Advertisement

அத்தியாயம் பதினெட்டு :

பயம் விட்டு….. ஒரு புரட்சி நடத்தலாம்!!!

கண்ணாடியைக் கழற்றி அவளின் கண்களைப் பார்த்தான். அந்த நீல நிறக் கண்கள் இவனை வெறித்து நோக்கின.

அதனைப் பார்த்து விட்ட ஒரு த்ருப்தியில் இன்னமும் பேசினான், “இதுல நீ வொர்ரி பண்ண அவசியமில்லை! நான் ரியாலிட்டியைத் தான் சொன்னேன், உனக்கு கண்டிப்பாப் புரியாது, ரஞ்சனி எல்லா தங்கைகளையும் போலக் கிடையாது… ஒரு ட்ரெஸ் எடுக்கக் கூட என்கிட்டே கேட்பா நீயும் கூட வான்னு, அவளா சில சமயம் எடுத்து வந்தது இது உனக்கு நல்லா இருக்காதுன்னு சொன்னா அடுத்த நிமிஷம் தூக்கிப் போட்டுடுவா”,

“இது ஜஸ்ட் ஒரு எக்ஸாம்பிள், இப்போ எனக்கு வேறத் தோணலை! இப்பக் கூட நான் பத்மனாபனைக் கல்யாணம் பண்ணனும் சொல்லியிருந்தா… அதுல நின்னிருந்தா யாரும் மறுத்து இருக்க முடியாது! எனக்கு பிடிக்குது பிடிக்கலை நான் அவ கூட நின்னிருப்பேன், எனக்கு அவ செய்துகிட்டான்றதை விட என் கிட்ட சொல்லலை! நிஜம்மா என்னால அதைத் தாங்கவே முடியலை” என்று தலையைப் பிடித்து அமர்ந்து விட்டான்.

“இது காதலினால நடந்த கல்யாணம் இல்லை வேற எதுவே? எதுன்னாலும் அண்ணான்னு என்கிட்டே வந்திருக்க வேண்டாமா? யாரோ? எவனோ நம்ப முடியுது! என்னை நம்பலை? எந்த பிரச்சனைன்னாலும் நான் பார்த்துக்குவேன்னு அவளுக்கு ஏன் தோணலை? இது எனக்கு ஒரு பெரிய தோல்வி, இது உனக்கு புரியாது!”

“மே பீ என்கிட்டே சொன்னா நான் ஏதாவது இன்னம் பிரச்சனையை இழுத்து விட்டுக்குவேன்னு பயந்து கூட இப்படி செஞ்சிருக்கலாம்! ஆனா அது கூட நான் அன் ஃபிட்ன்னு தானே சொல்லுது” என்று தலையை பிடித்துக் கொண்டு குனிந்தபடி பேசிக் கொண்டிருந்தான்.

எல்லாவகையிலும் அவன் அராய்ந்திருக்கிறான் என்பது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இதை யாரிடமும் அவனால் சொல்ல முடியாது. எந்தத் தயக்கமுமின்றி வர்ஷினியிடம் இதை சொல்ல முடிந்தது. இதை அவன் உணரவில்லை.

“நீ குடும்ப சூழலில் வளரவில்லை, உன்னுடைய எல்லையில் நில்!” என்று அவன் சொன்னதைத் தொடர்ந்து அவனுடன் வாதம் செய்ய புயலென மனதில் எழுந்த எண்ணங்கள் அவனின் இந்த வார்த்தைகளில் பாவனைகளில் அப்படியே அடங்கியது.

மிகுந்த மன கஷ்டத்தில் இருப்பவனை இன்னம் கஷ்டப்படுத்த வர்ஷினியின் மனம் விழையவில்லை.

அவன் தலை நிமிர்வதற்காக காத்திருந்தவள், நிமிடத்திற்கு பின் அவன் தலை நிமிர, “நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள்.

அந்தக் கண்களின் பாவனைகளில் என்ன கண்டானோ “சாரி! கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்” என்றான்.

பேச வேண்டாம் என்று நினைத்தாலும் எதுவும் பேசாமல் விட்டால் பின்னொரு சந்தர்ப்பத்திலும் பேசுவான், அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்து,

“ஏதோ ரியாலிட்டி சொன்னீங்களே! அது உங்களை விட எனக்கு நல்லாத் தெரியும்! இப்போ தான் பத்து அண்ணாக்கிட்ட நீங்க சொன்ன அதே விஷயத்தை சொல்லிட்டு வந்தேன். ஆனா நீங்க சொன்னதுக்கும் நான் சொன்னதுக்கும் வித்தியாசம் இருக்கு! நம்ம ஒரு கஷ்டத்துல இருக்கோம்ன்றதுக்காக அடுத்தவங்களை எப்படி வேணா பேசக் கூடாது”

“I know what i am and where i stand!  ரொம்ப சாரி உங்க பெர்சனல் பேசினதுக்கு” என்று நிறுத்தியவள், “நீங்களும் இந்த அதிகப்ரசிங்கித்தனம் பண்ணாதீங்க” என்ற அவளின் பாவனைகளை மனம் வெகுவாக ரசித்தது.

“என்ன பேசுகிறாய்” என்ற கேள்வியைக் கண்களில் தாங்கி நின்றான்.

“என் கண்ல இருந்து கண்ணாடி கழட்டினீங்க இல்லையா அதைச் சொன்னேன்…  நீங்களும் உங்க லிமிட்ல நில்லுங்க!” என்று சொன்னவளை பார்ததவனின் பார்வை தானாக வெளிபடுத்தியது…

“i dont want any limits with you baby… want to cross all…” என்று.

அது வர்ஷினிக்குப் புரியவில்லை…

ஒரு சில நொடிகள் தான், அடுத்த நொடி “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்… இதுவா நீ” என்று மனம் அவனையே சாடியது. தவறு அவன் செய்வது மிகவும் தவறு என்று புரியத்தான் செய்தது. அதிகப்ரசிங்கித்தனத்தின் உச்சம் அவளின் கண் கண்ணாடியக் கழற்றியது. கண் கண்ணாடி கழற்றுவது ஒன்றுமில்லை தான். ஆனாலும் இங்கே அவனுக்கு எதற்காக என்பது அதிகம்! மனம் அவனின் செய்கையை வெறுத்தது.

அடுத்த நொடி இதுவும் தோன்றியது! “இவளை யார் என் முன் வரச் சொன்னது! இப்படி என்னைக் கெட்டவன் என்று நானே உணர வா?”

அவள் நிறுத்தியதும் பதில் கொடுத்தான், “அது உன் கையில தான் இருக்கு, முடிஞ்சவரை என் முன்னாடி வராத! அது தான் உனக்கு சேஃப்!”

ஈஸ்வர் அந்த வார்த்தைகளை உணர்ந்து சொன்னான், அவனுக்கே தெரிந்தது தன்னுடைய எண்ணப் போக்கு ஒரு தரம் கெட்ட செயல் என்று.

ஈஸ்வர் அவனின் நிலை கொண்டு சொல்ல….

“என்ன ஒரு திமிர் இவனுக்கு” என்று தான் வர்ஷினிக்குத் தோன்றியது, “ஏன் வந்தா என்ன பண்ணிடுவீங்க?” என்றாள்,

“அது உனக்குத் தெரியவே வேண்டாம், நீ கிளம்பு” என்றான் கூலாக.

ஈஸ்வரின் வார்த்தைகளை விட அவனின் பாவனைகள் ஒரு உச்சபட்ச கோபத்தை வர்ஷினியினுள் கிளப்பியது.

“ரொம்பத் திமிர் உங்களுக்கு” என்று சொல்லியே விட்டாள்.

“தேங்க் யு” என்றான் அதற்கும் ஒரு புன்னகையுடன்.

கடுகளவுக் கூட ஈஸ்வரின் தப்பு வர்ஷினிக்குத் தெரியவில்லை. திமிரானவன் என்று தான் தோன்றியது, தப்பானவன் என்று தோன்றவேயில்லை. அப்படி ஒரு கண்ணோட்டத்தில் ஈஸ்வரை அவள் நினைக்கவேயில்லை.

“எதிரில் வந்தால், திருமணத்தில் பார்த்தது போல அலட்சியமாக தன்னை வேலையாள் போல நடத்துவான், திட்டுவான், மதிக்க மாட்டான், இப்படி உன்னுடைய லிமிட்ல நில் என்று அலட்சியப்படுத்துவான்” என்று தான் எண்ணங்கள் ஓடின.. வேறு தோன்றவில்லை அந்த சிறு பெண்ணிற்கு என்பது தான் நிஜம்.

வர்ஷினி முறைத்துப் பார்க்க…. அந்தக் கண்கள் மீண்டும் அவனை வா வென்று தான் அழைத்தது.

“ப்ளீஸ்! இதைப் போட்டுக்கோ!” என்று கண்ணாடியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

எப்படி ஒரு மனிதனின் ஒவ்வொரு அணுவிலும் திமிர் இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே “போடா” என்பது போல அவனைப் பார்த்து அதைக் கையினில் வாங்காமல் திரும்பி நடக்கத் துவங்கினாள்.

வர்ஷினியின் நீண்ட கூந்தல் அது அவனின் பார்வையில் விழ, அவள் கதவை திறந்து வெளியே செல்லும் வரை பார்த்திருந்தவன், “அச்சோ! அவ டிரஸ் பார்க்காம போயிட்டேனே” என்று தோன்றியது. ஆம்! இந்த முறை அவள் முகம், அவள் கண்கள், இதைத் தவிர பார்வை செல்லவில்லை.

அதற்கு மேல் அவனின் யோசனைகள் செல்லவில்லை. ஏனென்றால் அவன் காஃபி ஷாப்பில் காத்திருந்தது ஐஸ்வர்யாவிற்காக, பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தாள் நேற்றிலிருந்து.

அதன் பொருட்டே இந்த காஃபி ஷாப்பில் வந்து அமர்ந்து இருந்தான். ஆறு மணிக்கு தான் வரச் சொல்லியிருந்தான், இவன் முன்னமே வந்திருந்தான், அவள் வருவதற்கு முன் தான் வர்ஷினி அவனைப் பார்த்து வந்து பேசி சென்றிருந்தாள்.

அவள் அந்த புறம் சென்றதுமே ஐஸ்வர்யா வந்து விட்டாள். ஜஸ்ட் மிஸ் என்பார்களே அது போல..

வர்ஷினியிடம் பேசியது ஏதோ ஒரு வகையினில் மனதை சற்று லேசாகியிருக்க…

“ரொம்ப நேரமா வெயிட் பண்ணறீங்களா?” என்றபடி வந்து அமர்ந்த ஐஸ்வர்யாவைப் பார்த்து புன்னகைக்க முடிந்தது.

“இல்லை! இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சு!” என்றவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். ஆனால் அது வருவேனா என்றது.

“வராததை எதுக்குக் கஷ்டப்பட்டு வரவழைக்கிற, என்னை பயப்படுத்துறதற்கா?” என்று இலகுவாகக் கேட்க,

எப்போதும் போல திட்டுவான், சும்மா என்னை எப்போப் பார்த்தாலும் மெசேஜ் போட்டு தொல்லை பண்ற? எதுக்கு என்னை இப்போ வர சொன்ன என்று கடிப்பான் என்று பலதும் நினைத்து பயந்து வந்திருக்க, இந்த புன்னகையை ஐஸ்வர்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடிச்சா? நீங்க சமாதானம் ஆகிட்டீங்களா?” என்றாள் எதிர்பார்ப்புடன்.

“இல்லை! எல்லாம் அப்படியேத் தான் இருக்கு!”

மேலே என்னக் கேட்பது என்று தெரியாமல் பார்வையில் மிரட்சியோடு பார்த்தாள்.

அதை பார்த்தவன் எல்லா பெண்களுடைய கண்களும் நம்மை வசீகரிக்கின்றனவா… இல்லை அவளுடையது மட்டுமா என்று வர்ஷினியை பற்றி யோசனைகள் ஓடின.

எதிரில் இருந்த ஐஸ்வர்யாவைப் பார்த்தான், நல்ல அழகி! ஆனால் அது ஒன்றும் அவனை அவள் புறம் ஈர்க்கவில்லை, காதல் சொல்ல வைக்கவில்லை.

ரூபாவை பள்ளி நாட்களாக தெரியும் என்றாலும் ஐஸ்வர்யாவை ரூபா ஜகன் திருமணத்தின் பின் தான் தெரியும். எப்போதும் முகம் புன்னகையுடன் இருக்கும், தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருப்பாள். அதிர்ந்து பேசக் கூட மாட்டாள். அழகி என்ற கர்வம் கொஞ்சமும் இருக்காது.

உறவினள் என்ற முறையிலும் ரஞ்சனியின் தோழி என்ற முறையிலும் அடிக்கடிப் பார்ப்பான். ஒரு முறை கூட எந்தக் காரணம் கொண்டும் தானாக அவனிடம் பேசியது இல்லை. ஒரு அதிகப்படி பார்வை கூட இருக்காது. அதுவே ஈஸ்வரை அவள் பால் ஈர்த்தது. காதலும் சொல்ல வைத்தது.

அவன் காதல் சொன்ன பிறகு வேண்டாம் என்பதுப் போல தலையை மட்டும் அசைத்து, அதற்கு அவன் பார்த்த பார்வையில் பயந்து, அவனின் பார்வை வட்டத்தில் கூட வரவில்லை. ஓடி ஒளிந்து கொண்டாள் அவனை தவிர்த்து..

விடாது அவளை துரத்தி சொல்ல வைத்தான்.. அதன் பிறகு தான் சற்று சகஜமாக அவனுடன் பேச ஆரம்பித்தாள். பேச பேச அவனைப் பிடித்து போக, அவனைத் தேடவும் ஆரம்பித்தாள். அதன் பிறகு தான் அதிகம் மெசேஜஸ், போன் கால்ஸ் எல்லாம். அதுவும் இந்த ஏழு மாதமாக!

தான் தன் படிப்பு என்று இருந்த பெண்ணின் மனதை கலைத்து காதல் சொல்ல வைத்தது ஈஸ்வர் மட்டுமே. இப்போது ஐ அம் நாட் ஹேர் மேக் என்று அவன் நினைப்பது எந்த வகையிலும் சரி கிடையாது.

“எதுக்கு இப்படிப் பார்க்குற! ஈசி!” என்றவன், “இப்ப எதுக்கு என்னை பார்க்கணும்னு சொன்ன?”

“ஏன்? சும்மா பார்க்கக் கூடாதா?” என்றெல்லாம் ஐஸ்வர்யா கேட்கவில்லை..

“நிஜம்மா எனக்கு என்னைச் சுத்தி என்ன நடக்குது தெரியலை… ரூபா இப்போ அதிகம் பேசறதே இல்லை.. என்ன ஏது அவ்வளவு தான்! வீட்டுக்கும் இனி வரமாட்டேன்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டா போல, நீங்களும் வரவேண்டாம்னு எங்களையும் சொல்லிட்டா” என்று சொன்ன போது பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

“ஓஹ்! இதெல்லாம் எனக்குத் தெரியாது, உங்ககிட்ட கூட பேசலையா?” என்றான். ஆம்! பெரியம்மா ரூபாவிடம் இனி உன் வீட்டுடன் எந்தத் தொடர்பும் கூடாது என்று மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருந்தார். இது எதுவும் ஈஸ்வருக்கு தெரியாது.

“பேசலை… கல்யாணமாகிடுச்சு அவ தப்பிச்சிட்டா! நானும் அம்மாவும் எங்கே போவோம்..” என்று சொன்ன போது…

“எங்க வீட்டுக்கு வந்துடு” என்று ஈஸ்வரால் சொல்ல முடியவில்லை… அவனே அங்கே இருப்பனா? இல்லையா? தெரியாதே..

பாவமாகத் தான் இருந்தது அவள் பேசும் போது… ஆண் என்றால் வீட்டை விட்டு போய் விடலாம். பெண் எங்கே போவாள்?

“நான் இருக்கறன், நான் பார்த்துக்கறன், ரொம்ப மனசை வருத்திக்காத..”

“அஸ்வின் தான் எல்லா ப்ராப்ளம்க்கும் காரணம்! எனக்கே ரொம்ப கில்டியா இருக்கு என்னால ரூபா கூட ரஞ்சனி கூட பேசமுடியலை!”

“ப்ச்! அஸ்வின் மட்டும் இல்லை” என்பது போல தலையாட்டியவன், “ஜகன் அண்ணா! அவனால தான் எல்லாம், அவன் ஏமாந்து இருக்கான்! அஸ்வின் இல்லைன்னா இன்னொருத்தன்.. ஏமாருறவன் இருக்குற வரைக்கும் ஏமாத்துறவங்க இருப்பாங்க..”

“ஆனா இப்போ அஸ்வின் தான் நிறையக் க்ரியேட் பண்ணிட்டு இருக்கான், இன்னம் பண்ணுவான், அடங்குவான்னு தோணலை! எனக்கும் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை! பார்க்கலாம்!” என்றவன்,

“அந்தப் பேச்சை விடு, உன்னோட என்ட்ரன்ஸ் என்ன  ஆச்சு சொல்லு”,

“ரிசல்ட் வந்துடுச்சு” என்றாள் சுரத்தே இல்லாமல்,

“என்ன போயிடுச்சா? போயிட்டுப் போகுது விடு!”

“இல்லை, செலக்ட் ஆகிட்டேன்! delhi AIMS ல OBG!”

“வாவ்! கங்க்ராட்ஸ்!… இதை ஏன் இவ்வளவு லேட்டா சொல்ற!”

“போவனா? இல்லையா தெரியலை?”

“ஏன்? ஏன்?” என்று அச்சர்யமாகக் கேட்டான்.

“அம்மா தனியா இருக்கணும்னு யோசிக்கறேன்! ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காங்க”

“அதுக்காக இப்படி ஒரு ஆப்பர்ச்சுநிட்டியை மிஸ் பண்ணுவியா, இட்ஸ் ரியலி பேட்! நீ உன்னோட ப்ரொஃபஷனை ரொம்ப நேசிக்கிற, எனக்குத் தெரியும், போ! எதுக்காகவும் தயங்காத! நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகும் போது உங்கம்மா தனியா தானே இருப்பாங்க”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஈஸ்வரை பார்த்தாள். ஏனென்றால் அவளுக்கு நம்பிக்கையே இல்லை… இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவினில் தங்கள் திருமணம் நடக்குமா..? ஈஸ்வர் இன்னமும் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவானா?

இந்த வீட்டில் மீண்டும் பெண்ணெடுக்க ஈஸ்வர் வீட்டினர் ஒத்துக்கொள்வரா..  அதையும் விட அப்பாவும் அஸ்வினும் நடக்க விடுவார்களா.

நம்பிக்கை தரும் வகையில் ஈஸ்வரும் எதுவும் செய்யவில்லையே.. எப்பொழுதும் அவளைத் திட்டிக் கொண்டு… போன் எடுக்காமல்… எதையும் அவளிடம் பகிராமல்…

“நடக்குமா?” என்றாள் நம்பிக்கையின்றி.

“நடக்கும்! நீயாவது என்னை நம்பு!” என்றவன்.. “என்னாச்சு உன் ஃபிரண்ட் ரிசல்ட்?” என்று ரஞ்சனியைப் பற்றிக் கேட்டான்.

“அவளுக்குக் கிடைக்கலை ஏதோ PG Diplamo கிடைச்சிருக்கு”

“அது அவ பண்ண மாட்டா.. விடு! எனக்கென்ன?” என்றவன்,

“வாயேன், டின்னர் போகலாம்! லெட்ஸ் செலப்ரேட்”

“இல்லையில்லை காஃபி போதும்! லேட் ஆகிடுச்சு! நான் போகணும்!”

“ஓகே”, இரண்டு பேருக்கும் cool coffee ஆர்டர் செய்தான்.

அமைதியாக இருவரும் குடித்து முடித்தனர், கிளம்பும் போது தான் ஞாபகம் வந்தவனாக.. “பணம்? பணம் எதுவும் பிரச்சனையில்லையே.. பணம் வேணுமா?”

“இல்லையில்லை! ப்ளீஸ் வேண்டாம்! அங்க ஸ்டைபன்ட் வரும்… அது போதும்.. நான் மேனேஜ் பண்ணிக்குவேன்”.

“ஏன்? உங்கப்பா உங்கண்ணன் கொடுக்கலையா…”

“கொடுப்பாங்க! எனக்கு வேண்டாம்.. நான் என்னைப் பார்த்துக்குவேன்”

“நீ பார்த்துக்குவ! இருந்தாலும் தேவைன்னா என்கிட்டே கேட்க தயங்காதே”.

“கண்டிப்பாத் தேவைன்னா உங்க கிட்ட மட்டும் தான் கேட்பேன்!” என்றாள் சிறு புன்னகையுடன்.

“நம்பிட்டேன்!” என்று ஈஸ்வரும் புன்னகைத்தான். வாங்க மாட்டாள் என்று தெரியும், எத்தனை விசேஷங்களில் பார்த்திருக்கிறான், ரூபாவும் ரஞ்சனியும் வைரங்களில் சுற்றும் போது, தங்க நகைகள் மட்டுமே! அது கூடக் கண்ணுக்கு உறுத்தாத வகையினில்.

“நீங்க ரெண்டு பேரும் எல்லாம் பூட்டிக்கறீங்க உங்களோட தானே அவளும் சுத்தறா! அவளுக்கு கொடுத்தா என்ன?” என்று ஈஸ்வரே சில முறை கேட்டிருக்கிறான்.

“அண்ணா டேய்! அவ வாங்க மாட்டேங்கறா! போட்டுட்டு விசேஷம் முடிஞ்சதும் திருப்பிக் கொடுத்துடு சொன்னாக் கூட வாங்க மாட்டேங்கறா.. அவளோடது அவளுக்கு போதுமாம்! அடுத்தவங்க யூஸ் பண்ணினதை யூஸ் பண்ண மாட்டாளாம், ஆமாம்! நீ எதுக்கு இதைக் கேட்கற” என்று ரஞ்சனி அவனிடம் துருவி, அவன் மாட்டி என்று அசடு வழிந்த தருணங்கள் பல.

இப்போது அதை நினைக்க புன்னகை மலர்ந்தது, எல்லாம் ஏதோ முந்தைய ஜென்ம நிகழ்வுகள் போல தோன்றியது.

“இப்படி ஃபிராடு அப்பா! அண்ணன்! இவள் இப்படி!” என்று நினைத்தவாறே அவளை பார்த்தான்.

“ஜாயின் பண்ணு! மிஸ் பண்ணாத!” என்று சொல்லி, அவள் “சரி” என்று சொல்லும் வரை அவளைக் கிளம்ப விடவில்லை.

அவள் ஒருவாறு “நான் கண்டிப்பா ஜாயின் பண்றேன்” என்று சொன்ன பிறகு ..

“என் மேல ப்ராமிஸ்” என்று அவளின் கைப் பிடிக்க.

“ப்ராமிஸ்! எல்லாம் வேண்டாம்!” என்று கையை உருவியவள், “கண்டிப்பாப் பண்ணுவேன்!” என்று எழுந்தாள்.

அப்போதுதான் மேஜை மீது இருந்த கண்ணாடியை பார்த்தவள் “யாருது இது” என்றாள்.

“ம்! என்னோட கேர்ள் ஃபிரண்ட்து” என்றான் சன்ன சிரிப்புடன்.

“யார் அந்த பியுட்டி?”

“ம்! பியுட்டி இல்லை ஒரு மோகினி பிசாசு! ம்! ஒரு வகையில பியுட்டிபுள் பிசாசு!” என்றான்.

“நம்பிட்டேன்!” என்று அவனைப் போல சொல்லிச் சிரித்தவள், “பயந்துட்டே வந்தேன் திட்டுவீங்களோன்னு, தேன்க் யு” என்று அவள் சொல்ல,

“சாரி! இந்தப் பண விஷயம் வந்ததுல இருந்து நான் நானாவே இல்லை இப்ப ரஞ்சனி விஷயம் வேற.. இன்னம் எதுவும் தீரலை, நடுவுல நீ போன் பண்ணும் போது எடுப்பேனா? மாட்டேனா? எடுத்தாலும் திட்டாம வைப்பேனா? எதுவும் சொல்ல முடியாது”.

“எதுனாலும் பரவாயில்லை! நான் தாங்கிப்பேன்!” என்று புன்னகையுடன் சொல்ல,

“அது எனக்குத் தெரியுமோ என்னவோ? அதுதான் இப்படி கத்துறனோ?” என்றான்.

சிரிப்புடனே அங்கிருந்து சென்றாள்.

கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா?

 

Advertisement