக தான் “ என்றான் உறுதியாக..

வசுமதிக்கு சர்வமும் நின்று போனது.. இப்படி பட்ட ஒரு பழியை தன்னவன் தன்மீதே சுமத்துவான் என்று அவள் கனவிலும் கண்டதில்லை… பேச்சற்று நின்று விட்டாள்.. இதற்கு என்ன பதில் கூறுவாள்.. ஆனால் அவளது அமைதியை தவறாக புரிந்து கொண்டான் கதிரவன்..

“ என்ன டி அமைதியாக இருக்க?? உன் சாயம் வெளுத்து போனது நம்பமுடியவில்லையா??? எனக்கு கூட இன்னும் நம்ப முடியவில்லை டி.. நீ … நீயா இப்படி என்று?? ஆனால்  நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் நானே என் காதால்  கேட்டேனே… ச்சி உனக்கு வெக்கமாய் இல்லை… இப்படி ஒரு ஜென்மமா அதுவும் என் வீட்டில்  நினைக்கவே கேவலமாய்  இருக்கு “ என்று அவன் இஷ்டதிற்கு பேசி கொண்டே போனான்..

ஒரு வார்த்தை கூட வசுமதி பதில் பேச வில்லை… அனைத்தும் மரத்து போயிற்று.. உணர்வுகள் நின்று விட்டன… கண்ணீர் மட்டும் வழிந்த படி இருந்தது.. மனதில் வலி கூடிகொண்டே இருந்தது..

“ என் கதிர் என்னை இப்படி பேசி விட்டான் “ இது மட்டுமே அவளது மனதில் ஓடிக்கொண்டு இருந்தது… 

மீண்டும் அவனே ஆரம்பித்தான்.. ” போயும் போயும் உன்னை காதலித்தேன் என்று நினைத்தாலே எனக்கு வெட்கமாய் இருக்கு.. இப்படி பட்ட ஒரு கேவலமான ஜென்மம்.. உனக்கு சொத்து தான் வேண்டும் என்றால் கேட்டு இருக்கலாமே. அதை விட்டு குடும்பத்தில் அத்தனை பேரையும் ஏமாத்தி என்னிடம் காதல் நாடகம் ஆடி ஏன் டி  எங்கள் அம்மா அவர்கள் என்ன  உனக்கு பாவம் பண்ணங்க.. எப்பொழுதும் உனக்கு சார்ந்து பேசுவார்கள்… அவர்களை  கூட நீ நினைக்கவில்லை??? “

இவன் பேசுவது அனைத்தும் அவளது காதுகளில் விழுந்தாலும் மூலையில் பதியவில்லை… ஆனால் மனதிற்கு மரண அடி தந்தது…  இந்த நிமிடம் இந்த நொடி இப்படியே தன் உயிர் போகாதா என்று எண்ணினாள்… அவளுக்கு பதில் பேச வார்த்தை வரவில்லை.. சிலையென சமைந்து நின்று விட்டாள்..

 “ என்ன டி அமைதியாய் நின்றால் எப்படி ??? இனி இவனிடம் நம் பாச்சா பலிக்காது  இனி வேறு யாரையாது தான் தேடவேண்டும் என்று  யோசனையா??? அதுசரி சென்னையில் பணக்காரர்களுக்கா குறைச்சல்.. ச்சி இந்த சொத்துக்காக ஆசைப்பட்டு இப்படி காதல் நாடகம் ஆடி   உன் முகத்தில் விழிக்கவே கூடாது..”

“ உன் பத்தினி தனத்தை எல்லாம் எவனாவது மாட்டுவான் அவனிடம் காட்டு.. என்ன ஜென்மமோ.. இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை.. உன் நாடகம் இங்கு பலிக்காது.. நீ இனி வேறு இடம் தான் பார்க்கவேண்டும் போயிவிடு ….. “ என்று அவன்பாட்டுக்கு பேசிவிட்டு இல்லை இல்லை அவளை வார்த்தைகளால் வதைத்து விட்டு சென்று விட்டான்..

வசுமதி செய்வது அறியாமல் திகைத்து நின்றாள். அவன் கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவளது மனதை வதைத்தன… “ என்ன வார்த்தை கூறி விட்டான்…  நான் நடித்தேனா ??? காதல் என்ற பெயரில் இந்த சொத்துக்காக நடித்தேனா ??? அதுவும் இவனிடம்… அட ஆண்டவா ??? கடைசியில் என்ன கூறிவிட்டான்… காசுக்காக இவனிடம் வந்தேனா…..” அவன் கூறியதை முழுமையாக எண்ண கூட அவளால் முடியவில்லை…

“ எப்படி இவனால் என்னை பார்த்து இது போல கூற முடிந்தது… “

என்னவன்…. என் அத்தான்…. என் கதிரவன்…. என் கதிர்… என் வாழ்க்கைக்கு ஒளி தந்தவன் என்று பெருமையாக நினைத்தேனே… இவன் மேல் கொண்ட காதலை எண்ணி எண்ணி மகிழ்ந்தேனே. இவனுக்காக என் குடும்பம் விட்டு என் நண்பர்கள் விட்டு நான் பிறந்து வளர்ந்த ஊர் வீட்டு இப்படி இங்கு வந்து இவனது வீட்டில் அனைவருக்கும் தொண்டு செய்தேனே..

பாசத்திற்காக செய்த அனைத்தையும் பணத்திற்காக என்று வண்ணம் பூசி விட்டானே… படுபாவி…. காதலுக்காக நான் செய்த அனைத்தையும் காசிற்காக என்று கூறி விட்டானே… கிராதகன்… சொந்தம் என்று நான் இறுமாந்து இருக்க கடைசியில் சொத்திற்காக என்று பழி போட்டு விட்டானே…

ஐயோ !!! அவளது உடல் எல்லாம் தகித்தது போல இருந்தது.. அவன் முத்தமிட்ட ஒவ்வொரு இடமும் பழுக்க காய்ச்சி சூடு வைத்தது போல பொசுக்கியது… அவன் அணைப்பில் இதே மாடியில் எத்தனை நாள் இருந்து இருப்பேன்… என்னவன் என்ற உரிமையில் தானே..

ஆனால் என்னையே கேவல படுத்தி விட்டானே.. இப்படி எல்லாம் எண்ணி எண்ணி வந்தவள் எப்படி படிகளில் கால் வைத்தாலோ தெரியவில்லை.. கண்ணீர் கண்ணை மறைத்தோ இல்லை கதிரவன் தந்த காயம் மனதை மறைத்தோ தெரியவில்லை…. சமதளமா இல்லை படிகட்டுகளா ??? என்று எதுவுமே தெரியவில்லை…

படிகளில் உருண்டு கீழே விழுந்தாள்… எதையாவது பிடித்துக் கொள்ளவேண்டும் என்று கூட அவளுக்கு தோன்ற வில்லை..

அவளது மனமும் மூளையும் கதிரவன் கூறிய திறவக வார்த்தைகளால் நிரம்பி இருந்தன…

அதான் வீரியம் அவளால் சிறிதும் தாங்கி கொள்ள முடியவில்லை வசுமதியால்…. எதையும் சிந்திக்க கூட முடியவில்லை… அவள் உணர்வுகள் அறுந்தன… உயிர் துடித்தது… மனம் மரணித்து பல நொடிகள் ஆயிற்று… ஜடமாகி போனாள் வசுமதி… இறுதியில் படிகளில் உருண்டு விழுந்தவள் விழுந்தவள் தான்…

ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்…  

 

 

 

 

உன் நினைவு –  23

என்னவன் என்று நினைத்தேனடா- என் மீது

ஏறி தணலை வாரி இறைத்தாயே…..

மன்னவன் என்று நினைத்தேனடா – என்

மனதை கூறு போட்டாயே…

உன்னவள் என்று நான்

உன்மத்தம் கொண்டிருக்க – என்

காதலை கருவறுத்து

கண்ணீர் சிதையில் மூழ்கடித்து விட்டாயே…

இரவு எப்பொழுதும் ஒரு முறை வீடு எல்லாம் சரியாக பூட்டி உள்ளதா என்று பார்க்க வருவார் காமாட்சி.. அன்றும் அது போல வந்தவர் விழுந்து கிடந்த வசுமதியை பார்த்து ஒரு நிமிடம் உறைந்து நின்று விட்டார்.. கண் பார்ப்பதை மூளை உணர மறுத்தது..

ஒரு நிமிடம் தான் காண்பதை அவரால் நம்ப முடியவில்லை.. பின் திடுக்கிட்டு “ ஐயோ !! வசும்மா “ என்று அலறி விட்டார்… அர்த்த ஜாமத்தில் காமாட்சியின் அலறலை கேட்டு அனைவரும் எழுந்து ஓடி வந்து பார்த்தவர்கள் செய்வது அரியது திகைத்து நின்றனர்..

“ கண்ணம்மா…. வசுகுட்டி…. வசும்மா… “ என்று கலவையான சத்தங்கள் கீழே கேட்பதை உணர்ந்த கதிரவன் “ இந்த நேரத்தில் என்ன இப்படி இவள் பேரை சொல்லி எல்லாம் சத்தம் போட்டுக்கிட்டு இருகாங்க.. என்ன நாடகம் செய்து  வைத்து  இருக்காளோ ??? ” என்று எண்ணியபடியே கீழே இறங்கி வந்தவன் அப்படியே நின்று விட்டான்..

அவனது சப்த நாடியும் அடங்கி விட்டது.. “ மதி…. ” என்பதை தவிற வேறு எதுவும் அவனால் கூற முடியவில்லை.. இரண்டு இரண்டு படிகளாக தாவி இறங்கி வந்தவன் அவளை அப்படியே தூக்கி தன் மாடியில் கிடத்தினான்..

“ மதி மதி உனக்கு என்ன அச்சு.. ஏன் இப்படி விழுந்து கிடக்க.. மதி எழுந்திரி டி… மதி ப்ளீஸ் எந்திரி டி.. என்னை பாரு டி…. “ என்று கதறி துடித்தான்..

ஒருவாறு சூழ்நிலையை உணர்ந்து “ டேய் அழகு இப்ப டென்ஷன் ஆகும் நேரம் இல்லை.. போயி வேகமாய் கார் ஏடு டா  ” என்று கத்தினான்.. கதிரவன் வசுமதியை கைகளில் ஏந்திக்கொண்டு வெளிய வரவும் அழகேசன் கார் கொண்டு வரவும் சரியாக இருந்தது.. அனைவரும் ஏறி மருத்துவமனைக்கு சென்றனர்… வசுமதி அவசார பிரிவில் அனுமதிக்க பட்டாள்…

கதிரவன் அப்படியே நான் பூட்டிய வில்லாக விறைத்து அமர்ந்து இருந்தான்.. அவனிடம் செல்ல கூட அனைவருக்கும் பயமாக இருந்தது.. சிலையென அமர்ந்து இருந்தான்.. கண்கள் இமைக்க மறந்து வெறித்து பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.. அவன் மனதில் என்ன இருக்கிறது என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்பதை யாராலும் யோசிக்க கூட முடியவில்லை….

அன்னபூரணி தன் நெஞ்சை பிடித்து அமர்ந்துவிட்டார்.. அவரது வாய் “ கண்ணம்மா கண்ணம்மா “ என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தது.. சிவபாண்டியன் காமாட்சி செய்வது அறியாது திகைத்து நின்றனர்… அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை… அழகேசன் தான் அனைத்தையும் பொறுப்பாக பார்த்து கொண்டு  இருந்தான்..

பின் ஒருவாறு சூழ்நிலை புரிந்து வந்த காமாட்சி தன் கணவரிடம் “ என்னங்க வசந்திக்கு சொல்லணுமே “ என்றார் மெதுவாக.. சிவபாண்டியனோ சொல்ல முடியாத வருத்தத்தில் இருந்தார்…

“ ம்ம் இப்ப வேண்டாம் காமாட்சி… பொழுது விடியட்டும்.. இந்நேரம் சொன்னால்   என்னவோ ஏதோன்னு மிகவும் பயந்துடுவாங்க… “ என்றார் கம்மி போன குரலில்…

“ காலையில் அத்தனை சந்தோசமாக தன்னிடம் மடியில் படுத்து கொண்டு சிரித்து பேசினாள்… கல்யாணம்னு சொன்னதுமே எப்படி வெக்கப்பட்டா தெரியுமா ??? ஆனால்  இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலையே “ என்று புலம்பினர் காமாட்சி…

அன்னபூரனியோ நேராக ஆண்டவனிடமே முறையிட்டார் “ கடவுளே என் உயிரை எடுத்துக்கோ.. என் பேத்திய எதுவும் பண்ணிடாத.. வாழ வேண்டிய பொண்ணு அவ.. மனசார யாருக்கும் எதுவும் தப்பு நினைச்சதில்ல அவ..” என்று அவர் ஒரு பக்கம் புலம்பி கொண்டு இருந்தார்..

ஆனால் இது எதுவுமே கதிரவன் காதுகளில் விழவில்லை.. அவனது கண்முன் தோன்றியது எல்லாம் அவள் விழுந்து கிடந்த கோலம் தான்… அவனது உணர்வுகளை அவனால் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.. சிறிது நேரம் முன்பு அவளை வார்த்தைகளால் குத்தி குதறியது என்ன??? இப்பொழுது இறுகி போயி அமர்ந்து இருப்பது என்ன ???

அவனுக்கே தன் மனம் என்ன எண்ணுகிறது என்பது தெரியவில்லை.. ஒரு மணி நேர தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் வெளியே வந்தார்.. அனைவரும் ஆவலுடன் அவரை பார்த்தனர்.. ஆனால் கதிரவனிடமோ எதற்கும் அசைவில்லை.. மருத்துவர் தான் பேச ஆரம்பித்தார்

“ எல்லாரும் டென்ஷன் இல்லாம நான் சொல்வதை கேளுங்க.. தலையில நல்ல அடி.. நினைவு வந்து வந்து போகிறது.  எதுவும் காலை விடியுற வரைக்கும் உறுதியா சொல்ல முடியாது… யாராவது ஒருத்தர் மட்டும் கூட இருங்க.. தயவு செஞ்சு கூட்டம் போட வேண்டாம் “

இவர் இப்படி கூறியதை கேட்டதும் அனைவரின் முகத்திலும் கலவரம்.. பெண்கள் தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர்… காமாட்சியும் அன்னபூரணியும் அழவே ஆரம்பித்து விட்டனர்… சிவபாண்டியன் மற்றும் அழகேசன் இருவரும் தான் “ என்ன டாக்டர் சொல்றிங்க ??விடிந்த பிறகு தான் சொல்ல முடியும்னா என்ன அர்த்தம் டாக்டர்???  வேண்டும் என்றால் மதுரைக்கு கூட்டி போகலாமா ?? “  என்று பதற்றமாய் வினவினார்..

“ இங்க குடுக்குற இதே ட்ரீட்மெண்ட் தான் நீங்க எங்க போனாலும் குடுப்பாங்க… நினைவு வந்து வந்து போவதுனால தான் அப்படி சொன்னேன் மற்றபடி வேறு எதுவுமில்லை.. நினைவு திரும்பிவிட்டாள் எந்த பிரச்சனையும் இல்லை… நீங்க எதுவும் பயப்பட வேண்டாம் “ என்று கூறி டாக்டர் சென்று விட்டார்..

மருத்துவமனையில் ஒவ்வொரு நொடியும் நகருவேனா என்று இருந்தது.. அன்னபூரணியை அங்கு இருந்த அறையில் வற்புறுத்தி உறங்க வைத்தனர்.. காமாட்சி சிவபாண்டியன் இருவரும் கறுத்துப்போன முகத்துடன் கடிகாரத்தை பார்ப்பதும் உள்ளே வசுமதியை பார்ப்பதுமாக இருந்தனர்…

அழகேசன் தான் அந்த நேரத்திலும் மருந்து வாங்க என்று அலைந்து கொண்டு இருந்தான்.. எத்தனை முறை  கதிரவனை அழைத்தும் எதற்கும் அவனிடம் பதிலோ அசைவோ இல்லை.. இதை கண்ட காமாட்சி உள்ளே படுத்து இருக்கும் வசுமதிக்காக அழுவதா ??? இல்லை இப்படி தன் மகன் இருக்கும் நிலை கண்டு கலங்குவதா என்று குழம்பி போய் இருந்தார்..

சிவபாண்டியன் தன் தங்கையிடம் எப்படி இதை கூறுவது என தவித்து  விட்டார். அழகுதான் அவருக்கு உதவிக்கு வந்தான்.. இந்த விஷயத்தை பற்றி தான் சென்னைக்கு பேசுவதாக கூறிவிட்டான்.. வேகமாக சிவாவிற்கு அழைத்து நடந்த விசயத்தை கூறினான்.. முதலில் மிகவும் டென்ஷன் ஆன சிவா பின் நிலைமையை உணர்ந்து தான் பார்த்து அனைவரையும் அங்கு கூட்டி வருவதாக கூறிவிட்டான்..

 “ கடவுளே என் அக்காக்கு எதும் ஆகா கூடாது… ப்ளீஸ் “ என்று இறைவனிடம் முறையிட்டான் சிவா. எப்படியோ ஒருவழியாய் தன் பெற்றோர்களை கிளப்பினான்.   பிளைட்டில் மதுரைக்கு கிளம்பினர்.,. மதுரையில் இருந்து போடிக்கு வர அழகு கார் அனுப்புகிறேன் என்று கூறிவிட்டான்… தேனி தாண்டவும் தான் சிவா மெல்ல விஷயத்தை தன் அப்பா அம்மவிடம் கூறினான்….

வசந்தி “ டேய் சிவா சுமதிக்கு போன் போடு டா… இன்னுமா அவளுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.. ” எனவும் சிவா அவரது முகத்தை வருத்தமாக பார்த்தான்.. அவனது கண்களில் கண்ணீர்.. பாவம் இத்தனை நேரம் எப்படி தான் அமைதியாக தாங்கினானோ?? தெரியவில்லை..

“ என்னடா முழிக்கிற??? ” போன் போட்டு குடு சொல்லுறேன்ல.. ஏன் டா எங்கள் போனையும் வாங்கி வச்சுகிட்ட.. நீயும் அமைதியா வந்தா என்ன பண்ணுறது?? ” என்று பொரிந்து தள்ளியவர் அப்பொழுதுதான் உணர்ந்தார் கார் வீட்டிற்கு செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் போனது..

“ என்னங்க வண்டி வீட்டுக்கு போகாமல்  எங்க போகிறது ?? ” என்றார் ஒரு பதற்றமான குரலில்… அவர் பதில் கூறுமுன் சிவா “ ஹாஸ்பிடலுக்கு” என்றான் மெல்ல…

வசந்தியோடு சேர்த்து சண்முகநாதனும் திகைத்து பார்த்தார்.. “ என்ன ஹாஸ்பிடலுக்கா ?? என்னடா சொல்லுற.. அம்மாச்சிக்கு எதுவும் முடியவில்லையா ?? அதான் எங்களை இப்படி அவசரமா கூட்டி வந்தயா ?? ” என்று இருவரும் ஒருசேர கேட்டனர்..

ஆனால் சிவாவோ கம்மிபோன குரலில் “ அம்மாச்சி நல்லா தான் இருக்கு.. அக்கா தான்….” என்று சொல்ல முடியாமல் தவித்தான்…

வசந்தி பொறுமையை இழந்தவராக “ டேய் சிவா சீக்கிரம் சொல்லு… வ… வ.. சுமதிக்கு என்ன டா???  ஏன் டா இவ்வளோ நேரம் அமைதியா வந்த ?? “

“அம்மா அப்பா பொறுமையா கேளுங்க.. அக்காக்கு ஒண்ணுமில்ல.. மாடி படியில் கால் தவறி விழுந்திட்டா போல.. லேசா அடிப்பட்டு இருக்கு… அதான் ஹாஸ்பிடலில் சேத்து இருகாங்க..” என்றான் அவர்கள் மிகவும் பயந்துவிட கூடாது என்று…

வசந்தி அதிர்ந்து விட்டார்… சண்முகநாதன் திகைத்துவிட்டார்.. அவர்கள் பதில் கூறும்முன் கார் ஹாஸ்பிட்டல் வாசலில் நின்றது…

விடிகாலை அழகேசன் மீனாட்சிக்கு தகவல் சொல்லவும் வேகமாக அனைவருக்கும் காலை உணவு செய்துகொண்டு மீனாட்சி அவளின் அப்பா அம்மாவும் வந்து விட்டனர்.. விஷயம் அறிந்த பொன்மலர் மல்லிகா கூட பதறி வந்துவிட்டனர்.. மீனாட்சியும் அழகேசணும் தான் அனைவரையும் கவனித்து கொண்டனர்..    

ஆனால் யாருக்கும் ஒரு வாய் உணவு கூட வாயில் இறங்க வில்லை.. அன்னபூரனியோ ஒரே நாள் இரவில் தொய்ந்து போய்விட்டார்.. ஏற்கனவே வயோதிகம்.. இதில் வசுமதி பற்றிய வேதனை வேறு.. அவரை மிகவும் பாதித்துவிட்டது…

அனைவரும் டாக்டர் கூறிய நேரம் கடக்கவும் பேரும் கவலையில் இருந்தனர்.. காமாட்சி “ என்னங்க இன்னொரு தடவ போயி டாக்டர் கிட்ட பேசிட்டு வாங்க.. இன்னும் வசுமதிக்கு நினைவு திரும்பலை இன்னும் கொஞ்ச நேரத்துல வசந்தி வந்திடுவா.. அவள் கிட்ட நான் என்ன பதில் சொல்லுவேன்” என்று கண் கலங்கினார்..

வேகமாக வெளியே வந்த நர்ஸ் “ அந்த பொண்ணுக்கு நினைவு வந்திடுச்சு யாராவது ஒருத்தர் மாட்டும் போயி டென்ஷன் ஆகாம பேசுங்க.. எந்த காரணம் கொண்டும் அவர்கள் டென்ஷன் ஆக கூடாது “ என்று கூறி அனைவரின் உள்ளத்திலும் பாலை வார்த்தார்..

அனைவரும் மனதிற்குள் ஆண்டவனுக்கு நன்றி கூறியபடி யார் செல்வது என்று ஒரு நிமிட யோசனையின் பின் அனைவரின் பார்வையுமே கதிரவனிடம் சென்றது…

நர்ஸ் வந்து அந்த பொண்ணுக்கு நினைவு திரும்பி விட்டது என்று கூறியது மட்டும் தான் அவன் காதுகளில் விழுந்தது போல.. அவன் முகத்தில் ஒரு நிம்மதி பறவியது.. கண்களில் ஒரு ஒளி… அத்தனை நேரம் சிலை என அமர்ந்து இருந்தவன் அப்பொழுதான் அசைந்தான்..

அவனிடம் அசைவு தெரிந்த பின் அழகேசன் தான் அவனிடம் சென்று “ டேய் கதிரவா போ டா போய் பாரு டா… தங்கச்சிக்கு முழிப்பு வந்துவிட்டதாம்  அது உன்னை தான் தேடும் டா…” என்று உலுக்கினான்.. ஆனால் கதிரவன் எந்த முகத்தை வைத்துகொண்டு அவளை பார்ப்பான்…

அவனது கண்களில் நீர் கோர்த்தது.. தன்னை நினைத்தால் அவனுக்கு கேவலமாக இருந்தது… என்ன மாதிரி வார்த்தைகள் கூறி அவளை வதைத்து விட்டான்…. தான் செய்த தவரை உணர்ந்து தான் இத்தனை நேரம் இறுகி போய் அமர்ந்து இருந்தான்…

அவள் அவனிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் மட்டும் தான் அவனது செவியில் ரீங்காரம் அடித்து கொண்டு இருந்தது.. வசுமதிக்கு கடைசியாக நினைவு தப்பும் முன் அதாவது காறுக்கு கதிரவன் தூக்கி செல்லும் பொழுது அவனது தொடுகையை உணர்ந்தாலோ ?? இல்லை அவனது இதயத்தின் துடிப்பு அவளது இதயத்திற்கு பாய்ந்ததோ…?? தெரியவில்லை…

ஆனால் ஒரே ஒரு நிமிடம்.. ஒரு நிமிடம் கூட ஜாஸ்தி தான்…. கதிரவன் கைகளில் ஏந்தி அவளை தூக்கி செல்லும் பொழுது கண் திறந்து அவனது முகத்தை ஒரு முறை ஆசையாக காதலுடன் பார்த்து கண்களின் வழியே இதயத்தில் நிறப்பிக்கொண்டாள்… அவளது பார்வையை எப்படி உணர்ந்தானோ அவனது கண்களில் வழிந்த கண்ணீர் அவளது முகத்தில் விழுந்தது…

அவள் அவனிடம் பேசிய கடைசி வார்த்தை.. பேசமுடியாமல் திணறி திக்கி மூச்சு விட சிரம பட்டு இதயத்தின் ஆழத்தில் இருந்து அவள் பேசிய வார்த்தைகள் கதிரவனுக்கு சம்பட்டியை கொண்டு சாத்தியது போல இருந்தது…

“ அத்…..அத்தான்…. அத்தான்….. நா….. நான் … நிஜமா…. நிஜாமவே…. அப்படி… பட்…. பொ… இல்ல… ஒரு…. நாள் நீ….. நீங்க … என்….. புருஞ்சு… ங்க… ஆனா… அப்.. நா உங்கள் கூட இருப்…. தெரியாது ”

இது இது மட்டும் தான் வசுமதி கடைசியாக அவனிடம் பேசியது… அதுவும் விரல் சொடுக்கும் நேரத்தில்.. அதன் பிறகு அவளுக்கு நினைவு தப்பி விட்டது.  அவள் என்ன கூறிகிறாள் என்பது கூட அவனுக்கு முதலில் புரியவில்லை..

அவளை முதலில் எப்படியாவது ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது மட்டும் தான் அவனது உடலில் இருந்த ஒரு ஒரு செல்லுக்கும் தோன்றியது.. ஹாஸ்பிடல் வந்து அவளை அனுமதித்த பின்னரே அவள் கூறியதை நினைத்து பார்த்தான்…

“ என்ன பேசிவிட்டாள்… அய்யோ என்ன வார்த்தை எல்லாம் என்னால் வந்தது..  எல்லாமே போச்சு… உயிருக்கு துடிக்கிற கடைசி நிமிஷத்தில் கூட அத்தான் என்று  கூப்பிட்டாளே… இனி எப்படி அவள் முன்னாடி போய் நிற்பேன்… எல்லாத்தையும் நான் நாசம் பண்ணிவிட்டேனே.. அத்தான் அத்தான் என்று சுத்தி சுத்தி வருவா… நான் கோவப்படும் போது எல்லாம் அவளே வந்து சமாதானம் செய்வாளே… ”

இப்படி எல்லாம் எண்ணி எண்ணி மருகினான்… ஒரு நிமிடத்தில் ஒரே ஒரு நிமிடத்தில் அவள் கூறிய வார்த்தைகள் அவனது மனதை தைத்து விட்டன… ஒரு நிமிட கோவத்தில்… அந்த கோவத்தின் மூர்கத்தில்… மூர்கத்தினால் வந்த முட்டாள்தனத்தில் வார்த்தைகளை அவளை நோக்கி வீசிவிட்டான்.

பேச கூடாத வார்த்தைகளை பேசி விட்டான்… தன்னவளை நோக்கி கேட்க கூடாத  பேச்சுகளை எல்லாம் பேசிவிட்டான்.. இனி எதையும் மாற்ற முடியாது.. விதி இருவருக்கு நடுவிலும் கண்ணுக்கு தெரியாத பெரிய சுவரை எழுப்பி விட்டது…

அவள் கூறிய வார்த்தைகளே அவனது இயல்பை மாற்றி விட்டது.. அவனது தவறை உணர செய்தது… “ என் மதி….. என் மதி…. ஐயோ இனி அவளை இப்படி கூப்பிட முடியுமா ??? உரிமையாக அவள் கண்ணை பாத்து பேச முடியுமா ??? நன் சொல்வதை  எல்லாம் கேட்டாளே… அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட எனக்காக அனைத்தையும் மாற்றிகொண்டாலே ஆனால்  நான் என்ன செய்தேன் ??? அவளை இப்படி வந்து படுக்க வைத்துவிட்டேன் “ என்று அவன் மனதிற் உள்ளேயே நொறுங்கி தவித்தான்..

இப்படி எல்லாம் பலவாறு அவன சிந்தனையில் மூழ்கி இருக்க, அழகேசன் அவனை பிடித்து உலுக்கி கொண்டு இருந்தான்.. “ டேய் டேய் கதிரவா… போடா போயி முதலில் பாரு.. அது உன்னை  தான் தேடும் “

இந்த வார்த்தைகளை கேட்ட பின்னர் தான் சிலை என்று அமர்ந்து இருந்தவன் சிறு அசைவு கண்டான்..” என் மதி முழிச்சிட்டடா.. இனி அவளுக்கு எதுவும் ஆகாது…” என்று கூறியவாறே வேகமாக உள்ளே சென்றான்..

உள்ளே படுக்கையில் காய்ந்து போன சருகாக ஒரே நாள் இரவில் தோய்ந்து  போய் கிடந்தாள்… அவளை இந்த கோலத்தில் கனவும் கதிரவனுக்கு கண்களில் கண்ணீர் முட்டியது… அவனால் அவளை இப்படி பார்கவே  முடியவில்லை..                                                                        

எப்பொழுதும் சிரித்தபடி அவனை கண்டதும் முகம் மலரும் வசுமதி இன்று தலையில் கட்டுடன் முகம் கருத்து படுத்து கிடந்தாள்.. அவள் இமைகளை கூட வேகமாக திறக்க முடியவில்லை..

மெல்ல நடந்து அவள் அருகில் சென்றவன் ஒரு நிமிடம் அவளை தன் கண்களில் நிரப்பிகொண்டன்… அவள் நன்றாக தான் இருக்கிறாள் என்பதை அவனால் இன்னும் உணர முடியவில்லை… மெல்ல, எங்கே தான் சத்தமாக அழைத்தாள் கூட அவளுக்கு வலிக்குமோ என்று எண்ணி மெதுவாக “ மதி “ என்று அழைத்தான்..

அவனது இந்த அழைப்பில் மெல்ல விழி திறந்தவள் அவனை கூர்மையாக ஒரு பார்வை பார்த்து தன் பலம் அனைத்தையும் திரட்டி “ அத்தை “ என்று கத்திவிட்டாள்..

கதிரவனுக்கு எதுவும் புரியவில்லை.. “ என்ன இது ஏன் இப்படி கத்துகிறாள்?? அம்மாவை ஏன் கூப்பிடுகிறாள் ?? ஒருவேளை அவளுக்கு எதுவும் வேண்டுமோ  ” என்று எண்ணியவன் “ மதி ஏன் டா இப்படி சத்தம் போடுற…  என்னிடம் கேளு மதி “ என்றான் பாசமாக…

அனால் அவளோ அவனை பார்வையில் எரித்துவிடுவாள் போல… அவனது முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை.. மீண்டும் “ அத்தை “ என்று சத்தமாக அழைக்கவும் காமாட்சி என்னவோ என்று பதறியபடி உள்ளே வந்தார் “ என்ன வசும்மா ?? என்ன டா பண்ணுகிறது வலிக்கிறதா  ?? ” என்று மென்மையாக ஆனால் வேகமாக கேட்டார்..

ஆனால் வசுமதியின் குறளோ அதற்கு நேர் மாறாக திடமாக கோவமாக உறுதியாக ஒலித்தது.. “ அத்தை.. முதலில் உங்கள் மகனை வெளிய போக சொல்லுங்கள்.. “ என்றாள்..

அவள் இப்படி கூறியதை கேட்டு அதிர்ந்த காமாட்சி “ ஏன் டா ?? அவன் நேற்று  இருந்து மிகவும் தவித்துவிட்டான்   “ என்றார் குழம்பியவாறே.. 

வசுமதியோ ஒரு விரக்தியில் சிரித்தாள் பின் திடமாக “ எனக்கு உங்கள் மகன் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை  அத்தை… அவரை வெளிய போக சொல்லுறீங்களா.. இல்லை நான் போகவா ??? “ என்று கேட்ட வாறே எழ போனாள்…

காமாட்சி பதறிவிட்டார்… “ ஐயோ வசும்மா.. என்ன இது…  “ என்று அவர் கூறவும் கதிரவன் “ அம்மா நானே போகிறேன் “ என்று போகவும் சரியாக இருந்தது…

அவன் செல்வதையே ஒரு வெற்று பார்வை பார்த்தபடி படுத்து இருந்தாள் வசுமதி… காமாட்சியோ குழப்பத்தின் உச்சியில் இருந்தார்.. “ அத்தை “ என்று மெல்ல அழைத்தாள்… முன்பெல்லாம் அவள் இப்படி அழைக்கும்பொழுது அதில் ஒரு உரிமை ஒரு பாசம் கலந்து இருக்கும்.. ஆனால் இப்பொழுது அவள் அத்தை என்று அழைத்த விதத்தில் ஒரு மரியாதை ஒரு பாசம் மட்டுமே இருந்தது…

இதை காமாட்சியும் உணர்ந்து கொண்டார்… “ என்னவோ நடந்து இருக்கிறது “ எண்ணியவர் “ என்ன வசும்மா ??? என்னடா “ என்றார் அவளிடம் அன்பாக.. இதற்குமேல் அவளிடம் என்னவென்று கேட்பது என்று அவருக்கு புரியவில்லை.. 

 “ வசும்மா ஏதாவது பேசு டா “ என்றார் காமாட்சி… அவருக்கு உள்ளே பயம் குழப்பம்… என்று கலவையான உணர்வுகள்..

மீண்டும் “ அத்தை….” என்றால் மெதுவாக.. அப்பொழுது தான் அவளை கூர்ந்து கவனித்தார் காமாட்சி.. அவளது கண்களில் கண்ணீர் வழிந்தன.. உதடுகள் துடித்தன.. போங்கி வந்த அழுகையை கட்டுபடுத்த கஷ்டப்பட்டு அமர்ந்து இருந்தாள்..

“ என்ன வசும்மா.. எதுனாலும் அத்தை கிட்ட சொல்லு டா “ என்று தவித்தார்.. அவளது முகத்தை காண பொறுக்கவில்லை.. பின் ஒரு வாறு தன்னை திடபடுத்தி கொண்ட வசுமதி ” அத்தை… அப்பா அம்மாக்கு சொல்லிட்டீங்களா ??? ”

“ சொல்லியாச்சு வசும்மா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க தேனியை  நெருங்கிட்டோம் என்று  சிவா போன் செய்தான்  “

“ ம்ம் அத்தை சிவா வந்த உடனே அவன்கிட்ட சொல்லி அங்க வீட்டில் இருக்க என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர சொல்லுங்க அத்தை.. நான் ஊருக்கு போக வேண்டும்  “ என்றாள் நிதானமாக… உறுதியாக.

அவள் கூறியதை கேட்ட காமாட்சி ஒரு நிமிடம் தான் என்ன கேட்டோம் என்பதே அவருக்கு முதலில் புரியவில்லை.. “ என்… என்ன டா சொன்ன இப்போ ??? ” என்றார் நம்பமாட்டாமல் மீண்டும்..

“ நான் ஊருக்கு போக போகிறேன் அத்தை…” என்றாள் மீண்டும் அதே குரலில்..

“ ஊருக்கு தான போகலாம் வசும்மா.. இப்ப என்ன அவசரம்.. காயம் எல்லாம் அரட்டும் ஹாஸ்பிட்டல்ல இருந்து முதலில் நம்ம வீட்டுக்கு போகலாம்.. அப்புறோம் உடம்பு நல்ல ஆகவும் ஊருக்கு போகலாம் “ என்றார் சிறு குழந்தைக்கு கூறுவது போல..

ஆனால் அவளோ “ இல்லை அத்தை நான் என் வீட்டுக்கு போகணும்… “

வசுமதியின் பதிலில் திகைத்த காமாட்சி “ உன் வீடா… அதுவும் உன் வீடு தான வசும்மா.. ஏன் டா இப்படி எல்லாம் பேசுற.. அத்தை என்னைக்காவது என்னிடம்  கோவமா நடந்து இருக்கேனா ??? ஏன் வசும்மா ? ”

“ இல்லை அத்தை அது என் வீடு இல்லை… நான் அப்படித்தான் நினைச்சேன்.. என் வீடு.. நீங்க எல்லாரும் என் குடும்பம்.. என் சொந்தம் என்று அதனால தான் நான் இங்க தங்கினேன்… உரிமை எடுத்து பழகினேன்… ஆனா….” என்று கூறி நிறுத்தினாள்..

“ஆனால் …. ஆனால்  என்ன வசும்மா ??? உன்னை யாராவது எதாவது சொன்னாங்களா ?? ஏன் டா இப்படி நீ வருத்தபடுகிற.. இப்பயும் அது உன் வீடு தான் வசும்மா.. நாங்கள் எல்லாம் உன் குடும்பம் தான்….”

“ இல்லை அத்தை…. நான் மட்டும் அப்படி நினைத்தால்   போதுமா எனக்கு என் அம்மா வேறு இல்லை நீங்க வேறு இல்லை.. அதுனால தான் நான் இப்ப உங்ககிட்ட நான் ஊருக்கு செல்லவேண்டும் என்று சொல்கிறேன்… ப்ளீஸ் அத்தை என்னிடம்  எதுவும் கேட்காதிங்க ப்ளீஸ் அத்தை ” என்றாள் கெஞ்சலும் கண்ணீருமாக..

அவளது கண்ணீரை கண்ட காமாட்சி பதறியபடி அவளிடம் வந்து அவளது கைகளை பிடித்து கொண்டு “ வசும்மா ஏன் டா அழுகுறா… நீ டென்ஷன் ஆக கூடாதுன்னு டாக்டர் சொன்னங்கமா… உனக்கு எங்கள் இருக்க பிடிக்கிதோ அங்கு  இருடா நான் எதுவும் சொல்ல மாட்டேன் கண்ணம்மா சரியா “ என்று அவளை சமாதானம் செய்தார்..

இப்படி பட்ட ஒரு பெண்மணி தனக்கு மாமியராக வர தனக்கு குடுப்பினை இல்லையே என்று எண்ணியவள் அதற்கும் கண்ணீர் வடித்தாள்..

“ என்ன வசும்மா எதுனாலும் என்னிடம் மனசுவிட்டு பேசுடா அப்பதான எனக்கு புரியும்.. இப்படி அழுதுகிட்டே இருந்தா எப்படி ?? ”

“ அத்தை இப்ப நான் சொல்வது தான் என் முதலும் கடைசியுமான முடிவு.. நான் உங்களுக்கு நாத்தியின் மகள்.. உங்களை நான் அத்தையா மட்டுமில்ல அம்மாவாவும் நினைக்கின்றேன்… எனக்கு உங்களிடம்  தனிப்பட்ட முறையில் நிறைய பாசம் இருக்கு.. மரியாதை இருக்கு.. நம்ம உறவு இப்ப மாதிரியே கடைசி வரைக்கும் இருக்கணும்னு நினைக்கிறன்.. ஆனால்  இதுக்கு மேல் நீங்க என்னை உங்கள் மருமகளா கொண்டு போகணும்ன்னு மட்டும் நினைக்க கூடாது.. அது இனிமே நடக்காது…  ” என்று ஒருவாறு தான் சொல்ல எண்ணியதை கூறிவிட்டாள்..

அவளுக்கு தெரியும் தான் கூறும் வார்த்தைகள் காமாட்சியை எத்தனை வருத்தும் என்பது.. ஆனால் அவளுக்கும் வேறு வழியில்லையே.. கதிரவனிடமிருந்து கேட்க கூடாத வார்த்தைகள் எல்லாம் கேட்ட பின்பு அவள் இன்னும் எப்படி அந்த வீட்டிற்கு செல்வாள்..??? இதற்கு பின்னும் காதல் கல்யாணம் எல்லாம் அவளால் கதிரவனோடு முடியுமா என்ன… மனதை கல்லாக்கி கொண்டாள்…

அவள் கூறிய வார்த்தைகளை முதலில் காமாட்சி நம்பவில்லை… மீண்டும் கேட்டார் “ என்ன வசும்மா சொல்லுற…???? நான் கேட்டது எல்லாம் …. இல்லை நான் சரியாய் தான் கேட்டேனா ???”  என்றார் திகைத்து அவளது முகத்தை பார்த்தபடி..

“ அத்தை நீங்க கேட்டது எல்லாம் நிஜம்தான்… சரியாய் தான் கேட்டு இருக்கீங்க அத்தை.. எனக்கு இந்த காதல், கல்யாணம் எல்லாம் வேண்டாம்  யப்பா போதும்… மறக்க முடியாதபடி உங்கள் மகன் எனக்கு நல்ல பரிசு கொடுத்துவிட்டார் அத்தை.. அதை நினைத்தாலே எனக்கு அப்படியே செத்து போயிவிடலாம் என்று  கூட இருக்கு “ என்று திடமாக பேச ஆரம்பித்தவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள்…

“ ச்சே வசும்மா என்ன வார்த்தை டா இது?? அவன் எதாவது கோவமாய் பேசினானா ?? சொல்லு டா நான் பேசுறேன் அவன்கிட்ட.. அதைவிட்டு கல்யாணம் வேண்டாம்  என்றால் என்ன அர்த்தம் ?? ”

வசுமதியோ அழுகையோடு “ இல்லை அத்தை இது தான் என் முடிவு.. அட்லீஸ்ட் நான் உயிரோடவாவது இருக்க  நினைத்தால்  இதுக்கு மேல் என்னிடம்  எதுவும் கேட்காதிங்க.. உங்கள் மகனிடம்  போயி கேளுங்க அத்தை.. ஆனால்  ஒன்று  அத்தை இது தான் என் முடிவு “ என்று கூறியவள் அசதியில் கண் மூடி சாய்ந்துவிட்டாள்…

ஒரு நிமிடம் ஒன்றுமே புரியாமல் நின்ற காமாட்சி முடிவு எடுத்தவராக வெளியே வந்தார்… அன்னபூரணியிடம் சென்று “ அத்தை நீங்க உள்ள வசுமதி கூட இருங்க.. அவள் உங்களை தான் கேட்டா “ என்று அவரை உள்ளே அனுப்பியவர் தன் மகனிடம் வந்தார்..

தன் கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து மேலே விட்டதை பார்த்தபடி கண்களில் கண்ணீரோடு நின்ற கதிரவனை காண முதலில் அவருக்கு மிகவும் வேதனையாக தான் இருந்தது.. ஆனால் வசுமதியின் வார்த்தைகளில் இருந்த வலியை கண்ணால் கண்டார் அல்லவா…

கதிரவனை நேராக பார்த்து “ என்ன செய்தாய் ?? ” என்றார் அழுத்தமாக..

அவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை குழம்பி “ என்ன அம்மா ?? ” என்றான் வேதனையாக…

“ நீ என்ன செய்தாய் ??? ” என்றார் மீண்டும் காமாட்சி.. அனைவரும் என்ன நடக்கிறது என்பது போல இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.. சிவபாண்டியன் தான் தன் மனைவியின் அருகில் வந்து

“ என்ன காமாட்சி என்ன கேட்கிற அவன்கிட்ட??? எங்களுக்கு எதுவுமே புரியவில்லையே ” என்றார்..

“ எனக்கும் எதுவும் புரியலைங்க …. இவன் என்ன செய்து  இருக்கான் என்று  எதுவும் புரியவில்லை.. உங்கள் பையனை தயவு செஞ்சு பதில் சொல்ல சொல்லுங்க “ என்றார் கதிரவனை பார்த்தப்படி..

கதிரவனுக்கு புரிந்துவிட்டது.. தன் அம்மா தன்னிடம் என்ன கேட்கிறார் என்று.. தலை கவிழ்ந்து நின்றான்.. சிவபாண்டியனோ “ என்ன கதிரவா அமைதியா இருக்க ?? அம்மா ஏதோ கேட்கிறாளே பதில் சொல்லு … ஏன் இப்படி நிக்கிற.. தப்பு பண்ண பையன் மாதிரி “ என்றார் குழப்பமாக..

“ தப்பு தாங்க பண்ணிருக்கான் அதான் அமைதியா நிற் \கிறான்… ஏய் கதிரவா என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு முதலில் பதில் சொல்லு “ என்றார் கறாராக..

அங்கே கதிரவன் அருகில் வந்த அழகேசன் “ டேய் கதிரவா ஏன் டா இப்படி அமைதியா இருந்து கொல்லுறா எல்லாரையும்.. அப்படி என்ன பண்ணி தொலைச்ச நீ சொல்லு டா??? “ என்று உலுக்கினான்..

“கேளு அழகேசா உள்ள இவ்வளோ நேரம் உயிருக்கு போராடி படுத்து இருக்காளே ஒருத்தி அவளை காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் நான் ஊருக்கு போறேன்னு என்று சொல்ற அளவுக்கு இவன் எதுவோ பேசி இருக்கான்.. ஒழுங்கு மரியாதையா அவனை பதில் பேச சொல்லு “ என்று காமாட்சி அம்மா சாமி ஆடினார்..

அனைவருக்கும் காமாட்சி கூறிய வார்த்தையை கேட்டு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது… என்ன இது என்பது போல அனைவரும் கதிரவன் முகத்தை பார்த்தனர்…

“ அம்மா……” என்றான் மெல்ல…

“ அம்மா ஆட்டுக்குட்டின்னு சொல்வது எல்லாம் இருக்கட்டும்… முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு “ என்றார் கோவமாக..

மிடறு விழுங்கியபடி “ அது வந்து அம்மா …..” என்று தயங்கியவன்.. தான் செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம் வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் முழுமூச்சில் கூறி விட்டான்..

அவன் பேசி முடித்ததும் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அங்கே ஒரு அமைதி நிலவியது.. ஆனால் அதெல்லாம் ஒரே ஒரு நிமிடம் தான்.. எங்கு இருந்து தான் காமாட்சிக்கு அத்தனை கோவமும் வேகமும் வந்ததோ பளார் பளார் என்று கதிரவனை அறைந்து விட்டார்..

தன் கன்னங்களை கைகளில் தாங்கியபடி “ அம்மா …..”  என்றான் திகைத்து..

“ ச்சி இனிமே அப்படி கூப்பிடாத…உன்னை  என் மகன் என்று  சொல்லவே வெட்கமா இருக்கு.. நீயாடா??? நீயாடா கதிரவா இப்படி அதும் உன் மேல் உயிரையே வைத்திருக்கும் இருக்குற பொண்ணு கிட்ட.. எப்படி டா  உனக்கு இப்படி பேச மனசு வந்துச்சு.. உன்னை நான் அப்படி வளர்க்கவில்லையே  பின்ன ஏன் டா இப்படி இடிய எறக்கிட்ட…. ??? ”

“ அம்மா ப்ளீஸ்…. நான் …………”

“ பேசாத… இனி என்னிடம் வந்து அம்மான்னு சொல்லி பேசாத…. இனிமே நீயாரோ நான் யாரோ… புரிஞ்சதா…. நீ இனிமே என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். ”

“ அம்மா நான் பண்ணது தப்பு தான் மா………. ”

“ ஏய் என்னடா நீ செய்தது  தப்புன்னு நீயே ஒத்துகிட்டா நாங்க எல்லாம் உன்னை மன்னித்து விற்றுவோமா ??? இங்க யார் உன்னை மன்னித்தாலும் நான் மன்னிக்கவே மாட்டேன்.. இனிமேல்  உன்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை ”

“ அம்மா …………” என்றான் அதிர்ந்து…

“ பணம்… சொத்து… இப்படி எல்லாம் பேச உனக்கு எப்படிடா தோணியது அதுவும் வசுமதிகிட்ட… ச்சே நினைக்கவே கூசுது… அப்படி பார்த்தால்  நீ தான் இப்ப சொத்துக்கு ஆசை பட்டு அவளை வேண்டாம் என்று  ஒதுக்கிட்ட….” என்றார் இன்னும் கோவமாக.. வேதனையோடு அவரை புரியாத பார்வை பார்த்தான்…

“என்ன பார்க்கிறா… சரி உன் வழிக்கே வரேன்… அவள் காதல் தான் உன்னை பொறுத்தவரை பொய்.. உன் காதல் என்ன ஆனது ?? எங்க அவள் வந்து இந்த சொத்து எல்லாம் அபகரிச்சுடுவளோன்னு பயந்து தான நீ வசுமதியை  வார்த்தையால கொன்னு போட்டுட்ட.. இப்ப யாருக்கு டா பணத்தாசை பிடிச்சு இருக்கு உனக்கா??? இல்லை அவளுக்கா ??? ”

இந்த வார்த்தை எல்லாம் கேட்கவும் வெட்கி தலை குனிந்துவிட்டன் கதிரவன்.. என்ன பதில் கூறுவான்.. அவனிடம் என்ன பதில் இருக்கிறது.. மௌனமாக நின்று விட்டான்.. குடும்பமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய கதிரவன் இன்று அதே குடும்பத்தின் முன்னால் தலை குனிந்து பதில் பேசமுடியாமல் நின்று விட்டான்.. அவனது முன்கோபத்தால்..

“ என்ன அமைதியா நிக்கிற??? எல்லாரயும் நிற்க வைத்து  கேள்வி கேட்ப்பியே ??? இப்ப என்ன அமைதியாகிட்ட  “ என்று பொரிந்து தள்ளினார் காமாட்சி..

பின் தன் கணவரிடம் “என்னங்க இனிமே நாம என்ன செய்ய போகிறோம்.. இவன் இப்படி ஒரு பேச்சு கேட்டு வைத்து இருக்கானே… வசந்தி வந்து கேட்டால்  நான் என்ன பதில் சொல்வேன்…. “ என்று கதறி அழுதவர் அப்படியே உறைந்து நின்று விட்டார்…

அனைவரின் பார்வையும் காமாட்சி பார்வை செல்லும் வழி சென்றது.. அனைவருமே திகைத்து நின்றுவிட்டனர்.. ஏனென்றால் அங்கே வசந்தி சண்முகநாதன் மற்றும் சிவா மூவரும் இங்கு நடந்த அனைத்தையும் கேட்டு அதிர்ந்து நின்று இருந்தனர்..

 

 

Advertisement