Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்பது :

சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டது!

நடந்து செல்லும் ஈஸ்வரை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் முரளி.. இன்னம் ஈஸ்வர் பேசிச் சென்றதை அவனால் நம்ப முடியவில்லை.

“உன் தங்கையைப் பற்றி பேசிச் செல்கின்றான். உனக்கு கோபம் வரவில்லையா?” என்று மனது ஒரு புறம் கேட்டது. பேசியது ஈஸ்வராகிப் போக, நிஜமாய் அவனுக்குக் கோபம் வரவில்லை, சூழலை ஆராய முற்பட்டான்.

ஈஸ்வர் தவறு செய்ததாக ஒத்துக் கொள்ளாமல் ஒத்துக் கொண்ட போதும் மனம் நம்ப மறுத்தது. நம்ப முயன்றும் கோபம் வரவில்லை.

எல்லாம் ஒதுக்கி பார்த்தால் ஈஸ்வர் போல ஒருவன் வர்ஷினியின் கணவனாய் வருவதில் அவனுக்கு மிகுந்த சந்தோஷமே. மாலை வரை யோசிப்போம் என்று யோசித்த படி வீடு சென்றான்.

அங்கே எல்லோரும் ஈஸ்வர் எங்கே என்று கேட்க.. “ஏதோ அவசர வேலைன்னு போயிட்டான்” என்று அனைவரிடமும் ஒரே மாதிரி சொன்னான்.

“என்கிட்டே சொல்லவேயில்லை” என்ற ரஞ்சனியின் முகத்தில் வருத்தம் அப்பட்டமாய் தெரிந்தது.

“ஹப்பா! போய் விட்டானா!” என்று தான் வர்ஷினிக்கு தோன்றியது. ஈஸ்வர் இருக்கும் போது அவளின் வீட்டிலேயே அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ரஞ்சனியின் முகத்தைப் பார்த்த எல்லோருக்குமே பாவமாய் இருந்தது.. அப்போதும் விடாமல் ஈஸ்வரின் செல் போனிற்கு அழைக்க.. அதன் ஒலி அங்கேயே கேட்டது.. ஆம்! போன் அவன் அமர்ந்த இடத்திலேயே விட்டு சென்றிருந்தான்.

“ஃபோன்  கூட எடுக்காம எங்க அவசரமா போனான்!” என்று ரஞ்சனி அதற்கும் கவலைப் பட..

“அவசர வேலைன்னு போனான்.. சொல்லிட்டுத் தான் போனான் ஒன்னும் கவலையில்லை” என்று பலமுறை முரளி சொன்ன பிறகே மற்றவர்களை கவனித்தாள்.

எல்லோரும் சிறிது நேரத்தில் விடை பெற.. நமசிவாயதிடம் மீண்டும் ஒரு முறை ராஜாராம் “சொத்து மாத்தி எழுத வேண்டாம்!” என்று சொல்லி அனுப்பினார்.

எல்லோரும் சென்ற பிறகு ராஜாராம் உறங்க செல்ல, அவரவர் அவரவரின் வேலையைப பார்க்க… ஈஸ்வரின் செல் அங்கு இருந்ததை மறந்து விட்டனர்.

மறக்காமல் அதைப் பார்த்திருந்தது ஈஸ்வரை கொள்ளை கொண்ட நீல கண்கள் தாம். ரஞ்சனியிடமோ முரளியிடமோ சொல்வோமா என்று நினைத்தவள் திரும்ப மனதை மாற்றிக் கொண்டாள். அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்போமே என்ற ஒரு ஆர்வம்..

அதை எடுத்துக் கொண்டு படியேறி அவளின் ரூமில் நுழைந்தாள். அதை உயிர்பிக்க.. அது பேட்டர்ன் லாக் காட்டியது.. என்ன முயன்றும் அதை பிரேக் செய்ய முடியவில்லை.

“என்னாலேயே இதுல ஒன்னும் பார்க்க முடியலையே, இதை உடைச்சிடலாமா.. கொஞ்சம் எனக்கு திருப்தியா இருக்குமா?” என்று அவளின் மனதிடம் அவள் பேசிக் கொண்டிருந்த சமயம்.

அது ஒலிக்க.. அதில் ஆஃபிஸ் என்று வர…

எடுப்போமா, கட் செய்வோமா என்று நினைத்தவள், ஒரு வேலை ஈஸ்வர் அவனின் ஆபிஸ் சென்று போன் எங்கே என்றுப் பார்க்க செய்வானோ என்று தோன்ற எடுத்தாள்.

எடுத்து ஹல்லோ சொல்லாமல் எதிரில் இருப்பவர் பேச காத்திருக்க, அவள் நினைத்தது போல ஈஸ்வர், “ஹல்லோ, யார் பேசறீங்க?” என்ற ஈஸ்வரின் குரல் கேட்க..

“நீதாண்டா பேசற!” என்று சொல்ல மனதில் ஒரு ஆர்வம் உந்தினாலும் அமைதியாக இருந்தாள்.

“ஹல்லோ.. யார் கிட்ட இருக்கு போன்.. நான் ஈஸ்வர்! நீங்க பேசறது என்னோட போன்!” என,

“நான் எங்கடா பேசினேன்?” என்று அதற்கும் அமைதியாக தான் இருந்தாள்.

ஈஸ்வருக்கு நன்கு ஞாபகம் இருந்தது, அவன் முரளி வீட்டில் அமர்ந்திருந்த சோஃபாவில் தான் அருகில் தான் வைத்தான். அதனால் தான் யார் எடுத்தார்களோ தெரியவில்லை என பொறுமையாகப் பேசிக் கொண்டு இருந்தான்.

மனதில் ஒரு சந்தேகம் உதிக்க.. போனை கட் செய்தவன்.. வர்ஷினியின் ஃபோனிற்கு அழைத்தான்.

முரளியை சமீபமாக பார்த்த போது அவனின் ஃபோனில் இருந்து சுட்டது. பல முறை வர்ஷினியிடம் பேச அந்த எண்ணை அழுத்தியிருக்கிறான். ஆனால் ஒரு முறை கூட ரிங் போக விட்டதில்லை.  அதனால்  அவனின் போன் இல்லாமலேயே அந்த எண் மனனம்.

வர்ஷினி அவளின் செல் ஒலிக்க.. புதிய நம்பர்.. அதுவும் லேண்ட் லைன் நம்பர்.

யார் என்று தெரியாமல் எடுத்து ஹல்லோவும் சொல்லிவிட… அது வர்ஷினியின் குரல் என்று உணர்ந்து, “போன் உன் கிட்ட இருக்கா?”  என்ற ஈஸ்வரின் ஆழ்ந்த குரல்…

வர்ஷினி அமைதியானவள்.. கண்டு பிடித்து விட்டானே எப்படி? என்று அமைதியாகவே இருந்தாள். எதற்கு அவனின் போன் என்று தெரிந்து எடுக்க வேண்டும். தெரிந்து தெரிந்து மாட்டிக் கொள்கிறேனே. என்னை.. என்று அவளுக்கு அவளே திட்டிக் கொண்டாள்.

“அதை உன்னால ஓபன் பண்ண முடியாது.. லாக் இருக்கு.. பேட்டர்ன் வேணுமா?” என,

அப்போதும் அமைதியாக இருக்க..

“நீ எவ்வளவு அழகா இருக்கன்னு நீ பார்க்க வேண்டாமா?” என்றான் ஆழ்ந்த குரலில். அந்தக் குரலில் அதுவரை இருந்த தைரியம் ஓடி என்ன வரப் போகிறதோ என்ற பயம் வந்தது.

“என்ன? என்ன சொல்றீங்க?” என்றாள் மனதில் ஒரு கலக்கம் தோன்ற..

“வந்ததில் இருந்து தள்ளி நில்! கண்ணில் படாதே! என்று அவ்வளவு சொல்லியும் இழுத்து விட்டுக் கொண்டாயா?” என்று மனம் சாட ஆரம்பித்தது.

“என் ஃபோன்ல நீ இருக்க! அதைச் சொன்னேன்!” என,

“லாக் பேட்டர்ன் சொல்லுங்க!” என்றாள்..

அவன் சொல்லச் சொல்ல செய்தாள்.. ஓபன் ஆனதும் அதில் தெரிந்தது வர்ஷினி.. பேக் கிரௌண்ட் இல்லை. அதனால் எங்கே எடுத்தான் என்று தெரியவில்லை.

அவள் ஒரு ஸ்கர்ட் டாப்ஸில் நின்றிருந்தாள். பின் அவளின் இடை வரை தெரிந்தாள். பின் அவளின் முகம் மட்டும். பின் அவளின் கண்கள்… என மாறி மாறி வந்து கொண்டே இருந்தது.

பார்க்க பார்க்க முதலில் ஒரு கலக்கம், பின்பு ஒரு பயம், பின்பு என்ன செய்து கொண்டிருக்கிறான் இவன் என்ற எரிச்சல், மெலிதாக ஒரு கோபம், அது வளர்ந்து அவனை அடித்து துவைக்கும் ஆவேசம், என மாற,

எதிரில் ஈஸ்வர் இருந்திருந்தால் ரசித்து பார்த்திருப்பான். வர்ஷினியின் முகம் அப்படி ஒரு உணர்வுகளை மாற்றி மாற்றி காட்டியது.

“என்ன இது?” என்று வர்ஷினி கேட்ட போது முற்றிலும் நிதானத்திற்கு வந்திருந்தாள்.

“நீ தான் வர்ஷினி!”

“டெய்லி நான் என்னை கண்ணாடில பார்ப்பேன். அது நான் தான்னு தெரியும் நீங்க கண்டு பிடிச்சு சொல்ல வேண்டிய அவசியமில்லை..” என்று பட பட வென பொறியவும்..

“அச்சோ! நான் டிஸ்டன்ஸ்ல இருக்கேனே. உன்னை பார்க்க முடியலையே. இப்போ உன் முகம் எப்படி இருக்குன்னு ரசிக்க முடியலையே!” என்றான்.

“ஹேய், நீ என்ன சைக்கோவா” என்று கேட்ட்ட வர்ஷினியின் குரலில் அவ்வளவு உஷ்ணம்.

“நேர்ல பார்த்துக் கண்டுபிடி!”

“என்ன நேர்ல பார்த்து.. எதைக் கண்டு பிடிக்க?”

“அதான் நான் பைய்தியம்ன்றதை.. ஆனா அது உன் மேல மட்டும் தான்றதை”

“ஈஸ்வர்,  stay on your limits”

“No baby, I don’t want any limits with you. Just want to cross all” என்று ஈஸ்வர் சொல்லச் சொல்ல வர்ஷினியின் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

என்ன பேசுகிறான் இவன். அதுவும் அவன் சொன்ன துவனி, அந்த வார்த்தைகளின் அழுத்தம், உச்சரிப்பு தன்மை,

“நிஜமாவே பைய்தியமாயிட்டீங்க!” என்று சீறினாள்.

“எஸ்! ஆமாம்! அதைத் தானே நானும் சொல்றேன். நான் எப்போ இல்லைன்னு சொன்னேன்”

“சே, சே, என்ன மனுஷன் நீங்க?”

“அதை தான் என்னால இன்னும் கண்டுபிடிக்க முடியலை. நீ சொல்லேன். நானே ரொம்ப யோசிச்சிட்டு இருக்கேன்” என்று அவன் சொல்லவும்.

“எரிச்சலை கிளப்பாத ஃபோனை வைடா” என்றாள் மரியாதை எல்லாம் கைவிட்டு.

ஆனால் ஈஸ்வர் அதைக் கவனத்தில் கொள்ள வில்லை. வர்ஷினி ஃபோனை வைத்து விடக் கூடாதே என்ற யோசனையோடு, “இரு, இரு, வெச்சிடாதா!” என்றான் அவசரமாக.

“என்ன?” என்று கேட்டவளின் குரலில் ஒரு ஆளுமை தானாக ஒட்டி இருந்தது.

“எனக்கு உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான் ஈஸ்வர்  மிகவும் சீரியசாக.

“என்ன?” என்றாள் எரிச்சல் மறையாத குரலில்.

“அதை நேர்ல தான் கேட்கணும்!”

“நேர்லயா? உன்னையா? முடியாது!”

“ஏன் பயமா இருக்கா?”

“எனக்கு என்ன பயம்.. ஏன் மண்டையை உடைச்சது மறந்து போச்சா!”

“அந்த தைரியம் இருந்தா நேர்ல பாரு! என்ன பயம்?” என்றான் அலட்சியமாக.

“அந்தக் குரலே அவளை உசுப்பியது. என்ன தைரியம்? தப்பும் செஞ்சிட்டு எவ்வளவு அலட்சியமா பேசற நீ! தப்பு செஞ்ச உனக்கே இவ்வளவு தைரியம் இருக்கும் போது எனக்கு என்ன பயம். எங்க பார்க்கலாம்?” என்றாள்.

“நீயே சொல்லு! எனக்கு உன்னை பார்க்கணும் அவ்வளவு தான். அது எங்கேன்னாலும் சரி!” என்றான்.

“நான் இவ்வளவு டென்ஷனாக இருக்க, எவ்வளவு கூலாகப் பேசுகிறான்” என்று தோன்ற, அவனை எரிச்சல் செய்யும் பொருட்டு,

“எதுக்கு? செஞ்ச தப்புக்கு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க போறியா?”

“கால்ல தானே விழுதுட்டாப் போச்சு!” என்றான் அதற்கும் ஈசியாக,

கோபத்தில் ஃபோனை வைத்தே விட்டாள்.

நன்றாகத் தானே இருந்தான், ஏன் இப்படி ஆகிவிட்டான்? மனதில் பெரும் குழப்பம், சஞ்சலம், எதற்கு நீ அவனைத் தனியாக பார்க்க வேண்டும் ஒரு வேலை மீண்டும் சேர்ந்து போட்டோ எடுத்து சுத்த விடுவானோ?

அவனை திரும்பவும் கைபேசியில் அழைத்தாள்..

“ஏய், எதுக்கு வரச் சொல்ற?” என்றாள் எடுத்தவுடனே,

அப்போது தான் அவள் கொடுக்கும் மரியாதை உரைக்க, “சூப்பர் மரியாதைடா உனக்கு. ஆனா நீ பண்ணின வேலைக்கு உன்கிட்ட பேசறதே அதிகம்” என்று நினைத்தவன்..

“வா சொல்றேன்!”

“திரும்ப ஃபோட்டோ எடுத்து சுத்த விடுவியோ?”

“சே! சே! பேப்பர்ல ஃபோட்டோ வந்ததுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை. எது நடந்தாலும் அது நமக்குள்ள மட்டும் தான்!”

“நமக்குள்ள என்ன இருக்கு?” என்று அவள் கேட்ட போது அதில் கலக்கம் எட்டிப் பார்த்தது..

பயப்படுத்துகிறேனோ அவளை என்று தோன்ற.. “ஹேய், நம்பு! அன்னைக்கு நமக்குள்ள நடந்தது எதுவும் பிளான் செஞ்சு செய்யலை..         I regret completely for that.. அது என்னை மீறி நடந்த ஒன்னு.. இனிமே அப்படி நடக்காம இருக்க முழு முயற்சி செய்வேன். நீ சொன்ன மாதிரி உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கன்னு நினைச்சிக்கோ! வா!” என்றான் தணிவாக..

“இல்லையில்லை! எனக்கு உன்னை பார்த்து பயம் தான்…. அப்படியே இருக்கட்டும்! எனக்கு உன்னைப் பார்க்க வேண்டாம்…” என்று ஃபோனை வைத்து விட்டாள்.

வர்ஷினி அப்படி வைத்து விடவும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் எரிமலையாக அவனுள் வெடித்து சிதறியது. அதன் துகள்கள் அவனை எரிக்கவும் ஆரம்பித்தது.  என்னவோ பேச்சிலேயே வர்ஷினி பயந்து போயிருக்கிறாள் என்பது போல தோன்ற மேலும் பயப்படுத்த விரும்பவில்லை.

தன்னை இப்போதைக்கு மறக்க நினைத்தவன் நேராக ஹோட்டலின் பாருக்கு சென்றான்.வெகு நாட்களுக்குப் பிறகு.. வர்ஷினியைப் பார்த்த அந்த ஒன்றிரண்டு நாளில் குடித்தது தான். பிறகு பலமுறை நினைத்திருக்கிறான். ஆனால் குடிக்கவில்லை. ஏன் அன்று அவளோடு தவறாக நடந்த அன்று கூடக் குடிக்க சென்று குடிக்காமல் திரும்பினானே. குடித்திருந்தால் அந்த தவறு நடக்காமல் தவிர்த்து இருக்கலாமோ?.

வர்ஷினி அவனிடம் தொலைபேசியை கட் செய்தவள்… என்ன என்ன அவனின் போனில் இருக்கிறது என்று பார்க்க… சர்வம் சங்கீத வர்ஷினி மயம் தான். ஆம் எல்லாம் அவளின் போடோக்கள். முரளி அண்ணன் திருமணத்தில் அவள் அழகு பதுமையாய் இருந்தது பல.. அதோடு இப்போது பத்மனாபனின் வரவேற்பில் இருந்தது..

எதுவும் அவன் எடுத்தது மாதிரி தெரியவில்லை. எல்லாம் அவர்களின் திருமண கலக்ஷனில் இருந்து எடுத்து அவனின் மொபைலில் ஏற்றி இருக்கிறான் என்று புரிந்தது.

பலதும் அவளின் லாங் ஷாட்டில் ஆரம்பித்து, அப்படியே மெதுவாக குறைந்து வந்து முகம் கண்கள் என்று தான் நின்றது.

அந்த மொபைலில் இருந்த அவளுடைய கண்களே, இப்போது பார்க்கும் போது அவளைப் பார்ப்பது போல இருந்தது.. அதுவே சொன்னது வர்ஷினி தன்னைப் பார்ப்பது போல ஈஸ்வர் வைத்திருக்கிறான் என்று.

கலங்கி தான் விட்டாள், இதில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை. ஈஸ்வர் சொன்ன வார்த்தைகள் வேறு காதினில் ரீங்காரமிட்டது. என்னை மீறி நடந்த ஒன்று அது என்று.

அங்கேயே இருந்தால் திரும்ப திரும்ப அதையே நினைப்போம் என்று தோன்ற.. வேறு என்ன அதில் இருக்கிறது என்று வேகமாக ஆராய்ந்தால்.. பின்பு அந்த செல்லில் இருந்த தன்னுடைய புகைப் படங்களை எல்லாம் டெலிட் செய்து கீழே இறங்கி எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள், யாரோ பார்த்து என்னவோ செய்து கொள்ளட்டும் என்று..

வைத்து திரும்பியவள்.. “ஐயோ, யாரவது எடுக்கும் பொழுது அவன் அழைத்து, நான் என்று நினைத்து ஈஸ்வர் ஏதாவது உளறி வைத்தால்” என்று தோன்ற..     திரும்பவும் எடுத்து தானே வைத்துக் கொண்டாள். அதனை ஆஃப் செய்து கொண்டு போய் தனது அலமாரியில் வைத்து பூட்டியவள்..

திரும்ப கீழே இறங்கி அப்பாவின் ரூமிற்கு வர.. அங்கே ராஜாராமும் உறக்கத்தில் கமலம்மாவும் உறக்கத்தில்…. அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

யாரும் இருந்தாலும் தனியாய் போய் அமர்ந்து கொள்பவள் இன்று அவர்கள் உறங்கும் பொழுதும் வந்து அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்.

முரளி ஒரு புறம் ஈஸ்வரின் பேச்சையே அசை போட்டுக் கொண்டிருந்தவன்.. “அப்பா எழுந்ததும் அப்பாவிடம் இப்படி ஈஸ்வர் திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறான். என்னிடம் கேட்டான்! என்ன சொல்லலாம்?” என்பது மாதிரி பேசலாம் என்று நினைத்து அதையே ஷாலினியிடம் சொல்ல..

“என்ன ஈஸ்வர் அண்ணா வர்ஷினியையா?” என்று ஆச்சர்யமாக அவளும் கேட்டாள். அவ்வளவு மட்டுமே மனைவியிடம் கூட முரளி சொன்னான். என்றும் நண்பனை யாரிடத்திலும் அவனால் விட்டுக் கொடுக்க முடியாது. அது அவனில் பாதியானவளிடம் கூட..

“வர்ஷினி, சின்ன பொண்ணுன்னு யோசிக்கறேன்!” என்று கூடவே சொல்ல,

“எங்க ஊர் பக்கம் எல்லாம் இந்த வயசுல தான் கல்யாணம் பண்ணுவாங்க.. எனக்கே லேட்ன்னு திட்டுவாங்க… எங்க கிட்ட எல்லாம் சம்மதம் கூடக் கேட்க மாட்டாங்க.. எங்க அப்பாரு கூட என்ன செஞ்சாங்க? இதுதான்மா மாப்பிள்ளைன்னு காட்டினாங்க, அவ்வளவு தான்! கழுத்தை நீட்டிடேன்!” என்ற கூடவே சொல்ல..

“அதுல உனக்கு வருத்தமோ?”

“அப்படி சொன்னேனா.. நடந்ததை சொன்னேன்..!” என்று சட்டென்று ஷாலினி முறுக்கிக் கொள்ள..

“ஷாலு, இதுக்கு எதுக்கு கோபம்?” என்று அவளைக் கொஞ்ச ஆரம்பதிதில் எல்லாம் பின்னுக்குச் செல்ல..

ஒருத்தி தலையை பிடித்து அமர்ந்து இருந்தாள். யோசனைகள்! யோசனைகள்! அவனைப் பார்த்த நாளிலிருந்து அசை போட ஆரம்பித்தாள். அவனின் கை பேசியில் இருந்த அவளின் புகைப் படங்கள், என்ன மீறி நடந்த ஒன்று என்ற வார்த்தைகள்…

எப்படி அவனைத் தவிர்ப்பது.. எப்படி அவனிடம் இருந்து விடு படுவது. ஸ்திரீலோலன் போலவும் தெரியவில்லை. யாரிடமும் சொல்லவும் இஷ்டமில்லை. அப்பாவிடம் காட்டிக் கொடுக்கும் எண்ணமும் வரவில்லை.

யோசிக்க யோசிக்க புலப்பட்டது ஒன்று தான். “அவனிடம் பணிந்து போய் விடு, பயந்து போய் விடு..இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமோ தைரியமோ தேவையில்லை. என்னை விட்டு விடு என்று அவனை மிரட்டியோ? என்ன செய்து விடுவாய் உன்னால் ஆனதை பார்த்துக் கொள் என்ற பேச்சோ, சரி வராது!!!”

“உனக்கு அவனிடம் இருந்து வெளியில் வரவேண்டும் அவ்வளவே! அது மட்டுமே!”

“என்னை விட்டு விடு, எனக்கு நீ பிடித்த மில்லை என்ற கெஞ்சல் தான் கை கொடுக்கும்.. அதையே செய்! உனக்கு பிடிக்காவிட்டாலும் செய்!” என்று மனதை தயார் படுத்திக் கொண்டிருந்தாள்.

அங்கே ஈஸ்வர் முன் வைத்த க்ளாசை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான், குடிக்கக் கூட மனதில்லாமல்.. வர்ஷினியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறி மனதில் அடங்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

காதல்! விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது!! வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்டது!!!    

Advertisement