Advertisement

அத்தியாயம் எண்பத்தி ஒன்று:

நான் நானாகத் தான் இருப்பேன்! அந்த “நான்” ஐ  “நீ” யில் தேடப் போகிறேன்!

“அந்த மாதிரி ஸ்டுடியோ வா உனக்கு வேணும்” என்று ஈஸ்வர் கேட்க…  

“இல்லையில்லை, அதை விட இன்னும் பெட்டரா.. இது வேற.. எனக்கு வேலை ஃபுல்லா கம்ப்யுடர்ல தான்.. அது தெரியற மாதிரி பிக் ஸ்க்ரீன், ஸ்பெசிபிபிகேஷன்ஸ், அங்க யு எஸ் ல இருந்த மாதிரி கூட கேமராவும் இருந்தா பரவாயில்லை. பட் எனக்கு அதுல யுசேஜ் கம்மி, ஆனாலும் காஸ்ட்லி தான் வேணும் நோ காம்ப்ரமைஸ்” என ஆர்வமாகப் பேசினாள்.

அது பேசும் போது அந்தக் கண்களில் தெரிந்த பாவனை அவளின் வேலையின் மீது அவளுக்கு இருந்த காதலை காட்டியது. இப்படி மிகவும் ஆர்வமாக வர்ஷினி அவளின் வேலையில் இருப்பாள் என்பதே அவனுக்கு புதிய செய்தி தான்.  வர்ஷினியை

“என்ன பட்ஜெட் ஆகும்?” என,  

அவள் சொல்லவும்..

“என்ன?” என்பது போலப் பார்த்தான்… “ஏன் முடியாதா?” என.. 

“முடியாதுன்னா சொன்னேன், இவ்வளவு ஆகுமா இதுக்கெல்லாம்னு பார்தேன்” என,

“தோடா” என்றவள்.. “இந்தியால என்கிட்டே இருக்குற ப்ரொவிஷன்ஸ் அண்ட் லேட்டஸ்ட் டெக்னாலஜி யார் கிட்டயும் இருக்கக் கூடாது.. அண்ட் இப்போ நான் வொர்க் பண்ணின பிலிம்ல என்னோட ரெமுனரேஷன் எவ்வவளவு தெரியுமா?” என்றாள் கண்களில் சிறு கர்வம் மின்ன..  

“எவ்வளவு?” என்று மென்னகையோடு வினவியவனிடம்,  

அவள் சொன்னதில் நிஜமா என்பது போல நம்ப முடியாமல் பார்த்தான்.

“ஆம்” என்பது போல தலையசைத்தவள், “ஆனா நான் வேண்டாம் சொல்லிட்டேன்!” என்றாள் தலை சரித்து எதோ சாதித்து போல இன்னும் கர்வமாக!

“ஏன்? ஏன் வேண்டாம்னு சொல்லிட்ட?” என்று அவசரமாக கேட்க…

“இந்தியன் டிஸ்ட்ரிபியுஷன் கேட்டிருக்கேன்” என,

“என்ன சொல்லவேயில்லை?” என்று வாயை பிளந்தான்.. எவ்வளவு பெரிய முடிவு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி, இப்போது தான் அவளை தன்னிடம் வரவழைத்து இருக்கிறான் என்பது மறந்தே போனது! 

“படம் ரிலீஸ் இன்னும் அனௌன்ஸ் பண்ணலை! மூணு மாசம் ஆகும்… இன்னும் ஒரு மாசம் போன பிறகு வொர்க் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்.. அதுக்கு கிரௌண்ட் வொர்க் பண்ண தான் என் பிரண்ட்ஸ் ஸ்டுடியோ போனேன்”  

ஈஸ்வர் மனம் வெகுவாக சுனங்கத் தான் செய்தது. எதையுமே அவள் சொல்லவில்லை! அந்த யோசனையோடே அவளைப் பார்த்தான்.. “என்ன?” என்று அவனின் பார்வையை பார்த்துக் கேட்க..  

“இவ்வளவு ப்ளான்ஸ்.. அதுவும் ரொம்பப் பெருசு!  என்கிட்டே ஒரு வார்த்தைக் கூட சொல்லலை!”  

“சொல்லக் கூடாதுன்னு இல்லை! எதுவும் யார் கிட்டயும் சொல்லி சொல்லி செஞ்சு பழக்கமில்ல்லை.. இது கொஞ்சம் பெருசு தான்.. வந்த உடனே உங்க கிட்ட சொல்ல முடியாம சண்டை!” என்று தன்மையாகவே விளக்கம் கொடுத்தாள்.

“இப்போவும் சண்டையா என்ன?” என்றான் கூர்மையாக.  

“இல்லையில்லை! ப்ளான் பண்ணிட்டு சொல்லலாம்னு இருந்தேன்! இப்போ நீங்க கேட்கவும் சொல்லிட்டேன்! சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை!” என்று திரும்பவும் சொல்லி.. அவனின் அருகில் சென்று அமர்ந்தவள்.. “சாரி” என,

ஃபிலிம் இண்டஸ்ட்ரி! டிஸ்ட்ரிபியுஷன்! என ஈஸ்வரின் மனது சற்று சஞ்சலம் தான் கொண்டது!

“ஃபிலிம் இண்டஸ்ட்ரி போகணுமா வர்ஷ்!”  

“என்னோட ஃபீல்ட் அதுதானே!” என்றாள் தெளிவாக.

எதோ ஹாலிவுட் படம் வேலை செய்தாள் என்பது வேறு! இப்போது இங்கேயா? அவனுக்கு சற்றும் பிடித்தமில்லை என்பது தான் உண்மை! இதில் பிலிம் டிஸ்ட்ரிபியுஷன்  அது இதென்று போனால்..

யோசனைகலோடே மௌனமாக எழுந்து சென்று விட்டான்.. அவனுக்கு பிடித்தமில்லை என்பதுடன் கூடவே அவளின் அம்மா இருந்த ஒரு துறை!

ஈஸ்வரின் மௌனம் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.. உடனே பின் எழுந்து போகவும் மனதில்லை.. அன்றைய தினமே மெளனமாக கழிந்தது..

இரவு படுக்கும் போது கேட்டே விட்டாள்… “எதுக்கு இப்போ முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்கீங்க?” என,

“நான் முகத்தை தூக்கி வெச்சிருந்தா உனக்குக் கவலையா என்ன?” என,

முறைத்துப் பார்த்தாள்.. “சும்மா முறைச்சா நீ பண்ணினது சரின்னு ஆகிடாது!”  

“என்ன? என்ன நான் தப்பா பண்ணினேன்?”

“இவ்வளவு பெரிய டெசிஷன்ஸ் எங்கட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை!”

“நான் இங்கே வர்ற பிளான்லயே இல்லை, அப்புறம் எப்படி சொல்ல முடியும்”

“நீ என்ன நினைச்ச? நான் உன்னை விட்டுடுவேன்னா!” என்ற குரலில் இருந்த கோபம்.. வெகு நாட்களுக்கு பிறகு அவனின் கோபத்தை பார்க்கிறாள்..

இப்போது வர்ஷினி மெளனமாக இருக்க.. “எது பண்ணினாலும் சொல்லிட்டு பண்ணு, அது சரிவருமா வராதான்னு யோசிக்க வேண்டாமா!”  

அப்போதும் மெளனமாக இருக்க.. “நீ என்னோட மனைவி வர்ஷ்.. எது பண்ணினாலும் எனக்கு தெரியணும்.. புரிஞ்சதா! இன்னும் எவ்வளவு நாள் என்னை தள்ளி தள்ளி நிறுத்துவ! உன் பின்னாடியே சுத்தறேன், ஆனா ஒன்னுமே தெரியறதில்லை எனக்கு! நீ என்ன செஞ்சாலும் பார்த்துட்டு, விட்டுட்டு, எல்லாம் என்னால இருக்க முடியாது புரிஞ்சதா!” என்றவன்..

இருந்தால் இன்னும் பேசுவோம் என்று புரிந்தவனாக “தூங்கு” என சொல்லி ரூமை விட்டு வெளியே சென்று விட்டான். அவளின் அம்மாவின் அடையாளம் எங்காவது யாருக்காவது தெரிந்து விட்டால் என்ற பதட்டமும் கூட இருந்தது.   

அப்போதும் மெளனமாக தான் பார்த்திருந்தாள். ஆனாலும் ஏனோ அழுகை வந்தது.. பேசாமல் படுத்துக் கொள்ள.. இரவு இரண்டு மணிவரையிலும் அவன் உள்ளே வரவில்லை! இவளும் வெளியே சென்று என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லை!

ஆனால் உள்ளே வரும் வரையிலும் விழித்து தான் இருந்தாள்.. வெறுமனே படுத்துக் கொண்டே..        

“இன்னும் நீ தூங்கலையா”

பதில் பேசாமல் அவனைப் பார்த்திருந்தாள்.. “என்ன இப்போ?” என அருகில் வர… பேசாமல் கண்களை மூடிக் கொள்ளவும்..

“வர்ஷ் கேட்டா பதில் சொல்லணும்”

“சொல்ல முடியாது போ” என்றவளின் குரலில் அழுததின் சாயல் தெரிய..

“ப்ச், அழுதியா? என்ன இப்போ?”  

“நீங்க என்னை திட்டுறீங்க!”  

“பின்ன கொஞ்சிட்டே இருப்பாங்காலா?”  

“எப்போ நீங்க என்னை கொஞ்சினிங்க?”

“எப்போ நீ என்னை கொஞ்ச விட்ட?”

“போடா” என்றபடி போர்வையை எடுத்து முழுதாக மூடிக் கொண்டாள்.

நேரம் பார்த்தான், கிட்ட தட்ட மூன்று மணிநேரமாக உறங்காமல் இருக்கிறாள் என்பது புரிய..

“சண்டை போட எதுக்கு இவ்வளவு நேரம் முழிச்சு இருந்த, வந்து சண்டை போட வேண்டியது தானே! இவ்வளவு நேரம் சும்மா சுவரைப் பார்த்துட்டு இருந்தியா?” என்றான் சற்று காட்டமாக.

“அது எனக்கு எப்பவுமே பழக்கம் தான்”  

போர்வையை ஒரே இழாக இழுத்தவன்.. “சும்மா பழசே பேசிட்டு இருக்கக் கூடாது.. இது உன்னோட வீடு, ஹாஸ்டல் இல்லை!” என அதட்ட..

“இப்போ எதுக்கு என்னை திட்டிட்டே இருக்கீங்க!” என்றவளின் கண்களில் கண்ணீர் கரகரவென்று இறங்க..

“எனக்கு டென்ஷனா இருக்கு! இவ்வளவு பெரிய டெசிஷன் ஏன் சொல்லலை? உனக்கு இந்த ஃபீல்ட் சரி வருமா வராதான்னு யோசிக்க வேண்டாமா? எனக்கு என்னோடதே நிறைய வேலை இருக்கு. அப்போ உன்னை எப்படி பார்க்க முடியும். இந்த ஃபீல்ட்ல உன்னை எப்படித் தனியா விட முடியும்! யோசிக்கணும்!” என..

ஒரு ஆத்திரம் பொங்க… “நீ தனியா விடுவியோ, கூட வருவியோ, எனக்குத் தெரியாது! நான் இதுதான் பண்ணுவேன்! நான் இதுல தான் இருப்பேன்! எப்படி பெஸ்ட்டா செக்யுர்டா பண்ண முடியுமோ பண்ணு!” என்று கட்டளை போலச் சொன்னவள், கண்களை துடைத்து கொண்டு கண் மூட..

என்ன பேசுகிறாள் இவள் என யோசித்து ஈஸ்வர் சண்டையிட ஆரம்பிக்கும் முன் உறங்கியிருந்தாள்! ஆம் உறங்கி தானிருந்தாள்!

ஆம்! மனதில் நினைத்ததை சொல்லி முடித்தவுடன் ஒரு ஆசுவாசம் தோன்ற, அதுவரை வராத உறக்கம் ஒரு நிமிடத்தில் வந்திருந்தது.

உறங்கும் அவளை எழுப்பியா சண்டை போட முடியும்! எவ்வளவு பிடிவாதம் என்னை இவளின் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கிறாள் என யோசித்துக் கொண்டே வேறு வழியில்லாமல் அவனும் உறங்கினான். 

 காலையில் எழுந்த போது, வர்ஷினி இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, அவளை எழுப்பாமல் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தவனை தொலைபேசி அழைக்க.. எடுத்துப் பார்த்தால் அழைத்தது ரூபா!

“சொல்லு ரூப்ஸ்”  

“என்னோட அப்பா தவறிட்டாங்கலாம்” என

“என்ன? எப்படி?”  

“தூங்கியிருக்காங்க, காலையில அம்மா பார்க்கும் போது..” என்றவளின் குரலில் அடக்கப்பட்ட அழுகை தெரிய..

“இன்னும் நீ அங்கே போகாம வீட்ல இருக்கியா.. கிளம்பு!” என்று வைத்தவன்.. ஜகனை அழைத்து “போடா என்ன தேவையோ பார்த்து இருந்து செய்.. தயங்கிட்டு இருக்காதே!” எனச் சொன்னவன்..

அப்பாவையும் அழைத்து “அப்பா, பழசை நினைக்க வேண்டாம், போங்க!” என்றான்..

அவர்களை எல்லாம் செல்லச் சொன்னவனுக்கு செல்ல கால்கள் வரவில்லை! ஆனாலும் செல்ல தான் வேண்டும்.. அவன் ரூபாவிற்காக செல்ல வேண்டும்.. வர்ஷினி அஸ்வினிற்காக செல்ல வேண்டும்..

அவனின் மொபைளிற்கு அஸ்வின் அழைக்க.. எடுத்தவன் “அண்ணி இப்போ தான் சொன்னாங்க!” என்று விட.. மேலே பேச எதுவும் இல்லாது அஸ்வின் வைத்து விட்டான்.

பின்பு வர்ஷினியை எழுப்பிச் சொல்ல… “இறந்துட்டாங்களா? ஏன், என்ன ஆச்சு?” என்று கவலையாகக் கேட்க…

“உன்னை அங்கே தான் கூட்டிட்டுப் போறேன், அங்க உட்கார்ந்து இருக்கும் போது யார் கிட்டயாவது கேட்டுக்கோ” என்றான். அவனுக்கு பிரகாசத்தை பற்றி பேச விருப்பமில்லை..

“எழுந்துரு குளி” என்றவன்.. “புடவை கட்டத் தெரியுமா? கட்டுறியா!” என,

“புடவையா? ஏன்?” என,

“உன்னை எல்லோரும் கல்யாணத்தப்போ பார்த்தது, அதுக்கு அப்புறம் இப்போ தான் பார்க்கறாங்க.. நாம பிரிஞ்சு இருந்தது, நீ படிக்கன்னு காரணம் சொன்னாலும் எத்தனை பேர் நம்பியிருப்பாங்க தெரியாது! சோ! நீ இப்போ போனா நிறையப் பேர் உன்னை கவனிக்க வாய்ப்பிருக்கு!”

“ஏன் சுரிதார் போட்டா என்ன?”

“போடக் கூடாதுன்னு எல்லாம் இல்லை.. பட் ரிலேடிவ்ஸ் சர்கிள் போகும் போது இப்படி போறது தான் எனக்கு ஓகே!” என்றவன், “நான் உள்ள வரமாட்டேன், வெளில தான் இருப்பேன். நீ உள்ள போயிட்டு அம்மா இருப்பாங்க, அவங்களோட இருந்துக்கோ!” எனச் சொல்ல..

“முடிஞ்சதா? இன்னும் ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இருக்கா!” என்றாள் சற்று கடுப்பாக.  

“இப்போதைக்கு அவ்வளவு தான்” என்றான்.. வெளியில் சொல்லாவிட்டாலும் ஐஸ்வர்யாவை வேறு பார்க்க வேண்டுமே என்ற தயக்கம்.. “போனவன் தான் போனான், பொண்ணுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டு போனானா!” என்று பிரகாசத்தை மனதிலும் திட்டினான்.

அவள் கட்டும் புடவையைக் கூட அவன் தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்க, “இது கொஞ்சம் ஓவர்” என அவள் சொல்ல..

“பாரு வர்ஷ்! நம்ம கல்யாணம் சிறப்பா நடந்து இருந்தாலும், அதுக்கப்புறம் வந்த பிரிவு அது சொன்னாலும், சொல்லாட்டாலும் கொஞ்சம் தலை குனிவு தான்.. இதுக்கு மேல ஒரு வார்த்தை யாரும் குறை சொல்றதை நான் விரும்ப மாட்டேன்! புரியுதா!”

“எப்படியும் நீ எல்லோர் கூடவும் பேசுவன்னு தோணலை, அப்போ எல்லோரும் உன் தோற்றத்தை தான் பார்ப்பாங்க! அதுல யாரும் உன்னை க்ரிடிசைஸ் பண்றதை நான் விரும்பலை!” என,

முரளியின் திருமணத்தில் முதல் நாள் பார்த்த ஈஸ்வர் ஞாபகத்தில் வந்தான்..  “என்னவோ இவனும், இவன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸும்” என்ற ஒரு பார்வை பார்க்க, அதைக் கண்டு கொண்டாலும் நான் இப்படித் தான் என்று ஒரு பார்வை பார்த்தவாரே..   

“வா, வா, பசிக்குது!” என உணவுண்டு  அவளை அழைத்து அங்கே சென்றவன்.. வெளியில் இருந்து அம்மாவிற்கு அழைக்க.. அவர் வந்ததும் “வர்ஷினியை உள்ள கூட்டிட்டுப் போங்க!” என விட்டு அங்கே வெளியில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

அவனுடன் பேச உறவினர் பலர் ஆர்வமாய் இருக்க.. “எப்போதடா இங்கே இருந்து கிளம்புவோம்!” என அவன் பார்த்துக் கொண்டிருக்க..

உள்ளே யார் போனார் யார் வந்தார் என்றெல்லாம் அவன் கவனிக்கவில்லை.. ஐஸ்வர்யா யாருடனோ பேசியபடி வெளியே வரவும் தான் அவனின் அவளின் மீது படிந்தது..

கவனித்ததில் விதார்த்.. கூட சஞ்சய்.. சற்று நேரம் அவர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க.. அப்போது பார்த்து வர்ஷினியும் வெளியில் வந்தாள் இவனைத் தேடி! கூட சரணும் பிரணவியும்…

“அங்கே ஓடிட்டே சத்தம் போட்டுட்டே இருக்காங்க! ரொம்ப குறும்பு பண்றான்” என வர்ஷினி சொல்ல..

“சரண்” என்ற ஈஸ்வரின் ஒற்றை வார்த்தையில் அடங்கி சரண் அவன் அருகில் அமர.. அண்ணன் அமர்வதைப் பார்த்து பிரணவியும் அமர்ந்தாள்..

“நான் இவங்களை கூட்டிட்டுப் போறேன்! மதியமா எடுக்கப் போகும் போது கூட்டிட்டு வரேன்!” என அவன் எழ..

“அப்போ நானு!” என்று வர்ஷினி கேட்க..

“நீயா.. நோ! நோ! இங்க தான் இருக்கணும்! அம்மா கூட இரு! எல்லாம் நீ பழகணும்!” என்று ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய் அவன் பேச..

முகத்தை சுருக்கிய வர்ஷினியிடம் “நோ வர்ஷ்.. நீ சின்னப் பொண்ணு இல்லை பொறுப்பா இருக்கணும். நீ எவ்வளவு பொறுப்பா இருக்கேன்னு தெரிஞ்சா தான் நீ நினைச்சதை செய்ய விடுவேன். ஆனா இப்போ இங்கே  அஸ்வின்காக நீ இருக்கணும். எனக்கு இருக்கப் பிடிக்கலை. ப்ளீஸ் புரிஞ்ஜிக்கோ!” என

“சரி, சரி” என்று மண்டையை ஆட்டியவள் பார்வையில் விதார்த்தும் சஞ்சயும் பட..

“ஹை, நம்ம லூசு டாக்டர்” என்று ஈஸ்வரிடம் சொல்லி அவனின் கண்டனப் பார்வைக்கு ஆளாக,

“ஹேய், என்ன ஓவரா தான் பண்ணறீங்க” என்று மிரட்டல் தொனியில் ஆரம்பித்தவள்… “நீங்க இப்படி இருந்தா உன்னை விட்டு போகமாட்டேன்னு என்னை எப்படி சொல்ல வைப்பீங்க?” என,

“நான் அதை சொல்ல வைக்க எதுவுமே பண்ணப் போறதில்லை. நான் நானா தான் இருக்கப் போறேன்.. உனக்காக எதையாவது செஞ்சு எப்பவும் எதையாவது சொதப்பி வைக்கிறேன். பொண்ணு பின்னாடி சுத்தறது எல்லாம் நமக்கு செட் ஆகலை.. இனிமே  அதெல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்” என்றான் தெளிவாக..

“அய்யே ரொம்ப தான் சுத்திட்டீங்க” என்று பழிப்பு காட்ட..       

“ப்ச்” என்றவன், “பக்கத்துல சரணும் பிரணவியும் இருக்காங்க.. பார்த்து பேசு.. நானும் லூசு மாதிரி இங்க பேசிட்டு இருக்கேன்” என்று அடிக்குரலில் அதட்டினான்.

அதற்குள் விதர்த்தும் சஞ்சயும் அருகில் நடந்து வந்தவர்கள் இவர்களை பார்த்ததும் தயங்க…

விதார்த் இவர்களிடம் வந்தவன்.. “சாரி” என்று ஈஸ்வரிடம் வர்ஷினியிடமும் கேட்க.. “எதுக்கு சாரி டாக்டர்? இவர் நல்லாகிட்டார்!” என வர்ஷினி சொல்ல,

ஈஸ்வர் அசையாமல் நின்றிருந்தான்.

“நான் அன்னைக்கே வந்தேன், ஆனா பார்க்க விடலை!” என்று விதார்த் வருத்தம் தெரிவிக்க.. ஆம்! வந்தவனை பார்க்க முடியாது ஈஸ்வர் அனுப்பியிருந்தான்.. திரும்பவும் “சாரி” என,

“இட்ஸ் ஓகே டாக்டர்” என்று அப்போதும் வர்ஷினி தான் சொல்லியவள், திரும்பி ஈஸ்வரைப் பார்க்க, அவனின் முகமும் இறுகி இருக்க, “ஏதாவது செய்து விட்டாரா இவர்” என்ற சந்தேகம் வந்தது…

“விது” என்ற சஞ்சயின் குரலுக்கு திரும்பியவனிடம்.. “நீ போ, நான் வர்ரேன்!” என மறு பேச்சு பேசாது அவன் செல்ல..

“உங்களைப் பார்க்க நிறைய முறை அப்பாயின்ட்மென்ட் கேட்டேன், ஆனா கிடைக்கலை! அதனால் இங்க வெச்சு பேசறதுக்கு ரியல்லி வெரி சாரி!” என்றவன், “மூணு மாசத்துகுள்ள பணம் கட்டச் சொல்லியிருக்கீங்க.. எங்களால கண்டிப்பா முடியாது.. இப்போ தான் ஹாஸ்பிடல் விலைக்கு விட்டிருக்கேன்.. இன்னும் ஒரு ரெண்டு மாசம் சேர்த்து கிடைச்சாப் பரவாயில்லை!” என,

கேட்டதும் அதிர்ந்து தான் நின்றாள் வர்ஷினி.. ஈஸ்வருக்கும் விற்கப் போகிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஈஸ்வரை திரும்பி முறைத்தவள்.. “சாரி டாக்டர், ஐ அம் ரியல்லி சாரி. என்னால தான் இந்த குழப்பம்ன்னு நினைக்கிறேன்.. லோன் எல்லாம் கேன்சல் ஆகாது.. நீங்க விக்க வெல்லாம் வேண்டாம்!” என..

“நோ மேடம்! இன்னும் உங்க கிட்ட எங்களுக்கு லோன் சரி வராது.. என்ன தான் விதார்த் பண்ணினது தப்புன்னாலும், இவர் அவன் மேல கைவெச்சிருக்கார்.. அப்போ எப்படி நான் இங்க லோன் கண்டினியு பண்ண முடியும், முடியாது! நீங்க சொன்னதுக்கு தேங்க்ஸ்!” எனச் சொல்லி அவன் போக…   

“அடிச்சீங்களா? தப்பில்லையா? எப்படி நீங்க அப்படி பண்ணலாம்?”

“என் முன்னாடி என் மனைவியை லூசுன்னு அவன் சொல்வான், பார்த்துட்டு இருப்பேனா? அப்படியே நீ லூசா இருந்தாலும் கூட எவனுக்கும் சொல்ற தைரியம் வரக் கூடாது!” என அடிக்குரலில் சீறினான்.

“என்னை யாரும் லூசுன்னு சொல்லக் கூடாது, இல்லை உங்க ஃவைப்ன்றதால சொல்லக் கூடாதா” என முக்கியமான கேள்வியை வர்ஷினி கேட்க..   

“ரொம்ப முக்கியம், கிளம்பு நீ!” என,

நின்று நேராய் அவனை பார்த்தாள், பார்வையில் அவ்வளவு தீவிரம்.. “என்ன இப்போ?” என்றான் சலிப்பாக..

கை நீட்டி அவனிடம் “ரொம்ப தப்பு பண்ற நீ” என, நீட்டிய கையை யாரும் பார்த்து விட்டார்களோ என அவசரமாக இறக்கி விட்டான்.. கையை தான் இறக்க முடிந்தது அவளை அல்ல!   

 “நீ யார் அவனை அடிக்க? செய்யறதையும் செஞ்சிட்டு எவ்வளவு திமிரா பதில் சொல்ற.. என்ன இல்லை உன்கிட்டயும் என்கிட்டயும், ஆனா நம்மளால அனுபவிக்க முடியுதா.. உன்னை விடு.. எனக்கு  இவ்வளவு பணம் இருக்கு, அதை வெச்சு என்ன பண்றேன்.. அம்மா யாருன்னு சொல்ல முடியாது! அப்பா இருந்தும் அப்போ இல்லை, இப்போ இல்லவே இல்லை! பக்கத்துல எப்பவும் என்னை பார்த்துட்டு என் ஹஸ்பன்ட் நீ இருக்க, உன்கூட இருக்கக் பிடிக்கலைன்னு சொல்லி சுத்திட்டு திரியறேன்.. இப்படி ஒரு வாழ்கை எனக்கு!”

“இதுல ஆயிரம் கனவுகளோட அவங்க ஆரம்பிச்ச ஹாஸ்பிடல் என்னால விக்கற மாதிரி வந்துச்சு! உன்னை தொலைச்சிடுவேன்! நீ இதை சரி பண்ற!” என்று ஏகத்திற்கும் மிரட்ட..

“அவன் லோன் அப்படியே இருக்கட்டும் நீ சொன்ன தானே, ஒத்துக்க மாட்டேங்கறான் தானே! நான் என்ன பண்ண முடியும்! அவன் கிட்ட போய் நீ பணத்தை வெச்சிக்கோன்னு கெஞ்சவா முடியும்” என்றான் கடுப்பாக.  

“நீ கெஞ்சுவியோ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது! நம்மால அவங்க ஹாஸ்பிடல் அவங்க கைல விட்டுப் போகக் கூடாது! புரிஞ்சதா?” என்றாள் அதட்டலாக. 

தப்பு செய்த சிறுவனாய்,  எப்படி சரி செய்வது என்ற யோசனையோடே விழித்து நின்றான்.

“சரி செய்றீங்க!” என்று மரியாதை பன்மைக்கு அப்போது தான் வந்தவள், “அண்ணி வர்றாங்க” எனக் காட்ட…  

அங்கே ரஞ்சனி வந்து கொண்டிருந்தவள், விதார்தை பார்த்தும் நின்று பேச.. அப்போது அங்கே சஞ்சய் செல்லவும்.. ரஞ்சனி அவனை ஒரு பார்வை பார்ப்பதும், சஞ்சய் அவளைப் பார்ப்பதும் தெரிந்தது.

கணக்குகள் பழையதோ புதியதோ கூட்டினாலும் கழித்தாலும் பதில் ஒன்றே!

 

Advertisement